எழுமின் விழுமின்

முதற் பதிப்பின் நூன்முகம்

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் விவேகானந்தரவர்கள் பிறந்த அந்தத் திருநாளைக் கொண்டாட இப்பொழுது நாடு நெடுகிலும் பரந்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆகவே மகாபுருஷரான சுவாமிகளுடைய வாழ்க்கையையும், உபதேசங்களையும் மீண்டும் ஆராய்ந்து அறிவதில் ஒரு புது ஆர்வம் இயற்கையாகவே ஏற்பட்டிருக்கிறது. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் தலையாய சீடராக விளங்கிய சுவாமிகள், கடந்த ஒரு சில நூற்றாண்டுக் காலத்தில், வெளிநாடுகளுக்குச் சென்று உலகுக்கு உலக சமயத்தின், சனாதன தர்மத்தின் செய்தியை மீண்டும் ஒருமுறை தெளிவாக விளக்கிக் கூறிய முதல் ஹிந்துப் பிரசாரகராவார். அவர் மாபெரும் தேச பக்தர்; சீர்திருத்தவாதி; ஒன்று திரட்டும் அமைப்பாளர் என்பதுடன் தேசீய மறுமலர்ச்சிக்கான சக்திகளை முதன் முதலில் முடுக்கி விட்டு, பிரிட்டிஷ் ஆட்சியின் முதல் தாக்குதலால் சிதறுண்டு நெறி குலைந்திருந்த நாட்டைப் புனர் நிர்மாணப் பாதையில் அமைத்து வைத்தவரும் ஆவார். ‘சமயம்தான் பாரதத்தின் ஆத்மா; அதை மையப்புள்ளியாக வைத்தால்தான் நமது ராஷ்டிரத்தைப் பயனுள்ள முறையில், சக்தி வாய்ந்த ரீதியில் புனர்நிர்மாணித்து அமைக்க முடியும்’ என்பதை நாட்டுக்கு உணர்த்தி மறுமலர்ச்சியுறப் பாரதத்துக்கு அஸ்திவாரம் அமைத்தவர் விவேகானந்தரே.

இந்த மாவீரருக்கு அஞ்சலி செலுத்த மக்கள் ஆயத்தமாகி, விழாக் கமிட்டிகள் வேலை செய்யத் துவங்கப்போகும் வேளையில் நாடு திடீரெனத் தாக்கி உலுக்கப்பட்டு எழுந்தது. ஈவிரக்கமற்ற, நம்பிக்கைத் துரோகம் இழைக்கும் ஒரு வெறிக் கும்பல் வடக்கே நுழைந்ததால் நம் நாடு தனது எல்லாச் சக்திகளையும் அவசரமாகத் திரட்டிக் குவித்து, அவ்வெதிர்ப்பைச் சமாளிக்க நேரிட்டுள்ளது. எதிரிநயவஞ்சகமாகப் போருக்கும் எதிர்ப்புக்கும் ஏற்பாடு செய்து வந்துள்ளான்; நட்புப்பேச்சு, உடன்பாடு காண்பது என்ற போர்வையில் நமது பகுதிகளுக்குள் நுழைந்து விட்டான். – இது ஒரு புறம். மறு புறத்தில் நமது சொந்த ஆட்சியாளர்கள் கனவுலகத்தில், கற்பனை யுலகில் சஞ்சரிக்கிற போக்கில் ஆழ்ந்திருக்கிறார்கள். இதன் காரணமாக இமயமலையைக் கடந்து முழுச் சக்தியுடன் பகிரங்கமாக எதிரி தாக்கிய பொழுது நாடு முற்றிலும் இதனை எதிர்பாராத நிலையில் இருந்ததால் திகைத்து விட்டது.

நமது ராஷ்டிரம் இப்படியிருக்கும் நிலையில் சுவாமி விவேகானந்தரின் உபதேசச் செய்திக்கு ஒரு புது மகத்துவம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அவர் அளித்த உபதேசச் செய்தியானது சக்தியை ஆதாரமாகக் கொண்டது. உடல் வலிமை, உள்ள வலிமை, மனத்திண்மை ஆகியவற்றை அது வலியுறுத்துவதாகும். இவ்வாறு எல்லாம் அம்சங்களிலும் நம் நாடு வலிமைபெற்று விளங்குவது இந்த வேளையில் மிக முக்கியமான தேவை. சுவாமி விவேகானந்தர் தம் நாட்டினருக்கு ‘இரும்பாலான தசையும், எஃகினாலான நரம்பும், அதனுள்ளே இடியை உருவாக்குகிற அதே பொருளால் உண்டாக்கப்பட்ட உள்ளமும் உறைந்திருக்க வேண்டும்’ என்று விழைந்தார். ‘தமது நாட்டினர், சக்தியும் ஆண்மையும், க்ஷத்திரிய வீரியமும் அத்துடன் பிரம்ம தேஜஸும் வாய்க்கப்பெற்றிருக்க வேண்டும்; அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்’ என்று அவர் விரும்பினார். அபாயமும் நெருக்கடியும் கலந்த இன்றைய நிலையில் குறிப்பாகத் தேவைப்படுகிற குணங்கள் இவைகளே. சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுகபோகமே பெரிதென்ற வாதங்களாலும், வாழ்வு பற்றிய உலகாயத நோக்காலும் நாம் கவரப்பட்டு, மேலே சொல்லப்பட்ட உத்தமகுணங்களை உதாசீனம் செய்து விட்டோம்.

சுவாமிகளின் உபதேச மொழிகளை நாம் சுருங்கக் கூறின் அவர் நமக்கு ஒரு மகா மந்திரத்தை உபதேசம் செய்ததாகக் குறிப்பிடலாம். அதுதான் தெய்வ நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் தேவை என்பது. தன்னம்பிக்கையானது உபநிடதப் பேருண்மையை அடிப்படையாகக் கொண்டது. “நான் ஆத்மா; என்னை வாள் வெட்டாது; ஆயுதங்கள் துளைக்காது; நெருப்பு எரிக்காது; காற்று உலர்த்தாது; நான் சர்வ சக்திமான்; எல்லா முணர்ந்தவன்” என்று உபநிடதம் முழங்குகிறது. இந்த மந்திரத்தைத்தான் சுவாமி விவேகானந்தர் சதாசர்வ காலமும் தமது நாட்டினருக்கு ஆணியடித்தாற் போலப் புகட்டினார். அவர் பேசியவற்றிலெல்லாம் அவரது அருள்மொழியிலெல்லாம் இந்த மந்திரமே முழங்கிற்று. இதுவே அவரது உபதேச கீதத்தின் பல்லவியாக இருந்தது. இவ்வுண்மையின் உட்பொருளை நாம் புரிந்துகொண்டு அதற்குத் தக வாழ்வதற்கான தக்க தருணம் இதுவே. அவ்வாறு நாம் செய்தால் உலகிலுள்ள எந்தச் சக்தியும் நமக்குத் தீங்கிழைக்க முடியாது.

அன்றியும் ‘மோட்சத்தை எய்த விழையும்போது நமது தர்மத்தை நாம் நிறைவேற்றவேண்டும்’ என்று அவர் மேலும் கூறு கிறார். உண்மையில் பார்க்கப்போனால் தர்மமில்லாமல் மோட்சமில்லை. நமது சமயமானது வலிமை குலைந்து தாழ்வுறும் கட்டத்தில், இந்த உண்மையை மீண்டும் வலியுறுத்த வேண்டிய தேவையிருந்தது. கிருகஸ்தனின் வாழ்க்கையை அவர் திருத்தியமைத்து அதற்கு ஒரு புதிய கௌரவத்தை அளிக்கிறார். “வீரர்களால் மட்டுமே உலகில் இன்பம் அனுபவிக்க முடியும்” என்று சாஸ்திரங்கள் முழங்குவதை அவர் நினைவு படுத்தி “வீரம் காட்டுக” எனத் தூண்டி விடுகிறார். நாம் வாழ்கிற காலத்திலுள்ள தர்மநெறி நிலையை நாம் ஒப்புக்கொண்டு அதற்குட்பட்டு வேலை செய்யவும் வாழவும் வேண்டுமென்று சாஸ்திரம் விதிப்பதை அவர் நினைவிற் கொள்ளச் சொல்லுகிறார். “நாம் இருக்கிற சந்தர்ப்பச் சூழ்நிலையை இருக்கிறபடியே ஒப்புக்கொண்டால்தான் நாம் அவற்றைச் செம்மைப் படுத்தி உயர்த்த முடியும். ஆதலால் சாஸ்திரத்தின் கட்டளையை மறக்கக் கூடாது” என சுவாமி விவேகானந்தர் அறிவுறுத்துகிறார். “சந்தர்ப்பத்துக்குத்தக்க சாம, தான, பேத, தண்டம் எனும் நால்வகை அரசியல் உபாயங்களைக் கைக்கொண்டு உனது எதிரிகளை வென்று உலகில் இன்பம் அனுபவி. அப்படிச் செய்தால்தான் நீ தர்ம நெறிப்படி, நடப்பவனாவாய். இல்லையேல், உனக்கு ஏற்படும் அவமானங்களைச் சகித்துக் கொண்டு, உன்னை உதைக்கவும், மதிக்கவும், நினைக்கிறவன் தருகிற உதை மிதிகளை ஏற்று நீ வாழ்வாயானால் உனது வாழ்க்கை இவ்வுலகில் நரகத்தை யொத்ததாக ஆவதுடன் மறு உலக வாழ்வும் அவ்வாறே ஆகிவிடும். மானங்கெட்ட வாழ்வு வாழ்வாய், என்று சாஸ்திரம் விதிக்கிறது” என்கிறார்.

இன்று நாடானது தனது சுதந்திரத்தையும், தனது வருங்காலத்தையும், தனது தர்மத்தையும் பாதுகாப்பதற்காக ஆயுதந்தரிக்க வேண்டிய நெருக்கடியான சரித்திரக் கட்டத்தில் வாழ்கிறது. இந்த வேளையில் நமது நரம்புகளில் முறுக்கேற்றவும், நமது உறுதிக்கு வலிவூட்டவும் இந்த உபதேசம் மிக அரியதாகும்; உறுதுணை புரிவதாகும்.” பாரதத்தில் தேசிய ஒற்றுமையென்பது சிதறிக்கிடக்கும் அதன் ஆத்மீக சக்திகளை ஒன்று குவிப்பதாகும்” என்று அவர் அடிக்கடி உபதேசித்தார். “ஒரே ஆத்மீக ராகத்துக்கிசையத் தாளமிடுகிற உள்ளங்களை இணைப்பதே பாரதத்தில் ராஷ்டிர ஒற்றுமையை அமைப்பது ஆகும்” என்று அவர் கருதினார். குறிப்பாக இன்றையகாலத்தில், எல்லாவித ஒற்றுமைகளும் தேவையாக உள்ள இவ்வேளையில், நாட்டின் சக்திகளையெல்லாம் துரிதமாக ஒன்று குவிக்க வேண்டிய இந்தச் சந்தர்ப்பத்தில், அவரது இவ்வுபதேசத்தை நாம் மிகக் கவனமாகக் கருத்திற் கொள்ளவேண்டும்.

ஹிந்து ராஷ்டிரத்துக்கு சுவாமிகள் அருளுகிற மற்றொரு உபதேசமும் உண்டு. தமோ குணத்தை நாம் கைவிட வேண்டுமென அவர் கூறு கிறார். ஏனெனில் தமோ குணமானது பலவீனத்தையும், மூடநம்பிக்கையையும், அற்பத்தனத்தையும், சிறு விஷயங்களுக்கான பரஸ்பரச் சண்டை பூசல்களையும் உண்டாக்குகிறது. “இந்த இழிகுணங்களைக் கைவிட்டுவிட்டு ஒற்றுமை, சங்கம் சேர்த்தல் ஆகிய பாறை போன்ற அடிப்படைகளின் மீது மகாசக்தியை நாம் நிர்மாணிக்க வேண்டும். இவ்வாறு தனித்தனியான நமது விருப்பங்களை ஒன்றுகூட்டி இணைத்து, நமது பழங்காலத்தையும் மிஞ்சக்கூடிய சிறப்புயர்வு வாய்ந்த வருங்காலத்தை நாம் நிர்மாணிக்க வேண்டும்”. சுவாமிகளின் இந்தச் செய்தி இன்றைய காலத்துக்குத் தேவையானதாகும். ஏனெனில் நம்மை இன்று சூழ்ந்துள்ள அபாயத்தைப் போல ஓர் அபாய நிலை நேரும் போது தான் ஒவ்வொரு நாடும் தனது பலாபலங்களைக் கணக்கெடுத்து ஆத்மசோதனை செய்து பார்த்துக் கொள்ளும்.
இன்றைக் காலத்தின் இத்தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே இந்நூலை வெளியிட முயன்றோம்.

சுவாமிகளின் கட்டுரைகளும், அருளுரைகளும், தத்துவம், சமயம், சமூக இயல் ஆகிய விஷயங்களைப்பற்றி மட்டுமின்றி கலை, சிற்பம், சங்கீதம் முதலிய விதவிதமான விஷயங்களைத் தாங்கியவை ஆகும். இங்ஙனம் உலகியல் துறை, ஆத்மீகத்துறை ஆகிய இவ்விரு துறைகளையும் சார்ந்து அவை உள்ளன. ஆனால் நமது பழங்காலச் சிறப்பை உணர்த்துகிற சில பகுதிகளையும், நமது இன்றையத் தாழ்நிலையின் காரணங்களையும் ஆராய்ந்து நம்மை சிறப்பான வருங்காலத்தை நோக்கி உந்தித் தள்ளி, அதற்காக நம்மை ஆயத்தப்படுத்துகிற பகுதிகளையும் மட்டுமே தேர்ந்தெடுத்திருக் கிறோம். அதுவே நமது திட்டவட்டமான சிறிய உத்தேசமாகும். இப்படிப் பொறுக்கியெடுக்கப்பட்ட பகுதிகள், கோவையான முழு வடிவம் பெறுகிற வகையில், ஒழுங்குற அமைக்கப் பட்டுள்ளன. எந்தெந்தப் பகுதிகள் பொதுவான கருத்தை வெளியிடுகின்றனவோ, மூலக் கட்டுரையின் அமைப்பிலிருந்து எடுப்பதால் அர்த்தம் கெட்டுப் போகாதோ, அப்படிப்பட்ட பகுதிகளையே தேர்ந்தெடுத்துள்ளோம்.

இந்த வெளியீடு ஒரு தொகுப்பாக மட்டுமே இருக்கவேண்டுமென்பது நம் உத்தேசம். சுவாமிகளின் உபதேசச் செய்தியை எவ்வித விளக்கமோ கருத்துரையோ இன்றி அவரது சொந்தச் சொற்களாலேயே தொகுத்துப் புத்தகமாக சமர்ப்பிக்க வேண்டுமென்பது நம் கருத்து. ஆகையால், புத்தகம் முழுவதுமே சுவாமிகளின் சொந்தச் சொற்களாலேயே உருவாகியுள்ளது. தலைப்புகள், துணைத்தலைப்புகள் கொடுத்தது, விஷயங்களை ஒரு வடிவத்தில் தொகுத்து இணைத்தது, இவைமட்டுந்தான் தொகுப்பாளரின் வேலை. சில இடங்களில் தெளிவு ஏற்படுத்துவதற்காக உரிச் சொல்லுக்குப் பதிலாகப் பெயர்ச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நூலுக்கான விஷயங்கள் அத்வைத ஆசிரமத்தார் வெளியிட்ட “சுவாமி விவேகானந்தரது கருத்துக்களின் முழுத்தொகுப்பு”, (Complete works of Swami Vivekananda) “கீழை நாட்டு மேலை நாட்டுச் சீடர்கள் தயாரித்த சுவாமி விவேகானந்த சரித்திரம்”, சுவாமிகளின் வாழ்நாளிலே துவக்கப்பட்ட பத்திரிகைகளான “பிரபுத்த பாரத”, “பிரம்ம வாதின்”,”உத்போதன்” ஆகியவற்றிலிருந்தும் மற்ற சமகாலப் பத்திரிகைகளிலிருந்தும் சேகரிக்கப்பட்டன.

ஆகையால், தனித்தனியான ஒவ்வொரு பகுதியும் மேற்கோள் குறி (Quotation Mark) யின்றி ஏன் உள்ளது என்பதன் காரணம் வாசகர்களுக்குத் தெளிவாகத் தெரியும். ஏனெனில் ஒரு விதத்தில் இந்த நூல் முழுவதுமே மேற்கோள் குறிக்குட்பட்டுத்தான் அமைந்துள்ளது.

இந்தப் புத்தகம் நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாகத்திலும் உள்ள விஷயத்தைக் குறிக்கிற தனித்தலைப்பு ஒவ்வொரு பகுதிக்கும் தரப்படுள்ளது. அவையாவன: (1) உபதேச மொழி (2) பிரசங்கங்கள், உரைகள், கட்டுரைகள் ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த சில பகுதிகள் (3) சில கண்ணோட்டங்களும் கண்டனங்களும் (4) ஆண்மை ஊட்டுதல் அல்லது ஊழியர்களை உருவாக்குதல்.

(1) உபதேச மொழி

நமது ராஷ்டிரத்தின் நிலையைப்பற்றி சுவாமிகள் கொண்டிருந்த கருத்துக்களை முக்கியமானதாகக் கொண்ட இப்பகுதி, அவர் வெளியிட்ட கருத்துக்களைக் கொண்ட ஒரு ஆராய்ச்சிப் பகுதியாகும். முன் குறிப்பிட்டுள்ளது போல் இந்தப் பகுதியானது எண்ணிறந்த அவரது கருத்துரைகள், பேச்சுக்கள், கடிதங்கள், கட்டுரைகள் இவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். பலவிடங்களிலிருந்து தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்டதானாலும் கூட, வண்ணக் கற்களால் அமைந்த சித்திரம் போல, அவை பொருந்த இணைக்கப்பட்டுச் சுவாமிகளின் சிந்தனை தங்கு தடையற்ற ஒட்டத்துடன் செல்லுகின்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

(2) பிரசங்கங்கள், உரைகள், கட்டுரைகள் ஆகிய வற்றிலிருந்து தேர்ந்தெடுத்த சில பகுதிகள்

இந்த பாகத்தில் தொகுக்கப்பட்டுள்ளவை, சில முக்கியமான விஷயங்களைப் பற்றிச் சுவாமிகள் கொண்டிருந்த கருத்தை வாசகர்களுக்கு உணர்த்தும் நோக்கத்துடன் தரப்பட்டுள்ளன. “உபதேசமொழி”ப் பகுதியுடன் தொடர்புடைய இக்கருத்துக்களை முதல் பாகத்தில் பொருத்தி வைக்க முடியவில்லை. அல்லது அங்கு மேற்போக்காக அவை கூறப்பட்டிருக்கும்.

(3) சில கண்ணோட்டங்களும் கண்டனங்களும்

இந்தப் பகுதியிலுள்ளவை வாசகர்களுக்குச் சுவாமிகளின் இதயத் துடிப்பையும், அவரது மனம் வேலை செய்த முறையையும் தெளிவாகச் சித்தரித்துக் காட்டுவதற்காகத் தொகுப்பட்டவையாகும். சுவாமிகள் விஷயங்களை அமைதியாகவும், திட்டமிட்ட ரீதியிலும் அணுகி ஆய்ந்தார். ஆனால் அதற்குப் பின்னணியாக மகத்தான ஆவேசமும், உணர்ச்சியும் அவரை ஆட்டுவித்தன. இந்தப் பகுதி, வாசகர்களுக்கு அதன் தெளிவான காட்சியைக் காட்டும்.

(4) ஆண்மை ஊட்டுதல் அல்லது ஊழியர்களை உருவாக்குதல்

சுவாமிகள் தமது கட்டுரைகளிலும் கடிதங்களிலும் தேச நிர்மாணப் பணியில் பங்கு கொள்ள விருப்பமுள்ள ஊழியர்கள் அல்லது “காரியகர்த்தர்கள்” என்பவர்களுக்குத் தேவையான ஒரு குறிப்பிட்ட மன அமைப்பைப்பற்றியும், மனத்துக்கும் அறிவுக்கும் தேவையான சில குணங்களைப் பற்றியும் குறிப்பிட்டார்.

உயர்ந்த படிப்பினையாக அமைந்த அந்தச் சொற்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன. (1) ஒற்றுமை இயக்க அமைப்பு (2) தலைமை தாங்கும் குணம் (3) உண்மையான ஆசிரியருக்கான பண்புகள் (4) வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியம் அல்லது பணி புரிகிற கலையும் அதன் விஞ்ஞான ரீதியான முறையும் என்பன அத்தலைப்புகள். சுவாமிகளின் உபதேசச் செய்திகளை நடைமுறையில் கொண்டு வரும் பகுதியாக அவ்விஷயங்கள் அமைந்திருப்பதால் அவை இந்நூலில் இணைக்கப் பட்டிருக்கின்றன.

புத்தகம் தொகுப்பதற்காகக்குறிப்பாகச் சில தலைப்புகளை மட்டுமே தேர்ந்தெடுத்ததால் விஷயம் குறைவாக இருப்பினும் ஒவ்வொரு தலைப்பின் கீழும் ஏராளமான அரிய கருத்துக்கள் கிடைத்தன. கிடைத்த எல்லா விஷயங்களையும் சேர்த்துவிட வேண்டுமென்ற ஆசையை எதிர்த்து, தொகுப்பாளர் மல்லுக்கு நிற்க வேண்டியிருந்தது. ஏனெனில் கிடைத்துள்ள எல்லா அரிய விஷயங்களையும் தொகுத்து வெளியிடுவதாயின் புத்தகத்தின் விலை வாசகர் பலர் வாங்க முடியாதபடி அதிகமாய் இருக்கும். ஆனால் தொகுப்பாளரும் வெளியிடுவோரும் புத்தகம் கூடிய மட்டில் குறைந்த விலையுடனிருக்க வேண்டுமென விரும்பினர். அப்போதுதான் அதிகமான மக்கள் சுவாமிகளின் சிந்தனையாலும் கருத்துரையாலும் பயனடைய முடியும் என்பது எண்ணம். மேலும் இந்தப் புத்தகம், சுவாமிகளின் உபதேசங்களை முழு அளவில் படிக்க வேண்டுமென்ற விருப்பத்தைத் தூண்டுமென எதிர்பார்க்கிறோம். வாசகர்களில் பலர் அத்வைத ஆசிரமத்தார் வெளியிட்டுள்ள “சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களின் முழுத் தொகுப்பு” நூல்களைப் படிக்க இயல்பாகவே விரும்புவார்களென எதிர்பார்க்கிறேன்.

-ஏக்நாத் ரானடே.

பாரதியாரும் விவேகானந்தரும்!

சுவாமி விவேகானந்தரின் கருத்துகளையே பாரதியார் கவிதை வடிவில் பல இடங்களில் கூறினார் என்றால் அது மிகையல்ல. சகோதரி நிவேதிதை மூலமாக பாரதியாருக்கு சுவாமிஜியின் தாக்கம் ஏற்பட்டது. பாரதியே கூறுகிறார்:

……….சுவாமி விவேகானந்தர் ஓர் ஆன்மிகவாதியாகவே, தம் வாழ்நாளைக் கழித்த போதிலும், தேசபக்தி எழுச்சிக்கு அவர் ஒரு பெரிய மூலாதாரமாக நின்றார். அவர் காலம் சென்ற பிறகும், அவரது சீடர்களுள் பலர் தேசபக்தி எழுச்சிக்காகப் பேருதவி செய்து வருகிறார்கள். அவ்வாறு விளங்கும் சிஷ்ய ரத்தினங்களில் சிறப்பானவர் சகோதரி நிவேதிதை ஆவார்.

விபீஷணன், சத்குணமூர்த்தியான ராமசந்திரமூர்த்திக்குப் பெரும் துணையாக நிற்கவில்லையா? அதுபோல் இந்த மாதரசி வெள்ளைக்காரக் குலத்தில் தோன்றிய போதிலும், விவேகானந்தருக்குத் துணையாக நின்றார்.

கொல்கத்தாவில் டம் டம் என்ற இடத்தில் 1906ஆம் ஆண்டில் நிவேதிதையை பாரதியார் முதன் முதலில் சந்தித்தார். அப்போது உங்களுக்கு மணமாகிவிட்டதா? என நிவேதிதை கேட்டார்.

எனக்குத் திருமணமாகி ஒரு பெண் உள்ளாள் என்றார் பாரதி. அதற்கு நிவேதிதை, பின் ஏன் உங்கள் மனைவியை இங்கு அழைத்து வரவில்லை? என்று கேட்டார்.

எங்கள் சமூகத்தில் மனைவியைப் பொது இடத்திற்கு அழைத்துச் செல்லும் வழக்கம் இல்லை என்றார் பாரதி. அதைக்கேட்டதும், சமூகத்தில் ஒரு பாதி அடிமைப்பட்டுக் கிடக்கும்போது மறுபாதி எப்படி விடுதலை பெற முடியும்? உங்களது மனைவிக்கே உங்களால் சுதந்திரம் தர முடியவில்லை; நாட்டிற்கு எப்படி நீங்கள் சுதந்திரம் பெற்றுத் தர முடியும்? இனியும் நீங்கள் அவள் தனி என நினைக்காது, உங்களிடமிருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதியாக நினைத்து, அவளைத் தேவியாகப் போற்றுங்கள்.

பெண்களை இருட்டில் தள்ளிவிட்டு, அவர்கள் அறியாமல் நீங்கள் மேலான நிலைக்கு வந்துவிட முயலுவது வீண் என்றார் நிவேதிதை.

சமுதாயம் என்பது ஒரு பறவையைப் போல! அதற்கு இரண்டு இறக்கைகள்! ஒன்று ஆண், அடுத்தது பெண். ஓர் இறக்கையால் மட்டும் பறவை பறக்காது என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தைத்தான் சகோதரி நிவேதிதை பாரதிக்குச் சொன்னார். இதை பாரதி இவ்வாறு பாடுகிறார்.

பெண்ணுக்கு விடுதலை என்று இங்கோர் நீதி
பிறப்பித்தேன், அதற்குரிய பெற்றி கேளீர்!
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வம் என்றால்
மனையாளும் தெய்வம் அன்றோ! மதி கெட்டீரே!
விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்
விடுதலை என்பீர், கருணை வெள்ளம் என்பீர்
பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லை என்றால்
பின் இந்த உலகிலே வாழ்க்கை இல்லை

பாரதியார் தமது ஸ்வதேச கீதங்கள் நூலை நிவேதிதைக்கே சமர்ப்பித்தார். அதில் அவர் எழுதினார்; எனக்கு ஒரு விநாடியில் மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவின் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்மபுத்திரியும் ஆகிய ஸ்ரீமத் நிவேதிதா தேவிக்கு இந்த நூலைச் சமர்ப்பிக்கிறேன்.

விவேகானந்தரை, பகவான் விவேகானந்தர் என்று பாரதி மட்டுமே கூறினார். சகோதரி நிவேதிதையின் சந்திப்பு, பாரதியின் வாழ்வில் ஒரு மாபெரும் திருப்புமுனை விவேகானந்தர் மற்றும் அவரது கொள்கைகள் தமிழ்நாட்டில் பரவுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

பன்மொழிப் புலமை: பாரதிக்கும் விவேகானந்தருக்கும் உள்ள ஒற்றுமைகள் பல. இருவருமே மிகப் பெரிய அறிஞர்கள். பல மொழிகள் தெரிந்தவர்கள். விவேகானந்தர் ஆங்கிலத்தில் உரையாற்றிய போது, ஸ்பீக் இங்கிலீஷ் லைக் ஏ வெப்ஸ்டர் என்றும் வால்கிங் என்சைக்லோபீடியா என்றும் அமெரிக்கப் பத்திரிகைகள் கூறின.

பிரான்ஸ் நாட்டில் ஒரு கருத்தரங்கில் பிரெஞ்சு மொழியிலேயே உரையாற்றினார் சுவாமிஜி. சம்ஸ்கிருதத்திலும் புலமை மிக்கவர் அவர்.

பாரதியாருக்கும் பல மொழிகள் தெரியும். தெலுங்கிலும் மலையாளத்திலும் அவர் உரையாற்றினார். வங்கமொழியிலிருந்து தாகூரின் ஏழு கதைகளை மொழிபெயர்த்தார். சம்ஸ்கிருதத்தில் மூன்று கவிததைகள் எழுதினார். உருதும் பேசுவார். ஆங்கிலத்தில் நிறைய எழுதினார். ஜெர்மன், பிரெஞ்சு, அல்ஜீரியன், அரேபிய மொழிகளிலும் பரிச்சயம் மிக்கவர் அவர்.

SWAMIJI, BARATHI



ஆங்கில வழிக்கல்வி மறுப்பு: இன்று எல்லோரும் ஆங்கில வழிக் கல்வியை நாடி ஓடுகிறார்கள் தமிழ்மொழியைப் படிப்பதில்லை. இந்தியர்களின் வரலாற்றைப் பற்றி அறிவதில்லை. அவ்வாறு அறியாவிட்டால் நாம் எவ்வாறு நம் மூதாதையர்களின் பெருமையை அறிந்துகொள்ள முடியும்?

பாஸ்கராச்சாரியார் நட்சத்திரங்களை அளந்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சூரியனும் சந்திரனும் எவ்வளவு தூரத்தில் உள்ளன என்று கூறினார். அவரைப் பற்றி நம் பாடத்தில் உள்ளதா? மிலேச்சர்களைத் துரத்தியடித்த சிவாஜியின் வீர வரலாறு கற்றுத் தரப்படவில்லையே! நமது கலாச்சாரம் பற்றி நமக்கு யாரும் கற்றுத் தருவதில்லை என்று பாரதியார் அந்தக் காலத்திலேயே அங்கலாய்க்கிறார்.

கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்
காளிதாசன் கவிதை புனைந்ததும்
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்து அளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்…
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து
ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்

மேலும் பாரதியார் தமது ஆங்கிலப் படிப்பு பற்றிக் கூறினார்: செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது; தீது எனக்குப் பல்லாயிரம் சேர்ந்தன. 100 வருடத்திற்கு முன்பே தந்தை ஆயிரம் ரூபாய் கட்டணம் கட்ட வேண்டியிருந்தது. நமது பண்பாடு இக்கல்வியில் கற்றுத் தரப்படாததால் தீது பல்லாயிரம் சேர்ந்தது என்கிறார் பாரதி. சுவாமிஜி இதைத்தான், இன்றைய பள்ளிகளில் நம் பிள்ளைகளுக்கு என்ன கற்றுத் தருகிறார்கள்?

முதலாவது, உன் பாட்டனார் ஒரு பைத்தியக்காரன். அடுத்து, உன் ஆசிரியர்கள் எல்லாம் நயவஞ்சகர்கள், பிறகு, உங்களது சாஸ்திரங்கள் எல்லாம் பொய்க் குவியல்கள், இத்தகைய எதிர்மறைக்கல்வி, சாவைவிட மோசமானது என்றார்.

குடும்பப் பின்னணியும் பிரார்த்தனையும்: பிறரது துன்பங்களை ஏற்றுக் கொள்வதற்காக நான் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும் என்றார் சுவாமிஜி. எதற்காக? உலகில் இருக்கக்கூடிய ஒரே ஒரு கடவுளை வணங்குவதற்காக அக்கடவுள் யார்? உலகிலுள்ள எல்லா ஆன்மாக்களும் சேர்ந்த ஒட்டுமொத்தமான மனதகுலமே அக்கடவுள்.

துன்பப்படுபவர்களின், ஏழைகளின் துன்பங்களை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லா ஜாதியின், எல்லா மதத்தின், எல்லா நாட்டின் துன்பங்களையும் நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என சுவாமிஜி கூறுகிறார். சுவாமிஜி எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறார். உணவிற்குக்கூட வழியின்றித் தவித்தார். தான் மிகவும் கஷ்டப்படுவதாக ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சொன்னார்.

ஸ்ரீராமகிருஷ்ணர் விவேகானந்தரை, தேவியிடம் போய் வேண்டும் என்றார். சுவாமிஜியும் காளிதேவியிடம் போய் நின்றார். ஆனால் பொருள் கொடு, பணம் கொடு என ஒன்றும் கேட்கவில்லை. விவேக, வைராக்கியத்தைக் கொடு, ஞானமும் பக்தியும் கொடு என வேண்டிவிட்டு வந்தார்.

ஸ்ரீராமகிருஷ்ணர் வந்தபோது, அட, பொருளையும் பணத்தையும் கேட்க மறந்துவிட்டாயா? லோகமாதாவிடம் மீண்டும் போய் கேள் என்றார். இரண்டாம், மூன்றாம் முறையும் பக்தியையும் ஞானத்தையுமே கேட்டார் சுவாமிஜி.

பாரதியார் வீட்டிலும் பட்டினி. என்றைக்கோ ஒரு நாள் அரிசி கிடைத்தது. அதைக் கொண்டு போய் குருவிகளுக்குப் போட்டுவிட்டு, காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடினார் அவர்.

விவேகானந்தரைப் போலவே பாரதியாரும் இறைவனிடம் என்ன கேட்கிறார் தெரியுமா?
பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்.
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
மண் மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலகுங்கள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞான ஆகாசத்து நடுவே நின்று நான்
பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பதும் இடிமையும் நோவும்
சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம்
இன்புற்று வாழ்க, என்பேன்! இதை நீ
திருச்செவிகொண்டு திருஉளம் இரங்கி
அங்ஙனமே ஆகுக என்பாய்! என வேண்டினார்.

புற்பூண்டு, பூச்சிகள், விலங்குகள், பறவைகள், மக்கள் யாவரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காக இறைவனை வேண்டினார் பாரதி.

இருவரும் அறியாதது…………… அச்சம்!

புதிய ஆத்திசூடியில் பாரதியார் எடுத்ததும் அச்சம் தவிர் என்றார், விவேகானந்தரும் அபீ: அபீ: பயமே எல்லாத் துன்பங்களுக்கும் மூலகாரணம் என்றார்.

அபயம் (அச்சமிம்மை), அஹிம்சை, அசங்கம் (பற்றின்மை), ஆனந்தம், இந்த நான்கே எல்லா இந்து மத சாஸ்திரங்களின் சாரம் என்றார் விவேகானந்தர்.

பிரிட்டிஷ்காரர்களின் தொல்லை தாங்காமல், பாரதியார், அரவிந்தர் போன்றோர் பாண்டிச்சேரிக்குச் சென்று விட்டனர். தமிழ்நாட்டில் இருந்தால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். பாண்டிச்சேரி பிரெஞ்சு நாட்டினரால் ஆளப்பட்டிருந்தது. அங்கிருந்தும் அவர்களைத் துரத்த நினைத்து ஆங்கிலேயர்கள் ஒரு சட்டம் இயற்றினார்கள்.

அதன்படி பாண்டிச்சேரியில் போய் இருக்கக்கூடிய இந்தியர்கள் ஒரு வருடத்திற்குள் ஐந்து மேஜிஸ்திரேட்டுகளிடமிருந்து கையொப்பம் வாங்க வேண்டும். பின் அதை பிரெஞ்சு அரசிடம் காண்பிக்க வேண்டும்.

ஒரு நாள் அரவிந்தரும் மற்றும் பலரும் இப்படி ஆகிவிட்டதே, நமக்கு யாரையும் தெரியாதே என வருந்திக் கொண்டிருந்தனர். எனக்குச் சிறிது அவகாசம் கொடுங்கள் என்று பாரதியார் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

மறுநாள் சங்கரன் செட்டியார் என்பவரிடம் சென்றார். செட்டியார் ஊரில் பெரிய மனிதர். சில மணிநேரத்தில் ஐவரிடம் கையொப்பம் வாங்கிக் கொண்டு வந்தார் அவர்.

அப்போது செட்டியார், பாரதியிடம் ஒரு கவிதை பாடும்படி கேட்டுக் கொண்டார். உடனே ஜெயமுண்டு பயமில்லை மனமே எனப் பாடினார்.

பிறர் துன்பம் கண்டு துவளும் மனம்

சுவாமி விவேகானந்தர் பேலூர் மடத்தில் இருந்த போது ஒருநாள் இரவு தூங்காமல் பரபரப்பாக இருந்தார். அதைக் கவனித்த விஞ்ஞானானந்தர் சுவாமிஜியிடம் சென்று விசாரித்தார். அதற்கு விவேகானந்தர் மக்கள் பலர் எங்கோ துன்பப்படுகிறார்கள் அதனால் எனக்குத் தூக்கம் வர வில்லை என்று கூறி வருந்தினார். விஞ்ஞானானந்தருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் உறங்கச் சென்றுவிட்டார்.

மறுநாள் செய்தித்தாளில், ஃபிஜித் தீவில் பூகம்பம் ஏற்பட்டுப் பல நூறு பேர் அங்கு இறந்துவிட்டனர் என்ற செய்தி வந்திருந்தது. அந்தத் துன்பம் தாளாமல் தான் சுவாமிஜியின் இதயமே ஒரு செசிமோகிராப் ஆக மாறி ரிக்டர் அளவில் அறிந்தவர்போல் தவித்துக் கொண்டிருந்தார்.

ஃபிஜித் தீவினிலே இந்து ஸ்திரீகள் என்ற பாரதியின் கவிதை, சுவாமிஜி போல அவரும் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் துடித்தார் என்று தெளிவுறக் காட்டுகிறது பாருங்கள்

கரும்புத் தோட்டத்திலே-அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்துகின்றனரே!-ஹிந்து
மாதம் தம் நெஞ்சு கொதித்து கொதித்து மெய்
சுருங்குகின்றனரே!- அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு
மருந்து இதற்கில்லையோ?-செக்கு
மாடுகள் போல் உழைத்து ஏங்குகின்றார்- அந்தக் (கரும்புத் தோட்டத்தில்)

சுவாமிஜி பிறந்த நாளன்று,
தேடிச்சென்று நிதம் தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பம் மிக உழன்று- பிறர்
வாட பல செயல்கள் செய்து-நரை
கூடிக் கிழப் பருவம் எய்தி- கொடுங்
கூற்றுக்கு இரையெனப் பின்மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போல்- நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

என்று எழுதி, தமது 39-வது வயதிலேயே மறைந்தார். சுவாமி விவேகானந்தரின் சீடரான மகாகவி பாரதியார். சுவாமி விவேகானந்தரும் 39 வருடம் 174 நாட்களில் மகாசமாதி அடைந்தார். இவர்கள் இருவரும் காட்டிய வழியில் இந்தியா சென்றால், நிச்சயம் ஒரு புதிய பாரதம் உருவாகும்.

பாரதியிடம் விவேகானந்தரின் தாக்கம்!

சுவாமி விவேகானந்தரையும் பாரதியையும் நம் இளம் சமுதாயம் பின்பற்றுமானால் நம் சமுதாயத்தின் வளர்ச்சியையும் வாழ்வையும் தடுத்து நிறுத்த எந்த சக்தியாலும் முடியாது. இன்றைக்கு நம் நாடு பொருளாதார ரீதியாக வளர்கிறது என்று பெருமைப்படுகிறோம். தேசத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு பக்கம். அதே நேரத்தில் நம் தேசத்தின் பண்பாட்டுத் துறையின் வீழ்ச்சி என்ற பக்கத்தை மறந்து போகிறோம்.

நம்மிடமுள்ள மிகப் பெரிய பலவீனம். நம்மைச் சுற்றியிருக்கிற உலகம் எப்படி உள்ளது என்பதை அறிவதில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறோமே தவிர, நான் யார், நான் எப்படிப்பட்டவன்? எனது பலம் எது? பலவீனம் எது? என்ற உள்முகத் தேடலை நாம் நடத்தத் தயாராக இல்லை. உன்னை நீ அறி எனபதுதான் எல்லா உபநிடதங்களின் சாரம்

என்னை நான் ஏன் அறிய வேண்டும்?

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை. தானே தனக்கு நண்பனும் பகைவனும் என்பது திருமூலர் வாக்கு. திருமூலருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலக சகோதரத்துவத்தைச் சந்தித்திருக்கிறார். இந்தப் பாடல் நம் இந்தியப் பண்பாட்டின் சாரம் முழுவதையும் எடுத்து இயம்புகிறது.

பேதமற்று உலகம் முழுவதையும் அரவணைக்கும் உள்ளம் கொண்ட ஒருவனே பண்பாட்டின் சிகரம். அந்தப் பக்குவம் அவனுக்கு வந்ததென்றால் அவனுக்கும் முன்பே இந்த மண் பக்குவப்பட்டிருந்தால்தான் அப்படியொரு பண்பாட்டின் சிகரத்தை அவன் அடைய முடியும். மண்படு மரபில் மானுடச்சாதி பண்படும் அதனைப் பண்பாடு என்க என்பார் கண்ணதாசன்.

தீமைகளைக் களைத்து, ஒழுங்கீனங்ளை ஒழித்து, ஒழுக்கத்தை வளர்ப்பதைத்தான் நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு என்கிறோம். இப்பண்பாட்டின் உச்சத்திலே இருக்கக்கூடிய மண் நம் மண் தானே தனக்கு நண்பனும் பகைவனும் என்று திருமூலர் சொல்வதும், தீதும் நன்றும் பிர் தர வாரா என்று கணியன் பூங்குன்றனார் சொல்வதும் எதைக் குறிக்கின்றன?

உனக்கு நீயே வழிகாட்டி என்று சுவாமி விவேகானந்தரும் புரிய வைத்தார். விவேகானந்தரை மிகச் சுருக்கமாக அறிய வேண்டுமென்றால் பாரதியின் ஒரு பாடலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பாடல் விவேகானந்தரின் சிந்தனைத் தாக்கத்தாலேயே பாரதிக்கு வந்து வாய்த்தது. பாரதியின் சுய தரிசனமே இதில்தான் இருக்கிறது.

கடமை யாவன தன்னைக் கட்டுதல்
பிறர் துயர் தீர்த்தல், பிறர்நலம் வேண்டுதல்

தன்னைக் கட்டுதல் என்றால் புலனடக்கம். புலன் நுகர்ச்சியின் உச்சியிலே இன்றைக்கு இருப்பதுதான் மனிதக் கலாச்சாரம். கல்வி என்ற நாணயத்திற்கு இரு பக்கங்கள் உண்டு. ஒரு பக்கம் அறிவு. இன்னொரு பக்கம் ஒழுக்கம். ஒழுக்கம் இல்லாத அறிவால் சமுதாயத்திற்கு எந்தப் பயனும் வந்து சேராது. நாயணத்தின் ஒரு பக்கம் முழுவதுமாகத் தேய்ந்து மறுபக்கம் மட்டுமே தெளிவாகத் தெரிந்தால் அது செல்லாத காசே தவிர, செலாவணிக் காசு அல்ல. இரண்டு பக்கமும் தெயாமல் உள்ள கல்விதான் வேண்டும். அப்போதுதான் அது செல்லும் காசு. ஏசுவிற்கு முன்பே உன்னை நீ அறிய வேண்டும் என்று சிந்திக்கக் கூறிய சாக்ரடீஸ் நல்லறிவே நல்லொழுக்கம் என்றார். ஐம்புலன்களையும் அடக்குகின்ற ஆற்றலைப் பெறுவதற்கான பருவம்தான் பிரம்மசரிய பருவம். அதுதான் கல்வி கற்கும் பருவம்.

பிரம்மசரியம் என்பது என்ன?

மாணவனுக்கான பிரம்மசரியம் என்பது சிந்தனைகளை வேறு எங்கும் சிதறவிடாமல் கல்வியில் மட்டுமே நாட்டம் செலுத்துவது ஆகும். இன்றைக்கு அந்தப் பண்பாடு, அந்த ஒழுக்கம், அதுதான் கல்வி என்ற ஒரு நிலை இருந்தால் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், நுகர்பொருள்களை அனுபவிக்க வேண்டும் என்ற வெறிக்கு இரையாகி ஒரு சக மாணவனின் கழுத்தை நெரித்துக் கொல்லக்கூடிய சூழல் வருமா?

இன்றைய கல்வி நமக்கு எதைக் கற்றுக் கொடுக்கிறது? இன்று மாணவர்களுக்கு எதைக் கொண்டு போய் சேர்க்கிறோம்? நன்றாகப் படி, இன்ஜினியராகு, டாக்டராகி நிறைய சம்பாதி, உலகில் எத்தனை இன்பங்கள் உள்ளனவோ அத்தனையையும் அனுபவி. ஒழுக்கம் முதலிடம் பெறாது வெறும் அறிவு முதலிடம் பெறும்போது பண்பாட்டு வீழ்ச்சி வருகிறது.

வள்ளுவர் வாலறிவன் நற்றாள் தொழார் எனின் என்பார். வாலறிவு என்பது மெய்ஞ்ஞானம் அறியாமை கலப்பில்லாத அறிவு எதுவோ அதுதான் வாலறிவு. அந்த வாலறிவை ஒருவன் பெற்றுவிட்டால் வாழ்க்கையின் சாதாரண இன்பங்கள் அவனைச் சலனப்படுத்த முடியாது. விவேகானந்தர் படிக்கின்ற பருவத்தில் சிறப்பாகப் படித்தார். நான்கு வயதிலேயே தியானத்தில் ஈடுபட்டார்.

ஏன் ஒருவன் தியானம் செய்ய வேண்டும்?

சிந்னைகளை ஒருமுகப்படுத்துவதன் மூலமாக ஓர் ஆற்றல் உருவெடுக்கிறது. நான்கு வயதிலேயே தியானம் செய்து, சிந்தனையை ஓர் இடத்தில் கொண்டு நிறுத்துகிற ஆற்றல் விவேகானந்தருக்கு இருந்ததால்தான், சிறு வயதிலேயே அவர் வடமொழி இலக்கணங்களைப் படித்து மனப்பாடம் செய்து அப்படியே கூறக்கூடிய ஆற்றலைப் பெற்றார். சிந்தனையைச் சிறதவிடாது இருப்பதே பிரம்மசரியம். எனவே ஒருவன் சாதிக்க வேண்டுமென்றால் அவன் முதலில் செய்ய வேண்டியது தன்னைக் கட்டுதல் தன்னை எவன் கட்டுகிறானோ அவனுக்குச் சபலமில்லை. சலனமில்லை. தன்னைக் கட்டுதலுக்கப் பின் பிறர் துயர் தீர்த்தல். வாழ்வின் உயர்ந்த நோக்கமே சக மனிதர்களுக்காக வாழ்வதுதான். விவேகானந்தர் மிகச் சிறப்பாகப் படித்தார். அவர் நினைத்திருந்தால் வழக்கறிஞராகி நன்கு சம்பாதித்து எல்லாச் சுகங்களையும் அனுபவித்திருக்கலாம்

பட்டினத்தார் ஏராளமாகச் சம்பாதித்து வைத்திருந்தார். ஆனால் காதற்ற ஊசியும் வாராது காணகடை வழிக்கே என்று தமது மகனாக வந்த ஈசன் எழுதிவிட்டுப் போன வாசகத்தைப் பார்த்தார். அக்கணமே அனைத்தையும் துறந்துவிட்டார். எல்லாவற்றையும் துறப்பதால் என்ன கிடைக்கும்? ஒரு பவுர்ணமி நிலாக் கூட்டம், புத்தர் பேசிக் கொண்டிருந்தபோது அரசன் அஜாதசத்ரு வருகிறான். புத்தரிடம் நீ துறவி துறவியாக இருப்பதனால் என்ன பலன் உனக்குக் கிடைக்கிறது? என்று கேட்டான்.

அப்போது புத்தர் கூறினார்: துறவிக்கு ஜாதி கிடையாது. குறிப்பிட்ட மதம் கிடையாது. சமூகம் போட்டு வைத்திருக்கக்கூடிய விலங்குகளும் கிடையாது. சமூகம் ஒரு தனிமனிதனைச் சுதந்திரமாக வாழவிடாது. சமூகம் ஒரு சட்டத்திற்கு உட்பட்டே ஒருவனை வாழவிடும். எனவே என் சிந்தனைக்கு ஏற்பத்தான் நான் நடப்பே என்று கூற முடியாது. சமூகம், ஜாதி, மதம் ஆகிய விலங்குகளை உடைத்தெறிந்துவிட்டு விடுதலை பெறுபவனே துறவி.

எந்த ஆசையாக இருந்தாலும் அது கவலையைக் கொண்டு வரும். எனவே ஆசைகளை அறுத்தெறிந்துவிட்டு வரும் துறவிக்குக் கவலை கிடையாது. சமூகத்தின் எந்த விலங்கும், எந்தக் கவலையும், எந்த அச்சமும் எனக்குக் கிடையாது என்று ஒரு துறவியால் மட்டுமே கூற முடியும். அப்படிப்பட்ட துறவிதான் சுவாமி விவேகானந்தர். துறவின் நோக்கமென்ன? துறவி என்பவன் எல்லாவற்றையும் துறந்துவிட்டுக் கானகத்தில் போய் கண்மூடி உட்கார்ந்திருப்பது தான் துறவா? இல்லை, உலகில் உள்ள அத்தனை உயிர்களையும் உய்விப்பதற்கான வழியைத் தேடிவதே துறவு.

சாதாரண மனிதன் மற்றவனைப் பற்றிச் சிந்திக்காமல், தன்னைப் பற்றியே சிந்திக்கிறான். ஒரு துறவி மனிதவாடை இல்லாத் இடத்திலே ஒதுங்கி இருக்கிறான் என நினைக்கத் தோன்றும். ஆயினும் மனிதர்களின் நலன் குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்கிறான். இதுதான் துறவிக்கும் சாதாரண மனிதனுக்கும் உள்ள வித்தியாசம். ஒருவன் என்ன செய்ய வேண்டும்? சுயநலத்தைத் துறக்க வேண்டும். வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்வது என்பது ஒழுக்கமாக வைத்துக்கொள்வது நெறிப்படுத்தும் வாழ்க்கை என்பது இன்பங்களை ஒரு கட்டுக்குள்ளே வைப்பது.

என் அடிப்படை தேவைகளுக்கு எனக்கென்று சம்பாத்தியம் இவ்வளவு போதும் என்றால் அதற்குப் பிறகு நான் என்ன செய்ய வேண்டும்? நான் இருக்கும் சமுதாயத்திற்குக் கடமையாற்ற வேண்டும். தன்னைக் கட்டுதல் என்பது ஒழுக்கமான சமுதாய வாழ்க்கை எனப்படுகிறது. ஒவ்வொருவனும் தன்னைக் கட்டத் தொடங்கிவிட்டால் சமுதாயம் ஒட்டுமொத்த ஒழுக்கமுள்ள சமுதாயமாக அமைந்துவிடும். அடுத்தது, பிறர்நலம் வேண்டுதல். கடவுளிடம் எனக்கு என்று கேட்டுத்தான் நமக்குப் பழக்கம், பிறருக்காகப் பிரார்த்திக்கும் பழக்கமே கிடையாது. செக்குமாடுபோல் நாம் சுயநலத்திலேயே சுற்றிக் கொண்டிருப்பவர்கள்.

அதனால்தான் பெர்னாட்ஷா, சாதாரண மனிதர்கள் பிரார்த்தனை செய்வதில்லை. பிச்சை எடுக்கிறார்கள் என்றார். எனக்கென்று தெய்வத்திடம் கேட்டால் அது பிச்சை, அடுத்தவனுக்கு என்று நெஞ்சுருகி நின்றால் அது பிரார்த்தனை. அதைத்தான் விநாயகரின் திருமுன்பு பாரதி சொல்கிறார்.

மண் மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புல், பூண்டு, மரங்கள்- யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே, இன்புற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும். தேவதேவா! ஞானாகாசத்து நடுவே நின்று நான் பூமண்டலத்தில் அன்பும் பொறையும் விளங்குக, துன்பமும், மிடிமையும், நோவும், சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம் இன்புற்று வாழ்க என்பேன்!

இதனை நீ திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி அங்ஙனமே ஆகுக என்பாய் ஐயனே! அடுத்த வேளை சோற்றுக்கு பாரதியின் மனைவி செல்லம்மாள், பக்கத்து வீட்டிலிருந்து அரிசி வாங்கி வந்தால் தான் உலை கொதிக்கும். ஆனால் அவர் விநாயகருக்கு முன் நின்று சோறு வேண்டும் என்று கேட்கவில்லை. மனைவிக்கு நகை வேண்டுமென்று கேட்கவில்லை. மக்கள், விலங்குகள், புல், பூண்டு அனைத்தும் அன்போடு வாழ வேண்டும் என்று கேட்கிறார்.

தன்னைக் கட்டுதல், பிறர்துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல் என்ற வரிசையில் நான்காவது, எல்லா மதங்களையும் ஒன்றாகப் பார்க்கும் பார்வை! விநாயக தேவனாய்,வேலுடைக் குமரனாய், நாராயணனாய், நதிச்சடை முடியனாய், பிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி அல்லவா! யெஹோவா எனத் தொழுது அன்புறும் தேவருந்தானாய், திருமகள், பாரதி, உமையெனும் தேவியர் உகந்த வான்பொருவாய் உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்.

அது அல்லா, யோவா, உமை, நாராயணன் எதுவும் சொல் உலகெலாம் காக்கும் ஒன்று பரம்பொருள், நாமதன் மக்கள், உலகு இன்பக்கேணி என்றவர் பாரதி. பூமியில் இந்த நான்கே எவர்க்கும் கடமை என்று விவேகானந்தர் கூறியதையே பாரதி கூறினார்.

இந்தியாவின் வாழ்க்கை மதம். என் மதம்தான் உயர்ந்தது. உன் மதம் தாழ்ந்தது என்று கூறி ஆயுதம் ஏந்தி அடுத்தவனைத் தாக்கி ரத்தம் சிந்துவது மதமல்ல. மனிதனை மறந்துவிட்டு இறைவனை மட்டுமே சிந்திக்கிற மதவாதிகளுக்கு நடுவே மனிதர்களிலே இறைவனைக் காண வேண்டும் என்று சொன்னவர் சுவாமிஜிதான்.

இன்று ஜாதி பற்றி நிறைய பேசிக்கொண்டிருக்கிறோம். விவேகானந்தர் என்ன கூறினார்? ஜாதி என்பது சமயம் உருவாக்கியதல்ல. அது சமுதாயத்தின் ஏற்பாடு. நீ நினைத்தால் ஜாதி மாற முடியும். ஜாதி என்பது பிறப்பாலே வருவதில்லை. உன் வாழ்வில் நீ தேர்ந்து கொள்கிற வாழ்க்கைப் பண்புகளிலே உருவது. நீ ஒருவனிடம் கை கட்டி உடல் உழைப்பு செய்கிறபோது சூத்திரனாகிறாய். அதனால் தாழ்ந்தவன் என்று பொளில்லை. நீயே சொந்தமாக ஒரு தொழில் தொடங்கிவிட்டால் நீ வைசியன். நீயே உன் கண்ணால் பார்க்கும் தீமையைக் களைய களத்தில் இறங்கிவிட்டால் நீ க்ஷத்திரியன். நீ வேதங்களையும் எல்லா அறிவு நூல்களையும் படித்துப் பேருண்மை முழுவதையும் புரிந்து எது பரம்பொருள் என்று தெளிந்து விட்டால் நீ பிராமணனாகிவிடுகிறாய். சூத்திரன் நினைத்தால் பிராமணனாக முடியும். பிராமணன் அவனுக்குரிய நெறி இழந்து நின்றால் சூத்திரனாகப் போக முடியும். சமத்துவத்தால் நன்மைகள் கிடைக்குமே தவிர தீமை கிடையாது. உலகம் முழுவதும் ஒரு கடவுள் என ஒப்புக் கொள்வதால் தீமை உண்டா? கிடையாது. இதுதான் வேதாந்த லட்சியம். அந்த ஆன்மீகத்தைத் தான் இம்மண்ணில் வளரச் செய்ய வேண்டும்.

சுவாமி விவேகானந்தரையும் பாரதியையும் நம் இளம் சமுதாயம் பின்பற்றுமானால் நம் சமுதாயத்தின் வளர்ச்சியையும் வாழ்வையும் தடுத்து நிறுத்த எந்த சக்தியாலும் முடியாது. இன்றைக்கு நம் நாடு பொருளாதார ரீதியாக வளர்கிறது என்று பெருமைப்படுகிறோம். தேசத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு பக்கம். அதே நேரத்தில் நம் தேசத்தின் பண்பாட்டுத் துறையின் வீழ்ச்சி என்ற பக்கத்தை மறந்து போகிறோம்.

நம்மிடமுள்ள மிகப் பெரிய பலவீனம். நம்மைச் சுற்றியிருக்கிற உலகம் எப்படி உள்ளது என்பதை அறிவதில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறோமே தவிர, நான் யார், நான் எப்படிப்பட்டவன்? எனது பலம் எது? பலவீனம் எது? என்ற உள்முகத் தேடலை நாம் நடத்தத் தயாராக இல்லை. உன்னை நீ அறி எனபதுதான் எல்லா உபநிடதங்களின் சாரம்

என்னை நான் ஏன் அறிய வேண்டும்?

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை. தானே தனக்கு நண்பனும் பகைவனும் என்பது திருமூலர் வாக்கு. திருமூலருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலக சகோதரத்துவத்தைச் சந்தித்திருக்கிறார். இந்தப் பாடல் நம் இந்தியப் பண்பாட்டின் சாரம் முழுவதையும் எடுத்து இயம்புகிறது.

பேதமற்று உலகம் முழுவதையும் அரவணைக்கும் உள்ளம் கொண்ட ஒருவனே பண்பாட்டின் சிகரம். அந்தப் பக்குவம் அவனுக்கு வந்ததென்றால் அவனுக்கும் முன்பே இந்த மண் பக்குவப்பட்டிருந்தால்தான் அப்படியொரு பண்பாட்டின் சிகரத்தை அவன் அடைய முடியும். மண்படு மரபில் மானுடச்சாதி பண்படும் அதனைப் பண்பாடு என்க என்பார் கண்ணதாசன்.

தீமைகளைக் களைத்து, ஒழுங்கீனங்ளை ஒழித்து, ஒழுக்கத்தை வளர்ப்பதைத்தான் நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு என்கிறோம். இப்பண்பாட்டின் உச்சத்திலே இருக்கக்கூடிய மண் நம் மண் தானே தனக்கு நண்பனும் பகைவனும் என்று திருமூலர் சொல்வதும், தீதும் நன்றும் பிர் தர வாரா என்று கணியன் பூங்குன்றனார் சொல்வதும் எதைக் குறிக்கின்றன?

உனக்கு நீயே வழிகாட்டி என்று சுவாமி விவேகானந்தரும் புரிய வைத்தார். விவேகானந்தரை மிகச் சுருக்கமாக அறிய வேண்டுமென்றால் பாரதியின் ஒரு பாடலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பாடல் விவேகானந்தரின் சிந்தனைத் தாக்கத்தாலேயே பாரதிக்கு வந்து வாய்த்தது. பாரதியின் சுய தரிசனமே இதில்தான் இருக்கிறது.

கடமை யாவன தன்னைக் கட்டுதல்
பிறர் துயர் தீர்த்தல், பிறர்நலம் வேண்டுதல்

தன்னைக் கட்டுதல் என்றால் புலனடக்கம். புலன் நுகர்ச்சியின் உச்சியிலே இன்றைக்கு இருப்பதுதான் மனிதக் கலாச்சாரம். கல்வி என்ற நாணயத்திற்கு இரு பக்கங்கள் உண்டு. ஒரு பக்கம் அறிவு. இன்னொரு பக்கம் ஒழுக்கம். ஒழுக்கம் இல்லாத அறிவால் சமுதாயத்திற்கு எந்தப் பயனும் வந்து சேராது. நாயணத்தின் ஒரு பக்கம் முழுவதுமாகத் தேய்ந்து மறுபக்கம் மட்டுமே தெளிவாகத் தெரிந்தால் அது செல்லாத காசே தவிர, செலாவணிக் காசு அல்ல. இரண்டு பக்கமும் தெயாமல் உள்ள கல்விதான் வேண்டும். அப்போதுதான் அது செல்லும் காசு. ஏசுவிற்கு முன்பே உன்னை நீ அறிய வேண்டும் என்று சிந்திக்கக் கூறிய சாக்ரடீஸ் நல்லறிவே நல்லொழுக்கம் என்றார். ஐம்புலன்களையும் அடக்குகின்ற ஆற்றலைப் பெறுவதற்கான பருவம்தான் பிரம்மசரிய பருவம். அதுதான் கல்வி கற்கும் பருவம்.

பிரம்மசரியம் என்பது என்ன?

மாணவனுக்கான பிரம்மசரியம் என்பது சிந்தனைகளை வேறு எங்கும் சிதறவிடாமல் கல்வியில் மட்டுமே நாட்டம் செலுத்துவது ஆகும். இன்றைக்கு அந்தப் பண்பாடு, அந்த ஒழுக்கம், அதுதான் கல்வி என்ற ஒரு நிலை இருந்தால் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், நுகர்பொருள்களை அனுபவிக்க வேண்டும் என்ற வெறிக்கு இரையாகி ஒரு சக மாணவனின் கழுத்தை நெரித்துக் கொல்லக்கூடிய சூழல் வருமா?

இன்றைய கல்வி நமக்கு எதைக் கற்றுக் கொடுக்கிறது? இன்று மாணவர்களுக்கு எதைக் கொண்டு போய் சேர்க்கிறோம்? நன்றாகப் படி, இன்ஜினியராகு, டாக்டராகி நிறைய சம்பாதி, உலகில் எத்தனை இன்பங்கள் உள்ளனவோ அத்தனையையும் அனுபவி. ஒழுக்கம் முதலிடம் பெறாது வெறும் அறிவு முதலிடம் பெறும்போது பண்பாட்டு வீழ்ச்சி வருகிறது.

வள்ளுவர் வாலறிவன் நற்றாள் தொழார் எனின் என்பார். வாலறிவு என்பது மெய்ஞ்ஞானம் அறியாமை கலப்பில்லாத அறிவு எதுவோ அதுதான் வாலறிவு. அந்த வாலறிவை ஒருவன் பெற்றுவிட்டால் வாழ்க்கையின் சாதாரண இன்பங்கள் அவனைச் சலனப்படுத்த முடியாது. விவேகானந்தர் படிக்கின்ற பருவத்தில் சிறப்பாகப் படித்தார். நான்கு வயதிலேயே தியானத்தில் ஈடுபட்டார்.

ஏன் ஒருவன் தியானம் செய்ய வேண்டும்?

சிந்னைகளை ஒருமுகப்படுத்துவதன் மூலமாக ஓர் ஆற்றல் உருவெடுக்கிறது. நான்கு வயதிலேயே தியானம் செய்து, சிந்தனையை ஓர் இடத்தில் கொண்டு நிறுத்துகிற ஆற்றல் விவேகானந்தருக்கு இருந்ததால்தான், சிறு வயதிலேயே அவர் வடமொழி இலக்கணங்களைப் படித்து மனப்பாடம் செய்து அப்படியே கூறக்கூடிய ஆற்றலைப் பெற்றார். சிந்தனையைச் சிறதவிடாது இருப்பதே பிரம்மசரியம். எனவே ஒருவன் சாதிக்க வேண்டுமென்றால் அவன் முதலில் செய்ய வேண்டியது தன்னைக் கட்டுதல் தன்னை எவன் கட்டுகிறானோ அவனுக்குச் சபலமில்லை. சலனமில்லை. தன்னைக் கட்டுதலுக்கப் பின் பிறர் துயர் தீர்த்தல். வாழ்வின் உயர்ந்த நோக்கமே சக மனிதர்களுக்காக வாழ்வதுதான். விவேகானந்தர் மிகச் சிறப்பாகப் படித்தார். அவர் நினைத்திருந்தால் வழக்கறிஞராகி நன்கு சம்பாதித்து எல்லாச் சுகங்களையும் அனுபவித்திருக்கலாம்

பட்டினத்தார் ஏராளமாகச் சம்பாதித்து வைத்திருந்தார். ஆனால் காதற்ற ஊசியும் வாராது காணகடை வழிக்கே என்று தமது மகனாக வந்த ஈசன் எழுதிவிட்டுப் போன வாசகத்தைப் பார்த்தார். அக்கணமே அனைத்தையும் துறந்துவிட்டார். எல்லாவற்றையும் துறப்பதால் என்ன கிடைக்கும்? ஒரு பவுர்ணமி நிலாக் கூட்டம், புத்தர் பேசிக் கொண்டிருந்தபோது அரசன் அஜாதசத்ரு வருகிறான். புத்தரிடம் நீ துறவி துறவியாக இருப்பதனால் என்ன பலன் உனக்குக் கிடைக்கிறது? என்று கேட்டான்.

அப்போது புத்தர் கூறினார்: துறவிக்கு ஜாதி கிடையாது. குறிப்பிட்ட மதம் கிடையாது. சமூகம் போட்டு வைத்திருக்கக்கூடிய விலங்குகளும் கிடையாது. சமூகம் ஒரு தனிமனிதனைச் சுதந்திரமாக வாழவிடாது. சமூகம் ஒரு சட்டத்திற்கு உட்பட்டே ஒருவனை வாழவிடும். எனவே என் சிந்தனைக்கு ஏற்பத்தான் நான் நடப்பே என்று கூற முடியாது. சமூகம், ஜாதி, மதம் ஆகிய விலங்குகளை உடைத்தெறிந்துவிட்டு விடுதலை பெறுபவனே துறவி.

எந்த ஆசையாக இருந்தாலும் அது கவலையைக் கொண்டு வரும். எனவே ஆசைகளை அறுத்தெறிந்துவிட்டு வரும் துறவிக்குக் கவலை கிடையாது. சமூகத்தின் எந்த விலங்கும், எந்தக் கவலையும், எந்த அச்சமும் எனக்குக் கிடையாது என்று ஒரு துறவியால் மட்டுமே கூற முடியும். அப்படிப்பட்ட துறவிதான் சுவாமி விவேகானந்தர். துறவின் நோக்கமென்ன? துறவி என்பவன் எல்லாவற்றையும் துறந்துவிட்டுக் கானகத்தில் போய் கண்மூடி உட்கார்ந்திருப்பது தான் துறவா? இல்லை, உலகில் உள்ள அத்தனை உயிர்களையும் உய்விப்பதற்கான வழியைத் தேடிவதே துறவு.

சாதாரண மனிதன் மற்றவனைப் பற்றிச் சிந்திக்காமல், தன்னைப் பற்றியே சிந்திக்கிறான். ஒரு துறவி மனிதவாடை இல்லாத் இடத்திலே ஒதுங்கி இருக்கிறான் என நினைக்கத் தோன்றும். ஆயினும் மனிதர்களின் நலன் குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்கிறான். இதுதான் துறவிக்கும் சாதாரண மனிதனுக்கும் உள்ள வித்தியாசம். ஒருவன் என்ன செய்ய வேண்டும்? சுயநலத்தைத் துறக்க வேண்டும். வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்வது என்பது ஒழுக்கமாக வைத்துக்கொள்வது நெறிப்படுத்தும் வாழ்க்கை என்பது இன்பங்களை ஒரு கட்டுக்குள்ளே வைப்பது.

என் அடிப்படை தேவைகளுக்கு எனக்கென்று சம்பாத்தியம் இவ்வளவு போதும் என்றால் அதற்குப் பிறகு நான் என்ன செய்ய வேண்டும்? நான் இருக்கும் சமுதாயத்திற்குக் கடமையாற்ற வேண்டும். தன்னைக் கட்டுதல் என்பது ஒழுக்கமான சமுதாய வாழ்க்கை எனப்படுகிறது. ஒவ்வொருவனும் தன்னைக் கட்டத் தொடங்கிவிட்டால் சமுதாயம் ஒட்டுமொத்த ஒழுக்கமுள்ள சமுதாயமாக அமைந்துவிடும். அடுத்தது, பிறர்நலம் வேண்டுதல். கடவுளிடம் எனக்கு என்று கேட்டுத்தான் நமக்குப் பழக்கம், பிறருக்காகப் பிரார்த்திக்கும் பழக்கமே கிடையாது. செக்குமாடுபோல் நாம் சுயநலத்திலேயே சுற்றிக் கொண்டிருப்பவர்கள்.

அதனால்தான் பெர்னாட்ஷா, சாதாரண மனிதர்கள் பிரார்த்தனை செய்வதில்லை. பிச்சை எடுக்கிறார்கள் என்றார். எனக்கென்று தெய்வத்திடம் கேட்டால் அது பிச்சை, அடுத்தவனுக்கு என்று நெஞ்சுருகி நின்றால் அது பிரார்த்தனை. அதைத்தான் விநாயகரின் திருமுன்பு பாரதி சொல்கிறார்.

மண் மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புல், பூண்டு, மரங்கள்- யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே, இன்புற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும். தேவதேவா! ஞானாகாசத்து நடுவே நின்று நான் பூமண்டலத்தில் அன்பும் பொறையும் விளங்குக, துன்பமும், மிடிமையும், நோவும், சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம் இன்புற்று வாழ்க என்பேன்!

இதனை நீ திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி அங்ஙனமே ஆகுக என்பாய் ஐயனே! அடுத்த வேளை சோற்றுக்கு பாரதியின் மனைவி செல்லம்மாள், பக்கத்து வீட்டிலிருந்து அரிசி வாங்கி வந்தால் தான் உலை கொதிக்கும். ஆனால் அவர் விநாயகருக்கு முன் நின்று சோறு வேண்டும் என்று கேட்கவில்லை. மனைவிக்கு நகை வேண்டுமென்று கேட்கவில்லை. மக்கள், விலங்குகள், புல், பூண்டு அனைத்தும் அன்போடு வாழ வேண்டும் என்று கேட்கிறார்.

தன்னைக் கட்டுதல், பிறர்துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல் என்ற வரிசையில் நான்காவது, எல்லா மதங்களையும் ஒன்றாகப் பார்க்கும் பார்வை! விநாயக தேவனாய்,வேலுடைக் குமரனாய், நாராயணனாய், நதிச்சடை முடியனாய், பிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி அல்லவா! யெஹோவா எனத் தொழுது அன்புறும் தேவருந்தானாய், திருமகள், பாரதி, உமையெனும் தேவியர் உகந்த வான்பொருவாய் உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்.

அது அல்லா, யோவா, உமை, நாராயணன் எதுவும் சொல் உலகெலாம் காக்கும் ஒன்று பரம்பொருள், நாமதன் மக்கள், உலகு இன்பக்கேணி என்றவர் பாரதி. பூமியில் இந்த நான்கே எவர்க்கும் கடமை என்று விவேகானந்தர் கூறியதையே பாரதி கூறினார்.

இந்தியாவின் வாழ்க்கை மதம். என் மதம்தான் உயர்ந்தது. உன் மதம் தாழ்ந்தது என்று கூறி ஆயுதம் ஏந்தி அடுத்தவனைத் தாக்கி ரத்தம் சிந்துவது மதமல்ல. மனிதனை மறந்துவிட்டு இறைவனை மட்டுமே சிந்திக்கிற மதவாதிகளுக்கு நடுவே மனிதர்களிலே இறைவனைக் காண வேண்டும் என்று சொன்னவர் சுவாமிஜிதான்.

இன்று ஜாதி பற்றி நிறைய பேசிக்கொண்டிருக்கிறோம். விவேகானந்தர் என்ன கூறினார்? ஜாதி என்பது சமயம் உருவாக்கியதல்ல. அது சமுதாயத்தின் ஏற்பாடு. நீ நினைத்தால் ஜாதி மாற முடியும். ஜாதி என்பது பிறப்பாலே வருவதில்லை. உன் வாழ்வில் நீ தேர்ந்து கொள்கிற வாழ்க்கைப் பண்புகளிலே உருவது. நீ ஒருவனிடம் கை கட்டி உடல் உழைப்பு செய்கிறபோது சூத்திரனாகிறாய். அதனால் தாழ்ந்தவன் என்று பொளில்லை. நீயே சொந்தமாக ஒரு தொழில் தொடங்கிவிட்டால் நீ வைசியன். நீயே உன் கண்ணால் பார்க்கும் தீமையைக் களைய களத்தில் இறங்கிவிட்டால் நீ க்ஷத்திரியன். நீ வேதங்களையும் எல்லா அறிவு நூல்களையும் படித்துப் பேருண்மை முழுவதையும் புரிந்து எது பரம்பொருள் என்று தெளிந்து விட்டால் நீ பிராமணனாகிவிடுகிறாய். சூத்திரன் நினைத்தால் பிராமணனாக முடியும். பிராமணன் அவனுக்குரிய நெறி இழந்து நின்றால் சூத்திரனாகப் போக முடியும். சமத்துவத்தால் நன்மைகள் கிடைக்குமே தவிர தீமை கிடையாது. உலகம் முழுவதும் ஒரு கடவுள் என ஒப்புக் கொள்வதால் தீமை உண்டா? கிடையாது. இதுதான் வேதாந்த லட்சியம். அந்த ஆன்மீகத்தைத் தான் இம்மண்ணில் வளரச் செய்ய வேண்டும்.

மூலம்: தினமலர் இணையத்திலிருந்து.

https://www.dinamalar.com/news_detail.asp?id=618506

தேசிய இளைஞர் தினம் ஜனவரி -12

 1892ம் வருடம் டிசம்பர் மாதம் 25  ம் நாள் நமது தேசம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருந்த காலம். எங்கும் ஏழ்மை, ஆங்கிலேய அரசாங்கம் நமது எல்லா வளத்தையும் சுரண்டிக்கொண்டு இருந்த இருண்டகாலம். ஒரு இளம்துறவி பாரததேசம் முழுவதும் சுற்றி திறந்துவிட்டு இறுதியாக பாரதத்தின் தென்கோடி எல்லையான கன்னியாகுமாரி உள்ள பாறையின் மீது வந்து அமர்ந்தார்.

அந்த பாறையில்  ஓர் வித்தியாசமான தவத்தினை இயற்றினார் அந்த துறவி. நமது தேசநிலையை உயர்த்துவதற்கான தவம் அது. ஒரு துறவி தனது ஆன்ம விடுதலையை விடுத்தது தேசத்தின் விடுதலைக்காகவும் மக்களின் ஏழ்மையை போக்கவும் மூன்று நாட்கள் தவம் இயற்றியது வித்தியாசம் தானே. நம் புராதன பாரதம் மிகவும் செலவச்செழிப்புடனும் சிந்தனை வளத்துடனும் இருந்தது.  இப்பொழுது அடிமையாகி நாம் மனிதர்கள் என்ற எண்ணமே இல்லாமல் மிருகங்களை போல் வாழ்கிறோம். இதற்கு என்ன கரணம்? ஏன் இந்த இழி நிலை? இந்த இழி நிலையை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்? என்று அந்த துறவி சிந்தித்தார் அதன் பயனாய் ஒரு வழிமுறையும் கண்டறிந்தார்.

சிக்காகோ சர்வமத மகாசபை மாநாட்டில்  கலந்துக்கொண்டு நமது தேசத்தின் பெருமையையும் இந்து மதத்தின் மேன்மையையும் உலகிற்கு பறைசாற்றினார். நமது மக்களின் அடிமை வாழ்வை அகற்ற மீண்டும் பாரதம் வந்து. நாடு முழுவதும் சுற்று பயணம் செய்து நமது புராதன பெருமைகளையும். தற்போது உள்ள இழிநிலைக்கு காரணம் என்ன என்பதை விளக்கினார். இதன் விளைவாக நமது நாடு சுதந்திரம் பெற்றது. நாம் சுதந்திரம் பெறுவதற்கு வித்திட்ட அந்த இளம் துறவி தான் சுவாமி விவேகானந்தர்.

100 இளைஞர்களை தாருங்கள் நான் இந்தியாவையே மாற்றி காட்டுகிறேன். எனது நம்பிக்கை இளைய சமுதாயத்திடம் தான் உள்ளது. என்று முழக்கமிட்டவர் சுவாமி விவேகானந்தர்.  எப்படிப்பட்ட இளைஞர்களை கேட்கிறார். இரும்பை ஒத்த தசைகளும் எஃகை போன்ற நரம்புகள் கொண்ட இளைஞர்களே தேவை. தீவிர செயல் துடிப்பும் தன்னம்பிக்கையும், நல்லனவற்றில் திட நம்பிக்கையும், அவற்றை செயல் படுத்தும்போது இந்த உலகமே எதிர்த்தாலும் அதை செவ்வென செய்யக்கூடிய ஆற்றலும்  கொண்ட இளைஞர்களை தான் அவர் அழைக்கிறார்.

இப்பொழுது  அப்படிப்பட்ட இளைஞர்கள் இருக்கிறார்களா?  என்றால் இருக்கிறார்கள் அவர்களுக்கு தான் யார் என்று தெரியாமல் இருக்கிறார்கள் அவ்வளவே.  அனுமன் தன்னை அறியாமல் இருந்ததை  போன்று இருக்குகிறார்கள். ஜாம்பவானின் வார்த்தை எப்படி அனுமனை ஆற்றல் பொருந்தியவராக மாற்றியதோ அதேபோல் சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளும் நமது இளைஞர்களை தட்டி எழுப்பி, ஆற்றல் பொருந்தியர்களாக மற்றும் என்பதில் சந்தேகமில்லை. அவர் வார்த்தைகளை சிலர் படித்ததற்கே நமது நாடு அரசியலில் விடுதலை பெற்றது.

சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையில் விவேகானந்தரை படித்த பிறகே அவர்களின் செயல்களில் உத்வேகத்தைக் காணமுடியும். அப்போதைய தீவிர போராட்ட வீரர்களாக இருந்த திலகர், பாரதியார்  வ.வு.சி , சுப்ரமணிய சிவா. நேதாஜி. போன்றவர்களாகட்டும், மிதவாத போராட்ட வீரர்களாக  இருந்த காந்திஜி, சி.ஆர்.தாஸ்  போன்றவர்களாகட்டும், புரட்சியார்களாக  இருந்த வாஞ்சிநாதன், வவேசு ஐயர் போன்றவர்களாகட்டும், எண்ணற்ற வீரர்கள் தேச விடுதலைக்கு பாடுபட வித்திட்டது சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளே.

நமது தேசத்தின் ஜாம்பவானான சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளை பட்டி தொட்டி எங்கும் கொண்டு செல்வோம் உறக்கத்தில் இருக்கும் நமது இளைஞர்களை விழிப்படைய செய்வோம். விழிப்படைந்த இளைஞர்களைக்கொண்டு மீண்டும் ஒரு சுதந்திர போருக்கு தரராவோம்.

நாம் சுதந்திரம் பெற்றாக வேண்டும் மேலை நாட்டு மோகத்திருந்து விடுதலை பெற்றாக வேண்டும். அந்நிய கலாச்சார ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றாக வேண்டும். நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது நாம் வீரர்களாக திகழ்வோம். கடந்த முறை செய்த தவறுகளை களைந்து இந்த முறை நமது தேசமே பிரதானமாக நமது புராதான பெருமைகளை கொண்ட நவீன இந்தியாவை உருவாக்க வேண்டும்.

அதற்கு ஒரு வாய்ப்பாக சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி-12 தேசிய இளைஞர் தினத்தை நமது பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லுரிகளில் கொண்டாடுவோம். அனைவருக்கும் சுவாமி விவேகானந்தரின் செய்திகளை குறிப்பாக மாணவ மற்றும் இளைய தலைமுறையிடம் கொண்டுசேர்ப்போம். மீண்டும் பாரதம் உலகின் குருவாய் அமைத்திடுவோம்.

வந்தே மாதரம்

வாழ்க பாரதம்!

விவேகானந்தரிடம் பேச மறுத்த ராமகிருஷ்ணர்

விவேகானந்தரிடம் பேச மறுத்த ராமகிருஷ்ணர்.

Sw

ஒரு நாள் நரேந்திரர் தட்சிணேசுவரத்துக்கு வந்த போது அவரைக் கண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை பரமஹம்சர். நரேந்திரர் குரு நாதரை வணங்கினார். அப்போதும் அலட்சியமாகவே இருந்தார் குரு. அவருடைய பக்கத்தில் சீடர் அமர்ந்தார். அப்படி ஒருவர் அருகில் உட்கார்ந்திருப்பதைக் குரு மகராஜ் கவனித்ததாகவே தெரியவில்லை. அவர் ஏதோ தீர்க்கமாய்ச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் போலும் என்றெண்ணிய நரேந்திரர் அறைக்கு வெளியே வந்தார்.

ஹாஸ்ராவுடன் பேசிக் கொண்டே புகைத்தார். அப்போது உள்ளே பரமஹம்சர் மற்றவர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பது கேட்டது. உடனே நரேந்திரர் ஆர்வத்துடன் அவரது திருமுன்னர் சென்றார். என்ன ஆச்சரியம்! இம் முறை ஸ்ரீராமகிருஷ்ணர் அலட்சியம் செய்தது மட்டுமில்லை ; நரேந்திரருக்கு எதிர்ப்புறமாக சுவரை நோக்கி முகத்தைத் | திருப்பிகொண்டு விட்டார். ஏமாறிய நரேந்திரர் அங்கிருந்து புறப்பட்டார். அப்போதும் பரம ஹம்சர் போக்கில் மாறுதலே இல்லை.

இரண்டாம், மூன்றாம் முறையாக தட்சிணேசுவரத்துக்கு வந்தார் நரேந்திரர். நாலாம் முறையும் வந்தார். |அவர் வராத இடைக் காலத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரும் நரேந்திரரின் சௌக்கியத்தைப் பற்றி கேட்டறிந்து தான் வந்தார். எனினும் அவர் வந்தபோது ஏனோ கல்லாகச் சமைந்திருந்தார் குருதேவர். இப்படியே ஒரு மாதம் ஆகி விட்டது. ஸ்ரீராமகிருஷ்ணர் அப்படியே தான் இருந்தார். நரேந்திரரும் முன் போலவே வந்து கொண்டு இருந்தார். குருநாதர் தம்மைப் புறக்கணிப்பது பற்றி அவர் யாரிடமும் குறை கூறக் கூட இல்லை . அதற்கு மேலும் பரமஹம்சரால் எப்படி, பொறுக்க முடியும்?

நரேன், உன்னோடு நான் ஒரு வார்த்தைக்கூடப் பேசாமலிருக்கிறேன்; அப்படியும் நீ வந்து கொண்டிருக்கிறாயே! இது எப்படி ?” என்று சிஷ்யனைக் கேட்டே விட்டார் ஆசான். “நீங்கள் பேசி நான் கேட்க வேண்டும் என்பதற்காக நான் இங்கே வருவதாகவா எண்ணுகிறீர்கள் ? நான் அதற்காக வர வில்லை . எனக்கு உங்களிடம் அன்பு இருக்கிறது. அந்த அன்பி னால் உங்களைக் காண விரும்பு கிறேன். அதற்காகவே நான் தட்சிணேசுவரத்துக்கு வருகிறேன்என்றார் நரேந்திரர்.

அன்பு தனக்குப் பிரதியாக எதையும் எதிர்பாராது என்பது உண்மை தான். நரேந்திரரின் அன்பு அதற்குப் பிரதியாக குருதேவரின் அன்பைக்கூட எதிர்பார்க்கவில்லை. எதையும் எதிர்பாராது எவரிடமும் அன்பு செலுத்துவதே நம் கடமையாகக் கொள்ளவேண்டும் என்று முழங்கியவர் சுவாமி விவேகானந்தர்.

மதமாற்றம் பற்றி சுவாமி விவேகானந்தர்.

மதமாற்றம் பற்றி சுவாமி விவேகானந்தர்.

மதமாற்றம் பற்றி சுவாமி விவேகானந்தரின் நிலை என்ன என்பதை அவர் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள் மூலம் காணலாம்.

நிகழ்வு -1

sv-22-chicago-sept-1893கடற்பயணத்தின் போது இரு பாதிரியார்கள் அவரிடம் வந்து கிறிஸ்தவ மதம் ஹிந்து மதம் ஆகிய இரு மதங்களுக்கிடையே உள்ள நல்ல் அம்சங்கள் மற்றும் தீய அம்சங்களைப் பற்றி விவாதிக்க வலியுறுத்தினர்.

வாதம் ஆரம்பமானது.தங்கள் பக்கம் தோல்வி நிச்சயம் என்ற சூழ்நிலையில் அந்த பாதிரிமார்கள் இருவரும் மிக மோசமாக ஹிந்து மதத்தையும் ஹிந்துக்களையும் திட்ட ஆரம்பித்தனர். ஸ்வாமிஜி பொறுத்துப் பார்த்தார்.வசை பாடல் தொடர்ந்தது. ஸ்வாமிஜியால் பொறுக்க முடியாத சூழ்நிலை.

ஸ்வாமிஜி இருவரில் ஒருவரின் காலரைப் பற்றினார்.சிரித்தவாறே ஆனால் மிகவும் தீவிரமான தொனியில், “இனியும் என் மதத்தைப் பற்றி தூஷித்தால் இந்தக் கடலில் உங்களைத் தூக்கி வீசி எறிந்து விடுவேன்” என்றார்.

ஸ்வாமிஜியின் கட்டுமஸ்தான உடல் வாகு அனைவரும் அறிந்ததே!நடுநடுங்கிப் போன பாதிரியார், “ஐயா! என்னை விட்டு விடுங்கள். நான் போகிறேன்.இனிமேல் இப்படிப் பேச மாட்டேன்” என்று கெஞ்சலானார்.

ஸ்வாமிஜி அவரை விடுவித்தார். அன்று முதல் அந்த்ப் பயணம் முழுவதும் ஸ்வாமிஜியிடம் அந்தப் பாதிரியார் மிகுந்த மரியாதையுடன் நடக்கலானார்.

christians-attack-vivekananda.jpg

நிகழ்வு -2

கல்கத்தாவில் தன்னைச் சந்திக்க வந்த சிஷ்யர் பிரியநாத் சின்ஹாவிடம், ‘ஒரு மனிதன் தன் ம்தத்தை உண்மையாக நேசிக்கையில் அவன் தைரியசாலியாகவும் துணிச்சலுடனும் திகழ்வான். அப்படிப்பட்ட தைரியம் ஒற்றுமையை உருவாக்கும்.அது தான் ஹிந்துக்களிடையே இல்லை’ என்று ஸ்வாமி விவேகானந்தர் கூறினார்.

ஸ்வாமிஜி பிரியநாத்திடம், “உன்னிடம் உன் தாயாரைப் பற்றி ஒருவர் தூஷித்தால் நீ என்ன செய்வாய்?” என்று கேட்டார்.“அவன் கழுத்தைப் பிடித்து அவனுக்குத் தக்க பாடம் கற்பிப்பேன்” என்றார் பிரியநாத்.

அந்த பதிலால் ஸ்வாமிஜி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.“நன்றாய் சொன்னாய், சின்ஹா! நீ இப்படி அசைக்க முடியாத நம்பிக்கையை உன் மதத்தின் மீது கொண்டால், இந்த பாரத நாட்டின் மீது கொண்டால், உன் சகோதர ஹிந்துக்களை இந்த பாதிரிமார்கள் மதமாற்றம் செய்வதைக் காணப் பொறுக்கமாட்டாய்.

ஒவ்வொரு நாளும் இந்த மதமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. என்றாலும் கூட நீ சும்மாதான் இருக்கிறாய்? எங்கே உன் மதப்பற்று? எங்கே உன் தேசபக்தி? ஒவ்வொரு நாளும் கிறிஸ்தவ பிரசாரகர்கள் உன் கண் முன்னாலேயே ஹிந்து மதத்தை இழிவு படுத்திப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதைக் கண்டித்து ஹிந்து மதத்தைக் காப்பாற்றும் வகையில் எத்தனை பேர் முன் வருகிறார்கள்?” என்று கேட்டார்.

ஸ்வாமிஜி எல்லா மதத்தையும் மதிக்க வேண்டும் என்று சொன்ன அதே தருணம் நம் மதத்தை நேசித்துப் போற்றுதல் மட்டும் போதாது; மதமாற்றம் என்று வரும் போது அதைத் தடுக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தினார்.அதற்குத் தானே உதாரணமாக இருந்ததை தன் கடல் பயண சம்பவம் மூலம் உணர்த்தினார்.


நன்றி

https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/

நமது பணி – சுவாமி விவேகானந்தர் – 8

நமது பணி – சுவாமி விவேகானந்தர்

கும்பகோணத்தில் பேசியதுSV Kumbakonam

சத்திய யுகத்தில் ஒரே ஒரு ஜாதிதான் இருந்ததாகவும் அந்த ஒரே ஜாதி பிராமண ஜாதியே என்றும் சாஸ்திரங்களில் நாம் படிக்கிறோம். ஆரம்பக் காலத்தில் உலகம் முழுவதிலும் பிராமணர்கள் மட்டுமே இருந்தார்கள் அவர்கள் இழிவடைய ஆரம்பித்த பின்னரே பல்வேறு ஜாதிகளாகப் பிரிந்தனர், இந்தச் சுழற்சி ஒரு சுற்று முடியும்போது எல்லோரும் மீண்டும் பிராமணர்களாகி விடுவர் என்று மகாபாரதத்தில் படிக்கிறோம்.

இந்த யுகச் சுழற்ச்சி இப்போது ஒரு சுற்றை நிறைவு செய்யும் நிலையில் உள்ளது. இந்த விஷயத்தில் நீங்கள் கவனம் கொள்ளுமாறு வேண்டுகிறேன். எனவே உயர்ந்த நிலையில் இருப்போரைக் கீழ்நிலைக்கு இழுப்பதோ, குடித்துக் கும்மாளம் அடிப்பதோ, அதிக போகத்தை நாடி எல்லை மீறிக் குதிப்பதோ ஜாதிப் பிரச்சனைக்கான நமது தீர்வு அல்ல

நாம் ஒவ்வொரு வரும் ஆன்மீகத்தை நாட வேண்டும் வேதாந்த மதத்தின் நியதிகளைக் கடைபிடிக்க வேண்டும், லட்சிய பிராமணர்களாக வேண்டும். ஜாதிப் பிரச்சனைக்குத் தீர்வு இவ்வாறுதான் ஏற்பட முடியும்.

மிக உயர்நிலை மனிதனிலிருந்து மிகவும் கீழான நிலையில் இருப்பவன்வரை இந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முயன்று, நில்லாமல் தொடர்ந்து முன்னேரி லட்சிய பிராமணன் ஆக வேண்டும்.

இந்த வேதாந்தக் கருத்து நமது நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கே ஏற்புடைய ஒன்றாகும் அஹிம்சையில் வேரூன்றிய, அமைதியான, உறுதியான வணங்கத்தக்க, தூய்மையான தியான நிலையில் திளைக்கின்ற ஓர் ஆன்மீக மனிதன் என்ற உயர் லட்சியத்திற்க்கு மனித குலத்தையே நிதானமாகவும் மென்மையாகவும் உயர்த்துவதே ஜாதி பற்றிய நமது லட்சியமாகும். இந்த லட்சியத்தில் இறைவன் குடி கொள்கிறார்.

இவற்றையெல்லாம் செய்வது எப்படி? சபிப்பதாலும் கேவலப்படுத்துவதாலும் நிந்திப்பதாலும் எந்த நல்ல விளைவையும் கொண்டுவர முடியாது என்பதைக் நான் உங்களுக்கு அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். இந்த வழிகளில் எல்லாம் ஆண்டுக்கணக்காக முயற்சி செய்தாகிவிட்டது. குறிப்பிடத்தக்க எந்த விளைவும் கிடைக்கவில்லை. அன்பு, கனிவு இவற்றின் மூலமே நன்மை உண்டாக முடியும்.

இது ஒரு மகத்தான விஷயம். இது சம்பந்தமான எனது திட்டங்களையும் இது பற்றி என் மனத்தில் நாள்தோறும் தோன்றிக் கொண்டிருக்கின்ற கருத்துக்களையும் உங்களிடம் சொல்வதென்றால் அதற்கு பல சொற்பொழிவுகள் நிகழ்த்த வேண்டியிருக்கும்.

எனவே ஓர் உண்மையை மட்டும் நினைவுபடுத்தி, எனது சொற்பொழிவை நிறைவு செய்கிறேன். இந்துக்களே, நமது நாடாகிய இந்தக் கப்பல் காலங்காலமாக நமக்கு எவ்வளவோ நன்மை செய்தபடி பயணம் செய்து கொண்டிருக்கிறது. இன்று ஒரு வேளை அதில் ஓர் ஓட்டை விழுந்திருக்கலாம், ஒரு வேளை கொஞ்சம் பழுதுபட்டிருக்கலாம். இந்த நிலையில் ஓட்டைகளை அடைத்து தண்ணீர் உள்ளே செல்வதைத் தடுப்பதுதான் நீங்கள் நான் என்று நாம் ஒவ்வெருவரும் செய்ய வேண்டிய வேலை

. நம் நாட்டு மக்களுக்கு ஆபத்தை எடுத்துச் சொல்வோம்; அவர்கள் விழித்தெழட்டும், விழித்து நமக்கு உதவட்டும். மக்களுக்கு நிலைமையை எடுத்துக்கூறி அவர்களின் கடமையை உணர்த்துவதற்காக, நான் இந்த நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று, உரத்த குரலில் அவர்களை அழைக்கப் போகிறேன்! என் குரலை அவர்கள் கேட்காமல் போகலாம். என்றாலும் அவர்களைப்பற்றி ஒரு நிந்தனைச் சொல்லோ ஒரு சாபமோ என் வாயிலிருந்து வராது.

நாட்டுப்பற்று உடையவர்களாக இருங்கள். கடந்த காலத்தில் இவ்வளவு மகத்தான காரியங்களைச் செய்த இந்த இனத்தை நேசியுங்கள். என் நாட்டு மக்களே உங்களை மற்ற நாட்டு மக்களுடன் ஒப்பிட்ட நோக்குந் தோறும் உங்களை அதிகமாக நான் நேசிக்கிறேன்.

நீங்கள் நல்லவர்கள், தூயவர்கள், மென்மையானவர்கள். நீங்கள் எப்போதும் அடக்குமுறைக்கே ஆளாகியிருக்கிறீர்கள், இந்த ஜடவுலக மாயையின் கொடுமை அது. அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். காலைப்போக்கில் உணர்வுப் பொருளே வெற்றி பெறும். இதற்கிடையே நாம் உழைப்போம், நம் நாட்டைக் குறை கூறாதிருப்போம்.

காலத்தின் கடுமைகளைத் தாங்கி உழைப்பால் களைத்துத் தேய்ந்து கொண்டிருக்கின்ற நமது புனிதமிக்க நாட்டின் அமைப்புகளைச் சபிக்கவோ பழிக்கவோ வேண்டாம் மூட நம்பிக்கைகள் மலிந்த அறிவுக்குப் பொருந்தாத அமைப்புகளைக்கூட நிந்திக்காதீர்கள். ஏனென்றால் கடந்தகாலத்தில் அவை ஏதோ நன்மை செய்திருக்கும், நம் நாட்டு அமைப்புகளைவிட உண்மையிலேயே சிறந்த நோக்கங்களையும் முடிவுகளையும் கொண்ட அமைப்புகள் உலகில் வேறு எங்குமே இல்லை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

ஒரு கண்டனச் சொல்கூட வேண்டாம். உதடுகளை மூடிக்கொள்ளுங்கள், உங்கள் உள்ளங்கள் திறக்கட்டும் உங்கள் ஒவ்வொருவரின் தோள்மீதுதான் முழுப் பொறுப்பும் இருப்பதாக எண்ணி, இந்த நாட்டின் மற்றும் உலகம் முழுவதன் நற்கதிக்காகப் பாடு படுங்கள்.

வேதாந்தத்தின் ஒளியையும் வழியையும் ஒவ்வொரு ஆன்மாவிலும் மறைந்துள்ள தெய்வீகத்தை விழித் தெழச் செய்யுங்கள். இதன்பிறகு எந்த அளவிற்கு உங்களுக்கு வெற்றி கிடைத்தாலும், நீங்கள் ஒரு மகத்தான லட்சியத்திற்காக வாழ்ந்தீர்கள், உழைத்தீர்கள் என்ற மனநிறைவோடு இறந்து போகலாம்.

எப்படியானாலும் இந்த லட்சியத்தின் வெற்றியைப் பொறுத்தே இப்போதும் இனி வரும் காலத்திலும் மனித குலத்தின் கதிமோட்சம் நிர்ணயிக்கப்படும்.

-நிறைவுற்றது.

end

நன்றி சுவாமி வித்யானந்தர்.  http://www.hindumatham.in
(எழுந்திரு விழித்திரு பகுதி – 5 பக்கம் – 82)

நமது பணி – சுவாமி விவேகானந்தர் – 7

நமது பணி – சுவாமி விவேகானந்தர்

கும்பகோணத்தில் பேசியது

SV Kumbakonamபல நூற்றாண்டுகளாகவே நம் மக்களின் மனத்தை ஆக்கிரமித்திருப்பவையும் வெறுப்டையச் செய்து. வருபவையுமான ஜாதி மற்றும் சமூகச் சீர்திருத்தம் பற்றிய கடினமான சில கேள்விகள் இந்த இடத்தில் இயல்பாகவே எழுகின்றன.

நான் ஜாதிகளை உடைப்பவனோ, வெறும் சமூகச் சீர்திருத்தவாதியோ அல்ல என்பதை வெளிப்படையாக உங்களிடம் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் ஜாதிகளிலோ சமூகச் சீர்த்திருத்தத்திலோ நேரடியாக எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

நீங்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் அதற்காக ஏன் மற்றொருவனை, மற்றொரு ஜாதியை நீங்கள் வெறுக்க வேண்டும்?

நான் போதிப்பது அன்பு, அன்பு ஒன்றை மட்டுமே. பிரபஞ்சம் முழுவதன் ஆன்மா ஒன்றே, அது எங்கும் நிறைந்தது என்ற மகத்தான வேதாந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டுதான் நான் பிரச்சாரம் செய்கிறேன்.

ஏறக்குறைய கடந்த நூறு ஆண்டுகளாக நமது நாடு சமூகச் சீர்திருத்தவாதிகளாலும் பல வகையான சமுதாயச் சீர்திருத்தத் திட்டங்களாலும் மூழ்கடிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சீர்திருத்தவாதிகளிடம் என்னால் தவறு எதையும் காண முடியவில்லை அவர்களுள் பெரும்பாலானோர் நல்லவர்கள், தெளிவான சிந்தனையுடையவர்கள், சில விஷயங்களில் அவர்களது நோக்கங்கள் கூடப் பாராட்டத் தக்கவையாகவே உள்ளன அதேவேளையில், இந்த நூறு ஆண்டுகளின் சமுதாயச் சீர்த்திருத்தம் உருப்படியான, பாரட்டத்தக்க, நிலையான எந்த விளைவையும் இந்த நாட்டில் எங்குமே தோற்று விக்கவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை

ஆயிரக்கணக்கானோர் மேடையில் முழங்குகிறார்கள். அப்பாவியான இந்து இனத்தின் மீதும் அதன் நாகரீகத்தின் மீதும் மூட்டை மூட்டையாகக் கண்டனங்கள் சுமத்தப்படுகின்றன. ஆனாலும் நடைமுறையில் எந்த நல்ல பலனையும் காணோம்.

ஏன் ?இதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. அது அவர்களின் கண்டனத்திலேயே உள்ளது. நான் முன்பு கூறியது போல், முதலில் காலங் காலமாக நாம் பெற்று வந்துள்ள நமது நாட்டின் பண்பைக் பாதுகாக்க முயல வேண்டும் .அடுத்ததாக பிற நாடுகளிலிருந்து பல விஷயங்களை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும், வெளியிலிருந்து பல பாடங்களை நாம் கற்றாக வேண்டும்

. ஆனால் பெரும்பாலான நமது நவீனச் சீர்த்திருத்த இயக்கங்கள் சிறிதும் சிந்திக்காமல் மேலை முறைகளைக் காப்பியடிப்பவைகளாக உள்ளன. இது இந்தியாவிற்கு ஏற்றதல்ல என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதனால்தான் நமது சமீப காலச் சீர்த்திருத்த இயக்கங்கள் எதுவும் எந்தப் பலனையும் அளிக்கவில்லை

இரண்டாவதாக, கண்டனம் ஒருபோதும் நன்மை செய்வதற்கான வழியல்ல. நம்முடைய சமூகத்தில் சில கேடுகள் இருக்கின்றன, இதை ஒரு குழந்தையாலும் காண முடியும். எந்தச் சமூகத்தில்தான் தீமைகள் இல்லை?

என் நாட்டு மக்களே, நான் பார்த்த பல்வேறு இன மற்றும் பல நாட்டு மக்களோடு , நம் மக்களை ஒப்பிட்டபின் நான் கண்ட முடிவை இந்த வேளையில் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

என்னவென்றால், நம் மக்களே எல்லோரையும் விட மிகவும் ஒழுக்கம் வாய்ந்தவர்கள், மிகவும் தெய்வீக மானவர்கள். நமது சமுதாய அமைப்புக்களே மனித குலத்தை மகிழ்ச்சிகரமாக்க, அமைப்பிலும் நோக்கத்திலும் மிகவும் பொருத்தமானவை. எனவே நான் எந்த சீர்திருத்தத்தையும் விரும்பவில்லை. எனது லட்சியம் வளர்ச்சி, விரிவு, தேசியப் பாதையில் முன்னேற்றம்.

நம் நாட்டின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது, இந்த உலகம் முழுவதிலும் எந்த நாடும் இதைப்போல மனித மனத்தின் வளர்ச்சிக்காக அதிகமான காரியங்களைச் செய்யவில்லை என்பதைக் நாம் காண முடியும். எனவே என் நாட்டை நிந்திக்கும் எந்த வார்த்தையும் என்னிடம் இல்லை. அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம், நீங்கள் நன்றாகச் செய்திருக்கிறீர்கள், இன்னும் நன்றாகச் செய்ய முயலுங்கள் என்பது தான்.

இந்த நாட்டில் மகத்தான காரியங்கள் கடந்த காலத்தில் செய்யப்பட்டுள்ளன. அதைவிடச் சிறப்பான காரியங்களைச் செய்வதற்கான நேரமும் வாய்ப்பும் இப்போது உள்ளது. எதுவும் செய்யாமல் நம்மால் இருக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியும் என்பது உறுதி. எதுவும் செய்யாமலிருந்தால் செத்துப்போவோம்.

ஒன்று நாம் முன்னே செல்ல வேண்டும் அல்லது பின்னே செல்ல வேண்டும்; முன்னேற வேண்டும் அல்லது வீழ்ச்சி அடைய வேண்டும். கடந்த காலத்தில் நம் முன்னோர்கள் மகத்தான காரியங்களைச் செய்தார்கள். நாமும் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து, அவர்கள் செய்ததை விட மகத்தான சாதிக்க வேண்டும் .

இந்த நிலையில் நம்மால் எப்படிப் பின்னே சென்று நம்மை நம்மையே இழிவுபடுத்திக் கொள்ள முடியும்? அது முடியாது, அப்படிச் செய்யவும் கூடாது. பின்னால் செல்வது என்பது இந்த நாட்டை நாசத்திற்க்கும் மரணத்திற்க்குமே அழைத்துச் செல்லும். எனவே முன்னேறிச் செல்வோம் மகத்தான காரியங்களைச் செய்வோம். நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது இதுதான்.

அவ்வப்போதைய தேவைகளை மட்டும் நிறை வேற்றுவதான சமூகச் சீர்த்திருத்தத்தைப் போதிக்கின்ற பிரச்சாரகன் அல்ல நான். தீமைகளை நீக்குவதற்கும் நான் முயலவில்லை , ஆனால் மனித இனத்தின் முன்னேற்றத்திற்காக நமது முன்னோர்கள் மிகவும் சிறப்பாக வகுத்துத் தந்துள்ள திட்டத்தைச் செயல்படுத்த முனைந்து முன் செல்ல வேண்டும் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன்.

மனிதனின் சார்புத்தன்மை மற்றும் அவனது தெய்வீக இயல்பு போன்ற வேதாந்த லட்சியத்தை உணர்ந்துகொள்ளப் பாடுபட வேண்டும் என்று மட்டும்தான் கூறுகிறேன்.

எனக்கு நேரம் இருந்திருந்தால், நாம் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைச் சட்டங்களை வகுத்துத் தந்த நமது முன்னோர்கள் எப்படி பல்லாண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளார்கள், நமது தேசிய அமைப்புகளில் இதுவரை நிகழ்ந்துள்ள மாற்றங்களையும் இனி வரப் போகின்ற மாற்றங்களையும் எப்படி அன்றே உணர்ந்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் மகிழ்ச்சியுடன் எடுத்துச் சொல்லியிருப்பேன்.

அவர்களும் ஜாதியை ஒழிக்வே விரும்பினார்கள். ஆனால் அவர்கள் தற்கால மனிதர்களைப் போன்றவர்கள் அல்ல. ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால் அதற்காக, நகர மக்கள் அனைவரும் ஓர் இடத்தில் திரண்டு, எல்லோரும் மதுவும் மாட்டிறைச்சியுமாக விருந்துண்டுகளிக்க வேண்டும்; முட்டாள்களும் பைத்தியங்களும், அவர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்துகொண்டு இந்த நாட்டை ஒரு பைத்தியக்கார விடுதியாக மாற்ற வேண்டும் என்றெல்லாம் அவர்கள் கூறவும் இல்லை.

நம் முன்னோர்களின் லட்சிய மனிதனாகத் திகழ்ந்தவன் பிராமணன். நம் சாஸ்திரங்களிலும் இந்த பிராமண லட்சியம் சிறப்பாகக் காணப்படுகிறது.

ஐரோப்பாவின் கார்டினல் பிரபு தன் முன்னோர்கள் கொள்ளையர் பரம்பரையிலிருந்து வந்தவர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறார். . மாறாக இந்தியாவிலோ, கோவணம் அணிந்து, காடுகளில் வாழ்ந்து, கிழங்குகளை உண்டு, வேதங்களை ஓதிய ஏதோ ஒரு ரிஷியின் சந்ததியாக இருப்பதையே பேரரசர்களும் விரும்புவார்கள். அங்கு தான் இந்திய மன்னர்கள் தங்கள் பாரம்பரியத்தை தேடினார்கள். உங்கள் பரம்பரை ஒரு ரிஷியிடமிருந்து தொடங்குமானால் நீங்கள் உயர்ந்த ஜாதியினர், இல்லை யென்றால் உயர்ந்த ஜாதியினர் அல்ல.

எனவே உயர்குலப் பிறப்பைப் பற்றிய நமது லட்சியம் மற்றவர்களிலிருந்து வேறானது. ஆன்மீகப் பண்பாடும் துறவும் கொண்ட பிராமணனே நமது லட்சியம்.

பிராமண லட்சியம் என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன்? உலகியல் சிறிதும் இல்லாத உண்மை அறிவு வளம் மிக்க பிராமணத்துவத்தையே நான் கூறுகிறேன். இதுதான் இந்து இனத்தின் லட்சியம்.

பிராமணன் சட்டத்திற்குக் கட்டுபட்டவனல்ல அவனுக்கு சட்டமே இல்லை, அவன் அரசனுடைய ஆளுகைக்கு உட்பட்டவனல்ல, அவனை யாரும் துன்புறுத்தக் கூடாது என்றெல்லாம் நமது நீதி நூல்கள் கூறுவதை நீங்கள் கேட்டதில்லையா? அது முற்றிலும் உண்மை .

சுயநலமிக்க முட்டாள்களின் விளக்கத்தின்படி இதனை நீங்கள் புரிந்து கொள்ளக் கூடாது, வேதாந்தத்தின் உண்மையான ஆதாரபூர்வமான விளக்கத்தின்படி புரிந்துகொள்ள வேண்டும் அறிவையும் அன்பின் ஆற்றலையும் பெறுவதிலும், அதைப் பரப்புவதிலும் முனைந்து ஈடுபடுபவனாகவும், சுயநலம் என்பதே இல்லாதவனாகவும் இருப்பவனே பிராமணன்

பொதுநலமும் ஆன்மீகமும் நல்லொழுக்கமும் நற்பண்புகளும் மிக்க இத்தகைய ஆண்களும் பெண்களுமாகிய பிராமணர்கள் மட்டுமே ஒரு நாட்டில் வாழ்வார்கள் என்றால், அந்த நாட்டைச் சட்டங்களுக்குக் கட்டுப்படாததாகவும் கருதுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? அவர்களை ஆள போலீசோ ராணுவமோ எதற்கு? அவர்களை ஏன் ஒருவர் ஆட்சி செய்ய வேண்டும்? அவர்கள் நல்லவர்கள், சான்றோர்கள், மனித தெய்வங்கள். இவர்கள்தான் நமது லட்சிய பிராமணர்கள்.

–தொடரும்—-


நன்றி சுவாமி வித்யானந்தர்.  http://www.hindumatham.in
(எழுந்திரு விழித்திரு பகுதி – 5 பக்கம் – 82)

நமது பணி – சுவாமி விவேகானந்தர் – 6

நமது பணி – சுவாமி விவேகானந்தர்

கும்பகோணத்தில் பேசியதுSV Kumbakonam

நண்பர்களே, வருத்தம் தரக்கூடிய சில உண்மைகளை உங்களுக்கு சொல்லியே ஆக வேண்டும். நம் இந்தியன் ஒருவன் ஓர் ஆங்கிலேயனால் கொலை செய்யப்பட்டான் என்றோ கேவலமாக நடத்தப்பட்டான் என்றோ பத்திரிக்கையில் வருகிறது. உடனே நம் நாடு முழுதும் கூக்குரல்கள் எழுகின்றன . நானும் படிக்கிறேன், அழுகிறேன். அடுத்த வினாடியே இதற்கெல்லாம் யார் பொறுப்பு என்ற கேள்வி என் மனத்தில் எழுகிறது. ஒரு வேதாந்தி என்ற முறையில் எனக்குள்ளே இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருக்க என்னால் முடியாது.

இந்து தனக்குள் மூழ்குபவன். அவன் தனக்குள்ளும் தன் மூலமும், தன்னை அடிப்படையாகக் கொண்டும் எதையும் பார்க்க விரும்புகிறான். எனவே என்னையே நான் கேட்டுக்கொள்கிறோன் இதற்கு யார் பொறுப்பு? எனக்கு ஒவ்வொரு முறையும் கிடைக்கின்ற பதில் இதுதான்; ஆங்கிலேயர்கள் அல்ல, அவர்கள் பொறுப்பல்ல; நமது எல்லா துன்பங்களுக்கும் எல்லா இழிவுகளுக்கும் நாம், நாம் மட்டுமே பொறுப்பாளிகள்.

பிரபுத்துவ வெறி பிடித்த நமது முன்னோர்கள் இந்த நாட்டுப் பாமர மக்களைத் தங்கள் காலின் கீழிட்டு மிதித்துக் கொடுமைப்படுத்தினார்கள். பாவம் அவர்களுக்கு எந்த உதவியும் இல்லை. காலப்போக்கில் அந்த ஏழைகள் தாங்கள் மனிதர்கள் என்பதையே மறந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் பல நாற்றாண்டுகளாக அவர்கள் வெறும் விறகுவெட்டிகளாகவும் தண்ணீர் இறைப்பவர்களாகவுமே வாழ்வதற்குக் கட்டாயபடுத்தப்பட்டார்கள். விளைவு அவர்களை தங்களை பிறவி அடிமைகள் என்றும் விறகு வெட்டவும் தண்ணீர் இறைக்கவும் மட்டுமே பிறந்தவர்கள் என்றும் நம்பவே தொடங்கி விட்டார்கள்.

இன்றைக்கு நவீன கல்வியைப்பற்றி இவ்வளவு பெருமைப்பட்டுக்கொள்கிறோம். ஆனால் யாராவது அவர்களுக்குப் பரிந்து ஒரு வார்த்தை சொன்னாலும், தாழ்த்தப்பட்ட அந்த அப்பாவிகளைக் கைதூக்கி விடுவதான கடமையை விட்டுவிட்டு, நம் மக்கள் பின்வாங்குவதையே நான் காண்கிறேன்.

முட்டாள்தனமான சில பரம்பரைக் காரணங்கள், அவை போன்ற சில மேலை நாட்டு உளறல்கள் , இவற்றிலிருந்த சில காட்டுமிராண்டிகள், மிருகத்தனமான, வாதங்கள் இவையெல்லாம் அந்த ஏழைகளை மேலும் அடங்கி ஒடுக்குவதற்காக முன்வைக்கப்படுகின்றன.

ஏ பிராமணர்களே, பரம்பரை காரணமாக பிராமணர்களுக்குக் கீழ் ஜாதியினரைவிட நன்றாகப் படிக்கின்ற திறமை இருக்கிறது என்றால் பிராமணர்களின் படிப்பிற்கு எந்தப் பணமும் இனி செலவழிக்காதீர்கள்; எல்லாவற்றையும் கீழ் ஜாதியினருக்காகச் செலவிடுங்கள். உதவியற்றவர்களுக்கு கொடுங்கள், ஏனெனில் அவர்களுக்குதான் எல்லா செல்வமும் தேவைப்படுகிறது. பிராமணன் பிறவியிலேயே அறிவாளி என்றால் எந்த உதவியும் இல்லாமல் அவனே படித்துக்கொள்ள முடியும். பிறவியிலேயே அறிவாளி அல்லாத பிறர் எல்லா போதனையையும் ஆசிரியர்களையும் பெறட்டும்.
. இதுதான் நான் புரிந்து கொண்ட நீதியும் பகுத்தறிவுமாகும்.

நமது ஏழைகளும் தாழ்த்தப்பட்ட இந்தப் பாமர ஜனங்களும்தான் உண்மையில் தாங்கள் யார் என்பதைக் கேட்கவும் அறிந்து கொள்ளவும் வேண்டியிருக்கின்றது

ஜாதி குலம் பலம் பலவீனம் போன்ற எவ்வித பாகுபாடுமின்றி ஒவ்வோர் ஆணும் பெண்ணும் குழந்தையும் இதைக் கேட்கட்டும்; வலிமையானவர் வலிமையற்றவர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று ஒவ்வொருவரின் உள்ளேயும் அந்த எல்லையற்ற ஆன்மா உள்ளது.

மகத்தானவர்களாக மேலோர்களாக ஒவ்வொருவரும் மாறுவதற்கான எல்லையற்ற வாய்ப்பும் எல்லையற்ற ஆற்றலும் அந்த ஆன்மாவில் உள்ளது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளட்டும்

உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்ய வரான் நிபோதத எழுந்திருங்கள் விழித்திருங்கள், லட்சியத்தை அடையும்வரை நில்லாமல் செல்லுங்கள் என்று ஒவ்வொருவரிடமும் முழங்குவோம்.

எழுந்திருங்கள் விழித்திருங்கள் பலவீனமாகிய இந்த மனவசியத்திலிருந்து விடுபட்டெழுங்கள். உண்மையில் யாரும் பலவீனர் இல்லை. ஆன்மா எல்லையற்றது எல்லா ஆற்றலகளும் உடையது எல்லாம் அறிந்து

எழுந்த நில்லுங்கள், உங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், உங்களுள் உறைகின்ற இறைவனை வெளிப்படுத்துங்கள், அவரை மறுக்காதீர்கள்.

அளவுக்கு அதிகமான சோம்பல் அளவை மீறிய பலவீனம், ஆழ்ந்த மனவசியம் இவை நம் இனத்தின் மீது படிந்துள்ளது, படிந்தவண்ணம் உள்ளது.

ஓ தற்கால இந்துக்களே, மனவசியத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். அதற்கான வழி உங்கள் சாஸ்திரங்களில் உள்ளது. அதைப் படியுங்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் உண்மை இயல்பைப் போதியுங்கள். உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள், அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதைப் பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும் பெருமை வரும், நன்மை வரும் தூய்மை வரும், எவையெல்லாம் மேலானதோ அவை அனைத்தும் வரும்

கீதையில் நான் விரும்பும் பகுதி ஏதாவது ஒன்று இருக்கிறது என்றால், அதன் சாரமாகவும் சுருக்கமாகவும் உள்ள கண்ணனின் இந்த இரண்டு சுலோகங்கள்தாம்-

யார் எல்லா உயிர்களிலும் பரம்பொருள் சமமாக உறைவதைக் காண்கிறானோ, அழிகின்ற பொருட்களில் அழியாதவரான இறைவனைக் காண்கிறானோ அவனே உண்மையில் காண்கிறான்.
ஏனெனில் எங்கும் இறைவன் சமமாக உறைவதைக் காண்பவன் ஆன்மாவை ஆன்மாவால் அழிக்க மாட்டான். இவ்வாறு அவன் உயர் லட்சியத்தை அடைகிறான்.

இங்கும் இதர நாடுகளிலும் வேதாந்தத்தின் மூலம் பயனுள்ள காரியங்கள் செய்வதற்கு இவ்வாறு மகத் தான வாய்ப்பு உள்ளது. மனித இன வளர்ச்சிக்காகவும் மேன்மைக்காகவும் இந்த அற்புதக் கருத்தை, ஆன்மா ஒன்றே, அது எங்கும் நிறைந்தது என்பதான அற்புதக் கருத்தை இங்கும் பிற இடங்களிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும்

எங்கெல்லாம் தீமை இருக்கிறதோ, எங்கெல்லாம் அறியாமை நிலவுகிறதோ அஞ்ஞானம் உள்ளதோ அங்கெல்லாம் அவற்றிற்கு மூலகாரணமாகக் காணப்படுவது வேறுபாட்டு உணர்ச்சிகளே.

சமத்துவம், பொருட்களின் அடிப்படையாகத் திகழ்கின்ற சமநிலை மற்றும் ஒருமைப்பாடு – இவற்றின் மீதுள்ள நம்பிக்கையிலிருந்தே எல்லா நன்மைகளும் பிறக்கின்றன.

நம் சாஸ்திரங்கள் இவ்வாறே கூறுகின்றன. என் அனு பவமும் இதையே சொல்கிறது இதுவே வேதாந்தத்தின் மகத்தான லட்சியம்.

ஒரு லட்சியத்தைக் கொள்வது என்பது ஒன்று, அதனை அன்றாட வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நடைமுறையில் கடைபிடிப்பது என்பது முற்றிலும் வேறான ஒன்று

ஒரு லட்சியத் தைக் காட்டுவது, மிகவும் நல்லதுதான் ஆனால் அதை அடைவதற்க்கு உரிய செயல்முறை எங்கே இருக்கிறது?

-தொடரும்—-


நன்றி சுவாமி வித்யானந்தர்.  http://www.hindumatham.in
(எழுந்திரு விழித்திரு பகுதி – 5 பக்கம் – 82)

நமது பணி – சுவாமி விவேகானந்தர் – 5

நமது பணி – சுவாமி விவேகானந்தர்

கும்பகோணத்தில் பேசியது

SV Kumbakonam

எதையும் ஆராய்ச்சிக் கண்ணுடன் அணுகுகின்ற மேலைநாடு தன் தத்துவம், நீதிநெறி முதலிய அனைத்திற்கும் ஆதாரமான பகுத்தறிவை ஆர்வத்துடன் தேடுகிறது.

எவ்வளவு மகத்தானவர்களாக இருந்தாலும் தெய்வீகமானவர்களாக இருந்தாலும், ஒரு தனிமனிதனின் ஒப்புதலினால் மட்டுமே நீதி நெறியை உண்டாக்க முடியாது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும் நீதிநெறிக்கு இத்தகைய ஆதாரத்தை உலகின் சிந்தனையாளர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நீதி நெறியும் ஒழுக்க விதிகளும் மக்களைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், மனித ஆதாரத்தைவிடச் சற்று மேலான ஆதாரம் ஏதாவது வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள்.

நிரந்தரமான சில உண்மை தத்துவம் இந்த நீதிநெறிக்கு ஆதாரமாக அமையவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.உங்களிலும், என்னிலும்,எல்லோரின் மனத்திலும்,உயிரிலும் உறைவதான அந்த எல்லையற்ற ஒரே உண்மையிலிருந்து அல்லாமல், அந்த நிரந்தர ஆதாரத்தை வேறு எங்கே காணமுடியும்?

ஆன்மாவின் எல்லையற்ற ஒருமையே எல்லா ஒழுக்க விதிகளின் ஆதாரமாகும். மனிதனின் முக்கிக்கான போராட்டத்தைப்பற்றிச் சொல்கின்ற ஒவ்வொரு நூலும் கூறிவந்துள்ளதே அதேபோல நீங்களும் நானும் சகோதரர்கள் என்பது மட்டுமல்ல, உண்மையில் நீங்ககளும் நானும் ஒன்றே. இதுதான் இந்தியத் தத்துவத்தின் ஆணித் தரமான கருத்து

இந்த ஒருமைதான் எல்லா நீதி நெறிக்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படை இது நமது பாமர மக்களுக்கு எவ்வளவு அவசரமாகத் தேவையோ, அவ்வுளவு அவமசரமாக ஐரோப்பியர்களுக்கு் தேவைப்படுகிறது. இங்கிலாந்திலும் பிரான்சிலும் அமெரிக்காவிலும் இன்று உருவாகி வருகின்ற நவீன அரசியல் மற்றும் சமுதாய மலர்ச்சிகளுக்கு, அவர்கள் அறியாமலே, இந்த மகத்தான கருத்துதான் அடிப்படையாக இருக்கிறது.

நண்பர்களே, நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் தனிமனித முக்திக்காகவும், சர்வ முக்திக்காகவும் மனிதனின் போராட்டதைப்பற்றிக் கூறுகின்ற எல்லா நூல்களிலிலும் இந்திய வேதாந்தக் கருத்துக்கள் மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றன. அவற்றை எழுதியவர்களுள் சிலருக்கு தாங்கள் எழுதியள்ளவற்றின் மூலகாரணம் எது என்பது தெரியவில்லை. சிலரோ அவை தங்கள் சொந்தக் கருத்துக்கள் போல் தோன்றுகின்ற அளவிற்கு எழுதியுள்ளனர். தைரியமும் நன்றியுணர்வும் கொண்ட ஒரு சிலர் மட்டுமே மூல நூலைக் குறிப்பிட்டுத் தங்கள் நன்றியைச் செலுத்தியுள்ளனர்.

நான் அளவுக்கு அதிகமாக அத்வைதத்தைப் போதிப்பதாகவும் பக்தியைப் பற்றிக் குறைவாகவே கூறுவதாகவும் குற்றம் சாட்டப்படுவதை அமெரிக்காவில் இருந்தபோது கேள்விப்பட்டேன். துவைத நெறிகளில் உள்ள பிரேம பக்தியும் பரவச நிலைகளும் அவை தருகின்ற எல்லையற்ற ஆனந்தமும் எனக்கு நன்றாகவே தெரியும். அவை எல்லாவற்றையுமே நான் அறிவேன்.

ஆனால் நமக்கு இது அழுவதற்கான நேரமல்ல ஆனந்தக் கண்ணீர்கூட இப்போது கூடாது. போதுமான அளவு நாம் அழுதாயிற்று. மென்மையானவர்கள் ஆவதற்க்கு இது தருணம் அல்ல . மென்மை மென்மை என்று நாம் வெறும் பஞ்சுப் பொதிகளாகி விட்டோம், பிணங்களாக மாறிவிட்டோம். நமது நாட்டிற்கு வேண்டுவது இரும்பாலான தசையும், எஃகாலான நரம்புகளும், அவற்றுடன் இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளையும் ரகசியங்களையும் ஊடுருவிப் பார்க்கவும், அவசியமானால் அதற்காகக் கடலின் அடியாழம் வரை சென்று மரணத்தையும் நேருக்கு நேராகச் சந்ததிக்டுகக்க்ககூடிய மகத்தான சக்திவாய்ந்த, யாராலும் தடுக்கமுடியாததான சங்கல்பமும்தான் நமக்கு இப்போது தேவை. .

நமக்குத் தேவையானது இது தான். இதனை உருவாக்கி நிலைநிறுத்தி பலப்படுத்த,எல்லாம் ஒன்றே என்பதான அந்த அத்வைத லட்சியத்தை நன்குணர்ந்து, அதனை அனுபவத்தில் கொண்டு வருவதால்தான் முடியும்.

நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடம் நம்பிக்கை, நம்பிக்கை ,இறைவனிடம் நம்பிக்கை இதுவே மனோன்னதத்தின் ரகசியம்.

உங்களுடைய புராண தெய்வங்கள் முப்பத்து முக்கோடிபேரிடமும், வெளிநாட்டினர் அவ்வப்போது உங்களிடமே திணிக்கின்ற அனைத்து தெய்வங்களிடமும் நம்பிக்கை வைத்து, அதே வேளையில் உங்களிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் உங்களுக்குக் கதிமோட்சமில்லை

உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். அந்த நம்பிக் கையை ஆதாரமாகக் கொண்டு எழுந்து நில்லுங்கள் வலிமை உடையவர்களாக இருங்கள். நமக்குத் தேவைப்படுவது இதுதான் .

வருவோரும் போவோருமான விரல்விட்டு எண்ணக்கூடிய அன்னியர் முப்பத்து மூன்று கோடி மக்களாகிய நம்மை மதித்து அரசாளக் காரணம் என்ன? அவர்களுக்குத் தன்னம்பிக்கை இருந்து, நமக்கு இல்லை.

மேலைநாட்டில் நான் என்ன கற்றுக்கொண்டேன்? மனிதன்பாவி, இழிந்தவன் என்று திருப்பித்திருப்பிச்சொல்கின்றன கிறிஸ்தவ மதப் பிரிவுகளின் வெற்று உபதேசங்களுக்குப் பின்னால் நான் கண்டது என்ன? மனிதர்கள் தங்களிடமே கொண்டுள்ள நம்பிக்கையாகிய மாபெரும் சக்தி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தேசிய நீரோட்டத்தின் மையத்தில் ததும்பி நிற்பது தான் எனக்குத் தெரிந்தது.

நான் ஆங்கிலேயன் என்னால் எதையும் செய்ய முடியும் என்றே ஆங்கிலேயச் சிறுவன் ஒருவன் சொல்வான், அமெரிக்கச் சிறுவனும் இதையே சொல்வான், ஐரோப்பாவிலுள்ள எந்தச் சிறுவனும் இதையே தான் சொல்வான் . ஆனால் இங்குள்ள நம் சிறுவர்கள் இதைச் சொல்வார்களா ? மாட்டார்கள். சிறுவர்கள் ஏன் அவர்களின் தந்தையரே சொல்ல மாட்டார்கள். நாம் தன்னம்பிக்கையை இழந்து விட்டோம்.

எனவே தங்கள் சொந்த ஆன்மாவின் மகிமையை மக்களுக்குக் காட்டுவதற்கும் அவர்களுடைய இதயத்தில் உறைந்துள்ள ஆற்றலைக் கிளார்ந்தெழ செய்வதற்கும் வேதாந்தத்தின் அத்வைதக் கருத்தை உபதேசித்தேயாக வேண்டும், அதனால் தான் நான் அத்வைதத்தை எடுத்துக் கூறினேன்.

#வேதாந்த மதத்தைச் சாந்தவன் என்ற ஒரு பிரிவு மனப்பான்மையுடன் அதை நான் கூறவில்லை. அது மிகப்பரந்த அளவில் உலகம் முழுவதிலும் ஒப்புக்கொள்ளப்படுவதான ஒன்று என்பதால் தான் அதை நான் கூறினேன்.

துவைதியையோ விசிஷ்டாத்வைதியையோ வருத்த முறச் செய்யாமல் எளிதாக ஓர் இணைப்பு வழியைக் கண்டறிய முடியும். கடவுள் நம்முள் இருக்கிறார், எல்லாவற்றிலும் தெய்வீகம் உறைகிறது என்ற கொள்கை இல்லாத ஒரு நெறிகூட இந்தியாவில் இல்லை. தூய்மையும் பூரணத்துவமும் வலிமையும் எல்லாமே நம் ஆன்மாவில் முழுமையாக இருக்கிறது என்பதை எல்லா வேதாந்த நெறிகளும் ஏற்றுக் கொள்கின்றன

. இந்தப் பூராணத்துவம் சில வேளைகளில் சுருங்குவது போலவும் சில நேரங்களில் விரிவது போலவும் ஆகிறது, ஆனாலும் அது இருக்கவே செய்கிறது என்று வேதாந்தத்தின் சில நெறிகள் கூறுகின்றன.

அத்வைதத்தின்படி அது சுருங்குவதும் இல்லை விரிவதும் இல்லை; அவ்வப்போது மறைக்கப்படவும் மீண்டும் மறைப்பு விலக்கப்படவும் செய்கிறது.

ஏறக்குறைய விஷயம் ஒன்றுதான். ஒன்று மற்றொன்றை விடச் சற்று தர்க்கரீதியானதாக இருக்கலாம், ஆனால் விளைவும் நடைமுறை விளக்கங்களும் ஒன்றுபோலவே உள்ளன இந்த ஒரு முக்கியக் கருத்தே இப்போது உலகத்திற்குத் தேவையாக உள்ளது; மற்ற இடங்களைவிட நம் தாய் நாட்டிற்குத்தான் இதன் தேவை அதிகமாக உள்ளது.

-தொடரும்—-


நன்றி சுவாமி வித்யானந்தர்.  http://www.hindumatham.in
(எழுந்திரு விழித்திரு பகுதி – 5 பக்கம் – 82)

நமது பணி – சுவாமி விவேகானந்தர் – 4

நமது பணி – சுவாமி விவேகானந்தர்

கும்பகோணத்தில் பேசியது

SV Kumbakonam

பாபிலோனிய வரலாற்றிலும் யூத வரலாற்றிலும் ஒரு சுவையான விஷயத்தை நாம் காணலாம். பாபிலோனியர்களும் யூதர்களும் பல்வேறு குழுக்களாக பிரிந்துள்ளனர். ஒவ்வொறு குழுவிற்கும் ஒரு தெய்வம் உண்டு. இந்தக் தெய்வங்கள் பெரும்பாலும் ஒரு பொதுவான பெயரைப் பெற்றிருந்தனர். பாபிலோனியர்களின் தெய்வங்கள் பால் என்று வழங்கப்பட்டனர். இவர்களுள் பால் மெரோடக் தலைமை தெய்வம். நாளடைவில் இந்தக் குழுக்களில் ஒன்று மற்றவற்றை வென்று, அவற்றைத் தன்னுடன் ஒன்று சேர்த்துவிட்டது. அதன் விளைவாக , வென்ற குழுவின் தெய்வம் எல்லா குழுக்களின் தெய்வங்களுக்கும் தலைமை தெய்வமாகிவிடுவார். இவ்வாறுதான், இன்று தம்பட்டம் அடித்துக் கொள்வதான, செமிட்டிக் இனத்தின் ஒரே கடவுள் கொள்கை உருவாகியது.

யூதர்களின் தெய்வங்கள் மொலாக் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். இவர்களுள் இஸ்ரேல் என்னும் குழுவிற்க்கு சொந்தமானவர் மொலாக்-யஹ்வா அல்லது மொலாக் -யாகவா என்று அழைக்கப்பட்டார். காலப்போக்கில் இஸ்ரேல் குழு அதே இனத்தைச் சேர்ந்த மற்ற குழுக்களை வென்று, அவர்களின் மொலாக்குகளை எல்லாம் அழித்துத் தங்கள் சொந்த மொலாக்தான் மொலாக்குகள் அனைவரிலும் உயர்ந்தவர் என்று அறிவித்தது. இத்தகைய ஒரு மத வெற்றிக்காகச் சிந்தப் பட்ட ரத்த வெள்ளங்களும், நடத்தப்ட்ட கொடுமைகளும் எவ்வளவு என்பது உங்களுள் பலருக்கும் தெரியும்.

மத விஷயங்களில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவதற்க்கு பல்வேறு குழுக்கள் நிகழ்த்திய இத்தகைய போராட்டம் இந்தியா எல்லைகுள்ளும் நடந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இங்கும் ஆரியர்களின் பல்வேறு இனங்களுக்குள் தங்கள் தெய்வங்களின் தலைமைக்காகக் கருத்து வேற்றுமைகள் நிலவியிருக்கலாம். ஆனால் இங்கு நிகழ்ந்தது வேறு. இந்திய வரலாறு யூதர்களின் வரலாற்றிலிருந்து. மற்ற நாடுகள் எதைவிடவும் சகிப்புத் தன்மைக்கும் ஆன்மீகத்திற்க்கும் இருப்பிடமான நாடாக இந்தியா மட்டுமே இருக்க வேண்டியிருக்கிறது. எனவே இனச் சண்டைகள் இங்கு நெடுங்காலம் நீடிக்கவில்லை.

வரலாறு எட்ட முடியாத, பாரம்பரியங்கள் தங்கள் பார்வையைச் செலுத்தத் துணியாத அளவிற்கு மிகத் தொலைவான, அடர்ந்ததான அந்தப் பழங்காலத்தில் இந்தியாவில் தோன்றிய மகத்தான ரிஷிகளுள் ஒருவர்,ஏகம் ஸத் விப்ரா பஹீதா வதந்தி – இருப்பவர் ஒருவரே, ரிஷிகள் அவரைப் பலவாறாக அழைக்கிறார்கள் என்று கூறினார்.

இது இதுவரை கூறப்பட்ட வாக்கியங்களுள் நினைவில் நிறுத்த வேண்டிய வேண்டிய ஒன்றும், இது வரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மகத்தான உண்மைகளுள் மிகச் சிறந்த உண்மையும் ஆகும். இந்துக்களாகிய நமக்கு இந்த உண்மை, தேசிய வாழ்வின் முதுகெலும்பாக அமைந்துள்ளது. ஏகம் ஸத் விப்ரா பஹீதா வதந்தி என்கின்ற இந்த ஒரு கருத்து நமது தேசிய வாழ்வில் எத்தனையோ நூற்றாண்டுகளைக் கடந்து நம்மிடம் வந்துள்ளது; காலந்தோறும் அளவிலும் நிறைவிலும் புதிய வேகம் பெற்று இன்று அது நமது தேசிய வாழ்வில் இரண்டற ஒன்றுபட்டுள்ளது, ரத்தமாகக் கலந்து நம்மில் ஒன்றாகியுள்ளது.

இந்த உண்மை நம் ரத்தகுழாய் தோறும் ஓடிக் கொண்டிருக்கிறது; நம் நாடு மத சகிப்புத்தன்மையின் மகத்தான நிலமாக ஆகிவிட்டது. இங்கே இந்த நாட்டில் மட்டுமே மக்கள் தங்கள் மதத்தையே இகழ வந்த மதங்களுக்கும் கோயில்களும் சர்ச்சுகளும் கட்டித் தருகின்றனர். இந்த மகத்தான ஒரு கருத்தைத்தான் உலகம் நம்மிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

மேலை நாடுகளில் எந்த அளவிற்க்குச் சகிப்பற்ற தன்மை நிலவுகிறது என்பது பற்றி உங்களுக்குப் பெரிதாக எதுவும் தெரியாது. அங்கேயே உயிரைவிட நேருமோ என்றுகூட நான் பலமுறை நினைக்கின்ற அளவிற்கு அங்கே மதச் சகிப்பின்மை தலைவிரித்து ஆடுகிறது. மதத்திற்காக ஒரு மனிதனைக் கொல்வது என்பது அங்கே சர்வ சாதாரணமான ஒன்று. தங்கள் நாகரீகத்தைப்பற்றிப் பெருமையடித்துக் கொள்கின்ற அவர்கள் அதையும் ஒரு நாகரீகமாகச் சொல்லி, இன்று இல்லா விட்டால் நாளைக்குச் செய்யலாம். மேலை நாட்டில், மேலை நாட்டில், நாடு ஏற்றுக் கொண்டுள்ள மதத்திற்க்கு எதிராக யாராவது ஒரு வார்த்தை சொன்னால் போதும், அவன் மிகக் கொடூரமான வகையில் சமுதாயத்தைக் விட்டு விலக்கப்படுவான்.

அவர்கள் நமது ஜாதி முறைகளைப் பற்றிச் சரளமாக அதே வேளையில் நயமாகக் குறை கூறுவார்கள். நீங்கள் மேலைநாடுகளுக்குச் சென்று என்னைப்போல் அங்கே சில ஆண்டுகள் வாழ்ந்து பாருங்கள். மிகப் பெரிய பேராசிரியர்கள் என்று நீங்கள் கேள்விப்படுகின்ற சிலர்கூட மதத்தைப்பற்றித் தாங்கள்கொண்டுள்ள கருத்தில், நூற்றில் ஒரு பங்கைக்கூட வெளியே சொல்வதற்க்கு தைரியமில்லாத வடிக்கட்டின கோழைகளாக இருப்பதைக் காண்பீர்கள்.

இந்தச் சகிப்புத்தன்மை என்றும் மகோன்னதமான கருத்திற்காக உலகம் காத்திருக்கிறது. நாகரீகத்திற்கு அது ஒரு மகத்தான செல்வமாக விளங்கும்; அது மட்டுமல்ல இந்தக் கருத்தைக் ஏற்றுக்கொள்ளாமல் எந்த நாகரீகமும் நீண்ட காலம் வாழ முடியாது.

வெறியும் ரத்த வெள்ளமும் கொடூரமும் நிறுத்தப்பட்டாலன்றி எந்த நாகரீகமும் வளர முடியாது. மனிதர்கள் ஒருவருக்கொருவரை அன்புணர்வுடன் அணுகாதவரை எந்த நாகரீகமும் தலை நிமிரவே முடியாது. மிகவும் தேவையான அந்த அன்புணர்வின் முதல் படி, பிற மதக் கருத்துக்களை அன்போடும் கனிவோடும் பார்ப்பதாகும் .அன்புணர்வுடன் இருந்தால் மட்டுமே போதாது, நமது மதக் கொள்கை களும் நம்பிக்கைளும் எவ்வளவுதான் வேறுபட்டதாக இருந்தாலும், அந்த மதங்களுக்கு ஊக்கத்துடன் உதவவும் வேண்டும்.

சற்றுமுன் நான் கூறியது போல் இந்தியாவில் அதையே இப்போது செய்து கொண்டிருக்கிறோம். இங்கே இந்தியாவில் தான் இந்துக்கள் கிறிஸ்தவர்களுக்கு சர்ச்சுகளும், முகமதியர்களுக்கு மசூதியும் கட்டித் தந்தனர்; இன்றும் கட்டித் தருகின்றனர். அது தான் செய்யப்பட்ட வேண்டிய, கொடூரங்கள் அவர்களின் கொடுமைகள் ஆதிக்க வெறி இவற்றிற்கு இடையிலும் நம்மைப்பற்றிப்பேசும் இழிவான பேச்சுக்களுக்கு இடையிலும், நாம் அவர்களை அன்பினால் வெற்றி கொள்ளும்வரை நிச்சயும் கிறிஸ்தவர்களுக்கு சர்ச்சுகளையும் முகமதியர்களுக்கு மசூதிகளையும் கட்டிக் கொடுப்போம்; கொடுத்துக்கொண்டே இருப்போம்.

அன்பு மட்டுமே நிலைக்கக்கூடிய ஒன்று வெறுப்பு அல்ல; மென்மைதான் நெடுங்காலம் வாழ்வதற்குரிய வலிமையையும் பலனையும் தரவல்லது அன்றி வெறும் காட்டுமிராண்டித்தனமோ உடம்பின் வலிமையோ அல்ல என்பதை உலகத்திற்கு நிரூபிக்கும் வரை நாம் இவ்வாறு செய்துகொண்டே இருக்க வேண்டும்.

நம்மிடமிருந்து இன்றைக்கு உலகம் பெற விரும்புகின்ற மற்றொரு மகத்தான கருத்து , உலகம் முழுமையின் ஆன்மீக ஒருமை ஐரோப்பாவின் சிந்தனையாளர்களுக்கு, இல்லை, இந்த உலகம் முழுவதற்க்கும் – உயர்ந்தோரைவிடப் பாமரருக்கு, படித்தவர்களைவிடப் படிக்காதவர்களுக்கு, பலசாலிகளை விடப் பலவீனருக்கு- தேவையானது இந்தக் கருத்தே.

மேலை நாட்டின் தற்கால ஆராய்ச்சிகள்,தூல உப கரணங்கள் மூலமே பிரபஞ்சத்தின் ஒருமைப்பாட்டையும் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள எல்லாமே ஒன்றையொன்று சார்ந்திருப்பதையும் நிரூபித்துள்ளது. ஜடப் பொருட் கடலில் சின்னஞ்சிறு அலைகளாகவோ அலைத் தொகுதிகளாகவோ இருக்கிறோம்; அது போலவே உடம்பும் மனமும் ஜடப்பொருளாகிய கடலில் சின்னஞ்சிறு அலைகளே, அதாவது பெயர் வேறுபாடே என்பதை நெடுங்காலத்திற்கு முன்பே இந்திய மன இயல் காட்டியுள்ளது. வேதாந்தம் இதற்கும் ஒரு படி மேலாகச் சென்று, இந்த பிரபஞ்சத்தின் ஒருமைப் பாட்டுக் கருத்தின் பின்னணியில் மகத்தான, ஒன்றேயான உண்மை ஆன்மா இருக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறது. இவற்றை யெல்லாம் சென்னைப் பல்கலைக் கழகப் பட்டதாரிகளாகிய உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை பிரபஞ்சம் முழுவதிலும் ஒரே ஓர் ஆன்மாதான் உள்ளது. இருப்பவை எல்லாம் ஒன்றே.

பிரபஞ்சம் முழுமையின் இந்த அடிப்படை ஒருமைப்பாட்டுக் கருத்து இந்த நாட்டில் கூடப் பலரைப் பயமுறுத்தி இருக்கிறது. இன்றும் சில நேரங்களில் அந்தக் கருத்தை ஆதரிப்பவர்களைவிட எதிர்ப்பவர்களே அதிகம் உள்ளனர் என்றாலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; புத்துயிர் அளிக்கின்ற இந்த ஒரு மகத்தான கருத்தைதான் இன்றைக்கு உலகம் நம்மிடம் வேண்டி நிற்கிறது.

தங்கள் உரிமைக்காக குரல் எழுப்ப முடியாத பாமர மக்களின் விடிவிற்கு இந்தக் கருத்து தான் தேவை. அனைத்தின் இந்த ஒருமைப்பாட்டுக் கருத்தை நடைமுறையிலும் அன்றாட வாழ்க்கையிலும் செயல்படுத்தாமல் யாராலும் நமது நாட்டில் முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியாது.

–தொடரும்—-



நன்றி சுவாமி வித்யானந்தர்.  http://www.hindumatham.in
(எழுந்திரு விழித்திரு பகுதி – 5 பக்கம் – 82)