அன்னையின் அரும்பணியில்…ஜ.சுப்பாராவ்ஜி

நாம் போக வேண்டிய இடத்திற்கான விலாசத்தைப் பற்றி (அவ்விடத்தைப் பற்றி நன்கறிந்த) நபர்கள் படித்தவன், படிக்காதவன் என வித்யாசமில்லாமல் யாரிடம் கேட்டாலும் straightஆ போய் leftல் திரும்பி நேரா போனா ரெண்டாவ்து வீடு என்றோ அல்லது nearest landmark சொல்லி குத்துமதிப்பாக அனுப்புவோம். ஆனால் பஸ் அல்லது ரயிலில் இறங்கி பின் பக்கமாக 100தப்படி நடந்து சாலையைக் கடந்து 1பர்லாங் அதே திசையில் நடந்து இடப்புறமுள்ள 2வது சந்தில் திரும்பி 100கெஜம் நடந்தால் இடதுபுறமுள்ள வீடு என அவர் சொல்லும் அடையாளத்தில் கண்ணை மூடிக் கொண்டு சென்று அடையலாம். GPRS கருவி வருவதற்கு பல பத்தாண்டுகள் முன்பே GPRS போல் துல்லியமாக வழிகாட்டியவர் அவர்.

எப்படி வஞ்சனையில்லாமல் பேசுவரோ அதே போல ஆகாரத்தையும் ரசித்து, விரும்பி சாப்பிடும் விதமும் அலாதியானது அவருடையது.

ஜ.சுப்பாராவ் ஜி

அந்த அவர் தான் ஜ.சுப்பாராவ்ஜி

சென்னை சைதாப்பேட்டையில் 30.03.1933இல் அம்மா கல்லம்மாளுக்கும் அப்பா ஜகதீஷுக்கும்நான்காவது குழந்தையாகப் பிறந்தவர். அவரது குடும்பத்தில் மொத்தம் ஏழு குழ்ந்தைகள். தனது 9ஆவது வயதில் சங்க ஸ்வயம்சேவகரானார். 1945இல் தி.நகர் ராமகிருஷ்ணா பள்ளியில் ஸ்ரீகுருஜியின் பௌத்திக் கேட்டு சங்கத்தின் பால் மேலும் ஈர்க்கப்பட்டார்.

1954 தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் பிஏ (தற்போது பிஎஸ்சி) கணிதம் முடித்தார். அதற்குப் பின் நுங்கம்பாக்கம் உயர்நிலைப் பள்ளியில் (சுதந்திர தினப் பூங்கா அருகில்) 6 மாதங்களும் காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத்தில் 4 மாதங்களும், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் ஒரு வருடமும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர், சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பி.டி. (தற்போது பி.எட்.) படித்து முடித்தார். அதன் பிறகு, ஆரணியில் இரண்டு ஆண்டுகளும் செங்கல்பட்டில் ஓராண்டும் ஆசிரியராகப் பணியுரிந்தார்.

1948 சங்க தடைக்குப் பின்னர் மாநிலம் தழுவிய சங்க பத்திரிகை வெளிவராது இருந்தது. இந்த குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, தியாக பூமி தொடங்கப்பட்டது.

1964இல் பத்திரிகை நடத்த பணம் இல்லாத காரணத்தால், தமிழகம் முழுவதும் புதிய சந்தாதாரர்களை சேர்க்கப்பட்டு தியாகபூமியை மீண்டும் தொடக்கினார், சுப்பாராவ்.

1965இல் சங்கரன்கோவிலில் ஆசிரியராக சென்றார். அதுவரை ஷாகா பொறுப்பில் இருந்த அவர் தாலுகா கார்யவாஹ் பொறுப்பேற்றார்.

1967இல் சங்கத்தின் பிரசாரக் ஆனார். அதே சங்கரன்கோவில் தாலுகாவில் பிரசாரக்,

1968இல் நெல்லை, குமரி மாவட்ட பிரசாரக், 1970இல் சேலம், தருமபுரி மாவட்ட பிரசாரக்,

1974இல் சென்னை விபாக் பிரசாரக்,

1977 முதியோர் கல்வி அமைப்பின் (அப்போது முதியோர் கல்வி அவசியமாக இருந்தது) பொறுப்பாளர்,

1978இல் திருச்சி விபாக் பிரசாரக்,

1982 முதல் 1990 வரை தேசிய கல்விக் கழக (வித்யா பாரதி) மாநில அமைப்புச் செயலராக இருந்தார்.

1990 முதல் 1996 வரை குருஷேத்திரத்தில் (ஹரியாணா) இருந்து வித்யா பாரதி பணியாற்றினார். பின்னர் மீண்டும் தமிழகம் வந்த அவர்,

1997 முதல் 2000 வரை சம்ஸ்கார் பாரதியின் மாநில அமைப்பாளராக இருந்தார்.கோவா மாநில மீட்பு வரலாற்றில்தமிழக ஸ்வயம்சேவகர்களுக்கு தலமை தாங்கினார்.

1970களில்வேடசந்தூர் வெள்ள நிவாரணப் பணி குறிப்பிடத்தக்கது வ்யவஸ்தா துறை துவங்கும் முன்பேஅதன் அகராதியாய் திகழ்தார்.

சங்க வரலாற்றுகலைகளஞ்சியமாக இருந்தார்.மொத்த பாமாலை பாடல்களுக்கும்மாஸ்டர் காபியாக இருந்தார்புதிர் விளையாட்டுபுதிர் கதைபுதிர் கணக்கு……இவைகளில்இளம் துடிப்போடு கடைசி வரை இருந்தார்.அவரதுபோட்டோ அதிகமாய் கிடைக்காது ஆனால்அவரது கடிதங்கள் லட்சக்கணக்காய் கிடைக்கும் எடுத்து வைத்திருந்தால். போன்கள் அதிக பயன்பாட்டிற்கு வரும் முன் பலருடனும் கடிதம் மூலம் தொடர்பில் இருந்தார். இன்று அவரது உடல் மட்டுமே நம்மை விட்டு பிரிந்து விட்டது. அவரின் நினைவுகள் அவ்வளவு சீக்கிரம் அகலாது.

பாரத அன்னையின் பாதங்களில் அவர் ஆன்மா இளைப்பாறட்டும்.

நன்றி: Facebook Omampuliyur Jayaraman

அன்னையின் அரும்பணியில்…

அன்னையின் அரும்பணியில்…

நமது தேசத்தைப் பாதுகாக்கும் திருப்பணியில் ஈடுபட்ட இராணுவவீரர்கள் “பரம்வீர் சக்ரா விருது” பெற்ற சம்பவங்கள்

இரண்டாவது லெப்டினென்ட் ராம ரகோபா ரானே

இரண்டாவது லெப்டினென்ட் ராம ரகோபா ரானே கர்னாடகாவிலுள்ள சென்டியா என்ற ஊரில் ஜுன் 26, 1918ஆம் ஆண்டு பிறந்தார். அவர் 1947ஆம் ஆண்டு டிசம்பர் 15 அன்று பொறியியல் வல்லுநர்களின் படைப்பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவருடைய 21 ஆண்டு காலப் பணியில் இரகசியச் செய்திகளை அனுப்புவதற்காக 5 முறை தேர்ந்ததெடுக்கப்பட்டார். 1947 – 48 ஜம்மு காஷ்மீர் எல்லைப் போரின் போது திறம்படச் செயல்பட்டார்.

டிசம்பர் 1947ல் எதிரிகளிடம் இழந்த ஜாங்கர் என்ற பகுதியை, இந்திய இராணுவம் 1948ல் கைப்பற்றியது. அப்போது இந்திய இராணுவத்தின் படைப் பிரிவுகள் நவ்சாகரா என்ற இடத்திலிருந்து ராஜௌரி என்னுமிடத்திற்கு முன்னேறிச் சென்று அங்கு எதிரிகளின் கொடுமைகளுக்கு ஆளாகி இருந்த இந்தியர்களைக் காப்பது என்று திட்டமிடப்பட்டது. 1948 ஏப்ரல் 8ம் தேதி இந்திய இராணுவத்தின் 4 படைப்பிரிவுகள் ராஜௌரியை நோக்கி முன்னேறின. நவ்சாகராவிற்கு வடக்கில் 11கி.மீ. தொலைவில் உள்ள பார்வாலி என்ற மலை உச்சியைக் கைப்பற்றி எதிரிகளை அங்கிருந்து விரட்டியடித்தன. ஆனால் பார்வாலிக்கு அப்பால் இருந்த வழித்தடைகளும், கண்ணிவெடிகள் நிறைந்த பகுதிகளும் நமது காலாட் படையினர் மேலும் முன்னேறுவதற்குத் தடையாக இருந்தன. இராணுவ மோட்டார் வண்டிகள் கூட இத் தடைகளைத் தாண்டிச் செல்ல இயலவில்லை. இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இரண்டாம் லெப்டினென்ட் ராணே மற்றும் அவரது படைப் பிரிவைச் சேர்ந்த 37 வீரர்களும் மிகச் சிறப்பாகச் செயலாற்றினார்கள்.

Image result for 2nd lt rama raghoba rane

அவரது படைப்பிரிவினரும் அவரும் வழியில் இருந்த தடைகளை மற்றும் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிரிகளின் பீரங்கிப் படைத் தாக்குதலுக்கு உள்ளானார்கள். அதில் இரண்டு பேர் இறந்தனர். இராணே மற்றும் ஐவர் காயமடைந்தனர். எனினும் அன்று மாலைக்குள் அவர்கள் தங்கள் வேலையைப் பூர்த்தி செய்து நமது பீரங்கிப்படைகள் மேலும் முன்னேறிச் செல்வதற்கு வழி வகுத்தனர். என்றாலும் எதிரிகளை அப்பகுதியிலிருந்து முழுமையாக அப்புறப்படுத்த முடியவில்லை. சாலையும் பாதுகாப்பு இல்லாததாக இருந்தது. இரண்டாம் லெப்டனென்ட் இராணே அன்று இரவு முழுவதுமாக நமது பீரங்கிப் படைகளுக்கு ஒரு பாதுகாப்பான வழி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஏப்ரல் 9ம் தேதி அவரது படைப் பிரிவினர் தொடர்ச்சியாக 12 மணிநேரம் வேலை பார்த்து வழியிலிருந்த தடைகள் மற்றும் கண்ணி வெடிகளை அகற்றினர். இரண்டாம் லெப்டினென்ட் இராணே இப்பணியை எதிரிகளின் கடுமையான பீரங்கிப் படைத் தாக்குதலுக்கிடையே திறம்பட நடத்தினார். ஏப்ரல் 10ம் தேதி முதல் நாள் பாதியில் விட்ட பணியைத் தொடர்வதற்காக அவர் அதிகாலையிலேயே எழுந்தார். அவர் கண்ணி வெடிகளால் சூழ்ப்பட்டிருந்த 5 பைன் மரங்கள் அடங்கிய ஒரு தடையை, எதிரிகளின் இயந்திரத் துப்பாக்கிச் சூட்டினிடையே இரண்டு மணிநேரத்தில் அகற்றினார். நமது இராணுவமானது மேலும் 13கி.மீ. தூரம் முன்னேறி அங்கு மற்றுமொரு தடையை எதிர்கொண்டது. எதிரிகளின் காவல்படையானது அப்பகுதியை ஒட்டியிருந்த மலைகளில் அமர்ந்து அத்தடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தது.

இரண்டாம் லெப்டினென்ட் இராணே ஒரு பீரங்கி வண்டியின் அடியில் ஒளிந்து கொண்டே அத்தடையை நோக்கி முன்னேறி அத்தடையின் மேல் கண்ணிவெடிகளை எறிந்து, அன்று இரவுக்குள்ளாக அத்தடையை அகற்றினார். ஏப்ரல் 11ம் தேதி அவர்கள் 17 மணிநேரம் வேலை செய்து சின்காஸ் என்ற இடத்திற்குப் போவதற்குவழி வகுத்தனர். இந்திய இராணுவம் ராஜௌரியை அடைவதற்கு இரண்டாம் லெப்டினென்ட் இராணே ஆற்றிய பணி மகத்தானது. அவரது பணிச்சிறப்பால் எதிரிப் படையினர் கிட்டத்தட்ட 500 பேர் இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். மேலும் அவரது மகத்தான பணி சின்காஸ் மற்றும் இராஜௌரியில் வாழ்ந்த பல அப்பாவி மக்களின் வாழ்வையும் காப்பாற்றியது. அவரது திடகாத்திரமான மனப்பான்மையும் கடின உழைப்பும் இல்லையென்றால் நமது படை சின்காஸை அடைந்திருக்க முடியாது, அங்கிருந்து மேலும் முன்னேறி இருக்கவும் முடியாது என்று நமது அரசு குறிப்பு கூறுகிறது. இராஜௌரியை நோக்கி நமது இராணுவம் முன்னேற அவர் ஆற்றிய வீரச் செயல்களுக்காகவே அவருக்கு “பரம்வீர் சக்ரா” என்ற உயரிய விருது வழங்கப்பட்டது.

“வந்தே மாதரம்”

அன்னையின் அரும்பணியில்…

அன்னையின் அரும்பணியில்…

நமது தேசத்தைப் பாதுகாக்கும் திருப்பணியில் ஈடுபட்ட இராணுவவீரர்கள் “பரம்வீர் சக்ரா விருது” பெற்ற சம்பவங்கள்

கேப்டன் விக்ரம் பத்ரா

13-ஜே ரகே ரைபிள்ஸ் பிரிவைச் சார்ந்தவர் கேப்டன் விக்ரம் பத்ரா. அவருக்கும் அவரது குழுவினருக்கும் 5140வது பாயிண்ட் பகுதியை மீண்டும் கைப்பற்றும் பொறுப்பு அளிக்கப்பட்டது. இவரும் இவரது குழுவினரும் எதிரிப்படை மீது அதிரடி தாக்குதலை பக்கவாட்டிலிருந்து தொடுக்கும் முயற்சியை மேற்கொண்டனர். இவரும், இவரது குழுவினரும் மலை உச்சியை நெருங்கும் சமயத்தில் எதிரிகள் திடீரென்று இயந்திரத் துப்பாக்கிகளால் சுடத் தொடங்கினர். இருப்பினும் கேப்டன் பத்ரா தனது குழுவைச் சார்ந்த ஐந்து வீரர்களுடன் மலை உச்சியை அடைந்தார்.

Image result for captain vikram batra

மூன்று எதிரிப்படை வீரர்களுடன் தனியாக மோதி அவர்களைக் கொன்றார். பலத்த காயங்களை இக் கைகலப்பின் போது அவர் அடைந்தாலும் தனது குழுவினரை மீண்டும் திரட்டி தனக்கிட்ட பணியில் மேலும் முன்னேறினார். இந்த அபாரமான துணிச்சலால் இவர் தலைமையிலான ஜே ரகே ரைபில்ஸ் 13வது பிரிவு தனக்கிட்ட பணியை வெற்றிகரமாக நிறைவேற்றி 1999 ஜீன் 20 காலை 3.30 மணிக்கு பாயிண்ட் 5140ஐ மீண்டும் கைப்பற்றியது. இப்போரில் ஏறத்தாழ எட்டு பாகிஸ்தான் வீரர்களை கொன்று அவர்களது பலம் வாய்ந்த இயந்திரத் துப்பாக்கியை கைப்பற்றிய பெருமையும் இவரது குழுவிற்குக் கிடைத்தது.

பாயிண்ட் 5100, பாயிண்ட் 4700, ஜங்ஷன் பீக், த்ரீ பிம்பின்ஸ் போன்ற பல பகுதிகளின் தொடர் வெற்றிக்கு அணிசேர்ப்பதாக பாயிண்ட் 5140 வெற்றி அமைந்தது. கேப்டன் பத்ரா தலைமையிலான குழு பாயிண்ட் 4750, பாயிண்ட் 4875 ஆகிய பகுதிகளை கைப்பற்றும் புகழ்மிக்க வெற்றிகளையும் சாதித்தது. 1999 ஜூலை 7ம் நாள் பாயிண்ட் 4875ஐ திரும்ப கைப்பற்றும் முயற்சியில், காயமடைந்த இராணுவ அதிகாரி ஒருவரைக் காப்பாற்றும் போது கேப்டன் பத்ரா எதிர்பாராத விதமாக கொல்லப்பட்டார்.

தாய் மண்ணிற்கு வீரவணக்கம் செலுத்தும் முழுக்கத்தோடு அவர் உயிர் பிரிந்தது. தனிப்பட்ட அவரின் துணிச்சலுக்காகவும் எதிரிகளை தாக்கும் தலைமைப் பொறுப்பை சிறப்பாக ஆற்றியமைக்காகவும் மிக உயர்ந்த “பரம் வீரசக்ரா” விருதை அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. இவரது தந்தையார் திரு. ஜி.எல். பத்ரா தனது வீரமகனுக்கான இந்த விருதினை இந்தியக்குடியரசுத் தலைவரிடம் பெற்றார்.

“வந்தே மாதரம்”

அன்னையின் அரும்பணியில்…

அன்னையின் அரும்பணியில்…

நமது தேசத்தைப் பாதுகாக்கும் திருப்பணியில் ஈடுபட்ட இராணுவவீரர்கள் “பரம்வீர் சக்ரா விருது” பெற்ற சம்பவங்கள்

மேஜர் ஸோம்நாத் சர்மா

மேஜர் ஸோம்நாத் சர்மா 1942ம் வருஷம் இரண்டாம் உலகப்போர் மூண்ட சமயத்தில் குமாவோன் என்ற ரெஜிமென்டில் சேர்ந்தார். பாரதம் விடுதலையானவுடன், 1947 அக்டோபர் 22 அன்று, பாகிஸ்தானிய துருப்புக்கள் காஷ்மீரைக் கைப்பற்ற வந்தன. கை எலும்பு முறிவு காரணமாக ஒரு மாத காலம் கட்டாய ஓய்வு என்று டாக்டர்கள் வலியுறத்தியும், அதிகாரிகளும் எவ்வளவோ கேட்டுக்கொண்டும், எதையுமே பொருட்படுத்தாமல், ஸ்ரீநகரிலிருந்த போர்முனைக்குச் செல்லத்தயாராக இருந்த தமது ரெஜிமென்டைத் தானே முன்நின்று வழிநடத்திச் சென்றார் மேஜர் ஸோமநாத் சர்மா.

பாக்தாம் என்ற இடத்தில் சண்டை நடந்துகொண்டிருந்தது.  3 கம்பெனிகள் அடங்கிய நமது துருப்புக்கள் பாக்தாம் பகுதியை மீட்டன. எதிரிப்படையினர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். மேஜர் ஸோம்நாத் சர்மா படையினர் தவிர மற்ற இரு கம்பெனிகளுமே ஸ்ரீநகருக்குத் திரும்பிவிட்டனர். ஆனால் மறுநாள் விடியற்காலை அருகாமையிலிருந்த வீடுகளிலிருந்து பாரதப்படையினர் மீது துப்பாக்கி சூடு நடந்தது. எதிர்தாக்குதலில் வீட்டிலிருக்கும் அப்பாவி பொதுமக்கள் மாண்டுபோவார்களே என்ற எண்ணத்தில் நமது படை பதில் தாக்குதல் நடத்தவில்லை . ஆனால், ஒரு சில நிமிடங்களில் எங்கேயோ ஒளிந்துகொண்டிருந்த பாகிஸ்தான் படையினர் 700 பேர் கொண்ட பலத்துடன் பிரவேசித்தனர். பாரதப்படையினர் மீது சரமாரியாகச் சுட்டனர். இதை சற்றும் எதிர்பாராத நம்படையினர் பெருமளவில் மாண்டனர். மேஜர் பொறுப்பிலிருந்த ஸோமநாத் சர்மா சூழ்நிலையின் உக்கிரத்தையும், ஸ்ரீநகர் விமானநிலையம்

Image result for major somnath sharma

எதிரிகளால் எந்நேரமும் சுட்டு வீழ்த்தப் படலாம் என்ற நிலையிலும், அங்கு திறந்தவெளி மைதானத்தில் ஓடிச்சென்று தனது படையினர் எதிர்கொள்ளவேண்டிய பணிகளைக் கூறியவண்ணம் இருந்தார். அதே சமயம், பாரத விமானப்படையினர் மேற்கொள்ள வேண்டிய யுக்திகளையும், மேஜர் சர்மா விளக்கிக்கொண்டிருந்தார். எதிரிப்படைகள் துப்பாக்கியால் சுட்டவண்ணம் இருந்தனர். இந்த அபாயகரமான சூழ்நிலை 6 மணிநேரம் நீடித்தது. துப்பாக்கி சுடும் வீரர்கள் அனைவரையும் மேஜர் ஸோமநாத் சர்மா இழந்தார். ஒரு கட்டத்தில் லீட் மெஷின்கன் கையாளும் வீரர்களுக்கு தாமே, முறிந்த கையால், துப்பாக்கி ரவைகளை நிரப்பிக்கொடுத்தார். எதிரி வீசிய வெடிகுண்டில் மேலும் பலர் வீழ்ந்தனர்.

அந்த நிலையிலும், ஸ்ரீநகரில் முகாமிட்டிருக்கும் தனது மேலதிகாரிகளுக்கு அவர் அனுப்பிய கடைசி செய்தி. எதிரிப்படையினர் 50 அடி தூரத்திலிருந்து தாக்குகிறார்கள். நம்மைவிட பலமடங்கு எண்ணிக்கையில் அவர்கள் பெருகியுள்ளார்கள் எங்கள் மீது குண்டு மழை பொழிந்தவண்ணம் இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையிலும் ஓர் அங்குலம் கூட பின்வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை நான் ஓயமாட்டேன். எதிரிகளின் குண்டுக்கு அந்த மாவீரன் பலியானான். ஸ்ரீநகர் விமான நிலையம் காப்பாற்றப்பட்டது. பாரதநாடு காப்பாற்றப்பட்டது. அவரது வீரதீரச் செயலுக்காக பாரதத்தின் மிக உயர்ந்த விருதான “பரம் வீரசக்ரா”வை அவரது தந்தையும், முன்னாள் இராணுவ வீரருமான அமர்நாத் சர்மா பெற்றுக்கொண்டார்.

“வந்தே மாதரம்”.

அன்னையின் அரும்பணியில்…

அன்னையின் அரும்பணியில்…

நமது தேசத்தைப் பாதுகாக்கும் திருப்பணியில் ஈடுபட்ட
இராணுவவீரர்கள் “பரம்வீர் சக்ரா விருது” பெற்ற சம்பவங்கள்.

கேப்டன் குருபச்சன் சிங் சலாரியா

கேப்டன் குருபச்சன் சிங் சலாரியா அவர்கள் பஞ்சாப் மாநிலத்திலுள்ள குருதாஸ்பூரில் நவம்பர் மாதம் 29ம் நாள் 1935ம் ஆண்டு பிறந்தார். அவர் ஜுன் 9ம் நாள் 1957ம் ஆண்டு கூர்கா படைபிரிவில் சேர்ந்தார். பெல்ஜியம் படையினர் காங்கோ நாட்டைவிட்டு சென்றபிறகு, அந்நாட்டில் உள்நாட்டுப் போர் வெடிக்கின்ற அபாய சூழ்நிலை ஏற்பட்டது. அச்சூழ்நிலையை மாற்றுவதற்காக, ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு தனது படையை அங்கே அனுப்பியது. அப்படையில் சேர சுமார் 3000 பேர் கொண்ட படைப்பிரிவை இந்தியா அனுப்பி வைத்தது.

காங்கோ நாட்டிலிருந்து கடாங்கா படையினரின் போர் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை முடிவெடுத்தது. இதனைக் கண்டு கோபமுற்ற கடாங்கா பிரிவினைவாதிகளின் தலைவர் ஷோம்போ ஐக்கியநாடுகளின் சபையினருக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்தினார். இதன் விளைவாக ஐ.நா. படையினருக்கு எதிரான வன்முறை தீவிரமடைந்தது.

1961ம் ஆண்டில் டிசம்பர் திங்கள் 5ம் நாளன்று கூர்கா படையினர் கடாங்கா படையினர் ஏற்படுத்தி வைத்திருந்த சாலைத்தடையின் மீது தாக்குதல் நடத்தினர். எதிரிப்படையினரின் சாலைத்தடையை நிர்மூலமாக்கி, கூர்கா படையினர் சாலைத்தடையை ஏற்படுத்தினர்.

கேப்டன் சலாரியா சாலைத் தடையை வலுப்படுத்த முனையும்போது கடுமையான தாக்குதலை சந்திக்க வேண்டியிருந்தது. எதிரிப்படையினர் கனரக தானியங்கி, லேசுரக ஆயுதங்களை கொண்டு வலதுபுறமாக தாக்குதல்

நடத்தினர். எதிரிப்படையினரிடம் 2 கவச வாகனங்கள் மற்றும் 90 துருப்புகள் இருந்தன. அதன் மூலமாக, அவர்கள் அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

Image result for gurbachan singh salaria

கேப்டன் சலாரியா வலிமையான எதிரிப்படையினரின் ஆயுதபலத்தை கண்டு மனம் கலங்கவில்லை. தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, அவர் எதிரிப்படையினருடன் நேருக்கு நேர் மோத முடிவெடுத்தார். அதனால் கூர்கா படையினர் எதிரிகளை கத்திமுனை துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளைக் கொண்டு தாக்கினார்கள். அந்த தாக்குதலுக்காக ராக்கெட் லாஞ்சரும் பயன்படுத்தப்பட்டது.

இந்த கடுமையான மோதலில் கேப்டன் சலாரியாவும் அவர்தம் படையினரும் எதிரிப்படையிலிருந்து 40 துருப்புகளையும் கொன்றதோடு நில்லாமல் இரண்டு கவச வாகனங்களையும் நிர்மூலமாக்கினர். அவருடைய துணிச்சலான நடவடிக்கையில் எதிரிப்படையினர் அச்சமுற்று, போர்க்களத்தைவிட்டே தப்பி ஓடினர். ஆயினும் அப்போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டு இரத்தம் சிந்துவதையும் பொருட்படுத்தாமல் போரிட்ட கேப்டன் குருபஜன்சிங் சலாரியா தம் இன்னுயிரை இழந்தார்.

கேப்டன் சலாரியா எலிசபத் தீவிலே இருந்த ஐ.நா. தலைமை அலுவலகத்தை எதிரிப்படையினர் முற்றுகையிடுவதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினார். அவருடைய தலைமைப்பண்பு, தைரியம், கடமையிலிருந்து பின்வாங்காத அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை இந்தியப்படையினரின் தலையாய பாரம்பரிய பண்புகளாகும் என்பதை அவரின் தியாகம் நிரூபித்தது .

அசாதாரண தலைமைப் பண்பிற்காகவும். கடமையாற்றுவதிலிருந்த அவர்தம் அர்ப்பணிப்பு மனப்பான்மைக்காகவும் போரில் தன்னுயிர் ஈந்த கேப்டன் குருபச்சன் சலாரியாவிற்கு மிக உயர்ந்த விருதான “பரம்வீர் சக்ரா” அளிக்கப்பட்டது.

“வந்தே மாதரம்”