அமரபாரதம் – ஜனவரி 2020

அமரபாரதம் – ஜனவரி 2020

நமது புராதான பெருமைகளை கொண்ட நவீன இந்தியாவை உருவாக்க வேண்டும். மீண்டும் பாரதம் உலகின் குருவாய் அமைந்திட வேண்டும். என்கிற நோக்கத்தில் பணிபுரிந்த ‘அமர பாரதம்’ இணையதள குழுவின், பணியின் அடுத்த கட்டமாக இளைஞர்களுக்கான மாதந்தோறும் ஆன்மிக-தேசிய இணைய இதழ் (E-magazine) நடத்த தீர்மானித்துளோம்.

Front

சுவாமி விவேகானந்தரின் 158 வது பிறந்த தினத்தன்று முதல் பிரதியை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம். இணையதளதை போலவே இதற்கும் தங்கள் மேலான ஆதரவை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Download

அமரபாரதம் இணைய இதழ் அறிமுகம்

அறிமுகம்

cropped-final-logo2.jpgநாம் பிறந்த இந்தப் புண்ணிய பாரத பூமியில், வாழையடி வாழையாக எண்ணற்ற மகான்கள் தோன்றியுள்ளனர். சமயத் துறையில் தலைவர்களாக விளங்கிய இவர்கள், மக்களுக்கு அருள்வழியைக் காட்டியிருக்கிறார்கள்.

அது போலவே சமுதாயத் துறையில் கணக்கற்ற பெரியோர்களை நம் பாரத பூமி காலமெல்லாம் தோற்றுவித்திருக்கிறது. சமுதாயத் தலைவர்களாக விளங்கிய இவர்கள், எத்தனை எத்தனையோ துறைகளில் நம் பாரத சமுதாயத்தின் நலனுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அரும்பணி ஆற்றியுள்ளனர்.

சமயத் தலைவர்களாக இந்தியாவில் எவ்வளவோ பேர் வாழ்ந்திருக்கிறார்கள். சமுதாயத் தலைவர்களாகவும் இந்தியாவில் எவ்வளவோ பேர் வாழ்ந்திருக்கிறார்கள்.

சமயத் தலைவராகவும் அதே சமயத்தில் சமுதாயத் தலைவராகவும் வாழ்ந்து, மக்களுக்கு வழி காட்டியவர்களும் இந்தப் பாரதப் புண்ணிய பூமியில் உண்டு. இந்த வரிசையில் சமீப காலத்தில் தோன்றிய மாமனிதர் சுவாமி விவேகானந்தர்.

இன்று நம் பாரதம் ஒரு சுதந்திர பூமி. இந்தச் சுதந்திர பூமியை உருவாக்குவதற்குப் போற்றுதலுக்குரிய நம் தேசபக்தர்களும் தேசியத் தலைவர்களும் எல்லையற்ற துன்பங்களையும் தியாகங்களையும் மேற்கொண்டனர். அவர்களை நாம் என்றென்றும் நன்றியுடன் நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அந்நியருக்கு அடிமைப்பட்டும் தன்மானமிழந்தும் உறங்கிக் கிடந்த இந்தியாவைக் தட்டியெழுப்பி, வீறுகொண்டெழச் செய்தார் சுவாமி விவேகானந்தர்.

சுவாமி விவேகானந்தரின் வீரமுழக்கம்தான், அவரது அறைகூவல்தான் இந்திய மக்களைச் சிலிர்த்தெழுந்து சுதந்திரப் போராட்டத்தில் அன்று ஈடுபட வைத்தது.

எனவேதான் மகாகவி பாரதியார், சுவாமி விவேகானந்தரைப் பற்றிச் சொல்லும்போது, விவேகானந்த பரமஹம்ச மூர்த்தியே இந்தியா விடுதலை பெறுவதற்கு அஸ்திவாரம் போட்டவர் என்பதை உலகம் அறியும் என்று குறிப்பிட்டார்.

சுவாமி அகண்டானந்தர் விவேகானந்தரின் தேசபக்தியை வர்ணிக்கும் போது:-

” …சுவாமிஜி பாரதத்தின் மீது கொண்ட அன்பு சாதாரண விஷயம் அல்ல. அது வெறும் தேசபக்தி (patriostism) அல்ல. அது தேசாத்மபோதம். சாதாரண மனிதர்களுக்கு இருப்பது “தேஹாத்மா போதம்”, அதாவது உடம்பைத் தானாக உணர்வது. சுவாமி விவேகானந்தருக்கு  இருந்ததோ ‘தேசாத்மபோதம்’. அதாவது நாட்டையே தானாக உணர்வது. நாட்டு மக்களின் சுகம், துக்கம், அவர்களின் கடந்த காலம், எதிர்காலம், நிகழ் காலம் என்பவை பற்றியே அவர் சிந்தித்தார்.

நாட்டிற்கு ஒரு புதிய இந்தியாவின் காட்சியை அளித்த முன்னோடிகளில் முதல்வராகத் திகழ்கிறார் சுவாமி விவேகானந்தர். சுதந்திரமான, புத்துணர்ச்சி ஊட்டப்பட்ட, புதுமைப் பொலிவு பெற்ற, புராதனப் பெருமை மீட்கப்பட்ட ஓர் இந்தியாவின் காட்சியை அவர் நமக்குத் தந்துள்ளார். அவர் தமது காட்சியை உணர்ச்சிப் பெருக்குடன் இவ்வாறு விவரிக்கிறார்:

‘இதுவரை இல்லாத அளவிற்குப் பெரும் சிறப்புடன் அத்தகைய இந்தியா உருவகிக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை… அவ்வளவுதான், எழுந்துருங்கள், விழித்திருங்கள். அழியாத தன் அரியாசனத்தில் புத்திளமையோடும் முன்பு எப்போதும் இல்லாத பெருமையோடும் அவள் வீற்றிருப்பதைக் காணுங்கள்.’

எதிர்கால இந்தியா முன்பு எப்போதும் இருந்ததை விடவும் மிகுந்த சிறப்போடும் பெருமையோடும் விளங்கப் போகிறது என்று சுவாமி விவேகானந்தர் தீர்க்க தரிசனமாகக் தெரிவித்திருக்கிறார். அவர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் நமது புராதான பெருமைகளை கொண்ட நவீன இந்தியாவை உருவாக்க வேண்டும். மீண்டும் பாரதம் உலகின் குருவாய் அமைந்திட வேண்டும். என்கிற நோக்கத்தில் பணிபுரிந்த ‘அமர பாரதம்’ இணையதள குழுவின், பணியின் அடுத்த கட்டமாக இளைஞர்களுக்கான மாதந்தோறும் ஆன்மிக-தேசிய இணைய இதழ் (E-magazine) நடத்த தீர்மானித்துளோம்.

சுவாமி விவேகானந்தரின் 158 வது பிறந்த தினத்தன்று முதல் பிரதியை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம். இணையதளதை போலவே இதற்கும் தங்கள் மேலான ஆதரவை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு

‘அமர பாரதம்’ ஆசிரியர் குழு

cropped-final-logo11.jpg

அன்னை பூமி பாரதம் – 2

அன்னை பூமி பாரதம்

உலகில் பரிணாம வளர்ச்சியை உற்று நோக்கும் பொது மனித சமுதாயத்தில்  மட்டுமே உறவுகளும் அதற்கு ஆதாரமான உணர்வுகளும் ஆழமாக வேரூன்றியுள்ளன.மற்ற உயிர்களிடத்து இத்தகைய உணர்வுகள் வளர வாய்ப்பில்லை.

பறவை உலகம் – தாய் செய் உறவு:

பறவை ஒன்று முடடையிட்டுக் குஞ்சு பொரிக்கிறது; பின்னர் அக்குஞ்சுப்பறவை தாய்ப்பறவையினிடத்து பாசம் வைத்திருப்பது அத்தாய்ப்பறவை இறை தேடித் தரும் வரைதான்; அதுபோலவே தாய்ப் பறவைக்கும் தனது குஞ்சு என்ற உறவு, அக்குஞ்சுப் பறவை சிறகு முளைத்து, சிறகடித்துப் பறந்து சென்று இதை தேடும் வரைதான். அக்குறிப்பிடட பருவத்திற்குப் பின்னர் தாய் – குஞ்சு என்ற உறவுமுறை பறவை உலகத்தில் இல்லை.

விலங்கு உலகம் – தாய் சேய் உறவு:

நாய்,பூனை,ஆடு,மாடு போன்ற விலங்குகள் தங்கள் குட்டிகள் தங்களிடத்தில் பால் குடிக்கும் பருவம்வரை பாசவுணர்வு கொண்டுள்ளன. தாய்ப் பசு தன கன்று என்ற அடையாளம் கண்டு கொள்வதும் – அது தன்னிடத்தில் பால் குடிக்கும் வரைதான். அது போல கன்றிற்கும் தனது தாய் என்ற உணர்வு அப்பசுவினத்தில் பால் குடிக்கும் வரைதான் உள்ளது. பல் குடிக்கும் பருவத்திற்கு மேலே இவ்வுறவுகள் அர்த்தமற்றவையாகி விடுகின்றன.

இந்த தாய் – சேய் உறவு முறை ஒன்றைத் தவிர வேறு உறவு முறைகள் பறவை உலகிற்கும், விலங்கு உலகிற்கும் இல்லை.

தாய்யில்லாமல் நானில்லை:

பறவை, விலங்கினத்தை விட மனிதப் பிறவியை எல்லோரும் உயர்ந்த பிறவியாகக் கருதுகின்றனர். சான்றோர்கள் பெறுதற்கரிய பிறவியாகவே மனிதப் பிறவியைச் சொல்லுகின்றனர்.

‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’  என்பது ஒவ்வையார் வாக்கு.

ஆறறிவு பெற்ற மனித இனம் தயனிடத்து பால் குடிப்பதை நிருத்திப் பல ஆண்டுகளுக்குப் பின்னாலும் ‘தாய்’  என்கின்ற ஆழமான உணர்வு போவதில்லை.

அதற்கு மிக முக்கியமான காரணம் உண்டு.

மனித இனத்தில் மட்டும் பறவையினத்தைப் போல, விலங்கினத்தைப் போல குழந்தை பிறந்த சில தினங்கள் அல்லது மாதங்களுக்குள்ளாகவே சுதந்திரமாக வாழ முடிவதில்லை.

main-qimg-c6f298fad6724647b20ba7ed9c211a58-cகுழந்தை பிறந்து அதை பாராட்டிச் சித்திரட்டி வளர்த்து, பின் அது  கவிழ்ந்து, தவழ்ந்து,அமர்ந்து,தளிர் நடைபயில்வதற்கு பல மாதங்கள் ஆகின்றன;பின்னர் நடந்து தானே உணவு உண்டு, மொழி பயின்று பேசி வாழ்வதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகின்றன. அதுவரை, நம்மை நம் தாயும் தந்தையும் பேணிப் பாதுகாத்து வருகின்றனர். குறிப்புபாகத் தன்னை வருத்திக் கொண்டு குழந்தையை வாழ வைக்கும் தாயின் சேவைக்கு ஈரேழு உலகத்தில்  எதைக் கொடுத்தாலும் ஈடாகாது. அதனால்தான் வேதம் முதலில் ‘மாத்ரு தேவோ பவ’ என்று மொழிகின்றது. தமிழ் வேதமும் ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை’ என்று இயம்புகின்றது.

மனித சமுதாயம் முழுவதிலும் தன்னை ஈன்றெடுத்த தாயை மதிக்கின்ற மனோபாவம் இயல்பானதாக அமைந்துள்ளது. இந்த மனோபாவம் தான் பார்க்கின்ற அனைத்தையும் தாயாகக் காணும்படி நம்மைச் செய்கின்றது.

பாரத நாட்டில் மட்டும்தான் தன்னை ஈன்றெடுத்த பெண்ணை மட்டும் தாயகப் பார்க்காமல் உலகிலுள்ள மற்ற பெண்களையும் தாயகப் பார்க்கும் கண்ணோட்டம் இயல்பாக இருக்கிறது.

இதனாலேயே தான் நம் பண்பாடு மற்ற எல்லாப் பண்பாடுகளையும் விட உயர்வானதாகக் கருதப்படுகிறது.

தாய்ப்பாலில்லாத போது தாய்ப்பாலுக்கு நிகரான தன் பாலக் கொடுத்து வளர்க்கும் பசுத்தாய் ஹிந்துக்களால் புனிதமாகப் போற்றி வணங்கப்படுகிறது. அதனால்தான் மஹாத்மா காந்தியடிகள் பசுவதை தடைச் சட்டம்   கொண்டுவர வேண்டும் என்றார்.

போலிப் பகுத்தறிவினால் பார்த்தால் நதியைத் தாயாகப் பார்ப்பது பைத்தியக்காரச் செயலாகத் தோன்றும்; அண்ணல்  உணர்வு பூர்வமாகப் பகுத்தறிவினால் பார்த்தால் நதி தாயாகிறது.இந்த ஹிந்து உணர்வு நாடெங்கும் விரவி நிற்கிறது. அதனால்தான் தமிழகத்தில் உள்ள நாத்திகள் கூட்டமும் கூட ‘காவிரித் தாய்’ என்று நதியைப் புகழ்வதை பார்க்கிறோம். ஒருபடி மேலே போய் காவிரித் தாய்க்குச் சிலை செடுப்பதையும் பார்க்க முடிகிறது.

விஞ்ஞான ரீதியாக   மட்டுமே சிந்தித்துச் செயல்படும் உலகில் எந்த விதமான உறவு முறைகளுக்கும் இடமிருக்க முடியாது. ஆன்மிக உணர்வுகள் நம் ரத்தத்தோடு கலந்து போய்விட்டதால்தான் தமிழகத்தின் போலிப் பகுத்தறிவு வாதிகள் தமிழ்த்தாய் என்று காவிரித்தாய் என்றும் மொழியையும் நதியையும் தாயாக உருவகப்படுத்தி அழைத்தனர். தமிழ்த்தாய்க்கும் சிலை அமைக்கின்றர். பாஷா ரூபிணி, வாக்தேவி என்று அம்பாளைப் போற்றுகின்ற தன்மைதான் மொழியைத் தாயகப் பார்க்க வைத்தது.

ஆன்மிக உணர்வுகள் இல்லாத வேறு எந்த நாட்டவரும் தங்கள் மொழியையும் நதிகளையும் தயாகப் பார்ப்பதில்லை.

அதர்வ வேதத்தில் ……

வெறும் பூப்பிரதேசமாக, நிலமாகப் பார்க்காமல் பூமித்தாயாக (பூமாதேவி) பார்க்கும் மொனோபாவம் தொன்றுதொட்டு ஹிந்துக்களாகிய நம்மிடம் இருந்து வந்துள்ளது.

“பூமித்தாயே! உன்னை அகழ்ந்து உழும்போது ஏற்படும் பள்ளங்கள் யாவும் உடனடியாக நிரைமேடு களாகட்டும்.

உன் உதிரத்து உதித்த நான் உனக்கு எவ்வித உறும் செய்யாமல் இருப்பேனாக. உன் உள்ளத்தில் வேதனையை ஏற்படுத்தாமல் நான் வாழ்வேனாக.

இந்திர தேவன் இந்த பூமியை எதிரிகளிடமிருந்து காத்து வருகிறான். பூமித்தாயே! எங்களை வாழ்விக்கும் வளத்தத்தினை எங்களுக்கு அருள்வாயாக! உன் மடியில் பாலும் தேனும் பெருக்கெடுத்து ஒடட்டும்.”

எனவே தான் எல்லாவற்றையும் தாயாகக் காண்கின்ற மனோபாவத்தை நம் ஹிந்து தர்மம் கற்று கொடுக்கிறது.

(ஆர்.பி.வி.எஸ். மணியன் அவர்கள் எழுதிய ‘புண்ணிய பூமி பாரதம்’ என்னும் நூலிலிருந்து பெரும்பாலான கருத்துக்கள் இங்கு எடுத்தாள பட்டுள்ளன.)

தேசபிரிவினையின் சோக வரலாறு – 26

கோட்சே செய்தது தவறு என்பதை இறைவன்தான் தீர்மானிக்கவேண்டும்.  காந்தியை கொன்றுவிட்டு கோட்சே ஒரு முறை இறந்தார்.  சம்பந்தமில்லாத RSS இன்று வரை பழி சுமக்கிறது.  முன்பே RSSஐ காங்கிரசுடன் இணைக்க சொன்னார் நேரு.  மறுத்தது சங்கம்.  நாளை இது பெரும் சவாலாக தனக்கு அமையும் என்று கருதிய நேரு எந்த விதமான ஆதாரமும் இல்லாமலே, இது சரியான சந்தர்ப்பம் என கருதி RSS தலைவர் குருஜியை கைது செய்து 6 மாதம் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யாமல் சிறைவைத்தார்.  சென்னை பிரபல வக்கீல் TVR சாஸ்திரி வக்காலத்து வாங்கி பேச, பட்டேலும் மும்பை ராஜதானி சட்டசபையில் RSSக்கும் காந்தி கொலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று பேச கொள்கைகளை விளக்கு எழுதி தரசொல்லி குருஜியை விடுதலை செய்தார்.  RSS மீதிருந்த தடை நீங்கியது.  ஆனால் அதற்குள் மக்களில் பலர் அவசரப்பட்டு நூற்றுக்கணக்கான ஸ்வயம்சேவகர்களை கொன்றார்கள்.

பல நாட்கள் கழித்து பிரிடிஷ் பிரதமந்திரி அட்லி ஒரு பேட்டியில் எங்களுக்கு காந்தியால் பிரச்சனையே இல்லை.  அவருடைய அஹிம்சா போராட்டம் எங்களை தொந்திரவு செய்யவே இல்லை என்றார்.  நிர்வாகத்திற்கு இடைஞ்சலாக இருந்ததா என்ற கேள்விக்கு MI – NI – MAL என்று இடைவெளிவிட்டு சொன்னார்.

Partition_of_India-en.svg_-1

ஆகஸ்ட் மாதம் 14 தேதி பாகிஸ்தானுக்கும் 15 ஆம் தேதி இந்தியாவுக்கும் சுதந்திரம் பிறந்தன.

மக்களில் பலர் நாடு ஒன்றாக இருந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.  தீவிரவாதம் தோன்றியிருக்காது என்று எண்ணுகின்றனர்.  அது அவரவர் கருத்து.  மாப்ளா கலவரம், கல்கத்தா, நவகாளி, சிந்து பகுதியில் கொலைகள் நடந்த போது யாருமே தீவிரவாதிகள் கிடையாது.  உலக வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லை.  இதற்கு முன்புவரை எத்தனையோ இனப்படுகொலைகள் நடந்திருக்கலாம்.  ஆனால் அவை அனைத்தும் அரசாங்கமோ , ஒரு கூட்டமோ செய்தது.  ஆனால் இதில்தான் மக்களே நேரடியாக பங்குகொண்டு கொன்றுகுவித்தனர்.  கொள்ளை அடித்தனர்.  கற்பழித்தனர்.  ஹிந்துக்களும் முஸ்லிம்களும் நிம்மதியாக வாழ ஒரே வழி ஒன்று நாட்டின் நாடி படித்து ஒத்து போய் ஒன்றாக வாழ்வது இல்லையேல் நிம்மதியாக பிரிந்து போய்விடுவது.  அகண்ட பாரதம் அமையுமா தெரியாது.  அப்படி அமைந்தால் முஸ்லிம்களை திரும்ப ஹிந்துக்களாக மாற்றிய பின்னரே சேர்த்துக்கொள்ளவேண்டும் என்ற முடிவோடுதான் இருக்கவேண்டும்.  இல்லையேல் அவர்கள் தனியாகவே இருக்கட்டும்.  நெருப்பு, பகை, கடன் இது மூன்றையும் கொஞ்சம் போல விட்டு வைக்கவே கூடாது.  அதுவே வளர்ந்து பெரும் ராட்சசனாகி நம்மை கொன்றுவிடும்.

பாகிஸ்தான் என்று ஒரு தேசம் வேண்டுமா என்ற தேர்தலில் பல்வேறு மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் வேண்டும் என்று வாக்களித்தார்கள்.  சிந்த் பிரதேசத்தில், அதாவது பாகிஸ்தான், வட மேற்கு பகுதிகளில் உள்ளவர்கள் வேண்டாம் என்று வாக்களித்தார்கள்.  ஆனாலும், அந்த பகுதி பிரித்து பாகிஸ்தான் என்று அவர்களுக்கு தரப்பட்டது.  ஏன் அந்த பகுதி?  ஏன் அஸ்ஸாம் தரப்படவில்லை?  ஏன் கொல்கத்தா, வங்காளதேசம் முழுவதுமாக தரப்படவில்லை?  ஏனென்றால் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ரஷியா தலை தூக்கும் என்ற எண்ணம் பிரிட்டிஷாருக்கு இருந்தது.  அதனால் அவர்கள் இந்தியாவோடு ரஷிய கை கோர்த்தால் இந்திய கடற்பரதேசங்களில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது என்று இப்போதைய  பாகிஸ்தானை பிரித்தார்கள்.  இரண்டு பக்கமும் நிம்மதி இல்லாமல் இருந்தால் இந்த நாடு தன்னை பாதுகாத்துக்கொள்ளவே திண்டாடும் என்று கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் என்று பிரித்தார்கள்.

பாகிஸ்தான் ஒரு புற்று நோய். வெட்டி போட்டாகிவிட்டது.  அது ஒரு இறையருள்தான்.  நமக்கு நம் வரலாறு தெரியவில்லை.  இதுதான் சாபம்,  பாகிஸ்தானை உயிரோடு வைத்திருக்க எது வேண்டும் என்று அவனுக்கு தெரிந்திருக்கிறது.  இந்திய மீது பகை.  பாட திட்டத்திலிருந்து தொலைகாட்சி செய்திகள் வரை இந்தியாவில் முஸ்லிம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பாதுகாப்பில்லை என்றே சிறு வயது முதலே சொல்லி சொல்லி வளர்க்கிறான்.  UNO கூட்டத்தில் ஜூல்பிகர் அலி புட்டோ  நம்மை நாய்கள் என்று திட்டினான்.  பெனாசிர் புட்டோ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் வந்து கொடியேற்றி நம்மை நாய்கள் என்று திட்டினாள்.  நமது பலம் நமக்கு தெரியவேண்டும்.  இயல்பாக நரசிம்ஹ ராவ்.ஒரு சுதந்திர தின சொற்பொழிவில் காஷ்மீரை பற்றி பேசுகிறார்.  காஷ்மீர் பற்றி இனி பேசுவதென்றால் அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மட்டும்தான் என்றார்.  இது பெரும் அச்சத்தை உண்டு பண்ணியது பாகிஸ்தானில்.  இது ஒரு போர் மிரட்டல் என்றனர்.  ஓய்வு பெற்ற பாகிஸ்தான் ராணுவ சொன்னார் என்னுடைய இந்தியாவுடனான மூன்று போர் அனுபவத்தில் சொல்கிறேன்.  பாரதம் என்றுமே பாகிஸ்தானுடன் போர் தொடுக்காது.  ஆனால் பாகிஸ்தான் போர் தொடுக்கும்.  இன்னொரு போர் நடந்தால் பாகிஸ்தான் உலக வரைபடத்திலிருந்து துடைத்து எறியப்படும் என்று.

Partition-of-India-Pakistan

உதவியே செய்தாலும் முஸ்லிம்கள் தங்கள் குணத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள் என்பதை பங்களாதேஷ் மூலமாக நிரூபிக்கிறார்கள் இன்றுவரை.  தீர்ந்த பிரச்சனை என்று எதுவுமே வரலாற்றில் இல்லை.  முதுகெலும்புள்ள அரசு அமைந்தால், காலமும் நேரமும் கூடி வந்தால் நம்மால் நிச்சயம் இந்த இரு பகுதிகளையும் நம்மோடு இணைக்க முடியும்.  அது நடக்கும் ஒரு நாள்.

நமக்கு நாமே சொல்லிகொள்வோம்.  நமது முன்னோர்கள் நமக்காக செய்த தியாகமும் பட்ட வலியும் கொஞ்சநஞ்சமல்ல.  நமது தேசத்தையும் தேசீயத்தையும் பாதுகாக்க பாடுபடுவோம்.  நாட்டை ஒருங்கிணைப்போம்.  அவர்கள் சிந்திய இரத்தத்தை உழைப்பால் துடைப்போம்.

முற்றும் என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு.  ஆகவே இனி ஒரு முறை இந்த தேசம் பிரிய கூடாது என்பதால் தேச பிரிவினையின் சோக வரலாற்றை இத்தோடு முடிந்தது என்று சொல்லி முடிக்கிறேன்.

வாழ்க பாரதம். 

வந்தே மாதரம். 

பாரத் மாதா கி ஜெய்.

நன்றி முகநூல் நண்பர் Anand Venkat, (RBVS மணியன், The Stern Reckoning – G.D.Khosla, May it please you honor – Nathuram Godse, The tragic story of partition of India – H.V.Seshadri)

தேசபிரிவினையின் சோக வரலாறு – 25

நீதிமன்றத்தில் கோட்சேயின் வாதம்!!!

3111

காந்தி தன செயல்களுக்கு காரணம் வைத்திருந்தது போல கோட்சேவும் வைத்திருந்தார். அவை:
காந்தியின் அஹிம்சா கொள்கையை நான் மறுதலிக்கவில்லை. அவர் ஒரு மகானாக இருக்கலாம். ஆனால் அவர் ஒரு அரசியல்வாதியே அல்ல. அவருடைய அஹிம்சை கொள்கை தற்காப்பையும் சுய முன்னேற்றத்தையும் கூட தடுக்கிறது. மனிதன் வாழ தேவையான போராட்டத்தை கூட வன்முறை என்று கூட தடுத்தல் அழிவு பாதையே தவிர அஹிம்சா பதை அல்ல. தேச பிரிவினை தேவையற்றது. முஸ்லிம்களின் மக்கள் தொகை, தேசத்தோடு ஒப்பிடும்போது எவ்வளவு பேர் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்?
தனி தேசம் உருவாகியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. இப்படி ஒரு கட்டாயம் இருந்திருந்தால் மவுலானா அசாத் இந்தியாவில் இருந்திருக்க மாட்டார். ஜின்னா பிடிவாதம் செய்தார். காந்தி அவர் பக்கம் சாய்ந்தார். தேசமே எதிர்த்த போதும், அரசாங்கம் எதிர்த்த போதும், காந்தியால் இது நிகழ்ந்தது. ஒரு தேசத்தை விட ஒரு தனிப்பட்ட மனிதன் என்றுமே உயர்ந்தவனாக ஆக முடியாது.
ஒரு மக்களாட்சியில் உங்களுடைய தேவைகளை கத்தி முனையில் நிறைவேற்ற முயற்சிக்கவே கூடாது. ஜின்னா அதை செய்தார். காந்தி அந்த கத்தியாலேயே தேசத்தின் முதுகில், மக்கள் முதுகில் குத்தினார். நாட்டை துண்டாக்கி ஒரு துண்டை பாகிஸ்தானுக்கு கொடுத்தார். நாங்கள் அன்று போராடினோம். அனைத்தும் வீணானது. நமது நாட்டின் தேசத்தந்தை பக்கத்து நாட்டுக்கு தந்தையின் கடமைகளை செய்தார்! காந்தியை மந்திரி சபையை தன்னுடைய “சாகும்வரை உண்ணாவிரதத்தால்” மிரட்டி பணிய வைத்தார். அவருடைய உடல், மிரட்டல்கள் அனைத்தும் நாட்டின் பூகோளத்திற்கும், பொருளாதாரத்திற்கும் தீமையை விளைவிக்கின்றன. இன்று முஸ்லிம்கள் நாட்டின் பகுதியை துண்டாடினார்கள். நாளை சீக்கியர்கள் பஞ்சாப் கேட்கலாம். மதங்கள் ஜாதிகளாக பிரிகின்றன. ஒவ்வொரு ஜாதியும், இனமும் நாடு கேட்கும். இப்படியே போனால் ஒரு நாடு ஒரு மக்கள் என்றெல்லாம் சொன்னது எதற்காக? எதற்காக பிரிட்டிஷாரை சேர்ந்து எதிர்த்தோம்? ஏன் பிரிந்து எதிர்க்கவில்லை? பகத் சிங் என்ன சுதந்திர பஞ்சாப் கேட்டானா இல்லை சுபாஷ் சந்திர போஸ் சுதந்திர வங்காளம் கேட்டாரா?

நான் இவரை கொல்ல போகிறேன். ஏனென்றால் இது என் கடமை. திருட்டுத்தனமாக கொன்றால் என் கண் முன்னேயே இது ஒரு குற்றமாகிவிடும். கொன்றுவிட்டு தப்பிக்கமாட்டேன். சரணடைவேன், தூக்கிலிடப்படுவென். ஒரு கொலை ஒரு தூக்கு. ஒரு கொலைக்கு இரு தூக்கு தண்டனை கூடாதென்று உங்களை தவிர்க்கிறேன். உதவிக்கு யாரும் வேண்டாம், கூட்டாளிகள் வேண்டாம். (இது நானா ஆப்தே மற்றும் வீர சாவர்க்கருக்காக சொல்லப்பட்டது. ஏனென்றால் அவர்களும் காந்திய கொள்கைகளுக்கு எதிரானவர்கள். கோட்சே காந்தியை யார் துணையும் இன்றி தானே கொல்லவேண்டும் என்று நினைத்தார். கடைசீவரை வீர சாவர்கருடன் இணைந்து பாரத நாட்டை பலமான சுதந்திர நாடாக ஆக்க பாடுபடுவேன் என்று நானா ஆப்தேயிடமிருந்து சத்தியம் வாங்கிகொண்டார். )

ஜனவரி மாதம் 30 தேதி, 12 மணிக்கு பிர்லா பவனை அடைந்தேன். காந்தி வெளியே ஒரு கட்டிலில் அமர்ந்து வெயிலை அனுபவித்துகொண்டிருந்தார். வல்லபாய் பட்டேலின் பேத்தி அவர் காலடியில் அமர்ந்து கொண்டிருந்தார். என் கையில் துப்பாக்கி இருந்தது. மிக சுலபமாக அவரை அங்கேயே கொன்றிருக்க முடியும். ஆனால் அவரை அங்கே கொல்லகூடாது என்று முடிவெடுத்தேன். அவர் கொல்லப்படபொவதில்லை தண்டிக்கப்படவிருக்கிறார் அவர் செய்த தவறுகளுக்காக. நான் அவரை கொல்லும்போது எனக்கு சாட்சிகள் வேண்டும். அங்கே யாரும் இல்லை. நான் தப்பிக்க விரும்பவில்லை. என் மனதில் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. கொன்றபின் சரணடைய வேண்டும். ஆனால் யாரிடம் போய் சரணடைவது. பஜனை நேரம் சாயங்காலம்தான். அப்போது நல்ல கூட்டம் இருக்கும். அன்றைய சாயந்திரம் சரியான நேரமாக இருக்கும் என்று முடிவெடுத்தேன்.

காந்தி படியேறினார். இரண்டு அடி முன்னால் வந்தார். தனது இரண்டு கைகளையும் இரண்டு பெண்களின் தோள்கள் மீது வைத்திருந்தார். இன்னும் எனக்கு மூன்றே நொடிகள்தான் தேவை. நானும் இரண்டு அடி முன்னால் வைத்தேன். காந்தியை நேருக்கு நேராய் பார்த்தேன். அவர் இதுவரை செய்த தியாகங்களுக்கும் சேவைகளுக்கும் அவரை ஒரு முறை வணங்கவேண்டும் என்று நினைத்தேன். அந்த இரண்டு பெண்களில் ஒருத்தி காந்திக்கு மிக ஆபத்தான அளவில் அருகில் இருந்தால். சுடும்போது அவள் மேல் படலாம் என்று பயந்தேன். முன்ஜாக்கிரதையாக இன்னும் ஒரு அடி முன்னால் சென்றேன். மரியாதையாக குனிந்து வணங்கினேன். மென்மையாக அந்த பெண்ணை தள்ளிவிட்டேன். அடுத்த நொடி காந்தியை சுட்டேன். அவர் மிகவும் க்ஷீணமாக இருந்தார். வெறுமனே ஒரு ஆஆஆ என்ற சத்தம் கேட்டது. கீழே விழுந்தார். ( காந்தி, ஹே ராம் என்று சொல்லி மடியவில்லை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. எல்லோரும் சேர்ந்து கட்டிய கதை அது என்கிறார்கள் பலர். MAY IT PLEASE YOUR HONOR என்றொரு புத்தகத்தில் மிக விரிவாக தன்னுடைய வாதத்தை முன்வைத்துள்ளார். அந்த புத்தகமே அவர் வாதத்தின் தொகுப்புதான். அற்புதமாக இருக்கும் அது. அவ்வளவு எளிதில் கிடைக்காது. முடிந்தால் வாங்கி படியுங்கள். )
சுட்ட பின் துப்பாக்கி இருக்கும் கையை தூக்கி போலிஸ் போலிஸ் என்று கத்தினேன். சுமார் 30 நொடிகளுக்கு யாரும் அருகில் வரவில்லை. ஒரு போலிஸ் அதிகாரியை பார்த்து நானே அருகில் வரசொல்லி சைகை செய்தேன். என் கையை பிடித்தார். இரண்டாமவர் வந்து துப்பாக்கியை வாங்கினார். கை நழுவ விட்டேன்.

தீர்ப்பை எழுதிய நீதிபதி கோர்ட் டைரியில் இவ்வாறாக எழுதியுள்ளார். இந்த தகவலை கோட்சே நீதிமன்றத்தில் சொல்லும்போது மன்றமே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஆனால் அமைதியாக இருந்தது. அவர் பேசி முடித்தபின் மின் விசிறி சுழலும் சப்தமும், காகிதங்கள் படபடக்கும் சப்தமும், மக்கள் அழுகையால் மூக்கை உறிஞ்சும் சத்தமும், விசும்பல் சத்தமும்தான் கேட்க முடிந்தது . அந்த சுற்றுப்புறமே மின்னலை பாய்ந்தது போல ஒரு அதிர்வு இருந்தது.

இதுவரை என் வாழ்நாளில் இவ்வளவு தெளிவான தீர்க்கமான, தெளிவான, ஆணித்தரமான ஒரு வாதத்தை நான் இது வரை கேட்டதில்லை. இந்த மக்களை இங்கு ஜூரியாக நான் அமர்த்தியிருந்தால் அவர்கள் இவரை விடுதலை செய்திருப்பார்கள். நல்ல வேலையாக இவர்கள் ஜூரி இல்லை நான் அப்படி செய்யவும் இல்லை. வழக்கு விசாரிக்கப்படும் முன்னரே தீர்ப்பை நான் தீர்மானித்துவிட்டேன். நடந்தது வெறும் சடங்குதான். அவருக்கு பேச சந்தர்ப்பம் கொடுக்கப்படவேண்டும் என்பதால் அவரை பேச அனுமதித்தேன். என் உள்ளம் துக்கத்தால் விம்முகிறது என்று சொல்லி, இந்த கையெழுத்தை இடும்போது கண்ணிலிருந்து நீர் உருண்டு கையெழுத்தை நனைத்தது என்று முடித்திருக்கிறார்.

இம்மி அளவு துக்கமின்றி கோட்சே இறந்தார். தூக்கிலடப்படும் முன் அழைத்து செல்ல வந்த போலிஸ் மேலதிகாரி அழுகிறார். அவரை சமாதானப்படுத்திய பின் ஏதாவது கடைசி ஆசை இருந்தால் சொல்லுங்கள் என்றனர். எனக்கு ஒரு நல்ல காபி குடிக்க வேண்டும் போல் உள்ளது என்று கேட்டு வாங்கி குடித்தார். தன் மாமாவிடம் தான் வாங்கியிருந்த 100 ருபாய் கடனை திருப்பி அடைக்க வேண்டும் என்று சொன்னார். தான் அடைப்பதாக அந்த அதிகாரி சொல்ல நிம்மதியுடன் இனி நான் இந்த உலகிற்கு தர, பெற எதுவுமில்லை, விடை பெறுகிறேன் தாயே என்று சொல்லி RSS பிரார்த்தனையான ‘நமஸ்தே சதா வத்சலே மாத்ரு பூமே’ ஸ்லோகத்தை சொல்லிவிட்டு ‘பாரத் மாதா கீ ஜெய் என்று முடித்துவிட்டு தூக்கில் தொங்கினார். ஒரே நொடியில் இறந்தார்.

நன்றி முகநூல் நண்பர் Anand Venkat, (RBVS மணியன், The Stern Reckoning – G.D.Khosla, May it please you honor – Nathuram Godse, The tragic story of partition of India – H.V.Seshadri)

தேசபிரிவினையின் சோக வரலாறு – 24

இந்த பக்கம் என்னவோ செய்யுங்கள் என்று நேரு வெளிநாடு சுற்றுபயணம் சென்றார். நேருவை போன்ற ஒரு பொறுப்பில்லாத  பிரதம மந்திரியை இந்த தேசம் இதுவரை கண்டதில்லை.   மூவர்ணக்கொடி காங்கிரசின் கொடியாக அதுவரை இருந்தது.  இவர் போய் UNஇல் ராட்டையை அகற்றி ஒரு சக்கரத்தை போட்டு அது அசோகரின் தர்ம சக்கரம் என்றார்.  உங்கள் தேசிய கீதம் எது என்று கேட்டபோது யாரையும் கேட்காமல் ஜனகணமன என்றார்.  திரும்பி இங்கு வந்தபோது இது பெரும் பிரச்சனையை ஆனது.  எல்லோரும் யாரை கேட்டு மூவர்ணக்கொடியையும், ஜனகனமனவையும் தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டபோது முடிந்தவரை பேசி சமாளித்தார்.  இது பேண்ட் வாத்தியத்தில் அடங்காது என்றார்.  கிருஷ்ண ராவ் ப்ஹுலம்ரீகர் இதற்கு சிறப்பாக இசை அமைத்து காட்டினார்.  இல்லை இல்லை இதை கார்டன் ஏற்கவேண்டும்.  அவர்தான் மேல்நாட்டு இசைக்கு சக்ரவர்த்தி என்றார்.  அடித்து பிடித்து அவரிடம் சென்று போட்டு காட்டினார் கிருஷ்ண ராவ் ப்ஹுலம்ரீகர்.  அற்புதம், அபாரம் என்று பாராட்டி கடிதம் கொடுத்தார்.  அதை கொண்டு வந்து நேருவின் அலுவலகம் முன்னால் மணிக்கணக்காக நின்றும் உபயோகம் இல்லை.  அந்த பக்கம் வந்த SK பாட்டில் என்பவர் இவரை கண்டு விசாரிக்க, இவர் விவரம் சொல்ல, பொசுக்கென்று உள்ளே கூட்டிக்கொண்டு போனார்.  நேருவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அந்த ரிகார்டை இங்கே வைத்துவிட்டு போங்கள் என்றார்.  அதோடு முடிந்தது.  இதற்கு மேல் முடியவில்லை என்ற நிலையில் பாபு ராஜேந்திர பிரசாத்திடம்  சென்று இதுதான் கொடி, இதுதான் தேசியகீதம் என்று சொல்லுங்கள் என்று கெஞ்சி முடிக்க வைத்தார்.  ராஜேந்திர பிரசாத் ஜனகனமன, வந்தே மாதரம் இரண்டுமே தேசிய கீதம் என்று முடித்தார்.  இன்றும் நமது அரசியலமைப்பு சட்டத்தில் இரண்டுக்கும் சம அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளன. இதே போல மூவர்ணக்கொடி.  ஒவ்வொன்றுக்கும் ஒரு விளக்கம் கொடுத்தார்.  கடைசியில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஒரு அரிய விளக்கம் கொடுக்க இரண்டும் முடிவுக்கு வந்தது.

 

Mahatma Gandhi on the National Flag of India

DNymRW3UIAEaU7Q

இந்த கட்டத்தில் பட்டேலின் நிலைமையை சிந்தித்து பாருங்கள்.  இரும்பு மனிதன் என்ற பட்டம் எதற்கு? நாட்டை இணைத்ததற்கா?  எப்படி இணைத்தார்?  அங்கே மவுண்ட்பேட்டன் 560 சமஸ்தானமாக நாட்டை பிரித்து வேண்டுமென்றால் இந்திய பகுதி இல்லையேல் பாகிஸ்தான் இல்லையேல் தனி சமஸ்தானங்களாக இருக்கலாம் என்று விஷத்தனமாக அறிவித்தான்.  இந்த அனைத்து சமஸ்தானங்களையும் நேரடியாக பேசி, ஆளனுப்பி, புரியவைத்து, படையெடுத்து, கோடி அணிவகுப்பு செய்து, மிரட்டி, அடித்து என்று அனைத்து ராஜதந்திரங்களையும் செய்து இணைத்தார்.  அதுவும் வெறும் இரண்டே ஆண்டுகளில்.  பட்டேல்தான் சோமநாதர் ஆலயம் அமைந்துள்ள ஜுனாகத் சமஸ்தானத்தை கலவரம் தூண்ட வைத்து கிளர்ச்சி ஏற்படுத்தி இணைத்தார்.  தன் நாய்களுடன் பாகிஸ்தான் நோக்கி விரைந்தான் அந்த நவாப்.  ஹைதராபாத் நிஜாம் தன்னுடைய ரஜாக்கர்களை விட்டு அந்த பிரதேசத்திலுள்ள அனைத்து ஆண்களை கொள்ளவும் பெண்களை கற்பழிக்கவும் ஆணை பிறப்பித்தான். என்று ராணுவம் வரவேண்டுமோ அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே வந்துவிட்டது.  பிறகுதான் பாலங்களை தகர்க்க, சாலைகளை மரங்களை வெட்டி போட்டு மறிக்க திட்டமிட்டிருந்தனர்.  ரஜாக்கர்களின் அட்டூழியம் தாங்க முடியாமல் இருந்தது.  ஒரேயொரு ஆணைதான் இராணுவத்திற்கு இருந்தது.  தாடி, தொப்பி, சுன்னத் இதில் ஏதாவது ஒன்று இருந்தாலும் கேள்வி கேட்காமல் கொன்றுவிடு என்பதுதான் அது.  இரண்டே நாட்களில் ஹைதராபாத் பணிந்தது.  அதன் பிறகு 15 ஆண்டுகளுக்கு எந்த முஸ்லிமும் தாடி தொப்பி எல்லாம் அணியவேயில்லை.  நேருவிடம் வெறும் கொடி அணிவகுப்பு என்று சொல்லி இராணுவத்தை அனுப்பி இணைத்தது பிடிக்கவில்லை நேருவுக்கு.  பட்டேல் மீது கடும் கோபம் கொண்டார்.  காட்டான் என்று திட்டினார்.  1950 இல் அவர் இறக்கும் முன்.  பட்டேலின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள கூடாதென்று உத்தரவு பிறப்பிக்கும் அளவிற்கு நேரு கீழிறங்கினார்.  காஷ்மீர மன்னன் ஹரிசிங் ரெண்டுகெட்டாந்தனமாக குழம்பினார்.  அங்கே சுதந்திர பாகிஸ்தானிலிருந்து காட்டுவாசிகள் கூட்டம் வெறிகொண்டு உள்ளே வர, இவரிடமிருந்த மொத்த ராணுவமோ முஸ்லிம்கள், அனைவரும் அவர்களோடு சேர, இறுதியில் பட்டேல் RSS தலைவர், குருஜியை அனுப்பி பேச சொன்னார்.  மன்னர் இந்தியாவுடன் சேர சம்மதித்தார்.  இரண்டே நாளில் கையெழுத்தானது.  காஷ்மிர விமான ஓடுதளம் பாழாகி இருந்தது.  பனி வேறு ஒரு பக்கம்.  ஜம்முவிலிருந்த ஸ்வயம்சேவகர்கள் இரவு பகலாக உழைத்தனர்.  ஓடுபாதையை ஏழே நாட்களில் செப்பனிட்டனர்.  அப்போது ஆயுதங்களை கொண்டு செல்ல விமானங்கள் இல்லை.  அனைத்து சிவில் விமானங்களும் தேசியமயமாக்கப்பட்டன.  எல்லா நாற்காலிகளையும் பிடுங்கி எறிந்து அனைத்தும் ராணுவத்திற்காக பயன்படுத்தப்பட்டன.  கண்ணிமைக்கும் நேரத்தில் காஷ்மீரத்தில் அமைதியை திருப்பினார்கள் இராணுவத்தினர். (கடைசியாக 1961 ஆண்டு சில நூறு ச்வயம்செவகர்கள் கோவாவை தாக்கினார்கள்.  உடனடியாக இராணுவம் விரைந்தது.  கோவாவை இந்தியாவோடு இணைத்தது.)

displayphoto1
Sri Guruji and Kashmir Raja Harisingh

இவையனைத்தும் ஒரு புறம் நடக்க திடீரென்று தினம்தோறும் லட்சகணக்கில் அகதிகள் வர ஆரம்பிக்க சமாளிக்க முடியவில்லை அரசால்.  திணறியது.  எலும்பை உறையவைக்கும் குளிர் அப்போது டில்லியில்.  ஒண்ணரை கோடி அகதிகள், எங்கு செல்வது இவர்களை தங்க வைக்க?  கூடாரங்கள் அமைக்கப்பட்டன.  திருமண மண்டபங்கள், பெரிய ஹால்கள், எதுவுமே போதவில்லை.  இத்தனை பேருக்கு தினம் உணவு, தண்ணீர், மருத்துவம், கழிவறை ஏற்பாடு என்று பறந்து பறந்து வேலை செய்தது நிர்வாகம்.  கடைசீயாக உபயோகமே இல்லாமல் எந்த தொழுகையும் நடக்காமல் Archaeological துறையின் கீழிருந்த ஷாஜஹான், அக்பர் கட்டிவிட்ட மசூதிகள் மிக பெரியவை என்று அங்கே தங்க வைக்க ஏற்பாடு செய்தார்.  உடனே ஓடினார்கள் முஸ்லிம்கள் காந்தியிடம்.  எங்கள் மசூதிகளின் புனிதத்தன்மையை கெடுத்துவிட்டார்கள், அங்கே அகதிகளை தங்க வைத்துவிட்டார்கள் என்று புலம்பி தீர்த்தனர் முஸ்லிம்கள்.  யாரென்றார் காந்தி.  பட்டேலென்று தெரிந்ததும் அவரை வர சொன்னார்.

உறையவைக்கும் பனி, உணவில்லை, தண்ணீரில்லை, மருத்துவர்கள் போதவில்லை, கூடாரங்கள் கட்ட துணியில்லை, ஆகவே தற்காலிகமாக தங்கவைத்தேன்.  பிறகு காலி செய்து கொடுத்துவிடலாம் என்றார்.  இன்னும் சில வாரங்கள் பொறுத்துகொள்ளுங்கள் என்றார்.  காந்தி பாகிஸ்தானுக்கு தரவேண்டிய 55 கோடி என்ன ஆயிற்று என்றார்.  (எந்த நேரத்தில் என்ன கேள்வி பாருங்கள்) எனக்கு அகதிகளுக்கு செலவழிக்கவே பணமில்லை. இப்போது தர முடியாது.  அவர்கள் போருக்கு தயாராகிறார்கள்.    காந்தி சொன்னார் அதைவிட கொடுத்த வாக்கை காப்பாற்றுவது முக்கியம்.  நீ பாகிஸ்தானுக்கு 55 கோடி தரும்வரை, அகதிகளை மசூதிகளிலிருந்து வெளியேற்றும்வரை  நான் உண்ண மாட்டேன்.  சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க போகிறேன் என்று அமர்ந்தார்.  நாடு அதிர்ந்தது.

இவ்வளவு சக்தியும், திடமும், வைராக்கியமும் காந்திக்கு இருந்ததென்றால் இதை வைத்து ஜின்னாவையும், காங்கிரசையும் மடக்கி நாட்டை பிரிக்கவிடாமல் தடுத்திருக்கலாமே?  முஸ்லிம்கள் புலம்பியபோது வந்த கோபம், ஹிந்துக்கள் கொல்லப்படும்போது வரவில்லையே?  முஸ்லிம்களுக்கு ஒரு அளவுகோல், ஹிந்துக்களுக்கு ஒன்று.  நாடு பிரிந்த பிறகும் கூட முஸ்லிம்கள் தாஜாவை அவரால் மறக்க முடியவில்லை.  மனம் வெறுத்தார் பட்டேல்.  அமைதியாக குஜராத் போய் சேர்ந்து திரும்ப வரமாட்டேன் என்று சொன்னார்.

என்னை இரண்டாக வெட்டி போட்டுவிட்டு நீங்கள் நாட்டை பிரியுங்கள்  என்றீர்களே, நீங்கள் உயிரோடு இருக்கிறீர்களே, நாடு பிரிந்துவிட்டதே என்று கேட்டதற்கு, “வாழ்நாளெல்லாம் நான் கண்ட கனவு சிதறடிக்கப்பட்டது.  என்னுடைய வாழ்க்கை குறிக்கோள் சாக்கடை நீரில் அடித்துக்கொண்டு போய்விட்டது.  அரை நூற்றாண்டுகாலமாக நான் பட்ட பாடெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.  கொழுந்துவிட்டெரியும் தீ, ஆரை ஓடும் இரத்தம்.  இவற்றைத்தான் நான் என் கண் முன்னே பார்க்கிறேன்”  என்றார்.  இத்தனை நடந்தும், இத்தனை பேசியும் எதற்காக என்று தெரியாமலே மீண்டும் மீண்டும் செய்த தவறுகளை செய்துகொண்டே இருந்தார்.

காஷ்மீரம் முழுமையாக நம் வசம் வருவதற்குள் நேரு திரும்பி வந்தார்.  பட்டேலை திரும்ப அழைத்து வந்தார்.  பணத்தை பாகிஸ்தானுக்கு கொடுத்து உறையும் பணியில் அனைவரையும் இழுத்து வெளியில் போட ஏற்பாடு செய்தார்.  காஷ்மீரம் வெளியுறவுத்துறையின் கீழ் வருகிறது.  அது என் துறை.  அதை நான் பார்த்துகொள்கிறேன் என்றார்.  காட்டுமிராண்டிகளும் பாகிஸ்தான் ராணுவமும் வந்து மிக பெரும் பகுதியை பிடித்தார்கள்.  நமது இராணுவம் திரும்ப தாக்கி இஸ்லாமாபாத் வரை சென்று அடித்தார்கள். நேரு இராணுவத்தை திரும்ப வரசொன்னார் மவுண்ட்பேட்டன் ஆலோசனைப்படி.  UNனிடம் புகார் சொல்ல சொன்னார் மவுண்பேட்டன்.  வென்ற இடங்களையெல்லாம் திரும்ப தரவைத்தார்.  ஹைதராபாத்தை நேரு இல்லாத நேரத்தில் இணைத்த பட்டேலால் அவர் வந்து பிறகு காஷ்மீரத்தை அவர் பொறுப்பில் விட வேண்டி வந்தது.  இன்று வரை அந்த பிரச்சனை தொடர்கிறது.  அப்போது மாராட்டிய மாகாணத்தை சேர்ந்த ஒருவன் முடிவெடுத்தான் காந்தியை கொல்வதென்று.  இனி வாழ அவருக்கு தகுதி இல்லை என்று நினைத்தான்.  அங்கே ஹிந்து பெண்கள் கற்பழிக்கப்ப்படும்போது, ஆண்கள் கொல்லப்பட்டபோது காந்தி சொன்ன அறிவுரை அனைவரையும் கொதிக்க வைத்தது.  அவர் சொன்னார், “முஸ்லிம்கள் உங்களை கற்பழிக்க வந்தால், அவர்களோடு சண்டையிடாதீர்கள்.  தடுக்காதீர்கள்.  உங்கள் மூச்சை பிடித்துக்கொண்டு உயிரை விடுங்கள்.  ஆண்கள் ஒரு முனுமுனுப்பின்றி வீரமாக அமைதியாக இறந்து போங்கள்.  நாமெல்லாம் ஹிந்துக்கள்.  இறந்தால் பிறக்கத்தானே போகிறோம்? ”  என்றார்.  இந்த தன்மை, இந்த பேதலித்த புத்தி, இந்த அபாயகரமான போக்கு என்னை ஒரு சுயநலமில்லாத, எந்த எதிர்பார்ர்ப்பும் இல்லாத, பல ஆயிரக்கனக்கனவர்களால் மதிக்கப்பட்ட ஒரு மாமனிதரை சுட வைத்தது என்றார்.

go

இதற்கு மேல் ஹிந்து சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பதற்குள் இவர் தீர்த்துக்கட்டபடவேண்டும் என்று எண்ணினார்.  RSSஸோடு அவர் பேசப்பட்டதற்கு 1932இல் விலகினேன் என்றார்.  16 ஆண்டுகாலம் அவரை கொல்ல எந்த முட்டாளும் காத்திருக்க மாட்டான். இதை உணராமல் பலர் இன்றும் இவர் கொலைக்கு RSS மீது பழிபோடுகின்றனர்.  இவரை கொன்றதால்தான் ஹைதராபாத்தை இணைக்க முடிந்தது.  பாகிஸ்தானுடன் போர் தொடுக்க முடிந்தது என்றார் கோட்சே.

நன்றி முகநூல் நண்பர் Anand Venkat, (RBVS மணியன், The Stern Reckoning – G.D.Khosla, May it please you honor – Nathuram Godse, The tragic story of partition of India – H.V.Seshadri)

தேசபிரிவினையின் சோக வரலாறு – 23

மிக சில கிராமங்களில், முஸ்லிம்கள் ஹிந்துக்களுக்கு உதவ முன்வந்தார்கள்.  ஹிந்துக்கள் அனைவரையும் மதம் மாற்றினார்கள்.  கொல்ல வந்த முஸ்லிம்களிடம் பேசி. அவர்கள் இனி முஸ்லிம்கள் என்று சமாதானம் பேச முயன்றார்கள்.  இவ்வளவு தூரம் வந்துவிட்டு நாலு பெரியாவது கொன்றால்தான் நிம்மதி என்று சிலரை கொன்றுவிட்டு அரைமனதுடம் போனார்கள் முஸ்லிம்கள்.  சீக்கியர்கள் வீடுகளில் வைத்தும் அரிசி மில்களில் வைத்தும் கொளுத்தப்பட்டனர்.  மிச்சமிருந்தவர்கள் சண்டையிட்டு இறந்தார்கள்.  எவ்வளவுதான் ஹிந்துக்களும் சீக்கியர்களும் சண்டையிட்டாலும் வந்திருந்தவர்கள் அதிகம் பேர் இருந்ததால் ஆள் பலமோ துப்பாக்கி ரவைகளோ மற்ற ஆயுதங்களோ என்றுமே போதவில்லை.8. India Pakistan

இந்தியாவை நோக்கி செல்லும் மிக சில புகைவண்டிகளில் கூட பெண்களிடமிருந்து நகைகள், உடைகள் கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டன.  தப்பித்த சில பெண்களும் தாய்தந்தையர் எதிரிலேயே மிரட்டி தூக்கி செல்ல பட்டார்கள்.  கதறி அழும் குழந்தைகளுக்கு கொடுக்க தண்ணீர் கூட இன்றி தங்கள் சிறுநீரையே மற்றவர்கள் முன்னால் கழிந்து பிடித்து குடிக்க கொடுத்தார்கள்.  கல்லெறிதல், கடத்தல், திருட்டு, கொலை எல்லாம் புகைவண்டிகளிலும் நிலையங்களிலும் சர்வசாதாரணமாய் நடந்தன.  கற்பழிக்கப்பட்டு தப்பிய பெண்கள் சுமார் 50,000 பேருக்கு  ஒரே மாதத்தில் கருத்தடை செய்யும்படி ஆனது.

பதிலுக்கு, ஹிந்துக்களும் சீக்கியர்களும், பாகிஸ்தானுக்கு சென்றுகொண்டிருந்த முஸ்லிம்களை நூற்றுக்கணக்கில் கொன்றார்கள்.  எவ்வளவு முயன்றாலும் அவர்களால் முஸ்லிம்களின் கொலைவெறிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.  ஹிந்துக்களால் சிலரை கொல்லமட்டும்தான் முடிந்தது.  முஸ்லிம் பெண்கள் யாருமே பலாத்காரம் செய்யப்படவில்லை.  இது ஒரு அதிசயம்தான். பாகிஸ்தானில் RSS இயக்கத்தின் ஸ்வயம்சேவகர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தார்கள்.  அவர்களிடம் குருஜி சொன்னார்.  நீங்கள் இறந்தாலும் பரவாயில்லை.  எவ்வளவு பேர் முடியுமோ அவ்வளவு பேரை காப்பாற்றுங்கள் என்று.  அந்த ஒரு வார்த்தைக்காக ஆயிரக்கணக்கான ச்வயம்சேவகர்கள் முஸ்லிம்களோடு சண்டையிட்டு மடிந்தார்கள்.  அவர்கள் போராடும் அந்த சில மணிநேரத்தில் இந்தபக்கம் பலர் தப்ப வழி செய்து கொடுத்து தாக்குதலை தாமதப்படுத்த முடிந்தது.  அப்படி ஒரு முக்கிய சிக்ஷக்காக இருந்து, சிந்து பகுதி சிறுவர்களுக்கு பயிற்சி அளித்த ஒருவர் இன்றும் தாம்பரத்தில் உயிரோடு இருக்கிறார்.   இந்த நிகழ்ச்சி பற்றி பேசினாலே நான் வளர்த்த பிள்ளைகள், என் குழந்தைகள் போய்விட்டார்களே என்று அழுகிறார்.

நடந்து  கடக்க முயன்றவர்கள் கதி?  சுமார் 300 கிலோமீட்டர் நடந்தால்தான் இந்திய வந்து சேர முடியும்.  வயதானவர்கள், நிறைமாத கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், ஆடு மாடுகள், அனைத்தையும் ஒரே நாளில் தூக்கிக்கொண்டு எப்படி வருவது?  வரும் வழியிலேயே பிரசவம் நிகழ்ந்துவிடும்.  நிற்க முடியாது.  நின்றால் தொலைந்தார்கள்.  இரத்தம் சொட்ட சொட்ட குழந்தையை கையில் வாங்கியபடி நடக்கவேண்டியதுதான்.  இதற்கு இடையில் அந்த பிள்ளைபெற்ற பெண்ணின் கணவனின் சகோதரியை ஒருவன் கடத்தினால் அவன் இவளை பார்ப்பானா, அவளை பார்ப்பானா?  தங்கையை விட்டுகொடுத்து மனைவியை காப்பாற்ற வேண்டி அழுதுகொண்டே போவான்.  இவை அனைத்தும் நடந்த விஷயங்கள்.  சென்னை அமெரிக்கன் தூதரகத்தின் அருகில் உள்ள OXFORD UNIVERSITY PRESS வெளியிட்டுள்ள THE  STERN  RECKONING வெளியிட்டுள்ள தகவல்கள் நூறு கதைகள் சொல்லும்.  கர்ப்பிணி பெண்களை சர்வசாதாரணமாக வயிற்றை கிழித்து கொன்றார்கள்.  வெளியே வந்து விழும் அந்த குழந்தையை அப்படியே ஆகாயத்தில் வீசி எறிந்து கத்தி முனையில் குத்தி பிடிப்பார்கள்.  குழந்தை இறக்கும், அதை கண்ட தாயும் இறப்பாள்.   மேலே சொன்ன புத்தகத்தில் ஒரு EXCEL SHEET போட்டு எந்தெந்த ஊரில் எவ்வளவு கொலை, கொள்ளை, கற்பழிப்பு, எவ்வளவு பேருக்கு கை கால் போனது என்று பட்டியலிட்டுள்ளார்கள்.  அகதிகளிடமிருந்து நேரடியாக திரட்டிய தகவல்கள்.  பதிவாகாமல் போனவை இன்னும் அதிகம்.  இந்த கொலை விழா சுமார் இரண்டு ஆண்டுகள் நடந்தது.  நேருவும் காந்தியும் இதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.  பிதற்றலாக ஏதேதோ அறிக்கைகள் விட்டபடி இருந்தார்கள்.

THE  STERN  RECKONING – DOWNLOAD

அம்பேத்கர் சொன்னார், மொத்த மக்கள்தொகையும் மாறட்டும்.  இங்கு ஒரு முஸ்லிம் கூட இருக்க கூடாது.  அங்கு ஒரு ஹிந்து கூட இருக்க கூடாது என்று.  ஜின்னா இதை ஆதரித்தார்.  அவரை முஸ்லிம்கள் கேட்டார்கள், “உங்களை கீழ்மையாக நடத்தும் இந்த ஜாதி ஹிந்துக்களுக்காகவா பேசுகிறீர்கள்? ” என்று.  அவர் சொன்னார்.  அது எங்கள் அண்ணன் தம்பி பிரச்சனை.  இதை ஒரு அந்நிய மதத்துக்காரனை வைத்துகொண்டு பேசவேண்டியதில்லை என்று.  எப்பேர்பட்ட STATESMAN பாருங்கள் அவர்.  உடனே முஸ்லிம்கள்  காந்தியிடம் புகார் சொன்னார்கள்.  இதை காந்தியும் நேருவும் வன்மையாக கண்டித்தனர்.  விரும்புபவர்கள் போகலாம்.  மாற்றவர்கள் இங்கேயே இருக்கலாம், வற்புறுத்தகூடாது என்று நிராகரித்தனர்.

கான் அப்துல் கபார் கான்
கான் அப்துல் கபார் கான்

கான் அப்துல் கபார் கான் என்று ஒரு முஸ்லிம், அவரை எல்லை காந்தி என்று அழைப்பார்கள். அவர் போராடி பல ஹிந்துக்களை காத்து எல்லை வரை உயிருடன் போக உழைத்தார்.  நூற்றுக்கணக்கான ஹிந்துக்கள் அவரால் பிழைத்தனர்.  மிக தைரியமாக ஆயுதம் தாங்கிய முஸ்லிம்களை எதிர்த்து ஹிந்துக்களை காத்தார்.  அவர் பின்னே சிகப்பு சட்டை அணி என்று ஒன்று இணைந்து வேலை செய்தது.

 

 

நன்றி முகநூல் நண்பர் Anand Venkat, (RBVS மணியன், The Stern Reckoning – G.D.Khosla, May it please you honor – Nathuram Godse, The tragic story of partition of India – H.V.Seshadri)

தேசபிரிவினையின் சோக வரலாறு – 22

11india-spl1

பிரிவினைக்கு பிறகு ஜின்னா தானே பாகிஸ்தானின் கவர்னர் அதிபராக படைத்தலைவராக பொறுப்பேற்பேன் என்று சொன்னார்.  இங்கே நேரு நீங்களே இங்கு இரு பொறுப்பிலும் இருங்கள் என்று சொல்லிவிட்டார்.  யாரையும் கேட்கவேயில்லை.

Cyril Radcliffe
Cyril Radcliffe

இங்கே சிரில் ராட்க்லிப் இரண்டு எல்லை கமிஷன்களை தலைமை ஏற்றான்.  ஒன்று பெங்கால் கமிஷன், இன்னொன்று சிந்து கமிஷன்.  இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் இருக்க முடியவில்லை.  இருப்பது இரண்டே மாதம்.  அவனில்லாமலே பல கூடுதல்கள் நடந்தன.  பல முக்கிய விஷயங்களை அவன் கேட்கும் நிலையிலும் இல்லை.  அதற்கு நேரமும் இல்லை.  களத்திற்கு சென்று நிலைமையை ஆராய்ந்து பிரித்து கொடுக்கவும் இல்லை.  மனம் போல கோடுகளை வரைந்தான்.  லாகூர் ஹிந்துக்கள் அதிகமாக வாழும்பகுதி, சீக்கியர்களின் புனித ஸ்தலம் என்று எவ்வளவோ சொல்லியும் உங்களுக்கு கல்கத்தாவை கொடுத்தேன்,உங்களுக்கே லாஹூரையும் கொடுக்க முடியுமா, ஏதாவது ஒரு பேரு நகரம்தான் உங்களுக்கு என்று அதை பாகிஸ்தானுக்கு தாரை வார்த்தான்.  எந்த எதிர்ப்பையும் மதிக்கவில்லை.  மவுன்பேட்டனிடம் எந்த புகாரையும் எடுத்து செல்ல முடியவில்லை.  இந்த கமிஷனில் இருந்த மகாஜன் என்பவரது குடும்பம் இந்தியாவில் உள்ளதா பாகிஸ்தானில் உள்ளதா என்று அவருக்கே தெரியவில்லை கடைசி  நிமிடம்வரை.  ஏனென்றால் 14ஆம் தேதி பாகிஸ்தானுக்கு சுதந்திரம். நமக்கு 15 ஆம் தேதி.  எல்லைகள் தீர்மானிக்கப்பட்டது 17 ஆகஸ்டில்.  சில மணிநேரத்தில் எல்லாவற்றையும் போட்டுவிட்டு தன குடும்பத்தை மட்டும் உயிரோடு கூட்டி வரமுடிந்தது மகாஜனால்.

partition_riots_20040823இந்த பிரிவினை காலத்தில் நடந்த கொடூரங்கள் மனித பண்புகளை மீறியதாக இருந்தது.  இனி எப்பொழுதும் இந்த அளவிற்கு வன்முறை நடத்த முடியாது என்ற அளவிற்கு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.  மலபாரை, கல்கத்தா மிஞ்சியது.  கல்கத்தாவை நவகாளி மிஞ்சியது.  இவை அனைத்தையும் ஒருங்கே சேர்த்தால் கூட பாகிஸ்தான் பிரிவின்போது ஹிந்துக்கள் பட்ட கஷ்டத்திற்கு ஈடாகாது.

மற்ற பிரதேசங்களில் இருப்பது போல சிந்திலும் ஹிந்துக்களும் சீக்கியர்களுமே முதலாளிகள்.  முஸ்லிம்கள், முன்பு சொன்னது போல முஸ்லிம் மன்னர்கள் முடி இழந்ததனால் கிடைத்த வேலைகளை செய்து வந்தார்கள்.  ஹிந்துக்கள் அவர்களுக்கு வேலை தந்ததால் ஏதோ பிழைப்பு இருக்கிறதே என்று இருந்துவிட்டார்கள். தகுதியை வளர்த்துக்கொள்ள, பெரிதாக பொருளீட்ட முயலவில்லை.  இந்த வாய்ப்பை அவர்கள் தங்கமான வாய்ப்பாக பார்த்தார்கள்.  இதை விட்டால் வேறு சந்தர்ப்பமே இல்லை என்று உணர்ந்தார்கள்.  போதாதற்கு மத வெறியும் தூண்டப்பட்டது.  கொள்ளையடிக்க, கொலை செய்ய காரணம் கிடைத்தது.  என்ன குற்றம் செய்தாலும் யாரும் கண்டுகொள்ளபோவதில்லை என்ற எண்ணம் அவர்களுள் மிருகத்தை தூண்டியது.

india_pakistan_division_28_02_2016பெற்றவர்கள், உறவினர்களை கட்டிபோட்டு அவர்கள் முன்னால் இளம் பெண்கள் ஒரே சமயத்தில் பலரால் பலாத்காரம் செய்யபட்டார்.  பலர் கடத்தப்பட்டனர்.  எங்கிருக்கிறார்கள் என்று கடைசீவரை தெரியாமே போயிற்று.  வெட்டவெளியில், நடைபாதைகளில், தெருவில், புகைவண்டிநிலையங்களில், விளையாட்டு மைதானங்களில் இன்னும் எல்லா இடங்களிலும் பெண்கள் பலாத்காரம் செய்யபட்டார்கள்.  அழகாக இருந்தால் பலமானவர்களால் கடத்தி கொண்டு செல்லப்பட்டு வீட்டிலே வைத்து தங்கள் இச்சைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்தினார்கள்.  சின்ன குழந்தைகளை இரண்டு கால்களையும் பிடித்து இரண்டாக கிழித்து கொன்று போட்டார்கள்.  நவகாளியில் ஆனது போல பெரியவர்களது கால்களை வண்டியில் கட்டி கிழித்து கொன்றார்கள்.  சில இடங்களில் உயிரோடு வைத்து அருகே வைக்கோல் போரை கொளுத்தி கருக அடித்து, வறுத்து, எரித்து கொன்றார்கள்.   ஒரு கசாப்பு கடைக்காரனை ஹிந்து தாய் கேஞ்சியிருக்கிறாள் தன குழந்தையை விட்டுவிட சொல்லி.  தான் அணிந்திருந்த 16 சவரன் தங்கத்தை தந்திருக்கிறாள்.  வாங்கிகொண்டு கண்முன்னாலேயே சீவி கொன்றிருக்கிறான்.  (போலீசில், ராணுவத்தில் முஸ்லிம்கள் இருக்க கூடாது என்று சொன்னேனே, இதோ காரணம்.)  இவற்றில் பல இடங்களில் காவல் துறையினர், தாசில்தார், கமிஷனர் என்று பலர் துணை போயுள்ளனர்.  போலீஸ்காரர்கள் ஜீப்பில் ரோந்து வரும்போது கொள்ளையர் கூட்டம் வந்தால் அடித்த கொள்ளையில் 50% போலீசுக்கு கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு.  மிச்சம் கொள்ளை அடித்தவர்கள் தங்களுக்குள் பங்கு போட்டுகொள்வார்கள்.  பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட பின்  மார்பகங்கள் அறுக்கப்பட்டு நிர்வாணமாக உயிரோடு விரட்டபட்டார்கள்.  இரத்தம் வழியவழிய அவர்கள் முகாம்களில் வந்து விழுந்து இறந்த கதைகள் ஏராளம்.  ஆண்களின் உறுப்புகள் அறுக்கப்பட்டன அல்லது கல்லால் அடித்து சிதைக்கப்பட்டன.  நாய்களும், கழுகுகளும் தின்று தீர்த்தன பிணங்களை.

நன்றி முகநூல் நண்பர் Anand Venkat, (RBVS மணியன், The Stern Reckoning – G.D.Khosla, May it please you honor – Nathuram Godse, The tragic story of partition of India – H.V.Seshadri)

தேசபிரிவினையின் சோக வரலாறு – 21

net690_010518060040முதலில், எல்லைகள் நிர்ணயிப்பதை முடித்துவிட்டு, பின் சுதந்திரம் என்று பேச்சு இருந்தது. 1948இல் தான் சொல்லியிருந்தார்கள்.  திடீரென்று அள்ளி தெளித்து அவசராவசரமாக கொடுக்க காரணம்?  திடீரென்று வருடக்கணக்கில் குறைக்க காரணம்?  அங்கே சுபாஷ் சந்திர போஸ் எனும் ஒரு வீரன் பெரும்படையுடன் ஷில்லாங் வழியாக டில்லி சலோ என்ற குரலுடன் உள்ளே நுழைந்தான்.  ஜப்பானியர்கள் மூலமாக சென்னையிலும் இன்ன பிற இடங்களிலும் குண்டு மழை பொழிந்தன.  அஹிம்சை வேலைக்கு ஆகாது என்று போர் மூலம் விடுவிக்க முடியும் என்று வந்தார் சுபாஷ் சந்திர போஸ்.  நிலத்திலும் நீரிலும் சண்டை துவங்க அனைவருக்கும் உள்ளே விடுதலை உணர்ச்சி பொங்கியது.  மிக அதிக அளவில் தேவர்களும், கூர்க்காக்களும் அந்த படையில் இருந்தார்கள்.  முத்துராமலிங்க தேவர் சொன்னதை கேட்டு அனைவரும் போய் சேர்ந்தார்கள்.  முஸ்லிம்கள் படையும் சிறிய அளவில் இருந்தது.  இவர்களுக்கு முறையான பயிற்சி இல்லாததால் நசுக்க மிகவும் சிரமப்படவில்லை பிரிட்டிஷ் ராணுவம்.  ஆனால் இது வேறு விதமான தாக்கத்தை உண்டு பண்ணியது.  1857இல் காங்கிரசை துவக்கிய ஹ்யும் சொன்னனே தூக்கி எறியப்படுவீர்கள் இன்னொரு முறை ராணுவம் பொங்கினால் என்று.  அது நடந்தது.  மும்பையை சேர்ந்த கப்பல் படை 1946 இல் எங்களை வைத்தே எங்கள் படைகளை நசுக்குவதா என்று கலகத்தில் ஈடுபட்டனர்.  நடுங்கியது பிரிட்டிஷ் அரசு.  ஏற்கனவே இரண்டாம் உலகப்போரில் வென்றிருந்தாலும் மிகவும் பலவீனப்பட்டு போயிருந்தது.  அதனால் சட்டென்று சுதந்திரத்தை கொடுத்துவிட்டு இடத்தை காலி செய்வோம் என்று முடிவுக்கு வந்தது.  ஆக சுதந்திரம் கொடுத்து விடுவது என்ற முடிவுக்கு பிரிட்டிஷ் வந்தது காந்தியால் அல்ல.  சுபாஷ் சந்திர போஸ் அவர்களால். (சுபாஷ் சந்திர போசுடன் பணியாற்றிய ஒரு வீரர், அமீர் ஹன்சாய் என்பவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.  வணங்கிவிட்டு வந்தேன்)

இப்படி அவமானப்பட்டு வெளியேறுவதை தாங்கமுடியவில்லை பிரிட்டிஷாரால்.  அவர்கள் நேதாஜி தங்களுக்கு உயிரோடு வேண்டும் என்று ஒரு நிபந்தனையை விதித்தார்கள்.  நேரு எதிர்த்தார்.  பின்னர் ஒப்புக்கொண்டார்.  அவரை ரகசியமாக தீர்த்துகட்ட நேரு உதவியதாக புரளிகள் அடிபடுகின்றன.  அவரது மரணம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இன்னமும் இரசியமாக ( classified document) வைக்கப்பட்டுள்ளன என்று சொல்கிறார்கள்.

சிப்பாய் கலகத்திற்கு பிறகு மவுண்பேட்டன் பயந்தார்.  அசிங்கப்படாமல் வெளியேற திடீரென்று ஆகஸ்ட் 1947, 15 ஆம் தேதி சுதந்திரம் என்று அறிவித்தார்.  வெறும் இரண்டே மாதங்கள் அன்று இருந்தன.  தலைவர்கள் தடுத்தார்கள்.  நாட்டை பிரிப்பது, எல்லைகளை நிர்ணயிப்பது, சொந்தபந்தங்களை விட்டு வருவது, ஆங்காங்கே இருக்கும் தொழில்களை பைசல் செய்துவிட்டு வருவது என்பது இரண்டு மாதங்களில் நடக்கக்கூடிய காரியமல்ல என்றார்கள்.  மறுத்தான் மவுண்ட்பேட்டன்.  வேறு வழியில்லாமல் இந்திய தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். எல்லை கமிஷனை நிர்ணயிக்க CYRIL RADCLIFFE சிரில் ராட்க்லிப் என்பவனை நிர்ணயித்தான் மவுண்பேட்டன்.  இவனை பற்றி எதுவுமே தெரியாமல் மயங்கி ஒப்புகொண்டார் நேரு.

main-qimg-9d0d6a6d79a3644060aa831d6df9e715-c
Nehru with Pamela Mountbatten

இவன் ஜின்னா பாரிஸ்டராக இங்கிலாந்தில் பணியாற்றியபோது ஜூனியராக பணிபுரிந்தவன்.  தனக்கு சாதகமாகத்தான் முடிவெடுப்பான் என்று நம்பிக்கை கொண்டார் ஜின்னா.  நேருவும் காந்தியும் இந்நாட்டிற்கு தந்த தொல்லைகள் அளவிட முடியாதது.  அவை இன்றுவரை தொடர்வதுதான் விசேஷம். மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினா மீது நேருக்கு இருந்த காதல், அதை மவுண்ட்பேட்டன் கண்டுகொள்ளாமல் இருந்தது நேருவின் கண்ணை மறைத்தது.  மவுன்ட்பேட்டனுக்காக எதையும் செய்ய துணிந்தார்.  பமீலா என்பவள் மவுன்பேட்டனின் மகள்.  அவளுடைய சரிதையில் இதை பற்றி எழுதியுள்ளாள்.  இது தவிர பல இடங்களில் இணையதளத்திலும் உள்ளன. இதை மவுண்ட்பேட்டன் கண்டுகொள்ளாமல் மூன்றுவழி காதல் என்றொரு பெயர் சூட்டினார்.  (http://www.dailymail.co.uk/femail/article-1216186/The-shocking-love-triangle-Lord-Mountbatten-wife-founder-modern-India.html)

நன்றி முகநூல் நண்பர் Anand Venkat, (RBVS மணியன், The Stern Reckoning – G.D.Khosla, May it please you honor – Nathuram Godse, The tragic story of partition of India – H.V.Seshadri)