ஹிந்து சாம்ராஜ்ய தினம், ஜூன் 4, 2020

ஹிந்து சாம்ராஜ்ய தினம்

“நமது இதிகாசங்களில் போற்றப்படும் ஒரு லட்சிய அரசனின் வடிவமானவர் சத்ரபதி சிவாஜி. தேசத்தின் உண்மையான உள்ளுணர்வைப் பிரதிபலித்த பாரதத்தாயின் தலைமகன். வருங்கால பாரதம் ஒரே குடையின் கீழ் வலுப்பெறப் போவதை நிதர்சனமாய் காட்டியவர் அவர். சிவாஜியை விட சிறந்த ஒரு நாயகனை. ஒரு புனிதனை, ஒரு பக்தனை, ஒரு மன்னனை உங்களால் காண முடியுமா?” – இவை இந்த தேசத்துக்கு அடையாளம் கூறிய சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகள்.

Chattarapati Shivaji Maharaj Coronation Painting - Art Prints by ...

நமது தேசத்தின் வரலாற்றை எழுதிய ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும், மெக்காலே புத்திரர்களும், ஒரு முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துவிட்டார்கள். முகலாயர்கள்தான் ஆங்கிலேயருக்கு முன்னால் இந்த தேசத்தை ஆண்ட பரம்பரை என்றார்கள் அவர்கள். இது ஒரு வரலாற்றுப் புரட்டு. இந்த விஷயத்தில், கிழக்கிந்திய கம்பெனியின் படைவீரனாய் வந்து, மராட்டியருக்கு எதிராக பல போர்களில் கலந்து கொண்டு, பின்னர் வரலாற்று ஆராய்ச்சியாளனாய் மாறிய ஜேம்ஸ் க்ராண்ட் டஃப், பின் வருமாறு கூறுகிறார். “முகமதியர்களின் சிம்மாசனத்தை முழுமையாக சிதறடித்துவிட்ட சுதேச ஆட்சியாளர்கள்தான், ஆங்கிலேயருக்கு முன் இந்த தேசத்தை ஆண்டவர்கள். சிவாஜிக்குப் பின்னர் படிப்படியாக வளர்ந்த ஹிந்து சக்தி, வங்காளம் மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதியைத் தவிர முழு தேசத்தையும் மீட்டுவிட்டது. அந்த சுதேச ஹிந்து சக்தியிடமிருந்துதான் ஆங்கிலேயர்களாகிய நாம் ஆட்சியைக் கைப்பற்றினோம்” என்று மராட்டியரின் வரலாறு என்ற தனது நூலில், கராண்ட் டஃப் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

முகமது நபியின் மறைவுக்குப் பின், பொது ஆண்டு 636-ல் காபூலில், அரேபியர்களால் ஆரம்பிக்கப்பட்ட மத வெறிப் போரானது. அதன் பின் துருக்கியர். ஆப்கானியர், முகலாயர் என நீண்டது. அவர்களை எதிர்த்த நமது மண்ணின் மாவீரர்களின் சாகசக் காவியத்தின் நிறைவு அத்தியாயமானது. சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டும் வைபவத்தால் எழுதப்பட்டது. அன்று 1674 ஜயேஷ்ட சுகல த்ரயோதசி அதாவது ஜூன் 6. மத்திய கிழக்கு ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் உள்ள இன்றைய அனைத்து இஸ்லாமிய நாடுகளும் 20-30 ஆண்டுகளுக்கு மேல் ஆக்கிரமிப்பைத் தாக்குபிடிக்க முடியாமல், இஸ்லாத்துக்கு மாற்றப் பட்டுவிட்டன. 1038 ஆண்டுகள் ஹிந்துக்கள் நிகழ்த்திய போராட்டமானது உலக அதிசயமாகப் போற்றப்பட வேண்டிய ஒன்று.

ஒவ்வொரு அங்குல மண்ணுக்காகவும், ஒவ்வொரு ஹிந்து மகளிரின் கற்புக்காகவும், ஒவ்வொரு ஹிந்துக் குழந்தையின் எதிர் காலத்துக்காகவும், பாரதத்தின் ஒவ்வொரு மூலையிலும் நடந்த நீண்ட நெடிய போராட்டம் அது. எதிரிகள் கொள்ளையடித்துச் சென்ற செல்வம் கணக்கில் அடங்காது. கோவில்கள் தகர்க்கப் பட்டன. படுகொலைகளும் சூறையாடலும் எல்லை மீறின. ஆட்சியைக் கைப்பற்றிய அவர்கள் நம் சொந்த மக்களையே மதம் மாற்றி அன்னியர்களாக ஆக்கிவிட்டனர். மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற சாதுக்களும் முயற்சிகளை மேற்கொண்டனர். அந்த வரலாற்றில் பலவிதமான பரிசோதனைகள் நடந்தன. பல அரசர்களும் பல விதமாக , வீரத்துடன் போரிட்டனர். இறுதியில் சத்ரபதி சிவாஜி கையாண்ட வழிமுறைகள் தான் வெற்றிக்கு வித்திட்டன. வெற்றியைக் கண்ட பின்னரே ஹிந்து சமுதாயத்துக்கு நம்பிக்கை பிறந்தது. எனவே சத்ரபதி சிவாஜி முடிசூடிய நாளை நாம் ‘ஹிந்து சாமராஜ்ய’ தினமாகக் கொண்டாடுகிறோம்.

RASTRAMATA RAJMATA JIJABAI - MOTHER OF SHIVAJI & daughter of Yadav ...
Shivaji and Mother

அந்த வீரக்காவியத்தில் பொன்னெழுத்துக்களால் பதிந்துவிட்டவர். வீர மங்கை சிவாஜியின் தாயார் ஜீஜாபாய். வடக்கே முகலாயரும் தெற்கே பீஜப்பூர் சுல்தானியரும் கழுத்தை நெறிக்க, வீரமிகு மராட்டியரும், கேவலம் வயிற்றுப் பாட்டிற்காக அன்னியரிடம் சேவகம் செய்தனர். சிவாஜியின் தந்தை ஷாஹாஜியின் நிலைமையும் அதுதான். சுல்தானியரின் அக்கிரமங்கள் எல்லை மீறின. ஜீஜாபாய் கர்ப்பிணியாக இருந்த சமயத்தில், அவளது தந்தை லக்குஜி ஜாதவும், மூன்று சகோதரர்களும் அகமதுநகரின் நிஜாம்ஷா-வினால் துரோகத்தால் வஞ்சகமாகக் கொல்லப்பட்டனர்.

ஷாஹாஜியின் ஜாஹீராக இருந்த பூனே. ஆதில்ஷாவின் கட்டளைப்படி சூறையாடப்பட்டு, அழிக்கப்பட்டு மயானம் போலானது. இதயத்தைப் பிழிந்த சோகத்திலும் , வீர மங்கை இஜாபாய் உள்ளத்தில் சுயராஜ்ய கனல் மூண்டெழுந்தது. ஆக்கிரமிப்பாளர்களை அழித்தொழிக்கத் தனக்கு ஸ்ரீராமனைப் போன்ற மகனோ அல்லது துர்க்கையைப் போன்ற மகளோ பிறக்க வேண்டும் என அன்னை பவானியை ஆத்ம சுத்தியுடன் தினமும் அவள் பூஜித்தாள். காப்ப காலத்தில் ஜீஜாபாயின் ஆசை என்னவாக இருந்தது தெரியுமா? புலியின் மீது ஏறியமர்ந்து வாளை சுழற்றியபடி எதிரிகளை வெட்டி வீழ்த்த வேண்டும். தர்மப் போர் நடத்தி ராமராஜ்யத்தை மலரச் செய்ய வேண்டும் என்பதுதான். 1630ம் ஆண்டு வைசாக மாத சுகலபட்ச த்ருதியை திதி அன்று சிவாஜியை பூனாவின் சிவனேரிக் கோட்டையில் ஜீஜா மாதா பெற்றெடுத்தாள். அன்னையிடமிருந்து ராமாயண மகாபாரதக் கதைகளைக் கேட்டு வளர்ந்தான் சிறுவன் சிவாஜி. அந்த சிறுவனுக்குள் தேசத்தையும் தர்மத்தையும் காக்கக்கூடிய ஒரு மன்னனுக்குத் தேவையான லட்சிய விதைகளை ஜீஜா மாதா விதைத்துவிட்டாள். அவள் தாய் மட்டுமல்ல, தர்மத்தைக் காக்க வந்த அதி தேவதை.

சிவாஜிக்கு பத்து வயதான போது சிறுவன் சிவாஜியையும் உடனழைத்துக் கொண்டு ஷாஹாஜி பீஜப்பூர் சுல்தானின் அரசவைக்கு சென்றார். அரசவை வழக்கப்படி தலையைத் தரையில் பதித்து சுல்தானை வணங்க வேண்டும். ஷாஹாஜி அதே முறையில் வணங்கினார். கொடூரமான இந்த முறையை வெறுத்த சிவாஜி, மராட்டிய முறையில் மரியாதை செலுத்தினான். ஆனால் சுல்தான் இதை அவமானமாகக் கருதி கோபம் கொண்டான். சிறுவன் சிவாஜி, கிராமத்தில் வளர்ந்ததால் இந்த அரச வழக்கங்கள் அவனுக்குத் தெரியாது என்று சமாதானம் கூறி மன்னிப்பு கேட்டு அழைத்து வந்துவிட்டார் ஷாஹாஜி . சிவாஜியின் மனதில் அன்னியரின் அடிமை ஆட்சியின் மீதுள்ள வெறுப்பை ஷாஹாஜி அறியாதவரல்ல.

ஷாஹாஜிக்கும். தனது மகன் சிவாஜி, ஒரு சுதந்திரமான ஆட்சியாளனாக ஆக வேண்டும் என விருப்பம் இருந்தாலும், அந்த விஷயத்தில் தன் மகனை ஆதரிக்கும் சூழ்நிலையில் அவர் இல்லை. அவர் சேவகம் செய்வதோ சுல்தானியரிடத்தில் மைந்தனின் உள்ளக் கிடக்கை நனவாவதற்குத் தன் பரிபூரண ஆசிகளை மட்டுமே அவரால் அளிக்க முடிந்தது. தந்தையும், தனது கொள்கையை மனப்பூர்வமாக ஆதரிப்பதை உணர்ந்து கொண்டார் சிவாஜி. அவர் தந்தையுடன் தங்கியிருந்தால் ஒருவேளை சுயராஜ்யம் சாத்தியமாகாமல் போயிருக்கலாம். ஜீஜா மாதாவுடன் பூனா திரும்பிய சிவாஜி . சுதந்திரமான ஒரு ஹிந்து ராஜ்யத்துக்கான முயற்சிகளில் இறங்கினார்.

தனது 14வது வயதில் நண்பர்களுடன், சஹயாத்ரி மலையில் , ரோஹிரேஷ்வர் கோவிலில், தனது கை கட்டை விரலைக் கீறி, சிவலிங்கத்துக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்து ஹிந்தவி ஸ்வராஜ்யம்’ அமைப்பதற்கான சபதம் ஏற்றுக் கொண்டார். தாதாஜி நரச பிரபு தேஷ்பாண்டே – வுக்கு, தனது 15வது வயதில் எழுதிய கடிதத்தில் ‘ஹிந்தவி ஸ்வராஜ்யம்’ என்ற சொல்லைக் குறிப்பிடுகிறார் சிவாஜி. அந்தக் கடிதத்தில் “பகவான் ரோஹிரேஷ்வர்தான் நமக்கு வெற்றியைக் கொடுத்துள்ளார். ஹிந்தவி ஸ்வராஜ்யம்’ பற்றிய நமது வேட்கையை அவர் நிறைவேற்றுவார். ஸ்வராஜ்யம் அமைவது என்பது தெய்வசங்கல்பம்” என்று எழுதியுள்ளார் சிவாஜி.

Torna Fort (तोरणा किल्ला) | Historical Places of ...

தனது 16வது வயதில் தோரணா கோட்டையைத் தன் சிறு படையைக் கொண்டு கைப்பற்றினார் சிவாஜி. கோட்டைகள்தான் சாம்ராஜ்யத்தின் எல்லைகளைத் தீர்மானித்தன. அவர் நிகழ்த்திய பல்வேறு போர்கள் எதிலும் அவர் தோல்வியுறவே இல்லை . காரணம் எதிரிகளை சரியாகப் புரிந்து கொள்ளுதல், புதுப்புது யுக்திகளைக் கையாளுதல், தனது கடைசி வீரன் வரை மட்டுமல்ல. பொதுமக்கள் வரை சுயராஜ்ய லட்சிய உணர்வை ஏற்படுத்தியமை, தனிப்பட்ட ஒழுக்கம் எனக் கூறிக்கொண்டே செல்லலாம். அப்ஸல்கான் வதம், செயிஸ்டகானின் மீது அதிரடித் தாக்குதல் என்பதிலிருந்து. வலிமை வாய்ந்த முகலாயரின் ஆகரா கோட்டையிலிருந்து சாமர்த்தியமாகப் பழக்கூடையில் தப்பியது வரை, ஒவ்வொன்றுமே வியக்க வைக்கும் சாகசங்கள். இறுதியில் 1674ல் சிவாஜி, சத்ரபதியாக முடிசூட்டிக் கொண்டபோது, முகலாய ஒளரங்கசீப் அதை அங்கீகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை . அஷ்டப்ரதான் என்னும் மந்திரி சபையுடன் சிவாஜி நடத்திய ஆட்சியும் சிறப்பானதே ஐரோப்பியரையும் அதிர வைத்த கடற்படையும் அவரிடம் இருந்தது.

“சிந்து முதல் காவேரிக்கு அப்பால் வரை பரந்து விரிந்துள்ள நமது புண்ணிய பூமியிலிருந்து, ஒரு ஆக்கிரமிப்பாளனை கூட விட்டு வைக்காமல் விரட்டி அடித்து நாட்டின் அத்தனை கோவில்களும், புண்ணிய இடங்களும் மீண்டும் எழுப்பப் பட்டு, புனர் நிர்மாணம் செய்வதே எனது குறிக்கோள்” என்று சிவாஜி பிரகடனம் செய்தார். பஞ்சாபில் சீக்கியர்களும், ராஜஸ்தானில் ராஜபுத்திரர்களும் ஒருங்கிணைந்து பலம் பெற்று விட்டார்கள். புந்தேள்கண்டின் சத்ரஸாலும் சிவாஜியால் ஊக்கம் பெற்று சுதந்திர அரசு நிறுவினார். அஸ்ஸாமின் சகரத்வஜசிங்கும், ருத்ரசிங்கும் அன்னியரை கால்பதிக்க விடமாட்டோம் என உறுதிபூண்டு வெற்றியும் பெற்றனர். அனைவருக்கும் சிவாஜியின் வெற்றி, உந்து சக்தியாக அமைந்தது.

1680ல் சத்ரபதி சிவாஜி உடல் நலக் குறைபாட்டால் காலமானார். அவர் தனது இறுதி காலம் வரை, அன்றைய சூழ்நிலையில், அசுர பலம் வாய்ந்த ஔரங்கசீப்பின் முகலாய சாம்ராஜ்யத்துடன் தொடர்ந்து மோத வேண்டியிருந்தது. மராட்டியரை அடக்குவதற்காகவே தலைநகரைத் தக்காணத்துக்கு மாற்றி, சிவாஜியின் மறைவுக்குப் பினனரும் 27 ஆண்டுகள் போராட்டத்தில் முகலாயருக்கு ஏராளமனன உயிரிழப்புடன் கஜானா கரைந்ததுதான் மிச்சம், சத்ரபதி சிவாஜிக்குப் பின்னர் சம்பாஜி. ராஜாராம், ஷாஹுஜி சத்ரபதிகளாகவும், அதன் பின்னர் பேஷ்வாக்கள் என்ற மந்திரிகள் காலத்திலும் சுயராஜ்யக் கனல் கனன்று எழுந்து முழு பாரதத்தையும் கிட்டத்தட்ட தழுவிக் கொண்டது. முகலாயர் ராஜ்யமோ பலவீனமாகிப் போனது.

Third Battle of Panipat (1761) (Afghan - Maratha War Part-5) - YouTube
Third Battle of Panipat (1761) (Afghan – Maratha War )

1761ல் நடந்த மூன்றாம் பானிப்பட்டு யுத்தத்தில் ஆப்கானிய ஆக்கிரமிப்பாளனான அகமதுஷா அப்தாலி தலைமையில் அணிவகுத்த இஸ்லாமியர்களை எதிர்த்து நடந்த கடுமையான யுத்தத்தில், துரதிர்ஷ்ட வசத்தால் ஹிந்துக்கள் தோற்றாலும், அதன் பின்னரும், மராட்டிய சுயராஜ்ய கூட்டமைப்பு, ஆங்கிலேயருடன் மூன்று போர்களை நடத்தி, 1818ல் தான் முழுவதும் ஆங்கிலேயர் வசமானது. மூன்றாம் பானிப்பட் போரில் ஹிந்துக்கள் வெற்றி பெற்றிருந்திருந்தால். ஆங்கிலேயரையும் தோற்கடித்துத் துரத்தியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். வரலாறும் வேறு விதமாக எழுதப்பட்டிருக்கும்.

1875ல் ராமோஷி மற்றும் பில் இன மக்களிடையே வீரர்களைத் திரட்டி வெள்ளையர்களை நடுங்க வைத்தவர் வாசுதேவ் பல்வந்த் ஃபட்கே. ஃபட்கே தனது தலைக்கு விலை அறிவித்த வெள்ளை அதிகாரிகளின் தலைக்கே பதிலுக்கு விலை அறிவித்து, அவர்களை சுட்டு வீழ்த்தினார். கொரில்லா போர்முறையைக் கையாண்ட அவர். இளைஞர்களிடம் ராணா ப்ரதாப சிம்மனையும், சத்ரபதி சிவாஜியையும் முன்னுதாரணமாகக் கொள்ளுமாறு அறைகூவல் விடுத்தார். மகாராஷ்ட்ராவின் பூனே அருகில் உள்ள ஏழு மாவட்டங்களில் சிறிது காலம் பிரிட்டிஷ் ஆட்சியில்லை கிட்டத்தட்ட ஃபட்கேவின் ஆட்சிதான் நடந்தது. வாசுதேவ் பல்வந்த் ஃபட்கேவை மக்கள் இரண்டாம் சிவாஜி என்றே அழைத்தனர்.

Bal Gangadhar Tilak, Indian Freedom Fighter

இந்திய அமைதியின்மையின் தந்தை என பிரிட்டிஷாரால் அழைக்கப்பட்ட பாலகங்காதர திலகர் . “சுயராஜ்யம் எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்” என முழங்கினார். 1895ல் ஒரு குழுவை அமைத்து, சத்ரபதி சிவாஜியின் ஜெயந்தியைக் கொண்டாடத் துவங்கினார். சத்ரபதி சிவாஜியிடமிருந்து உத்வேகம் பெறுவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் சிம்மகட் கோட்டைக்கு வந்து சிறிது நேரம் தங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் திலகர் . “ஒரு தேசம் என்கிற முறையில், நமது உள்ளுணர்வை உயிரூட்டி வளர்க்கக் கூடிய ஊற்று ஹிந்துத்வமாகத்தான் இருக்க வேண்டும்” என திலகர் அறிவித்துள்ளார்.

ஆகவே 19ம் நூற்றாண்டிலிருந்து 20ம் நூற்றாண்டு துவக்கம் வரை, ஆங்கிலேயரை எதிர்த்த போராட்டத்தில், தேசிய எழுச்சிக்கு உணர்வூட்டியது சத்ரபதி சிவாஜியின் ஆற்றல் மிகு போராட்டங்களும், சுயராஜ்ய உணர்வுமேயாகும். அதன் பின்னரும் தொடர்ந்து சத்ரபதி சிவாஜியின் ராஜதந்திர வழி முறைகளைக் கையாண்டிருந்தால் வெற்றியும் பெற்றிருப்போம்; பாகிஸ்தான் என்றொரு நாடும் உருவாகியிருக்காது.

சத்ரபதி சிவாஜி ஒரு பேரரசராக இருந்தாலும் எந்த தவறான பழக்கங்களும் இல்லாதவராக இருந்தார். முகலாயரை எதிர்த்து போரிட்டாலும், அவர்களைப் போலல்லாமல், போர்களில் பெண்களைக் கைது செய்வதற்குத் தடை விதித்திருந்தார். பெண்கள் பாதுகாப்புடன் வாழ்ந்தனர். அதிகாரிகள், தளபதிகள் மற்றும் வீரர்கள், பெண்கள் விஷயத்தில் கட்டுக் கோப்பாக இருக்கப் பணிக்கப் பட்டனர். ஆன்மிகச் சிந்தனைகளில் ஈடுபட்ட சிவாஜி, ஒரு ராஜ ரிஷியாகவே வாழ்ந்தார். சத்ரபதி சிவாஜியின் ‘ஹிந்தவி ஸ்வராஜ்யத்தில் ‘ ஜாதி பேதமில்லை . அவருடைய படையில் அனைத்து சமூகத்தினரும் போர் புரிந்தனர். மத பேதமில்லை. முஸ்லீம்களும் சம உரிமையுடன் பாதுகாப்புடன் வாழ்ந்தனர். சங்கத்தில் ஹிந்து ராஷ்டரம்’ என்ற கண்ணோட்டத்தின்படி, நமது தேசத்தின் 130 கோடி ஜனங்களும் ஹிந்துக்களே. ஹிந்து பண்பாடும், ஹிந்து பாரம்பரியமும், ஹிந்து தேசியமும் நம்மை இணைக்கின்றன. வழிபாட்டை மாற்றிவிட்டால் தேசியம் மாறிவிடாது.

ஹிந்தவி ஸ்வராஜ்’ என்ற உன்னத லட்சியத்தை. சாதாரண ஜனங்களின் மனதிலும் ஏற்படுத்தி, அவர்களை மாவீரர்களாக்கி மகத்தான சாதனைகளைப் படைத்ததே சத்ரபதி சிவாஜியின் வெற்றியின் ரகசியமாகும். ஒவ்வொரு ஹிந்துவின் உள்ளத்திலும், ஹிந்து பாரம்பரியத்தின் பெருமிதத்தை உருவாக்கி, நமது ஹிந்து ராஷ்ட்ரத்தின் பரம வைபவம்’ என்னும் மகோன்னத லட்சியத்தை ஏற்படுத்தி, தேசத்துக்காக மகிழ்ச்சியோடு பணிபுரியச் செய்ய, பரம பூஜனிய டாக்டர்ஜி, சங்கத்தை ஆரம்பித்தார். தொற்று நோய் பரவி, தேசமே துவண்டு போய் கிடக்கும் தருணத்திலும், போர் வீரனின் துணிச்சலுடன் நமது ஸ்வயம் சேவகர்கள் மக்களுக்குத் தொண்டாற்றி வருவதைப் பார்க்கிறோம். மக்கள் தொண்டில் மகேசனைக் காண்பவர்கள் நாம். அன்றாட சந்திப்பு என்னும் அற்புதமான வேலை முறையைக் கொண்டுள்ள நாம் , இந்த ஊரடங்கு கால கட்டத்தில் மனதால் இணைந்துள்ளோம். தொழில் நுட்பத்தையும் இந்தப் பணியில் திறம்பட ஈடுபடுத்தியுள்ளோம்.

நமது பகுதியின் ஒவ்வொரு பஸ்தியிலும், ஒவ்வொரு மண்டலிலும் உள்ள, ஒவ்வொரு ஹிந்துவின் உள்ளத்திலும், நம்பிக்கை ஒளி ஏற்ற வேண்டும். நெருக்கடியான இந்த நேரத்திலும், நெருக்கடி அகன்ற பின்னும் கீழ்க்கண்ட நான்கு விஷயங்களுக்கு நாம் கவனம் கொடுக்க வேண்டும்.

1. பாதுகாப்பு நெறி முறைகளைக் கடைபிடிக்க வேண்டும். சமூக இடைவெளி, முகக்கவசம், கை கழுவுதல் இவற்றுடன் முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் போன்றவையும் அவசியம்.

2. பண்புகளைப் பயிற்றுவிக்கும் பல்கலை சாலையாகக் குடும்பங்கள் ஆகவேண்டும்.

3. சுற்றுச் சூழலை சுகாதாரமாகப் பராமரித்தல் அவசியம். ஊரடங்கு காலத்தில் இயற்கை தன்னை சுத்தப் படுத்திக் கொண்டது. அதை மீண்டும் கெடாமல் காக்க வேண்டும்.

4. தேசத்தின் பொருளாதாரத்தைக் காப்பதற்காக நாம் அனைவரும் சுதேசித் தயாரிப்புகளைப் பயன்படுத்துதல், தரமான உள்நாட்டுத் தயாரிப்புகளை அதிகரித்தல் அவசியம்.

நமது பாரம்பரிய வாழ்க்கை முறையின் பெருமையையும், உலகத்தையே ஒரு குடும்பமாகப் பார்க்கும் ஹிந்துப் பண்பாட்டின் மேன்மையையும், இன்று உலகமே பார்த்து தலை வணங்குகிறது. வெறுப்பும், பொறாமையும் அதே நேரத்தில் மரண பயமும் உலக நாடுகளின் மனங்களை ஆட்டிப் படைக்கும் இத்தருணத்தில், அன்பெனும் அமுதத்தை அள்ளி வழங்கக் காத்திருக்கிறாள் பாரத அன்னை . துஷ்டர்களுக்கு அவள் துர்கை, வறியவருக்கு அவள் அன்னபூரணி. பண்டைய காலம் தொட்டு வந்த வரலாறே அதற்கு சாட்சி. இனி வரும் காலத்தில் பாரதம் உலகை வழி நடத்தும்.

பாரத் மாதா கி ஜய்.

போலி மதச்சார்பின்மைவாதிகளுக்கு 125 கேள்விகள் – 2

போலிமதச்சார்பின்மைவாதிகளுக்கு 125 கேள்விகள்

  • ஒரு கிரஹாம் ஸ்டேய்ன்ஸ் கொல்லப்பட்ட போது ஆங்கிலப் பத்திரிகைகள் அதைக் கண்டிக்க ஓடோடி வந்தன. ஆனால் 30 பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 58 இந்துக்கள் கோத்ரா ரயில் நிலையத்தில் உயிருடன் எரிக்கப்பட்ட போது மீடியாக்கள் வாய்மூடி ஊமையாக இருந்தது மட்டுமல்ல, மேலும் இறந்தவர்களையே வில்லன்களாகவும் சித்தரித்தனர். இது தான் பொறுப்புள்ள பத்திரிகை தர்மமா?
  • ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஒரு கிறிஸ்தவப் பெண்ணை மணம் முடித்தவர், தனது மகன் ஓமர் அப்துல்லா ஓர் இந்துப் பெண்ணை மணமுடித்தபோது சந்தோஷப்பட்டவர். ஆனால் தனது மகள் ஓர் இந்துப் பையனை மணந்த போது அவளை ஒதுக்கி வைத்துவிட்டார். இவர்தான் மதச்சார்பின்மையின் அவதாரப்புருஷரா?
  • இஸ்லாமுக்கும், மதச்சார்பின்மை ஜனநாயகத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென்றால், இந்துக்கள் மட்டும் ஏன் இந்தக் கூத்தைப் பார்க்கும்படி வற்புறுத்தப்படுகிறார்கள்?
  • சட்டப்படி மனித உறுப்புகள் அரசியல் கட்சிகளின் தேர்தல் சின்னமாக இருக்கக்கூடாது. பிறகு எப்படி ‘கை’ சின்னம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது? இது சட்டவிரோதமில்லையா?
  • டில்லி இமாம் சையத் புகாரி, தாலிபான் தான் அனைத்து முஸ்லிம்களின் லட்சிய இயக்கம் என்றும், ஒசாமா பின்லாடன் தான் தங்களின் அவதார புருஷன் என்றும் அறிவித்தார். இவரை மதச்சார்பின்மையின் உருவமாகக் கருதுகிறீர்களா?
  •  முஸ்லிம்கள் பொது சிவில் சட்டத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், கைக்குக் கை, காலுக்குக் கால், கண்ணுக்குக் கண் என்ற குரான் (ஷரியத் )கூறும் கிரிமினல் சட்டத்தையும் தங்களுக்கு அளிக்க வற்புறுத்துவார்களா?
  • ஜம்மு-காஷ்மீரில் இரண்டு லட்சம் இந்துப் பெரியவர்களுக்குப் பாராளுமன்றத் தேர்தலில் ஓட்டுரிமை உள்ளது. ஆனால் அவர்களுக்குச் சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுரிமை இல்லையே அது ஏன்?
  • ஜம்மு-காஷ்மீர் சட்டசபையின் பதவிக்காலம் ஐந்தாண்டுகளாக இல்லாமல் ஆறாண்டுகளாக இருப்பது ஏன்?
  • சத்ரபதி சிவாஜியைக் கொல்வதற்குச் சதித்திட்டம் தீட்டிய அப்சல்கானுக்கு பிரதாப் நகரில் (மகாராஷ்டிரா) நினைவுச் சின்னம் அமைப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
  • அயோத்தியாவின் மீது படையெடுத்து, அதனைக் கொள்ளையடித்த பாபருக்கு மசூதி கட்டுவதை ஆதரிக்கிறீர்களா?
  • பிப்ரவரி 14ம் தேதியை காதலர் தினமாகக் கொண்டாடுவது, நமது கலாச்சாரத்திற்கு ஒத்துவரும் என்று நினைக்கிறீர்களா?
  • நேருவுக்குக் குழந்தைகளைப் பிடிப்பதில் அப்படியென்ன விசேஷம் உள்ளது. நம் அனைவருக்குமே குழந்தைகளைப் பிடிக்கும், அவரது பிறந்தநாளை, குழந்தைகள் தினமாகக் கொண்டாடுவது முட்டாள் தனம் இல்லையா? தனது சகாக்களுடன் சேர்ந்து குழந்தைத்தனமான சேஷ்டைகளையும் செய்து அனைவரின் மனம் கவர்ந்த கண்ணனின் பிறந்த நாளான கிருஷ்ண ஜெயந்தியை அல்லவா நாம் குழந்தைகள் தினமாகக் கொண்டாட வேண்டும்?
  • இந்துப் பெண்கள் பங்களாதேஷில் பலாத்காரப்படுத்தப்படுகிறார்கள்; மொத்தமாக கற்பழிக்கப்படுகிறார்கள்; ஒவ்வொரு நாளும் கோயில்கள் எரித்துச் சிதைக்கப்படுகின்றன. ஏன் இங்குள்ள எந்த மதச்சார்பின்மை வாதியும், மனித உரிமைவாதியும் அங்குள்ள இந்துக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதில்லை? முஸ்லிம்களுக்கு மட்டும் தான் மனித உரிமைகளா?
  • இஸ்லாத்திற்குத் தேசியமோ, தேச எல்லைகளோ கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா? உலகம் முழுவதையும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதுதான் அதன் குறிக்கோள்!
  • 65 வயது முஸ்லிம் ஒருவர் தான் முதன் முதலாக விவகாரத்து செய்த பெண்ணை (54 வது) முறையாக மணந்து கொண்டுள்ளார். அவர் விவகாரத்து செய்த மற்ற 53 பெண்களின் கதி என்ன? அது எப்படிப்பட்ட சமுதாயமாக இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா? அப்படிப்பட்ட நிலை இந்திய சமுதாயத்திற்கு வரலாமா?
  • முஸ்லிம்கள் ஏன் பள்ளிகளும், கல்லூரிகளும் கட்டாமல் மசூதிகளையும், மதரஸாக்களையும் கட்டுகிறார்கள்? மதரஸாக்களில் என்ன விஞ்ஞானி களையும், பொறியாளர்களையுமா உருவாக்குகிறார்கள்?
  •  இந்துக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் மொஹரம் ஊர்வலங்கள் நடைபெறுகின்றன (உ-ம் சென்னை திருவல்லிக்கேணி, மைலாப்பூர் ) ஆனால் அதே திருவல்லிக்கேணியின் மையப்பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லையே ஏன்? இது மதப்பிரிவினையை வளர்க்காதா?
  • ஒரு மாவட்ட கலெக்டரோ/காவல்துறை அதிகாரியோ இந்து ஊர்வலங் களை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் அனுமதிக்காமல் அந்தப் பகுதியை நமது நாட்டிலிருந்து அன்னியப்படுத்துவது முறையா? அவர்கள் அரசியல் சட்டத்தை மீறவில்லையா? அது மதப்பிரிவினையை ஊக்குவிக்கும் செயல் இல்லையா?
  • ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், அருணாசலப்பிரதேசம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து ஆகிய ஆறு மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருந்தும், அவர்களுக்குச் சிறுபான்மையினருக்கான சலுகைகள் இல்லை. ஆனால் அங்கே பெரும்பான்மையாக இருப்பவர்கள் தொடர்ந்து சிறுபான்மையினருக்கான சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். இது கேலிக்குரியதில்லையா?
  • முஸ்லிம்களுக்கு இந்தியாவில் வழங்கப்படுகின்ற சலுகைகள் எந்த இஸ்லாமிய நாட்டில் இந்துக்களுக்கு வழங்கப்படுகின்றன? அதே போல, இங்கு கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படுகின்ற சிறப்புச் சலுகைகள் எந்தக் கிறிஸ்தவ நாட்டில் இந்துக்களுக்குக் கொடுக்கப்படுகின்றன?
  • பண உதவி தர வேண்டும் என்பதற்காக, மக்கள் வறுமையால் இழிவான மரணத்தை அடைவது போன்றதொரு மோசமான இமேஜை (காட்சியை ) இந்தியா பற்றி வெளிநாட்டவர்கள் மத்தியில் உருவாக்கியவர் அன்னை (அன்னிய) தெரஸா என்பது உங்களுக்குத் தெரியுமா? வெளிநாட்டின் பணத்தில் கொழித்த தெரஸா வறுமை ஒழிக்க எதாவது செய்தாரா?
  • நேரு குடும்பம் ஒன்றுதான் விடுதலைக்காக போராட்டம் நடத்தியதா? பகத்சிங், சந்திரசேகர ஆஸாத், மதன்லால் திங்கரா, வாஞ்சிநாதன், சேகார் சகோதரர்கள், வீர சாவர்க்கர், ராஜகுரு, சுபாஷ் சந்திரபோஸ், உத்தம் சிங், வ.உ.சி., போன்ற எண்ணற்ற வீரர்களும் போராடியுள்ளார்களே?
  • கோத்ராவில் உள்ள சில பகுதிகளில் விற்பனை வரி, வருமான வரி, மின்சார வாரியம் போன்ற அரசு துறையினர்கூட நுழைய முடியாது. காவல்துறையினர் கூட அதிகமான எண்ணிக்கையில் போக முடியாது. இதுபோல முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பல இடங்கள் நாட்டில் உள்ளன என்பதை அறிவீர்களா? இந்துக்கள் வாழும் எந்த இடத்திலும் இப்படி நிகழ்வதில்லையே?
  • மும்பராவின் தீவிரவாதியான இஷ்ரத் ஜகானை அகமதாபாத் போலீஸ்காரர் சுட்டுக் கொன்றதற்கு அந்தப் பகுதியில் பந்த் நடத்தப்பட்டது. அந்தப் பகுதி மக்கள் அனைவரும் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். இது பயங்கரவாதத்திற்கு உடந்தையான செயல் இல்லை என்றால், இது ஏன் என்று கூற முடியுமா? அரசியல்வாதிகள் இத்தகைய செயல்களைக் கண்டிக்காதது ஏன்?
  • சீனா தனது பகுதியாக இன்று அருணாசலப்பிரதேசத்தைச் சித்தரித்து வருகிறது. இதை ஏதேனும் ஒரு கம்யூனிஸ்ட்காரர் கண்டிப்பாரா? மாட்டார்! ஏனென்றால், இடது சாரிகளுக்குத் தேசநலனைவிட காம்ரேட் சகோதரத்துவம் தான் முக்கியமானது! அப்படியானால் கம்யூனிஸ்டுகள் தேசியவாதிகளா?
  • “நான் கொல்ல வேண்டியவர்களின் பட்டியல் மிக நீளமானது, ஆனால் என்னிடம் துப்பாக்கி கொடுத்தால் நான் முதலில் மோடியைச் சுடுவேன்” என்கிறார் விஜய் டெண்டுல்கர். இவர் மனித உரிமைவாதியா? பயங்கரவாதியா?
  • கேரளாவில் உள்ள மலப்புரத்தில் 13 வயதுப் பெண் ஒருத்தி, அவளின் 26 வயது தாய், 39 வயது பாட்டி என மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களும் பிரசவத்திற்காக ஒரே நேரத்தில் ஒரே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதைக் கண்டார் ஒரு டாக்டர். முஸ்லிம்கள் ஜனத்தொகை பெருக்கத்தைப் பற்றி இப்போதாவது கவலைகொள்கிறீர்களா?
  • ராமாயணத்தை எழுதிய வால்மீகி ஒரு கொள்ளைக்காரன். மகாபாரதத்தை | எழுதிய வியாசர் ஒரு மீனவர். இந்த இரண்டு இதிகாசங்களையும் அதன் ஆசிரியர்களையும் இந்துக்கள் அனைவரும் வழிபடுகின்றனர். இந்து மதம் ஜாதியை ஆதரிக்கிறது என்று இன்னுமா நினைக்கிறீர்கள்?
  • 2002ம் ஆண்டு, கோயில்களிலிருந்து கர்நாடக அரசுக்குக் கிடைத்த வருமானம் 72 கோடி ரூபாய் ஆகும். அதிலிருந்து 50 கோடி ரூபாய் மதரஸாக்களுக்கும், 10 கோடி ரூபாய் சர்ச்சுகளுக்கும் வழங்கப்பட்டன. இந்துக்கள் அளித்த காணிக்கைகள், இந்துக்களை மதமாற்றும் சர்ச்களுக்கும், இந்துக்களுக்கு எதிராகப் போராட மதரஸாக்களை வளர்க்கவும் செல்கின்றன என்றால்? கோயில்களை அரசு நிர்வாகம் செய்வது எதற்காக? கோயில் அரசின் பிடியில் இருப்பது இந்துக்கள் தங்களுக்குத் தாங்களே குழிதோண்டிக்கொள்வது போன்ற செயல் இல்லையா?
  • ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் புத்தர் சிலை தகர்க்கப்பட்ட போது, ‘பாபர் மசூதியை இடித்ததற்குப் பழிவாங்கும் செயல்தான் இது’ என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தலையங்கம் எழுதியது. இந்த நியாய வாதத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா? பழிக்குப்பழி சரியா? அப்படியென்றால் கோத்ராவில் இந்துக்களின் பதிலடியை மட்டும் ஏன் குறை கூறுகிறீர்கள்?
  • குஜராத்தில் நடந்த கலவரங்களை இன அழிப்பாக பத்திரிகைகள் சித்தரிக்கின்றன. ஆனால் இந்த நாட்டில் யூதர்களும், பார்சிகளும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் முழு சுதந்திரத்துடன் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
  •  முருகனுக்குக் கோயில் கட்டினார் என்பதற்காக முஸ்லிம் ஒருவரை புதுச்சேரியில் அடக்கம் செய்ய மறுத்துவிட்டனர். எந்த மதமும் வெறுக்கக் கற்றுத் தருவதில்லை என்பதை இன்னுமா நீங்கள் நம்புகிறீர்கள்?
  • அன்னை தெரஸா ஏன் தனது தாய்நாடான அல்பேனியாவிலோ, அதற்கு பக்கத்தில் உள்ள சோமாலியாவிலோ தங்கி சாப்பிட்டிற்கே வழியில்லாத ஏழைகளுக்குத் தொண்டு செய்யவில்லை?(அவை முஸ்லிம் நாடுகள்) ஏன் கிரகாம் ஸ்டேன்ஸ் ஆஸ்திரேலியாவில் தங்கி அங்குள்ள வசதியற்றோருக்கு உதவி செய்யவில்லை ? (விவரம் தெரிந்தவர்கள்) ஏன் சோனியா காந்தி பொதுச் சேவை செய்ய இத்தாலியைத் தேர்ந்தெடுக்காமல் இந்தியாவில் ஒட்டிக்கொண்டார்? இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் போல் இறக்குமதி செய்யப்பட்ட மதங்களும், தலைவர்களும் நமது பாரதத்தைச் சூறையாடி வருகிறார்கள் என்பது புரிகிறதா?
  • குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுகிற இந்து வேட்பாளர்களின் தொகுதிகளாகப் பார்த்து பங்களாதேஷ் முஸ்லீம்கள் தங்குகின்றனர். அடுத்த தேர்தலுக்குள் அங்கு நிலைமையை மாற்றிட முனைகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
  • 1989ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுமானால், பைபிளில் கூறப்பட்டுள்ள படி அரசாங்கம் செயல்படும் என்று ராஜீவ் காந்தி கூறினாரே! இது மதவாதம் இல்லையென்றால், வேறென்ன?
  • உலக முஸ்லிம் சிறுபான்மைச் சமுதாயத்தின் தலைவரான ஷேக்-அல்சையத் யூசும் சையது காசிம் அல் ரிபை, விசா இல்லாமலேயே கேரளாவில் நுழைய அனுமதிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்படவில்லை என்பது மட்டுமல்ல. ஓர் அரசாங்க விருந்தினருக்கான சகல மரியாதைகளும் அவருக்கு வழங்கப்பட்டு, அவர் மதமாற்றத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கு உதவியாக அரசாங்கக் கார்களும் வழங்கப்பட்டன. இது தான் தேசியத்தை ஊக்குவிக்கும் லட்சணமா?
  • இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் (மதச்சார்பற்ற நாடுகள்) ஒரு முஸ்லிம் ஒரு பெண்ணுக்குக் கூடுதலாக திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்றால் இந்தியாவில் மட்டும் அது ஏன் அனுமதிக்கப்பட வேண்டும்?
  • போப் இந்தியாவிற்கு வர எந்தத் தடையும் இல்லை . ஆனால் 1990ம் ஆண்டு நாக்பூரில் நடந்த மகர சங்கராந்தி விழாவில் கலந்துகொள் நேபாள மன்னருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது தான் மதச்சார்பின்மையா?
  • முஸ்லிம், கிறிஸ்தவன், பார்ஸி அல்லாத அனைவரும் இந்துக்கள் என்று இந்துச் சட்டம் சொல்கிறது. இது சீக்கியர்கள், ஜெயினர்கள், பௌத்தர்கள் ஆகிய அனைவரையும் ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு விளக்கம். பிறகு எப்படி இன்றைய அரசியல்வாதிகள் இந்து சமுதாயத்தை இப்படித் துண்டு துண்டாகப் பிரித்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?
  • தென்னிந்தியா முழுவதையும் இஸ்லாமிய மயமாக்க வேண்டும் என்று திப்பு சுல்தான் விரும்பினான். ஆனால் ஆங்கிலேயர்கள் இந்தப் பகுதிகளைத் தாங்களே ஆள வேண்டும் என்பதற்காகத் திப்பு சுல்தானைத் தடுத்து நிறுத்தினர். அதனால் அவன் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராட வேண்டி வந்தது. அவன் என்ன இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரனா? அப்படியென்றால் பாபரும், ஒளரங்கசீப்பும், அப்சல்கானும், கஜினியும் கூட சுதந்திரப் போராட்ட வீரர்களா?
  • சோனியா காந்தி இந்து மதம் பற்றி கூறிய கருத்துகளை, ஆன்மீகப் பகுதியில் வெளியிட்டது ஓர் ஆங்கிலப் பத்திரிகை. இது இந்து மதத்தைக் கேலி செய்வது மட்டுமல்ல, இழிவு படுத்துவதும் கூடத்தானே! நமது பத்திரிகையாளர்களின் அறிவு மழுங்கிவிட்டதா?
  • அசோகரும், கனிஷ்கரும், ஆப்கானிஸ்தானை ஆண்டார்கள். துரியோதனனின் தாயான காந்தாரி, இப்பொழுது ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தார தேசத்திலிருந்து தான் வந்தார். அப்படியென்றால், முன்பு ஆப்கானிஸ்தான் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை நம்புகிறீர்களா?
  • திரிபுராவில் உள்ள பாப்டிஸ்ட் சர்ச் 60 ஆண்டுகளுக்கு முன்னர் நியூசிலாந்திலிருந்து வந்த மதபோதகர்களால் நிறுவப்பட்டது. இந்த சர்ச் தேசியத்தை ஊக்குவிக்கும் என்று நம்புகிறீர்களா?
  • பாகிஸ்தானில் மாணவர்களுக்கு, இந்துக்கள் நமது விரோதிகள், அவர்கள் ஒருகாலும் நமது நண்பர்கள் ஆக முடியாது. இந்துக்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று கற்றுத்தரப்படுகிறது. இனியும் பாகிஸ்தானுடன் நட்புறவு ஏற்பட வாய்ப்புள்ளது என்று எண்ணுகிறீர்களா?
  • மதச்சார்பற்ற அமெரிக்காவில், புனித வெள்ளி அன்று சர்ச்சில் செய்வது போல் மதச் சடங்குகளை அதன் பாதுகாப்புத்துறையின் அலுவலகத்திலும் செய்கிறார்கள். அன்று மதப்பிரச்சாரகர்களை அழைத்து பாதுகாப்பு வீரர்களிடையே சொற்பொழிவாற்றச் செய்கிறார்கள். இந்திய ராணுவமோ, கப்பல் படையோ ஆயுத பூஜை கொண்டாடுவதையோ, சங்கராச்சாரியாரைப் பேச அழைக்கவோ முடியுமென்று கனவிலும் நினைக்க முடியுமா?
  •  பாகிஸ்தான் ஓர் இஸ்லாமிய நாடு , ஆனால், ஓர் இருதய அறுவை சிகிச்சைக்கோ, புற்று நோய் சிகிச்சைக்கோ பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்கு வருகிறார்கள். அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு நாடு என் நல்ல மருத்துவமனைகளையும், திறமை வாய்ந்த மருத்துவர்களையும் உருவாக்கவில்லை. அப்படியென்றால், பாகிஸ்தானியர்கள் தங்கள் நாட்டின் வளர்ச்சியையும் மருத்துவ சேவைகளையும் காட்டிலும் துப்பாக்கிச் சுடுதலைத்தான் விரும்புகிறார்கள் என்று தானே அர்த்தம்?
  • கம்யூனிசத் தலைவர் ஸ்டாலின் மகள் ஸ்வேதலானா, தினேஷ் சிங்கின் சகோதரனை மணந்து கொண்டு இந்தியாவில் தங்க விரும்பினார். இந்திராகாந்தியும், நமது கம்யூனிஸ்டுகளும் அதனை எதிர்த்தனர். பிறகு எப்படி இத்தாலியப் பெண்மணியை ஏற்றுக்கொண்டார்கள்?
  • அமெரிக்காவில் யோகா பல கோடி மதிப்புள்ள ஒரு தொழிற்துறையாக வளர்ந்துள்ளது. ஆனால் நமது அரசாங்கமோ, இந்த மனித வளர்ச்சிக் தொழில் நுட்பத்தைக் கண்டும் காணாமல் விட்டுவிட்டது! இது இந்தியக் கலாச்சாரத்தைச் சார்ந்தது என்பதால்தானே?
  • பூஜையில் சங்கல்பம் செய்யும் போது “பாரத வர்ஷே” “பரத கண்டே , என்று சொல்கிறோமே, அது என்ன? இதற்குப் பிறகும் ஆன்மீகமும், தேசியமும் வேறு வேறு என்று நினைக்கிறீர்களா? அல்லது அவை தேசத்தின் இரண்டு கண்கள் எனக் கருதுகிறீர்களா?
  • ஆன்மீகத்தையும், தேசியத்தையும் இந்தியாவில் தனியாகப் பிரிக்க முடியாது. ஆன்மீகம் இல்லாத பாரதம், உயிரற்ற உடம்பாகிவிடும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?
  • எனது மதத்தை நான் கடைப்பிடிக்கும் பொழுதும், எனது மதச் சின்னங்களை நான் அணிந்துகொள்ளும் பொழுதும் மற்ற மதத்தவர்களின் உணர்வுகளை நான் எப்படி புண்படுத்த முடியும், அவர்கள் அவ்வாறு செய்யும் போது எனது மனம் புண்படவில்லையே. மற்றவர்கள் மனம் புண்படும் என்றால் அதற்கு அவர்களின் மதத்துவேஷம் தானே காரணம்?
  •  1920ல் தங்களது ஆட்சி முடிவுக்கு வரப் போகிறது என்பதைத் தெரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள் பெரிய நிலங்களைச் சர்ச்சுகளுக்கு மிகவும் குறைந்த விலையில் வாரி வழங்கினார்கள் என்பது உண்மையில்லையா?
  • காஞ்சி சங்கராச்சாரியார் பூஜை செய்யவோ, தனக்கு வேண்டிய உணவை உண்ணவோ அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பப்பு யாதவிற்கு, பீகார் ஜெயில் மந்திரியுடன் பேசுவதற்கு மொபைல் போன் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டதே! சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பது இது தானா?
  • சிறை தண்டனை பெற்று உள்ளே இருக்கும் முஸ்லிம் கைதிகள் தொழுகை நடத்தவும், ரம்ஜான் நோன்பு இருக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் விசாரணை கைதி என்ற நிலையில் சிறையில் வைக்கப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயிலில் பூஜை செய்ய அனுமதிக்கப்பட வில்லையே, அது ஏன்?
  • அமெரிக்க விண்வெளி வீரர் ஆம்ஸ்ட்ராங் 1969ல் நிலவில் கால் பதித்தார், அதன் பிறகு பல விண்வெளி வீரர்களும் விண்வெளி சோதனைக்குச் சென்று வந்தனர். இதனை உங்கள் முஸ்லிம் நண்பரிடம் சொன்னால் அவர் அதை ஏற்றுக்கொள்வாரா?
  • தமிழ் நாட்டுக் கோயில்களில் அலைமோதுகிறது. மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இருந்தும் ஏன் இந்த இரண்டு மாநிலங்களிலும் உள்ள மக்கள் நாத்திகர்களை ஆதரிக்கிறார்கள்? இது அவர்களுக்கு அவர்களே வெட்டிக்கொள்ளும் மரணக் குழி அல்லவா?
  • இந்து மதத்தில் பல சீர்திருத்தவாதிகள் தோன்றி வழிநடத்தி உள்ளனர். மற்ற மதங்களில் ஏன் அப்படி யாருமில்லை ? அவர்களுக்கு எந்தச் சீர்திருத்தமும் தேவையில்லையா?
  • முஸ்லிம்களுக்கு மத ரீதியான இட ஒதுக்கீடு இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனத் தெரிந்தும் ஆந்திர அரசு மீண்டும் மீண்டும் இட ஒதுக்கீடு அளித்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் மூக்கறுபட்ட நிலையில், சட்ட திருத்தம் செய்வோம் என்று சொல்வது தேச விரோதச் செயல் இல்லையா?
  • முஸ்லிம்கள் பயங்கரவாத வன்முறைகளில் ஈடுபடும்போதெல்லாம் மதவாதம் – மனித நேயம் பேசாதது ஏன்? இஸ்லாம் பயங்கரவாதத்தைப் போதிக்கிறது என்ற குற்றச்சாட்டிற்கு உங்கள் பதில் என்ன?
  • சட்டத்தின் மூலம் பழக்க வழக்கங்களை மாற்றுவது நாகரிக சமுதாயத்தின் அடையாளம் எனச் சொன்ன அரசியல்வாதிகள், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களையும் அச்சட்டங்களை ஏற்று நாகரிக மனிதர்களாகுங்கள் என்று சொல்வார்களா?
  • தாய் (தமிழ்) வழி கல்விக்குத் தான் அரசு உதவி எனச் சொல்லும் தைரியம் உண்டா? தமிழ் வளர்ச்சி பற்றி பேசும் போலிகளே, சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஏன் உருது மொழி கல்விக்குத் தனிப் பள்ளிக்கூடம் திறந்தாய்?
  • முஸ்லிம் முதல்வருக்குத்தான் ஆதரவு என்று மதவாதம் பேசிய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் பீகார் தேர்தலிலும், முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தே தீருவோம் என்று முழங்கிய காங்கிரஸ்க்கு உத்தரப்பிரதேச தேர்தலில் தோற்றதன் வாயிலாக – இவர்களது வாதத்திற்கு மக்கள் கொடுத்த மரண அடி என்பதை ஏற்கிறீர்களா?
  • சிறுபான்மை பாதுகாப்பு பேசும் போலி மதச்சார்பின்மைவாதிகளே! உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்; முஸ்லிம், கிறிஸ்தவ நாடுகளில் இந்துக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றாவது முணு முணுத்தது உண்டா ?
  • முஸ்லிம் பெண்கள் பூப்பெய்தியிருந்தால் போதுமானது, திருமணத்திற்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்ற டெல்லி உயர்நீதிமன்றத்தீர்ப்பு – பச்சோந்தித்தனத்தைவிடக் கேவலமில்லையா?
  • கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் விலகிச்சென்றாலோ, துரோகம் செய்தாலோ திட்டமிட்டு கொல்லப்படுவார்கள் என்றும், எப்படியெல்லாம் கொன்றோம் என்றும் பொதுக்கூட்டத்தில் பகிரங்கமாகச் சொன்னார் கேரள கோட்டயம் மாவட்டச் செயலாளர் மணி – இந்த வாக்குமூலம் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாடு’ – மரணக்குழி என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா?

போலி மதச்சார்பின்மைவாதிகளுக்கு 125 கேள்விகள்

போலி மதச்சார்பின்மைவாதிகளுக்கு 125 கேள்விகள்

  1.  உலகத்தில் சுமார் 52 இஸ்லாமிய நாடுகள் உள்ளன. அவற்றுள் ஹஜ் யாத்திரைக்கு மானியம் வழங்கும் ஒருநாட்டைக் காண்பிக்க முடியுமா?
  2.  இந்தியாவில் முஸ்லீம்களுக்கு வழங்கப்படுகின்ற சிறப்புரிமைகளை இந்துக்களுக்கு வழங்கும் ஒரு முஸ்லீம் நாட்டைக் காட்டுங்கள் பார்ப்போம்.
  3.  முஸ்லீம் அல்லாத ஒருவர் ஜனாதிபதியாகவோ, பிரதம மந்திரியாகவோ இருக்கும் ஒரு முஸ்லீம் நாட்டைக் காண்பிக்க முடியுமா?
  4. 18% சிறுபான்மையினரை இணைத்துக் கொள்ள ஏங்கும் 82% பெரும்பான்மையினரைக் கொண்ட நாடு இந்தியாவைத் தவிர வேறொன்று இருக்கிறதா?
  5. அப்பாவிகளைக் கொன்று குவித்த பயங்கரவாதிகளுக்கு எதிராக (ஃபத்வா) தண்டனை விதித்த ஒரு இமாமைக் காட்ட முடியுமா?
  6. இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள மகாராஷ்டிரா, பீகார், கேரளா, புதுவை போன்ற மாநிலங்களில் முஸ்லீம்கள் முதல்வராக இருந்துள்ளனர். ஆனால் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு காஷ்மீரிலோ, கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ள நாகாலாந்து, மிசோரமிலோ ஒரு ஹிந்து முதல்வராக வர முடியுமா?
  7. இந்துக்கள் தற்போது 85% இருக்கிறார்கள். இந்துக்கள் சகிப்புத்தன்மை இல்லாதவர்களாக இருந்திருந்தால் மசூதிகளும், மதரஸாக்களும், இப்படிப் பல்கிப் பெருகி இருக்க முடியுமா?
  8. தேசப் பிரிவினையின்போது பாரதத்தின் 30% இடத்தை எதுவும் பேசாமல் இந்துக்கள் முஸ்லீம்களுக்குக் கொடுத்தார்களே அப்படி இருந்தும் தற்போது அயோத்தியா, மதுரா, காசியில் உள்ள தங்கள் புனித இடங்களைப் பெறுவதற்காக இந்துக்கள் ஏன் கெஞ்ச வேண்டும்?
  9. முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் வழிபாட்டுத் தலங்களில் வரும் பணத்தைத் தங்களின் விருப்பப்படி தானே செலவு செய்கின்றனர்? பிறகு ஏன், நமது கோயில் பணத்தையும் அவர்களின் நலன்களுக்காகச் செலவழிக்க வேண்டும்?
  10. பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் பொதுவான பள்ளிச் சீருடை உள்ளதே. நாட்டின் குடிமக்களுக்கு மட்டும் பொதுவான சிவில் சட்டம் இருக்கக்கூடாதா?
  11. மகாராஷ்டிரம், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து ஜம்மு காஷ்மீர் எந்த விதத்தில் வித்தியாசமானது. அதற்கு மட்டும் எதற்காக 370 விதியின்படி தனி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்?
  12. காந்திஜி எதற்காக கிலாபத் இயக்கத்தை ஆதரித்தார்? (இதற்கும் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது) அதற்குக் கைம்மாறாக அவருக்கு என்ன கிடைத்தது?
  13. ஜனவரி 1948ல் டில்லியில் உள்ள மசூதிகளை அரசாங்கமே புனரமைக்க வேண்டும் என்று நேருவையும் பட்டேலையும் வலியுறுத்திய காந்திஜி, சோமநாதர் கோவில் அரசாங்கப் பணத்தின் மூலம் கட்டப்பட வேண்டும் என்ற மத்திய அமைச்சரவை முடிவை எதிர்த்து, அது பொதுமக்கள் பணத்தால்தான் கட்டப்பட வேண்டும் என்று ஏன் தெரிவித்தார்?
  14. மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினர் என்றால் மிசோரம், நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா போன்ற மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினர் தானே? அவர்களுக்கு இந்த மாநிலங்களில் சிறுபான்மையினருக்கான சலுகைகள் ஏன் வழங்கப்படவில்லை ?
  15. இந்துக்களிடம் ஏதோ பிரச்னை இருக்கிறது. அது உணரப்படவேண்டும் என்று கருதுகிறீர்களா? அல்லது இந்துக்கள் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்கள் தான் பிரச்னையே என்று எண்ணுகிறீர்களா?
  16. கோத்ராவிற்குப் பிறகு நடந்தவற்றைப் பத்திரிகைகளில் மிகைப்படுத்தி கூறுகிறார்களே. காஷ்மீரில் நான்கு இலட்சம் இந்துக்கள் அழிக்கப்பட்டு, துரத்தப்பட்டுள்ளனரே அது பற்றி ஏன் யாருமே பேசுவதில்லை ?
  17. 1947இல் இந்தியா பிரிக்கப்பட்ட போது பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை 24%. தற்போது வெறும் 1%. கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய பங்களாதேஷ்) இந்துக்களின் எண்ணிக்கை 30%, தற்போது 7%. எங்கே போனார்கள் மீதி இந்துக்கள்? இந்துக்களுக்கு மனித உரிமைகள் எதுவுமில்லையா?
  18. ஆனால் இந்தியாவின் நிலை என்ன? 1951இல் 10.4%மாக இருந்தமுஸ்லீம்களின் ஜனத்தொகை தற்போது 14%மாக உயர்ந்துள்ளது. அதேசமயம், இந்துக்களின் ஜனத்தொகை 87.2%லிருந்து 81.5%மாகக் குறைந்துள்ளது. எந்த அரசியல்வாதிக்காவது முஸ்லீம்களிடம் குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தும் தைரியமுள்ளதா?
  19. சமஸ்கிருதம் – மதவாதம், உருது – மதச்சார்பற்றது; கோயில் – மதவாதம், மசூதி – மதச்சார்பற்றது; துறவி – மதவாதி, இமாம் புகாரி – தேசப்பற்று மிக்கவர்; பா.ஜ.க. – மதவாதக்கட்சி, முஸ்லீம் லீக் – மதச்சார்பற்ற கட்சி; டாக்டர் பிரவீண் தொகாடியா – தேசவிரோதி, புகாரி – தேச பக்தர்; வந்தேமாதரம் – மதவாதம், அல்லா ஹு அக்பர் – மதச்சார்பற்றது; ஸ்ரீ ராமர் – மதவாதி, மியான் – மதச்சார்பற்றவர்; இந்துமதம் – மதவாதம், இஸ்லாம் – மதச்சார்பற்றது; இந்துத்துவம் – மதவாதம், ஜிகாத் – மதச்சார்பற்றது; கடைசியாக, பாரதம் – மதவாத நாடு, இத்தாலி – மதச்சார்பற்ற நாடு என்று நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா?
  20. அரசு பணத்தில் நடக்கும் கிறிஸ்தவ – முஸ்லீம் பள்ளிகள் பைபிளையும், குரானையும் கற்றுத் தரலாம் என்றால் அரசு பள்ளிகளில் இந்துக்களுக்கு ஏன் கீதையையும், ராமாயணத்தையும் சொல்லித்தரக்கூடாது?
  21.  மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில், அப்துல் ரஹ்மான் அந்துலே என்பவர் அறங்காவலராக நியமிக்கப்பட்டது போல, ஒரு மசூதியிலோ, மதரஸாவிலோ ஒரு ஹிந்து – (முலாயமோ, லாலுவோ கூட) அறங்காவலராக முடியுமா?
  22. டாக்டர் பிரவீண் தொகாடியா சின்னச் சின்ன காரணங்களுக்காக கைது செய்யப்பட்டார். பாரதப் பிரிவினை கேட்ட பாகிஸ்தானிய உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் ஏஜெண்ட் என்று தன்னை வெளிப்படையாகப் பிரகடனப்படுத்திக் கொண்ட டில்லி ஜூம்மா மசூதியின் இமாம் அகமது புகாரி ஏன் கைது செய்யப்படவில்லை ?
  23. ஐ.எம்.டி.டி. (IMTD) சட்டப்படி வங்க தேச முஸ்லீம்கள் இந்தியக் குடியுரிமை பெற்று அஸ்ஸாமில் நிரந்தரமாக வசிக்கலாம். ஆனால் இந்தியர்கள் ஜம்மு-காஷ்மீரில் நிரந்தரமாக வசிக்க முடியாது. ஏன் இந்த இரட்டை வேடம் ?
  24. 2003-2004ல், ஒரு முஸ்லீம் ஜனாதிபதி, ஒரு ஹிந்து பிரதம மந்திரி, ஒரு கிறிஸ்தவ ராணுவ மந்திரி ஆகியோர் இணைந்து இந்த நாட்டைக் கருத்தொருமித்து வழி நடத்தினர். ஹிந்து நாடான பாரதத்தைத் தவிர வேறெங்காவது இது நடக்க முடியுமா?
  25. கேரளாவில், சட்டசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாவின் பெயராலும், குழந்தை ஏசுவின் பெயராலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர். (இது சட்ட விரோதமாகும்). இந்துக்கள் ராமனின் பெயராலும், கிருஷ்ணனின் பெயராலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள முடியுமா?
  26. அரசாங்கச் செலவில் அரேபிய மொழி ஊக்குவிக்கப்படுகிறது. ஆனால் சமஸ்க்ருதத்திற்கு எந்த ஊக்குவிப்பும் கிடையாது. சமஸ்க்ருதத்தைக் காட்டிலும், அரேபிய மொழி என்ன தேசியத் தன்மை அதிகம் கொண்டது?
  27. ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு அரசு மானியம் வழங்கும் பொழுது, அமர்நாத், சபரிமலை, கைலாஷ் மானசரோவர் செல்லும் ஹிந்து யாத்ரீகர் கள் மட்டும் ஏன் கூடுதலாகப் பணம் வரியாக செலுத்த வேண்டியுள்ளது?
  28. ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு கோடி ஜனத்தொகைக்கு ஆண்டுதோறும் ரூபாய் 24,000 கோடி நிதியுதவி வழங்கப்படுகிறது. அதாவது ஒருவருக்கு ரூ. 2400. ஆனால் மற்ற மாநிலங்களில் இதில் ஐந்து சதவீதம் கூட வழங்கப்படுவதில்லை. இது தேச விரோத நடவடிக்கைகளுக்கு வழங்கப்படுகின்ற பரிசுதானே?
  29. ஓவியம் வரைதல் இஸ்லாமுக்கு எதிரானதென்றால், எம்.எஃப். ஹுசைனுக்கு ஏன் தண்டனை வழங்கப்படவில்லை? அவர் தொடர்ந்து ஓவியம் தீட்டினாரே, அவர் இஸ்லாமிற்கு எதிராகச் செயல்பட்டதாகத் தானே அர்த்தம்?
  30. இசைபாடுவது, ஆடுவது ஆகிய அனைத்தும் இஸ்லாமிற்கு எதிரானது. (ஏனென்றால், இஸ்லாம் ஒரு தீவிரமான மதம்). அப்படியென்றால் சினிமாத்துறையில் உள்ள பல ‘கான்’களுக்கு ஏன் தண்டனை வழங்கப்படவில்லை ? பிரச்னை வரும்போது அவர்கள் எதைத் தியாகம் செய்வார்கள் – இஸ்லாமையா? நடிப்பையா?
  31. பாரதத்தில் முஸ்லீம்கள் பெரும்பான்மையானவர்களாக மாறினால், பாரதம் தொடர்ந்து மதச்சார்பற்ற, ஜனநாயக நாடாகத் திகழும் என நம்புகிறீர்களா?
  32. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலும், இங்கிலாந்தின் மக்களவை யிலும், ஆஸ்திரேலியாவின் பாராளுமன்றத்திலும் தீபாவளியும், கிருஷ்ண ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது. ஏன் இந்திய நாடாளுமன்றத்தில் இப் பண்டிகைகள் கொண்டாடப்படுவதில்லை? அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை விட நாம் பெரிய மதச்சார்பின்மைவாதியா?
  33. மதக் கலவரங்கள் ஏற்படுவதற்கு ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., பஜ்ரங்தள் போன்ற அமைப்புகள் தான் காரணமென்றால், வங்கதேசம், பாகிஸ்தான், சௌதி அரேபியா, ஈராக், துருக்கி, ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், சைப்ரஸ், செசன்யா போன்ற நாடுகளில் ஏன் கலவரங்கள் ஏற்படுகின்றன? இங்கு தான் இந்த அமைப்புகள் இல்லையே!
  34. இஸ்லாம் அமைதியைப் போதிக்கும் மதம் என்றால், குரான் படிப்பதும், துப்பாக்கி பிடிப்பதும் ஏன் ஒரே நேரத்தில் கற்றுத்தரப்படுகிறது?
  35. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஜனநாயகத்தை அனுபவித்துக் கொண்டு அதே நேரம் இந்த நாடுகளை இஸ்லாமிய நாடுகளாக மாற்ற முயற்சி செய்யும் (அப்போது தங்கள் சுதந்திரத்தையே அவர்கள் இழப்பார்கள்) முஸ்லீம்களின் மனோநிலையை எப்படி விளக்குவீர்கள்?
  36. ஒரு முன்னாள் ஜனாதிபதி, இரண்டு முன்னாள் பிரதம மந்திரிகள், சாதுக்கள், சந்நியாசிகள் ஆகியோர் காஞ்சி சங்கராச்சாரியாரின் கைதுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஆனால் ‘எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை’ என்று பத்திரிகைகள் தெரிவித்தன. மக்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் ஒரே அளவுகோள் வன்முறைதான் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?
  37. குரான் பேச்சுவார்த்தையை ஏற்றுக் கொள்வதில்லை. (காஃபீர்களைப் போரில் தோற்கடிப்பதையே அது போதிக்கிறது ) அப்படி இருக்கையில் பேச்சுவார்த்தையின் மூலம் அயோத்தியா பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்று எண்ணுகிறீர்களா?
  38.  இஸ்லாமும், கிறிஸ்தவமும் அனைத்து மதங்களும் ஒன்று என்ற கொள்கையை ஏற்றுக் கொள்வதாக நினைக்கிறீர்களா? அப்படியென்றால் அவர்கள் ஏன் மதமாற்றத்தில் ஈடுபட வேண்டும்?
  39. ‘ஈஸ்வர் அல்லாஹ் தேரே நாம்’ (ஈஸ்வரனும், அல்லாவும் உனது பெயர்) – இதை ஒப்புக்கொள்ளும் முஸ்லிம் ஒருவரையாவது காட்ட முடியுமா?
  40. இஸ்லாமும், கிறிஸ்தவமும் நாடுகளைக் கைப்பற்றப் பிறந்த அரசியல் சித்தாந்தம் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? அவர்கள் தங்கள் முல்லாக்கள் மற்றும் பாதிரிகள் மூலம் காலாட்படை, கப்பல்படை மற்றும் விமானப் படை ஆகிய படைகள் இணைந்து செய்ய முடியாத செயலை, மக்களை மதம் மாற்றி, அவர்களது கலாச்சாரத்தைச் சீர்குலைப்பதன் மூலம் வெற்றிகரமாகச் செய்து வருகின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்களா?
  41. இஸ்லாமிய மதச்சார்பற்றவர்’ என்ற வார்த்தை தவறான சொல் பிரயோகமில்லையா? ஒருவர் முஸ்லிமாக இருக்கலாம்; அல்லது மதசார்பற்றவராக இருக்கலாம்; இரண்டாகவும் இருக்க முடியாது. ஒரு முஸ்லிம் (அல்லாவைத் தவிர வேறு கடவுளை நம்பாதவர்) மதச்சார் பற்றவராக (எல்லா கடவுள்களையும் மதிப்பவராக) இருக்க முடியாது!
  42. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி பத்து சதவீதத்திற்குக் குறைவான ஜனத்தொகை தான் சிறுபான்மையினராகக் கருதப்பட வேண்டும். அப்படியெனில் 14 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள முஸ்லிம்கள் எப்படி இந்தியாவில் சிறுபான்மை சமுதாயம் ஆகும்?
  43. 1962ல் சீனாவை ஆக்கிரமிப்பாளர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளாத கம்யூனிஸ்டுகள்; நமது நாட்டை நேசிப்பவர்கள் என்பதை நம்புகிறீர்களா?
  44.  சோவியத் யூனியன் போல இந்தியாவும் பல நாடுகளின் கூட்டமைப்பு, எனவே பாரதமும் ரஷ்யாவைப் போல சிதறத்தான் செய்யும் என்ற கம்யூனிஸ சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா?
  45. ஹிந்து சமுதாயம் பெரும்பான்மை வாழும் பகுதியில் ஒரு முஸ்லிம் குடும்பத்தால் அமைதியாக, சந்தோஷமாக வாழ முடிகிறது. ஆனால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் ஓர் இந்துக் குடும்பம் அமைதியாக, நிம்மதியாக வாழ முடிவதில்லையே! – இது ஏன்?
  46. இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள பாரத நாடு காலம் காலமாகமதச்சார்பற்று விளங்குகிறது. ஆனால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகள் இஸ்லாமிய நாடுகளாக, சிறுபான்மையினருக்கு எந்த அதிகாரமும் இல்லாத நாடுகளாக இருப்பது ஏன்?
  47.  கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள், இஸ்லாமியர்கள் பெரும்பான்மை யாக உள்ள பகுதிகளுக்குச் சென்று ஏன் சேவை செய்வதில்லை? தங்கள் முதலீட்டிற்குத் தகுந்த அறுவடை கிடைக்காது என்பதாலா?
  48. வங்க தேசத்தில் இருந்து வரும் ஊடுருவல்காரர்களை வெளிப்படையாக வரவேற்கும் ஒரே நாடு பாரதம் தான் என்று உங்களுக்குத் தெரியுமா? பீகார், அவர்களுக்குக் குடும்ப அட்டையையும், ஓட்டளிக்கும் உரிமையையும் உடனடியாக வழங்கி வருகின்றன!
  49. வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு தான் பெரும்பாலும் கலவரங்கள நிகழ்கின்றன (எடுத்துக்காட்டு கேரளாவில் மாராடு கலவரம்) இது உணாசசியைக் காண்டும் இமாம்களின் பேச்சால் ஏற்படுகிறதுதானே?
  50. இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் அமைதியாக உள்ளன. ஆனால் இந்துக்கள் சிறுபான்மையாக உள்ள ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் பிரச்சனைக்குரியவையாக உள்ளன. இது எதனால் என்று சொல்ல முடியுமா?
  51.  ‘இஸ்லாமிய மதக் கோட்பாடான ஷரியத்தில் ஒரு வார்த்தையைத் தொட்டாலும் அவர் கைகள் அப்பொழுதே வெட்டப்படும்’ என்றார் கேரள சட்டமன்ற உறுப்பினர் சி.பி.ஷாஜி. (ஆதாரம்: மாத்ரு பூமி (3-7-1985). இதை ஒப்புக்கொள்வீர்களா?
  52. அனைத்து அரசியல் கட்சிகளின் கொள்கையும், நமது நாட்டின் பல்வேறு வகுப்பினரையும் ஒரு சிந்தனையின் கீழ் ஒன்றிணைக்கும் லட்சியத்திற்கு எதிராக உள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
  53. அத்து மீறி இந்தியாவிற்குள் நுழைந்த முஸ்லிம்கள் இன்று 25 பாராளுமன்றத் தொகுதிகளிலும், 120 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்களா? அவர்கள் எந்தக் கட்சி ஆட்சி அமைக்குமோ அதற்கு, அதாவது காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு ஒட்டு மொத்தமாக வாக்களிக்கின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
  54. ‘ஒரு சில அரசு சாரா நிறுவனங்களும், பத்திரிகைகளும் கூட உண்மையில் சில தீவிரவாத குழுக்களின் அலுவலகங்கள் தான்’ என்று முன்னாள் பஞ்சாப் காவல்துறை தலைவர் கே.பி.எஸ்.கில் கூறியது உங்களுக்குத் தெரியுமா? ‘அரசு சாரா நிறுவனங்களுக்கும், மனித உரிமை குழுக்களுக்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறது’ என்று அவர் மேலும் எச்சரித்துள்ளார்!
  55. மதச்சார்பற்றவராகக் கருதப்படும் மௌலானா வாஹிதுனிடம் கார்கிலில் போரிட்டுக் கொண்டிருந்த இந்திய ராணுவ வீரர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்ட போது, “முஸ்லிம்களை எதிர்த்துப் போரிடுபவர் களுக்காக நான் பிரார்த்தனை செய்ய முடியாது” என்று கூறினார். இதை நீங்கள் அறிவீர்களா? (சோனியாவும், பிரியங்காவும் பிறகு அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர் என்பது தனிச் செய்தி)
  56. ஜம்மு-காஷ்மீரில் உள்ள இந்தியப் பெண் பிற பாகங்களில் உள்ள ஓர் இளைஞரை மணந்து கொண்டாள் என்றால், அந்த இளைஞன் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் குடியுரிமை பெற முடியாது என்பது மட்டுமல்ல, அந்தப் பெண்ணும் தனது குடியுரிமையை இழந்து விடுகிறாள். என்ன சட்டம் இது?
  57. அயோத்தியா வழக்கில், விஸ்வ ஹிந்து பரிஷத்திற்கு என்ன சம்பந்தம் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டது. ஆனால் பாபர் மசூதி செயற்குழுவிடமோ, அனைத்திந்திய முஸ்லிம் தனிச் சட்டவாரியத் திடமோ, அவர்களுக்கு என்ன சம்பந்தம் என்று அதே உச்ச நீதிமன்றம் கேட்கவில்லையே? இது நீதிமன்றத்தின் இரட்டை வேடமில்லையா?
  58. அயோத்தியா பிரச்சனையில், இந்துக்கள் மட்டும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று கூறுகிறார்களே. உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து எத்தனை முறை நமது அரசியல் அமைப்புச் சட்டம் மாற்றப்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா? வயதான முஸ்லீம் பெண் ஷாபானு ஜீவனாம்சம் கேட்ட வழக்கிலும், இந்திரா காந்தி தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று அளித்த தீர்ப்பிலும் எனப் பல உதாரணங்கள் உள்ளனவே!
  59. நரேந்திர மோடி, உமாபாரதி போன்ற முதல்வர்களைச் சின்னச் சின்ன காரணங்களுக்காகப் பதவி விலகச் சொன்னார்களே, ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படைவீரர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படுகின்ற ஜம்மு – காஷ்மீர் மாநில முதல்வரை மட்டும் பதவி விலகச் சொல்வதில்லையே, அது ஏன்?
  60. சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்களுக்கு இடையிலான காசி மயானச் சண்டையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட முடியாது என்று உத்தரப்பிரதேச அரசு 1986இல் கைவிரித்தது. காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்ச நீதிமன்ற ஆணைக்கு அடிபணிய கர்நாடக அரசு மறுத்துவிட்டது. இது தான் நீதிமன்ற உத்தரவை மதிப்பதற்கு அடையாளமா?

புதிய பாரதம் தலையெடுக்க நம்மை அழைக்கிறார் – சுவாமி விவேகானந்தர்.

original

புதிய பாரதம் தலையெடுக்க, தேசத் தொண்டில் ஈடுபடும்படி நம்மையெல்லாம் இன்றும் அழைத்தபடியே இருக்கிறார் சுவாமி விவேகானந்தர்.

அவரது சில கருத்துக்கள்:

பாரத மாதாவின் நன்மைக்காக அவளுடைய மிகவும் சிறந்த, மிகவும் உத்தமமான புதல்வர்களின் தியாகம் தேவையாக இருக்கிறது என்பதை நான் திட்டவட்டமாக அறிந்திருக்கிறேன். பலரின் நன்மைக்காக, அனைவரின் சுகத்திற்காக, உலகில் தைரியமும் சிறப்பும் பெருமளவில் பெற்றிருப்பவர்கள் தங்களைத் தியாகம் செய்து கொண்டுதான் ஆக வேண்டும்.

தங்களுடைய தாய்நாட்டின் நன்மைக்காக எல்லாவற்றையும் துறக்கவும், தங்களுடைய உயிரைத் தியாகம் செய்யவும் கூடியவர்களாக ஒரு சில இளைஞர்களே நமக்குத் தேவை. முதலில் அவர்களுடைய வாழ்க்கையை நாம் நல்ல முறையில் உருவாக்க வேண்டும். அதன் பிறகுதான் ஏதாவது உண்மையான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

எனது வீர இளைஞர்களே! செயலில் ஈடுபடத் தொடங்குங்கள். தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.

நமது தாய்நாட்டின் இளைஞர்களே! ஆக்கப்பூர்வமான நற்பணிகளில் தாய்நாட்டின் முன்னேற்றத்திற்காக முழு மனதுடன் ஈடுபடுங்கள்.

நம்புங்கள்! உறுதியாக நம்புங்கள்! இந்தியா கண்விழித்து எழுந்திருக்க வேண்டும் என்று ஆண்டவன் கட்டளை பிறந்துவிட்டது. இந்தியா எழுச்சி பெற்று முன்னேற்றப் பாதையில்தான் செல்ல வேண்டும் என்று இறைவன் ஆணை பிறப்பித்தாகிவிட்டது.

இப்போதிருக்கும் இந்தக் குழப்பத்திலிருந்தும், போராட்டத்திலிருந்தும் மகிமை பொருந்திய பரிபூரண எதிர்கால இந்தியா கிளம்பி எழுவதை நான் என் மனக்கண்ணால் பார்க்கிறேன். அது எவராலும் வெல்ல முடியாததாகக் கிளம்பி எழும்புவதை நான் என் மனக்கண்ணால் பார்க்கிறேன்.

என் சகோதரர்களே! நாம் அனைவரும் கடுமையாக உழைப்போமாக. உறங்குவதற்கு இது நேரமில்லை. எதிர்கால இந்தியா நமது உழைப்பைப் பொறுத்துத்தான் அமைந்திருக்கிறது.

புராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்துவிட்டாள். தனது அரியணையில் அவள் அமர்ந்திருக்கிறாள். புத்திளமை பெற்று, என்றுமே இல்லாத அரும்பெரும் மகிமைகளோடும் அவள் திகழ்கிறாள். இந்தக் காட்சியைப் பட்டப்பகல் வெளிச்சத்தைப் போல் நான் தெளிவாகப் பார்க்கிறேன். அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்த பாரத அன்னையை உலகம் முழுவதிலும் பிரகடனப்படுத்துங்கள்.

கையில் கலப்பை பிடித்த உழவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழும்பட்டும்! மீனவர்கள், சக்கிலியர்கள், தோட்டிகள் ஆகியவர்களின் குடிசைகளிலிருந்தும் புதிய இந்தியா எழட்டும்! பலசரக்குக் கடைகள், பலகாரக் கடைகளிலிருந்து அவள் தோன்றட்டும்! தொழிற்சாலைகள், கடைவீதிகள், சந்தைகள் ஆகியவற்றிலிருந்தெல்லாம் புதிய இந்திய எழுந்து வெளிவரட்டும்!

பிரார்த்தனா

RSS-GettyImages

பிரார்த்தனா

நமஸ்தே ஸதா  வத்ஸலே மாத்ருபூமே

த்வயா ஹிந்துபூமே ஸுக(ம்) வர்த்திதோஹம்

மஹாமங்கலே புண்யபூமே த்வதர்த்தே

பதத்வேஷ காயோ நமஸ்தே நமஸ்தே

ப்ரபோ  ஶக்திமன் ஹிந்துராஷ்ட்ராங்கபூதா

இமே ஸாதரந் த்வான் நமாமோ வயம்

த்வதீயாய கார்யாய பாத்தா கடீயம்

ஶுபாமாஶிஷந்  தேஹி தத்பூர்தயே

அஜய்யாஞ்ச விஶ்வஸ்ய தேஹீஶ ஶக்திம்

ஸுஶீலஞ் ஜகத்யேன  நம்ரம் பவேத்

ஶ்ருதஞ்சைவயத்கண்டகாகீர்ண மார்கம்

ஸ்வயம் ஸ்வீக்ருதன்நஸ் ஸுகங்காரயேத்

ஸமுத்கர்ஷ நிஷ்ரேய  ஸஸ்யைக முக்ரம்

பரம் ஸாதனன்  நாம வீரவ்ரதம்

ததந்தஸ்  ஸ்புரத்வக்ஷயா த்யேய நிஷ்டா

ஹ்ருதந்தஹ் ப்ரஜாகர்து தீவ்ராநிஶம்‌

விஜேத்ரீ ச நஸ்  ஸம்ஹதா கார்ய சக்திர்

விதாயாஸ்ய தர்மஸ்ய ஸம்ரக்ஷணம்‌

பர(ம்) வைபவன்  நேதுமேதத்‌ ஸ்வராஷ்ட்ரம்

ஸமர்தா  பவத்வாஶிஷா தே ப்ருஶம்

பாரத்  மாதா கீ ஜய்!

குறிப்பு:

ஶ – இந்த எழுத்தை, ஸ.ஷா இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட வகையில், நாக்கை, ஓரளவு மடக்கி உச்சரிக்க வேண்டும்.

AUDIO DOWNLOADdownload