கார்யகர்த்தா – தத்தோபந்த் டெங்கடிஜி -64

64. ப.பூ. டாக்டர்ஜியின் தலைமைப் பண்பு

1857 க்கு பிறகு இந்த நாட்டில் அநேக மகான்கள், தேசியவாழ்வின் பலதரப்பட்ட துறைகளில், தங்கள் தங்கள் கொள்கையின் படி மிகப்பெரும் செயல்களை உருவாக்கினர். ஆனால், நமக்கு அனுபவம் வருவது என்ன வென்றால், பல அமைப்புகளில் அதன் ஸ்தாபகர் காலமான பிறகு, அவருடைய பணியின் முன்னேற்றம் தடுக்கப்பட்டு விடுகிறது. மெள்ள மெள்ள பணியானது இல்லாத நிலை ஏற்பட்டு விடுகிறது.. முடிவில் உயிரற்றுப் போய் விடுகிறது. பணியின் அடிப்படை கருத்துகள், பரம்பரை உருக்குலைந்து விடுகிறது. முடிவில் உடைந்து விடுகிறது. இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் பெருந்தன்மை தியாகம், தவம் பற்றி யாருக்கும் சந்தேகம் இல்லாத இரு மஹா புருஷர்களைப்பற்றி சிந்திப்போம். அவர்கள் லோகமான்ய திலகரும் மஹாத்மா காந்தியும் ஆவார்கள். திலகர் தனது வாழ்வின் கடைசி காலத்தில், அவராகவே கூறி வந்தார்: ‘என் தோள்களின் மீது கால்களை வைத்து மேலே ஏறக்கூடிய எந்த ஒரு இளைஞனையும் நான் என் வாழ்நாளில் பார்ப்பேன் என்று இப்பொழுது எனக்கு தோன்றவில்லை ‘. அவர் காலமான பிறகு எவ்வளவு விரைவில் அவருடைய பரம்பரை பலமிழந்து விட்டது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. காந்திஜிக்கு பிறகு காந்திவாதம் இவ்வளவு விரைவாக ஏன் வீழ்ச்சி அடைந்தது? இதைப்பற்றிய முடிவு ஆசார்ய வினோபாஜி செய்துள்ளார். மிக உன்னதமான, அர்ப்பணம் செய்த மஹாபுருஷர்களின் எண்ணமும், செயல்முறையும் கீழான நிலைக்கு ஏன் வந்தது என்பது கவனமாக ஆராய்ந்து பார்க்கக்கூடிய விஷயமாகும்.

ஆனால் டாக்டர்ஜி விஷயத்தில் ஒரேயடியாக, மாறான அனுபவம் உள்ளது. அவர் காலமானபிறகு, செயலின் ஊக்கமும், செயல் முறையின் பரம்பரையும் நாளுக்கு நாள் மிக அதிகமான அளவில் வலுவுள்ளதாகவும் பெருமை கொண்டதாகவும் ஆகிவிட்டது. இதுவும் பல உயிர்களைக் கொல்லும் அளவு ஆபத்தும், எதிர்ப்பும் இருந்தும் கூட இது சாத்தியமாயிற்று.

யாருடைய மரணத்திற்குப் பிறகும் கார்யகர்த்தர்களுக்கு சிறிது கூட சஞ்சலம் ஏற்படவில்லையோ, எவருடைய காரியம் மிகச்சிறந்த முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறதோ, அப்படிப்பட்ட ஒரே தலைவர், பாரதத்தில் தற்காலத்தில் டாக்டர்ஜி தான் என்று பாபுராவ் பிஷீகர் அவர்கள் சரியாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இதற்கு முன் கண்டிராத, இந்தப் பெருமை டாக்டர்ஜி என்ற தனிமனிதனுக்கே உரியதாகும். இவ்வுலகத்தில் காண முடியாத அற்புதமான தனது ஆளுமையின் காரணமாக, இந்த நாட்டிற்கு அவர் வழங்கிய மிகப் பெரிய கருவியும் சாதனையும் தான் ‘சங்கஷாகா’. ஒரே நேரத்தில், வாழ்விற்கு சஞ்ஜீவினி மந்திரம் போல வாழ்வளிக்கக் கூடியதாகவும், சிவபெருமானின் பாசுபதாஸ்த்ரம் போல் வேலை செய்யவும் கூடிய இருவகையிலும் செயல்படக்கூடியது – ஷாகா. “உலகில் உன்னத நிலை” (பரம்வைபவம்) என்ற உயர்ந்த லட்சியத்தை, நாட்டின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்கு உண்டானகல்பதரு – சங்கமும், சங்கத்தினுடைய தனிமனிதனை உண்டாக்கும் செயலின் மூலம் உருவாகிய அர்ப்பணம் எண்ணம் கொண்ட நமது கார்யகர்த்தர்களும் ஆவார்கள். இப்படி தேவர்களுக்கும் கிடைத்தற்கரிய கார்யகர்த்தர்களை ஆதாரமாகக் கொண்டு, சங்கவேலை முன்னேற்றம் அடைந்தது. முன்னேற்றம் அடைந்து கொண்டே இருக்கும்.

இப்படிப்பட்ட தலைமையின், சிறப்புக்கான அளவுகோல் பெருமை கொண்டதாகவே உள்ளது. செய்தித் தாள்களில் இதனின் புகழ் பற்றிய விவரம் வருவதில்லை . ஆனால் செய்தித் தாளிகளில் வரும் புகழ் அதிக நாள் வரை தங்குவதில்லை . 1975 முதல் 1985 வரை 10 ஆண்டுகாலத்தில் மிகப் பிரபலமானவர்களின் பெயர்கள் பத்திரிகைகளில் வந்து கொண்டிருந்தன. இவர்களைப் பற்றி India today என்ற பத்திரிகையில் ஒரு கட்டுரை வந்திருந்தது. தலைப்பு: Where are they now? அதாவது பத்திரிகைகளில் மிக அதிகமாக சர்ச்சைக்குள்ளான நபர்கள் கூட சில காலத்திற்கு பிறகு நினைவிலிருந்து அகன்று விடுகிறார்கள். அவர்கள் இருந்ததற்கான அறிகுறியே இல்லாமல் போய்விடுகிறது. அப்படியானால் மேன்மை என்பதின் பொருள் என்ன?

இதற்கு ப.பூ.டாக்டர்ஜி அவர்களின் உதாரணத்தை எடுத்துக் கொள்வது தகுதியுடையதாகும். அவர் தனது புகழைப் பற்றி கண்டு கொண்டதே இல்லை. ஒருமுறை அவரிடம் தாமோதரபந்த் என்கிற கனவான் வந்தார். நான் ஒரு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். அதில், மேன்மை பொருந்தியவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுத விரும்புகிறேன். நீங்கள் உங்கள் வாழ்க்கை சம்பந்தமான குறிப்புகளை கொடுங்கள்” என்று டாக்டர்ஜியிடம் கேட்டார். “நீங்கள் எனது வாழ்க்கை சரித்திரத்தைக் கொண்டு என்ன செய்வீர்கள்?. நானோ சிறியவன். ஏதாவது எழுதவேண்டும் என்றால் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தைப் பற்றி எழுதுங்கள். என்னுடைய வாழ்க்கை சரித்திரம் ஒன்றும் இல்லை” என்று டாக்டர்ஜி சொன்னார். தற்காலத்தில் எத்தனை பேர் இவ்விதம் தனது புகழின் மோகத்தை தவிர்க்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள்?

ப.பூ.டாக்டர்ஜி அவர்களின் பெருந்தன்மை பற்றி 1966-68 ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்ற ஒரு விவாதம் என் நினைவிற்கு வருகிறது. நான் கேரளத்திலும், வங்காளத்திலும் பிரசாரகராக இருந்தேன். நான் ராஜ்யசபாவின் உறுப்பினராக இருந்தபோது அதிகமான கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கேரளாவையும், வங்காளத்தையும் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். நாடாளுமன்றத்தின் மத்திய ஹாலில் தேநீர் குடித்துக் கொண்டே கலந்துரையாடல் நடக்கும். ஒரு நாள் அவர்களில் ஒருவர் என்னை கோபமூட்ட வேண்டி “என்னிடம், டெங்கடிஜி உங்க ஆர்.எஸ்.எஸ். இருக்கே அதற்கு முழுப் பெயர் என்ன? என்று கேட்டார். நான் பதில் சொன்னேன். எப்பொழுது ஆரம்பமானது. யார் ஆரம்பித்தார் என கேள்வி கேட்டார். அதற்கு பதில் கூறினேன். அதற்கு அவர் “டாக்டர் ஹெட்கேவாரா? இந்தப் பெயரை இதற்கு முன் நான் ஒரு பொழுதும் கேட்டதே இல்லை” என்றார். ப.பூ.டாக்டர்ஜி அவர்களின் பெயரைச் சொன்னதும் முகம் சுளித்துக் கொண்டு அற்பமான முறையில் பேசினார். என்னை கோபமூட்டுவதற்காக இப்படிப் பேசுகிறார் என்று புரிந்து கொண்டேன். ஆகவே நான் பேசாமல் இருந்து விட்டேன். பாலக்காட்டைச் சேர்ந்த ஸ்ரீபாலச்சந்தரமேனன் என்பவரும் அங்கு இருந்தார். அவர் கொஞ்சம் கம்பீரமான குணம் உடையவர். அவர் ‘பெரியோர்களைப்பற்றி இவ்வாறு அற்பத்தனமாக பேசக்கூடாது’ என்று அந்த கம்யூனிஸ்ட் நண்பரிடம் சொன்னார்.

KB Hedgewar had changed the way Hindus should look at themselves

“நான் அற்பமான முறையில் பேசவில்லை” என்று கேள்வி கேட்டவர் பதில் கூறினார். “நீங்கள் உண்மையில் கம்பீரமாக இருக்கிறீர்கள் என்றால் நான் கேட்கும் இரண்டு கேள்விகளுக்கு விடைகொடுங்கள்” என்று பாலச்சந்திர மேனன் கேட்டார். பண்டிட் ஜவஹர்லால் எப்பொழுது காலமானார்? என்று கேட்டார். 1964 மே மாதத்தில் என்று அவர் கூறினார். நேரு காலம் ஆகும் சமயத்தில் அவருடைய புகழ் எவ்வளவு தூரம் பரவியிருந்தது என்று மேனன் கேட்டார். நீங்கள் என்ன கேள்வி கேட்கிறீர்கள்?. நேரு காலம் ஆகும் சமயத்தில் மூன்றாவது உலகத்தில் மூன்று தலைவர்களில் ஒருவராக அவர் இருந்தார். நாஸர், டிட்டோ , நேரு. இது எல்லா மக்களும் அறிவார்கள் என்று அந்த நண்பர் கூறினார்.

பிறகு மேனன் அவர்கள் “டெங்கடிஜி, டாக்டர்ஜி எப்பொழுது காலமானார்கள்? என்று என்னிடம் கேட்டார். 1940ஜூன் என்று கூறினேன். காலமாகும் சமயத்தில் டாக்டர் ஹெட்கேவார் அவர்களை பற்றி எத்தனை பேருக்குத் தெரியும், அவருக்கு எவ்வளவு புகழ் இருந்தது என்று இரண்டாவது கேள்வி கேட்டார். ஒன்றும் இல்லை. நமது மத்திய மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அவரை அறிவார்கள்; நமது சங்க வேலையெல்லாம் அப்பொழுது ஆரம்ப நிலையில் இருந்தது என்று நான் சொன்னேன்.

“இப்பொழுது இந்த இரண்டு விஷயங்களையும் கவனத்தில் கொண்டு நீங்கள் இருவரும் ஒரு கேள்விக்கு விடை அளியுங்கள்” என்று மேனன் கேட்டார். பண்டிட் நேரு அவர்கள் தற்போதுதான் காலமாகி இருக்கிறார்கள். அதற்கு 24 ஆண்டுகளுக்கு முன் டாக்டர் ஹெட்கேவார் அவர்கள் காலமானார்கள். காலமாகும் சமயத்தில் டாக்டர் ஹெட்கேவார் அவர்களை அவருடைய மாகாணத்திற்கு வெளியே, யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் நேரு காலமான போது உலகம் முழுவதும் அவரைப் பற்றி அறிந்திருந்தது. அவர் ஒரு உலகத் தலைவர். இப்பொழுது நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ஓர் அறைகூவல் விடுத்தால், “நேருவின் கொள்கைக்காக உயிரைக் கொடுக்கக் கூடியவர்கள் எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள்?. மேலும் டாக்டர் ஹெட்கேவார் அவர்களின் கொள்கைக்காக, உயிர் தரக்கூடியவர்கள் எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள்? என்று மேனன் அவர்கள் ஒரு கேள்வி கேட்டார்.

பிறகு அந்த கம்யூனிஸ்ட் நண்பரைப் பார்த்து மேனன் கூறினார். “நேரு அவர்களின் சித்தாந்தத்திற்காக தன்னை அர்ப்பணம் செய்து கொள்ள நாடு முழுவதிலிருந்தும் 50 பேர் கூட முன்னுக்கு வரமாட்டார்கள். டாக்டர் ஹெட்கேவாரின் கொள்கைக்காக, லட்சக்கணக்கான இளைஞர்கள் முன் வருவார்கள். இதை நீங்களும் நானும் ஆகிய இருவரும் அறிவோம்.

Now tables were turned. இப்பொழுது பகடை மாறிவிட்டது. என்னை கோபமூட்டுவதற்கு யார் விவாதத்தை ஆரம்பித்தாரோ அது மாறி, அவருக்கு கோபம் ஏற்படக்கூடிய சந்தர்ப்பமாகி விட்டது. அரை நிமிஷம் மௌனமாக இருந்தார். மீண்டும் கோபத்துடன் மேனன்ஜியிடம் கேட்டார், Afterall, what is the criterion of one’s greatness? முடிவில் ஒருவருடைய பெருமைக்குரிய பிரமாணம் என்ன?

மேனன்ஜி உடனே பதில் அளித்தார். The length of one’s shadow on future? அதாவது எதிர்காலத்தில் யாருடைய நிழல் மிக நீளமாகவும், வெகுதூரம் வரை விழுகிறதோ அதுவே அதற்கு பிரமாணம் ஆகும்.

எதிர்காலத்தில் நீளமான நிழலை பரப்பக்கூடிய, அதே ஊக்க ஊற்றுடன், அமர நிலை பெற்ற உணர்வுடன் நாம் முன்னேறுவோம். அப்பொழுது இந்த ராஷ்ட்ரத்தை மகோன்னத நிலைக்கு கொண்டு செல்வதில் நமது காரியகர்த்தர்கள் வெற்றி பெறுவார்கள். இது நமது நம்பிக்கை ஆகும்.

நமது முன்னோர்கள் இவ்வாறு கூறியிருக்கிறார்கள்:

லௌகீ கானாம் ஹி சாதுனாம்

அர்தம் வாகனுவர்ததே

ரிஷீணாம் புனராத்யானாம்

வாசமர்தோநுதாவதி (உத்தர ராமசரிதம் 1-10)

அதாவது, உலகாயத சாதுக்களின் பேச்சு பின்பற்றக் கூடியதாக உள்ளது. ஆனால் முற்கால முனிவர்களின் சொல்லானது பின்பற்றக் கூடிய செயலின் பொருளை கூறுவதாக உள்ளது.

மேலும் தற்காலத்திய மஹான் ரிஷியான ப.பூ.குருஜி அவர்களுடைய வாழ்க்கைப் பயணத்தின் கடைசி காலத்தில் 1973 ஏப்ரலில் அவர் கூறிய வார்த்தை இவை: “இப்பொழுதோ, இனிமேல் வெற்றி வெற்றியேதான்”.

வந்தே மாதரம்

Amazon.com: Small Floral Spray Wall Stencil - DEE621 by DeeSigns ...

கார்யகர்த்தா – தத்தோபந்த் டெங்கடிஜி -63

63. ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் இப்பொழுது விமர்சனத்திற்கு உரிய விஷயம் அல்ல

உண்மையில் இவ்வளவு சக்தி இல்லாத போது கூட ‘கவலைக்குரிய விஷயம்’ என்று யாரும் சொல்லவில்லை. இது சங்கத்தினுடைய சிறப்பாகும். அப்போதும் கூட, மனதில் வேலை செய்வதற்கான மனோபாவம் நம் கார்யகர்த்தர்களுக்குள் இருந்தது. சமுதாயத்தில் பல்வேறு குழுக்கள், அரசியல் சக்திகள், மற்ற எதிரான கொள்கை, அவர்களின் அலட்சியப் போக்கு, நிந்தனை, எதிர்ப்பு இவை எல்லாவற்றையும் கடந்து பரந்த அளவில், மக்களின் ஒத்துழைப்பு நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த விஷயம் சம்பந்தமாக எனக்கு ஒரு கட்டுரை ஞாபகத்திற்கு வருகிறது. வில்லியம் வார்ஸலி என்ற எழுத்தாளர் தன்னுடைய The Gospel of John என்ற புத்தகத்தில், பாரீஸில் நடந்த ஒரு புகழ்பெற்ற ஓவியக் கண்காட்சி பற்றிய அனுபவத்தை விவரிக்கிறார். அந்தக் கண்காட்சியில் சில நிகரற்ற, விலை மதிக்க முடியாத, நிரந்தரமான அழகுடைய, கலை உணர்வுள்ள முன் மாதிரிகள் இருந்தன. இவற்றை உருவாக்கியவர்களின் திறமையின் சிறப்பு அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது. கண்காட்சியை பார்ப்பதற்காக பெரிய சந்தேகப் பேர்வழி ஒருவன் வந்திருந்தான். ஒரு ஊழியன் அவருக்கு கண்காட்சியைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தான். முழு கண்காட்சியையும் பார்த்த பிறகு அந்த விமர்சிப்பாளன் சொன்னான்: ‘எனக்கு இந்த கலை வேலைப்பாடுகளின் பெருமை ஒன்றும் தெரியவில்லை. நான் இவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை” என்று. உடன் இருந்த ஊழியன் பணிவோடு சொன்னான்: ”ஐயா, நான் உங்கள் கவனத்தை இந்த விஷயத்தின் பக்கம் இழுக்க விரும்புகிறேன். இந்த சிறப்பான கலைவேலைப்பாடுகள் காலத்தின் உரைகல்லை கடந்து விட்டது; இப்பொழுது இது பார்ப்பவனின் ரசிகத் தன்மைக்கு உரைகல்லாக இருக்கிறது” என்றான். Sir, I wouldremind you that these master pieces are no longer on trial, but those who look at them, are on trial. இது போன்றே நாம் இன்று , Sangh is no longer on trial, but those who talk about R.S.S. are on trial. இப்பொழுது சங்கத்திற்கு உரைகல் இல்லை ; சங்கத்தைப் பற்றி, எதிராக பேசுபவனின் உரைகல் உள்ளது எனக் கூறமுடியும். இந்த நம்பிக்கையை மனதிற் கொண்டு நாம் முன்னேறுவோம்.

Shri Guru ji RSS Second parmukh Bodhik Madhav Rao Sadashiv Rao ...

பரமாத்மாவின் பக்தியில் பற்றுதல் யாருக்கு உண்டாகியிருக்கிறதோ அவன் வெளியில் இருக்கும் எதைப்பற்றியும் சிந்திப்பதில்லை. நாம் என்ன சாப்பிடுகிறோம்; என்ன குடிக்கிறோம்; எங்கு தூங்குகிறோம் போன்ற எந்த விதமான அவநம்பிக்கையும் அவன் மனதில் எழுவதில்லை . நமது கார்யகர்த்தர்களும் தன்னுடைய கொள்கை மீதுள்ள பற்றின் காரணமாக இப்படிப்பட்ட வேலை செய்கிறார்கள்.

இந்தப் பற்றுதல், இந்த போதை ஒரு போதும் குறைவு பட விட மாட்டார்கள். இந்த எண்ணம் நமக்கு நிரந்தரமாக இருக்க வேண்டும். இதே போதையில் மூழ்கி இருங்கள். இதே பற்றுதலை விரிவுபடுத்திக் கொள்ளுங்கள். சமுதாயத்திற்கு கூட இதே போதையின் அனுபவத்தை கொடுங்கள். நம்முடைய காரியம் பெருகிக் கொண்டே இருக்கும். நமது கொள்கையில் உறுதித்தன்மை, மனஒற்றுமை, ஆத்ம சமர்ப்பணம் இவற்றை நாம் ஜாக்கிரதையாக பாதுகாப்போடு, நிரந்தரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுது மற்றவை எல்லாம் சரியாகிவிடும். ஆகவே take care of Karyakarthas, everything will take care of itself. கார்யகர்த்தர்களைப் பற்றி கவலைப்படு. மற்ற எல்லா விஷயங்களும் தானாகவே சமாளித்துக் கொள்ளும். ப.பூ.குருஜி, ப.பூ.டாக்டர்ஜி தங்களுடைய சமர்ப்பணம் செய்து கொண்ட கொள்கை தவத்தினால் இந்த வேலையின் அடிப்படை, பலமுள்ளதாகவும், விழிப்புள்ளதாகவும், வளர்ச்சி அடையக் கூடியதாகவும் ஆக்கினார்கள். அந்த வெளிச்சத்தில், நம்மைப் போன்ற கார்யகர்த்தர்களுக்கு வருங்காலத்திலும் எப்போதும் ஊக்கம் கிடைத்துக் கொண்டிருக்கும். மேலும் இந்தச் செயலின் இலட்சியத்தை ‘இந்த தாய்நாட்டை பரம வைபவ நிலைக்கு உயர்த்துவோம்’ இதை நாம் நனவாக்கியே தீருவோம் என்பது நமது நம்பிக்கை.

தொடரும்…

கார்யகர்த்தா – தத்தோபந்த் டெங்கடிஜி -62

62. இமயம் போன்ற அசைக்க முடியாத லட்சியப் பண்பு

கடந்த 75 ஆண்டுகளில் தன்னுடைய குருதி – வியர்வையைச் சிந்தி இந்த காரியத்தை முன்னேற்றம் அடையச் செய்தனரோ, அவர்கள் ஒவ்வொருவராக மறைந்து விட்டனர். இயற்கை எய்தி விட்டனர். தற்காலத்தில் உள்ள கார்யகர்த்தர்களாகிய நமக்கு பொறுப்புகள் அதிகரித்து விட்டன. நம்முடைய சக்தியும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் மாறிக் கொண்டிருக்கும் சமுதாய சூழ்நிலையில் நமக்கு சவால்களும் பெருகி விட்டன. ஆனால் கவலைப்பட வேண்டியதில்லை. இது தெய்வீக காரியம், ஆகவே எந்தச் சூழ்நிலையிலும் இது வெற்றி பெற்றே தீரும் என்பதில் நமக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கவேண்டும். உலகத்தின் எந்த சக்தியாலும் அதை அழிக்க முடியாது. ப.பூ.டாக்டர்ஜி ப.பூ.குருஜி போன்ற இமயமொத்த அசைக்க முடியாத லட்சியத்தின் உதாரணம் நம் கண் முன் உள்ளது.

Srujana: Rare picture of Dr.Hedgewar (Doctorji) and Golwalkar ...

பண்டிட் தீனதயாள்ஜி வாழ்வில் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. 1967ல் முதன்முதலாக ஜனசங்கத்தை சேர்ந்தவர்கள் “ஸம்யுக்த விதாயக்தள்” கூட்டணி சபையில் இடம்பெற்ற போது மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜனசங்கத்தின் ஒரு பொறுப்பாளர் பண்டிட்ஜியிடம் கேட்டார், “இப்போது நம் மக்கள், ஆட்சியில் அமர்ந்து இருக்கிறார்கள். ஆட்சி பெற்றதின் காரணமாக, இவர்களில் சிலர் ஊழல் செய்து ஜனசங்கம் வீழ்ச்சி ஏற்பட்டால், என்ன செய்வீர்கள்? என்று வினவினார். பண்டிட்ஜிசட்டென்று “நான் ஜனசங்கத்தை கலைத்து விட்டு மேலும் புதிய கட்சி ஒன்றைத் துவக்குவேன்” என்று பதில் கூறினார். மீண்டும் அதே இழிவு ஏற்பட்டால்? “அப்பொழுதும் மீண்டும் அதை கலைத்து விட்டு மூன்றாவது கட்சியை ஆரம்பிப்பேன்”. தன்னுடைய உழைப்பினால், போற்றிப் பாதுகாத்து வளர்த்த கட்சி, இழிவு நிலை அடைந்தால், அதன் மீது தனது என்ற உணர்வு சிறிதும் இல்லாமல் இருக்கக்கூடிய தத்துவப் பற்று இங்கு காணப்படுகிறது. மேலும் மீண்டும் அப்பணியை பிள்ளையார் சுழி போட்டு துவங்குவது என்ற துணிவும் கூட காணப்படுகிறது.

ப.பூ.குருஜி அவர்களின் வாழ்விலும் கூட ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. நீங்கள் உங்களுடைய வேலை முறையில் (கார்யபத்ததி) மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று அவரிடம் கூறப்பட்டது. மேலும் அவர்கள் அவ்வாறு மாற்றம் செய்யவில்லை என்றால் இப்பொழுது இருக்கிற ஆர்.எஸ்.எஸ். முழுவதும் உடைந்துவிடும். Everything will crumble down. முழுவிவரம் கேட்டபிறகு ப.பூ. குருஜி அவர்கள் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார். நேர் எதிரே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மக்களை நோக்கி பார்வை செலுத்தாதது போல் தெரிந்தது. எங்கோ தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்தார். அதாவது தன்னையே மறந்த நிலையில் இருப்பது போல் இருந்தார். பிறகு அவருடைய வாயிலிருந்து சொற்கள் வெளியாயின: Well, if everything crumbles down, I will begin from the beginning. முழுவதும் உடைந்து விட்டால், நான் மீண்டும் ஆரம்பத்திலிருந்தே துவக்கம் செய்வேன்”.

இந்த தன்னம்பிக்கை மற்றும் எண்ணம், தனிநபர் அளவில் உள்ள தன்னம்பிக்கை மட்டுமல்ல – நமது கொள்கை, வாழ்வின் மதிப்பு, திசை, வேலை செய்யும் முறை, நடத்தை – இவற்றின் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைத்தான் எடுத்துக் காட்டுகிறது.

தொடரும்…

கார்யகர்த்தா – தத்தோபந்த் டெங்கடிஜி -61

61. கல்பவிருக்ஷத்தினுடைய சக்தியின் ரகசியம்

மற்ற துறைகளுக்குச் செல்லக் கூடிய, கார்யகர்த்தர்களின் மனதில், மேலும் ஒரு தெளிவான உறுதியான எண்ணம் இருக்க வேண்டும். சங்கத்தின் அமைப்பு ஒரு கல்பவிருக்ஷம் போன்றது என்று நாம் சொல்கிறோம். சங்கத்தின் மூலமாக நாம் எந்த சக்தியைப் பெறுகிறோமோ, அந்த சக்தி நமது சித்தாந்தத்தினுடையது. நம்முடைய வாழ்க்கையின் மதிப்பிற்குரியது. நமது நடவடிக்கைக்குரியது. இப்படிப்பட்ட பலத்துடன், நாம் வெவ்வேறு துறைகளுக்கு செல்கிறோம். நாம் இந்த சக்தியை, அந்தந்தத் துறைகளில், அமைப்பை முன்னேற்றுவதில் உபயோகம் செய்யாமல் தனிப்பட்ட சுயநலத்தின் முன்னேற்றத்திற்காக உபயோகித்தால், அப்பொழுது நம் அமைப்பின் சொந்த சக்தியையும் கூடக் குறைத்துவிடும். நமது தவறான நடவடிக்கையால் ஏற்படும் தீய தாக்கம், அமைப்பின் சக்தி மீதும் ஏற்படும். ஆகவே கற்பகவிருக்ஷம் போன்ற நம் அமைப்பிலிருந்து பெற்ற தகுதியை, அமைப்பிற்காகவே விழிப்புடன் உபயோகிக்க வேண்டியது அவசியமாகும். நமது தவம் பலன் தரக்கூடியதே. ஆனால் அந்தப் பலனை, தனிப்பட்ட சுயநலத்திற்காக உபயோகித்தால், அதனுடைய தகுதி அதிகமான அளவில் குறைந்து போய்விடும். இப்படிப்பட்டவர்களைப் பற்றி அலெக்சாண்டர் போப் சொல்கிறார்.

Born for the universe, narrowed his mind. And gave to his party, what was meant for mankind!

அதாவது உலகத்திற்காக பிறந்த மனிதன் தன் மனதை சிறிதாக்கிக் கொண்டான். மேலும் மனித சமுதாயம் முழுவதிற்கும் செய்ய வேண்டியதை அதை தனது சிறு குழுக்காக அவன் செய்தான். ஸ்ரீபானுபிரதாப் சுக்ல அவர்கள் கொடுத்த ஒரு உதாரணம் மிகவும் அறிவுரை தரக்கூடியதாக உள்ளது. ஒரு அரசன் போரில் தோற்றதின் காரணமாக உயிரை காப்பாற்றிக் கொள்ள பயந்து ஓட வேண்டியதாயிற்று. இப்பொழுது எங்கே ஒளிந்து கொள்வது? இதே எண்ணத்தில் பயந்து ஓடி ஓடி காட்டில் ஒரு ஆஸ்ரமத்துக்கு அருகில் சென்றான். ஆஸ்ரமத்தைப் பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். ஆஸ்ரமத்தின் தலைமை முனிவருக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து, தன் கதையைச் சொன்னான். இங்கு நலமாக இரு. இங்கு உன்மீது யாரும் படையெடுக்க முடியாது என்று முனிவர் கூறினார்.

Bodhi Tree Dharma updated their profile... - Bodhi Tree Dharma ...

அடைக்கலம் கிடைத்து விட்டது. இருந்தும் அவனுக்கு பிரச்சனைகள் உண்டாயின. உண்ண, இருக்க, உடுக்க இதற்கு என்ன ஏற்பாடு? ஆஸ்ரமத்தில் இருக்கின்ற எல்லா முனிவர்களும் கோவணம் (கௌபீனம்)அணிந்திருக்கிறார்கள். தினசரி விரதம் மேற்கொண்டரின் காரணமாக, மெலிந்து, ஒல்லியாக காணப்படுகிறார்கள். அவர்களுக்கே உணவு ஏற்பாடு காணப்படவில்லை, அப்படியிருக்க என்னுடைய உணவிற்கு என்ன ஏற்பாடு ஆகப்போகிறது? இப்படி பல கேள்விகள் மனதில் எழுந்தன. யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆஸ்ரமத்தினுடைய முற்றத்தில் இருக்கிற மரம் கற்பவிருக்ஷ மரமாகும். அதன் அடியில் அமர்ந்து கொண்டு உனக்கு தேவையான எந்தப் பொருளையும் கேட்டுக் கொள்ளலாம். எதைப்பற்றி கற்பனை செய்து கேட்டாலும், அந்தப் பொருளை இந்த கற்பக விருக்ஷம் உடனே கொடுக்கும்” என்று அந்த தலைமை முனிவர் கூறினார். அரசர் இதை பிரயோகம் செய்து தனக்கு தேவையான பொருள்களை பெற்றுக் கொள்ளத் துவங்கினார். சில தினங்களுக்கு பிறகு இப்போது அவனுடைய மனதில் ஒரு எண்ணம் உதித்தது. நம்முடைய எல்லா விருப்பத்தையும் இந்த கற்பகவிருக்ஷம் பூர்த்தி செய்கிறது. அப்படியானால் நான் இழந்த அரசை அடைவதற்கான ஆசையையும் பூர்த்தி செய்யுமா என்று எண்ணி மீண்டும் கற்பக விருக்ஷத்திற்கு அடியில் உட்கார்ந்தான். தன்னுடைய விருப்பத்தை வெளிப் படுத்தினான். அடுத்த நாளே அவனுடைய ஆட்சியைச் சேர்ந்த சிலர் அரசரை தேடிக் கொண்டே ஆஸ்ரமத்தை அடைந்தனர். “படையெடுத்த அரசனுக்கு எதிராக மக்கள் கலகம் செய்தார்கள். அவனைக் கொன்று விட்டார்கள். இப்பொழுது எங்களுடன் வாருங்கள். தங்கள் அரசை ஏற்றுக் கொள்ளுங்கள்”. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதைக்கேட்டு அரசன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான்.

இப்படி இருந்தும் அவன் மனதில் மேலும் ஒரு பிரச்சனை உண்டாயிற்று. இந்த கற்பகவிருக்ஷம் எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்கிறது. ஆனால் ஆஸ்ரமத்தின் எல்லா மக்களும் இவ்வாறு விரதம் இருந்துகொண்டு, கோவணம் அணிந்து கொண்டு ஏன் இருக்கிறார்கள்?. இந்த மரத்திலிருந்து எல்லாப் பொருள்களையும் பெற்றுக் கொள்ளாமல் வலுக்கட்டாயமாக கடினமான வாழ்க்கையை ஏன் கழிக்கிறார்கள்?.

இந்தக் கேள்வியை ஆஸ்ரமத்தின் தலைமை முனிவரிடம் கேட்டபோது, அவர் சிரித்துக் கொண்டு, “நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான்” என்றார். ‘ஆனால் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள். கல்பவிருக்ஷத்தின் முன்னிலையில் இருந்து கொண்டே நாங்கள் எங்களுக்காக அதனிடம் ஒன்றும் கேட்பதில்லை. இந்த நிலை எது வரைக்கும் நிலையாக உறுதியாக இருக்குமோ, அதுவரைக்கும்தான், ஜனங்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யக்கூடிய சக்தி, கல்பவிருக்ஷத்திற்கு இருக்கும். நாங்கள் எந்த அளவிற்கு எங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்கிறோமோ, அந்த அளவிற்கு கல்பவிருக்ஷத்தினுடைய இந்த சக்தி குறைந்து போய்விடும். முடிவில் அது சக்தியற்றதாகிவிடும்.”

கற்பக விருக்ஷத்தின் அருகில் இருந்தும் கூட, அதனிடமிருந்து தங்களுக்கு உபயோகமுள்ள எல்லா வசதிகளும் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் இருந்தும் கூட, கோவணம் மட்டும் அணிந்து கொண்டு, தன்னுடைய தவத்தில் ஈடுபட்டிருப்பது ஒரு பைத்தியக்காரத்தனம் என்று சொல்லாமல் என்ன சொல்வது?. முன்பு கூறியதை போன்று நமது அமைப்பும் கூட ஒரு விதமான பைத்தியம் பிடித்தவர்களின் அமைப்பாகும். 1947க்கு முன்னால் நம் நாட்டில் சில பைத்தியக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் தாய்நாட்டிற்காக தனது அனைத்தையும் அர்ப்பணம் செய்திருந்தனர். நாமோ துவக்கத்திலிருந்தே பைத்தியம்தான். இது ஹிந்து ராஷ்ட்ரம் என்று எந்த பைத்தியக்கார மனிதன் சொல்கிறான்? என்று கேட்ட மகானுபாவர்கள் கூட, டாக்டர்ஜி காலத்தில் இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அந்தச் சமயத்தில் டாக்டர்ஜி தன்னந்தனியாகவே அதற்கு பதில் கொடுத்தார். “கேசவபலிராம் ஹெட்கேவாராகிய நான் சொல்கிறேன் – இது ஹிந்து ராஷ்ட்ரம்”. அந்தச் சமயத்திலிருந்து பைத்தியக்காரர்களை உற்பத்தி செய்யும் இந்த தொழிற்சாலை ஆரம்பம் ஆகிவிட்டது. இன்று நாடு முழுவதிலும் பைத்தியக்காரர்களை உற்பத்தி செய்யும் இவ்வளவு பெரிய ஒரே தொழிற்சாலை இருக்கிறது. இந்தத் தொழிற்சாலையில் எந்த அளவு பைத்தியம் பிடித்த மிகச் சிறந்த சரக்கு தயாராகிக் கொண்டிருக்கிறதோ அவ்வளவு நல்ல சரக்கு, மற்ற எந்த ஒரு தொழிற்சாலையிலிருந்தும் வெளிவருவதில்லை. அந்த சரக்குதான் நம்முடைய “அர்ப்பணம் செய்து கொண்ட கார்யகர்த்தர்கள்”.

ஆகவே கார்யகர்த்தர் இதன்பொருட்டு எந்தத் துறையிலும் பணி புரிந்து கொண்டிருக்கலாம். நாம் அனைவரும் சேர்ந்து இந்த ராஷ்ட்ரத்தை மகோன்னத நிலைக்கு கொண்டு செல்வது, நமது தேசிய லட்சியம் ஆகும். அதைப் பூர்த்தி செய்வதற்கான பணியில் இறங்கியுள்ளோம். இதை, நமது கண்ணிலிருந்து மறைய விட மாட்டோம். சங்கம் நமக்கு கற்பித்துள்ள நீதி, நியமம், வழி, குணம் சார்ந்த வாழ்க்கை , எந்த ஒரு பக்குவமான சூழ்நிலையை நமக்காக ஆக்கிக் கொடுத்திருக்கிறதோ அந்தச் சூழல், (நாம் அனைவரும்) அந்த விஷயங்களை வாழ்க்கையில் செய்து காட்டி, நாம் முன்னேறவேண்டும். அப்படிச் செய்தால் நம் லட்சியத்தை அடைவதில் சங்கம் வெற்றி பெறும்.

RSS conclave in Maharashtra | Reuters.com

நாம் முன்பு கண்டபடி, மனிதனை நிர்மாணிப்பதற்கு சில வழிகள் இருக்கின்றன. அது போலவே கார்யகர்த்தர்கள் தானாக முன்னுக்கு வருவதற்கு இடைவிடாத எச்சரிக்கையுடன் கண்காணித்துக் கொண்டு தன்னை ஒரு நல்ல கார்யகர்த்தராக ஆக்கிக் கொள்வதற்கும் சில வழிமுறைகள் உள்ளன. இவற்றை எப்போதும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தன்னுடைய முழுமையான வாழ்வை நாட்டின் பணிக்காக அர்ப்பணம் செய்து கொண்ட தலைமை தாங்கக்கூடிய கார்யகர்த்தா நமக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். அமைப்புப் பணியை நாம் கையில் எடுத்துக் கொண்டுள்ளோமோ, அதை நாம் வெற்றியுடன் நடத்தவேண்டும் என்றால் அதற்கு கார்யகர்த்தர்கள் தன்னை விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் வைத்துக் கொள்வதற்காக, அதற்கு முன்பு கூறப்பட்ட கார்யகர்த்தரின் முன் உதாரணங்களை வைத்துக்கொண்டு சுயபரிசோதனை செய்து கொண்டிருப்பது அவசியமாகும்.

தொடரும்…

கார்யகர்த்தா – தத்தோபந்த் டெங்கடிஜி -60

60. தினசரி ஷாகா பண்பாட்டை விடக்கூடாது

சங்கத்தினுடைய தேசிய புனர்நிர்மாணப் பணியை மற்ற துறைகளில் செய்யும் பொருட்டு அங்கு செல்லக்கூடிய, ஸ்வயம் சேவக கார்யகர்த்தர்களுடைய நடவடிக்கை சிறந்த முறையில் எப்போது நடைபெறும்? இதற்கு இன்னுமொரு மிக அவசியமான விஷயம் உள்ளது. இப்படிப்பட்ட ஒவ்வொரு ஸ்வயம்சேவகனும் பிடிவாதத்துடன் சங்க ஷாகாவிற்கு செல்ல வேண்டும். இவ்வாறுதான் நாம் ஒவ்வொரு ஸ்வயம் சேவகனிடமும் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மற்ற துறைகளில் நிலவும், தற்கால சூழ்நிலையை கவனத்தில் கொண்டு, அந்தத் துறைகளில் செல்லும், இருந்து கொண்டிருக்கும் நம்முடைய கார்யகர்த்தர்களின் விஷயத்தில், இது மேலும் வலியுறுத்தப்படுகிறது. தனி நபரின் அழிவு அல்லது தவறுதல் எப்போது வேண்டுமானாலும் ஏற்படும். ஆனால் தினசரி ஷாகா வருபவர்களுக்கு தவறுதல் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. சென்ற சில பக்கங்களில் தினசரி பண்பாடு பற்றி கூறிய விளக்கங்கள் மீண்டும் கவனத்தில் எடுத்துக் கொள்வது நல்லது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், நான் ஒரு காரணமாக குஜராத் சென்றிருந்தேன். அங்குள்ள அரசியல் சூழ்நிலை மிகவும் விஷம் நிறைந்ததாக இருந்தது. மேலும், அதன் பெருந்தாக்கம் நம் ஸ்வயம்சேவகர்கள் மனதில் கூட ஏற்பட்டிருந்தது. அவர்கள் மிகவும் மனம் குன்றி இருந்தனர். சிறுவயதிலிருந்தே ஸ்வயம்சேவகனாக இருந்தும் கூட அரசியலில் போன பிறகு, சிலரைப் பற்றி குழப்பமான நிலை ஏன் உண்டாகிறது? அப்படியானால் சங்க பண்பாடு என்ன ஆகிறது? இப்படி சில பிரச்சனைகள் ஸ்வயம் சேவகர்களின் மனதில் உறுத்திக் கொண்டிருந்தது. அமைதியற்ற நிலையை ஏற்படுத்தியது. நான் அவர்களிடம் கேட்டேன்: “சிறு வயதிலிருந்தே ஸ்வயம்சேவகராக இருந்தும் கூட ஸ்வயம்சேவக், பிற துறைகளுக்குச் செல்லும் போது குழப்பம் ஏற்படக்கூடும். அவர் எவ்வளவுதான் பெரிய கார்யகர்த்தாவாக இருந்தால் என்ன? ஆனால் ஒரு விஷயம் சொல்லுங்கள். அரசியல் துறையில் சென்ற பிறகு யார் தவறு செய்தாரோ, அல்லது வழுக்கி விழுந்தாரோ, அப்படிப்பட்ட மூவ்வொரு தலைவரையும் நம் கண்முன் கொண்டு வாருங்கள். ஆனால் அவர் பெயர் சொல்ல வேண்டாம். மேலும் அவரைப் பற்றி ஒரே ஒரு விஷயம் தெரிவிக்க வேண்டும். அது என்னவென்றால், அந்த கார்யகர்த்தா மூன்றாம் ஆண்டு பயிற்சி பெற்றவர். 8 அல்லது 10 ஆண்டு காலம்

பிரசாரகராக இருந்தவர். ஆனால் அவர், தற்பொழுது நிக்கர் அணிந்து கொண்டு தினசரி சங்க ஷாகாவிற்கு வருகிறாரா? இல்லையா?”

ஸ்வயம் சேவகர்கள் யோசிக்க ஆரம்பித்தனர். ஒருவர் சொன்னார் குறிப்பிட்ட தலைவர், கடந்த 10 ஆண்டு காலமாக ஷாகா வரவில்லை . மற்றொருவர் சொன்னார் இந்த கார்யகர்த்தா 8-9 வருஷம் ஷாகாவிற்கு வரவில்லை. இவ்வாறு எண்ணிக்கை ஆரம்பமாயிற்று. இதற்குள் ஒருவர் சொன்னார்: “இல்லை இல்லை. டெங்கடிஜி, நான் ஒரு திருத்தம் செய்ய விரும்புகிறேன். நான் என்ன விஷயம் என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார், “உண்மைதான் சிலர் எட்டு அல்லது ஒன்பது வருஷம், சிலர் 10 வருஷம் ஷாகாவிற்கு வரவில்லை. ஆனால் தேர்தல் வந்தால் தேர்தலுக்கு 15 நாளுக்கு முன்பிருந்தே நிக்கர் அணிந்து கொண்டு ஷாகாவிற்கு வந்து விடுகிறார்கள்”.

எப்படி பாத்திரத்தை தினசரிகழுவுவது அவசியமோ, அதுபோலவேதான் சங்க ஷாகாவிற்கு தினசரி வருவதினால்தான் பண்பாட்டுடன் இருக்க முடியும். இப்பொழுது, பாத்திரத்தை எட்டு பத்து வருடம் சுத்தம் செய்ய வில்லை. ஆனால் ஸம்ஸ்கார் என்ன ஆகிவிட்டது என்று கேட்கிறோம். அதற்கு பதில்தான் என்னவாக இருக்க முடியும்?

இந்த நோக்கத்தில் சங்க கார்யகர்த்தா எங்கு சென்றாலும் லட்சியத்தில் சமர்ப்பணம், அகங்காரமில்லாத தன்மை , செயலில் ஈடுபாடு, சுயநலமற்ற தன்மை, முதலிய குணங்களினால் உண்டாகியுள்ள மனோபக்குவமும், விழிப்புணர்வும் எப்பொழுதும் மனதில் அமைத்துக் கொள்வது அவசியமானதாகும். இந்த எல்லா குணங்களையும் ஸ்வயம்சேவக் என்று குறிப்பிட்டால், நாம் நமது ஸ்வயம்சேவகத் தன்மையை ஒரு பொழுதும் மறக்க மாட்டோம். இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இத்தகைய தருணங்களில் விழிப்புணர்வு எப்படி இருக்க வேண்டும். எப்படி வைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது? இதைப் பற்றி அடையாள மிட்டுக் காட்டக்கூடிய நமது மூத்த கார்யகர்த்தர்களுடைய உதாரணங்கள் பல உள்ளன.

பண்டிட் தீனதயாள்ஜி அவர்களுடைய, மிகவும் பெரிய, நுணுக்கம் பொருந்திய இரண்டு மூன்று உதாரணங்கள் உள்ளன. சங்கத்தின் ஒரு நிகழ்ச்சியில் அவர் பௌத்திக் கொடுக்கச் சென்றார். அவரை அறிமுகம் செய்யும் போது, அறிமுகம் செய்பவர், பண்டிட் தீனதயாள்ஜி அவர்கள் ஜனசங்கத்தின் அகில பாரத பொதுச் செயலாளர் என்று அறிமுகம் செய்தார் பண்டிட்ஜி அவர்கள் உடனே அதை திருத்தம் செய்து “நான் சங்கத்தின் பிரசாரக்; அரசியல் துறையில் பணிபுரியக் கூடிய சங்க பிரசாரக்” என்றார்.

பண்டிட்ஜி ஒரே ஒரு முறைதான் ஜனசங்கத்தின் தலைவராக இருந்தார். அது 1967ல் டிசம்பரில் கோழிக்கோடு மாநாட்டில். மாநாட்டிற்குப் பிறகு ப.பூ.குருஜி அவர்களை சந்திக்க, கர்நாடகா சென்றார். அன்றைய தினம், முன்பு திட்டமிட்டபடி ப.பூ.குருஜி அவர்களின் பௌத்திக் வர்க ஒன்று இருந்தது. ஆனால், தீனதயாள்ஜி இருப்பதால், ப.பூ.குருஜி அவர்கள் இப்பொழுது தீனதயாள்ஜி அவர்கள் பௌத்திக் வழங்குவார்கள் என்று கூறினார். அப்பொழுது உள்ளூர் அதிகாரிகளில் ஒருவர், அவரோ ஜனசங்கம் போன்ற அரசியல் கட்சியின் தலைவர் ஆயிற்றே என்றார். அதற்கு ப.பூ.குருஜி அவர்கள், சங்க நிகழ்ச்சியில், அவர் அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையில் பேசமாட்டார். ஒரு ஸ்வயம்சேவக் என்ற முறையில் தான் பேசுவார் என்றார்.

தீனதயாள்ஜி தன்னைப் பொருத்த வரையில் மட்டும் விழிப்புடன் இருக்கவில்லை. தன்னுடைய கார்யகர்த்தர்களையும் விழிப்புடன் இருக்கச் செய்தார். ஜனசங்கத்தின் ஆரம்பகாலத்தில் டில்லியில் ஒரு பைட்டக்கிற்கு பிறகு, எல்லா கார்யகர்த்தர்களும், வெளியே புறப்பட்டார்கள். சாப்பாடு விஷயமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். பண்டிட்ஜி அவர்கள், புறப்படுங்கள். ஜண்டேவாலே (டில்லியிலுள்ள சங்க கார்யாலயம்) செல்லுங்கள். எல்லா ஏற்பாடும் ஆகிவிடும் என்றார். பிறகு அவர், ஜண்டே வாலாவிற்கு டில்லி சங்க கார்யாலயத்திற்கு சென்று கொண்டே இருங்கள்; அங்கு உணவு உண்பதினால், அரசியல் துறையிலும் கூட நமது எண்ணங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று சொன்னார். இதன் பொருள் என்னவென்றால், சங்க பண்பாட்டின் செயல் முறையில், நம்முடைய உறவு, தொடர்பு வைத்துக் கொண்டிருக்கவேண்டும் என்பது தான்.

இந்தத் தருணத்தில், ப.பூ.குருஜி அவர்கள் தன்னுடைய சிறப்பான முறையில் எனக்கு ஒரு பாடம் கற்பித்தார். நான் சங்கத்தின் பிரசாரகராக இருந்தேன். அத்துடன் ‘ஷெடியூல்டு காஸ்ட் பெடரேஷன்’ என்ற அமைப்பின் தலைவருடனும், அந்த கார்யகர்த்தர்களுடனும் நல்ல தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்காக அவர்களுடன் கூட சேர்ந்து பணி புரிந்து கொண்டிருந்தேன். ஒரு நாள் ப.பூ.குருஜியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். மா.ஆபாஜி தத்தேயும் உடனிருந்தார். அப்பொழுது ப.பூ.குருஜி கேட்டார், “ இப்பொழுது நீ ஷெட்யூல்டு காஸ்ட் பெடரேஷனில் வேலை செய்வதனால் காலையில் ஷாகா செல்ல இயலாமல் உள்ளதா?”

ஆம், ஷாகாவிற்கு போவது மிகவும் கஷ்டமாகிவிடுகிறது என்று நான் சொன்னேன். ஷெட்யூல்டு காஸ்ட் பெடரேஷனின் கார்யகர்த்தர்கள் மாலையில் பைட்டக் ஆரம்பிப்பது, இரவு நெடுநேரம் நடத்துவது இந்த பழக்கம் அவர்களுக்கு உள்ளது. இதனால் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடிவதில்லை என்றும் நான் கூறினேன். பிறகு, ஷெட்யூல்டு காஸ்ட் பெடரேஷனில் தலைவர்களுடனும் கார்யகர்த்தர்களுடனும் தொடர்பு வைத்துக் கொள்வதில் எந்த அளவு வெற்றி கிடைத்துள்ளது என்று ப.பூ. குருஜி அவர்கள் கேட்டார்கள். நான் எல்லா விளக்கங்களையும் கூறினேன். “மிக நல்ல காரியம் செய்திருக்கிறாய். இதில் மனக்கஷ்டம் கூட அதிகம்; சகித்துக் கொள்ள வேண்டியிருக்குமே” என்று ப.பூ.குருஜி கூறினார். ப.பூ. குருஜி அவர்கள் இவ்வாறு சொல்வதைக் கண்டு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. இது வரை செய்த பணிகளுக்கு, ப.பூ.குருஜி அவர்களின் ஒப்புதல் கிடைத்துள்ளது என நினைத்தேன். ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு ப.பூ.குருஜி அவர்கள் “ஷெட்யூல்டு காஸ்ட் பெடரேஷனைச் சார்ந்தவர்களிடம் தொடர்பு செய்வதில் ஷாகாவிற்கு வர முடியாத அளவு நேரம் கொடுக்க வேண்டியுள்ளது. இது இயற்கையே. சென்ற மூன்று நான்கு நாட்களாக, தத்தோத்பந்த் ஷாகாவிற்கு வரவில்லை என்று ஆபாஜி சொல்லிக் கொண்டிருக்கிறார். நான் ஆபாஜியிடம் தெரிவித்தது என்னவென்றால், (டெங்கடிஜி) எந்த வேலை செய்து கொண்டிருக்கிறாரோ அது சங்க வேலையே என்று தத்தோபந்த் கருதுகிறார். சங்கத்தின் தூண்டுதலின் பேரில்தான் செய்து கொண்டிருக்கிறார். இந்த நோக்கத்தில் இருபத்திநான்கு மணிநேரமும் சங்கத்தின் வேலைதான் செய்து கொண்டிருக்கிறார். அதன் காரணமாகத் தான் அவரால் ஷாகாவிற்கு போக முடிவதில்லை. இதில் என்ன ஆபத்து இருக்கிறது? என்ன தத்தோபந்த்! அப்படித்தானே?” என்று கூறினார்.

இப்பொழுது நான் பயந்து விட்டேன். என்னைப் புகழ்ந்து கொண்டிருக்கிறார் என்று முதலில் நான் நினைத்தேன். தண்டவாளம் ஒரேயடியாக மாறிவிட்டது என்பது இப்பொழுது என் கவனத்திற்கு வந்தது. நான் தலைகுனிந்து கொண்டு மௌனமாக உட்கார்ந்திருந்தேன். ஸ்ரீகுருஜி அவர்கள் மீண்டும் கேட்டார், “என்ன! தத்தோபந்த், அப்படித் தானே!” நான் மிகுந்த கஷ்டத்துடன் தலையை மட்டும் அசைத்தேன்.

RSS & CPI(M)-DYFI Workers Clash during March Taken out by Sangh ...
Sangh Shaka

அதன் பிறகு ஸ்ரீகுருஜி, “ஆபா! கேட்டுக் கொள். இவன் என்ன சொல்கிறான் என்று, பிறகு என்னிடம் கூறினார், “நான் மூன்று நான்கு நாட்களாக ஆபாவிற்கு அறிவுறுத்திக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் சொல்வதை இவர் கேட்பதில்லை. இவர் என்னைக் கூட தினசரி சங்கஸ்தானத்திற்கு வரவேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். அட, நான் சங்கத்தின் சர்சங்கசாலக் ஆக இருக்கிறேன். சங்கத்தைத் தவிர, என் வாழ்வில் வேறு ஒன்றும் இல்லவே இல்லை. என்னுடைய ஒவ்வொரு நடமாட்டமும் சங்க வேலையின் ஒரு பகுதியாகத்தான் இருக்கிறது. நான் 24 மணிநேரமும் சங்கத்தை தவிர வேறு எந்த வேலையும் செய்வதே இல்லை. இருந்தும் கூட நான் தினசரி ஷாகாவிற்காக ஒரு மணிநேரம் கொடுக்க வேண்டும் என்று என்மீது இந்தக் கடுமை ஏன்? நான் அறிவுறுத்துகிறேன். ஆனால் ஆபாஜி ஒப்புக் கொள்வதே இல்லை.”

இதற்கு எந்த பதிலும் கூறமுடியவில்லை . ஸ்ரீகுருஜி என்ன குறிப்பிட்டுக் காட்டுகிறார் என்பது எல்லோருடைய கவனத்திற்கும் வந்தது. என் கவனத்திலும் கூட வந்தது. அன்றிலிருந்து நான் தினசரி ஷாகா போக ஆரம்பித்தேன்.

தொடரும்…

கார்யகர்த்தா – தத்தோபந்த் டெங்கடிஜி -59

59. நாம் பிற துறைகளுக்கு ஏன் சென்றுள்ளோம் ?

பிற துறைகளுக்குச் செல்லும் நமது கார்யகர்த்தர்களின் மனதில் இந்த விஷயம் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். அது என்னவென்றால், பிற துறைகளின் ஆக்கப்பணிகள் சங்க கோட்பாடுகளின் அடிப்படையிலும், முன் உதாரணமான தரத்திலும் மட்டுமே நடைபெற வேண்டும்.

நாம் மற்ற துறைகளுக்கு ஏன் செல்கிறோம்? அங்கு முன்னரே வேலை செய்து கொண்டிருப்பவர்கள் ஆதர்ஷமான முறையில் செயல்களை செய்யவில்லை. மலிவான, மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் தவறான வழிகளுக்குத் துணை போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அந்தத் துறையை சங்க பண்பாட்டின் மூலம் சீர்படுத்த செல்கிறோம். இந்த விஷயம் நமது பார்வையிலிருந்து மறைந்து விடக்கூடாது. நாமும் அந்தத் துறையில், விரைவிலேயே, ‘நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என்பதைக் காட்டக்கூடிய பேராசை கொண்டு நாமும் அவர்களைப் போல் தவறான நடவடிக்கையில் இறங்கினால், நாம் அங்கு செல்வதினால் என்ன பயன்?

நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று காட்டுவதிலும், வெற்றி பெறுவதிலும் காலதாமதம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. ஆனால் சங்கம் நமக்கு கற்றுக் கொடுத்த நீதி, நியமம், வழி, குறிப்புகள், சங்கம் உண்டாக்கிய சூழ்நிலை, மனநிலை இந்த எல்லா விஷயங்களின் முத்திரையை நமது துறையில் பதிக்க வேண்டும். கங்கைக்கு சென்றால் கங்காவாசி, யமுனைக்கு சென்றால் யமுனாவாசி என்பது போல நமது நிலை இருக்கக்கூடாது.

மற்ற துறைகளுக்கு நாம் ஏன் சென்றோம் என்பதற்குச் சரியான உணர்வு கார்யகர்த்தர்களுக்கு இருக்குமானால், அப்பொழுது சங்கம் எதிர்பார்க்கும் நீதி, நியமம், வழி இவற்றின்படி அந்தத் துறையில் வேலை செய்ய முடியும். மேலும் ராஷ்ட்ரத்தை ‘பரம் வைபவ’ நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய, சங்கத்தின் லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக உதவிகரமாக இருக்கும்.

மா.பீதாம்பரதாஸ் ஜனசங்கத்திற்கு தலைவரானவுடன், ப.பூ.குருஜி அவர்களை சந்திக்கச் சென்றார். திரும்பி வந்த பிறகு, நீங்கள் ப.பூ. குருஜி அவர்களை சந்திக்க சென்றீர்களே என்ன காரணம்? என்று நான் அவரிடம் கேட்டேன். “நான் தலைவன் ஆனதன் சரியான பொருள் என்ன? என்பதை அறிந்து கொள்ள விரும்பினேன்” என்று சொன்னார். “என்ன அறிந்து கொண்டீர்கள் என்று கேட்டேன். மா.பீதாம்பரதாஸ் பாட்டுக்களில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். அவர் சொன்னார்: “ஆம் அறிந்து கொண்டேன்” ஒரு இரண்டு வரிபாட்டு இருக்கிறது.

“துனியா மே ஹை(ம்), துனியா கே தரப்தார் நஹி(ம்)

பாஜார்ஸே நிகலே ஹை(ம்) க்கரீத்தார் நஹி(ம்)”

“நாம் இந்த உலகத்திலேயே இருக்கிறோம். ஆனால் நாம் இந்த உலகத்தினைச் சார்ந்தவர்கள அல்ல. இதனுடன் எந்த பற்றுதலும் இல்லை. கடைத்தெரு வழியாகச் செல்கிறோம். ஆனால் எதையும் வாங்க வேண்டியது இல்லை”.

பின் நாம் கடைத்தெரு வழியாக ஏன் செல்கிறோம்? நாம் எங்கு சென்றடைய வேண்டுமோ அந்த வழியின் ஒரு சிறுபகுதி இந்த கடைத்தெருவில் அமைந்துள்ளது. ஆகவே, நாம் கடைத் தெருவழியாகச் செல்கிறோம். நாம் முன் நோக்கியே செல்ல வேண்டியிருக்கிறது. இந்த ராஷ்ட்ரத்தை மகோன்னத நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய காரியத்தில் அரசியல் ஒரு பகுதியாக உள்ளது. அதைச் சரியான முறையில் பூர்த்தி செய்வதன் பொருட்டு நாம் அரசியல் துறையில் இருக்கிறோம்.

தொடரும்…

கார்யகர்த்தா – தத்தோபந்த் டெங்கடிஜி -58

58. நம் அமைப்பு மட்டுமல்ல, முழுப் பணிக்களம் பற்றிய சிந்தனை

சங்க கார்யகர்த்தர்கள், மற்ற துறைகளில் பணிபுரியச் செல்லும் போது, தான் இருக்கும் அமைப்பை பற்றி மட்டும் எண்ணாமல், முழுமையான பணிக்களம் பற்றிய எண்ணம் இருக்க வேண்டும். சங்கம் ஹிந்து சமாஜம் முழுவதிற்குமானது. பிற துறைக்கு செல்லக் கூடிய நம் ஸ்வயம்சேவக கார்யகர்த்தர்களின் மனநிலை, தனது பிரிவின் மீது மட்டும் பற்றுள்ளவனாக (sectarian) இருக்கக்கூடாது. அவருக்குத் தனது ஸ்தாபனத்தைப் பற்றி, அமைப்பு (institutional) அகங்காரம் ஏற்படக்கூடாது. நம் ஸ்வயம்சேவகர்கள் சிலர் கம்யூனிஸ்டு யூனியனில் வேலை செய்து வந்தனர். அப்பொழுது ஸ்வயம்சேவகராக இருந்து கொண்டு நமது பாரதீய மஸ்தூர் சங்கத்திற்கு எதிரான போட்டியுள்ள யூனியனில் எப்படி வேலை செய்யலாம், அவர்களை தடுக்க வேண்டும் என்று ப.பூ.குருஜி அவர்களிடம் சிலர் குறை கூறினார்கள்.

அதற்கு ப.பூ.குருஜி அவர்கள் : “அவர்கள் பிறதுறையில் வேலை செய்யும் நம் கார்யகர்த்தர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கலாம். சங்கத்தின் சர்சங்கசாலக் என்ற முறையில் மஸ்தூர் துறையில் பாரதீய மஸ்தூர் சங்கத்தில் உள்ள கார்யகர்த்தர்கள்தான் என்னைச் சார்ந்தவர்கள் என்று நான் சொல்லமுடியாது. சர்சங்கசாலக் என்ற முறையில் சமுதாயம் முழுவதும் என்னுடையது தான். நான் சங்கத்திற்கு மட்டும் அல்ல, ஹிந்து சமுதாயம் முழுவதிற்கும் நான் சர்சங்கசாலக் ஆக இருக்கிறேன். ஆகவே ஸ்வயம்சேவக கார்யகர்த்தர் ஒருவர் பிற அமைப்பில், ஸ்வயம் சேவகனுடைய நீதி, வழிமுறை இவற்றைக் கடைபிடித்து பணி புரியும் வரை, அவரைப் பிற அமைப்பில் வேலை செய்வதிலிருந்து தடுக்க முடியாது” என்றார்.

ஒருமுறை உத்தர பிரதேசத்தில் சங்க முகாமிற்கு பண்டிட் தீனதயாள் அவர்கள் வந்தார்கள். அப்போது உணவு நேரத்தில் ஒரு ஸ்வயம்சேவக் அவரிடம் “வரப்போகிற தேர்தலில் நம்மவர்கள் எத்தனைபேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?” என்று கேட்டார். “நம்மவர் என்றால் யார்? சங்க ஸ்வயம் சேவகர் என்ற முறையில் கேட்பீர்களானால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எல்லோருமே நம்மவர்கள்தான்” என்று கூறினார். அதாவது சங்க ஸ்வயம் சேவகர் ஏதாவது ஒரு துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது அந்தத் துறை முழுவதும் நம்முடையது என்ற எண்ணம் நம் மனதில் கொள்ளவேண்டும். அரசியலிலும் கூட நம்முடைய அரசியல் கட்சிக்கு வெளியே உள்ள மக்களும் ஹிந்துராஷ்ட்ரம் என்ற வட்டத்திற்கு வெளியே உள்ளவர்கள் என்று நாம் எண்ணக்கூடாது.

அவரவர்களது துறையில் அவரவர்களது ஸ்தாபனம், அல்லது மக்கள் அமைப்புகளின் வளர்ச்சிக்காக நாம் முயற்சிப்பது சரிதான். அப்பொழுது, அதே துறையைச் சேர்ந்த மற்றொரு ஸ்தாபனத்தில் வேலை பார்க்கும் கார்யகர்த்தருடன் விரோதம் ஏற்படுவது என்பது இயல்பானதே. தன் ஸ்தாபனத்தை முன்னிட்டு நாமும் எதிர்க்க நேரிடும். இதைச் செய்து கொண்டிருக்கும் போது கூட, நாம் இந்த எண்ணத்துடன் இருக்க வேண்டும். அதாவது இன்று சில தவறான எண்ணத்தின் காரணமாக அவர்கள் நமக்கு விரோதமாக வேலை செய்கின்றனர். காலப்போக்கில் அவர்களையும் கூட நம்முடன் கொண்டுவர வேண்டும். அவர் தவறான முறையில் விரோதம் செய்து கொண்டிருக்கலாம். தவிர்க்க முடியாத காரணத்தினால் அவனை அடிக்கவும் செய்வோம். இது விரோதம் காரணமாக அல்ல. தாய் உள்ளம் கொண்டிருப்பதினால் தாயார் குழந்தைக்கு கசப்பான மருந்தைக் கொடுக்கிறாள். குழந்தை தாயை அடிக்கிறது. தாயும் கூட மருந்தை குடிக்க வைப்பதற்கு ஒரு அறை கொடுக்கிறாள். இது வெறுப்பின் காரணத்தினால் அல்ல; தாய் அன்பின் காரணமாக. அதில் குழந்தையின் நன்மைக்காக என்ற எண்ணமே மேலோங்கி உள்ளது. அது போலவே பொது அமைப்புகளில் நமக்கு விரோதம் செய்பவர்கள் கூட, தற்போது அவர்கள் தவறான எண்ணங்களுக்கு அடிமையாகி இருக்கலாம். எதிர்காலத்தில், அவர்களும் நமது கார்யகர்த்தர்களே ஆவர்; இந்த எண்ணம் நமது மனத்தில் இருக்கவேண்டும்.

தொடரும்…

கார்யகர்த்தா – தத்தோபந்த் டெங்கடிஜி -57

57. பிற துறைகளில் கார்யகர்த்தா பற்றிய விளக்கம்

பிற துறைகளில் செல்லக்கூடிய நமது ஸ்வயம்சேவக கார்யகர்த்தரின் விளக்கத்தை சரியான முறையில் சொல்வது எளிதான காரியம் அல்ல. அவ்வியாப்தி – லட்சியத்துடன் எந்த சம்பந்தம் இருக்க வேண்டுமோ அந்த சம்பந்தம் இல்லாதிருத்தல், அதிவியாப்தி – லட்சியத்திற்கும் மற்ற பிற சம்பந்தமும் வந்து சேர்தல் இந்த இரண்டு குறைகளும் ஏற்படக்கூடிய நிலை இதில் உள்ளது.

பொது வாழ்வில் பணிபுரியக் கூடிய ஒவ்வொரு தனிநபரையும் கார்யகர்த்தர் என்று பெயர் வழங்கப்படமுடியாது.

அமெரிக்காவில் டிரேட் யூனியனில் உள்ள பெரிய அதிகாரிகளுக்கும் முழு சம்பளம் வழங்கப்படுகிறது. முழுவதும் என்பதற்கு நமது கருத்து தகுதி, திறமை இவற்றின் படி தொழில் அமைப்புகளிலோ, வியாபார அமைப்புகளிலோ எவ்வளவு ஊதியம் கொடுக்கிறார்களோ, அவ்வளவு ஊதியம் யூனியன் மூலமாக கொடுக்கப்படுகிறது. மேலை நாடுகளில் பொதுநலத் தொண்டு செய்யும் சில அமைப்புகளில் கூட, அதை நடத்துபவர்களுக்கு இதே மாதிரி முழு ஊதியம் கொடுக்கப்படுகிறது. இந்த அதிகாரிகளை கார்யகர்த்தா என்று சொல்லமுடியாது. இவர்கள் ‘தொழிலாளர்கள்” – கார்யகர்த்தா அல்ல.

பாரதத்தில், அரசாங்க மானியத்துடன் நடைபெறும் அனேக பொது நலத்தொண்டு அமைப்புகள், தனது அதிகாரிகளுக்கு இதே விதமாக உழைப்பிற்கு கூலி அல்லது ஊதியம் கொடுக்கிறார்கள். இவர்கள் அந்த அமைப்புகளில் வேலை செய்வதை, தனது வாழ்க்கைப் பணி என்று எண்ணாமல், வயிற்று பிழைப்பிற்கான ஒரு கருவி என்றே கருதுகின்றனர். இவர்களும்’ தொழிலாளர்கள்’ தான்.

தானாகவே முன்வந்து, தனிமனிதனுடைய level of consciousness மனநிலை உயர்வடையும் போது தியாகம் ஒருவனது வாழ்வின் குறிக்கோள் ஆகிவிடுகிறது. மேலும், ஒரு சில உயர்ந்த லட்சியத்திற்காக தியாகம் என்ற உணர்வு மனதில் ஏற்படுகிறது. தியாகத்தை லட்சியமாகக் கொண்டு, தியாகத்திற்காகவே தூண்டுதல் பெறுவது, நமது கார்யகர்த்தர்களின் ஒரு இன்றியமையாத குணம் ஆகும். சமுதாயப் பணியை, கார்யகர்த்தா வாழ்நாள் முழுவதற்குமான பணியாக உணர்கிறான். ஆகவே சமூகத் தொண்டு செய்ததிற்காக, உழைப்பின் கூலியை ஊதியத்தைப் பெறுவது அவனுக்கு நல்லதாகத் தோன்றுவதில்லை. உயிர் வாழ்வதற்கான குறைந்தபட்சத் தேவைகள் மட்டுமே போதுமானது என்றே நினைக்கிறான். எதிர்கால வாழ்விற்காக வைப்பு நிதிக்கான எண்ணம் அவனுக்கு உண்டாவதில்லை. எதிர்பாராமல் ஏற்படும் கஷ்டங்களுக்காக நன்கு சேமித்து வைக்கப்பட்ட நிதியைப் பற்றிய எண்ணம் கூட ஏற்படுவதில்லை. அவன் தன்னையே சமுதாயத்திடம் முழுமையாக அர்ப்பணம் செய்து விடுகிறான். நான் இல்லை. நீயே. இதுவே அவனுடைய செயலாக ஆகிவிடுகிறது. ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் பிரசாரகர்கள் இந்த தரத்தில் தான் மதிப்பிடப்படுகிறார்கள். மற்ற துறைகளில் வேலை செய்யும் இப்படிப்பட்ட கார்யகர்த்தர்களும் இதே தரத்தினர் ஆவர்.

தன்னை ஆத்ம சமர்ப்பணம் செய்து கொண்டிருந்த போதிலும் சில கார்யகர்த்தர்கள் தவிர்க்க முடியாத காரணத்தினால் குடும்பப் பொறுப்பிலிருந்து விடுபட முடியாத நிலையில் இருக்கிறார்கள். வாழ்க்கையின் ஆதர்ஷ லட்சியத்தை பெறுவதற்கு முன் திருமணமானவர்களும், குடும்பத்தில் உள்ளவர்களும் வயிற்றுப் பிழைப்பிற்காக வேறு வழியில்லாத நிலைமையில் உள்ளவர்கள் இப்படிப்பட்டவர்களுக்கு ஓரளவிற்குப் பணத்தைப் பற்றி கவலைப் படவேண்டியிருக்கிறது. இருந்தும் கூட, தான் மேற்கொண்ட லட்சியத்தின் காரணமாக குறைந்த பட்ச ஊதியம் பெற்றுக் கொண்டு, தன்னுடைய பொது நலத்தொண்டை செய்வதற்கென அவன் முடிவு எடுக்கிறான். அவனுடைய ஊதியத் தொகை குடும்பத்திற்கு மிகக் குறைந்த அளவு தேவைக்காக இருக்கிறது. அவனுடைய தகுதி திறமையின் அடிப்படையில் அல்ல. தகுதி, பல மடங்கு ஊதியம் பெறும் சக்தி இருந்தும் கூட, தன்னுடைய செயலில் முழு ஈடுபாடுடன் இருக்கிறார். உடல் பராமரிப்பை பொறுத்து பெயரளவில் குறைந்த பட்ச ஊதியத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறான். அவன் கார்யகர்த்தாதான். ஏனெனில் அவனுடைய பணியில் உள்ள உணர்ச்சி தியாகம் தான். நாளின் 24 மணி நேரமும் மாதத்தின் 30 நாட்களும் அவன் தன்னுடைய பணியிலேயே மூழ்கிவிடுகிறான்.

மஸ்தூர் துறையிலிருந்து ஓர் உதாரணம் நினைவிற்கு வருகிறது. ஒரு தொழிற்சாலையில் நமது கார்யகர்த்தர்கள் மிகச் சிறந்த ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு மற்ற யூனியனைச் சேர்ந்தவர்கள் அவர்களுடைய தலைவருக்கு ஒரு கார் கொடுத்தனர். அப்பொழுது நமது பாரதீய மஸ்தூர் சங்க கார்யகர்த்தரிடம், அனேக ஊழியர்கள் வந்து உங்களுக்கும் கூட நாங்கள் கார் கொடுக்க விரும்புகிறோம் என்றுகூறினார்கள். அதற்கு நமது ‘கார்யகர்த்தாகாரா? அது வீணானது. எனக்கு வேண்டாம் என்று கூறினார். (கார் பேகார் ஹை) இந்தக் காரை யார் சுத்தம் செய்வார்கள். எனக்கு என்னுடைய சைக்கிளே போதுமானது’ என்றார்.

முழுநேரம் கொடுத்து பணி புரியும் நம் கார்யகர்த்தர்கள் பேட்டி கொடுத்தார்கள். அதில் அவர் எல்லோரிடமும் ”நமக்கு எவ்வளவு கிடைக்கிறதோ அதுவே போதுமானது” என்று கூறினார். இதிலேயே நம் வாழ்க்கை நடக்கிறது. அதிகம் தேவை இல்லை. அவர் தன்னுடைய அனுபவத்தை சொன்ன போது எவ்வளவு பரந்த எண்ணம் கொண்ட கார்யகர்த்தர்களுடன் வேலை செய்கிறோம் என்று நமக்கு தோன்றியது. இப்படிப்பட்ட மேலும் ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. தன்னுடைய முழு நேரத்தையும் கொடுத்து பணிபுரியும் கார்யகர்த்தா நம்மிடமிருந்து கொஞ்சம் பணம் பெற்று வந்தார். ஏதோ காரணத்தினால் அல்லது அவருடைய முயற்சியினால் பணம் பெற்றுக் கொள்ள வேண்டிய (தேவையற்ற நிலை அவருக்கு ஏற்பட்டது. அடுத்த மாதத்திலிருந்து, பாரதீய மஸ்தூர் சங்கத்திலிருந்து பணம் பெற்றுக் கொள்ளவேண்டிய தேவை இல்லை, என்று அவர் சொன்னார். முன்பு என்ன பணம் கொடுத்தோமோ மதுவே மிகக் குறைந்த பணம் தான். அதைக் குறித்து நமக்கே வெட்கமாக இருந்தது. இப்பொழுது அந்தப் பணம் கூட தேவையில்லை என்று அவரே சொல்கிறார். இது ஓர் உயர்ந்த எண்ணம் ஆகும்.

முன்பு கூறியது போல் நாம் வாழ்க்கை நடத்துதல், வாழ்க்கைத்தரம் பற்றிய எண்ணம் என்னவென்றால், உடலில் தோலும் எலும்பும் ஒட்டி இருப்பதற்காக (to put skin and bones together) எவ்வளக்கெவ்வளவு குறைந்த அளவு தேவையோ அவ்வளவுக்கு குறைவாக எடுத்துக் கொள்வதே ஆகும்.

பிற துறைகளிலும் கூட சங்க கார்யகர்த்தர்களைப் போலவே வேறு ஒரு குழு இருக்கிறது. அவர்கள் முழு நேரத்தையும் பணிக்காக கொடுப்பது இல்லை. தங்களது வாழ்க்கை நடத்துவதற்காக தொழில் அல்லது கூலி வலை செய்கிறார்கள். ஆனால் இதைச் செய்து கொண்டே சமூகபணிக்காக அதிகம் அதிகம் நேரத்தை கொடுக்கிறார்கள். அவர்கள் முழு சமூக சேவகர்கள் அல்லர் இது உண்மை . இருந்தாலும் அவர்களுக்கு கார்யகர்த்தா என்ற பெருமை கொடுக்க வேண்டும். ஏனெனில் குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டும், நமது பணியில் மனம் ஒன்றியிருப்பதும் கடினமான காரியம். அதைக் குறைத்து மதிப்பிட முடியாது. நாரத முனிவரை பற்றி ஒரு கதை வருகிறது. அவரது மனதில் தன்னுடைய கடவுள் பக்தி

Narada - Wikipedia

பற்றி மிகுந்த பெருமை இருந்தது. நாராயணா, நாராயணா, என்ற நாமத்தை அவர் இடைவிடாது ஜபித்து வந்தார். ஆகவே பகவான் அவருக்கு ஒரு சோதனை வைத்தார். ஒரு தட்டில் தண்ணீரை நிரப்பி அவர் கையில் கொடுத்தார். என்னை மூன்று முறை சுற்றி வா. ஆனால் நிபந்தனை என்னவென்றால் தட்டிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட தரையில் சிந்தக்கூடாது என்று சொன்னார். நாரதர் வலம் வர ஆரம்பித்தார். எல்லா கவனமும் அந்த நிபந்தனையின் மேல் இருந்தது. ஆகவே வாயிலிருந்து நாராயணா என்று சொல்வது நின்றுவிட்டது. மூன்று முறை சுற்றியபின் பகவான் கூறினார். இந்த நிபந்தனையை நிறைவேற்றுவதிலேயே நீ கவனம் செலுத்தினாய். பகவானின் பெயரைச் சொல்வதை மறந்து விட்டாய். உன்னைவிட, இந்த உலகமக்கள் பெருமளவில் என்னிடம் பக்தி செலுத்துகிறார்கள். ஏனெனில் குடும்பத்தின் எல்லா பொறுப்புகளையும் சமாளித்துக் கொண்டும், அவர்கள் என் பெயரையும், என் மீது உள்ள பக்தியையும் மறப்பது இல்லை. ஆகவே குடும்ப வாழ்க்கையில் இருக்கும் கார்யகர்த்தர்கள் கூட, நம் பார்வையில், அர்ப்பணிக்கப்பட்ட தரத்தினராக மதிக்கப்படுகிறார்கள்.

தொடரும்…

கார்யகர்த்தா – தத்தோபந்த் டெங்கடிஜி -56

56. பிற துறைகளில் மிகுந்த எச்சரிக்கை

தன்னை சமாளித்துக் கொள்வது என்ற விஷயம் மற்ற துறைகளில் பணிபுரியும் ஸ்வயம்சேவகர்களுக்கு மிகமிக அத்தியாவசியமாக உள்ளது.

சங்கப் பணியின் வளர்ச்சியில், சமுதாய வாழ்வின் எல்லா துறைகளிலும், சங்கத்திலிருந்து பெற்ற பண்புகளை விதைக்கும் பணியும் , சுய அதிகாரம் கொண்ட அமைப்புகளை ஏற்படுத்தி, நிலை நிறுத்தக்கூடிய வேலையை, பக்குவம் அடைந்த ஸ்வயம்சேவகர்கள் செய்ய வேண்டும். இது நமது எதிர்பார்ப்பாகும். சங்கப் பணியின் சூழ்நிலையில் நேரடியாக இருக்கும் கார்யகர்த்தர்கள், தனது நியதியையும் நடத்தையும் தூயதாக வைத்துக் கொள்வதில் அவ்வளவு கடினம் இல்லை. ஆனால் மற்ற துறையில் உள்ளவர்களுக்கு இவ்விஷயத்தில் கஷ்டம் அதிகமாக உள்ளது. மற்ற துறைகளில், தனிப்பட்ட பேராசையின் காரணமாக தற்கால களங்கம் நிறைந்த சூழ்நிலையில் 24 மணி நேரமும் கார்யகர்த்தா இருக்க வேண்டியுள்ளது. ஆகவே அப்படிப்பட்ட ஸ்வயம் சேவகர்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டியுள்ளது. மேலும் எப்போதும் தன்னை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

The 7 Habits of Highly Effective People
Stephen covey

ஸ்டீபன் கோவே என்ற இலக்கிய கர்த்தா கூறுகிறார்: ஆங்கில இலக்கியத்தில் “வெற்றி இலக்கியம்” success literature வரலாறு 200 ஆண்டு காலமாகும். அதை படிக்கும்போது அவருக்கு ஒரு வியப்பான விஷயம் ஏற்பட்டது. இந்த இலக்கியம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. 100 அல்லது 125 ஆண்டுகளுக்குரிய பகுதி, முதல் பாகம் ஆகும். அதற்கு அடுத்தது இரண்டாம் பாகம். முதல் பாகத்திற்கு அவர் ஒழுக்கத்தைப் பற்றிய நீதி character ethic என்று பெயரிட்டுள்ளார். அடுத்த பகுதியை தனிப்பட்ட குணநீதி’personality ethic என்று பெயரிட்டுள்ளார். ‘ஒழுக்கத்தைப் பற்றிய நீதி’ என்ற முதல்பாகம், பெருமை (how to becomegreat)எந்த முயற்சியால் பெறப்படுகிறது என்பதைக் கூறுகிறது.’ தனிப்பட்ட குணம் பற்றிய நீதி’ ‘How to appear great’ அதாவது பெருந்தன்மையை எவ்வாறு வெளிக்காட்டுவது என்பதைப் பற்றி கூறுகிறது. இது உண்மையான மேன்மையை பெறுவதற்கான முயற்சி அல்ல. மேன்மையை பகட்டாக வெளிக்காட்டுவதில் குறிப்பாக இருப்பது. இதை சீர்தூக்கிப் பார்த்து ஸ்டீபன் கோவே கூறுகிறார்: தனிப்பட்ட குண நீதியிலிருந்து personality ethic லிருந்து பெறக்கூடிய மேன்மையை, அவர் துச்சமாக மதிக்கிறார். இப்படிப்பட்ட மேன்மை நீண்டகாலம் நிலைத்து நிற்காது என்கிறார்.

17 Life Lessons from Benjamin Franklin On His 312th Birthday
பெஞ்ஜமின் ப்ராங்கிளின்

நான் அறிந்துகொண்ட வரையிலும், நினைவுள்ளதன் படியும் character ethic US மிகவும் சிறந்த பெரிய உதாரணம் பெஞ்ஜமின் ப்ராங்கிளின் அவர்களின் சுயவரலாறுதான். ஆனால் உண்மை என்னவென்றால், அவர் தன்னுடைய சுயவரலாற்றை எழுதவே இல்லை. அதற்குப் பதிலாக அவர் தன்னுடைய தினசரிக் குறிப்பேட்டில் தன்னைப் பற்றிய மனோ வளர்ச்சியை எழுதி வந்தார். இந்த வாரத்தில் அல்லது இந்த மாதத்தில் தன்னுடைய எந்த விதமான குற்றங்களை, குறைகளை தனிப்பட்ட முறையில் விலக்கிக் கொள்ள வேண்டியிருந்தது; மேலும் அதில் எவ்வளவு தூரம் வெற்றி கிடைத்துள்ளது; வரும் வாரத்தில் அல்லது மாதத்தில் இந்த நோக்கத்தில் என்னென்ன முயற்சிகள் செய்யவேண்டும்; இவையெல்லாம் தனது தினசரி நாட்குறிப்பில் தனது நினைவிற்காக எழுதி வந்தார். அவர் காலமான பிறகு இதே தினசரி நாட்குறிப்பு வாழ்க்கை சரிதமாக அச்சிடப்பட்டது. ஆகவே அதை மிகவும் நம்பிக்கைக்கு பாத்திரமான சுயவரலாறு என்று சொல்ல முடிகிறது. இந்த விஷயங்களை நான் ஏன் கூறினேன் என்றால், தற்கால சமுதாயத்தில் பல்வேறுபட்ட துறைகளில், personality ethicன் தாக்கம் அதிகமாக உள்ள தலைமையின் முன்னுதாரணமே, நிலைநாட்டப்பட்டுள்ளது.

ஆனால் பிற துறைகளுக்கு செல்லும் நமதுகார்யகர்த்தர்கள்’character ethic’ ஒழுக்கத்தைப் பற்றிய நீதியை சார்ந்து இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அதற்கு பிராங்கிளினின் உதாரணம் முன் மாதிரி ஆக இருக்கும். முக்கியமாக தற்காலத்தில் அரசியல் துறையில், குறுகிய காலத்தில், ஒரு சிறு எல்லைக்குட்பட்ட லட்சியத்தை (குறுகிய லட்சியம்) வைத்துக் கொள்கின்றனர். இதன் காரணமாக தலைவர்கள், விரைவிலேயே மாறுதலை ஏற்படுத்தும், ஆனால் நீண்டகாலத்திற்கு பயன்தரும், கண்ணோட்டத்தில், தீங்கு உண்டாக்கும் நடைமுறையை ஏற்றுக் கொள்வதென திட்டமிடுகின்றனர். இப்படிப்பட்ட, நடைமுறையில் ஏற்றுக்கொள்ள முடியாத, (image building) கவர்ச்சியை நிர்மாணிக்கக்கூடிய செயல்களை ஏற்று நடத்தும் fashion நாகரீகம் அரசியலில் வழக்கமாகிவிட்டது. இதுவே, மற்ற துறைகளிலும் கண்மூடித் தனமாக கடைபிடிக்கப்படுகிறது. மற்ற துறைகளுக்கு சென்றுள்ள, நம்முடைய ஸ்வயம்சேவகர்களில் சில கார்யகர்த்தர்களின் மனதிலும், இத்தகைய மனப்பாங்கு ஏற்படக்கூடும். இந்த கவர்ச்சி image building நிர்மாணம், சங்கத்தின் பிற்கால நலன் என்ற பார்வையில் பார்த்தால் தீங்கு விளைவிக்கக் கூடியதாகத்தான் இருக்கிறது. அது போலவே ஏதாவது இரண்டு, நான்கு கார்யகர்த்தர்களின் அல்லது தலைவர்களுடய கவர்ச்சி நிர்மாண முயற்சியானது, கேலிக்கூத்தாகவும், குழந்தைத் தனமாகவும் தான் ஆகிறது. கவர்ச்சித் தோற்றத்தை நிர்மாணிப்பதின் பொருள், முதல் தோற்றம் அவ்வளவு நன்றாக இல்லை என்பதுதான். ஏனெனில் சுபாவத்தில் அழகாக உள்ள மனிதனுக்கு, வெளி அழகு அலங்காரம் அவசியம் இல்லை.

“ஸ்வபாவ சுந்தரம் வஸ்து:

ந ஸம்ஸ்காரம் அபேக்ஷயதே”

சாகுந்தலத்தில் கவி குலகுரு காளிதாசர் துஷ்யந்தனின் வாயிலாக சகுந்தலையின் ஜோடனை இல்லாத இயற்கையான அழகின் ரகசியத்தை அழகாக வெகுவாக வர்ணித்துள்ளார். முடிவில் கூறுகிறார்:

கிமிவஹி மதுராணாம் மண்டனம்

நா க்ருதிநாம் (சாகுந்தலம் 1-170

அதாவது இயற்கையிலேயே அழகு இருந்தால் அவளுக்கு எல்லாப் பொருளும் அழகு தரும். இந்த முறையில் பார்த்தால், கவர்ச்சி நிர்மாணிக்கும் முயற்சி, தலைவர்களின் இயற்கையான தகுதிக்கு, ஒரு கடுமையான விளக்க உரையே ஆகும்.

இதைவிட முக்கியமான, விஷயம் என்னவென்றால், உளவியல் விஞ்ஞானப்படி, கவர்ச்சி நிர்மாணிக்கும் செயலால் image buildingகால் அமைப்பின் ஆரோக்கியமான வளர்ச்சியில் பல விதமான தடைகள் உண்டாகக் கூடும். அதன் காரணமாக, கூட்டுத் தலைமையில் வளர்ச்சி ஏற்படாது. யாரோ ஒருவனை மிகவும் பெரியவனாக ஆக்குவதின் பொருள் இதுதான். அதாவது மற்றவர்களை செயற்கை முறையில் சிறுமைப்படுத்துவது. அமைப்பின் உள் சூழ்நிலையிலும் கூட, இதன் தாக்கம் ஏற்படுகிறது. வெளிப்படையான, சமமான குடும்ப சூழ்நிலையை உண்டாக்க இயலாது. கவர்ச்சி நிர்மாணிப்பதின் காரணமாக இப்படிப்பட்ட தலைவர்களின் மூளை கெட்டுப் போவதற்கான வாய்ப்பும் அதிகமாகி விடுகிறது. அதன் பலனாக அமைப்பின் செயல்முறை, முடிவெடுக்கும் வழிமுறைகள் குணம் சார்ந்த (value based) ஜனநாயக முறையிலான அமைப்பு இவற்றிற்கு மாறாக, சாமந்தஷாஹி, (fuedalism) ஆவதற்கு வழி வகுக்கிறது. சாமந்தஷாஹியின் எல்லா குறைகளும் அமைப்பிற்குள் மெள்ள மெள்ள நுழைந்து விடுகிறது. அதன் பலனாக முன்னர் கூறியது போல் தனிப்பட்ட நபர் எந்த அளவு பெரியவனாகிறானோ, அந்த அளவு அமைப்பின் பலம் குறைந்து, திறமையற்றதாகி விடுகிறது. கூட்டுத் தலைமை அல்லது தலைமையின் இரண்டாம் வரிசையின் வளர்ச்சியில் தடங்கல் ஏற்படுகிறது. அமைப்பின் நெடு நோக்க நலன் என்ற கண்ணோட்டத்தில் தேவையான கூட்டுத் தலைமை, இரண்டாம் நிலை கார்யகர்த்தா தயார் செய்வதில் முறைப்படியான பரம்பரையான வளர்ச்சி ஆகியவற்றில் தடை உண்டாகி விடுகிறது.

தொடரும்…

கார்யகர்த்தா – தத்தோபந்த் டெங்கடிஜி -55

55. சுயநலத்தினால் ஏற்படும் தவறான மனப்பாங்கின் மீது எச்சரிக்கை

இத்தகைய கார்யகர்த்தா அமைப்பில் தனக்கு ஒரு தனி அந்தஸ்து (position) ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறான். அவர்களில் சிலர் தனது சொந்த சுயநலத்தை பூர்த்தி செய்யும் நோக்கத்துடனேயே அமைப்பில் வேலை செய்து கொண்டிருக்கலாம். இப்படியும் சில கார்யகர்த்தர்கள் இருக்கிறார்கள். சுயநலத்தின் காரணமாகவேசில தவறான பழக்கத்தின் தாக்கமும் அவர்கள் மனதில் இருக்கும். இப்படிப்பட்ட தவறான மனப்பாங்கு பிறவியிலேயே உண்டாகியிருக்கும். அல்லது தலைக் கனத்துடன் கூடிய நடவடிக்கையின் மூலம் அது வெளியாகும். ஒரு சுபாஷிதம் இப்படிப்பட்ட தவறான மனப்பாங்கு உள்ளவர்களைப் பற்றிக் கூறுகிறது.

“வித்யா விவாதாய தனம் மதாய

பலம் பரே ஷாம் பரபீடனாய

க்கலஸ்ய ஸாதோர் விபரீதமேதத்

ஞானாய தானாய ச ரக்ஷணாய”

அதாவது கெட்ட மனிதன் கல்வி, செல்வம், பலம் இவற்றை முறையே விவாதத்திற்கு வெறித்தனத்திற்கு, பிறரை அடித்து துன்புறுத்துவதற்கு பயன்படுத்துகிறான். ஆனால் சாதுக்கள் – சான்றோர்கள் அறிவு, தானம், காப்பாற்றுதல் இவற்றுக்காக உபயோகிக்கிறார்கள்.

ஆனால் பிறவியிலேயே நூற்றுக்கு நூறு கெட்ட மனிதனாகவோ அல்லது நல்ல மனிதனாகவோ உள்ளவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமாகவே உள்ளது. பெரும்பாலானோர் இவை இரண்டிற்கு இடையிலேயே இருக்கின்றனர்.

பிறவியிலேயே, பெருமளவில், கெட்ட குணமுள்ளவனாக இருந்தால் அப்படிப்பட்டவர்களை சீர் செய்வது யாராலும் முடியாது. வெங்காயத்தை அத்தரினால் அபிஷேகம் செய்தாலும் அதன் குணம் போகாது. பாகற்காயை நெய் சர்க்கரையில் கரைத்து வைத்தாலும் தன்னுடைய குணத்தை அது விடுவதில்லை. இப்படிப்பட்டவர்களுடைய சேவையிலிருந்தும், பங்களிப்பிலிருந்தும் அமைப்பை காப்பாற்றிக் கொள்வது நல்லது. இந்த எச்சரிக்கை எப்போதும் விழிப்புடன் கடைபிடிக்கப்படுகிறது என்பது அல்ல. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இப்படிப்பட்ட அசாதாரணமான தீய மனப்பாங்கு உள்ள அவர்களில், சிலரிடம், அசாதாரணமான செயல்திறனும் கூட இருக்கும். இப்படிப்பட்ட, செயல்திறமை படைத்த, தனித்தன்மை படைத்த நபர், பெரிய ஆசைகளுடன் இருப்பதால், நிறைய வேலைகள் செய்வான். அவனுடைய செயல்திறமையினால் அமைப்பினுடைய கடினமான காரியம் கூட வெற்றியடைந்து விடும். அதன் காரணமாக அமைப்பில் அவன் கட்டாயம் தேவைப்படுபவன் ஆகிறான். அவனுடைய செயலுக்கு, பாராட்டுதலும் கிடைக்கிறது. திறமையான செயல் திறன் உள்ளவனும், செயலின் திறமையும் உண்மையில் போற்றக்கூடியவை. ஆனால் அந்த செயல்பாட்டிற்கும், செயலை பரிபாலிப்பதிலும் பின்னணியில் உள்ள வேலையின் நோக்கம் தனிநபரின் அந்தஸ்து காரணமாக இருந்தால், பிற்காலத்தில் அந்த மனிதனால் குழப்பங்கள் ஏற்பட்டு விடுகின்றன. வேலையிலும் பெரிய அடி ஏற்படுகிறது.மேலும் இதற்கிடையில், வளர்ந்துள்ள தனது தன்னம்பிக்கையினால் மற்றவர்களை அவன் மட்டரகமாகவும், தவிர்க்க ப்பட முடியாதவன் (indispensable) ஆகவும் நினைக்கிறான். இன்னொரு பக்கம், அவனை சந்திப்பவர்கள், இக்கார்யகர்த்தா உயர்ந்த பதவியில் இருப்பதால், சாதாரண ஊழியர்களும், புதிய கார்யகர்த்தர்களும், அவனுக்கு மிகுந்த மதிப்பும் கொடுக்கிறார்கள். ஏனெனில் இவனுடைய குற்றம், அவர்களுக்கு உடனே தெரிவதில்லை. ஆகவே அவனுக்கு எதிராக, அமைப்பு நடவடிக்கை எடுப்பதில், இவர்கள் விருப்பம் கொள்வதில்லை. அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. சாத்வீக குணமுள்ள கார்யகர்த்தாதனிப்பட்ட எண்ணம் உடையவராக இல்லாததின் காரணமாக, தன்னுடைய தனி அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்வதில்லை. மேலும், அவரது வேலையின் தாக்கமும் காலந்தாழ்ந்தே தெரிகிறது. ஏனெனில் தன்னுடைய செயல்பாட்டிற்கு புகழ் ஏற்படும் சூழ்நிலையை அவர் ஏற்படுத்துவதில்லை. ஆனால், அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் கணிப்பு, சற்று முன் பின் இருந்தால் இந்த கார்யகர்த்தா பின் தள்ளப்பட்டு விடுகிறார். அப்போது அமைப்பின் தலைமை கூட தன்னுடைய இயலாத தன்மையை வெளியிட்டு பின் வருமாறு கூறும்: “சாத்வீக கார்யகர்த்தர்கள், மிகுந்த திறமையுடன் பணிபுரிய வராவிட்டால் நாம் என்ன செய்யமுடியும். நமக்கோ, வேலை விரைவாக முடியவேண்டும். ஆகவே யார் முன்னால் வருகிறார்களோ அவர்களை உபயோகித்துக் கொள்வோம்”. தனி எண்ணம் கொண்ட கார்யகர்த்தாவினுடைய, தீங்கான செயல்பாட்டை அறிந்த பிறகும் கூட, அவனுடைய செயல்பாட்டிலிருந்து லாபத்தை பெறுவோம்; பிறகு அவனுடைய தீச்செயலால், அமைப்பிற்கு தவறான தாக்கம் ஏற்படாத வகையில், பின்னர் சிந்தனை செய்வோம், என எண்ணலாம். ஆனால், அவசரத்துடன் மேற்கொண்ட தவறுகளை பிற்காலத்தில் சரி செய்து கொள்வது என்பது கடினம் மட்டும் அல்ல. தீர்க்கவே முடியாது. ஆகவே தீய எண்ணம் கொண்ட மக்களின் செயல்பாட்டினால் உண்டாகும் லாபத்தை பெறும் ஆசையை, துவக்கத்திலேயே தடுத்துவிடவேண்டும். இப்படிப்பட்ட தனிநபர் வாதம் கொண்டவர் மனதில் தீயஎண்ணம் உள்ளது என தெரியவந்தால், அந்த கார்யகர்த்தரை, உங்களுக்கு அவர்மீது எவ்வளவுதான் நல்ல உறவு இருந்தாலும், அவருக்குத் தகுந்த இடத்தை காட்டுவதில் தாமதம் செய்யக்கூடாது. Procrastination steals not only Time but also organisational health இதை நாம் எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். அதாவது இப்படி கடுமையான முடிவு எடுப்பதில் காலதாமதம் செய்தால், நாம் நேரத்தை மட்டும் இழக்கவில்லை . மேலும் அமைப்பின் நலனும், பிடுங்கிச் செல்லப்படுகிறது.

Nobody is indispensable. ‘எவரும் தவிர்க்க முடியாதவர்கள் அல்ல’ பான்று ப.பூ.குருஜி சொல்லியிருக்கிறார். தன்னை ஒரு அத்தியாவசிய மானவர் என்று எண்ணாமல், தனக்கு பதிலாக, தன்னை விட சிறமைசாலியை உருவாக்க முயற்சிப்பவர்தான் சரியான தலைமை பொறுப்பாளர் ஆவார்.

இதிலிருந்துதான், நமது கூட்டுத் தலைமை பற்றிய கற்பனை நனவாகிறது.

கார்யகர்த்தரின் தவறுகள் சம்பந்தமாக கொடுத்த குறிப்புகளிலிருந்து, இந்த விவரம், நமது கவனத்திற்கு வருகிறது. ஏதாவது ஒரு அமைப்போ அல்லது ஏற்பாடோ கெட்டு விட்டால், அதில் சீர்திருத்தம் செய்வது, மனிதனின் மனதில் சீர்திருத்தம் கொண்டுவருவது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினமானது அல்ல. ஆகவே, இந்த அனைத்து சந்தர்ப்பங்களையும், இவ்விஷயம் சம்பந்தப்பட்ட எல்லா பரிமாணங்களையும் மனதில் கொண்டு, கார்யகர்த்தா, அதிலும் முக்கியமாக இலைமைப் பொறுப்பில் உள்ள கார்யகர்த்தா, இவற்றை மிகவும் கவனமாக மனதில் பதிய வைத்துக் கொண்டு முதலில் தன்னை நிர்வகித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பிறகு மற்ற கார்யகர்த்தர்களையும் நவகிக்க வேண்டியது அவசியமாகும்.

தொடரும்…