ஸ்ரீ குருஜி பார்வையில் சமுதாய நல்லிணக்கம்

ரமேஷ் பதங்கே


வனவாசி சகோதரர்கள்

சமுதாய நல்லிணக்கம் பற்றி சிந்திக்கும்பொழுது வனவாசி சகோதரர்களையும் பற்றி சிந்திக்க வேண்டும். ஆங்கிலேயர்கள் அவர்களை ‘ஆதிவாசி’ என்று கூறினார்கள். அதாவது வனவாசிகள் ஆதிவாசிகள், மற்ற அனைவரும் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று பொருள்படுகிறது. ”ஆதிவாசிகள் பாரதத்தின் பழங்குடிமக்கள், ஆரியர்கள் அவர்களின் மீது படையெடுத்து, காட்டுக்குத் துரத்தினார்கள். ஆதிவாசிகள் இயற்கையையும், விலங்குகளையும் வழிபடுபவர்கள். ஹிந்து சமயத்திற்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஹிந்து சமுதாய கட்டமைப்பில் அவர்களுக்கென்று இடமில்லை. நான்கு வர்ணங்களில் அவர்கள் இடம்பெறவில்லை” போன்ற கருத்துக்களை ஆங்கிலேய ஆட்சியாளர்களின் ஆதரவுடன் மிஷனரிகள் பரப்பி குழப்பம் ஏற்படுத்தினார்கள்.

ஆதிவாசி என்னும் சொல்லை உபயோகிப்பது அதனால் ஏற்படும் குழப்பத்தால் வரக்கூடிய ஆபத்துகளை ஸ்ரீ குருஜி அறிந்திருந்தார். மலைகளில், குகைகளில் வசிக்கும் இந்த சகோதரர்களை அவர் அந்நியர்களாக எண்ணவில்லை. அவர்களை ‘வனவாசி’ என்று குறிப்பிட்டார். நகரத்தில் வசிப்பவர்கள் நகரவாசி, கிராமத்தில் வசிப்பவர்கள் கிராமவாசி. அதுபோன்று வனத்தில் வசிப்பவர்களுக்கு வனவாசி என்று பெயர் கொடுத்தார் ஸ்ரீ குருஜி. நகரவாசி, கிராமவாசி, வனவாசி, நாம் அனைவரும் பாரதவாசிகளே. பாரதமாதாவின் நற்புத்திரர்கள். ஒரே மாபெரும் சமுதாயத்தின் அங்கம். ஒரே தேசத்தின் அங்கம் என்பது ஸ்ரீ குருஜியின் கருத்து.

வனத்தில் வசிக்கும் நமது சகோதரர்களுடன் நமக்கு நல்லிணக்கம் ஏற்படவேண்டும். அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று விவரிக்கையில் ஸ்ரீ குருஜி, “புறக்கணிக்கப்பட்ட இந்த சகோதர்களிடையே சென்று அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக முழுசக்தியுடன் பாடுபட வேண்டும். அவர்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கும்படி திட்டமிட வேண்டும். இந்த சிந்தனைகளை செயல்படுத்துவதன் பொருட்டு, கல்விக்கூடம், மாணவர் விடுதி பயிற்சி மையங்கள் ஆகியவற்றை திறக்கவேண்டும். ஹிந்து சமுதாயத்தில் மற்றவர்களுக்கும் அவர்களுக்கும் நல்லிணக்கம் ஏற்படுவதன் பொருட்டு உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்னும் எண்ணங்களை விட்டொழித்து, சமத்துவ எண்ணத்துடன் மனப்பூர்வமாக அவர்களுடன் பழகிவரவேண்டும். (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-11.)

வனவாசிகளின் வாழ்க்கை முறையை ஸ்ரீ குருஜி நன்கு அறிந்திருந்தார். ஓரிடத்தில் நிலையாக இல்லாமல் நாடோடிகளாகத் திரியும் அவர்களது இயல்பை நன்கு அறிந்திருந்தார். நிலையான வசிப்பிடம் இருந்தால்தான் கல்வி, பண்புப்பதிவு ஆகியவை கைகூடும். ‘மக்கள் ஓரிடத்தில் நிலையாக வாழ்வதற்கு தூண்ட மனிதாபிமானத்துடன் முயன்றால்தான் முடியும். வனங்களில் வசிக்கும் இந்த சகோதரர்களை சந்தித்தபின் அவர்கள் பல நல்ல குணங்கள் நிரம்பப் பெற்றவர்கள் என்பதை அறிய முடிகிறது. துணிவு, அறிவுகூர்மை, உழைப்பு, நேர்மை, மனப்பூர்வமான பரிவு, கலாச்சார ஆன்மிக தகுதி. சிறந்த படைவீரர்களை வனவாசி சமூகம் தந்திருந்தது.”- இது ஸ்ரீ குருஜி கூறும் விஷயம். வனவாசிகள் வசிக்குமிடத்தில், அந்நிய நாட்டு மத போதகர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களது செயல்பாடுகளினால் தேச ஒற்றுமைக்கு பேராபத்து என்பதை அவர் அறிவார். ஆயினும், விமர்சனம் செய்வதை அவர் விரும்பவில்லை. ”அந்நிய நாட்டு மதத்தை பிரசாரம் செய்பவர்களின் செயல்முறையை நாம் நன்கு கவனிக்கவேண்டும். அவர்களின் செயல்பாடுகளில் எத்தகைய தீவிர ஈடுபாடும், முயற்சியும் காணப்படுகிறது. அவர்கள் எவ்வளவு பெரிய துயரங்களையும் புன்முறுவலுடன் ஏற்றுக்கொள்கின்றனர். தொலைதூர நாடுகளிலிருந்து வந்து வனங்களுக்கு சென்று, அங்கு வசிக்கும் மக்களின் மத்தியில் சிறு குடிலில் வசிப்பதென்பது, சந்தேகத்திற்கிடமின்றி பாராட்டத்தக்கதும், பின்பற்றக் கூடியதுமாகும். அவர்கள் வனவாசி மக்களுடன் பழகி அவர்களது மொழியையும் கற்று, அவர்களது பழக்கவழக்கங்களுடன் இரண்டறக் கலந்து விடுகின்றனர். அவர்களின் பழகுமுறை மென்மையானது; மிகவும் அன்புடன் பழகுகிறார்கள். நாம் இந்த மிஷனரிகளிடமிருந்து சிறிதேனும் தெரிந்து கொள்ள இயலாதா? (ஸ்ரீ குருஜி சிந்தனை களஞ்சியம், தொகுதி-11)

ஹிந்து சமுதாயம் பல நூற்றாண்டுகள் வரை வனவாசிகளை கவனிக்காமல் விட்டுவிட்டதால் எண்ணாததால், அவர்கள் மற்ற ஹிந்துக்களிடமிருந்து விலகி நிற்கின்றனர். அன்பும், தொடர்பும் இல்லாது போய்விட்டது. அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. அவர்களுக்கு உகந்த தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படாததால், அவர்களது உற்பத்தித்திறன் குறைந்து, அவர்கள் ஏழைகளாகி விட்டனர்.

சமயஞானம் அவர்களை சென்றடையாததால், மூடநம்பிக்கைகள் தொடர்பான செயல்களில் சிக்கியிருக்கிறார்கள். இவை அனைத்தையும் ஸ்ரீ குருஜி நினைவுபடுத்துகிறார். எத்தனை இடர்கள் வந்தாலும், துயரங்கள் வந்தாலும், அனைத்தையும் கடந்து, நாம் வனவாசிகளின் வசிப்பிடத்திற்கு சென்று பணிபுரிய வேண்டும். மற்ற ஹிந்துக்கள் அவர்களிடையே சென்று, அவர்களுக்கு கல்வி புகட்டி, கலாசாரத் தரத்தையும் அவர்களின் வாழ்க்கை நிலையையும் உயர்த்தி இதுவரை அவர்களை மறந்திருந்ததற்கு பிராயச்சித்தம் செய்தல் வேண்டும் என்பதையும் நினைவுபடுத்துகிறார். (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம்: தொகுதி-11,)

சுருங்கக்கூறின், நமது வனவாசி சகோதரர்கள் நம்மவர்கள் என்பது ஸ்ரீ குருஜியின் கண்ணோட்டம். ஹிந்து சமுதாயத்தைச் சேர்ந்த மற்றவர்கள் அவர்களை உதாசீனப்படுத்தியதே, அவர்களின் இன்றைய மோசமான நிலைக்கு காரணம் என்று அவர் கூறுகிறார். இதற்கு பிராயச்சித்தமாக, அவர்களுக்கு கருணை காட்டுவதாக இல்லாமல், நமது கடமை என்றெண்ணி அவர்களுக்கு தொண்டு புரியும்படி இதயத்தின் அடியாழத்திலிருந்து அவர் அறைகூவல் விடுத்தார். ஸ்ரீ குருஜியின் இந்த கண்ணோட்டத்தினால் தான் வனவாசி கல்யாண் ஆசிரமம் ஆரம்பிக்கப்பட்டு, வனவாசி சகோதரர்களுக்கு தொண்டு செய்யும் அமைப்பாக விளங்குகிறது. இன்று இந்த அமைப்பின் மூலம் இந்த உயர்ந்த பணி, நாடு முழுவதும் சிறந்த முறையில் நடைபெற்றுவருகிறது.

சேவை

சமுதாய நல்லிணக்கம் ஏற்படுவதில் தொண்டுப் பணியின் பங்களிப்பு ஈடு இணையற்றது. சமுதாயத்தில் பலவகைகளில் சேவை நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்கான தூண்டுதலும் வெவ்வேறு விதமாக உள்ளது. பல தொண்டுகள் புண்ணியம் சேர்ப்பதற்காக நடக்கின்றன. சில தொண்டுகளுக்கு கருணை தூண்டுதலாக அமைகிறது. சிலர் புகழ் பெறுவதற்காக சேவை செய்கிறார்கள். சிலர் பண்பாளர்களாவதற்கு தொண்டு புரிகிறார்கள். சிலர் சேவாகாரியங்களை, அரசியலில் நுழைவதற்கு வாயிலாக கருதுகிறார்கள். ஸ்ரீ குருஜி சேவாகார்யங்கள் பற்றி பரந்த மிக விரிவான கண்ணோட்டத்தை முன்வைத்தார்:

ஸ்ரீ குருஜியின் ஆளுமையிலும் சிந்தனைகளும் சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களின் ஆழ்ந்த தாக்கம் இருந்தது. சுவாமி விவேகானந்தர் தரித்திர நாராயணன்’ என்னும் சொற்றொடர் பயன்படுத்தினார். ஏழையிடம் இறைவன் வசிக்கிறான் என்று எண்ண வேண்டும்; ‘ஜீவனுக்கு சேவை சிவனுக்கு பூஜை’ என்ற உணர்வுடன் சேவை செய்ய வேண்டும். ஸ்ரீ குருஜி இந்த பாதையில் செல்லும் சாதகர். ‘ஏழ்மையில் வாடுபவர்களையும், துன்புறுபவர்களையும் காணும்போது, அவர்கள் அனைவரையும் இறைவனின் வடிவம், இறைவனே தனக்கு சேவை செய்யும் வாய்ப்பை அளித்திருக்கிறான் என்று எண்ணி, அந்த எண்ணத்துடன் அவர்களுக்கு சேவைபுரிய முனையுங்கள் ” என்று அவர் கூறுகிறார். (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-5,)

இன்று சமுதாயத்தில் இன்னல்களும், ஏழ்மையும் கடுமையாக உள்ளன. சமுதாயத்தின் ஓரிடத்தில் சிலர் அனைத்து செல்வங்களும் நிரம்பப் பெற்றிருக்கின்றனர். மற்றோரிடத்தில் மக்கள் முற்றிலும் நலிந்து கிடக்கிறார்கள். அவர்கள் ஒருவேளை கூட வயிறார உண்ண முடியாமல் இருக்கிறார்கள். இத்தகையவர்கள் பற்றியே ஸ்ரீ குருஜி இரவும் பகலும் எண்ணிக் கொண்டிருந்தார். ஸ்ரீ குருஜியிடம் மிகவும் பிரியமுள்ள ஒரு கார்யகர்த்தா, உடல் நலத்தின் பொருட்டு தினமும் உணவில் சுத்த நெய் சேர்க்கவேண்டும் என்று எழுதி, நெய் அனுப்பியிருந்தார். அவருக்கு எழுதிய கடிதத்தில் ஸ்ரீ குருஜி, ”நமது நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் ஒரு வேளை உண்ண உணவு கிடைக்காமல் உள்ளனர். அப்படி இருக்கும்போது, நெய் சேர்ப்பது என்பது என்னால் இயலாது” என்று குறிப்பிட்டிருந்தார். இதே காரணத்தினால், ஸ்ரீ குருஜி ஒரு வேளை மட்டுமே உணவருந்தினார். நல்லிணக்கம் காண இதை விட சிறந்த வழிமுறை வேறென்ன இருக்க முடியும்?

பசியுடன் உடுக்க உடையின்றி தாகத்தால் வாடி, பிணியால் நொந்தவர்கள் எல்லா வீதிகளிலும் தென்படுகிறார்கள். இதை நினைவில் கொண்டு, “எவரும் பசியால் வாடும்படி விடமாட்டோம் என்று உறுதியுடன் நாம் அனைவரும் செய்லபட வேண்டும். ‘பீடிக்கப்பட்ட ஒருவர் நம் பொறுப்பில் உள்ளார்’ என்று எண்ண வேண்டும் என்றார். நமது உண்மையான சமயம் என்ன என்பதை அவ்வப்போது நினைவுபடுத்தினார். “சமுதாயத்தைப் புறக்கணிப்பது நமது சமயமல்ல. சில நேரங்களில் மனிதர்கள், ஆன்மீகவாதி என்பதன் பொருளை விந்தையாக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் விபூதி பூசிக்கொள்கிறார்கள், சந்தனம் பூசிக்கொள்கிறார்கள், மணி அடித்து விளக்கமாக பூஜை செய்கிறார்கள். ஆனால், சமுதாயத்தைப் பற்றி எண்ணுவதில்லை. இது ஆன்மீகம் அல்ல; சமயவாதி என்ற தோற்றத்தை உருவாக்கும் வேலை இது. இந்த சமுதாயம் நம்முடையது. எனவே, சமுதாயத்தைப் பற்றி சிந்தனை செய்வதும், தன்னைத்தானே காத்துக்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையை ஒவ்வொரு மனிதனிடமும் ஏற்படுத்துவதும் நமது சமயம்”. (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-5,)

மனிதனை இறைவனின் வடிவமாக எண்ணி, அவனுக்கு தொண்டு புரிய வேண்டும் என்பதே ஸ்ரீ குருஜியின் வாக்கு. சேவையின் மூலம் என்ன ஏற்பட வேண்டும் என்று தெளிவாக்குகிறார். “சமுதாயத்தை தன்னம்பிக்கை உடையதாகவும், முன்னேற்றம் அடைந்ததாகவும், சுயமரியாதை உடையதாகவும் உருவாக்குதல் வேண்டும். சமுதாயத்தின் பாதுகாப்புக்காக முயற்சிக்க வேண்டும். எனவே, நமது மக்களிடையே நிலவும் வேறுபாடுகளை அகற்றி, நாம் உண்மையான, மனப்பூர்வமான, பரிவு நிறைந்த ஒருமையை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் நமக்கு நெருங்கியவர்கள் என்ற எண்ணம் பேச்சளவோடு – இல்லாமல் உளப்பூர்வமாக உண்மையானதாக இருக்க வேண்டும். சொல்லில் ஒன்று, மனதில் ஒன்று போன்ற வெளிவேட அனுதாபம் தேவையில்லை. சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு சோதரரும் நம்மைச் சேர்ந்தவர் என்ற தூய பரிவு என்ற அவசியம்” (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-3, பக்கம்-)

சமுதாயத்தில் நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கு நமது மனநிலை எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதை ஸ்ரீ குருஜி வரையறுத்திருக்கிறார். சமுதாய நல்லிணக்கம் என்பது மனதின் தன்மை. பரிவு இல்லாமல் நல்லிணக்கம் ஏற்படாது. எனவே தான், ஸ்ரீகுருஜி ‘நம்மவர் என்ற பரிவு’ என்னும் உணர்வை அடிக்கடி நினைவூட்டுகிறார்.

ஹிந்து சமுதாயத்தின் அனைத்து மக்களிடையேயும், எவ்வாறு நல்லிணக்க நாட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகிறாரோ அவ்வாறே, ‘மதசிறுபான்மையோர்’ எனப்படும் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் ஆகியோர் சமுதாயத்துடன் எவ்வாறு இணக்கமாகிட வேண்டும் என்பதையும் ஸ்ரீ குருஜி குறிப்பிட்டுள்ளார். “பாரதத்தில் சிறுபான்மையினர் தாங்கள் தனிப்பட்டவர்கள் என்று கூறாமல், தேசிய வாழ்வுடன் ஒன்றிப்போக வேண்டும். அவர்கள் தாங்கள் தனிப்பட்டவர்கள் என்று நினைப்பார்களேயானால் பிரிவினை எண்ணம் வளரும். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதின் தூண்டுதலால் அது வளர்ந்து ஒவ்வொரு பிரதேசத்திலும் ”குட்டி பாகிஸ்தான் கோரிக்கை வலுவாகி வருகிறது. அரசியல் ஆதாயத்திற்காக ஆளும் கட்சியினரும், மற்ற அரசியல் தலைவர்களும் சிறுபான்மையினருக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இதனால் தனிப்படுதல் ஊக்குவிக்கப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது. தேசிய வாழ்வுடன் ஒன்றிணைந்து தாங்கள் தனிப்பட்டவர்கள் என்ற பேச்சைக் கைவிட்டு, சிறுபான்மையினர் முழுமையாக தேசிய வாழ்வுடன் ஒன்றிப்போவதே இந்த பிரச்சனைக்கு தீர்வாகும். இந்த காரணத்தினால் தான் நான், ஹிந்து மதத்திற்கே மீண்டும் வந்துவிடுங்கள் என்று அறைகூவல் விடுக்கிறேன். அவர்களது முன்னோர்கள் ஹிந்துக்களே. எனவே, அவர்கள் தங்களது வேரான ஹிந்து தர்மத்திற்கு மீண்டும் வருவதன் மூலம் தேசிய வாழ்வுடன் எளிதில் இணக்கம் கொள்ளமுடியும். இன்று சுத்தி செய்வதன் மூலம் ஹிந்து தர்மத்தை ஏற்றுக்கொள்கின்றனர். ஆயினும், பாரதத்தில் ஹிந்து அல்லாதவர்களில் பெரும்பாலானவர்களின் முன்னோர்கள் ஹிந்துக்களாக இருப்பதால், ‘சுத்திகரணம்’ என்று கூறாமல், ‘சொந்த வீட்டிற்கு திரும்புதல்’ என்றே கூறுகிறேன்.

கேள்வி: அவர்கள் ஹிந்து தர்மத்தை ஏற்றுக்கொள்ளும் போது, சுத்தி சடங்கு அவசியமில்லை என்று தாங்கள் கருதுகிறீர்களா?

ஸ்ரீ குருஜி: சுத்திசடங்கு இருக்கட்டும். ஆனால், அது நாம் ஹிந்து தர்மத்திற்கு திரும்பி விட்டோம் என்ற எண்ணத்தை தோற்றுவிப்பதற்கு மட்டுமே. கடவுளை அவரவர்களின் பரம்பரையில் வந்துள்ள விதிமுறைப்படி வழிபடட்டும். இதற்கு எவ்வித ஆட்சேபணையும் இருக்கக் கூடாது. கடவுளை உண்டு என்று ஏற்றுக்கொண்டபின், கடவுளை பலவிதங்களில் வழிபடலாம் என ஹிந்து தர்மம் ஏற்கிறது. எனவே, மீண்டும் ஹிந்து தர்மத்திற்கு வருகின்றவர்களின் வழிபாட்டுமுறை முன்பு பழகிய விதமாகவே இருக்கலாம். இதற்கு எவ்வித ஆட்சேபணையும் இருக்கக்கூடாது.

ஆயினும், தேசிய வாழ்வில் நல்லிணக்கத்தையும், ஒருமைப்பாட்டையும் கொண்டுவருவதற்கு பதிலாக, பிரிவினையும் மற்றும் ஒற்றுமையின்மையும் ஊக்குவிக்கப்படுகிறது. இதற்கு காரணமாக இருப்பவர்கள் தங்களை பொறுப்புள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். உதாரணமாக, உருது மொழியை எடுத்துக்கொள்வோம். பாரதத்தின் தேசிய மொழியை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக உருதுமொழிக்கு அங்கீகாரம் கோருகிறார்கள். இதற்கு அங்கீகாரம் அளிப்பவர்கள் அரசியல் தலைவர்களே. துருக்கி நாட்டில் துருக்கி, பாரசீகத்தில் பார்சி, அரேபியாவில் அரபுமொழி ஆகியவையே உள்ளன. சுருங்கக்கூறினால், எந்த விதத்திலும் தாங்கள் வேறுபட்டவர்கள் என்ற எண்ணம் வரக்கூடாது. பிரிவினையை வளர்ப்பது உகந்ததல்ல. உருதுமொழிக்கு அரசு அங்கீகாரம் அளிப்பது குறித்த கேள்வியும் எழாது. சிறுபான்மையினர்கள் ருஸ்தம் என்றழைக்கப்பட்ட வீரனை முன்மாதிரியாக வைத்துக்கொள்வதும் பிரிவினைதான். ருஸ்தம் நம் தேசத்தவனே அல்ல. அவன் முஸ்லீமூம் அல்ல. அவன் நமது தேசத்தின் மாமனிதனுமல்ல. எனவே தேசிய புருஷன் என்ற இடத்தை அவனுக்கு அளிக்கக்கூடாது. ருஸ்தம் என்பவனின் இடத்தில் ராமபிரானை முன்மாதிரியாக வைப்போம். எவர் நமது தேசத்திற்கான உதாரண புருஷரோ அவரையே முன்மாதிரியாக வைத்துக்கொள்ள வேண்டும். இங்கிருந்து ஆரம்பித்து தேசத்தின் ஒவ்வொரு இடத்திலும் முழுமையான சமத்துவம் எவ்வாறு உருவாகும் என்பதை உணர்த்துவதற்கு வேண்டுமென்றே இந்த உதாரணம் கூறினேன். இதிலிருந்து முழுமையான நல்லிணக்கம் என்பதன் பொருள் நன்கு விளங்கும் (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-7,)

உலகளாவிய நெறிமுறை

சகோதரத்துவம் என்பது குறித்து எங்கும் பேசுகின்றனர். ஆனால், பரந்த மனிதர்களிடையே சகோதரத்துவத்தின் விழிப்புணர்ச்சி எவ்வாறு தோன்றும், அதற்கு அடிப்படை என்ன என்பது பற்றி ஒருமித்த கருத்து இல்லை. அனைவரும் கிறித்தவர்களானாலோ, அல்லது அனைவரும் முஸ்லிம்களானாலோ அல்லது உலகத்தில் அனைத்திடங்களிலும் புரட்சி ஏற்பட்டு பாட்டாளிகளின் ஆதிக்கம் ஏற்பட்டாலோ சகோதரத்துவம் ஏற்படும் என்று வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. உலகம் முழுதும் ஹிந்துக்களாக வேண்டும் என்று ஸ்ரீ குருஜி ஒருபோதும் கூறியதில்லை . முதலில் நாம் முழுமையான மனிதனாக விளங்குவதற்கு முயலுவோம் என்று அவர் கூறினார். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்கள் நம் வாழ்க்கையில் காணப்படுவதே முழுமையான மனிதனாவதற்கு ஒப்பாகும். உலகத்திற்கு இந்த நான்கு புருஷார்த்தங்களின் பழமையான உண்மையை கற்றுக்கொடுப்பதற்கு நாம் தகுதியுடையவர்களாக வேண்டும். உலக மக்களுக்கு நம் முன்னுதாரணம் மற்றும் லட்சியதால் இந்த உண்மையை அறியச் செய்ய வேண்டும். இது உலகிற்கு நன்மை பயக்கக்கூடியதுமாகும். (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-5, பக்கம்-)

இந்த தகுதி ஜாதிகளின் பெயரால் பிளவுபட்டிருந்தால் வராது, தீண்டாமையைக் கடைப்பிடிப்பதால் வராது, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எண்ணத்தினால் வராது. நல்லிணக்கம் வாய்ந்த சமுதாய வாழ்வினால் மட்டுமே நமக்குள் இத்தகைய தகுதி உருவாகும். சகோதரத்துவத்தை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதை நாமே உலகத்தின் முன் வாழ்ந்து காட்டவேண்டும். ஸ்ரீ குருஜியின் சிந்தனை இவ்வாறாக இருந்தது. ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைப்பதே ஸ்ரீ குருஜியின் வாழ்க்கை குறிக்கோளாக இருந்தது. அனைத்து ஹிந்துக்களிடையேயும், சமத்துவம், சகோதரத்துவம், ஒருமைப்பாடு ஆகியவற்றை ஏற்படுத்துவதே ஹிந்துக்களின் ஒருங்கிணைப்பாகும். ஒருவருக்கு மற்றொருவரிடத்தில் மனப்பூர்வமான சமத்துவம் தோன்றாவிடில், சகோதரத்துவமும், ஒருமைப்பாடும் தோன்றாது. நான் அல்ல, நீயே தான்’ என்பதே அவரது வாழ்க்கையின் தாரக மந்திரமாக இருந்தது. நானும் நீயும் வேறல்ல, ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவம். உன்னிடத்தில் நானும், என்னிடத்தில் நீயுமாக இருக்கிறோம் என்பதே அவரது உள்ளுணர்வாக இருந்தது. இதனால் அவரிடத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன், பெரியவன்-சிறியவன், மேல்ஜாதி – கீழ் ஜாதி, தீண்டத்தக்கவன்- தீண்டத்தகாதவன் போன்ற வேறுபாடுகள் இல்லை. அனைவரும் மானிடர்களே என்ற எண்ணத்தினால் அவரது உள்ளத்தில், அன்பு வெள்ளம் எப்பொழுதும் பிரவாகமெடுத்தது. அவரது தனிமனித வாழ்வில், அவர் நல்லிணக்க நாயகராகத் திகழ்ந்தார். நல்லிணக்கத்தின் உயிருள்ள, நடமாடும் முன்னோடியாக அவர் தனது வாழ்க்கையில் திகழ்ந்தார். இதுவே அவரது சிறப்பு.

பிற்சேர்க்கை

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கர்நாடக மாநில மாநாடு வெற்றிகரமாக முடிந்தபிறகு கர்நாடக கார்யகர்த்தாக்களுக்கு ஸ்ரீ குருஜி எழுதிய கடிதம்:

“விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கர்நாடக மாநில மாநாடு நிறைவடைந்தது. ஏற்பாடு செய்தவர்கள், கார்யகர்த்தாக்கள் எதிர்பார்த்ததை விட பலமடங்கு மிகுந்த பயனளிக்கக் கூடிய சூழ்நிலையோடு நிறைவடைந்தது. இதனால் இயல்பாகவே நமது எதிர்பார்ப்புகளும் பெருகும். அதிசயத்தக்க நிகழ்ச்சி ஏற்படும், நிலைமை மாறிவிடும் என்பது இதன் பொருளல்ல. தொடர் பணிகள் அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஹிந்து சமுதாயத்தின் ஒருமைக்கும் மாற்றத்திற்கு சங்க நாதம் மாநாட்டில் முழங்கப்பட்டது ஆயினும், இந்த வெற்றியால் நாம் திருப்தி அடைந்துவிடக் கூடாது.

“ஒரு எடுத்துக்காட்டை இங்கு குறிப்பிடுகிறேன். தீண்டாமை என்னும் சாபக்கேட்டை ஒழிப்பதற்தான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நமது அனைத்து சம்பிரதாயங்களையும் சேர்ந்த அனைத்து ஆசார்யர்களும், சமய சான்றோர்களும், மடாதிபதிகளும் இதற்கு ஒப்புதல் அளித்து, ஆசிகளையும் தந்தனர். ஆயினும், இந்த தீர்மானத்தை நடைமுறைபடுத்த புனிதமான வார்த்தைகள் மட்டும் போதுமானதல்ல. பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் இந்த தீய வழக்கத்தை வார்த்தைகளினால் அல்லது நல்ல எண்ணங்களினால் மட்டுமே ஒழிக்க இயலாது. அயராத உழைப்பும், தகுந்த பிரசாரமும் செய்தல் வேண்டும். ஒவ்வொரு நகரத்திற்கும், கிராமத்திற்கும், வீட்டிற்கும் சென்று, தீண்டாமையை ஒழிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாயிற்று என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். இது இன்றைய நவீன காலத்தின் கட்டாயத்தினால் அல்லாமல் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகளை திருத்திக்கொள்ளவதன் பொருட்டு, ஏற்பட்ட மனப்பூர்வமான மாற்றம். இந்த மாற்றத்தை ஏற்போம். உளப்பூர்வமாகவும், தார்மிக ரீதியகாவும் நாம் நடந்து கொள்ளும் விதத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். பின்தங்கிய சமூகத்தாரின் பொருளாதார அரசியல் நிலையை சீர்படுத்தி சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக கொண்டுவர முயற்சிப்பது கடினமான வேலை. ஆனால், இது மட்டும் போதுமானதல்ல. ஏனெனில், இவ்வகையான ‘சமத்துவத்தில்’ தனிப்பட்டவர்கள் என்ற எண்ணம் இருக்கும். எனவே, பொருளாதார, அரசியல் சமத்துவத்தால் காரியம் கைகூடாது. உண்மையான மாறுதலையும், முழுமையான ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்த வேண்டும். இந்த மாறுதல் அரசாங்கம், அரசியல் கட்சிகள் ஆகியவற்றால் முடியாதது. ஒருமைப்பாடு – என்ற பெயரில் ஒட்டுப்போடும் சித்துவேலை காட்டுகின்ற அரசியல்கட்சிகளினால் செய்ய இயலாது. மனப்பூர்வமாக வேலை செய்வதும், தார்மீக ஆன்மீக நிலையிலும் இச்செயலை விரிவுபடுத்தி வருவது இன்றியமையாதது. மாநாட்டிற்கு வருகைதந்தவர்கள், ஆதரவு கொடுத்தவர்கள், உதவிசெய்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தோளோடு தோள்கொடுத்து, இந்த பழமையான தீய வழக்கத்தை வலிமையான ஒரே அடியால் ஒழித்துக் கட்டுங்கள்”,

“இன்னொரு முக்கிய வேலை நமது சமுதாயத்திற்கு சமயத்தின் தத்துவங்களை போதிப்பது. இதில் பொதுவான சமயங்களின் தத்துவம், எல்லாவற்றையும் உள்ளடக்கிய சமய தத்துவம், அவர்கள் பிறந்த சம்பிரதாயத்தின் தத்துவம் ஆகியவையெல்லாம் அடங்கும். இந்த கல்வியை நாமே தொடங்குவது அவசியமாகும். ஏனெனில், தானும் கற்று, கற்றதை வாழ்க்கையில் கடைபிடிக்கிறவன் கூறுவதை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். பரிபூரண பக்தி, தூய நடத்தை, தூய பேச்சு, தூய எண்ணம் மற்றும் வேலை ஆகியவைகளே ஒருவனுக்கு, மற்றொருவனுக்கு போதிக்கும் அதிகாரத்தை அளிக்கிறது. எனவே, நம்மிடத்தில் மேற்கூறிய பண்புகள் அனைத்தும் ஏற்படுத்திக் கொள்வோம்.”

“நாம் இதை போதிப்பதற்கு நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் செல்லவேண்டும். வெகு தொலைவிலுள்ள கிராமங்களுக்கும், மலைகளுக்கும், அடர்ந்த காடுகளுக்கும், எங்கு மக்கள் மூடநம்பிக்கை ஒன்றையே சமயமாக நினைக்கின்றார்களோ அங்கும், எங்கு சமயத்தை கற்று அதன்வழி நடக்க வாய்ப்பில்லையோ அங்கெல்லாம் செல்வோம். நாம் இப்பணி புரிகையில், அளவில்லாத இன்னல்களையும், நெருக்கடிகளையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். நமக்கு யாரும் நன்றிகூட சொல்ல மாட்டார்கள். ஆயினும், ஆச்சரியகரமான செயல் அல்லது நொடியில் மாற்றம் உண்டாகும் என்று நாம் எதிர்பார்க்கவே கூடாது. இன்னல்களை ஏற்றபடி உயர்ந்த விரதம் பூண்ட ஒரு கர்மயோகியைப் போல் முன்னே செல்வோம்”.

”எல்லா குறைகளுக்கும் பிறரை சுட்டிக் காட்டுவதில் சில கார்யகர்த்தாக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். சிலர் அரசியலில் உள்ள விகாரங்களை குற்றம் சொல்கின்றனர். சிலர் கிறிஸ்தவம், இஸ்லாம் அந்நிய ஆதிக்க சம்பிரதாயங்களை குறை கூறுகின்றனர். நமது கார்யகர்த்தாகள் இத்தகைய முன் முடிவு சார்ந்த எண்ணங்களிலிருந்து விடுபட்டு, நமது மக்களுக்காக, நமது மதத்திற்காக நேர்மையான உள்ளத்துடன் செயல்படவேண்டும். உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவி புரிந்து, அவர்களின் துயரத்தை நீக்கவேண்டும். இத்தகைய தொண்டுகளில் எவரும் பாகுபாடு பார்க்கக்கூடாது. நாம் அனைவருக்கும் தொண்டு செய்வோம், உதவி புரிவோம். அவர்கள் கிறித்தவர்களாகட்டும் முஸ்லீம்களாகட்டும் அல்லது வேறு எந்த சமயத்தை சேர்ந்தவர்களாகட்டும். ஏனெனில், இன்னல்கள் அனைவருக்கும் ஏற்படுகின்றன. துன்புறுபவனுக்கு ஆறுதலளிப்பதற் காகவோ அல்லது அனுதாபத்தின் அடிப்படையிலோ உதவி புரிதல் கூடாது. எங்கும், அனைத்து ஆன்மாக்களிடத்திலும் நீக்கமற நிறைந்த இறைவனுக்கு தொண்டு புரிவதாக எண்ணி உதவிபுரிதல் வேண்டும். அனைத்தையும் அந்த உயர்ந்த தொண்டுக்கு அர்ப்பணித்தல் வேண்டும்; அனைவரும் நமது தாய், தந்தை, உறவினர் நண்பர்கள் எல்லாம். இதுவே நமது சமயத்தின் உண்மையான உணர்வாகும்”

”நமது இத்தகைய சேவை பணிகள், நமது ஸனாதன தர்மத்தின் அனைத்து மகிமைகளையும், பெருமைகளையும் உலகம் முழுதும் பரப்பட்டும்”,

மா. ஸ. கோல்வல்கர்
மகர ஸங்க்ராந்தி, சக 1898
தேதி 14.1.1970


திரு. ரமேஷ் பதங்கே …

மும்பை புறநகர் பகுதியில் தாழ்த்தப்பட்டவர்கள் என்றழைக்கப்படும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். மும்பை பல்கலைகழகத்தில் பொருளாதாரம், அரசியல் துறைகளில் எம்.ஏ பட்டம் பெற்றவர்.

சிறுவயதிலிருந்து அவர் ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர் ஆர்.எஸ்.எஸ்ஸில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய இவர் 1981-1986 வரை மும்பை மாநகரின் இணைச் செயலாளராகவும் இருந்தார். நெருக்கடி நிலையை (எமர்ஜென்சி) எதிர்த்து போராடி சிறை சென்றவர். 1985லிருந்து ஸ்ரீகுருஜியின் கணவான சமூகங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் ‘சாமாஜிக் சமரஸதா மஞ்ச்’ன் மகாராஷ்ட்ர மாநிலச் செயலாளராக செயல்படுகிறார்.

“சமரஸதா மஞ்ச் பத்ரிகா’ மற்றும் ‘விவேக்’ மராட்டி வார இதழின் ஆசிரியரான இவர் ‘மனுவாதமும் ஆர்.எஸ்.எஸ்ஸும்’ என்ற நூல் வாயிலாக தமிழ்வாசகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்.

ஸ்ரீ குருஜி பார்வையில் சமுதாய நல்லிணக்கம்

ரமேஷ் பதங்கே


தீண்டாமை

ஜாதி அமைப்பின் மிக பயங்கரமான விளைவு தீண்டாமை. ஹிந்து தர்மம் அனைத்து உயிரினங்களிலும் உயிர்ப்புள்ள ஒரே ஆத்ம தத்துவம் உள்ளதைக் காணும்படி கூறுகிறது. அனைத்து மனிதர்களையும் இறைவனின் உறைவிடமாக காணும்படி கூறுகிறது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன், கீதையில், “ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்டோ ” (அனைத்து உயிர்களின் இதயமும் எனது உறைவிடம்) என்று கூறுகிறார். இத்தனை சிறந்த தத்துவம் இருந்த போதிலும் நமது சமுதாயத்தில் கோடிக்கணக்கானவர்களை ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று சொல்லி அவர்களை கிராமங்களின் வெளியில் வைக்கின்றனர். அவர்களை தொடுவதோ அல்லது அவர்களின் நிழல்படுவதோ கூட புனிதமற்றதாக எண்ணினார். அவர்கள் சமூகமே அடிமைகள் என்ற நிலை தினிக்கப்பட்டது. அவர்கள் என்ன தொழில்புரிய வேண்டும், எத்தகைய உடை அணியவேண்டும், எங்கு வசிக்க வேண்டும், எத்தகைய உணவை உண்ண வேண்டும் ஆகியவை குறித்து கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அவைகள் ஈவிரக்கமில்லாமலும் செயல்படுத்தப்பட்டன. ‘தீண்டத்தகாத’ சோதரர்களின் நிலை விலங்குகளின் நிலையை காட்டிலும் மோசமானதாக்கப் பட்டது. அனைத்தையும் விட கொடுமையானது, தீண்டாமைதான் நமது மதம் என்று கருதப்பட்டது. தீண்டாமையை பின்பற்றாதவர்கள் மத விரோதிகள் என்ற எண்ணம் மக்களின் மனதிலும் எண்ணத்திலும் ஆழமாக வேரூன்றிவிட்டது.

தீண்டாமை என்னும் மூடப்பழக்கம் குறித்து ஸ்ரீ குருஜிக்கு ஆழ்ந்த வருத்தம் உண்டு. இத்தகைய தீய பழக்கத்தை நமது சமுதாயத்திலிருந்து எவ்வாறு வேருடன் களைவது என்ற சிந்தனை அவரது உள்ளத்தில் எப்பொழுதும் இருந்து வந்தது. தீண்டாமையை அவர் மூன்று விதமாக பிரித்தார். முதலாவது, சிலரை ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று கூறும் சமுதாயத்தின் ‘மேல் ஜாதி’யினர். இரண்டாவது, சமுதாயத்தில் தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்படுகிறவர்கள், தாங்களே தங்களை தீண்டத்தகாதவர்கள் என்று நம்புவது, மூன்றாவது, தீண்டைமைக்கு மத அங்கீகாரம் அளிக்கும் மதத்தலைவர்கள் ஸ்ரீ குருஜி மேற்கூறப்பட்ட மூன்று முனைகளிலும் அபாரமான தன் செயல்பாட்டினால் சமுதாயத்தில் நல்லிணக்கத்தை நிலைநாட்ட தீவிர முயற்சி மேற்கொண்டார்.

தீண்டாமை குறித்து ஸ்ரீ குருஜி விளக்கமளிக்கையில், ‘மேல்ஜாதி’யினரின் அற்ப புத்தியே தீண்டாமை” என்று கூறுகிறார். தீண்டாமை என்பது மனதின் விகாரம் என்றும் கூறலாம். மனதை சீர்த்திருத்துவதென்பது, பண்புப் பதிவு மூலமே இயலும். ஒருமைப்பாடு, நல்லிணக்கம், சகோதர உணர்வு, தொண்டு ஆகிய பண்புகள் சதா பதியச் செய்ய வேண்டும். இதில் ஷாகா செயல்முறை மிகச் சிறந்த முறையில வெற்றிபெற்றுள்ளது. வார்தாவில் நடைபெற்ற சங்க முகாமில் பங்கேற்ற அனைவரும் சமமாக மதிக்கப்பட்டனர் என்பதை அங்கு வருகை தந்த காந்தியடிகள் உணர்ந்தார். தீண்டத்தக்கவர், தீண்டத்தகாதவர் போன்ற வேறுபாடுகள் காணப்படவில்லை. புனேயில் நடைபெற்ற சங்க சிக்ஷா வர்கவில் மதிப்பிற்குரிய டாக்டர் அம்பேத்கரும் அவ்வாறே உணர்ந்தார். சங்க ஷாகாவில் பங்கேற்ற ஹிந்து, தன்னை ஹிந்துவாக மட்டுமே உணர்கிறார். அவர் பிறந்த ஜாதியை மறந்து விடுகிறார். சங்கத்திற்கு வராதவர்களுக்கு, சங்கத்திற்கு வெளியே பரந்து கிடக்கும் ஹிந்து சமுதாயத்தை எவ்வாறு தூய்மைப்படுத்துவது என்பது பெரிய பிரச்சினை. ஸ்ரீ குருஜியினது கருத்து இவ்வாறு இருந்தது:

“சராசரி மக்களிடையே தவறான ஒரு நம்பிக்கை நிலவுகிறது. தீண்டாமை என்பது சமயத்தின் ஒரு பகுதி, அதனைக் கைவிடுவது மகாபாவம் என்று அவர்கள் நம்புகிறார்கள். தீண்டாமையின் ஆணிவேராக இருப்பது இந்த நம்பிக்கைதான். சமயத் துறையில் பல மகான்களும் சமய சீர்திருத்தவாதிகளும் பற்பல நூற்றாண்டுகளாக சமர்ப்பண உணர்வுடன் பாடுட்ட போதிலும் இந்த நாசகரமான பழக்கம் சராசரி மக்கள் மனதில் இன்னும் ஒட்டிக்கொண்டிருப்பதற்கு மூல காரணமே இந்த மதரீதியான முரண்பாடுதான்.”

மக்களின் மனதில் குடிகொண்டிருக்கும் இத்தகைய கொடிய பழக்கத்தை நீக்குவது சமயச் சான்றோர் கடமை. விஸ்வ ஹிந்து பரிஷத்தின் வாயிலாக ஸ்ரீ குருஜி தீண்டாமை என்றும் களங்கத்தை அழிப்பதற்கு முயற்சி செய்தார். இது தொடர்பாக பிரயாகை (1966) உடுப்பி (1969) ஆகிய இடங்களில் நடைபெற்ற மாநாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பிரயாகையில் நடந்த மாநாட்டில் வேற்று மதங்களுக்குப் போன ஹிந்துக்கள் தாய்மதம் திரும்புவதற்கான வழிமுறை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ”ஹிந்து வீழ்ச்சியடைவதில்லை” என்று அறிவிக்கப்பட்டது. உடுப்பியில் நடந்தேறிய மாநாடு “தீண்டாமைக்கு சமயத்தில் இடமில்லை; அனைத்து ஹிந்துக்களும் சகோதரர்களே” என்று பிரகடனம் செய்து புகழ்பெற்றது.

வரலாற்றுப் புகழ்வாய்ந்த உடுப்பி மாநாடு குறித்து ஸ்ரீ குருஜி “1969-ம் ஆண்டு உடுப்பியில் நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் மாநாட்டில் மகத்தான தொடக்கம் ஏற்பட்டது. இதில் சைவ, வீரசைவ, மத்வ, வைஷ்ணவ, ஜைன, புத்த ஆகிய அனைத்து ஹிந்து சம்பிரதாயங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். வணக்கத்திற்குரிய மடாதிபதிகள், தர்மாச்சாரியர்கள் ஆகியோர் வெளியிட்டுள்ள அருளாணைப்படி, ஹிந்துக்கள் சமய, சமுதாய நடைமுறைகள் எல்லாவற்றிலும் தீண்டாமையை அறவே அழித்தொழிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது’ என்று கூறினார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த அருளாணை இதுவே: “பிரிக்கப்படமுடியாத ஒருமைப்பாட்டுணர்வை மையமாகக் கொண்டு ஹிந்து சமுதாயம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். ‘தீண்டத்தக்கவன்’, ‘தீண்டத்தகாதவன்’ என்ற உளுத்துபோன உணர்வுகளினால் ஹிந்து சமுதாயம் சிதறிவிடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கம் நிறைவேற வேண்டுமானால் உலகம் முழுவதிலும் உள்ள ஹிந்துக்கள் தாங்கள் பரஸ்பரம் பழகும்போது ஒருமைப்பாட்டு உணர்வையும் சமத்துவ உணர்வையும் கடைப்பிடித்து வரவேண்டும்’ இந்த தீர்மானத்தின் சிறப்பை எடுத்துக் கூறுகையில் ஸ்ரீ குருஜி, “இந்த தீர்மானம் நிறைவற்றப்பட்டது, ஹிந்து சமுதாய வரலாற்றில் முழுமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, புரட்சிகரமான முயற்சி என்று கருதலாம். இது விகாரப்பட்ட மரபை உண்மையான சமய சிந்தனை வெற்றி கொண்ட பொன்னான நேரம்” என்று கூறினார். (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-11, பக்கம் 454-455)

தீண்டாமையை விரட்டுவதற்கு டாக்டர். அம்பேத்கர் மாபெரும் போராட்டம் நடத்தினார். மஹாட் சத்தியாகிரகம், நாஸிக் காலாராம் ஆலய சத்யாக்கிரகம் இவற்றில், தீண்டாமை சமயத்தில் இடமில்லை என்று கருதினார். இதை ஹிந்து தர்மாசாரியர்களை வெளிப்படையாக கூற வேண்டும் என்று கூறினார். அவ்வாறு நடைபெறவில்லை என்பது சோகம். பாதியில் நின்ற டாக்டர் அம்பேத்கர் பணியை ஸ்ரீ குருஜி உடுப்பியில் நிறைவு செய்தார்.

உடுப்பி மாநாட்டின் ஒரு நிகழ்ச்சி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. அந்த மாநாட்டிற்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும் கர்நாடக அரசுப் பணித் தேர்வணைய உறுப்பினருமான ஸ்ரீ ஆர். பரணையா வந்திருந்தார். அவர் தீண்டத்தகாதவர் என்று சொல்லப்படும் சமூகத்தை சேர்ந்தவர். அவரது தலைமையில் நடந்த அமர்வில் ”ஹிந்துக்கள் அனைவரும் சகோதரர்கள்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது குறித்து சொற்பொழிவுகள் நடந்தன. அனைத்து சமய சான்றோர்களும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தினர். இறுதியில் மேடையிலிருந்து இறங்கும்பொழுது திரு. பரணையா ஸ்ரீ குருஜியை இறுகத் தழுவிக்கொண்டார். அவரது கண்கள் பனித்தன. தழுதழுத்த குரலில், “தாங்கள் எங்களுக்கு உதவ ஓடோடி வந்துள்ளீர்கள். இத்தகைய உயர்ந்த பணியை தாங்கள் கையிலெடுத்துக்கொண்டது, தாங்கள் எங்களுக்கு உதவ முன்வந்தது – இவை தங்களது உயர்ந்த எண்ணத்தை வெளிப்படுத்துகின்றன’ என்று கூறினார்.

காந்தியடிகள் தீண்டத்தகாதவர்களைக் குறிப்பிட “ஹரிஜன்” என்னும் சொல்லை பயன்படுத்தினர். இதற்கு டாக்டர். அம்பேத்கர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அலாதியாக ஒரு சொல்லை பயன்படுத்துவதால் பிரிவினை வளரும் மனம் மாறாது என்பது அவரது கருத்து. ஸ்ரீ குருஜியும் ஹரிஜன் என்னும் சொல்லை பயன்படுத்துவதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். ”ஒருமுறை நான் காந்திஜியை சந்தித்தபொழுது, ‘ஹரிஜன் என்னும் சொல், எவ்வளவு புனிதமானதாக இருந்தாலும் கூட, இந்த புதிய சொல், தனித்தன்மையயை ஏற்படுத்தி சமுதாய ஒருமைப்பாட்டிற்கு தீங்குவிளைவிக்கின்ற அரசியல் சுயநல குழுக்களை தோற்றுவிக்கும்’ என்ற கவலையை தெரிவித்தேன். ஆனால், காந்தியடிகள் அப்படி எதுவும் நடக்காது என்று கருதினார். துரதிருஷ்டவசமாக, ஒழிக்கவேண்டிய பிரிவினை இன்றுவரை, -மேன்மேலும் வளர்ந்துகொண்டே போகிறது. (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி 11, பக்கம் 455-456)

தீண்டாமையை ஒழிப்பதற்கு சில வழிமுறைகள் பற்றி ஸ்ரீ குருஜி கலந்துரையாடல்களில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

கேள்வி: தீண்டாமை என்னும் பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்படும்?

ஸ்ரீ குருஜி: தீண்டாமை பிரச்சனை என்பது மிகவும் சிக்கலாகி விட்டது. ஆயினும் அது தானாகவே அழியும் நிலையில் உள்ளது. எவ்வளவு விரைவில் அழிகிறதோ அந்த அளவிற்கு நல்லது. ஆயினும், “தீண்டாமை ஒழிப்பு இயக்கம்’ என்று தீண்டாமையை ஒழிப்பதாக தம்பட்டமடித்து முயற்சி தொடங்கினால் ‘தீர்வு’க்கு பதில் ‘மோதல்’தான் லாபம். பிடிவாதம் தலைதூக்கி குறிக்கோளை அடைவதற்கு பதிலாக பிரச்சினை மேலும் சிக்கலாகிவிடுகிறது.

எனவே, தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்படுகிறவர்களை தூய்மையாக்குவதற்கு மிகவும் எளிய விதிமுறை ஒன்று இயற்றப்பட வேண்டும். சமய சான்றோர் அங்கீகாரமும் அளிக்கப்பட்டால் அந்த விதிமுறைக்கு சமயமே ஆதரவாக நிற்கும், எதிர்ப்பவர்களின் எதிர்ப்பு தளர்ந்து விடும்.

கேள்வி: இந்த விதிமுறை அவ்வளவு எளிதாக இருக்கும் என்று தாங்கள் எண்ணுகிறீர்களா?

பதில்: கழுத்தில் மாலை அணிந்து கொண்டபின், வணங்கி நாம ஜெபம் செய்தாலே போதும்.

ஸ்ரீ குருஜியின் மூலம் தெரிவிக்கப்பட்ட இந்த எளிதான விதிமுறைக்கு புனேயைச் சேர்ந்த மதிப்பிற்குரிய திரு. சிரூபாவு லிமயே என்பவர் ஆட்சேபம் தெரிவித்து கேள்வியும் எழுப்பினார்.

லிமயே: தீண்டாமையை ஒழிக்க ஒரு எளிய முறை கூறுகிறீர்கள். ஆனால், தீண்டத்தகாதவர்கள் யார்? தீண்டத்தகாதவர்களை தூய்மைபடுத்த இந்த சமயசான்றோர்களுக்கு அதிகாரம் யார் கொடுத்தது? இவர்களை சமய சான்றோர் என நான் கருதவில்லை.

ஸ்ரீ குருஜி: சில விஷயங்களை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். தீண்டாமை, ‘தீண்டப்படாதவர்களுடைய பிரச்சினை மட்டும் அல்ல. எவர் எங்கு பிறக்கிறார்கள் என்பது அவரவர் வசமில்லை. நான் இந்த குலத்தில் தான் பிறப்பேன் என்று எவரும் கூற இயலாது. எனவே, தீண்டாமை என்பது மேல் ஜாதியினரின் அற்ப புத்திக்கு மறு பெயர். எனவேதான், தீண்டாமையை ஒழிப்பது, அற்ப புத்தியை ஒழிப்பதுமாகும். நீங்களோ அல்லது நானோ சமய சான்றோர்களை ஏற்றுக்கொள்கின்றோமா இல்லையா என்பது விசயமல்ல. தீண்டாமையை ஏற்றுக்கள்பவர்கள், சான்றோர்களை ஏற்றுக் கொள்கிறார்கள் சமய சான்றோர்களின் தலையீட்டால் இந்த பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காண முடியும். கடந்த பல ஆண்டுகளாக எனக்கு பல சமய சான்றோர்களுடனும், சங்கராசாரியர்களுடனும் தொடர்பு உள்ளது. எனவே தான் சமய சான்றோர்கள் இதை கட்டாயமாக நிறைவேற்றுவார்கள் என்று என்னால் கூற இயலும். அதாவது, பலர் தீண்டாமையை ஒழிக்க முயற்சி செய்தனர். மகாத்மா காந்தி இதில் மகத்தான பங்களிப்பு செய்தார். தீண்டாமை ஒழிப்பில் எனக்கும் ஒரு பங்குண்டு.

நமது தேசம் இங்கிலாந்து, அமெரிக்கா போன்று அரசியல் சாஸனத்தை மட்டுமே கடைப்பிடிக்காது, சமயத்தையும் பின்பற்றி நடப்பது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பூமிபூஜை, வாஸ்துசாந்தி, புதுமனை புகுதல் ஆகிய சந்தர்ப்பங்களில் சமய சடங்குகள் செய்வதை நாம் பார்க்கிறோமே?

இவ்வாறு சமய சடங்குகள் மூலம் தடைகளையும், கெடுதல்களையும் தவிர்க்கமுடியும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. திருமணங்கள் முதலானவைகளிலும் நாம் இதைக் காண்கிறோம். குடும்பம் நடத்தவும், சந்ததிகள் ஏற்படவும் ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றுபட்டாலே போதுமானது. ஆனால், சமுதாயம் இதை ஏற்றுக் கொள்வதில்லை. சமுதாயத்திற்கு தெரிந்து அவர்களுடைய திருமணம் சமயசடங்குகளுடன் நடந்தேறினால், சமுதாயம் அவர்களை எளிதாக ஏற்றுக்கொள்கிறது. நமது மாநிலத்திலும் சோஷலிஸ்ட் முதலமைச்சர் கொய்னா அணை கட்டுவதற்கு முன்பு கொய்னா நதியின் நடுப்பகுதிக்குப் படகின் மூலம் சென்று எல்லா நற்பேறுகளும் ஏற்பட மங்கலப் பொருள்களால் முறைப்படி அர்ச்சனை செய்தார். இதற்கு என்ன விளக்கம்? எந்தவொரு முக்கியமான செயலுக்கும் சமுதாய ஒப்புதல் கிடைக்கிறதோ, அது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது; சாமானிய மக்களுக்கு சமய அங்கீகாரத்தால் மனநிறைவு ஏற்படுகிறது.

மேலும் நான் ‘தீண்டப்படாதவர்களை ராமநாமத்தை உச்சரிக்கும்படி செய்து சமய சான்றோர்கள் அவர்களுக்கு மாலை அணிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளேன். அரசியல் சாஸன வாயிலாக, தீண்டாமை முடிவிற்கு வந்துவிட்டது என்பதை நாம் ஏற்றாலும்கூட, சமய சான்றோர்களின் இந்த சடங்கால் சமய அங்கீகாரம் என்ற கேடயம் உள்ளது என்ற நம்பிக்கை தீண்டப்படாத சமூகத்தார் மனதில் ஏற்படுகிறது. ஓரிருவர் சந்தேகப்பட்டால், அது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை.

ஸ்ரீ குருஜி, எதைக் கூறுகிறாரோ அதை செயலிலும் பின்பற்றுவார் – இதுதான் அவரது வாழ்க்கையில் மிகவும் சிறந்த அம்சம் , மேடையில் ஜாதிபேதங்களையும், தீண்டாமையையும் கண்டித்து விட்டு, நிஜவாழ்க்கையில் அவற்றை கடைபிடிப்பது என்பது அவர் வாழ்நாளில் கிடையாது. இதற்கு எடுத்துக்காட்டுகளாக இரண்டு சம்பவங்களை கூறலாம்.

ஸ்ரீ குருஜி பீஹாரில் பின்தங்கிய பகுதிக்கு சென்றார். அங்குள்ள மக்கள் அவரை வரவேற்றனர். அவர் சிறிது நேரம் உரையாடிவிட்டு, தேநீர் அருந்திவிட்டு வண்டியில் திரும்பி வந்து கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்கு பின்பு, அந்த வண்டியின் ஓட்டுனருக்கு வாந்தி எடுக்க வேண்டும் என்று தோன்றியது. வாந்தியும் எடுத்தார். சிறிது நேரத்திற்கு பிறகு ஒவ்வொருவராக அவருடன் சென்ற நால்வரும் வாந்தி எடுத்தனர். அனைவரும் ஸ்ரீ குருஜியும் வாந்தி எடுப்பார் என்று எண்ணி அங்கு அருந்திய தேநீரைக் குறித்து பேசினர். இந்த விஷயம் ஸ்ரீ குருஜியை பாதிக்கவில்லை. அவர் வாந்தியும் எடுக்கவில்லை. அவருடன் வந்தவர்கள் அவரது ஜீரணசக்தி குறித்து வினவினர். அப்பொழுது ஸ்ரீ குருஜி, “நீங்கள் அனைவரும் அவர்கள் தெருவின் நாற்றத்தையும் அழுக்கையும் எண்ணினீர்கள். அந்த மக்களது விருந்தோம்பலையும், சகஜமான அன்பையும் எண்ணி யிருந்தீர்களானால் அவர்கள் அளித்த தேநீர் ஜீரணமாகியிருக்கும். உங்களுக்கு அங்கிருந்த அழுக்கு உள்ளே போயிருக்கிறது. எனக்கோ அவர்களது அன்பும், பாசமும் உள்ளேபோனது. அந்த அமிர்தத்தினால் தான் நான் வாழ்கிறேன். அதுவே எனக்கு ஊட்டம் என்னும்பொழுது, குமட்டுமா என்ன?’ என்று வினவினார்.

1950-ல் புனேயில் சங்க சிக்ஷா வர்க நடைபெற்றது. ஏறக்குறைய 1300 ஸ்வயம்சேவகர்கள் இருந்தனர். உணவின்போது ஜிலேபியும் பரிமாறப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்குவதை அதிகாரிகள் பார்வையிட ஏற்பாடு இருந்தது. ஸ்ரீ மோரோபந்த் பிங்களே, ஸ்ரீ சீதாராமபந்த் அப்யங்கர் முதலான அதிகாரிகள் பார்வையிட்டனர். ஸ்ரீ குருஜியும் அவர்களை பின்தொடர்ந்தார். பல ஸ்வயம்சேவகர்களை பெயர் சொல்லி அழைத்து அவர்களுக்கு இனிப்பு வழங்கும்படி செய்து உற்சாகமூட்டினார்.

இரண்டாவது பந்தியில் அதிகாரிகள் உணவருந்த அமர்ந்தார்கள் எட்டு அல்லது ஒன்பது ஸ்வயம்சேவகர்கள் இனிப்பு வழங்கும்படி பணிக்கப்பட்டனர். ஒருவர் மட்டும் பரிமாற செல்லாமல் அமர்ந்திருந்தார். ஸ்ரீ குருஜியின் பார்வை அவரிடத்தில் சென்றது. உணவருந்த தொடங்குவதற்கு முன்னமே ஸ்ரீ குருஜி அவரருகில் சென்று, “நீ ஏன் உட்கார்ந்திருக்கிறாய்? நீயும் இனிப்பு வழங்கு” என்றார்.

நாராயண் என்னும் அந்த ஸ்வயம்சேவகர் கூச்சத்துடன் ஒதுங்கினார். அவர் செருப்பு தைப்பவர். அவர் இதை ஸ்ரீ குருஜியிடம் கூறினார். ஸ்ரீ குருஜிக்கும் மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. ஸ்ரீ குருஜி அவரது கையைப் பிடித்து அவரிடத்தில் ஜிலேபி பாத்திரத்தை கொடுத்தார். முதலில் தனது தட்டில் பரிமாறிவிட்டு பின்பு அனைத்து ஸ்வயம்சேவகர்களுக்கும் வழங்கும்படி கூறினார்.

ஒரு கடினமான பிரச்சினைக்கு மிகவும் எளிய முறையில் தீர்வு கிடைக்கும்படியான இந்த சம்பவம் சிறியதாக இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும்.

தீண்டாமைக்குள்ளாகிறவர்கள் தங்களை தீண்டத்தகாதவர்கள் என்றும் தாழ்ந்தவர்கள் என்றும் எண்ணக்கூடாது என்பது ஸ்ரீ குருஜியின் கருத்து. ஒரு ஸ்வயம்சேவகர், “நான் பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவன். சங்கத்தில் மேல்ஜாதியினரே காணப்படுகின்றனர். தாழ்த்தப்பட்ட பழங்குடிப் பிரிவைச் சேர்ந்த மக்களை போதிய எண்ணிக்கையில் காணமுடியவில்லை. ஏன் இந்த ஏற்றத்தாழ்வு?” எனக் கேட்டார்.

ஸ்ரீ குருஜியின் பதில்: “சங்கத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் – மேல் ஜாதியினர் என்று பிரித்துப் பார்க்கும் அனுபவம் ஒருபோதும் எனக்கு ஏற்பட்டதில்லை. தாழ்த்தப்பட்ட ஜாதியினரும் பழங்குடி பிரிவினரும் தங்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்றும், பழங்குடியினர் என்றும் ஏன் கூறிக்கொள்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வது கடினம். தங்களது ஜாதி அல்லது பிரிவை மட்டுமே சிந்தித்து அந்த நினைவிலேயே இருப்பது சரியல்ல. மனதிலும், நினைவிலும் இந்த சிந்தனை தொடர்வது ஏன்? சிலர் இதில் லாபமடிக்கப் பார்க்கிறார்கள். அரசியல் பண்ணும் பிரமுகர்கள் இதை ஊக்குவிக்கின்றனர். எனவேதான் இப்படி.

”இந்த விகாரமான எண்ணம் சங்கத்தில் கிடையாது. ஜாதி, மொழி அல்லது வேறு பேதங்கள் எனப்படுகிறவற்றிலிருந்து விலகி நமது ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைக்க சங்கம் விரும்புகிறது. அனைவரையும் உடன்பிறப்பாக எண்ணி அன்பை வளர்ப்பதே எல்லா ஊர்களிலும் சங்கப் பணியின் அடிப்படை. எந்தவொரு ஜாதியை அல்ல, முழு சமுதாயத்தையும் ஒருங்கிணைக்க நாம் முயன்று வருகிறோம்.”

தீண்டாமையை ஒழிப்பதற்கு போராட்டம் நடத்த வேண்டும், கிளர்ச்சி செய்ய வேண்டும், திட்டவட்டமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பலர் கருத்து. போராட்டத்தாலோ, கிளர்ச்சியாலோ தீண்டாமை ஒழியும் என்பதில் ஸ்ரீ குருஜிக்கு நம்பிக்கையில்லை. கிளர்ச்சி, போராட்டம் இவற்றால் பிரிவினைப் போக்குதான் வளரும்; ஒருமைப்பாடு, நல்லிணக்கம் உருவாகாது என்பது ஸ்ரீ குருஜியின் உறுதியான நம்பிக்கை. இதுகுறித்து ஸ்ரீ குருஜியின் சிந்தனை கீழ்க்கண்டவாறு இருந்தது.

1972-ல் டாணேயில் அகில பாரதிய வர்கவில் இடம்பெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியின் ஒரு பகுதி வருமாறு:

கேள்வி: சங்கத்தில் தீண்டாமை இல்லை. ஆனால், சமுதாயத்தில் அதை ஒழிக்க ஏதேனும் திட்டம் வகுப்பது குறித்து நாம் சிந்திக்க இயலுமா?

பதில்: அதற்கென்று திட்டங்களை வகுப்பதன் மூலம் காரியம் கை கூடுமா? காந்திஜி தீண்டாமை ஒழிப்பை காங்கிரஸின் செயல் திட்டத்தில் சேர்த்தார். அதற்காகப் பெருமுயற்சி செய்தார். அதன் விளைவு, ஹரிஜன மக்கள் மேலும் விலகி சென்றுவிட்டனர். தனியாக ஒரு பெயரைச் சூட்டியதால், தனிப்படிருக்கும் எண்ணமே வளர்ந்தது. முந்தைய பெயரால் அழைத்தால் மனதில் ஏற்படும் எண்ணம் புது பெயரிட்டு அழைத்தால் மறைந்துவிடும் என்றெண்ணி, “ஹரிஜன்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. அவரது சிந்தனை நன்றாகவே இருந்தது. ஆனால் அந்த எண்ணம் மோகவில்லை.

ஒரு ஹரிஜனத் தலைவருடன் டாக்டர் ஹெட்கேவருக்கும் எனக்கும் தொடர்பு இருந்தது. அவர் ”சங்க செயல்பாடுகள் மிகவும் நன்றாக இருக்கின்றன. எனினும், சங்கம் எங்களது உண்மையான விரோதி. ஏனெனில், மற்ற அனைவரும் எங்கள் தனித்தன்மையை ஏற்றுக் கொள்கின்றனர். எங்களது தனிச்சலுகைகள் குறித்து பேசுகின்றனர். ஆனால், சங்கத்திற்கு வந்தால் எங்களது தனித்தன்மையை நாங்கள் இழந்துவிடுகிறோம். நாங்கள் ஹிந்துவாக மட்டுமே இருப்போம். பின் எங்களுக்கு தனிச்சலுகைகள் கிடைப்பது எப்படி?” என்று கூறுவார். தாங்கள் தனிப்பட்டவர்கள் என்ற எண்ணம் அவர்கள் மனதில் கசப்பை விதைத்து விட்டது. இதே கசப்பாலும் தனிப்பட்ட எண்ணத்தாலும்தான், ‘ஹிந்து சமுதாயத்தில் கலந்து விட்டால் நமது நிலை என்ன ஆகும்?” என்ற எண்ணம் ஏற்பட்டது.

1941-ல் ஒரு மஹார் சிறுவன் என்னை சந்திக்க வந்தான். அவன், “நான் சங்கத்திற்கு வருவதால் என்ன லாபம்?’, என்று வினவினான். “நீ உன்னை தனிபட்டவனாகக் கருதுகிறாய். பிறரை தனிப்பட்டவராக எண்ணுகிறாய். சங்கத்திற்கு வருவதால், இந்த தனிபட்ட தன்மை என்னும் சுவர் உடைகிறது. இது லாபமா இல்லையா?” என்று வினவினேன்.

தனிப்பட்ட எண்ணம் ஊக்குவிக்கப்படாமல் வேறேதேனும் வழியில் அவர்களது இன்னல்கள் தீர்க்கப்பட வழிவகை தேடி சிந்திக்க வேண்டும். அவ்வாறில்லை என்றால் பிரச்சினைகள் இருந்துகொண்டே இருக்கும்.

தீண்டாமை எண்ணம் வெகு ஆழமாக வேர்விட்டிருக்கிறது. பிராமணர்களிலும் கூட, உயர்ந்த, தாழ்ந்த ஜாதிகள் உள்ளன. ஒரு ஜாதியினர் மற்ற ஒரு ஜாதியினரிடம் தண்ணீர் வாங்கி அருந்தமாட்டார். இப்போது அதெல்லாம் ஒழிந்துவிட்டது. ஹரிஜனங்களிலும் கூட, பிறர் நிழலை கூட சகிக்கமுடியாதவர்கள் உள்ளனர். பிரச்சனை மிகவும் பெரியது. தீண்டாமையை பிராமணர்கள் போன்றவர்களே கடைப்பிடிக்கிறார்கள் என்று கூறுவது முற்றிலும் சரியல்ல. நிலைமை சரியாக மிகவும் உழைக்கவேண்டும். மிகுந்த பயிற்சி அளிக்கவேண்டும். பழைய பதிவுகளை கழுவிக் களைய வேண்டும். புதிய பண்புப் பதிவு ஏற்படுத்த வேண்டும். பலவருடங்களாக வேரூன்றிவிட்ட இத்தகைய எண்ணங்களை வலுக்கட்டாயத்தால் பறித்து எறிவதால் காரியம் கைகூடாது. இதனால் தனிப்படும் என்ற எண்ணமே வளரும். இது குறித்து நன்கு சிந்திக்க வேண்டும்.

தீண்டத்தகாதவர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்களை ஸ்ரீ குருஜி துளியளவும் மதிப்புக் குறைவாக நடத்தவில்லை . தனது அந்த சோதரர்கள் குறித்து மதிப்புடன் கூறுவார், ”தீண்டதகாதவர்கள் என்று கூறப்படும் ஜாதிகள், மனம், அறிவுசார் தன்மைகளில் பரம்பரையாகவே திறனற்றவை என்றும், நீண்டகாலம் வரை சமுதாயத்தின் பிற பகுதியினர் தரத்தை அடையமுடியாது என்றும் பேசுவது அவர்களை அவமானம் செய்வது மட்டுமல்ல, உண்மையை கேலி செய்வதாகும். கடந்த ஆயிரம் ஆண்டுக்கால தேச விடுதலைப் போராட்டத்தில், தீண்டத்தகாதவர்களாக கருதப்படுகிறவர்கள் பலரும் முன்னிலையில் இருந்தனர் என்பது சரித்திரம். மகாராணா பிரதாப், குரு கோவிந்தசிங், சத்ரபதி சிவாஜி ஆகியோரின் சேனைகளில் மிகந்த வல்லமையுடன் ஆவேசமாக போரிட்டவர்கள் இவர்கள். தில்லி, பீஜப்பூரின் கலகக்காரர்களை எதிர்த்து நடந்த சிவாஜியின் முக்கியமான பல போர்களில், இந்த மாவீரர்கள் ஆள்பலம் அளித்து தலைமையும் தாங்கினார்கள். (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-11,)

நமது ஆன்மீக உலகத்திலும் இவர்களது பங்கு மிகவும் சிறந்தது. வடக்கில் ரவிதாஸ், மகாராஷ்டிரத்தில் சோக்காமேலா, இது மட்டுமல்ல, ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை இயற்றியவர்களும் கூட மேல் ஜாதியைச் சேர்ந்தவர்களல்ல. இத்தகைய சிறந்த மனிதர்களை உருவாக்கிய ஜாதிகளை அலட்சியப்படுத்துவது பாவம். “இந்த ஜாதிகளில் எண்ணிடலங்காத சாதுக்களும், சந்நியாசிகளும் அவதரித்தனர். அவர்களிடம் நமது அனைத்து வகுப்பைச் சேர்ந்தவர்களும் அளவிலா பக்தியுடன் மரியாதை செய்தார்கள், இந்த சகோதரர்களிடம் நமது தர்மம் குறித்து சிரத்தையும் நம்பிக்கையும் சமூகநலன் குறித்த சிந்தனைகளும் சமுதாயத்தின் எல்லா பிரிவினர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் சிறப்பாக சமயத்தின் பேரால் சமுதாயத்தின் பிர பகுதியினரால் இவர்களுக்கு ஏற்பட்ட அவமானம், இன்னல்கள் ஆகியவற்றை பொறுத்துக்கொண்டு, மதமாறும்படி ஆசைகாட்டப்பட்டபோது அதை உறுதியாக எதிர்த்தார்கள். தேசப்பிரிவினையின் போது வங்காளத்தில் நாமசூத்திரர்கள் என்றும் தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் இஸ்லாமைத் தழுவி உயிரைக்காத்துக் கொள்வதற்கு பதிலாக ஹிந்து தர்மத்தை கடைப்பிடித்து துன்பங்களை அனுபவிப்பதேமேல் என்று எண்ணினர். பிறகு இந்திய எல்லைக்குள் அவர்கள் ஹிந்து அகதிகளாக நேர்ந்தது” என்பார் ஸ்ரீ குருஜி. (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-11, பக்கம்-349)

இன்றைய காலகட்டத்தில் காணப்படும் நான்கு வர்ணங்கள், ஜாதி வேறுபாடுகள், தீண்டாமை ஆகியவை சமுதாய நல்லிணக்கத்திற்கு பெரும் பாதகமாக இருக்கின்றன. ஸ்ரீ குருஜி இந்த மிகப்பெரிய சமுதாய நோயை வேரோடு களைய விரும்பினார். இது குறித்து அவரது சிந்தனை மேலெழுந்தவாரியாக இல்லை. ‘அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. ஆனால், நோயாளி பிழைக்கவில்லை’ என்பது போன்ற தீர்வை அவர் விரும்பவில்லை. எனவேதான், நான்கு வர்ணங்கள் என்பது என்ன, ஜாதி ஏற்பாடு என்பது என்ன என்பன குறித்து அவர் சாஸ்திர முறைப்படி ஆய்வு செய்தார். இன்றைய காலகட்டத்திற்கு வர்ணங்களும் ஜாதிகளும் பொருந்தாது என்று தெளிவுபடுத்தினார். இன்றைய காலகட்டத்தில் சமுதாயம் ஒன்று என்ற உணர்வு ஏற்படுத்துவது மிகவும் இன்றியமையாதது. அதன்மூலம் சமுதாயத்தில் நல்லிணக்கம் ஏற்படும் என்று அவர் நம்பினார். ஸ்ரீ குருஜியின் பாதை மற்றவர்களின் பாதைகளிலிருந்து வேறுபட்டது. சமுதாயப் போராட்டம் நடத்துபவர்களோ ஹரிஜன மேம்பாட்டுப் பாதையில் செல்பவர்களோ, ஸ்ரீ குருஜியை புரிந்து கொள்ளவில்லை, அல்லது வேண்டுமென்றே அவர் பற்றி தவறான எண்ணங்களை ஏற்படுத்தினர். இதனால் ஸ்ரீ குருஜி என்ற தனிமனிதருக்கு தீங்கு எதுவும் ஏற்படவில்லை . ஆனால், சமுதாயத்தில் பிரச்சினை மேலும் தீவிரமடைந்தது. ஜாதிகளை ஒழிப்பது குறித்து நடுநிலை நின்று சரித்திரம் எழுதப்படும்போது ஸ்ரீ குருஜியின் பங்களிப்பு, சமுதாயம் முழுவதற்கும், என்றென்றும் நன்மை பயப்பது என்பது ஏற்கப்பட்டே தீரும்.

தொடரும்…

ஸ்ரீ குருஜி பார்வையில் சமுதாய நல்லிணக்கம்

ரமேஷ் பதங்கே


படிப்பதற்கு முன்….

ஸ்ரீ குருஜி தத்துவ சிந்தனையாளர். தேசிய வாழ்வின் எல்லா அம்சங்கள் பற்றியும் கருத்து வெளியிட்டுள்ளார். நாட்டின் அரசியல், சமுதாயம், பொருளாதாரம் ஆகியவை குறித்த தனது அடிப்படை எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.


ஸ்ரீ குருஜியின் எண்ணங்கள் சிறப்புக்கள்

  • அவரது எண்ணமும் சிந்தனை எப்போதுமே முழுமை வாய்ந்ததாக இருந்தது.
  • எண்ணங்களின் அடிப்படை நிலையானதாகவும், எக்காலத்திற்கும் ஏற்றதாகவும் இருந்ததால் பொய்யாமொழியாக விளங்கியது.
  • அவர் எண்ணங்கள் ஆன்மிகத்தில் வேர் கொண்டவையாக இருந்தன.
  • அவரது சிந்தனை ஹிந்து சமுதாயத்தை மையமிட்டே இருந்தாலும், பரந்து கிடக்கும் மனிதகுலம் குறித்த உலகளாவிய எண்ணங்களையும் வெளிப்படுத்தி வந்தார்.
  • சிந்தனைகளின் வெளிப்பாடு, அனுபவபூர்வமான உணர்வை அடிப்படையாக கொண்டிருந்ததால், வெறும் பேச்சு, வரட்டுவாதம், பிறரை எதிர்ப்பதில் ஏற்படும் மகிழ்ச்சி ஆகியவை அவற்றில் இடம் பெறவில்லை .
  • உண்மையை சமுதாயத்தின் முன் நிலைநாட்டும் பொழுது, அவர் ஒருபோதும் பயம் கொண்டதில்லை, பகைமை பாராட்டியதில்லை.

அவரது எந்தவொரு சிந்தனை குறித்து ஆராயும்பொழுதும், இந்த சிறப்புக்களை நினைவில் கொள்ள வேண்டும். சமுதாய நல்லிணக்கம் குறித்த ஸ்ரீகுருஜியின் சிந்தனைகளையும், அவரது பண்பையும் ஆய்கிறபோது, மேலே குறிப்பிட்ட சிறப்புக்களை நினைவில் கொள்ள வேண்டும்.

ஸ்ரீ குருஜியின் வாழ்வெனும் வேள்வி “இது ஹிந்து ராஷ்ட்ரம்” என்னும் மந்திரத்தின் விரிவாக்கமே. இது ஹிந்து ராஷ்ட்ரம் ஹிந்து சமுதாயம் அதன் புதல்வன்போல. ஹிந்து சமுதாயத்தின் எழுச்சியில்தான் தேச எழுச்சி உள்ளது. ஹிந்து சமுதாயத்தின் வீழ்ச்சி தேசத்தின் வீழ்ச்சி – இதுவே அவரது சித்தாந்தம். ஹிந்து சமுதாயத்தின் வீழ்ச்சியே ஹிந்து ராஷ்ட்ரத்தின் வீழ்ச்சிக்கு அடிகோலியது. நம்மை நாம் மறந்த நிலையே ஹிந்து சமுதாயத்தின் வீழ்ச்சிக்கு காரணம். அனைத்திலும் சுயநலம், சுயநலத்தினால் வேற்றுமைகள், வேற்றுமைகளினால் சமுதாயத்தில் பிளவு. இவ்வாறு சமுதாயம் பிளவுபட்டு ஒழுங்குகுலைந்த நிலை ஏற்பட்டது.

ஹிந்து ராஷ்ட்ரத்தின் எழுச்சிக்கு ஹிந்து சமுதாயத்தின் எழுச்சி இன்றியமையாதது. நம்மையே இழிவாக எண்ணுவதை விலக்க நாம் யார் என்பதை நினைவு படுத்த வேண்டும். சுயநலத்தை விட்டு தன்னலமற்ற உணர்வுகொள்ள வேண்டும். அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, ஒருமைப்பாட்டு உணர்வு, ஒரே எண்ணம், நல்லிணக்கம், கொண்ட ஹிந்து சமுதாயத்தை நிலைநிறுத்த வேண்டும். இதுவே ஸ்ரீ குருஜியின் கருத்தாக இருந்தது. இந்த உயர்ந்த குறிக்கோளை அடைவதற்காகவே ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் தோன்றியது. இந்த குறிக்கோளை அடைவதற்கு சங்க ‘ஷாகா’ ஒரு கருவி என்பதில் அவருக்கு முழு நம்பிக்கை இருந்தது. இதை மையமாகக் கொண்டு, சமுதாயத்தை ஒருங்கிணைக்க அவர் தனது இறுதி மூச்சுவரை பாடுபட்டார். அந்த காலகட்டத்தில், முன்னுதாரனமான சமுதாயத்தின் நிலை, வர்ண முறை, ஜாதிமுறைகள், தீண்டாமை, வனவாசிகளின் நிலை, சமுதாயத்தை நிலைநாட்டுவதில் சமயத்தின் பங்கு, சமுதாயத்தை உயர்ந்த நிலைக்கு எடுத்துச்செல்வதில் சமயப் பெரியோர் பங்களிப்பு, ஜாதிவேறுபாடுகளும் அரசியலிலும், வேறுபாடுகளை களைவதற்கான வழிமுறைகள், நலிந்தோருக்குத் தொண்டு ஆகியவை குறித்த தெளிவான கருத்துக்களை ஸ்ரீ குருஜி சமுதாயத்தின் முன் வைத்தார். அதனை மீண்டும் நினைவு கூர்கிற முயற்சியே இந்த பதிவு.


முன்னுதாரனமான சமுதாயக் கட்டமைப்பு

முன்னுதாரனமான சமுதாயம் எப்படி இருக்கும் என்பதை பல தத்துவ ஞானிகளும், சமூகவியலாளர்களும், பேரறிஞர்களும், சமுதாயநலம் விரும்பிகளும் கூறியிருக்கிறார்கள். நவீன காலத்தில், கார்ல் மார்க்ஸ் என்பவர் சமத்துவத்தோடு கூடிய, சுரண்டலற்ற, அரசற்ற சமுதாயக் கனவை விவரித்தார். அஹிம்சையையும், சத்தியத்தையும் அடிப்படையாகக் கொண்டு சர்வோதய சமுதாய கனவு கண்டார் காந்தியடிகள். டாக்டர் அம்பேத்கர், சுதந்திரமான, சமத்துவத்துடன் கூடிய, சகோதரத்துவம் வாய்ந்த, நியாயத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் கனவு கண்டார். ஸ்ரீ குருஜி, இத்தகைய எந்தவொரு சமுதாயத்தையும் கற்பனையில் தீட்டவில்லை. அவர் நமது தொன்மை வாய்ந்த வரலாற்றை கூர்ந்து நோக்கி தலைசிறந்த சமுதாயத்தை (ஒருகாலத்தில் நிஜமாகவே நிலவிய சமுதாயத்தை) உருவாக்குவதற்கான, திட்டங்களையே முன் வைத்தார்.

“நமது ஹிந்து கலாச்சாரம், சமுதாயம் குறித்து எத்தகைய சித்திரத்தை முன்வைக்கிறது? என்ற வினா குறித்து சிந்திக்கும் பொழுது, சமுதாய வாழ்க்கையின் தன்மையை வைத்தே யுகங்கள் ஏற்பட்டிருப்பது புலப்படுகிறது. ஸத்யயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம் இவை ஒவ்வொன்றிலும் சமுதாயம் ஒரு குறிப்பிட்ட நிலை அடைந்திருந்தது தென்படுகிறது. ஸத்யயுகத்தில் எல்லாம் பொது. செல்வம் அனைவரது என்பதே நிலை. அனைவரும் தேவைக்கேற்ப எடுத்துக்கொண்டு சுகமான வாழ்வு வாழ்ந்தனர். தர்மம் சமுதாயத்தின் நான்கு அங்கங்களிடையே பரவி இருந்தது. சமுதாயத்தைத் தாங்குவதும் இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தை அளிக்க வல்லதுமாகிய சக்தியே தர்மம் என்று அழைக்கப்பட்டது. எல்லையற்று விரிந்து பரந்த பிரபஞ்சத்திற்கு, ஒருமைப்பாட்டை அடையாளம் காட்டும் தர்மத்தின் அடிப்படையில் ஒவ்வொருவரும் தனது இயல்பை உணர்ந்து, பிறரின் நலனுக்காக செயல்பட்டார்கள். ஆட்சி இல்லாதபோதும் கூட, தர்மம் நிலவியதாலேயே ஒருவர் மற்றவரை தாக்காமல் இருந்தார்கள். ஒருவருக்கொருவர் சண்டையும் இல்லை. எல்லாவற்றுடன் ஒருமைப்பாட்டுடன் செயல்பட்டதன் காரணமாக, வெளியிலிருந்து மக்களை எதுவும் கட்டுப்படுத்தாவிட்டாலும் கூட, ”நான் எவரையும் அடிக்கமாட்டேன், அடியும் வாங்கமாட்டேன்’ என்ற எண்ணத்துடன், முற்றிலும், அமைதியாக வாழ்ந்தனர். இது ஸத்யயுகத்தின் அமைப்பு. (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-2, பக்கம்-113)

இன்றைய காலத்திற்கேற்ப கூறவேண்டுமானால், அனைவரும் சமமாக எண்ணப்பட்டனர். அனைவர் மத்தியிலும் சகோதரத்துவம் நிலவியது. ஒருவருக்கும் அநீதி இழைக்கப்படவில்லை , சமுதாயத்தில் பெண்களும், ஆண்களும் எங்கும் நல்லிணக்கம் கண்டார்கள் என்று கூறலாம். ‘சமத்துவம்’ நிலவியது என்று கூறலாம்.

மனிதகுலத்தில் பிறந்த காரணத்தினால், அனைவரும் மனிதர்களே. மனிதன் என்ற பெயர் அனைவருக்கும் பொது. ஆயினும் அனைவரும் அச்சில் வார்த்ததுபோல ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலர் பிறவியிலேயே அறிவாளியாக திகழ்கின்றனர். சிலர் அறிவுத்திறன் குறைந்தவர்களாக இருக்கின்றனர். சிலர் வெண்மை நிறம் படைத்தவர்களாக உள்ளனர். சிலர் கருமை நிறமுடையவர்களாக இருக்கின்றனர். சிலர் உயரம், சிலர் குள்ளம். விருப்பு வெறுப்பு, இயல்பு வேவ்வேறாக உள்ளது. குணம் வேவ்வேறாக உள்ளது. இதன் பொருள், இயல்பாகவே மனித சமுதாயத்தில் குணங்கள் மற்றும் தகுதிகளில் சமமின்மை காணப்படுகிறது. ஸ்ரீ குருஜி பிறவியில் அமைந்துள்ள சமமின்மையை ஏற்றத்தாழ்வாக எண்ணவில்லை. “இது ஒரே ஜீவ தத்துவத்தின் பலவகைப்பட்ட வடிவங்கள்” என்று ஸ்ரீ குருஜி கூறுகிறார். அவர் சொற்கள்: “ஆன்மாவே உண்மையில் அனைத்திற்கும் ஆதாரமாகும். ஏனெனில், ஆன்மாவே அனைத்தும். அனைத்திலும் ஒன்றேயான ஆன்மா பல வடிவங்களாக வியாபித்திருக்கிறது. அனைவரிடத்திலும் ஒரே ஜீவசக்தியே உள்ளது. எனவேதான் அன்பாக நடந்துகொள்கிறோம். ஒவ்வொரு தனிமனிதனும் பரமாத்மாவின் அம்சம் என்று அறிந்து அளவுகடந்த அன்பு செலுத்துகிறோம், உலகம் முழுவதையும் இறைவனின் வடிவமாக உணர்ந்து தூய்மையான அன்பு செலுத்துகிறோம்”. (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-2, பக்கம்-117)

ஸ்ரீ குருஜி நல்லிணக்கம் வாய்ந்த சமுதாய வாழ்க்கையின் தத்துவ அடிப்படையொன்றை இங்கு குறிப்பிடுகிறார்.

இயல்பாகவே தோன்றும் சமமற்ற நிலையை ஏற்றத்தாழ்வு, என்று எண்ணுவது தவறு. இதை நன்கு தெளிவாக புரிந்து கொள்வதற்கு ஒரு மரத்தை எடுத்துக்காட்டாக கூறுகிறார்: “ஒரு மரத்தை எடுத்துக் கொண்டோமேயானால், அதில் பல கிளைகள், இலைகள், மலர்கள், கனிகள் ஒன்றிலிருந்து மற்றொன்று முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. ஆயினும், இவற்றினால் ஒவ்வொன்றும் மரத்தின் விதவித வெளிப்பாடே. பல ஆயிரம் ஆண்டுகளாக மலர்ந்திருக்கும் நமது சமுதாயவாழ்வில் காணப்படும் வேறுபாடுகளும் இத்தகையதுதான். (அகிலபாரத ஜில்லா பிரச்சாரக் வர்க, சிந்தி, விதர்ப்ப -1954)

லட்சிய சமுதாயம் எவ்வாறு ஏற்படும்?

யுக கணக்குப்படி கூறவேண்டுமானால், நாம் இப்பொழுது கலியுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். போட்டி, பொறாமை, வெறுப்பு, நம்பிக்கையின்மை, போகங்களில் இச்சை ஆகியவை கலியுகத்தில் குறிப்பிடத்தக்க அம்சங்கள். அனைத்திலும் சமமின்மை, சுரண்டுதல், அநியாயம் ஆகியவை இந்த யுகத்தின் அடையானம். “பொருளாதாரம், அரசியல், சித்தாந்தம் என அனைத்து ரீதியிலும் மக்கள் மோதலுக்குத் தயாராகி வருகிறார்கள். தன்னைப் போல் பிறரையும் கருதும் அறிவு குறைந்து வருகிறது. தர்மம் நலிந்து வருவதால், துன்பம், ஏழ்மை, அமைதியின்மை மலிந்ததாகி விட்டது வாழ்க்கை .” (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-2, பக்கம்-113)

மீண்டும் மீண்டும் பேசுவதால் மட்டுமே முன் மாதிரியான சமுதாயம் உருவாகிவிட முடியாது. அந்த குறிக்கோளை அடைவதற்கு தொடர்ந்து பாடுபடவேண்டும்.

ஸ்ரீ குருஜி கூறிய வழிமுறைகள் பின்வருமாறு:

  • சமுதாயம் முழுவதிலும் நிலவும் ஒருமைப்பாட்டை உணர்தல்
  • தேசம் முழுவதற்கும் தொண்டு புரிதல்
  • நமது சுகதுக்கங்களை மறந்துவிட்டு பிறருக்காக அனைத்தையும் அர்ப்பணித்தல்
  • இதனால் மனித சமுதாயம் முழுவதற்கும் இன்ப துன்பம் பொதுவாக அமையும்.
  • இவை அனைத்தும் தர்மத்தின் எழுச்சியால் மட்டுமே சாத்தியமாகும்.

இத்தகைய உயர்ந்த லட்சியத்தை அடைவது குறித்து ஸ்ரீ குருஜி தனது 33 வருட சங்க வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். அனைவரையும் நம் போலவே ஒரே ஆத்மாவாக உணர்வதால் தன்னலமற்ற அன்பினால் சமுதாயத்தில் அனைத்து பிரிவு, உட்பிரிவு சகோதரர்களிடையேயும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த அவர் எப்போதும் முயற்சி செய்தார். அவரைப் பொருத்தமட்டில் நல்லிணக்கம் என்பது வெளிப்பார்வைக்கு மட்டுமல்லாமல் வாழ்க்கையின் நடைமுறையாகவே அமைந்தது.

ஹிந்து சமுதாயத்தின் நிலை

ஹிந்து சமுதாயத்தில் நான்கு வர்ணங்கள், ஆயிரக்கணக்கான ஜாதிகள் போன்ற பிரிவுகள் உள்ளன. ஹிந்து சமுதாயத்தில் ஹிந்துவென்று தன்னை அடையாளம் காட்டுகின்றவர்கள் மிகக்குறைவு. ஜாதி பெரும்பாலும் அடையாளம் கொண்டே காட்டுகின்றனர். இன்று பிறப்பினால் ஜாதி அல்லது வர்ணம் கணக்கிடப்படுகிறது. அதன் வேர் ஏற்றத்தாழ்வு. தொழில்வாரியான ஜாதிகள் அதன் தனித்தன்மை. ஒரு ஜாதியிலிருந்து மற்றொரு ஜாதிக்கு மாறுவது பெரும்பாலும் இயலாது. ஜாதிகள் காரணமாக சமய, சமுதாய, அரசியல், பொருளாதார கல்வி உரிமைகள் பங்கீட்டில் சமமற்ற நிலை ஏற்பட்டது. சில ஜாதியில் பிறந்தவர்கள் புனிதமானவர்களல்ல என்றும், சில ஜாதியில் பிறந்தவர்களே புனிதமானவர்களாகவும் கருதப்படுகிறார்கள். வர்ணம் ஜாதி, தீண்டாமை அனைத்தும் ஹிந்து தர்மத்தின் அங்கங்கள் என்று ஆனது சமய ஆதாரம் கிடைத்தால் வர்ணம், ஜாதி, தீண்டாமை இவை மாற்றப்பட முடியாதவை என்று கருதப்பட்டது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சமுதாயத்தில் பெரும்பகுதி அறியாமையிலும் வறுமையிலும் உழன்றது. இதனால் அனைத்து வகையிலும் பின் தங்கியநிலை சமுதாயத்தின் பல ஜாதிகளிடையே காணப்படுகின்றது.

சமுதாயத்தில் நல்லிணக்கம் கொணர்வதிலும் சமுதாயத்தில் அனைவரும் சமம் என்ற நிலை ஏற்படுத்துவதிலும், இன்று நடைமுறையில் இருக்கும் ஜாதி, வர்ண வேறுபாடுகள் என்ற நோய் பெரும் தடையாக உள்ளது.

வர்ணம், ஜாதி, தீண்டாமை ஆகியவை குறித்து ஸ்ரீ குருஜியின் கண்ணோட்டம் என்ன?

வர்ண முறை

ஸ்ரீ குருஜி ஏற்றத்தாழ்வுள்ள நான்கு வர்ண ஏற்பாட்டை ஆதரித்தவர் என்ற தவறான கருத்து வேண்டுமென்றே பரப்பப்பட்டது. மீண்டும் சமுதாயத்தில் வர்ண வேறுபாடுகளும், ஜாதி வேறுபாடுகளும் நிலவவேண்டும் என்பதே அவர் விருப்பமாக இருந்தது என்றும் வேண்டுமென்றே அவதூறு பரப்பப்பட்டது. உண்மையில் அவர் கூறியது, இதற்கு முற்றிலும் மாறானது. எனவே, உண்மை எதுவென்று புரிந்துகொள்வது இன்றியமையாதது.

சமுதாயம் என்பது உயிர்ப்புள்ள படைப்பு என்பது ஸ்ரீ குருஜியின் கருத்து. அவர் விஞ்ஞானம் பயின்றவர். “அமீபா” என்னும் ஓரணு உயிரின் வளர்ச்சியை சுட்டிக்காட்டுகிறார். ஒரு செல் கொண்ட ‘அமீபா என்னும் உயிரினம் வளர்ச்சி அடைய அடைய விதவித அங்கங்கள் முளைக்கின்றன. தன் கடமையை முழு வீச்சில் செயல்படுவதன், பொருட்டு உயிரினங்களில் பல அங்கங்கள் உண்டாகின்றன. இறுதியில் பல அங்கங்களின் ஒருங்கிணைந்த நல்ல கோர்வையாக மனித உடல் உண்டாகிறது. (அகிலபாரத ஜில்லா பிரச்சாரக் வர்க, சிந்தி, விதர்ப-1954)

மனித உடலில் பல உறுப்புகள் இருக்கின்றன. அவைகளின் உருவமும், செயல்பாடுகளும் வெவ்வேறாக இருக்கின்றன. எந்த அங்கமும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய செயல் செய்வதில்லை. ஒவ்வொரு அங்கமும் ஒன்றுக்கொன்று அனுகூலமாக செயல்படுகின்றது. பலவகை உறுப்புகள் ஒரே உடலில் ஒற்றுமையாக செயல்படுவதைப் போன்று, சமுதாயத்திலும் நல்லிணக்கம் உருவாக்க முடியும் என்பது ஸ்ரீ குருஜியின் கருத்து.

“சமுதாயம் உயிரோட்டமுள்ளது. மனித உடலின் அமைப்பு, உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியின் மிகச்சிறந்த வடிவமாகும். எனவே, உயிரோட்டமுள்ள ஒரு வடிவத்தை உருவாக்க அதை அனுசரித்து நடக்க வேண்டும். சமுதாயத்தையும் உயிரோட்டமுள்ள மனிதவடிவை அனுசரித்து உருவாக்கினால் இயற்கையானது என்பதால் மிகவும் உகந்ததாக இருக்கும்” என்கிறார் ஸ்ரீ குருஜி. (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-2, பக்கம்-150)

உயிருள்ள மனிதனைப்போல் சமுதாயத்தை எவ்வாறு உருவாக்க முடியும் என்பது சிக்கலான கேள்வி. மனிதன் தனிப்பட்டவன். அவன் உயிருள்ள வடிவத்தை நாம் காணமுடியும், உணரமுடியும். சமுதாயம் என்பது மனிதர்களின் கூட்டம். சமுதாய புருஷன் என்ற பெயரில் ஒருவருடைய உயிருள்ள ஒன்றை வேறுபடுத்திக் காண்பதோ அல்லது உணருவதோ எளிதல்ல. இவ்வாறு பல பிரச்சினைகள் இருந்தபோதும், சமுதாயம் என்ற உயிர் உள்ள ஒன்றை ஏற்படுத்துவதற்கு நமது முன்னோர்கள் முயற்சி செய்தனர். இதுபற்றி ஸ்ரீ குருஜி கூறுகிறார், ”நமது முன்னோர்கள் பலவாறாக யோசித்து, ஒருமித்த பண்புகளும் ஒத்த மனப்போக்கும் கொண்டவர்கள் ஒருங்கிணைந்து, வளர்ச்சிபெற்று சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ள விதத்தில் வாழ்வது சாத்தியமாகும் வகையில் சமுதாய வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்று கருதினார்கள்.”

உயிருள்ள மனிதனைப் போல் சமுதாயத்தை கட்டமைக்கிற முயற்சியே நான்குவர்ணங்கள். ஸ்ரீ குருஜி இதை நமது சமுதாயக் கட்டமைப்பின் சிறப்பாக கருதினார். இன்று நான்கு வர்ணங்களை கண்டனம் பேசுபவதும், எழுதுவதும் ஒரு ஃபாஷன் ஆகிவிட்டது. ஸ்ரீகுருஜி இந்த ஜனரஞ்சக வழியை பின்பற்றவில்லை. இந்த பிரச்சினையை அறிவியல் பூர்வமாக பரிசீலிக்கையில் அவர் மன்னிப்பு கோரும் தொணியில் பேசவில்லை. நான்கு வர்ண முறையில் இன்றுள்ள ஏற்றத்தாழ்வு ஏற்படுத்தும் வடிவத்தை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். “அந்த சமுதாயக் கட்டமைப்பின் மூல வடிவத்தில் பிரிவுகளிடையே பெரியது-சிறியது, உயர்ந்தது-தாழ்ந்தது என்ற எண்ணத்திற்கு இடம் கிடையாது. சமுதாயம் சர்வவல்லமை பொருந்திய பரமாத்மாவின் வடிவம்; அதை ஒவ்வொருவரும் தனது சக்தி, வழிமுறை இவற்றிற்கேற்ப பூஜிக்க வேண்டியது என்ற உணர்வு ஏற்படுத்தப்பட்டது. பிராமணர்கள் கல்வி கற்றுக் கொடுப்பதன் மூலம் உயர்ந்தோர், ஆனால் பகைவர்களை அழிப்பதன்மூலம் க்ஷத்திரியர்களும் அதே பெருமைக்குரியவர்கள். வாணிபம் செய்பவர்களும் குறைந்தவர்களல்ல. விவசாயம், வியாபாரம் மூலம் சமுதாயத்தை ஸ்திரமாக்குகிறார்கள். சூத்திரர்களும் குறைந்தவர்களல்ல. அவர்களும் தங்களது கலைத் திறமையினால் சமுதாயத்திற்கு தொண்டு செய்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒருவர் மற்றொருவரை சார்ந்து, இணக்கத்துடன் வாழ பழங்காலத்தில் சமுதாயத்தின் அந்த கட்டமைப்பு உருவானது.” (ஞான கங்கை )

ஹிந்து சமுதாயத்தில் ஜாதிமுறை எவ்வாறு தோன்றியது என்பது குறித்து சிறந்த அறிஞர்கள் பல சித்தாந்தங்களை முன்வைக்கின்றனர். ஆரியர்களின் படையெடுப்பை ஏற்றுக் கொள்கின்றவர்கள், வெளியிலிருந்து இங்கு படையெடுத்துவந்த ஆரியர்கள், இங்கு வாழ்ந்த மக்களை அடிமைப்படுத்தி, அவர்களிடையே ஜாதிப் பிரிவுகளை ஏற்படுத்தினர் என்று கூறுகின்றனர். இந்த சித்தாந்தமே ஆரியர்கள் ஐரோப்பா-ரஷ்யா ஆகிய நாடுகளிலும் படையெடுத்ததாக கூறுகிறது. அப்படியானால் அங்கெல்லாம் ஜாதிப்பிரிவுகள் ஏன் ஏற்படவில்லை? இதற்கு விடையும் ஏதும் கிடைக்கவில்லை. மனுஸ்மிருதி எழுதிய மனுவினால் இத்தகைய ஜாதிவேறுபாடுகள் உருவாயின என்பது இன்றுள்ள பொதுவான கற்பனை. டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கூற்றுப்படி, ஜாதிப்பிரிவுகள் மனுவினால் ஏற்பட்டதல்ல. ஜாதிப்பிரிவுகள் என்பது ஒரு சிக்கலான ஏற்பாடு. ஒருவர் எத்தகைய மகானாக இருந்தபோதும் இத்தகைய சிக்கலான ஏற்பாட்டை உருவாக்குவது அவரால் முடியாது என்பார் டாக்டர் அம்பேத்கர்.

ஸ்ரீ குருஜி இதுபோல எந்த ஒரு கோட்பாடு குறித்தும் பேசுவதில்லை . ஜாதிமுறைகள் படிப்படியாக வளர்ந்தது. நமது முன்னோர்களால் மனித வாழ்க்கையை நான்கு புருஷார்த்தங்களின் அடிப்படையில் வகுத்தனர். தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் எனும் இந்த நான்கு புருஷார்த்தங்களில் (அறம், பொருள், இன்பம், வீடு) மனிதனால் இறுதியாக அடையப்பட வேண்டியது வீடு என்று கூறப்படுகிறது. மனிதனுடைய இறுதி குறிக்கோள் “போகம்”அல்ல. மனிதனின் வாழ்க்கை என்னும் யாத்திரையின் இறுதியான கட்டம் ”வீடு” (நிரந்தர இன்பம்) உள்ளார்ந்த சுகத்திற்காக பல விஷயங்கள் குறித்த கவலைகளிலிருந்து விடுபடவேண்டியது அவசியம். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் முதல் கவலை வயிற்றுப்பாடு. வாழ்க்கையை நடத்துவது முதல் பிரச்சினை. உணவு, உடை, இருப்பிடம் இம்மூன்றும் மனிதனின் அடிப்படை தேவைகள். இவை மூன்றையும் முழுமையாக அடைவதற்காக அவன் பாடுபடுகிறான். தீவிர முயற்சி செய்கிறான். தன் பாதுகாப்பு குறித்தும் ஒவ்வொருவருக்கும் கவலை. ஒரு மனிதன் 24 மணிநேரமும் இதைக் குறித்தே சிந்தித்து கொண்டிருந்தால் அவன் எப்பொழுது முழுமையான வளர்ச்சி அடைவது? மனதினாலும், அறிவினாலும், ஆத்மாவினாலும் சுகம் கிடைப்பது எவ்வாறு?

இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கிறார் ஸ்ரீ குருஜி; “நமது முன்னோர்கள் மிகுந்த உலக அனுபவமுள்ளவர்கள். சாதாரண மனிதனின் நாட்டம், ஆசை இவற்றை கருத்தில்கொண்டு அவனை இறுதி லட்சியத்தை அடையச் செய்ய வேண்டும் என்ற சிந்தனை அவர்களுக்கு இருந்தது. வயிற்றுப்பாட்டை பார்த்துக் கொண்டபிறகு சாமானிய மனிதர்கள் ஆன்மீகத்தில் ஈடுபட நேரம் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் எண்ணினர். எனவே மனிதன் பிறந்த உடனேயே பிழைப்புக்கு உத்தரவாதம் தரும் கட்டமைப்பை உருவாக்கினார்கள். அதற்காக ஒரு தனிமனிதனை பாரம்பரிய தொழிலுக்கு தயார் செய்து, குடும்பத்தைக் காப்பாற்றச் செய்வது அவசியமாக இருந்தது. இவ்வாறு வெவ்வேறு தொழில்புரியும் மக்களை தொழில்வாரி ஒன்றிணைத்து ஜாதிகளின் வடிவத்தில் ‘அரசாங்கத்தின் தலையீடு இல்லாத தேசீய காப்பீ டு’ (National Insurance Scheme without Government Interference) என்னும்படியான அமைப்பை ஏற்படுத்தினார்கள். அவரவர் தனது பிறவியினால் வந்த தொழிலினால் குடும்பத்தை காப்பாற்றி அமைதிகரமாக ஆன்ம தத்துவத்தை சிந்தித்து வரவே, நற்பண்புகளின் களஞ்சியமாக சமுதாயம் ஆகமுடிந்தது.” (அகிலபாரத ஜில்லா பிரச்சாரக் வர்க, சிந்தி, விதர்ப-1954)

சமுதாயம் உயிரோட்டமுள்ள அமைப்பு என்ற கோட்பாட்டினால் நாம் அனைவரும் சமுதாயத்தின் அங்கங்கள். உயிரோட்டமுள்ள ஒரே சமுதாயம் என்பதால் நாம் அனைவரும் சமம், ஒருவருக்கொருவர் நிறைவு செய்து கொள்கிறோம் – என்பது ஸ்ரீ குருஜியின் கருத்து. “இந்த கருத்தை பின்பற்றி ஒருமைப்பாடு காண்போம். சேதுவிலிருந்து இமயம் வரை உள்ள முழுமையான தேசத்தை உயர்ந்த, சிறந்த தெய்வீக சைதன்ய உருவமாக கண்டு, அதன் அங்கங்களான நாம் அனைவரும் ஒன்று என்று தெளிந்து, அனைத்து அங்கங்களும் புனிதமானவை என உணர்வோம்.’ (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-2, பக்கம்-122)

மனித சமுதாயத்தில் இயல்பாகவே ஏற்றத்தாழ்வு உண்டு. அது நம்மை பாதிக்காமல் பார்த்துக் கொள்வதே புத்திசாலிதனம். பிழைப்புக்கு உத்தரவாதம், வயிற்றுப் பாட்டுக்கு உத்தரவாதம், பரஸ்பர ஒத்துழைப்பு இவற்றின் வாயிலாக இந்த ஏற்றத்தாழ்வை நீக்கமுடியும். மனிதன், மிகச் சிறந்த இசைவு இணக்கம் வாய்ந்து வாழும் அருகதை உள்ளவனாக விளங்க வேண்டும். இது ஒரு முடவனுக்கும், பார்வையற்றவனுக்கும் இடையே உள்ள இணக்கம் போன்றது. முடவனுக்கு காலும், பார்வையற்றவனுக்கு கண்ணும் கிடைக்கிறது. ஏற்றத்தாழ்வினால் வரும் கசப்பான உணர்வை ஒத்துழைப்பு நீக்குகிறது. நமது கண்ணோட்டத்தில், தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையேயான உறவு மோதலாக இல்லாமல், இணக்கமாகவும் ஒத்துழைப்பாகவும் அமைந்திருந்தது. (ஞான கங்கை )

ஸ்ரீ குருஜி ‘வர்ண முறை’, ‘ஜாதி முறை’ ஆகிய சொற்றொடர்கள் பயன்படுத்துகிறார். இன்று வர்ண வேறுபாடு, ஜாதி வேறுபாடு என்ற சொற்கள் இன்றும் வழக்கத்தில் உள்ள சொற்கள். இன்று அதன் நிலை ‘தலைகீழாக மாறிவிட்டது’ என்று ஸ்ரீ குருஜி கருதினார். வர்ணமுறையினாலும், ஜாதிமுறையினாலும் நமது சமுதாயம் வீழ்ச்சி அடைந்து அந்நியர் பிடியில் சிக்கிவிட்டது என்பதை ஸ்ரீ குருஜி ஏற்றுக்கொள்ளவில்லை. இது வரலாற்று ரீதியில் சரியல்ல” என்கிறார். ஸ்ரீ குருஜி முன்வைக்கும் வாதம் இது:

”கடந்த ஆயிரம் ஆண்டுகளாக ஒற்றுமை இன்மையால் நமது தேசம் அந்நியர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. நம்மிடையே நிலவிய ஜாதிவேறுபாடுகள் அந்நியர்களின் படையெடுப்புக்கு உதவியதே அதற்கு மூல காரணம் என்று கூற இயலாது. தில்லியின் ஹிந்து அரசன் பிருதிவிராஜை முகமது கோரி வென்றதற்கு, பிருதிவிராஜின் உறவினனான ஜெயச்சந்திரனே காரணம். காட்டில் ராணா பிரதாபை துரத்தி வந்த மான்சிங்கும் அவனது ஜாதியைச் சேர்ந்தவனே, சிவாஜி மகாராஜாவுக்கும் அவரது ஜாதியினரே பகைவர்களாக இருந்தனர். ஜாதிவேறுபாடு இதற்கு ஒருபொழுதும் காரணமாக இருந்ததில்லை. (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி-11)

(இந்த எல்லா எடுத்துக்காட்டுகளும் அரசியல் சட்டத்தை நிறுவிய டாக்டர் அம்பேத்கர் 1949, நவம்பர் 25 அன்று அரசியல் நிர்ணய சபையில் ஆற்றிய நிறைவுரையில் இடம் பெற்றுள்ளன).

ஸ்ரீ குருஜி முன்வைக்கும் இன்னொரு கருத்து, “நம்மிடையே நிலவும் ஜாதிவேறுபாடுகளே நமது நலிவிற்கு காரணமென்றால், நமது சமுதாயம் ஜாதிகளே இல்லாத அந்நியர்களின் ஆக்கிரமிப்பிற்கு வெகு எளிதாக மண்டியிட்டிருக்கும். முஸ்லிம் ஆக்ரமிப்பாளர்கள், ஈரான், எகிப்து, ரோம், சீனா என்று தங்கள் வழியில் எதிர்ப்பட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்களை கூட, தனது காலடியில் நசுக்கிவிட்டனர். அந்த நாடுகளில் மக்களிடையே ஜாதி உபஜாதி வேறுபாடுகள் இருந்ததில்லை . ஆயிரம் வருடங்களாக நமது மக்கள், அச்சமூட்டக்கூடிய படையெடுப்புகளால் அழியவில்லை, மாறாக தீவிரமாகவும், வீரத்துடனும் எதிர்த்து, இறுதியில் பகைவர்களின் வலிமையை முழுவதுமாக அழித்தனர். (ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், தொகுதி 11)

அதாவது, சமுதாயத்தின் நலனுக்காக இன்றுள்ள வர்ண வேறுபாடுகளையும், ஜாதிவேறுபாடுகளையும் அப்படியே வைத்துக் கொள்வது அவசியம் என்று பொருள் கொள்வது மிகவும் தவறு. ஸ்ரீகுருஜியின் கருத்து இதுவல்ல. இன்று திரிபுதான் சமுதாயத்தில் எஞ்சியிருக்கிறது. எனவே அதை முடிவிற்கு கொண்டுவருவதே உகந்தது. “சந்தேகத்திற்கிடமின்றி இன்று ஜாதிமுறைகள் எல்லா விதங்களிலும் கெட்டுவிட்டது. புதிய வீடு கட்டும்பொழுது பழைய வீட்டை இடிக்கத்தான் வேண்டும். இன்று சீர்கெட்டுள்ள சமுதாயக் கட்டமைப்பை முழுவதுமாக தகர்த்துவிட வேண்டும், அதிலிருந்து புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இன்று நாம் அனைவரும் ஒன்று என்ற உணர்வுள்ள சமுதாயம் உருவாக்க நமது அப்பழுக்கற்ற தேசிய உணர்வை மனதில் நிலைநிறுத்தி, உயிர்ப்புள்ள, ஒருங்கிணைந்த சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டும்” என்பது ஸ்ரீ குருஜியின் எண்ணம்.

பல கார்யகர்த்தர்கள் ஸ்ரீ குருஜியிடம் வர்ண முறை மற்றும் ஜாதிமுறைகள் குறித்து கேள்விகளை எழுப்பினர். இதற்கு அவர் அளித்த விடைகளிலிருந்து, வர்ணமுறை, ஜாதிமுறை குறித்த ஸ்ரீகுருஜியின் கண்ணோட்டம் தெளிவாகிறது.

கேள்வி: ஹிந்து ராஷ்ட்ரம் என்ற கருத்தை எதிர்ப்பவர்கள், முன்பு நமது நாட்டில் நிலவிய வர்ண, ஜாதிமுறைகளை கொண்டுவந்து, அதன் அடிப்படையில் தீண்டாமையை வளர்த்து, பிராமணர்களின் ஆதிக்கம் ஏற்படுத்தப்படும். இவ்வாறு நேர்மாறாக அர்த்தம் செய்து கொண்டு நம்மீது குற்றம் சாட்டுகின்றனர். இந்தக் கருத்தினால் நாட்டிற்கு நெருக்கடி ஏற்படும். அது பாதகம் விளைவிக்கும் என்று பேசுகிறார்கள்.

பதில்: இந்த கலியுகத்தில் அனைத்து வர்ணங்களும் ஒழிந்து, ஒரே ஒரு வர்ணம்தான் நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. வர்ணமுறை, ஜாதிமுறை என்னும் சொற்களை கேட்கும் நம் மனதில் தயக்கம் ஏற்பட்டு ‘மன்னிப்பு கோரும் மனநிலை, நமக்கு ஏற்பட்டு விடுகிறது. ஒரு காலகட்டத்தில் இந்த முறைகள் சமுதாயத்தில் நிலவின என்று தெளிவாகச் சொல்வோம். அவை நன்மை பயப்பதாக இருந்தன. இன்று இந்த முறைகளால், நன்மை ஏதும் இல்லாததால், நாம் அவற்றை உடைத்துவிட்டு புதிய முறைகளை உருவாக்குவோம்.

உயிரியலில் வளர்ச்சி என்பது எளிமையாக தொடங்கி நுட்பமானதில் முடிகிறது. ஒரு சிசுவிற்கு முதல் நிலையில் கை, கால் முதலியன தோன்றுவதில்லை. மாமிசப் பிண்டமாகவே இருக்கிறது. இதன் மூலமாகவே உண்பது, அருந்துவது, வெளியேற்றுவது முதலிய செயல்கள் நடைபெறுகின்றன. அது வளரும் மற்ற செயலுறுப்புகள் தோன்றுகின்றன. இத்தகைய பரிணாம வளர்ச்சி சமுதாயத்திலும் உள்ளது. இது ஏற்படாத சமுதாயம், வளர்ச்சியடையாத சமுதாயமாகும். வெறும் ஆயுதங்களை செய்வது மட்டுமே வளர்ச்சியல்ல. நமக்கு சமுதாயத்தை கடவுளாக பாவிப்பதை தவிர வேறொன்றும் தெரியாது. சமுதாயத்தின் எந்த அங்கமும் தீண்டத்தகாததல்ல, வெறுக்கத்தக்கதல்ல. ஒவ்வொரு பிரிவும் புனிதமானது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். உயர்ந்தது, தாழ்ந்தது என்ற எண்ணம் சமுதாயத்தின் அங்கங்கள் குறித்து ஏற்படக்கூடாது. நாம் இதை நினைவில் கொண்டு சமுதாயத்தை உருவாக்குவோம். கடந்த காலத்தை குறித்து மன்னிப்பு கோரும் மனப்பான்மை வேண்டாம். மற்றவர்களை நோக்கி கேட்போம்: “நீங்கள் யார்? பல நூற்றாண்டு மனித சமுதாய வளர்ச்சியில் உங்கள் பங்கு என்ன? இன்றும் உங்கள் செயல்பாட்டினால் மனிதனுக்கு நன்மை விளையும் என்று உத்திரவாதம் இல்லை. இதில் எங்களுக்கு புத்திமதி சொல்ல நீங்கள் யார்? இது நமது சமுதாயம். நமது சமுதாயத்தை நாம் ஒருமித்த கருத்துடையதாக உருவாக்குவோம். அதன் பல்வேறு வீர செயல்களையும் அறிவாற்றல்களையும் வெளிப்பட செய்வோம்.”

கேள்வி: ஜாதி குறித்து தங்களது உறுதியான கண்ணோட்டம் என்ன?

பதில்: சங்கம் எந்த ஜாதியையும் ஏற்பதில்லை. சங்கத்தைப் பொருத்தவரை ஒவ்வொருவரும் ஹிந்து. ஜாதி என்பது ஒரு காலகட்டத்தில் சிறந்த அமைப்பாக விளங்கியது. ஆனால், இன்று அது பொருத்தம் அற்றதாகி விட்டது. வளைந்து கொடுக்கும் தன்மையற்றவர்கள் ஜடம் போன்று கடினமாகி விடுவார்கள். தீண்டாமையை சட்டத்தின் மூலமாக மட்டுமன்றி நிஜவாழ்க்கையிலும் ஒழிக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். சமயத் தலைவர்கள் தீண்டாமையை ஒழிப்பிற்கு சமய ரீதியாக அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதும் எனது விருப்பம். உயர்வு – தாழ்வு பாராமல் வேறுபாடில்லாமல், அதிகபட்ச திறனுடன் அவரவர் தன் கடமையாற்றுதலே, மனிதனின் உண்மையான சமயம். செய்யும் தொழிலே தெய்வம். அதை வழிபாடாகவே கருதுதல் வேண்டும். நான் ஜாதி என்பதை பழங்கால கவசமாக காண்கிறேன். ஒரு காலகட்டத்தில் அது தன் கடமையைச் செய்தது. ஆனால் இன்று அது பொருந்தாது. மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், மேற்கு பஞ்சாபிலும், கிழக்கு வங்காளத்திலும் ஜாதிமுறைகள் வலுவற்றதாக இருந்தது. இதன் காரணமாகத்தான், இந்த இடங்கள் இஸ்லாத்திடம் தோன்றன. ஜாதிமுறைகளே நாம் அடிபணிந்ததற்கு காரணம் என்பது, சுயநலவாதிகளால் புகுத்தப்பட்டது. இத்தகைய அர்த்தமற்ற பேச்சுகளை கண்டிக்க நான் தயாராக இல்லை. ஒரு காலத்தில் ஜாதி சிறந்த அமைப்பாக இருந்தது. மற்ற எல்லாம் கலகலத்துப் போன வேளையில் சமுதாயத்தை கட்டுக் கோப்பாக வைப்பதற்கு ஜாதிமுறை பெரிதும் உதவியது.

கேள்வி: ஹிந்து கலாசாரம் வளர்ச்சி அடையும்போது வர்ணமுறை மீண்டும் நிறுவப்படுமா?

பதில்: தேவையில்லை. நாம் சாதிமுறையின் ஆதரவாளர்களுமல்ல, எதிர்ப்பாளர்களும் அல்ல. அது குறித்து நமக்குத் தெரிவதெல்லாம், கடந்த காலத்தில் அது மிகவும் நன்மை பயக்கக்கூடிய அம்சமாக இருந்தது. இன்று சமுதாயம் அது தேவை இல்லை என்று எண்ணினால், அது தானாகவே ஒழிந்துவிடும். அதற்காக யாரும் வருந்தவே வேண்டாம்.

கேள்வி: ஹிந்து சமுதாயத்திற்கு வர்ண அமைப்பு இன்றியமையாததல்லவா?

பதில்: வர்ண அமைப்பு ஹிந்து சமுதாயத்தின் நிலைமையோ அல்லது ஆதாரமோ அல்ல. அது ஒரு ஏற்பாடு அல்லது வழிமுறையே ஆகும். அது தற்பொழுது நன்மை பயக்குமா பயக்காதா என்பதன் அடிப்படையில், வர்ண முறையை நீடித்து இருக்கவிடலாம், அல்லது ஒழிக்கலாம்.

தொடரும்…

நான் சாதாரண ஸ்வயம்சேவக் -11

(ஸ்ரீ குருஜி அவர்களின் பௌத்திக்
முந்தய பகுதியின் தொடர்ச்சி )

ஒரே வழி

இப்படிப்பட்ட சங்கடமான சூழ்நிலையை தவறாக பயன்படுத்திக் கொள்ள, பல்வேறு சக்திகள் நமக்குள் ஊடுருவிட  காத்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் நமது சமுதாயத்தில் விரிசல் ஏற்படுத்தி அழிவை ஏற்படுத்த எந்த ஒரு வாய்ப்பையும் வீணாக்குவதில்லை. இந்த எதிரிகளுக்கு உதவி செய்ய வெளியில் எதிரிகள் உள்ளார்கள். இந்த வெளி எதிரிகள் நாட்டை அப்படியே முற்றுகையிட்டு உள்ளார்கள். எல்லா  எல்லைகளிலும் நின்று சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள், ஊடுருவல் செய்து கொண்டிருக்கின்றனர். எப்போது நேர்தாக்குதல் என்று தெரியாது. நாம் நமக்குள் பொறாமை, சண்டை, ஒழுக்கமின்மை, சுயமறதி  ஆகிய காரணங்களால் ஒரு விதமான அராஜகத்தையே  ஏற்படுத்திவிட்டோம். இப்படிப்பட்ட சின்னாபின்னமான, கோரமான சூழ்நிலையின் காரணமாக, தாக்குகிற எதிரிகளை எதிர்த்து நிற்கும் சக்திகள் இல்லையோ என்கிற சூழ்நிலை தெரிகிறது.

இது எல்லாவற்றையும் பார்த்தால் நம்மிடம் ஒரே ஒரு பதில்தான் உள்ளது. அது துயரமான வரலாற்றை பார்த்து அழுவது அல்ல. எதிரி நாட்டிற்கு மூன்றாவது நாடு உதவி செய்கிறது அல்லது ஆயுதங்களைக் கொடுத்து உதவுகிறது. இந்த நிலையில் புகார் செய்வது, அழுவது எல்லாம் கோழைத்தனத்தின், கையாலாகாத்தனத்தின் அடையாளம். நாம் அவனை விடப் பலம் வாய்ந்தவனாக ஆகி உறுதியுடன் இருக்க வேண்டும் அல்லவா? பராக்கிரமம் வாய்ந்த, பல்வேறு குணங்கள் வாய்ந்த, தன்மானம் வாய்ந்த நாட்டின் கடமை என்ன? மற்றவர்களை குறைகூறிக் கொண்டிருப்பதா? நம்முடைய தோள் பலத்தை நம்பி எழுந்து நிற்போம். அப்படி எழுந்து நின்றாக வேண்டும். சாக்கு போக்கு கூறுவதால் வேலை நடக்காது; அல்லது மற்றவர்கள் நம்மீது தாக்குகிறார்கள் என்று கத்தி அழுவதினாலும் ஒன்றும் நடக்காது. அவர்கள் அப்படித்தான் செய்யப்போகிறார்கள். எது நாள் வரை  நாம் பலவீனர்களாக இருந்து கொண்டு, அவர்களுக்கு தாக்குவதற்கான வாய்ப்புக் கொடுக்கிறோமோ அதுவரை அவர்கள் தாக்குவார்கள்; அடிப்பார்கள்.

அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்? சுயமறதியின்   காரணமாகத்தான் இந்த பெரிய சமுதாயம் உடைந்துள்ளது. இந்த சுயமறதியை  அகற்ற வேண்டும். “இது என்னுடைய தாய் நாடு முழு சமுதாயமும் என்னுடையது. என்னுடைய ராஷ்டரம், இந்த பூமியில் என்னுடைய இந்த தேசிய வாழ்க்கை எல்லாம் வல்லதாக, அனைத்தும் நிறைந்ததாக, முழு அதிகாரம் வாய்ந்ததாக ஆகி உலக அரங்கில் தன்னம்பிக்கையுடன் எழுந்து நிற்கும்” என்ற உணர்வை ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஏற்படுத்த வேண்டும். இந்த எழுச்சியால், நம்முடைய பணியின் பலத்தினால், முழு சமுதாயத்தையும் தன்னம்பிக்கை மூலம் கோர்த்து இணைக்க வேண்டும். எல்லோருக்கும் கட்டுப்பாட்டைப்  பழக்கப்படுத்தி, அனைத்து இடர்களையும் அழித்துவிடுகின்ற தகுதியுள்ள, ராமேஸ்வரத்தில் இருந்து இமயமலை வரை ஒருங்கிணைக்கப்பட்ட  தேசிய சக்தியின் வடிவத்தில், நமது சமுதாயத்தையே  எழுப்பி நிறுத்த வேண்டும். வேறு எந்த வழியும் இல்லை. வேறு வழிகள் எல்லாம் அப்பாவிதனமானதும், பைத்தியக்காரத்தனமானதும்  மேலோட்டமானதும் ஆகும். நம்முடைய சமுதாயம் என்கிற உடலில் புகுந்துள்ள அழுக்கை அகற்றி, முழுமையாகத்  தூய்மைப்படுத்தி, தன்னுடைய முழு சக்தியை எழுப்புகின்ற காரியம் தான் சங்க வேலை.  இது தவிர வேறு எதுவும் பொருத்தமான உபாயம் இல்லை.

அந்த வேலை செய்கின்ற பேறு கடவுள் அருளால் நமக்குக்  கிடைத்துள்ளது நாமெல்லாம் சங்கத்தின் சாதாரண ஸ்வயம்சேவக்’. இப்படிப்பட்ட இணையில்லாத உயர்ந்த அங்கீகாரம் நமக்குக் கிடைத்துள்ளது. இந்த உணர்வுடன் நாம் வேலையில் ஈடுபடுவோம்.  ஒவ்வொருவரும் சக்தி, புத்தி, நேரம் இவற்றை சங்க வேலைக்காக அர்ப்பணித்து சிறிது காலத்திலேயே சங்க வேலை விசாலமான பரிணாமம் அடைய வேண்டியுள்ளது. இது நம் ஒவ்வொருவர் கடமை என்று கொள்ளுங்கள் இதுவே என் வேண்டுகோள்.

முற்றும்

நான் சாதாரண ஸ்வயம்சேவக் -10

(ஸ்ரீ குருஜி அவர்களின் பௌத்திக்
முந்தய பகுதியின் தொடர்ச்சி )

வேலை வளர்ச்சி என்பதன் அர்த்தம்

இந்த விஷயத்தில் நம்மை நாம் “சாதாரண ஸ்வயம்சேவக்” என நினைத்து நமது வாழ்க்கையில் அமல்படுத்துகின்றோம். இவை அனைத்தையும் கடமை என்று நினைத்துச் செய்ய வேண்டும். இதனால் என்ன லாபம்? எல்லா வேலைகளும் இயற்கையாக, சிரித்து விளையாடிக் கொண்டே, உழைப்பு ஏதுவும் இல்லாமல் நிறைவேறுவது அல்ல. உழைக்க  வேண்டும்.

இதெல்லாம் எதற்காக என்ற கேள்வி எழுகிறது. சங்க வேலையை வளர்ப்பதற்காக என்று சிலர் கூறுகிறார்கள். வேலையை வளர்ப்பது என்றால் என்ன என்று சிலர் யோசிக்கிறார்கள். சங்கம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. பலமுறை பத்திரிகையில் பெயர் வருகிறது. ஒரு சிலர் எதிர்த்துப் பேசுகிறார்கள். அவர்கள் என்ன செய்வார்கள்? அப்படிப்  பேசித்தான் ஆக வேண்டும். ஆனால் எல்லாம் நிறைந்து விட்டது வேண்டும் ஆனால் எல்லாம் நிறைந்து விட்டது விட்டது, போதுமானதாகி விட்டது என்று பொருளா?  இதற்கு மேலும் எவ்வளவு வளர்க்க?

நாம் சிந்திப்போம். ஏன் வளர்க்க வேண்டும்? நம் முன் உள்ள லட்சியம் என்ன? ஹிந்து சமுதாயத்திற்கும் சிறியதோர் இயக்கத்தை அமைப்பது நமது லட்சியம் அல்ல. முழு ஹிந்து  சமுதாயத்தையே ஒருங்கிணைப்பது நம் லட்சியம். விசாலமான ஹிந்து சமுதாயம் எப்படி ஒருங்கிணைக்கப்பட முடியும்? இருக்கின்ற அனைவருமே சங்கஸ்தானில் எப்படி வந்து நிற்பார்கள்?  இது நடக்கிற விஷயமா என்று சிலர் கேட்கிறார்கள்.

அவர்கள் சொல்வது உண்மைதான். ஒரு விஷயம் தெளிவு அதாவது, சங்கம் ஆண்களுக்காக  இருக்கிற வேலை. ஆகவே குறைந்தபட்சம் சமுதாயத்தின் பாதிப்பேர் சங்கஸ்தானத்திற்கு  வரமாட்டார்கள். சிலர் வந்து எங்களை ஏன் சேர்த்துக் கொள்வதில்லை என கேட்கிறார்கள். மிகவும் சிறுவர்களும் முடியாது. மற்றும் மிகவும் வயதானவர்களும்,  ஊனமுற்றவர்களும் வரமுடியாது. சங்க ஷாகாவிற்கு யார் வர முடியும் என்ற கேள்விக்கு பழையதொரு சொல் இருக்கிறது.

யார் தன் காலால் சுயமாக நடந்து வர முடியுமோ அப்படிப்   பட்டவர்கள் தான்  வரமுடியும் இரண்டு கால்களால் நடக்கக்  கற்றுக்கொண்டுள்ள சிசுவில் இருந்து ஆரம்பித்து, தன் கால்களினாலேயே நடப்பதை இன்னும் நிறுத்திவிடாத  வயதானவர்கள் வரை அனைவரும், நமது கண்ணோட்டத்தில், ஷாகவிற்கு வர தகுதியுள்ள ஸ்வயம்சேவகர்கள். பிறரை சார்ந்துள்ள குழந்தைகளும், முதியவர்களும் தவிர மற்றவர்களெல்லாம் வருவார்களா என்ன? வந்து விட மாட்டார்கள். என்ன செய்யவேண்டும்? நம்முடைய ஒருங்கிணைக்கின்ற வேலையை முழுமை பெறுமா? ஆகாதே? எனவே நம் முன் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட எல்லை வைத்துக்கொள்ளவேண்டும். எதுவாக இருக்க முடியும் என்று பலர் கேட்கிறார்கள்.

வெகுநாள் முன்பு ஒருமுறை டாக்ட்டர்ஜி, ஒரு குறிப்பிட்ட சதவீதம் மக்கள் ஸ்வயம்சேவகர்களானால் குறைந்தபட்ச தேவை பூர்த்தி ஆகலாம் என்று கூறியிருந்தார். நான் இப்போது இந்த  சதவீதக் கணக்கெல்லாம் நான் பேசமாட்டேன். ஏனென்றால், அந்த நேரத்தில் விளக்கிச் சொல்லும் போது, அதைப்  பலர் விபரீதமாகப்  புரிந்துக்கொண்டார்கள்.  நான் ஒரு இடத்தில் இவ்வளவு சதவீதம் சங்க்யா வரவழைக்க வேண்டும் என்று கூறினேன். அதற்கு கார்யகர்த்தர்கள் பேய் பிடித்தது போல வேலையில் இறங்கினார்கள். ஆங்காங்கு ஷாகாக்கள், எல்லாவிடமும் ஸ்வயம்சேவகர்கள் என்றாக்கிவிட்டு எனக்கு கடிதம் வந்தது: ” நம்முடைய இந்த ஊரில் தாங்கள் குறிப்பிட்ட சதவீதம் ஸ்வயம்சேவகர்கள் ஆகிவிட்டார்கள்.  அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.” நான் அவளுக்குக் ஒரு கடிதம் எழுதினேன், “ஒரு சத்தியநாராயண பூஜை நடத்தி பாராயணம் செய்து எல்லோருக்கும் பிரசாதம் கொடுத்து சங்க வேலையை இழுத்து மூடுங்கள்” என்று அதில் குறிப்பிட்டேன். வேறு என்ன சொல்ல? இந்த விகிதாச்சாரத்தினால்  எவ்வளவு குழப்பம் ஆகவே மேலும் விபரீத அர்த்தம்  வருவது போல வேறு ஒன்றும் சொல்ல வேண்டாம். அப்படியானால் என்ன செய்வது?

முழு சமுதாயத்திற்காக

நாம் சாதாரணமாக தன்னுடைய கடமைகள் பற்றி யோசிக்கும் பொழுது, முழு சமுதாயத்திற்கும் நெருக்கமான நட்பு நிறைந்த உறவு ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றிப்  பார்த்தோம். தொடர்பும் உறவும் அவரவர் நகரம்,  தமது ஷாகா, தமது ஷாகாவிற்கு சம்பந்தப்பட்ட சுற்றுப்புறம் வரை மட்டுமல்ல, மாறாக இந்த உறவு முழு  ஹிந்து சமுதாயத்துடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய ஒன்று. நகரவாசி, கிராமவாசி, அடர்த்தியான காடு, மலை, குகை இங்கெல்லாம் வசிப்போர் ஆகிய அனைவருமே நமது சகோதரர்கள் தான். அனைவருடனும்  நமக்கு நிரந்தரமான, உயிர்ப்புள்ள உறவு இருக்கட்டும். அன்பு மிக்க உறவு இருக்கட்டும். பரஸ்பரம் வந்துபோகின்ற, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் உறவிருக்கட்டும். இதற்காக எத்தனை கார்யகர்த்தர்கள்  தேவைப்படுகிறார்களோ, அத்தனை கார்யகர்த்தர்கள் கொண்ட அவ்வளவு ஷாகாக்கள் அதுவும், தினம்தோறும் முறையாக நடக்கின்ற ஷாகாக்கள், நமக்குத் தேவை.

இது பெரிய வேலை நாம் செய்தாக வேண்டும். அதைவிடக் குறைந்ததான எந்த வேலையினாலும்  நமக்கு மகிழ்ச்சி உண்டாகாது. ஆகவே, நமக்கு முன் உள்ள வேலையில் குறைந்தபட்ச எல்லைவரை வளர்ச்சி காணச் செய்யவேண்டும். அதை அடைந்த பிறகு அது குறையவிடக் கூடாது அதாவது வேலையை தேவையான அளவிற்கு வளர்ப்பது, அதன்பிறகு வேலையை குறைந்த அளவிற்கு எப்போதும் உயிர்ப்புடன் வேருன்றச் செய்வது, இப்படியாக இது வாழ்நாள் முழுவதற்குமான ஒரு  வேலையாக நம்முன் உள்ளது. தற்பொழுது இருக்கின்ற வேலையை இன்னும் ஆக வேண்டிய வேலையுடன் ஒப்பிட்டுப் பார்த்து எவ்வளவு குறைவாக உள்ளது என்று சிந்தித்துப் பார்ப்போம். எனவே, ‘சாதாரண ஸ்வயம்சேவக்’ என்கின்ற முறையில் நாம் எவ்வளவு அதிகமாக உழைக்க வேண்டியுள்ளதோ அதைக் குறைப்பதோ, ஒத்திப் போடுவதோ எந்த அளவுக்கும் விரும்பத்தகாதது, தகுதியற்றது, பொருத்தமற்றது என்று நாம் சிந்திப்போம். மேலும் அதற்கேற்ப நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம். மிகவும் திறமை வாய்ந்த கார்யகர்த்தராகி வேலை செய்வதில் ‘அக்ரேஸர்’ (முன்னணியில் இருப்பவர்) ஆக்குவோம்.

ஏன் இந்த அவசரம்?  ஏனென்றால் நம் முன் தேசத்தின் சூழ்நிலை தெரிகின்றது. நம்முடைய ஹிந்து சமுதாயம் சுயமறதியில் ஆழ்ந்து உள்ளது. இது நம்முடைய நாடு என்று சொல்வதற்கும் பலருக்கு தைரியம் இல்லை. தாய் நாட்டின் மீதான அன்பு மிகவும் பலவீனமாக இருப்பது தெரிகிறது. ஆகவே  சமுதாயத்தில் சுயநலம் கொடிகட்டி பறக்கிறது. சுயநலத்தின் காரணமாக தீயகுணங்களும் அநீதியும் பரவியுள்ளன. கோஷ்டிப் பூசல்,   பொறாமை, வெறுப்பு  ஆகியவை பேயாட்டம் ஆடுகின்றன. சமுதாயம் துண்டு துண்டாகி அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பது போல் தோன்றுகிறது.

[தொடரும்]

நான் சாதாரண ஸ்வயம்சேவக் -9

(ஸ்ரீ குருஜி அவர்களின் பௌத்திக்
முந்தய பகுதியின் தொடர்ச்சி )

தூய ஒழுக்கம்

நமது சங்கத்தை துவக்கிவைத்தவரின் முன்தாரணம் நமக்கு முன்பு உள்ளது. மாசற்ற ஒழுக்கமுடையவர் பரமபூஜனீய ஸ்ரீ டாக்டர் ஜி அவருடைய காலத்தில் நடந்த ஒரு சம்பவம். ஒரு தேர்தல் நடந்தது. அவருடைய பழைய  நண்பர்கள் தனித்தனிக் கட்சிகளை  சார்ந்தவர்களாக இருந்தாதினால் ஒருவர் மற்றொருவரை எதிர்த்து போட்டியிட்டார். அவர்களின் ஒருவருடன் டாக்டர்ஜிக்கு நெருக்கமான உறவு இருந்தது. ஆகவே தம்முடைய இந்த நண்பருக்காக உழைப்பது தமது கடமை என்று நினைத்து, டாக்டர்ஜி சிறிது முயற்சி செய்து கொண்டிருந்தார்.

இரண்டாவது நண்பர் புகழ்பெற்ற பேச்சாளர்.  கர்ஜனை  செய்வதுபோல் பேசுவார். அவருடைய பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். ஏனென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட வசை மொழியைப்  பயன்படுத்தி பேசுவதில்  பெரிய கில்லாடி. இப்போதெல்லாம் மக்கள் வசை மொழியைக்  கேட்டுப்   பழகிப் போனதினால், தீட்டித் தீர்க்காத சொற்பொழிவை ரசிக்க மாட்டார்கள், ஆகவே, அவருடைய சொற்பொழிவைக் கேட்க ஆயிரக்கணக்கில் வந்து கொண்டிருந்தார்கள். அவர் தமது எதிரியையும் அவருடைய ஆதரவாளர்களையும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் தேடித்தேடி வெளியே எடுத்துப்போட்டு விளாசி  எதிராளியை பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கோ, மக்களுக்கு முன்பு நிற்பதற்கோ தைரியம்  இல்லாத பரிதாபமான நிலைக்குத் தள்ளி விடுவார். அவர் தமது பேச்சில் தன்னுடைய எதிரியை நகரத்தில் எங்கேயும் கூட்டம் நடத்த விடாதவாறு செய்து விடுவேன் என்று கூறினார். அவர் அப்படி செய்பவரும்  கூட எங்கேயாவது எதிர்கட்சிக்காரர்கள் கூட்டம் போட்டால் அங்கே குழப்பம் ஏற்படுத்தி கூட்டத்தை கலைத்து விடுவார்.

டாக்டர்ஜியின் நண்பருக்கும் கூட்டம் போட ஆசை இருந்தது. ‘டாக்டர் ஜி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்’ என்று சொன்னார். கூட்டத்தை கலைக்க அடியாட்கள்  தயாராக வந்தார்கள். டாக்டர்ஜி அங்கு நாற்காலி ஒன்றில் உட்கார்ந்திருந்தார்.   அவருடைய பருமனான வடிவத்தைப்  பார்த்து குழப்பம் ஏற்படுத்த வந்தவர்களுக்கு தைரியமே வரவில்லை. இங்கு ஏதாவது உபத்திரவம் செய்தால் சரியான அடி கிடைக்கும் என்று அஞ்சினார்கள். முழுக்கூட்டமும் அமைதியாக நடந்தது. பிறகு அந்த   எதிர் தரப்பு வேட்பாளர் “என்ன சொல்வது? என்னுடைய எதிர்க்கட்சியில் உள்ள அனைத்து ஆதரவாளர்களின் பலவீனத்தையும் வெளியே கொண்டு வந்து அவருடைய ‘வாயை’ மூடிவிட்டேன். ஆனால் இப்போது எவருடைய உதவியினால் இவர் எனக்கு எதிராக போட்டியிட்டு இருக்கிறாரோ அவருக்கு, எதிராக பேச என்னிடம் ஒரு வார்த்தை கூட இல்லை என்று தன் கட்சி கூட்டத்தில் பேசினார். அதாவது டாக்டர்ஜியை எதிர்த்து என்னதான் சொல்ல முடியும்?அகமும் புறமும் தூய்மை அப்பழுக்கற்ற ஒழுக்கம் இப்படி இருக்க அதை குறை கூறுவது? எந்த ரகசியத்தை அவர் என்னதான் செய்வார்? “இந்த ஒருவரின் சக்தியை நம்பி என் எதிரில் கர்ஜனை செய்து கொண்டிருக்கிறார்” என்று கூறினார் இதுதான் நம் முன் உள்ள உதாரணம். மக்களின் மனதில் டாக்டர்ஜியை பற்றி எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்பதை காட்ட பல உதாரணங்கள் உள்ளன.


டாக்டர்ஜியின் ஒரு நண்பருக்கு ஒரு முறை பணம் தேவைப்பட்டது. அவர் டாக்டரிடம் வந்தார் இது ஆச்சரியமான விஷயம். டாக்டர்ஜிக்கு  எங்கிருந்து பைசா வருகிறது. டாக்டர்ஜி நாகபுரியில் மருத்துவத் தொழில் செய்து வந்தார் என்று எனக்குச் சிலர் கூறினார்கள். ஆனால் நான் அவர் வேலை செய்ததை பார்த்ததே கிடையாது. அவர் இரண்டு மருந்துகளை கட்டாயமாக வைத்திருப்பார். ‘கொய்னா’ மாத்திரை, ‘டிஞ்ச்சர்’ – அவ்வளவுதான் விளையாடும்போது யாருக்காவது அடிப்பட்டால் டிஞ்ச்சரில்   நனைத்த பஞ்சை ஓட்டி விடுவார். யாருக்காவது காய்ச்சலோ,  ஜலதோஷமோ வந்தால் ‘கொய்னா’ மாத்திரைகளைச்  சாப்பிடக்  கொடுப்பார் ஸ்வயம் சேவகர்களுக்கு கொடுக்கும்போது கட்டணம் கொடுக்க மாட்டார்கள். ஆகையால் அவரிடம் பைசா எப்படி இருக்கும்? இருந்தாலும் அந்த நண்பனுக்கு  டாக்டர்ஜி  எதாவது ஏற்பாடு செய்வார்  என்கின்ற நம்பிக்கை இருந்தது. எனவே கேட்க வந்தார். டாக்டர்ஜி  அவரை உட்கார வைத்து விட்டு  “இருங்கள்; வருகிறேன்” என்று சொன்னார்.

டாக்டர்ஜியின் ஒரு நண்பருக்கு ஒரு முறை பணம் தேவைப்பட்டது. அவர் டாக்டரிடம் வந்தார் இது ஆச்சரியமான விஷயம். டாக்டர்ஜிக்கு  எங்கிருந்து பைசா வருகிறது. டாக்டர்ஜி நாகபுரியில் மருத்துவத் தொழில் செய்து வந்தார் என்று எனக்குச் சிலர் கூறினார்கள். ஆனால் நான் அவர் வேலை செய்ததை பார்த்ததே கிடையாது. அவர் இரண்டு மருந்துகளை கட்டாயமாக வைத்திருப்பார். ‘கொய்னா’ மாத்திரை, ‘டிஞ்ச்சர்’ – அவ்வளவுதான் விளையாடும்போது யாருக்காவது அடிப்பட்டால் டிஞ்ச்சரில்   நனைத்த பஞ்சை ஓட்டி விடுவார். யாருக்காவது காய்ச்சலோ,  ஜலதோஷமோ வந்தால் ‘கொய்னா’ மாத்திரைகளைச்  சாப்பிடக்  கொடுப்பார் ஸ்வயம் சேவகர்களுக்கு கொடுக்கும்போது கட்டணம் கொடுக்க மாட்டார்கள். ஆகையால் அவரிடம் பைசா எப்படி இருக்கும்? இருந்தாலும் அந்த நண்பனுக்கு  டாக்டர்ஜி  எதாவது ஏற்பாடு செய்வார்  என்கின்ற நம்பிக்கை இருந்தது. எனவே கேட்க வந்தார். டாக்டர்ஜி  அவரை உட்கார வைத்து விட்டு  “இருங்கள்; வருகிறேன்” என்று சொன்னார்.

அருகில் உள்ள ஒரு சில பணக்கார நண்பர்களிடம்  சென்றார். ஆனால், தற்செயலாக ஒருவரும்   வீட்டில் இருக்கவில்லை. பிறகு வண்டியில் உட்கார்ந்து வெகு தூரத்திலுள்ள பாரிஸ்டர் அப்யங்கர்  என்கிற நண்பரிடம் (காங்கிரசை சேர்ந்த தலைவர்) சென்றடைந்தார். அவர் தனக்கு  நெருங்கியவரிடம்  பேசிக் கொண்டிருந்தார். இவரைப் பார்த்தவுடன் “வாங்க வாங்க, டாக்டர் ஹெக்டேவார், இங்கு  என்ன வழி தவறி வந்தீர்கள்? என்று வேடிக்கையான குரலில் கேட்டார். அப்படி இருந்தது அவருடைய நெருங்கிய உறவு. டாக்டர்ஜி  சொன்னார்: “இப்போது வேடிக்கையாகப்  பேசுவதற்கு நேரமில்லை. எனனுடைய   சொந்த வேலையாக வந்துள்ளேன்.”  அவருக்குப் புரிந்துவிட்டது. ஏதேதோ முக்கியமான வேலை உள்ளது என்று  உடனே எழுந்து உள்ளே அழைத்துச் சென்றார். டாக்டர்ஜி  “இப்போது 500 ரூபாய் தேவை” என்றார்  “என்ன, அங்குள்ள உங்களுடைய  நண்பர்களெல்லாம் இறந்து போய்விட்டார்களா என்ன?” என்றார் அப்யங்கர். “இந்தப் பேச்சை அப்புறம் பேசுவோம். பணம்  தருவீர்களா இல்லையா? கொடுப்பதாக இருந்தால் உடனே கொடுங்கள்.  இல்லை என்றால் சொல்லுங்கள் நான் வேறு எங்காவது சென்று வாங்கிவிடுவேன்.”  அப்யங்கர் சொன்னார்: கோபப்படாதிங்க பிரதர். நீங்கள் வந்து 500 ரூபாய் கேட்டால் நான் தரமாட்டேனா?  இந்த செல்வத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது? என்னுடைய இந்த சொத்துகளை எரிக்க வேண்டுமா?” என்று கூறியவர், உடனே 500 ரூபாய் எடுத்து வந்து கொடுத்துவிட்டார். டாக்டர்ஜி “இதோ ‘ப்ராமிஸரி நோட்’  (கடன் பத்திரம்) எழுதித் தருகிறேன்” என்று சொன்னார். அதற்கு அப்யங்கர்.  “இன்னும் எனக்கு புத்தி கெட்டுப் போய்விடவில்லை. நான் டாக்டர்ஜியிடமிருந்து ப்ராமிஸரி நோட் எழுதி வாங்கினேன் என்று ஊருக்குத் தெரிந்தால் என் முகத்தில் உமிழ்ந்து விடுவார்கள். இந்த அபங்கருக்கு  பைத்தியம் பிடித்துவிட்டது என்று கூறுவார்கள். டாக்டர் ஹெட்கேவரிடமிருந்தா ப்ராமிஸரி நோட் எழுதி வாங்குவது?  நீங்கள்  இந்த பணத்தை எடுத்துச் செல்லுங்கள். முடிந்தால் திருப்பிக்  கொடுங்கள்   இல்லை என்றால் விடுங்கள் ஆனால் நான் உங்களிடம் இருந்து இந்தப் பணத்திற்காக ‘ப்ராமிஸரி நோட்’ எழுதி  வாங்க  மாட்டேன் என்று சொன்னார்.

நம் விஷயத்தில் யாராவது இப்படிச்  சொல்வார்களா? சொல்லவேண்டும். நம்மை பற்றி மக்களுக்கு அப்படிப்பட்ட நம்பிக்கை ஏற்படுவதற்கு நமக்குள் தூய்மை இருக்க வேண்டும். ஒழுக்கத்தையே நாசம் செய்கின்ற காமம், காஞ்சனம் (பெண்,பொன்) என்கின்ற இரண்டு விஷயங்கள் நமது மனதில் தாக்கம் ஏற்படுத்த அளவிற்கு, நம்முடைய உள்ளத்தைத்  தூய்மையானதாக, பற்றற்று இருக்கச் செய்ய அறிவுபூர்வமாக முயற்சி செய்யவேண்டும்; செய்ய முடியும். கஷ்டமல்ல; முடியாததும்  அல்ல. அப்போதுதான் நாம்  நம்பிக்கைக்குரியவர்களாக  ஆவோம். பிறகு எவர் வீட்டிற்காவது   சென்று வந்தால் அவர், ‘இவன் எதற்காக வந்தானோ’  என்று உள்ளூர நினைப்பதில்லை. ஒவ்வொரு வீட்டின் கதவும்  நமக்காக 24 மணி நேரமும் திறந்தே இருக்கும் என்கிற நிலை ஏற்படும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு நாமே தூய ஒழுக்கமுள்ளோர் ஆகி,  நம்பிக்கைக்குரியவர் ஆகி, எல்லோருக்கும்   கஷ்டப்படுவதற்கு தயாராக வேண்டும். கஷ்டப்படவேண்டும். விவேகத்துடன் கஷ்டப்படவேண்டும். எல்லோருடைய எல்லா வேலையையும் இலவசமாக செய்கின்ற வேலைக்காரன் ஆகிவிடக் கூடாது மாறாக, அவருடைய இதயத்தில் நம்மைப்பற்றி மதிப்பும் நல்லெண்ணமும் நாம் கஷ்டப்படுவதனால்  அவருடைய மனதில் பரிவு ஏற்படும் அளவிற்கு கௌரவம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு நாம் செயல்பட்டால், சங்க கண்ணோட்டத்தில் நாம் சரியாக இருந்தால், நமக்குள் உள்ள சங்க  பத்தியையும்,  சிந்தனையையும் கிரகித்துக்கொண்டு, மக்கள்  நம்முடன் சங்க காரியத்தில் தோள் கொடுப்பார்கள்.

[தொடரும்]

நான் சாதாரண ஸ்வயம்சேவக் -8

(ஸ்ரீ குருஜி அவர்களின் பௌத்திக்
முந்தய பகுதியின் தொடர்ச்சி )

நம்பகத்தன்மை

இந்த அனைத்து வேலைகளையும் செய்வது, ‘சாதரண ஸ்வயம்சேவக்’ என்கிற முறையில் நமது கடமை. அதற்காக அசாதாரணமாக ஆகவேண்டிய அவசியமில்லை. இது ஒவ்வொரு ஸ்வயம்சேவகனின் வேலை. இதை செய்துகொண்டே நாம் நமது சங்க காரியத்தை வளர்க்க முடியும். இவை அனைத்தையும் செய்வதற்குத் தேவையான விஷயங்கள் என்ன?

  1. நாம் மக்கள் மத்தியில் நம்பிக்கைக்குரியவராக வேண்டும்.
  2. அவர்களுக்காக கஷ்டப்படுவதற்கு எப்போதும், எல்லா விதத்திலும் தயாராக இருக்க வேண்டும். அதுவும் சுயவிருப்பத்தாலேயே விருப்பத்தாலேயே தூக்கத்திலேயே செய்ய வேண்டும் இது நம்முடைய வேலை என்பதற்காக எப்படியும் செய்து முடித்து விடக்கூடாது உண்மையிலேயே பரஸ்பரம் அன்பு நான் உருவாகும் உறவை உணர்ந்து செய்ய வேண்டும்.

குறைந்தபட்சம் இந்த இரண்டு விஷயங்கள் இருக்க வேண்டும். இத்துடன் மூன்றாவதாக ஒரு விஷயம்: சங்க காரியத்தின் மீது பற்று உருவாக்க விரும்புகிறோமல்லவா? நாம் சங்க வேலை செய்கின்ற முறை எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடியும் முழுமையகவும், குற்றமே இல்லாத படியும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், நாம் எவரிடமாவது ஷாகாவிற்கு வரவேண்டும் என்று கூறிவிட்டு, நாமே ஷாகாவிற்க்கு மட்டம் போட்டுவிட்டு சினிமா பார்க்கப் போய்விட்டால் அப்போது யார் வருவார்கள்? யார் நம் பேச்சை கேட்பார்கள் நம் மூலமாக வேலைகள் சரியாக நடக்கவில்லை என்றாலோ, நமது முழுத்திறமை வெளியிடவில்லை என்றாலோ, அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு; முக்கியமானது நாம் நமது வேலையை உண்மையோடு செய்ட்தோமா? எதிர்பார்த்தபடி செய்தோமா? நாம் அது இது என்று சின்னச் சின்னக் காரணங்களுக்காக தினசரி வேலையை ஒரு மாதிரியாக எடுத்துக் கொண்டே போய் தளர்ந்து போகச் செய்வோமேயானால், நாம்மை எவரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. நம்முடைய நடைமுறை இது போல் இருக்குமேயானால், ‘தெரியும் உங்களுடைய நடத்தை’ என்று சொல்லிவிடுவார்கள். நீங்கள் கொடிகட்டிப் பறக்கும் அழகு தெரியும்! அப்போது  நம்மிடம் பதிலே இல்லாது போய்விடும். எனவே, நம்முடைய நடத்தை முழுமையக பழுதில்லாமல் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். இப்போது இந்தக் கண்ணோட்டத்தில் எல்லோருக்கும் நம்மிடம் நம்பிக்கை உள்ளதா என்று பார்ப்போம்.

நம்பிக்கைக்குரியவர் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்? நம் வாழ்க்கை தூய்மையானதாக இருக்க வேண்டும். எவருடைய வாழ்க்கை தூய்மையற்றதோ, பவித்ரமற்றதோ, எவரிடம் தீய பழக்கங்கள் இருக்கின்ற வாய்ப்புள்ளதோ அவரிடம் யாருக்கும் நம்பிக்கை இருக்காது. எனவே நாம் நமது வாழ்க்கையை துய்மையாக்கிக்கொள்ளவேண்டும். கறையே இல்லாமல் சுத்தமாகத் துவைத்த வெள்ளை வேஷ்டிபோல் இருக்க வேண்டும். ஒரு தனிநபர் என்ற முறையில் சுத்தமானவன், ஒழுக்கமானவன் என்று நம்மில் ஒவ்வொரு ஸ்வயம்சேவக் விஷயத்திலும், சமுதாயத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை இருக்க வேண்டும். இதை அவர் அனுபவபூர்வமாக அறிந்திருக்க வேண்டும். ஸ்வயம்சேவக் மிகவும் நல்ல ஒழுக்கமுடையவராக இருக்க வேண்டும். நம்மிடம்  எவ்வளவோ பெரிய பெரிய உதாரணங்கள் உள்ளன.

[தொடரும்]

நான் சாதாரண ஸ்வயம்சேவக் -7

(ஸ்ரீ குருஜி அவர்களின் பௌத்திக்
முந்தய பகுதியின் தொடர்ச்சி )

தூய்மையான அன்பே ஆதாரம்

வாத விவாதத்தில் புத்தியின்  உபயோகம் அவசியமாகிறது. ஆனால், இப்படி செய்வதால் அது துணை ஆவதற்கு பதிலாக தொல்லையாய்த்தான்  ஆகும்.  அப்படி இருக்க எல்லோரும் எப்படி அருகில் வருவார்கள்? நாம் அவருக்குச் சங்க வேலையை புரியவைக்கின்ற சூழ்நிலை எப்படி இருக்கும்? அதற்காக முதலில்  நமக்கும் மற்றும் யாருக்குப் புரிய வைக்க வேண்டுமோ அவருக்கும் இடையே உள்ளார்ந்த  ஒருமைப்பாடு ஏற்பட்டிருக்க  வேண்டும். அவரும் நாமும் ஓருயிர் ஈருடல் என்பது போன்ற இதயபூர்வ நட்பு  ஏற்பட்டிருக்க வேண்டும். இந்த நிலை ஏற்பட்ட பிறகு நமது இதயத்தில் உள்ள லட்சியப்பற்று  அவருடைய இதயத்தில் படியும். இப்படிப்பட்ட தூய அன்பு ஆதாரத்தில் தான் ஒவ்வொரு மனிதனையும், நம்மவராக்கி   கொண்டு, அவருக்கு லட்சியத்தை வழிபடுகின்ற ஆசையை எழுப்பி அவர் நம்முடைய சக ஊழியர் ஆகிடச்  செய்யமுடியும்.

இதற்காக நாம், தீர யோசித்து ஒழுக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடன்  நல்லபடியாக பழகி அவர்களின் வாழ்க்கையில் நல்ல முறையில் இசைந்திருந்து,  அவர்களின் சுக துக்கங்களை புரிந்து கொண்டு, சுகத்தை அதிகப்படுத்தவும், தூயரத்தை குறைக்கவும், எந்தவிதமான கஷ்டத்தையும் ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருந்து,  அனைவரையும் நம்மவராக்கிக்  கொள்கின்ற முயற்சியில் ஈடுபடச் செய்ய  வேண்டும். இதற்க்கு மற்றோரு வடிவம் உண்டு.  அக்கம்பக்கத்தினர்  மட்டுமல்ல நாம் வேலை செய்யகின்ற அலுவலகத்தில் நம்முடைய தொடர்பிற்கு  வந்த அனைவருடைய, அதாவது படித்துக் கொண்டிருந்தால்  சக மாணவர்களுடன்; அல்லது  வேலையில் இருந்தால்  அங்கு நமக்கு இணையானவர், உயர்ந்தவர், நமக்கு கீழ்நிலையில் உள்ளவர்களுடன்  அல்லது வியாபாரம், தொழில் சம்பந்தமாக தொடர்பிற்கு வருகின்ற பல்வேறு தரப்பு மக்களுடன்- நமது பழகுமுறை, எல்லோரது  உள்ளத்திலும் நம்மைப் பற்றி ஒரு நம்பிக்கை, மதிப்பு, அன்பு ஏற்படுத்தி எல்லோரையும் மனப்பூர்வமாக ஒன்றாக்க வேண்டும். இந்த  அன்பின் காரணமாக, சங்கத்திடம்  நமக்குள்ள ஆழ்ந்த பற்று மற்றவர்களுடைய  உள்ளத்தில் தானாகவே தொற்றிக் கொண்டுவிடும். இப்படி கவனமாக நாம் முயற்சி செய்ய வேண்டும்.

[தொடரும்]

நான் சாதாரண ஸ்வயம்சேவக் -6

(ஸ்ரீ குருஜி அவர்களின் பௌத்திக்
முந்தய பகுதியின் தொடர்ச்சி )

தர்க்கம் விவாதம் வேண்டாம்

ஆக பல காரணங்களால் பலரும் ஷாகா வருகின்றார்கள். ஆனால் யாருடனாவது நாம் வாதம் விவாதம் செய்தோம், அவரை வாதத்தில் தோற்கடித்தோம்   இதனால் தன் தோல்வியை ஏற்றுக் கொண்டு அவர் ‘சரி, நல்ல விஷயம் ஷாகா வருகிறேன். என்று சொல்லி வர ஆரம்பித்தார்.  என்கிற உதாரணம் என்றைக்கும் கிடைக்காது. ஒருவேளை நாம் புத்தியை மட்டும் பயன்படுத்தி மற்றவர்களை விட நாம் அதிக புத்திசாலி என்று காட்டினால், ‘இவன் என்னை விட புத்திசாலி, எனக்கு சிறிது குறைவு’ என்று ஒப்புக்கொள்ள யாருக்கு தான் மனம் வரும்? மாறாக இது எனக்கு அவமானம் என நினைத்து நம்மிடம் இருந்து விலகியே செல்வார்கள் பதிலடி கொடுக்கவும் காத்திருப்பார்கள். இதுதான் எனது அனுபவம்.

எனக்கு ஒரு நண்பன் இருந்தான். பாடவிஷயம் வேறு இருந்தாலும் ஒரே வகுப்பில் இருந்தோம். அவனுக்கு வாதத்தில் ஈடுபடுவதில்  பெரிய ஆனந்தம். அதிகம் பிடித்திருந்தான்; ஆழமாகவும் படித்திருந்த்தான். எனவே வாத விவாதங்களில் ஈடுபட்டிருந்தோம். நான்கு ஐந்து முறை வாத விவாதங்களில் அவன் தோல்வியடைந்து கேலிக்குரியவனானான் . அப்போது நண்பர்கள் வட்டம் விபத்து பெரிய வித்வான் என்று சொல்லிக் கொண்டு திரிந்தாயே  இப்போது ஏன் வாய் மூடிக் கிடக்கிறது என்று கேட்க ஆரம்பித்தார்கள். தன்னை கேலி செய்ததை பார்த்து அவன் என்னை சந்திப்பதற்கு பயப்படத்   துவங்கினான் எதிரில் நான் வருவதை பார்த்ததும் அருகில் உள்ள சந்திற்குள் நழுவி விடுவான். இரண்டு மூன்று  முறை இப்படி நடைபெற்றதைப் பார்த்தேன். ஒருநாள்  இப்படி ஒரு சந்தில் நுழைந்து செல்வதைப் பார்த்து ஓடிப்போய் பிடித்துக்கொண்டு “எங்கே ஓடுகிறாய்?” என்று கேட்டேன். அதற்கு அவன் “நான் உங்களிடம் பேச மாட்டேன். ஏனென்றால் நீங்கள் என்னை எல்லோர் முன்பும் கேலி செய்வீர்கள். தன்னை கேலி செய்து கொள்வதற்கும், அவமானப்படுத்திக் கொள்வதற்கும் யார் உங்களிடம் பேசுவார்கள்?” என்று  கேட்டான். நான் கூறினேன் : “அட  உனக்கு தான் வாதவிவாதம்  செய்வதில் விருப்பம் எனக்கு அதில்   விருப்பமில்லை உன்னுடைய விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக எனக்கு இஷ்டம் இல்லாமல் இருந்தாலும் விவாதம் செய்தேன்.  இப்போது அந்த விவாதங்களில்   மாட்டிக்கொண்டாலோ,   கேள்விக்குறியவனானாலோ நான் என்ன செய்யமுடியும். பரவாயில்லை, இனிமேல் நாம் விவாதம் செய்ய மாட்டோம் என்று இப்போது முடிவு செய்வோம். சரிதானே? அட,  வாத விவாத விளைவாக நம்முடைய நட்பை விட்டு  கொடுக்கலாமா? நட்பு  மேலானது. வாத விவாதங்கள் அல்ல”. இப்படி எல்லாம் அவனுக்கு புரிய வைத்து, அப்போதிலிருந்தே அவனிடம் வாத விவாதங்கள் செய்வதை விட்டுவிட்டேன். ஆனால் அன்றே என்னுடைய மனதில் வாத விவாதங்களினால்  மனிதன் நம்மிடமிருந்து முறித்துக் கொண்டு, விலகிச் சென்று விடுவான், அருகில் வர மாட்டான்’ என்ற எண்ணம்  பதிந்துவிட்டது.

[தொடரும்]

நான் சாதாரண ஸ்வயம்சேவக் -5

(ஸ்ரீ குருஜி அவர்களின் பௌத்திக்
முந்தய பகுதியின் தொடர்ச்சி )

வேண்டாம் சுயநலம்

எப்பொழுதாவது சுயநலத்தால்  ஒருவர் சங்கத்திற்கு வரலாம் .அப்படி ஒருவர் வந்திருதார் அவர் ஒரு வக்கீல். ஷாகாவில்  என் கண்ணில் பட்டார். நானும் அவருடன் வக்கீல் என்ற முறையில் சிறிது காலம் பழகியிருந்தேன். ஆகவே நான் அவரைக் கேட்டேன் “என்ன விசேஷம்? இன்று ஷாகாவில் தென்படுகிறீர்களே” என்று நான் கேட்டேன். அதற்கு அவர் “சங்க கார்யம் நல்லது” என்றார். திடீரென்று இவருக்கு இப்படி ஏன் தோன்ற வேண்டும் என்று நான் சிந்தித்தேன். ‘இதில் ஏதோ மர்மம் இருக்க வேண்டும். இவர் மனதில் என்னதான் உள்ளது எனத்  தெரிந்து கொள்ள வேண்டும். வக்கீல் என்ற முறையில் அவர் என்னைவிட மூத்தவராக இருந்தாலும், சற்று ஆழத்திற்கு சென்று விஷயத்தை புரிந்து கொள்வோம்’ என்று நினைத்தேன். எனவே அது  இது என்று பலவிதமாகக் கேள்விகள் கேட்டேன். நாகபுரியில் வக்கீல் ஸ்வயம்சேவகர்களுக்காக ஒரு திட்டம் உண்டு என்று தெரியவந்தது. அவர்களிடம் நாகபுரி தாலுகா மற்றும் ஜில்லாவில் சங்க ஷாகா ஆரம்பிக்கின்ற வேலை ஒப்படைக்கப்பட்டிருந்தது.  ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு அன்று அங்கே செல்ல வேண்டும் அங்கு செய்த வேலையை பற்றி அடுத்த செவ்வாய்க்கிழமை இரவு பைட்டக்கில் விவரங்கள் கூறி, அடுத்த வாரத்திற்காக  திட்டமிடுவது என்ற முறை  இருந்தது.  இந்த வக்கீலுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. இப்படி செல்கின்ற வக்கீலுக்கு மாவட்டம் முழுவதும் பலருடைய அறிமுகம் ஏற்படும் என்ற விஷயம் இந்த வக்கீலுடைய கவனத்திற்கு வந்தது. மாவட்ட கேந்திரத்தில் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட வேலைக்கென வரும் வாய்ப்பு இருக்கும். அப்பொழுது, அறிமுகமானவர்கள் இந்த வக்கீலிடம் வருவார்கள். நாமும் இதில் நுழைந்தால் நம்மிடமும் மக்கள் வருவார்கள். தொழில் வளரும் – இப்படி தொழில் ரீதியான சுயநலத்தின் காரணமாக அவர் ஷாகா வந்திருந்தார்.

நான் முன்னதாகவே ஒரு சிலர் சுயநலத்திற்காக  ஷாகா வருவார்கள் என்று சொல்லியிருந்தேன் அல்லவா?  அதுபோல இவர் சுயநலத்துடன் வந்திருந்தார். நான் பேச்சுவாக்கில் அனைத்தையும் அவரிடமிருந்து வரவழைத்தேன். அவர் கூறினார், “மாவட்டத்தில் உள்ள அனைவருமே வேலைக்காக நாகபுரி வருகிறார்கள். ஒருவேளை அவர்களிடம் எனக்கு நன்றாக அறிமுகமாகி இருந்தால்   என்னிடமே வருவார்கள். என்னுடைய வேலையும் நன்கு  நடக்கும்!” என்றார்.  “தாங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினேன். இதில் என்ன தவறு?” என்று அவர் கேட்டார் நான், நீங்கதான் ஸ்வயம்சேவக் ஆகவே நம்மவர் என்ற காரணத்திற்காக அவர்கள் உங்களிடம் கவரப்பட்டு தம்முடைய வேலைக்காக வருவார்கள். ஆனால் நம்மவர் என்ற காரணத்திற்காக அவர்கள் உங்களுக்கு கட்டணம் தர மாட்டார்கள்” என்று கூறினேன்.

இதைக்கேட்ட அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. “உண்மையிலேயே இப்படிதான் நடக்குமா?” என்றார்  ‘எனனுடைய  உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்களேன்’  என்று நான் விளக்கமாகக்   கூறினேன். என்னுடைய உதாரணத்தைக் கூறிய  உடனே அவர் இங்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை என்று உணர்ந்து விட்டார்  அடுத்த நாளில் இருந்து ஷாகா வருவதை நிறுத்தி விட்டார்.

[தொடரும்]