படிப்போம்! பகிர்வோம்! தேவர் பெருமகனாரின் – சீறிய ஆயுதம்.

thevar-imagesஅபிராமம் பசும்பொன்னிற்கு அருகில் இருக்கும் கிராமம் –

வெளிநாடு வாழ் முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் கிராமம் –
பலர், வெளிநாடுகளில் இருந்ததால் வசதிக்கு குறைவில்லை –

அங்கே, புதன்கிழமை தோறும் சந்தை கூடுவது வழக்கம் –
பக்கத்து கிராமங்களில் வாழ்கின்ற ஏழைப் பெண்கள் வயிற்றுப் பிழைப்புக்காக –
பருத்திமார்களை கட்டுகளாக விற்க சிலரும் – கோழி, வாத்து, வெள்ளரிக்காய் , போன்ற பல பொருட்களை விற்பதற்காக வருவார்கள் –

வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்ல பல்வேறு ஊர்களிலிருந்து இளம் பெண்கள் பலரும் வருவதுமுண்டு –

இப்படி, விற்க, வாங்க வருவோரிடம் _
அந்த ஊர் முஸ்லிம் இளைஞர்கள் இரட்டை அர்த்த வார்த்தைகளால் கேலி செய்தும் தகாத நடவடிக்கைகளால் மானபங்கம் ஏற்படும்படியும் தொடர்ந்து நடந்து வந்தனர் –
அந்த ஊர் முஸ்லிம் பெரியவர்களும் இதைக் கண்டிக்காத நிலையில் –

அந்தப் பெண்கள் எல்லாம் பசும்பொன் தேவர் அவர்களிடம் நடந்த சம்பவங்களைச் சொல்லி கண்கலங்கினார்கள் –

பெற்ற தாயை ‘அம்மா’ என்று ஆசையோடு அழைக்கும் பாக்கியத்தை இழந்த பசும்பொன் தேவர் ஒட்டு மொத்த பெண்ணினத்தையும் தன் தாயாகப் பார்த்தவர் –

கோபமும், ஆத்திரமும் உள்ளுக்குள் கொழுந்துவிட ஒரு கணம் கண்களை இறுக மூடி பெருமூச்சால் உள்ளுக்குள் பற்றிய தீயைக் கட்டுப்படுத்திக்கொண்ட தேவர் பெருமகனார் கண்களைத் திறந்து பார்க்க எதிரே இருந்தோர் “அய்யா, ஒரு வார்த்தை சொல்லுங்க அவனுங்கள தட்டி தூக்கிட்டு வந்துடுறோம்” என்று சொன்னார்கள் –

இல்லப்பா, பாதிப்பை ஏற்படுத்துவங்க இந்து மதத்தை சேர்ந்த பசங்களா இருந்திருந்தா’. நம்ம பிரச்சினையை நாம தீர்த்துக்கிட்டோம்னு போய்டும் –
அவங்க முஸ்லிம் நாம கோபத்தை காட்டினா… ஒரு இந்து, முஸ்லீமை அடிச்சிட்டான்னு சொல்லுவாங்களே தவிர, செஞ்ச தப்புக்கு நியாயம் கேட்டதா சொல்ல மாட்டாங்க –
வேற மாதிரி கையாண்டாத்தான் சரியா இருக்கும் – என்று கூறினார் –

பள்ளிவாசல் பெரியவர்களுக்கு ஆள் அனுப்பி பாதிக்கப்பட்ட பெண்களையும் அனுப்பி, சம்பந்தப்பட்ட இளைஞர்களைக் கண்டித்துப் பரிகாரம் செய்யவும், இதற்குப் பிறகு இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறும் சொல்லி அனுப்பினார் தேவர் –

ஆனால், பள்ளிவாசல் பெரியவர்கள் அவர்களை கண்டிக்கவும் இல்லை கண்டுகொள்ளவும் இல்லை இதனால் இளைஞர்கள் மேலும் ஊக்கம் பெற்று மிகவும் மோசமாக நடக்க ஆரம்பித்தனர்-

அப்போதும் கூட தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, சாத்வீக நெறியில் காரியத்தைத் துரிதப்படுத்தும் வகையில் அபிராமம் கிராமத்தில் உள்ள இந்துக்கள் மகாசபையை உருவாக்கி, தானே அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பேற்று அறவழியில் அந்தப் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டார் –

முஸ்லிம்களின் விவசாய நிலங்களில் யாரும் வேலைக்குப் போகக்கூடாது என்றும், முஸ்லிம் கடைகளில் யாரும் பொருட்கள் வாங்கக் கூடாது என்றும் தீர்மானம் செய்யப்பட்டது –

கட்டுப்பாட்டோடு இந்தத் தீர்மானத்தை இந்துக்கள் அனைவரும் செயல்படுத்தியதால் இஸ்லாமியர்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர் –

ஆனால், அதற்குப் பின்னரும் புத்தி வராத இஸ்லாமியர்கள் வெள்ளையனுக்கு தந்திகள் அனுப்பினார்கள் –

சமூகக் கலவரத்தைத் தூண்டியதாக 107 வது செக்ஷன்படி வழக்கு தொடரப்பட்டது –

ஒரு வருடத்திற்கு மேலாக நீடித்த வழக்கில் –

இராமநாதபுரம் மாவட்ட நீதிபதி ஸ்ரீதர்மசன்,
அநீதியை எதிர்க்க சமூக ஒத்துழையாமையைச் சாத்வீக முறையில் நடத்துவது தவறில்லை – என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார் –

அதன் பின்னர் கூட அந்த ஒத்துழையாமைப் பேராட்டம் நீடித்ததும்,
இஸ்லாமியர்கள் தேவரைக் கொலை செய்ய முயன்றதும் வேறு வரலாற்று உண்மை –

இந்த பழைய வரலாறு இப்பொழுது எதற்கு என்றால் –

இன்று இஸ்லாமிய, கிறிஸ்துவ தீவிரவாதம் தமிழகத்தில் தலை விரித்து ஆடுகிறது –

போராட்டங்கள் என்ற பெயரில் வளர்ச்சித் திட்டங்களை கண்மூடித்தனமாக எதிர்த்து வருகின்றனர் –

மத சுதந்திரம் என்ற பெயரில் –
நமது பெருமைமிகு சம்ரதாயங்களை கிண்டல் செய்தும், புனைவுகளை கூறியும் இழிவுபடுத்தி வருகிறார்கள் –

இவர்களுக்கு பாடம் கத்துக் கொடுக்க –
அன்று தேவர் அவர்கள் கையில் எடுத்த ஆயுதத்தை நாம் இன்று கையில் எடுக்கும் நேரம் வந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன் –

அது ஒன்றும் மோசமான ஆயுதம் அல்ல –

அதன் பலத்திற்கு சமீபத்திய சான்றுகூட உள்ளது –

நானே, நேரடியாக பார்த்த சாட்சி –

அது –

1998-ல் இதே பழனியில் நடந்த ஒரு
சம்பவம்.-

அப்பொழுது நடந்த ஒரு விநாயகர் ஊர்வலத்தை மார்கெட் ரோட்டில் உள்ள பள்ளிவாசல் எதிரில் மறித்து கற்களை எறிந்து தகராறு செய்தார்கள், ஊர்வலம் தடைபட்டது –

அடுத்த நாள் முஸ்லிம் பெண் ஒருவர் இறந்த போது சடலத்தை எங்கள் மாரியம்மன் கோவில் முன்பாக கொன்டு செல்லக் கூடாது என்று கூறி இந்துக்கள் தகராறு செய்தனர் –

முஸ்லிம்கள் பினத்தை அங்கேயே போட்டுவிட்டு ஓடி விட்டனர், இறுதியில் காவல்துறை அடக்கம் செய்தது –

இதற்கடுத்து நடந்ததுதான் முக்கியமானது,
பழனி தேவஸ்தானம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது, –

அதாவது – பழனி மலைக்கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் கடை வைத்துள்ள இந்து அல்லாதவர்கள் எல்லாம் உடனடியாக இடத்தை காலி செய்ய வேண்டும் என்பது அது –

அடுத்த நாள் பழனி நகர முஸ்லிம் பரிபாலன சங்கத்தினர் எல்லாம் ஒட்டு மொத்தமாக சரனடைந்து ஒரு வாக்குறுதி கொடுத்தார்கள் –

அதாவது எப்பொழுதெல்லாம் விநாயகர் ஊர்வலம் பள்ளிவாசலைக் கடந்து செல்கிறதோ அப்பொழுதெல்லாம் முஸ்லிம்கள் சார்பில் மாலை மரியாதை அளிக்கப்படும் என்பது –

அது இன்று வரை தொடர்ந்து நடந்து வருகிறது –
இதைத்தான் மத நல்லினக்கம், இஸ்லாமியர்களின் பெருந்தன்மை என்றெல்லாம் அனைத்து பத்திரிக்கைகளும் எழுதி வருகின்றன-

உண்மையில் பழனி நகரில் 50% தேவஸ்தானத்திற்கு சொந்தமான கடைகளில் பிழைப்பு நடத்துபவர்கள் முஸ்லிம்கள் தான்,
படிப் பாதையில் உள்ள கடைகளிலும் இதே நிலைதான் –

எனவே,

இன்றும் கூட நாம் தேவர் பெருமகனாரின் சமுதாய ஒத்துழைப்பின்மை என்ற ஆயுதத்தை திடமாக கைகளில் எடுத்தால் –

இன்று நடக்கும் அத்துனை பிரச்சினைகளும் விரைவில் முடிவுக்கு வரும்.

நன்றி- வாட்ஸ்அப்

படிப்போம்! பகிர்வோம்! – சுட்ட நாக்கு

சுட்ட நாக்கு

diksha

குரு ஒருவருக்கு பேரழகியான ஒரு மகள் இருந்தாள், அதனால் அவளை திருமணம் முடிக்க பலர் போட்டி போட்டனர். அவர் தன் மகளை மனம் முடிக்க போட்டி போட்டவர்களிடம் ” நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். அதற்கு சரியான பதில் சொல்பவருக்கே எனது மகள்” என்று சொன்னார்.
மறுநாள் போட்டியாளர்கள் அனைவரும் குரு வீட்டில் கூடி இருந்தனர்.
குரு அவர்களைப் பார்த்து ” உலகிலே இனிமையான ஒரு பொருளை கொண்டு வாருங்கள்” என்று சொன்னார்.
மறுநாள் எல்லோரும் ஆளுக்கொரு பொருளை கொண்டு வந்தனர்.
ஒருவன் தேனைக் கொண்டுவந்தான். இன்னொருவன் கரும்பைக் கொண்டு வந்தான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு இன்னிமையான பொருளைக் கொண்டு வந்திருந்தனர்.
வரிசையில் கடைசியாக குருவின் ஒரு ஏழை சிஷ்யனும் நின்டிருந்தான்.
குரு அவனைப் பார்த்து நீயுமா என்று ஆச்சரியமாக கேட்டார்.சீடன் நான் உங்கள் மகளைக் காதலிக்கிறேன் என்று சொன்னான். குரு நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய் என்று கேட்டார்.
சீடன் தான் கொண்டு வந்திருந்த சிறிய பெட்டியை திறந்து காட்டினான்.
அதனுள் ஒரு ஆட்டின் நாக்கு இருந்தது.
குரு அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
குரு ‘என்ன இது எதற்காக இதை கொண்டு வந்தாய்” என்று கேட்டார்,
சீடன் ” குருவே நீங்கள் உலகிலேயே இனிமையான பொருளை கொண்டுவர சொன்னீர்கள். நாவை விட உலகில் சிறந்த பொருள் வேறு ஏது?
மனிதனுடைய நாவை கொண்டு வர முடியவில்லை. அதனால் தான் குறிஈடாக ஆட்டின் நாவை கொண்டுவந்தேன். நாவில் இருந்து தான் இனிமையான சொற்றகள் வருகின்றன. அதை சோகத்தில் இருப்பவன் கேட்டால் சந்தோசம் அடைகிறான். நோயாளி கேட்டால் குணம் அடைகிறான்.” என்றான்.
குரு “இதில் நீ வெற்றி அடைந்தாய். வாழ்த்துக்கள்” என்று சொன்னார்
சீடன் அடுத்த கேள்வி என்ன என்று கேட்டான்.
குரு ” உலகிலேயே கசப்பான ஒரு பொருளை கொண்டு வா” என்று சொன்னார்.மறுநாள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கசப்பான பொருளை கொண்டு வந்தனர். ஒருத்தன் வேப்பங்காயை கொண்டு வந்தான், இன்னொருவன் எட்டிக்காயை கொண்டு வந்தான். கடைசியாக சீடன் வந்தான். அவன் கையில் அதே பெட்டி. அவன் அதை திறந்து காட்டினான். அதே ஆட்டின் நாக்கு.
குரு ” என்ன விளையாடுகிறாயா? இனிமையான பொருளை கேட்டேன் நாவை கொண்டு வந்தாய். கசப்பான பொருளை கேட்டதற்கும் நாவை கொண்டு வந்து இருக்கிறாயே? என்ன அர்த்தம்?” என்று கோபமாக கேட்டார்/
சீடன் ” தீய சொற்களை பேசும் நாவை போல கசப்பான பொருள் உலகில் உண்டா? அதில் இருந்து வரும் சொற்களைக் கேட்டால் மகிழ்ச்சியாய் இருப்பவனும் துயரம் கொள்கிறான். நட்பாக இருப்பவனும் பகையாக மாறுகிறான். எனவே நாவு தான் உலகிலேயே கசப்பான பொருள்” என்று சொன்னான்.
சீடனின் அறிவைக் கண்டு வியர்ந்த குரு தான் மகளை அவனுக்கே மனம் முடித்துக் கொடுத்தார்.

*நாவு ஒரு அற்புத பொருள். சொர்கத்தின் திறவுகோலும் அது தான். நரகத்தின் வாசல்படியும் அது தான்*👅👅👅👅👅

படிப்போம்! பகிர்வோம்! – நமது சிறிய பிரச்சினைகள்

நமது சிறிய பிரச்சினைகள்

meditation-2214532__340புத்த துறவி ஒருவர் சொன்ன ஒரு அருமையான கதை

இதில் புதைந்துள்ள உண்மையை நாம் புரிந்து கொண்டு மனதில் நிறுத்தி விடவேண்டும். அதன் பிறகு நமது வாழ்கையின் மகிழ்ச்சியை குவிக்கிறோமோ இல்லையோ, துயங்களை கணிசமாக குறைக்கலாம்.

ஒரு பெரிய சக்ரவர்த்திக்கு ஓரே ஒரு மகள். அதாவது ராஜகுமாரி. இந்த சிறுமி விளையாடும் போது கண் ஒன்றில் மண் புகுந்தது. கண் சிவந்ததோடு, வீங்கவும் தொடங்கியது. போதாத குறைக்கு, சிறுமியோ தன் கண்ணை கசக்கியவாறு அழுதுவந்தாள். அரண்மனை மருத்துவர் வந்து பரிசோதித்தார்.

மருந்து தயாரித்து சிறுமியின் கண்ணில் இட முயற்சிக்கும் போது, இந்த சிறுமி ஒத்துழைக்கவில்லை. கண்ணை கசக்கியும் அழுதும் தொடர்ந்ததால் காயம் பெரியதானது.

அரசருக்கு தன் மகள் காயம் பெரிய வருத்தம் தந்தாலும் மகள் விருப்பத்தை மீறி கட்டாயப்படுத்துவதை மன்னர் விரும்பவில்லை.

அரண்மனை மருத்துவர் தனது இயலாமையை தெரிவித்து கழண்டு கொண்டார். சிறுமி அழுவதும் கண்களை கசக்குவதும் தொடர்ந்ததால் காயமும் எளிதாக ஆறுவதாக இல்லை.

இந்த செய்தியை அறிந்த பெரியவர் ஒருவர், மருத்துவரல்லாத ஒரு வைத்தியர். இந்த நோயை மருந்து இல்லாமலேயே குணப்படுத்த முன்வந்தார். அரசரும் ஒப்புக்கொண்டார்.

இதை தொடர்ந்து பெரியவர் சிறுமியை பரிசோதித்தார். உதட்டை பிதுக்கினார். பின், அரசரைக்கண்டு தனியாக பேச வேண்டுமே என்றார்.

சிறுமி உள்பட அனைவருக்கும் ஒரு சஸ்பென்ஸ். மன்னர் வந்தார். மன்னரிடம் ஏதேதோ பெரியவர் விளக்கினார்.

பின் சிறுமியும் கேட்கும்படியாக, அரசரிடம் விளக்கம் தந்தார். இந்த கண்ணில் உண்டான காயம் மிக விரைவில் குணமாகிவிடும் இது பெரிய விஷயமில்லை.

ஆனால், நான் கவலைப்படுவது அதற்காக இல்லை. இந்த பெண்ணுக்கு வால் ஒன்று முளைக்க இருக்கிறது. அது வளர்ந்தால், சுமார் முப்பது அடிவரை வளரும். அதன் பின் என்னாகுமோ எனக்கு தெரியவில்லை. அதுவும் பெரிய ஆபத்தில்லை.

சில நாட்களுக்கு கவனமாக இருக்க வேண்டும். சிறிது வால் தோன்றியதும் எனக்கு உடனடியாக அறிவித்து விடவேண்டும். அதற்கு மிக சிறந்த மருந்து ஒன்று உண்டு.

அதைக்கொண்டு வால் வளராமல் செய்துவிடலாம், எவ்வளவு விரைவில் எனக்கு தகவல் கிடைக்கிறதோ, அவ்வளவு வேகம் வால் பெரிதாகாமல் தடுக்கலாம் என்கிறார்.

வாலுள்ள பெண்ணா? சிறுமி, ராஜகுமாரிக்கு பயம் தோன்றியதில் வியப்பில்லை. படுக்கை அறையிலிருந்த இந்த சிறுமி வெளியே வரவில்லை. வால் முளைத்ததா என்று அறிவதிலேயே கவனமாக இருந்தாள்.

கண் வெகுவிரைவிலேயே குணமானது. மருத்துவரல்லாத வைத்தியர், சிறுமியை பரிசோதித்து, வால் முளைப்பதற்கான அறிகுறிகள் மறைந்து விட்டதாக கூறினார்.

எல்லாமே நல்லபடியாக முடிந்தது. அரசரும் பொன்னும் பொருளும் அள்ளித்தந்து வைத்தியரை பாராட்டினார். .

இந்த கதை சொல்லும் மிக முக்கிய வாழ்க்கைப்பாடங்கள் என்ன? மருத்துவர் வெற்றி அடைந்தது எப்படி ? இந்த பெண்ணின் கவனத்தை கண்ணிலிருந்து கழட்டி வால் முளைக்கும் என்று பயமுறுத்தி கதை ஒன்றை கட்டி, இல்லாத ஒன்றில் மாத்தி விட்டார் அல்லது திருப்பினார் இந்த வைத்தியர், கண் தானாக சரியாகியது.

இதை இருகோடுகள் தத்துவம் எனவும் சொல்லலாம். அதாவது சிறிய பிரச்சனைகளை ஒரு பெரிய பிரச்சனை இடம் தெரியாமல் அழித்துவிடும்.

நாம் தினம்தோரும் சந்திக்கும் எந்த ஒரு பிரச்சனையும் உண்மையாகவே கடுமையானவை இல்லை. ஆனாலும் அதைமட்டுமே நாம் தீவிரமாக உற்று கவனிக்கும் போது,

அது அசுர உரு எடுத்து நம்மை பயமுறுத்துகிறது. அதே சமயம் நம் கவனம் திருப்பப்பட்டாலோ, அதே பிரச்சனைகள் நம்மை துன்புறுத்துவது இல்லை.

மனிதன் தன் பிரச்சனைகளிலிருந்து நிரந்தர விடுதலை பெற, ஞானிகள் கண்டுபிடித்து சொன்ன வழி, மனதை தான், தனது என்பதிலிருந்து கழற்றி கடவுள் சமுதாயம் என்பதில் மாட்டிவிடு.

சுய நலத்தை கழட்டி வைத்துவிட்டு பொதுநல சேவை, சமூக சேவை என்று இறங்கிவிட்டால், நமது பிரச்சனைகள் மற்றவர் பிரச்சனைகள் முன்னால் சிறியதாகமாற, ஒளிந்து ஓடிவிடும்.

இதனால் இரண்டு மிகப்பெரிய லாபம், நமது கவலைகளும் பிரச்சனைகளும் இடம் தெரியாமல் ஓடிவிடும். அதோடு, நமக்கு மட்டுமில்லை நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நம்மால் நன்மைதானே?

படிப்போம்! பகிர்வோம்! -துன்பத்திற்கு ஒரே நிவாரணம் இறை நம்பிக்கை மட்டுமே.

துன்பத்திற்கு ஒரே நிவாரணம் இறை நம்பிக்கை மட்டுமே.

Photo Mar 28, 1 21 27 AM

கடவுள் பக்தி நிறைந்த ஒரு கணவனும் மனைவியும் “இன்ப சுற்றுலா” செல்கின்றனர்.

அங்கு ஏரியை பார்த்த மனைவி தன் கணவனிடம் .. நம் இருவர் மட்டும் தனியாக படகு சவாரி போகலாமா! என கேட்கிறாள்.

கணவனும் தன் மனைவியின் ஆசைக்காக சரி என்று சொல்ல… படகில் இருவரும் சிறிது தூரம் படகில் சென்றனர்

அப்போது வானிலை கொஞ்சம் காஞ்சமாக மாறுகிறது பிறகு மெல்ல மெல்ல காற்று வீச வேகமெடுத்து பலமாக காற்று வீச கரு மேகம் சூழ நெஞ்சு பதறும் அளவிற்கு இடி இடிக்க… மின்னல் வர இதில் மிகவும் பயந்துபோனவள் ஓடிவந்து தன் கணவன் அருகில் அமர்ந்துகொண்டு

“ஏனுங்க எனக்கு பயமாக இருக்கிறது துடுப்பை வேகமாக செலுத்துங்கள் சீக்கிரம் கரைக்கு போய் விடலாம் என்கிறாள் .”

தன் மனைவியை பார்த்து மென்மையாக சிரித்த கணவன் “உனக்கு பயமாக இருக்கிறதா! ஒரு நிமிடம்…”

என கூறி தன் பையில் ஆப்பிள் வெட்ட வைத்திருந்த ஒரு கூர்மையான கத்தியை எடுத்து தன் மனைவியின் கழுத்தை நோக்கி சடார் என நீட்டினான்

அவளோ பயமில்லாது தன் கணவனை பார்த்து சிரிக்கிறாள், இந்த நேரத்தில் என்ன விளையாட்டு இது என்று அந்த மழை நேரத்திலும் மென்மையாக சிரிக்கிறாள்

“ஏன் சிரிக்கிறாய்! இது எவ்வளவு கூர்மையான கத்தி தெரியுமா! உனக்கு இதை கண்டு பயமாக இல்லையா!” என்று கணவன் கேட்க…

“கத்தி கூர்மையானதுதான் ஆனால் அதை தன் வசம் வைத்திருப்பது என் அன்புக்குறியவராச்சே!

நான் நேசிக்கும் ஒருவர் எனக்கு எப்படி தீங்கு செய்வார்!” என மிக நலினமாக சொல்கிறாள்.

கத்தியை தன கை பையின் உள்ளேயே போட்ட கணவன் தன் மனைவியின் கண்ணம் தொட்டு… சொன்னான்

“அதுபோலதான் அன்பே! இந்த காற்றும் புயல் வருவதுபோல் இருக்கும் இந்த அறிகுறிகளும் மிக ஆபத்தானது போல தான் தோன்றும்

ஆனால் இவற்றை எல்லாம் தன் வசம் வைத்திருக்கும் அந்த “ஆண்டவன்” என் அன்புக்குறியவனாயிற்றே!

நான் நேசிக்கும் அவன் என்னையும் உன்னையும் எப்படி அவன் துன்புறுத்துவான்!” என்றான்.

பக்தி மனதில் இருந்தால் மட்டும் போதாது சோதனைகளின் போதும் அது உறுதியாக இருக்க வேண்டும்

நம் பக்தியை சோதிக்க இதுவும் சோதனைகள் தான் … யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத யாரையும் எந்த கஷ்டமும் ஒன்றும் செய்யாது என்றான்…

சிறிது நேரத்தில் கரு மேகங்கள் களைந்து, சூரியன் முகம் காட்டி, காற்று சாந்தமானது, பழைய படி சூழ்நிலை மாறியது

இறை நம்பிக்கை மட்டுமே நம் வாழ்க்கையின் எல்லா துன்பத்திற்கும் கிடைக்கும் ஒரே நிவாரணம்

அந்த நம்பிக்கையோடு நல்லவர்களாக நடை பயிலுங்கள் …. நம்மை படைத்தவன் நம்மை வழி நடத்துவான்

படிப்போம்! பகிர்வோம்! – குருசேத்திர யுத்தம் பற்றிய அறிவியல் தத்துவம்!

குருசேத்திர யுத்தம் பற்றிய அறிவியல் தத்துவம்!

மகாபாரதப்போர் நடந்த இடம் எது என்றால் குருசேத்திரம் என்பார்கள். குருசேத்திரம் எங்கிருக்கிறது என்று கேட்டால் ஹரியானாவில் இருக்கிறது என்று கூட தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால், குருசேத்திர யுத்தம், ஒரு அறிவியல் தத்துவத்தையும் எடுத்துச்சொல்வது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்! மனம் தான் நம் செயல்களுக்கு காரணமாக அமைகிறது என்பது அறிவியல் கலந்த ஆன்மிக உண்மை.
its-all-in-your-mindஒவ்வொரு நாளும் நமக்குள்ளும் குருசேத்திர யுத்தம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மனசு தான் குருசேத்திரம். அதில் இருக்கும் நல்ல எண்ணமே நியாயத்திற்காகப் போராடும் தர்மர் தலைமையிலான பாண்டவர்கள். தீய எண்ணங்களே அநியாயத்தின் பக்கமிருக்கும் துரியோதனன் தலைமையிலான கவுரவர்கள். ஓயாமல் இருபிரிவுக்கும் போர் நடந்து கொண்டே இருக்கிறது. பாண்டவர்களும், கவுரவர்களும் ஒரே பரம்பரையில் பிறந்த தாயாதிகள்(சகோதரர்கள்). அதேபோல, நல்லதும், கெட்டதும் ஒரே மனதில் உற்பத்தியானவை தான். அர்ஜூனன், தன் சொந்த பந்தத்தினர் மீது அம்பு விட தயங்கியது போல, உலகியல் வாழ்வில் ஈடுபடும் நமது புத்தியும், ஒன்றைச் செய்வதா வேண்டாமா என திண்டாடுகிறது. அப்போது விவேகம் என்னும் கிருஷ்ணர், நம் புத்திக்கு வழிகாட்ட வருகிறார். பாரதப்போரில், விவேகமாக நடந்த கிருஷ்ணர் மூலம் நியாயம் ஜெயித்தது. நம் மனதில் நடக்கும் குரு-க்ஷத்திர போரிலும் நன்மை ஜெயிக்க, விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. இப்போது புரிந்து கொண்டீர்களா! ஆன்மிகத்தை விட சிறந்த அறிவியல் வேறேதும் இல்லையென்று!

படிப்போம்! பகிர்வோம்! – கலியுகம் எப்படி இருக்கும்?

கலியுகம் எப்படி இருக்கும்?

Sri-Krishna-receives-the-messenger-in-the-company-of-the-Pandavas

ஒருமுறை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பாண்டவர்களில்  பீமன், அர்ஜுனன்,நகுலன் சகாதேவன் ஆகிய நால்வரும் கலியுகம் எப்படி இருக்கும் என்று தங்கள் சந்தேகத்தை கேட்டனர். அதற்கு மாதவன், சொல்வதென்ன எப்படி இருக்கும் என்று காண்பிக்கிறேன் என்று கூறி நான்கு அம்புகளை நான்கு திசைகளிலும் செலுத்தினார். அவற்றை கொண்டு வருமாறு நான்கு பாண்டவர்களிடமும் ஆணையிட்டார். கோவிந்தனின் ஆணைப்படியே நால்வரும் நான்கு திசைகளில் சென்றனர்.

முதலில் பீமன், அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியை கண்டான். அங்கு ஐந்து கிணறுகள் இருந்தன. மத்தியில் ஒரு கிணறு அதை சுற்றி நான்கு கிணறுகள். சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவைமிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணறில் மட்டும் நீர் வற்றி இருந்தது. இதனால் பீமன் சற்று குழம்பி, அதை யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

அர்ஜுனன், அம்பை எடுத்த இடத்தில் இன்னும் ஒரு குயிலின் அற்புதமான பாடலை கேட்டான். பாடல் கேட்ட திசையில் திரும்பி பார்த்த அர்ஜுனன் ஒரு கோரமான காட்சியை பார்த்தான். அங்கு அந்த குயில் ஒரு வென்முயலை கொத்தி தின்றுகொண்டிருந்தது. அந்த முயலோ வலியால் துடித்து கொண்டிருந்தது. மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய மனம் உள்ளதை எண்ணி குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்தான்.

நகுலன், கிருஷ்ணரின் அம்பை எடுத்துக்கொண்டு திரும்பி வரும் வழியில் ஒரு காட்சியை கண்டான். பசு ஒன்று அழகிய கன்றுக்குட்டியை ஈன்றெடுத்தது. ஈன்ற கன்றை தன் நாவால் வருடி சுத்தம் செய்து கொண்டிருந்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் தாய் பசு வருடுவதை நிறுத்தவில்லை. சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர். அதற்குள் கன்றுக்கு பலத்த காயங்கள் உண்டானது. தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும் என்று குழப்பத்தோடு அவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

சகாதேவன்,கிருஷ்ணரின் அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் இருப்பதை கண்டு எடுத்துக்கொண்டு திரும்பினான். மலைமேல் இருந்து,பெரிய பாறை ஒன்று கீழே உருண்டது வந்தது. வழியில் இருக்கும் அணைத்து மரங்களையும்,தடைகளையும் இடித்து தள்ளி,வேகமாய் உருண்டு வந்தது. வேகமாக வந்த அந்த பாறை, ஒரு சிறிய செடியில் மோதி அப்படியே நின்றுவிட்டது. ஆச்சரியத்தோடு அதை கண்ட சகாதேவன், தெளிவுபெற பகவானை நோக்கி புறப்பட்டான்,

இவ்வாறு நான்கு பாண்டவர்களும், ஸ்ரீ கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர். அவரவர் தாங்கள் கண்ட காட்சியையும், மனதில் உள்ள குழப்பத்தையும், ஞான கடலிடம் கேட்டனர். கிருஷ்ணரோ வழக்கமான தன் மெல்லிய சிரிப்புடன் விளக்கினார்….

பீமா, “கலியுகத்தில் ஏழைகள் செல்வந்தர்களிடையே வாழ்வார்கள். செல்வந்தர்களோ மிகவும் செழிப்பாக வாழ்வார்கள். ஆனால் ஏழைகளுக்கு கொடுத்து உதவ மாட்டார்கள். தங்களிடம் மேலும் மேலும் செல்வம் சேரவேண்டும் என்று நினைத்து பல தவறான வழியில் செல்வதை ஈட்டி சேமித்து வைப்பார்கள்.(நிரம்பி வழியும் கிணறுகளை போல). ஏழைகள் ஏழைகளாகவே வருந்துவார்கள்.”

அர்ஜுனா, “கலியுகத்தில் இறை தொண்டு செய்யும் பல ஆசாரியர்கள்,இறை சேவகர்கள், என பலர் ஆழ்ந்த அறிவும், இனிமையான குரலும்,கொண்டவர்களாக இருப்பார்கள். இருப்பினும் பக்தர்களை இவர்கள் பொய், ஏமாற்று வேலை கொண்டு மிகவும் துன்புறுத்துவார்கள். இதனால் மக்கள் மேலும் துன்பம் அடைவார்கள் என்றார்.(குயிலினை போல).

நகுலா, “கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது மிகுந்த பாசத்தோடு இருப்பார்கள். பிள்ளைகளின் மீது உள்ள பாசத்தால் அவர்கள் தவறு செய்தலும் அதை பொருட்படுத்தாமல், பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாவார்கள். இதனால் வாழ்வில் துன்பம் அடைய போவது தன் பிள்ளைகள்தான் என்பதை மறப்பார்கள். பிள்ளைகளும் ஊழ்வினையால் துன்பம் அனுபவிப்பார்கள். பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவர்கள்.(பசுவை போல).

அருமை சகாதேவா, “கலியுகத்தில் மக்கள் தங்களின் நற்குணங்களையும்,நல்ல சுபாவங்களையும், உருண்டு வரும் பாறையை போல் வேகமாக இழப்பார்கள். யார் எடுத்து கூறினாலும் அதை அவர்கள் பொருட்படுத்தமாட்டர்கள். இறுதியில் இறைவன் ஒருவனே இருட்டில் ஒளிரும் சிறிய வெளிச்சமாக அவர்களை அறியாமை என்னும் இருளில் இருந்து காப்பாற்றுவார்.” (பாறையை தடுத்த செடியை போல).

இவைகளே கலியுகத்தின் அம்சங்கள் என்று கூறி முடித்தார்

படிப்போம்! பகிர்வோம்! – நமது மூடநம்பிக்கை என்னும் அறிவியல்

நமது மூடநம்பிக்கை என்னும் அறிவியல்

Balabhadra daru is to be made from this neem tree found in Jhankada

1. நாங்க பாக்குற மரத்திலெல்லாம் மஞ்சத் துணிய சுத்தி பூ பொட்டு வச்சிருந்த வரைக்கும் ஒரு பயலும் மரத்த வெட்டாமத்தான் இருந்தான். என்றைக்கு இதெல்லாம் மூட நம்பிக்கைன்னு கூவ ஆரம்பிச்சானோ அன்றைக்கே இருக்குற மரத்த பூராத்தையும் வெட்ட ஆரம்பிச்சிட்டன்.

2. நாங்க ஆல மரத்துக்கு கீழேயும், அரச மரத்துக்கு கீழேயும் பிள்ளையார வச்சி வழிபட்டுகிட்டு இருக்கும் போதெல்லாம் மனுச மக்க சுத்தமான காத்த சுவாசிச்சிட்டு இருந்தான். இதையெல்லாம் மூடநம்பிக்கைன்னு என்றைக்கு பினாத்த ஆரம்பிச்சானோ அன்றைக்கே சுத்தமான காத்த தேடி ஓடிட்டு இருக்கான்.

3. நாங்க விளையுற நிலத்த சாமியா நினைச்சு பூஜை பண்ணிட்டு இருந்தப்போ மனுஷ மக்க சுத்தமான இயற்கையான சாப்பாட்ட சாபிட்டுட்டு ஆரோக்கியமா இருந்தான். இதையெல்லாம் மூடநம்பிக்கைன்னு என்றைக்கு பொலம்ப ஆரம்பிச்சானோ அன்றைக்கே இரசாயன சாப்பாட சாப்பிட்டுட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடிட்டு இருக்கான்.

4. நாங்க வீட்டுக்கு முன்னாடி கோலம் போடுறப்பவும், சூடம் ஏத்துறப்பவும், சாணியால வாச தொளிக்குறப்பவும், விளக்கு ஏத்துறப்பவும் இருந்த நோய் நொடியில்லாத வாழ்க்கை,  இதையெல்லாம் மூடநம்பிக்கைன்னு இவன் நினைக்க ஆரம்பிச்ச உடனே எதிர்ப்பு சக்தி குறைச்சு துவண்டு போயிட்டான்.

5. நாங்கெல்லாம் பய பக்தியா சாமி கும்பிடுறவரைக்கும் ஒரு முதியோர் இல்லமும் இல்லாமல் இருந்தது, மனுஷ மக்களும் நீதி நேர்மையோடு வாழ்ந்து வந்தனர்.

இதையெல்லாம் என்றைக்கு மூட நம்பிக்கைன்னு நாத்திகம் பேசினானோ அன்றைக்கு பெத்த தாய் தந்தையை முதியோர் இல்லத்தில் கொண்டு போய் தள்ளிட்டான்.

————————————–

இதெல்லாம் கொஞ்சம் தான்…. 
இனிமேலாவது சூதானமா
போலி பகுத்தறிவு திராவிட கொள்கையை விட்டுவிட்டு திருந்த பாருங்க!! நமது முன்னோர்கள் சொன்னதை செய்யுங்க!!

நன்றி Whats App ….

படிப்போம்! பகிர்வோம்! – வாழ்வின் எதார்த்தம்

வாழ்வின் எதார்த்தம்

maxresdefault

நாம் இறந்த அடுத்த நொடியே நம்முடைய உயிர் ஆத்மாவாக மாறிவெளியே நின்றபடி நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும்.

கொஞ்ச நேரத்தில் எப்படியாவது நாம் இறந்த செய்தி நம் வீட்டுக்கு போய்விடும், எல்லோரும் கதறியழுது காத்திருப்பார்கள்,

நம்மை வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு நிற்கும்,உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உடனே தகவல் சென்றுவிடும்,

இவ்வளவு நாள் நேராக வீட்டுக்குள் சென்ற நம்மை இன்று வாசலிலேயே வைத்துவிடுவார்கள்,

இத்தனைக்கும் அந்த வீட்டை நாம்தான் பார்த்து பார்த்து கட்டியிருப்போம், எல்லாம் நேரம்!

ஆளுக்கொரு பக்கம் மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டுஅழுவார்கள், வருகின்ற நண்பர்களையும் உறவினர்களையும் கூட கட்டிக்கொண்டு அழுவார்கள், நமக்கு ஒன்றுமே புரியாது,

அவர்கள் அழுவதை பார்த்து கஷ்டமாக இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷமாக இருக்கும் நம்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களே என்று!

உங்களைவிட்டு எங்கும் போகமாட்டேன் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று ஆறுதல் சொல்லி கண்ணீரை துடைக்க வேண்டும் என்று துடியாய் துடிப்போம்.

ஆனால் எதுவுமே முடியாது. அதுதான் மரணத்தின் மிகமோசமான துயரம்!

பாவம் எல்லோரும் tired ஆகி tired ஆகி அழுது கொண்டே இருக்கிறார்கள் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது!

இதோ நாம் எதிர்பார்த்தஅந்த freezer box வந்துவிட்டது,கோடைவெயிலுக்கு சும்மா குளுகுளு என்று இருக்கும்.

ஆனால் நம்மால் தான் உணரமுடியாது, ஒருவழியாக உள்ளே தள்ளி அடைத்து விட்டார்கள், இருட்டிக் கொண்டதால் வெளியே campfire ம் போட்டுவிட்டார்கள்.

விடியவிடிய விழித்திருந்து உறங்கலாம் என்று நினைக்கும்போது தாரைதப்பட்டையுடன் ஒரு குரூப் வந்துவிட்டது,

சொந்தபந்தங்கள் எல்லாம் வரத் தொடங்கிவிட்டன பாவிமக்கள் இந்த பாசத்தையெல்லாம் எங்கு வைத்திருந்தார்களோ தெரியவில்லை

அழுதுகொண்டே ஓடிவருகிறார்கள், இவ்வளவு நேரத்திற்கு பிறகு தமிழில் நமக்கு பிடிக்காத அந்த வார்த்தையை ஒருவன் சொன்னான், ‘பொணத்தை ‘ கொஞ்சம் தள்ளிவைங்க பந்தல்போடனும்,

நம்ம அப்பா எவ்வளவு அழகா பெயர் வச்சிருந்தாலும் செத்த பின்னாடி பத்துகாசுக்கு தேறாது! கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது, நம் பகையாளிகள் கூட நம்மை ரொம்ப நல்லவன் என்று certificate தருகிறார்கள்,

ஒருபக்கம் தாரை தப்பட்டைஇன்னொரு பக்கம்மக்கள் வெள்ளத்தில் மாலை மரியாதைகள் இன்னொரு பக்கம் பட்டாசுசத்தம், எல்லாம் இருந்தும் என்ன பிரயோஜனம்!?

அத்தனைபேரு முன்னாடி அரைகுறை dress சோட நம்மை குளிக்கவச்சி மானத்தை வாங்கிட்டாங்களே!!

என்ன பண்றது பொணமா பொறந்தாலே இப்படிதான்! ஒருவழியாக எரிப்பதற்கோ புதைப்பதற்கோ எடுத்து செல்கிறார்கள்.

இவ்வளவு நாள் நாம் போட்ட ஆட்டத்தை யெல்லாம் சேர்த்து நாலுபேர் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள்! கடைசியில் நம்மை எரித்தேவிட்டார்கள்!

இனி எங்காவது நாய் ஊளையிட்டால் கூட நாம் தான் வந்திருக்கிறோம் என்று புலுக ஆரம்பித்து விடுவார்கள்!

அடுத்த நாள் வீட்டுக்கு சென்று பார்த்தால் அழுகை குறைந்து விசும்பலாகி விட்டிருக்கும் அதற்கு அடுத்த நாள் விசும்பலும் குறைந்திருக்கும்.

இப்படி நாளாக நாளாக நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள்!

ஒவ்வொரு இறப்பின் போதும் எத்தனையோ கனவுகளும் ஆசைகளும் சேர்ந்தே புதைந்து போகின்றன!

இப்படி ஒவ்வொரு நாளும் சராசரியா உலகம் முழுவதும் 70,000 பேர் உயிர் துறக்கிறார்கள்!

நாளைய விடியல் நமக்கானது என்கின்ற எந்த உத்திரவாதமும் இல்லாதபோது நாம் ஏன் பொய்யோடும், பொறாமையோடும்,பகையோடும், பாவத்தோடும் நம் வாழ்க்கையை வாழவேண்டும்?

இனியேனும்,
அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வோம்.

நன்றி Whats App ….

படிப்போம்! பகிர்வோம்! – பாரதப் போர் –எண்ணங்கள்

எண்ணங்கள்thoughts

எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. ஒரு முறை எண்ணிய உடனேயே அந்த எண்ணம் சக்தி படைத்ததாக மாறி விடுவதில்லை. ஒரு எண்ணம் திரும்பத் திரும்ப எண்ணப்படும் போது அது சக்தி பெற ஆரம்பிக்கிறது. அந்த சக்தி அதை செயல்படுத்தத் தூண்டுகிறது.

“ஆயிரம் முறை சொன்னால் யானையும் சாகும்” என்பர் பெரியோர். அதனால் தான் ஆலயங்களில் லட்ச்சார்ச்சனை, கோடியர்ச்சனை போன்றவைகள் நிகழ்கின்றன.

எண்ணங்களின் சக்தி அதே எண்ணங்கள் கொண்டவர்களை தன் பக்கம் ஈர்க்கிறது. மேலும் வலுப்பெறுகிறது. அது அலைகளாகப் பலரையும் பாதிக்கிறது. பலரையும் செயலுக்குத் தூண்டுகிறது.

எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம். காரணம் அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால் அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்து போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள்.

எனவே நம் மனதில் அதிகமாக மேலோங்கி நிற்கும் எண்ணங்கள் எவையோ, அவையே இன்று நம்மை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்த பெருமை உடையவை.

நம்முடைய இன்றைய நிலை திருப்திகரமாக இல்லையென்றால் முதலில் நம் எண்ணங்களை மாற்றவேண்டும். எண்ணங்கள் மாறுகிற போது அதற்கேற்ப எல்லாமே மாறும். இது மாறாத உண்மை.

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

வாழ்கவளமுடன்

படிப்போம்! பகிர்வோம்! – பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது?

பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது?

பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரில் மக்கள் தொகையில் கிட்டதட்ட 80% ஆண்கள் இறந்துவிட்டனர் என்பதை அறிந்த வருண் என்கிற மாணவன், பாரதப் போர் நடைபெற்றதாக கூறப்படும் குருஷேத்ரத்திற்கு நேரில் சென்று பார்த்தான்.
‘கௌரவர்களும் பாண்டவர்களும் போரிட்ட ரத்த பூமியின் மீது தான் நாம் நிற்கிறோமா?
கிருஷ்ண பரமாத்மா இங்கே தான் பார்த்தனுக்கு பார்த்தசாரதியாக தேர் ஒட்டினாரா?’
பல்வேறு சந்தேகங்கள் அவனுக்குள் எழுந்தன.
அந்த மண்ணையே வெறிச்சென்று பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில்,
“உன்னால் ஒரு போதும் உண்மையை கண்டுபிடிக்க முடியாது மகனே” என்கிற குரல் கேட்டது. குரல் வந்த திக்கை ஆச்சரியத்துடன் நோக்கினான்.
புழுதி பறக்கும் மண்ணுக்கிடையே
காவி_உடை அணிந்த ஒரு உருவம் தென்பட்டது.
“குருக்ஷேத்திர போரை பற்றி தெரிந்துகொள்ள நீ இங்கே வந்திருக்கிறாய் என்று தெரியும். ஆனால் அந்த போர் உண்மையில் யார் யாருக்கிடையே எதன் பொருட்டு நடைபெற்றது என்று தெரிந்துகொள்ளாமல் நீ அந்த போரை அறிந்துகொள்ளமுடியாது.”
“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?” – சற்றே குழப்பத்துடன் கேட்டான் வருண்.
“மகாபாரதம் ஒரு இதிகாசம். ஒரு மாபெரும் காவியம். அது உண்மை என்பதை விட அது ஒரு தத்துவம்.
அதை தான் அனைவரும் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்…”
அந்த காவியுடை பெரியவர் வருணைப் பார்த்து மர்மப் புன்னகை ஒன்றை உதிர்த்தார்.
“அது என்ன தத்துவம் ஐயா?
எனக்கு கொஞ்சம் விளக்குங்களேன்…”
“நிச்சயம்! அதற்காகத் தானே வந்திருக்கிறேன்”
“பஞ்சபாண்டவர்கள் வேறு யாருமல்ல. கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய நம் ஐம்புலன்கள் தான்!!!!
கௌரவர்கள் யார் தெரியுமா?”
“………………..”
“இந்த ஐந்துபுலன்களை தினந்தோறும் தாக்கி தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள் தான் கௌரவர்கள்!!!”
“………………..”
“எண்ணிக்கையில் பெரிதான இவர்களை எதிர்த்து உன்னால் (ஐம்புலன்களால்) போரிட முடியுமா?
“………………..”
“முடியும்…! எப்போது தெரியுமா?”
வருண் மலங்க மலங்க விழித்தான்.
“கிருஷ்ண பரமாத்மா உன் தேரை செலுத்துவதன் மூலம்.”
வருண் சற்று பெருமூச்சு விட்டான்.
பெரியவர் தொடர்ந்தார்.
“கிருஷ்ணர் தான் உன் மனசாட்சி. உன் ஆன்மா. உன் வழிகாட்டி. அவர் பொறுப்பில் உன் வாழ்க்கையை நீ ஒப்படைத்தால் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.”
வருண் பெரியவர் சொல்வதை கேட்டு மெய்மறந்து போனான். ஆனால் வேறொரு சந்தேகம் அவனுக்கு தோன்றியது.
“கௌரவர்கள் தீயவர்கள் என்றால் அப்போது பெரியவர்களான துரோணாச்சாரியாரும் பீஷ்மாரும் அவர்கள் பக்கம் நின்று அவர்களுக்காக போரிடுகிறார்கள்?”
“வேறொன்றுமில்லை…. நீ வளர வளர உனக்கு மூத்தவர்கள் குறித்த உன் கண்ணோட்டம் மாறுகிறது.
நீ வளரும் காலகட்டங்களில் யாரெல்லாம் குற்றமற்றவர்கள், அப்பழுக்கற்றவர்கள் என்று எண்ணினாயோ அவர்கள் உண்மையில் அப்படி கிடையாது.
அவர்களிடமும் தவறுகள் உண்டு என்று உணர்கிறாய்.
எனவே அவர்கள் உனது நன்மைக்காக இருக்கிறார்களா, அவர்கள் உனக்கு தேவையா இல்லையா என்று நீ தான் தீர்மானிக்க வேண்டும்.”
“மேலும் அவர்கள் உன் நன்மைக்காக போராடவேண்டும் என்று நீ ஒரு கட்டத்தில் விரும்புவாய்.
இது தான் வாழ்க்கையின் கடினமான பகுதி.
கீதையின் பாடமும் இது தான்.”
வருண் உடனே மண்டியிட்டு தரையில் அமர்ந்தான்.
களைப்பினால் அல்ல. கீதை உணர்த்தும் பாடத்தை ஓரளவு புரிந்ததும் அதன் மீது ஏற்பட்ட பிரமிப்பினால்.
“அப்போது #கர்ணன்?” அவன் கேள்வி தொடர்ந்தது.
“விஷயத்துக்கு வந்துவிட்டாய் மகனே.
உன் ஐம்புலன்களின் சகோதரன் அவன். அவன் பெயர் தான் ஆசை. மோகம். அவன் உன் இந்திரியங்களின் ஒரு பகுதி. உன்னுடன் பிறந்தவன்.
ஆனால், தீமைகளின் பக்கம் தான் எப்போதும் நிற்பான். தான் செய்வது தவறு என்று அவனுக்கு தெரியும். ஆனாலும் ஏதேனும் சாக்குபோக்கு சொல்வான். உன் விருப்பம் போல. ஆசை போல.”
“நான் சொல்வது உண்மை தானே? தீயவற்றுக்கு துணைபோகத் தானே மனம் ஆசைப்படுகிறது…?”
வருண் “ஆம்…” என்பது போல தலையசைத்தான்.
இப்போது தரையை பார்த்தான்.
அவனுக்குள் ஓராயிரம் எண்ணங்கள். சிந்தனைகள். எல்லாவற்றையும் ஒன்றாக்கி தலைநிமிர்ந்து மேலே பார்த்தான்.
அந்த காவிப்பெரியவரை காணவில்லை.
அவர் புழுதிகள் எழுப்பிய திரையில் மறைந்துவிட்டிருந்தார்.
*மிகப் பெரிய உண்மை*