பாசம் வைப்பது தவறா?

பாசம் வைப்பது தவறா?

*”பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே”…!!*

சிவ புராணத்தில் மாணிக்கவாசகர் ‘பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே’ என்று சிவனைத் துதிக்கிறார்.

பாசம் வைப்பது தவறா? பாசத்தை ஏன் அறுக்க வேண்டும்?

பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ...
மாணிக்கவாசகர்

இதனைப் பற்றி சிறிது சிந்திக்கலாம்.

மனிதன் மற்றவர்களிடம் பாசம் வைப்பதன் காரணம் அவர்களிடமிருந்து ஏதேனும் கிடைக்கும் என்பதால் தான்.

சுயநலத்தினால் தான் பாசம் என்ற மோகம் ஏற்படுகிறது.

அதே சமயம் அந்த மனிதரின் தொடர்பு துன்பம் தருவதாகவோ, நம் மகிழ்ச்சிக்கு தடையாகவோ இருந்து விட்டால் மனதில் அவர் மீது வெறுப்பு ஏற்பட்டு விடுகிறது.

பிறகு அவரிடமிருந்து விலகிச் செல்கிறான்.

அவன் எனக்குரியவன்; அவனால் எனக்கு உதவி கிடைக்கும் என்று நினைக்கும் போது பாசம் வளர்கிறது.

தனக்குரியவர்களாகவும், உற்றார், உறவினர் என பாசத்தை வளர்கிறான். ஆனால் உண்மை என்ன?.

தன்னுடைய தேகமே தன்னை விட்டு போய்விடும் எனும் போது அடுத்தவர் மேல் வைக்கும் பாசம் எவ்வகையில் உண்மையாகும்?.

அப்போது உறவுகள் பொய்யா? என்ற கேள்வி எழலாம்.

பாசத்தை அடிப்படையாகக் கொண்ட உறவுகள் பொய்யே தவிர அன்பினால் தோன்றிய உறவு உண்மையானது.

அன்பினால் பிணைக்கப்பட்ட உறவு உன்னதமானது.

பாசம் என்பது சுயநலமே தவிர அன்பு என்பது சுயநலமற்றது.

பாசம் என்பது அன்பாக பரிமளிக்க வேண்டும்.

உதாரணமாக தாய் என்பது பாசம். தாய்மை என்பது அன்பு.

பகவான் இராமகிருஷ்ணர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் இதற்கு நல்ல உதாரணமாக இருக்கும்.

பகவான் இராமகிருஷ்ணரை தரிசிக்க வந்த ஒரு பெண் அவரைக் கண்டவுடன் கதறி அழத் தொடங்கினாள்.

Sri Ramakrishna Vijayam - Chennaimath.Org
பகவான் இராமகிருஷ்ணர்

பிறகு தன் துயரை அவரிடம் வெளியிட்டாள்.

அவளுக்குப் பிறந்த பல குழந்தைகளை இழந்து கடைசியாக இருந்த ஒரே மகனை பாசத்தைக் கொட்டி வளர்த்தாள்.

அந்த மகனும் பட்டாளத்தில் சேர்ந்து ஒரு போரில் இறந்துவிட மீளாத் துயருக்கு ஆளான அந்தப் பெண் தன் மன வேதனைகளை பகவான் இராமகிருஷ்ணர் முன் கொட்டினாள்.

அவள் அழுது ஒயும் வரை பொறுமையாக இருந்த பகவான் இராமகிருஷ்ணர் அந்த பெண்ணைப் பார்த்து மிகுந்த வாஞ்சையுடன் ‘அம்மா’ என்று அழைத்தார்.

அதுவரை பாசத்தினால் துயருக்கு ஆளாகியிருந்த அந்த பெண்ணிற்கு பகவான் இராம கிருஷ்ணர் ‘அம்மா’ என்று அழைத்ததும் தாய்மை உணர்வு ஊற்றெடுத்து ஆறாய் பெருகியது.

இந்த உலகில் உள்ள அனைவரும் தனது குழந்தைகள் என்ற உணர்வு ஏற்பட்டது.

தாய்மை உணர்வு என்ற அன்பு வெள்ளத்தில் அந்த பெண்ணின் துயரங்கள் யாவும் அடித்துச் செல்லப்பட்டு கானாமல் போயிற்று.

தாய்மை என்பது பெண்ணுக்கு மட்டும் சொந்தமானதல்ல.

அது ஆணுக்கும் பொதுவான சொல்.

அதனால்தான் இறைவனை தாயும் ஆனவர் என்று குறிப்பிடுகிறோம்.

பாசம் என்பது தேங்கியிருக்கும் நீரைப் போன்றது.

அன்பு என்பது பிரவாகம் போன்றது.

ஒரு நதியில் நீரோட்டம் இல்லாதபோது தண்ணீர் ஆங்காங்கே தேங்கியிருக்கும்.

அதனை குட்டை என்று அழைப்பார்கள்.

ஆனால் மீண்டும் நதி பெருக்கெடுத்து ஒடும்போது தேங்கியிருக்கும் தண்ணீரும் பிரவாகத்தில் கலந்து தன் இயல்பை மாற்றிக் கொள்ளும்.

அன்பு என்பதில் பாசமும் உண்டு. ஆனால் அது ஒரு இடத்தில் தேங்கி நின்றுவிடாது.

ஒரு நதிக்கரையில் வாழும் அனைத்து மக்களும் அந்த நதியால் பயனை அடைவதைப் போல உள்ளத்தில் அன்பு ஊற்றெடுக்கும் ஒருவரால் இந்த உலகமே பயனை அடையும்.

ஒரு நதியின் நோக்கம் பரந்து விரிந்த கடலில் சங்கமம் ஆவதைப் போல அன்பின் நோக்கமும் அன்பே உருவான கடலைப் போன்ற இறைவனை சென்று சேர்வதுதான்.

பாசம் என்ற பற்றை அறுத்து நம்மை அன்பு மயமாக மாற்றுபவர் ஈசன்.

*அன்பு வேறு சிவம் வேறல்ல.*

அன்பே சிவம்!!

”அன்பு சிவம் இரண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமென்று ஆரும் அறிகிலார்
அன்பே சிவமென்று ஆரும் அறிந்த பின்
அன்பே சிவமென்று அமர்ந்திருந்தாரே. ”

– திருமூலர்

*”ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்”*

கடவுளைக் கண்ணால் காண முடியுமா….?

கடவுளைக் கண்ணால் காண முடியுமா….?

Thirumuruga Kripananda Variyar swamigal - Photos | Facebook

திருமுருக கிருபானந்த வாரியார்” சொன்ன குட்டிக்கதை…..!!

கடவுளைக் கண்ணால் காண முடியுமா….?”

“உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ….,
ஒரு கேள்வி, தம்பீ……!

இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா…?”

எனக்கென்ன கண் இல்லையா…….?
இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.” …!!

“தம்பீ……!

கண் இருந்தால் மட்டும் போதாது……!!
கண்ணில் ஒளியிருக்க வேண்டும்……!!
காது இருந்தால் மட்டும் போதுமா…..?
காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும்…..!!
அறிவு இருந்தால் மட்டும் போதாது…….!!
அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருக்க வேண்டும்…!!
உடம்பை நீ பார்க்கின்றாய்….!!
இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா….?”

“ஆம். நன்றாகத் தெரிகின்றது.”

“அப்பா…! அவசரப்படாதே…..!!
எல்லாம் தெரிகின்றதா….?”

“என்ன ஐயா….!
தெரிகின்றது…, தெரிகின்றது…, என்று எத்தனை முறை கூறுவது….?
எல்லாம்தான் தெரிகின்றது….?”

“அப்பா….!
எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா…?”

“ஆம்! தெரிகின்றன.”…..!!

“முழுவதும் தெரிகின்றதா…?”

அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில்,
“முழுவதும் தெரிகின்றது” என்றான்….!!

“தம்பீ…!
உன் உடம்பின் பின்புறம் தெரிகின்றதா….?”

மாணவன் விழித்தான்.
“ஐயா…! பின்புறம் தெரியவில்லை.” “என்றான்.

தம்பீ…! முதலில் தெரிகின்றது.. தெரிகின்றது.. என்று பலமுறை சொன்னாய்….!!
இப்போது பின்புறம் தெரியவில்லை என்கின்றாயே….!!
சரி, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா…?”

“முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.’…!!

நிதானித்துக் கூறு….!!.”

“எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன்….!!
எல்லாம் தெரிகின்றது.’…!!’

“தம்பீ…! முன்புறத்தின் முக்கியமான, ” முகம் தெரிகின்றதா”…..?

மாணவன் துணுக்குற்றான்.

பின்பு தணிந்த குரலில் பணிந்த உடம்புடன்,
“ஐயனே…! முகம் தெரியவில்லை….!” என்றான்.

“குழந்தாய்…!
இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை…..!!
முன்புறம் முகம் தெரியவில்லை……!!
நீ இந்த உடம்பில் சிறிது தான் கண்டிருக்கிறாய்…..!!
இருப்பினும் கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய்….!!
அன்பனே…!
இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால்,
இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.” …!!
இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு,
இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவது போல்,
ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.”

ஒரு கண்ணாடி…..
திருவருள்….!!

மற்றொன்று….
குருவருள்…….!!

திருவருள், குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால்,
“ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்”….!!
“தம்பீ…..!
“திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும்”……,
அதனைக் “குருவருள் மூலமே பெறமுடியும்”…..!!
” திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.”…..!!!

அந்த மாணவன் தன் தவறை உணர்ந்து அவரின் காலில் விழுந்தான்…..!

கதை – சமயோசி தமாக செயல்படுவது தான் வெற்றிக்கு வழி

கதை

சமயோசி தமாக செயல்படுவது தான் வெற்றிக்கு வழி

ஒரு பெரிய நாட்டின் மன்னன் தனது
நாட்டின் எல்லைகளை விஸ்தரிக்கத் தொடர்ந்து போர் புரிந்து கொண்டிருந்தான் .

ஒரு நாள் இரவு… தொலைதேசத்தில் ஒரு ராணுவப்பாசறையில் தங்கியிருந்த மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது .

திடுக்கிட்டு எழுந்தான் .

காதில் இருந்த பூச்சியை எடுக்கமன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்

அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை

சில வீரர்களை அழைத்துக்கொண்டு தலைநகரத்திற்குத் திரும்பினான் மன்னன் .

ராஜவைத்தியரிடம் பிரச்னையைச் சொன்னான் .

அவரும் எவ்வளவோ பாடுபட்டார் .

தொலைதூரத்தில் இருந்து மூலிகைகள் வரவழைக்கப் பட்டன

மூலிகையைப் பிழிந்து சாறு எடுத்து மன்னனின் காதிற்குள் விட்டார்கள்.

எதற்கும் பலன் இல்லை .

மன்னனின் காதில் உள்ள பூச்சி பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள் ,யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை .

மன்னனின் காதிற்குள் அந்தப் பூச்சி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருந்ததால்,அவனால் நிம்மதியாக தூங்க முடியவில்லை

உணவு சாப்பிடுவது குறைந்து
மன்னன் தன் பொலிவு இழந்தான் .

ராஜ கம்பீரமாக உலா வந்து கொண்டிருந்தவன் ,
இப்போது பஞ்சத்தில் அடிபட்டவனைப்போல் காணப்பட்டான்

எந்த நேரமும் படுக்கையிலேயே இருந்தான் .

தன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பதாக உணர்ந்தான் .

பதினான்கே வயதான அவனுடைய மூத்த மகனுக்கு அவசர கதியில் வாள்பயிற்சி, குதிரையேற்றம் எல்லாம் கற்பிக்கப்பட்டது .

இந்த நேரத்தில் இமயமலையிலிருந்து ஒரு துறவி சீடர்கள் புடை சூழ நாட்டிற்கு வந்திருப்பதாக செய்திகள் வந்தன .

பட்டத்து ராணி அந்தத் துறவியைப் பார்க்க சென்று அவருடைய காலில் விழுந்து கதறினாள்.

தன் கணவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடினாள்

அரண்மனைக்கு வந்து சேர்ந்த துறவி
மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார் .

பின் சிறிதுநேரம் தியானத்தில் ஆழ்ந்தார்.

அன்று மாலை அரசனையும் அரசியையும் தனியாகச் சந்தித்துப் பேசினார்

“இது மிகவும் அபூர்வ வகை பூச்சி அரசே!

நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது .

இங்கிருந்து நூறு யோஜனை தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத்தான் இந்தப் பூச்சி கட்டுப்படும் .

இன்றே என் சீடர்களை அனுப்பி அந்த மூலிகையை கொண்டு வர செய்கிறேன்,அதன்பின் உங்கள் பிரச்னை முற்றிலுமாகத் தீர்ந்துவிடும்.” என்றார்.

அந்த மூலிகையை எப்படி இனம் கண்டுகொள்ள வேண்டும் என்று விளக்கிச் சொல்லி,தன் சீடர்களில் சிறந்தவர்கள் இருவரை அனுப்பி வைத்தார் துறவி

அவர்களுக்குக் குதிரையேற்றம் தெரியுமாதலால் அவர்கள் பயணத்திற்குச் சிறந்த அரபிக் குதிரைகளைக் கொடுத்து அனுப்பினான் மன்னன் .

கூடவே, அவர்கள் பாதுகாப்பிற்காகச் சில வாளேந்திய வீரர்களையும் அனுப்பி வைத்தான் .

மூன்றே வாரங்களில் சீடர்கள் மூலிகையுடன் வந்தார்கள்.

அது ‘ராஜ மூலிகை’ என்பதால்
அதை வைத்து ஒரு நாள் முழுவதும் பூஜை செய்யவேண்டும் என்று துறவி சொல்லி விட்டார் .

மறுநாள் காலை விடிவதற்கு முன்னால் ,பிரம்ம முகூர்த்த நேரத்தில் மன்னனின் காதில் அந்த மூலிகைச் சாறு அரைத்து ஊற்றப்பட்டது

அடுத்த சில நொடிகளில் செத்த பூச்சி வெளியில் வந்து விழுந்தது .

மன்னனிடம் அந்தப் பூச்சியைக் காட்டினார் துறவி .

துறவியின் கால்களில் விழுந்து வணங்கினான் மன்னன்.

சில நாட்கள் அரண்மனையில் தங்கியிருந்தார் துறவி

மன்னன்இப்போது நிம்மதியாகத் தூங்கினான் .

நன்றாக உண்டான்,பழைய பொலிவு திரும்பி விட்டது

துறவி விடை பெற்றுக்கொண்டார் .

அவருக்கும் அவரது சீடர்களுக்கும்
உரிய மரியாதை செய்து அனுப்பி வைத்தான் மன்னன்

அவர்கள் நாட்டு எல்லையைத் தாண்டியதும் ,துறவியின் சீடர்களில் ஒருவன் கேட்டான்

“”குருதேவா…!!! அந்த அற்புதமான மூலிகை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்…!!!”

மற்றொரு சீடனின் கேள்வி வேறு விதமாக இருந்தது .

“மூலிகையைவிட அந்தப் பூச்சி இன்னும் அற்புதமாகத் தோன்றுகிறது .

ஒரு மனிதனின் காதிற்குள் புகுந்து அத்தனை நாள் உயிருடன் இருந்து
அவனைப் பாடாய்ப் படுத்தி வைத்தது என்றால் ,அது மிகவும் விசேஷமான பூச்சியாக இருக்க வேண்டும்..

அதைப் பற்றிச் சொல்லுங்களேன் என்றான்

‘துறவி புன்னகை பூத்தார் !

“பூச்சி அத்தனை நாள் எங்கே இருந்தது என்று நினைக்கிறீர்கள்?

மன்னனின் செவிக்குள் .

அதுதான் இல்லை

மன்னனின் காதிற்குள் பூச்சி போனது உண்மையாக இருந்திருக்கலாம் .

போன சிறிது நேரத்திலேயே அது செத்திருக்கும் ,இல்லை வெளியே வந்திருக்கும்

அந்தச் சிறிது நேரத்தில்
அது மன்னனின் செவிகளுக்குள் ஒரு குறுகுறுப்பு உணர்வை ஏற்படுத்திவிட்டது .

அது மன்னனின் மனதில் அது குறுகுறுப்பு உணர்வை ஆழமாகப் பதிந்துவிட்டது

எனவே அந்தப் பூச்சிகாதுக்குள் உயிருடன் இருப்பதாகவே மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்

“குருதேவா அதை விளக்கிச் சொல்லி மன்னனை குணப்படுத்தியிருக்கலாமே…???”

மனோவியாதியை அப்படி எளிதாகக்குணப்படுத்திவிட முடியாது அப்பனே….!!!

பிரச்னை தீவிரமானது என்று மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான் .

அதனால் தான் நானும் சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன் .

தொலைதூரத்தில் இருந்து மூலிகை வர வேண்டும் என்று பொய் சொன்னேன் .

அந்த மூலிகை நம் ஊரில் சாதாரணமாக விளையும் திருநீற்று பச்சிலைதான் .

ஆனால் அதை யாரும் கவனிக்காமல் பார்த்துக் கொண்டேன்

பின் ஒருநாள் பூஜை செய்து
காலை இருட்டு நேரத்தில் மூலிகைச் சாற்றை மன்னனின் காதில் விட்டு
ஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக்காட்டினேன் .

மன்னன் நம்பி விட்டான்

அவன் நோயும் தீர்ந்தது.

சீடர்கள் வியப்புத் தாளாமல் தங்கள் குருவைப் பார்த்தார்கள்.

இன்று மனித இனத்தைப் பீடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையானவை
நம் மனங்களில் தான் இருக்கின்றன.

காதில் நுழைந்த பூச்சி செத்துவிட்டாலும், மனதில் நுழைந்தபூச்சிதான் நம்மைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது

பூச்சி காதில் இல்லை ,மனதில் இருக்கிறது

.”இது நகைச்சுவை அல்ல;

இது வாழ்வியல் கருத்தை நச்சென்று சொல்லும் விளக்கம் .

காதில் இல்லாத பூச்சிக்காகத் தன் உடல்நலத்தைக் கெடுத்துக் கொண்ட மன்னன் போல

இல்லாத பிரச்னையை, இருப்பதாக நினைத்துக்கொண்டு,நம்மில் பலபேர் தவித்துக் கொண்டிருக்கிறோம்!

(“கொரோனா, இல்லவே யில்லை”, என்று சொல்லவில்லை. அது கொடுக்கும் தொல்லையை விட,

“அதைப் பற்றி ஏற்படுத்தப் பட்டிருக்கிற பயமே”, அதிக தொல்லை கொடுக்கிது!

அவரவர்கள் ” கொரோனா தொற்றை” – “கொரோனாவை” அல்ல!
“தொற்றை”-
கட்டுப்படுத்துவதிலேயே “போட்டி போட்டுக் கொண்டு” – பந்தயத்தில் ஓடுவது போல், ஓடிக்கொண் டிருக்கிறார்கள்! ஆச்சர்யமாக இருக் கிறது!

இத்தனைக்கும் –

இது , “கொல்லும் நோய் அல்ல”! இதனால் பாதிக்கப் பட்டவர்களில் 80 சதவிகிதம் பேர் சாதாரண சிகிச்சையில் குணம் அடைகிறார்கள். 15 சதவீதம் பேருக்கு ஆக்ஸிஜன் தேவைப் படுகிறது, மற்றவர்களுக்கு தான் பிளாஸ்மா தெரபி முதலியவை செய்யவேண்டி வரும்!”, என்றெல்லாம் சொல்லப் பட்டிருக்கிறது!

“தொற்றை கண்டுபிடிப்பதில் காட்டும் .
முயற்சியை” விட

“எல்லோருக்கும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான முயற்சி”, அதிகமாக இருக்க வேண்டியது அவசியம் இல்லையா?

Immunity to be increased – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.

ஏழு கோடி பேருக்கு, பதினாலு கோடி மாஸ்க் கொடுப்பதை விட,

ஏழு கோடி பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளும் கப சுர சூரணமும் கொடுப்பது சிறந்தது!

மாஸ்க் கொடுப்து – நோய்க்கு பயப்படுவது – பயந்துகொண்டே இருக்க வேண்டியது தான்!

நோய் எதிர்ப்பு மருந்தைக் கொடுப்பது – நோயை (நம்மிடம் வருவதற்கு) – அஞ்சும்படி செய்வது!

இதில் எது சரி? நாம் , கொரோனாவிற்கு அஞ்சிக் கொண்டே யிருப்பதா?

அல்லது

கொரோனாவை, நம்மிடம் வருவதற்கு, அஞ்சும்படி செய்வதா?

( வெறுமே, எல்லோரும்சொல்வதைப் போல், இயந்திரத்தனமாக,
செயல்பட்டுக் கொண்டிருப்பதல்ல, சமயோசி தமாக செயல்படுவது தான் வெற்றிக்கு வழி)

உண்மை வெளிப்பட்டே தீரும்..

1960 களில், ஒரு பெண் பிரசவ வலியோடு…  சென்னை பெரிய ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்தார்கள்.. ஏசப்பா ஏசப்பா என்று ஒரே கூச்சலிட்டாள்  அந்தப் பெண்..

டாக்டர்கள் குழு சுற்றி நின்று ஏதேதோ செய்கிறார்கள்.. குழந்தை திரும்பவில்லை..
டாக்டர்கள் செய்வதறியாது திணறினர்..

அப்போதெல்லாம் உடனே ஆபரேஷன் செய்ய முடியாது.. டென்ஷன்..

கடைசியாக, வலி பொறுக்க முடியாமல், அந்த பெண் கதறிய காட்சி… எல்லோரும் கவலையை மறந்து வாய்விட்டு சிரிக்க வைத்தது..

ஆம், அந்த தாய்.. முருகா.. குலதெய்வமே காப்பாத்துன்னு கதறியபோது, குழந்தை பட்டென்று திரும்பி சுகப் பிரசவம் ஆகிவிட்டது…

டாக்டர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, ஒருவனுக்கு ஆபத்து வரும்போது, அவன் உண்மையான மனது வெளிப்பட்டுவிடுவதை நினைத்து சிரித்துக்கொண்டோம்..

பொள்ளாச்சி மருத்துவர் ஒருவர் தனது அனுபவத்தை தினமலர் வாசகர் கடிதத்தில் பகிர்ந்து கொண்டது..

படிப்போம்! பகிர்வோம்! தொடர்பும்… இணைப்பும்…

ஒரு இந்திய துறவியிடம் நியூயார்க் பத்திரிக்கையாளர் ஒருவா் பேட்டி எடுப்பதாக இருந்தது. திட்டமிட்டபடி பத்திரிக்கை நிரூபர் பேட்டியை ஆரம்பித்தார்.

நிரூபர் : ஐயா உங்களுடைய முந்தய சொற்பொழிவில் “தொடர்பு” மற்றும் “இணைப்பு” என்பது பற்றி பேசினீர்கள், அது உண்மையிலேயே மிகவும் குழப்பமாக இருந்தது. சற்று விளக்கி சொல்ல முடியுமா? என்றார்.

துறவி முன்முறுவலோடு நிரூபர் கேட்ட கேள்வியிலிருந்து விஷயத்தை திசைதிருப்புகின்ற விதமாக, அந்த நிரூபரிடம் கேள்வி கேட்டார்,

நீங்கள் நியூயார்கில்தான் வசிக்கிறீர்களா?

நிரூபர் : ஆம்.

துறவி : வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?

இந்த துறவி என் சொந்த வாழ்வைப் பற்றியும், தேவையற்ற கேள்விகளையும் கேட்டு தன்னுடைய கேள்விக்கு பதில் தருவதை தவிர்க்க முயற்சிக்கிறார், என்று நிரூபா் நினைத்தார், இருந்தாலும் துறவியின் கேள்விக்கு “என் தாயார் இறந்து விட்டார், தந்தையார் இருக்கிறார், மூன்று சகோதரா்கள் மற்றும் ஒரு சகோதரி இருக்கிறார், அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று பதிலளித்தார்

துறவி, முகத்திலே புன்னகையுடன், நீங்கள் உங்கள் தந்தையுடன் பேசுகிறீா்களா? என்று மீண்டும் கேட்டார்

இப்போது நி்ரூபா் சற்று எரிச்சலடைந்துவிட்டார்….

துறவி : கடைசியாக எப்போது அவரிடம் பேசினீா்கள்?

நிரூபர் : எரிச்சலை அடக்கிக்கொண்டு, “ஒரு மாதத்திற்கு முன்பு இருக்கலாம்” என்றார்.

துறவி :உங்களுடைய சகோதர சகோதரிகளை அடிக்கடி சந்திப்பதுண்டா? குடும்பமாக சந்தித்தது கடைசியாக எப்போது? என்றார்.

இப்போது அந்த நிரூபரின் நெற்றியில் வியர்வை தெரிந்தது.

இதைப் பார்த்தால் துறவிதான் நிரூபரை பேட்டி காண்பது போல இருந்தது.

நீண்ட பெருமூச்சுடன் நிரூபர் சொன்னார், “இரண்டு வருடங்களுக்கு முன் கிருஸ்துமஸ் சமயத்தில் சந்தித்தோம்” என்று.

துறவி : எல்லோரும் சேர்ந்து எத்தனை நாட்கள் இருந்தீர்கள்?

புருவத்தின் மீது வடிந்த வியர்வையை துடைத்தவாறே நிரூபர் “மூன்று நாள்” என்றார்.

துறவி :உங்களுடைய அப்பாவின் அருகில் அமர்ந்து, அவரோடு எவ்வளவு நேரம் கழித்தீர்கள்?

இப்போது நிரூபர் பதட்டத்துடனும் சங்கடத்துடனும் ஒரு காகிதத்தில் ஏதோ கிறுக்க ஆரம்பித்தார்…..

Image result for group dinner family  imagesதுறவி : எல்லோரும் ஒன்றாய் அமர்ந்து காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவை சாப்பிட்டீர்களா? அம்மா இறந்த பிறகு நாட்களை எப்படி கழிக்கிறீர்கள் என்று அப்பாவிடம் கேட்டீர்களா?

இப்போது நிரூபரின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் கீழே விழத் தொடங்கியது.

துறவி அந்த நிரூபரின் கைகளை பற்றியவாறு கூறினார், “சங்கடப்படாதீர்கள், மனம் உடைந்து போகாதீர்கள், கவலையும் கொள்ளாதீர்கள். தெரியாமல் உங்கள் மனதை நான் புண்படுத்தி இருந்தால் என்னை மன்னியுங்கள்…….ஆனால் இதுதான் நீங்கள் “தொடர்பு மற்றும் இணைப்பு” பற்றி கேட்ட கேள்விக்கான பதில். நீங்கள் உங்களுடைய அப்பாவுடன் தொடர்பில் இருக்கிறீர்கள் ஆனால் அவரோடு நீங்கள் இணைப்பில் இல்லை. நீங்கள் அவரோடு இணைக்கப்படவில்லை. இணைப்பு என்பது இதயத்துக்கும் இதயத்துக்கும் இடையே இருப்பது…….

ஒன்றாய் அமர்ந்து, உணவை பகிர்ந்து, ஒருவர்மீது ஒருவர் அக்கரை கொண்டு, தொட்டுக்கொண்டு, கைகுலுக்கி, கண்களை நேருக்கு நேர் பார்த்து, ஒன்றாய் சேர்ந்து , நேரத்தை செலவிடுவதுதான் இணைப்பு(connection). ……நீங்கள், உங்கள் சகோதர சகோதரிகளுடன் தொடர்பில்(contact) இருக்கிறீர்கள் ஆனால் நீங்கள் யாரும் இணைப்பில் இல்லை என்றார்.

இப்போது நிரூபர் கண்களை துடைத்துக்கொண்டு, “எனக்கு அருமையான மற்றும் மறக்க முடியாத பாடத்தை சொல்லித் தந்ததற்கு மிக்க நன்றி ஐயா” என்றார்.

இதுதான் இன்றைய வாழ்வின் நிஜமாக இருக்கிறது. வீட்டில் ஆகட்டும் அல்லது சமுதாயத்தில் ஆகட்டும் ஒவ்வொருவரும் நிறைய தொடர்பை வைத்திருக்கின்றனர் ஆனால் இணைப்பில் இருப்பதில்லை. எல்லோருமே அவரவர் சொந்த உலகில் மிகவும் பரபரப்பாக இருக்கின்றனர்……

நாம் இதுபோல வெறும் “தொடா்பை” பராமரிக்காமல், “இணைப்பில்” வாழ்வோமாக. நம்முடைய அன்புக்கு உரிய அனைவரோடும் அக்கரையோடும், அன்பை பகிா்ந்துகொள்வதற்காக நேரத்தை செலவழித்தும் வாழ்வோமாக.

படிப்போம்! பகிர்வோம்! தேவர் பெருமகனாரின் – சீறிய ஆயுதம்.

thevar-imagesஅபிராமம் பசும்பொன்னிற்கு அருகில் இருக்கும் கிராமம் –

வெளிநாடு வாழ் முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் கிராமம் –
பலர், வெளிநாடுகளில் இருந்ததால் வசதிக்கு குறைவில்லை –

அங்கே, புதன்கிழமை தோறும் சந்தை கூடுவது வழக்கம் –
பக்கத்து கிராமங்களில் வாழ்கின்ற ஏழைப் பெண்கள் வயிற்றுப் பிழைப்புக்காக –
பருத்திமார்களை கட்டுகளாக விற்க சிலரும் – கோழி, வாத்து, வெள்ளரிக்காய் , போன்ற பல பொருட்களை விற்பதற்காக வருவார்கள் –

வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்ல பல்வேறு ஊர்களிலிருந்து இளம் பெண்கள் பலரும் வருவதுமுண்டு –

இப்படி, விற்க, வாங்க வருவோரிடம் _
அந்த ஊர் முஸ்லிம் இளைஞர்கள் இரட்டை அர்த்த வார்த்தைகளால் கேலி செய்தும் தகாத நடவடிக்கைகளால் மானபங்கம் ஏற்படும்படியும் தொடர்ந்து நடந்து வந்தனர் –
அந்த ஊர் முஸ்லிம் பெரியவர்களும் இதைக் கண்டிக்காத நிலையில் –

அந்தப் பெண்கள் எல்லாம் பசும்பொன் தேவர் அவர்களிடம் நடந்த சம்பவங்களைச் சொல்லி கண்கலங்கினார்கள் –

பெற்ற தாயை ‘அம்மா’ என்று ஆசையோடு அழைக்கும் பாக்கியத்தை இழந்த பசும்பொன் தேவர் ஒட்டு மொத்த பெண்ணினத்தையும் தன் தாயாகப் பார்த்தவர் –

கோபமும், ஆத்திரமும் உள்ளுக்குள் கொழுந்துவிட ஒரு கணம் கண்களை இறுக மூடி பெருமூச்சால் உள்ளுக்குள் பற்றிய தீயைக் கட்டுப்படுத்திக்கொண்ட தேவர் பெருமகனார் கண்களைத் திறந்து பார்க்க எதிரே இருந்தோர் “அய்யா, ஒரு வார்த்தை சொல்லுங்க அவனுங்கள தட்டி தூக்கிட்டு வந்துடுறோம்” என்று சொன்னார்கள் –

இல்லப்பா, பாதிப்பை ஏற்படுத்துவங்க இந்து மதத்தை சேர்ந்த பசங்களா இருந்திருந்தா’. நம்ம பிரச்சினையை நாம தீர்த்துக்கிட்டோம்னு போய்டும் –
அவங்க முஸ்லிம் நாம கோபத்தை காட்டினா… ஒரு இந்து, முஸ்லீமை அடிச்சிட்டான்னு சொல்லுவாங்களே தவிர, செஞ்ச தப்புக்கு நியாயம் கேட்டதா சொல்ல மாட்டாங்க –
வேற மாதிரி கையாண்டாத்தான் சரியா இருக்கும் – என்று கூறினார் –

பள்ளிவாசல் பெரியவர்களுக்கு ஆள் அனுப்பி பாதிக்கப்பட்ட பெண்களையும் அனுப்பி, சம்பந்தப்பட்ட இளைஞர்களைக் கண்டித்துப் பரிகாரம் செய்யவும், இதற்குப் பிறகு இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறும் சொல்லி அனுப்பினார் தேவர் –

ஆனால், பள்ளிவாசல் பெரியவர்கள் அவர்களை கண்டிக்கவும் இல்லை கண்டுகொள்ளவும் இல்லை இதனால் இளைஞர்கள் மேலும் ஊக்கம் பெற்று மிகவும் மோசமாக நடக்க ஆரம்பித்தனர்-

அப்போதும் கூட தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, சாத்வீக நெறியில் காரியத்தைத் துரிதப்படுத்தும் வகையில் அபிராமம் கிராமத்தில் உள்ள இந்துக்கள் மகாசபையை உருவாக்கி, தானே அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பேற்று அறவழியில் அந்தப் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டார் –

முஸ்லிம்களின் விவசாய நிலங்களில் யாரும் வேலைக்குப் போகக்கூடாது என்றும், முஸ்லிம் கடைகளில் யாரும் பொருட்கள் வாங்கக் கூடாது என்றும் தீர்மானம் செய்யப்பட்டது –

கட்டுப்பாட்டோடு இந்தத் தீர்மானத்தை இந்துக்கள் அனைவரும் செயல்படுத்தியதால் இஸ்லாமியர்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர் –

ஆனால், அதற்குப் பின்னரும் புத்தி வராத இஸ்லாமியர்கள் வெள்ளையனுக்கு தந்திகள் அனுப்பினார்கள் –

சமூகக் கலவரத்தைத் தூண்டியதாக 107 வது செக்ஷன்படி வழக்கு தொடரப்பட்டது –

ஒரு வருடத்திற்கு மேலாக நீடித்த வழக்கில் –

இராமநாதபுரம் மாவட்ட நீதிபதி ஸ்ரீதர்மசன்,
அநீதியை எதிர்க்க சமூக ஒத்துழையாமையைச் சாத்வீக முறையில் நடத்துவது தவறில்லை – என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார் –

அதன் பின்னர் கூட அந்த ஒத்துழையாமைப் பேராட்டம் நீடித்ததும்,
இஸ்லாமியர்கள் தேவரைக் கொலை செய்ய முயன்றதும் வேறு வரலாற்று உண்மை –

இந்த பழைய வரலாறு இப்பொழுது எதற்கு என்றால் –

இன்று இஸ்லாமிய, கிறிஸ்துவ தீவிரவாதம் தமிழகத்தில் தலை விரித்து ஆடுகிறது –

போராட்டங்கள் என்ற பெயரில் வளர்ச்சித் திட்டங்களை கண்மூடித்தனமாக எதிர்த்து வருகின்றனர் –

மத சுதந்திரம் என்ற பெயரில் –
நமது பெருமைமிகு சம்ரதாயங்களை கிண்டல் செய்தும், புனைவுகளை கூறியும் இழிவுபடுத்தி வருகிறார்கள் –

இவர்களுக்கு பாடம் கத்துக் கொடுக்க –
அன்று தேவர் அவர்கள் கையில் எடுத்த ஆயுதத்தை நாம் இன்று கையில் எடுக்கும் நேரம் வந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன் –

அது ஒன்றும் மோசமான ஆயுதம் அல்ல –

அதன் பலத்திற்கு சமீபத்திய சான்றுகூட உள்ளது –

நானே, நேரடியாக பார்த்த சாட்சி –

அது –

1998-ல் இதே பழனியில் நடந்த ஒரு
சம்பவம்.-

அப்பொழுது நடந்த ஒரு விநாயகர் ஊர்வலத்தை மார்கெட் ரோட்டில் உள்ள பள்ளிவாசல் எதிரில் மறித்து கற்களை எறிந்து தகராறு செய்தார்கள், ஊர்வலம் தடைபட்டது –

அடுத்த நாள் முஸ்லிம் பெண் ஒருவர் இறந்த போது சடலத்தை எங்கள் மாரியம்மன் கோவில் முன்பாக கொன்டு செல்லக் கூடாது என்று கூறி இந்துக்கள் தகராறு செய்தனர் –

முஸ்லிம்கள் பினத்தை அங்கேயே போட்டுவிட்டு ஓடி விட்டனர், இறுதியில் காவல்துறை அடக்கம் செய்தது –

இதற்கடுத்து நடந்ததுதான் முக்கியமானது,
பழனி தேவஸ்தானம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது, –

அதாவது – பழனி மலைக்கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் கடை வைத்துள்ள இந்து அல்லாதவர்கள் எல்லாம் உடனடியாக இடத்தை காலி செய்ய வேண்டும் என்பது அது –

அடுத்த நாள் பழனி நகர முஸ்லிம் பரிபாலன சங்கத்தினர் எல்லாம் ஒட்டு மொத்தமாக சரனடைந்து ஒரு வாக்குறுதி கொடுத்தார்கள் –

அதாவது எப்பொழுதெல்லாம் விநாயகர் ஊர்வலம் பள்ளிவாசலைக் கடந்து செல்கிறதோ அப்பொழுதெல்லாம் முஸ்லிம்கள் சார்பில் மாலை மரியாதை அளிக்கப்படும் என்பது –

அது இன்று வரை தொடர்ந்து நடந்து வருகிறது –
இதைத்தான் மத நல்லினக்கம், இஸ்லாமியர்களின் பெருந்தன்மை என்றெல்லாம் அனைத்து பத்திரிக்கைகளும் எழுதி வருகின்றன-

உண்மையில் பழனி நகரில் 50% தேவஸ்தானத்திற்கு சொந்தமான கடைகளில் பிழைப்பு நடத்துபவர்கள் முஸ்லிம்கள் தான்,
படிப் பாதையில் உள்ள கடைகளிலும் இதே நிலைதான் –

எனவே,

இன்றும் கூட நாம் தேவர் பெருமகனாரின் சமுதாய ஒத்துழைப்பின்மை என்ற ஆயுதத்தை திடமாக கைகளில் எடுத்தால் –

இன்று நடக்கும் அத்துனை பிரச்சினைகளும் விரைவில் முடிவுக்கு வரும்.

நன்றி- வாட்ஸ்அப்

படிப்போம்! பகிர்வோம்! – சுட்ட நாக்கு

சுட்ட நாக்கு

diksha

குரு ஒருவருக்கு பேரழகியான ஒரு மகள் இருந்தாள், அதனால் அவளை திருமணம் முடிக்க பலர் போட்டி போட்டனர். அவர் தன் மகளை மனம் முடிக்க போட்டி போட்டவர்களிடம் ” நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். அதற்கு சரியான பதில் சொல்பவருக்கே எனது மகள்” என்று சொன்னார்.
மறுநாள் போட்டியாளர்கள் அனைவரும் குரு வீட்டில் கூடி இருந்தனர்.
குரு அவர்களைப் பார்த்து ” உலகிலே இனிமையான ஒரு பொருளை கொண்டு வாருங்கள்” என்று சொன்னார்.
மறுநாள் எல்லோரும் ஆளுக்கொரு பொருளை கொண்டு வந்தனர்.
ஒருவன் தேனைக் கொண்டுவந்தான். இன்னொருவன் கரும்பைக் கொண்டு வந்தான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு இன்னிமையான பொருளைக் கொண்டு வந்திருந்தனர்.
வரிசையில் கடைசியாக குருவின் ஒரு ஏழை சிஷ்யனும் நின்டிருந்தான்.
குரு அவனைப் பார்த்து நீயுமா என்று ஆச்சரியமாக கேட்டார்.சீடன் நான் உங்கள் மகளைக் காதலிக்கிறேன் என்று சொன்னான். குரு நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய் என்று கேட்டார்.
சீடன் தான் கொண்டு வந்திருந்த சிறிய பெட்டியை திறந்து காட்டினான்.
அதனுள் ஒரு ஆட்டின் நாக்கு இருந்தது.
குரு அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
குரு ‘என்ன இது எதற்காக இதை கொண்டு வந்தாய்” என்று கேட்டார்,
சீடன் ” குருவே நீங்கள் உலகிலேயே இனிமையான பொருளை கொண்டுவர சொன்னீர்கள். நாவை விட உலகில் சிறந்த பொருள் வேறு ஏது?
மனிதனுடைய நாவை கொண்டு வர முடியவில்லை. அதனால் தான் குறிஈடாக ஆட்டின் நாவை கொண்டுவந்தேன். நாவில் இருந்து தான் இனிமையான சொற்றகள் வருகின்றன. அதை சோகத்தில் இருப்பவன் கேட்டால் சந்தோசம் அடைகிறான். நோயாளி கேட்டால் குணம் அடைகிறான்.” என்றான்.
குரு “இதில் நீ வெற்றி அடைந்தாய். வாழ்த்துக்கள்” என்று சொன்னார்
சீடன் அடுத்த கேள்வி என்ன என்று கேட்டான்.
குரு ” உலகிலேயே கசப்பான ஒரு பொருளை கொண்டு வா” என்று சொன்னார்.மறுநாள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கசப்பான பொருளை கொண்டு வந்தனர். ஒருத்தன் வேப்பங்காயை கொண்டு வந்தான், இன்னொருவன் எட்டிக்காயை கொண்டு வந்தான். கடைசியாக சீடன் வந்தான். அவன் கையில் அதே பெட்டி. அவன் அதை திறந்து காட்டினான். அதே ஆட்டின் நாக்கு.
குரு ” என்ன விளையாடுகிறாயா? இனிமையான பொருளை கேட்டேன் நாவை கொண்டு வந்தாய். கசப்பான பொருளை கேட்டதற்கும் நாவை கொண்டு வந்து இருக்கிறாயே? என்ன அர்த்தம்?” என்று கோபமாக கேட்டார்/
சீடன் ” தீய சொற்களை பேசும் நாவை போல கசப்பான பொருள் உலகில் உண்டா? அதில் இருந்து வரும் சொற்களைக் கேட்டால் மகிழ்ச்சியாய் இருப்பவனும் துயரம் கொள்கிறான். நட்பாக இருப்பவனும் பகையாக மாறுகிறான். எனவே நாவு தான் உலகிலேயே கசப்பான பொருள்” என்று சொன்னான்.
சீடனின் அறிவைக் கண்டு வியர்ந்த குரு தான் மகளை அவனுக்கே மனம் முடித்துக் கொடுத்தார்.

*நாவு ஒரு அற்புத பொருள். சொர்கத்தின் திறவுகோலும் அது தான். நரகத்தின் வாசல்படியும் அது தான்*👅👅👅👅👅

படிப்போம்! பகிர்வோம்! – நமது சிறிய பிரச்சினைகள்

நமது சிறிய பிரச்சினைகள்

meditation-2214532__340புத்த துறவி ஒருவர் சொன்ன ஒரு அருமையான கதை

இதில் புதைந்துள்ள உண்மையை நாம் புரிந்து கொண்டு மனதில் நிறுத்தி விடவேண்டும். அதன் பிறகு நமது வாழ்கையின் மகிழ்ச்சியை குவிக்கிறோமோ இல்லையோ, துயங்களை கணிசமாக குறைக்கலாம்.

ஒரு பெரிய சக்ரவர்த்திக்கு ஓரே ஒரு மகள். அதாவது ராஜகுமாரி. இந்த சிறுமி விளையாடும் போது கண் ஒன்றில் மண் புகுந்தது. கண் சிவந்ததோடு, வீங்கவும் தொடங்கியது. போதாத குறைக்கு, சிறுமியோ தன் கண்ணை கசக்கியவாறு அழுதுவந்தாள். அரண்மனை மருத்துவர் வந்து பரிசோதித்தார்.

மருந்து தயாரித்து சிறுமியின் கண்ணில் இட முயற்சிக்கும் போது, இந்த சிறுமி ஒத்துழைக்கவில்லை. கண்ணை கசக்கியும் அழுதும் தொடர்ந்ததால் காயம் பெரியதானது.

அரசருக்கு தன் மகள் காயம் பெரிய வருத்தம் தந்தாலும் மகள் விருப்பத்தை மீறி கட்டாயப்படுத்துவதை மன்னர் விரும்பவில்லை.

அரண்மனை மருத்துவர் தனது இயலாமையை தெரிவித்து கழண்டு கொண்டார். சிறுமி அழுவதும் கண்களை கசக்குவதும் தொடர்ந்ததால் காயமும் எளிதாக ஆறுவதாக இல்லை.

இந்த செய்தியை அறிந்த பெரியவர் ஒருவர், மருத்துவரல்லாத ஒரு வைத்தியர். இந்த நோயை மருந்து இல்லாமலேயே குணப்படுத்த முன்வந்தார். அரசரும் ஒப்புக்கொண்டார்.

இதை தொடர்ந்து பெரியவர் சிறுமியை பரிசோதித்தார். உதட்டை பிதுக்கினார். பின், அரசரைக்கண்டு தனியாக பேச வேண்டுமே என்றார்.

சிறுமி உள்பட அனைவருக்கும் ஒரு சஸ்பென்ஸ். மன்னர் வந்தார். மன்னரிடம் ஏதேதோ பெரியவர் விளக்கினார்.

பின் சிறுமியும் கேட்கும்படியாக, அரசரிடம் விளக்கம் தந்தார். இந்த கண்ணில் உண்டான காயம் மிக விரைவில் குணமாகிவிடும் இது பெரிய விஷயமில்லை.

ஆனால், நான் கவலைப்படுவது அதற்காக இல்லை. இந்த பெண்ணுக்கு வால் ஒன்று முளைக்க இருக்கிறது. அது வளர்ந்தால், சுமார் முப்பது அடிவரை வளரும். அதன் பின் என்னாகுமோ எனக்கு தெரியவில்லை. அதுவும் பெரிய ஆபத்தில்லை.

சில நாட்களுக்கு கவனமாக இருக்க வேண்டும். சிறிது வால் தோன்றியதும் எனக்கு உடனடியாக அறிவித்து விடவேண்டும். அதற்கு மிக சிறந்த மருந்து ஒன்று உண்டு.

அதைக்கொண்டு வால் வளராமல் செய்துவிடலாம், எவ்வளவு விரைவில் எனக்கு தகவல் கிடைக்கிறதோ, அவ்வளவு வேகம் வால் பெரிதாகாமல் தடுக்கலாம் என்கிறார்.

வாலுள்ள பெண்ணா? சிறுமி, ராஜகுமாரிக்கு பயம் தோன்றியதில் வியப்பில்லை. படுக்கை அறையிலிருந்த இந்த சிறுமி வெளியே வரவில்லை. வால் முளைத்ததா என்று அறிவதிலேயே கவனமாக இருந்தாள்.

கண் வெகுவிரைவிலேயே குணமானது. மருத்துவரல்லாத வைத்தியர், சிறுமியை பரிசோதித்து, வால் முளைப்பதற்கான அறிகுறிகள் மறைந்து விட்டதாக கூறினார்.

எல்லாமே நல்லபடியாக முடிந்தது. அரசரும் பொன்னும் பொருளும் அள்ளித்தந்து வைத்தியரை பாராட்டினார். .

இந்த கதை சொல்லும் மிக முக்கிய வாழ்க்கைப்பாடங்கள் என்ன? மருத்துவர் வெற்றி அடைந்தது எப்படி ? இந்த பெண்ணின் கவனத்தை கண்ணிலிருந்து கழட்டி வால் முளைக்கும் என்று பயமுறுத்தி கதை ஒன்றை கட்டி, இல்லாத ஒன்றில் மாத்தி விட்டார் அல்லது திருப்பினார் இந்த வைத்தியர், கண் தானாக சரியாகியது.

இதை இருகோடுகள் தத்துவம் எனவும் சொல்லலாம். அதாவது சிறிய பிரச்சனைகளை ஒரு பெரிய பிரச்சனை இடம் தெரியாமல் அழித்துவிடும்.

நாம் தினம்தோரும் சந்திக்கும் எந்த ஒரு பிரச்சனையும் உண்மையாகவே கடுமையானவை இல்லை. ஆனாலும் அதைமட்டுமே நாம் தீவிரமாக உற்று கவனிக்கும் போது,

அது அசுர உரு எடுத்து நம்மை பயமுறுத்துகிறது. அதே சமயம் நம் கவனம் திருப்பப்பட்டாலோ, அதே பிரச்சனைகள் நம்மை துன்புறுத்துவது இல்லை.

மனிதன் தன் பிரச்சனைகளிலிருந்து நிரந்தர விடுதலை பெற, ஞானிகள் கண்டுபிடித்து சொன்ன வழி, மனதை தான், தனது என்பதிலிருந்து கழற்றி கடவுள் சமுதாயம் என்பதில் மாட்டிவிடு.

சுய நலத்தை கழட்டி வைத்துவிட்டு பொதுநல சேவை, சமூக சேவை என்று இறங்கிவிட்டால், நமது பிரச்சனைகள் மற்றவர் பிரச்சனைகள் முன்னால் சிறியதாகமாற, ஒளிந்து ஓடிவிடும்.

இதனால் இரண்டு மிகப்பெரிய லாபம், நமது கவலைகளும் பிரச்சனைகளும் இடம் தெரியாமல் ஓடிவிடும். அதோடு, நமக்கு மட்டுமில்லை நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நம்மால் நன்மைதானே?

படிப்போம்! பகிர்வோம்! -துன்பத்திற்கு ஒரே நிவாரணம் இறை நம்பிக்கை மட்டுமே.

துன்பத்திற்கு ஒரே நிவாரணம் இறை நம்பிக்கை மட்டுமே.

Photo Mar 28, 1 21 27 AM

கடவுள் பக்தி நிறைந்த ஒரு கணவனும் மனைவியும் “இன்ப சுற்றுலா” செல்கின்றனர்.

அங்கு ஏரியை பார்த்த மனைவி தன் கணவனிடம் .. நம் இருவர் மட்டும் தனியாக படகு சவாரி போகலாமா! என கேட்கிறாள்.

கணவனும் தன் மனைவியின் ஆசைக்காக சரி என்று சொல்ல… படகில் இருவரும் சிறிது தூரம் படகில் சென்றனர்

அப்போது வானிலை கொஞ்சம் காஞ்சமாக மாறுகிறது பிறகு மெல்ல மெல்ல காற்று வீச வேகமெடுத்து பலமாக காற்று வீச கரு மேகம் சூழ நெஞ்சு பதறும் அளவிற்கு இடி இடிக்க… மின்னல் வர இதில் மிகவும் பயந்துபோனவள் ஓடிவந்து தன் கணவன் அருகில் அமர்ந்துகொண்டு

“ஏனுங்க எனக்கு பயமாக இருக்கிறது துடுப்பை வேகமாக செலுத்துங்கள் சீக்கிரம் கரைக்கு போய் விடலாம் என்கிறாள் .”

தன் மனைவியை பார்த்து மென்மையாக சிரித்த கணவன் “உனக்கு பயமாக இருக்கிறதா! ஒரு நிமிடம்…”

என கூறி தன் பையில் ஆப்பிள் வெட்ட வைத்திருந்த ஒரு கூர்மையான கத்தியை எடுத்து தன் மனைவியின் கழுத்தை நோக்கி சடார் என நீட்டினான்

அவளோ பயமில்லாது தன் கணவனை பார்த்து சிரிக்கிறாள், இந்த நேரத்தில் என்ன விளையாட்டு இது என்று அந்த மழை நேரத்திலும் மென்மையாக சிரிக்கிறாள்

“ஏன் சிரிக்கிறாய்! இது எவ்வளவு கூர்மையான கத்தி தெரியுமா! உனக்கு இதை கண்டு பயமாக இல்லையா!” என்று கணவன் கேட்க…

“கத்தி கூர்மையானதுதான் ஆனால் அதை தன் வசம் வைத்திருப்பது என் அன்புக்குறியவராச்சே!

நான் நேசிக்கும் ஒருவர் எனக்கு எப்படி தீங்கு செய்வார்!” என மிக நலினமாக சொல்கிறாள்.

கத்தியை தன கை பையின் உள்ளேயே போட்ட கணவன் தன் மனைவியின் கண்ணம் தொட்டு… சொன்னான்

“அதுபோலதான் அன்பே! இந்த காற்றும் புயல் வருவதுபோல் இருக்கும் இந்த அறிகுறிகளும் மிக ஆபத்தானது போல தான் தோன்றும்

ஆனால் இவற்றை எல்லாம் தன் வசம் வைத்திருக்கும் அந்த “ஆண்டவன்” என் அன்புக்குறியவனாயிற்றே!

நான் நேசிக்கும் அவன் என்னையும் உன்னையும் எப்படி அவன் துன்புறுத்துவான்!” என்றான்.

பக்தி மனதில் இருந்தால் மட்டும் போதாது சோதனைகளின் போதும் அது உறுதியாக இருக்க வேண்டும்

நம் பக்தியை சோதிக்க இதுவும் சோதனைகள் தான் … யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத யாரையும் எந்த கஷ்டமும் ஒன்றும் செய்யாது என்றான்…

சிறிது நேரத்தில் கரு மேகங்கள் களைந்து, சூரியன் முகம் காட்டி, காற்று சாந்தமானது, பழைய படி சூழ்நிலை மாறியது

இறை நம்பிக்கை மட்டுமே நம் வாழ்க்கையின் எல்லா துன்பத்திற்கும் கிடைக்கும் ஒரே நிவாரணம்

அந்த நம்பிக்கையோடு நல்லவர்களாக நடை பயிலுங்கள் …. நம்மை படைத்தவன் நம்மை வழி நடத்துவான்

படிப்போம்! பகிர்வோம்! – குருசேத்திர யுத்தம் பற்றிய அறிவியல் தத்துவம்!

குருசேத்திர யுத்தம் பற்றிய அறிவியல் தத்துவம்!

மகாபாரதப்போர் நடந்த இடம் எது என்றால் குருசேத்திரம் என்பார்கள். குருசேத்திரம் எங்கிருக்கிறது என்று கேட்டால் ஹரியானாவில் இருக்கிறது என்று கூட தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால், குருசேத்திர யுத்தம், ஒரு அறிவியல் தத்துவத்தையும் எடுத்துச்சொல்வது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்! மனம் தான் நம் செயல்களுக்கு காரணமாக அமைகிறது என்பது அறிவியல் கலந்த ஆன்மிக உண்மை.
its-all-in-your-mindஒவ்வொரு நாளும் நமக்குள்ளும் குருசேத்திர யுத்தம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மனசு தான் குருசேத்திரம். அதில் இருக்கும் நல்ல எண்ணமே நியாயத்திற்காகப் போராடும் தர்மர் தலைமையிலான பாண்டவர்கள். தீய எண்ணங்களே அநியாயத்தின் பக்கமிருக்கும் துரியோதனன் தலைமையிலான கவுரவர்கள். ஓயாமல் இருபிரிவுக்கும் போர் நடந்து கொண்டே இருக்கிறது. பாண்டவர்களும், கவுரவர்களும் ஒரே பரம்பரையில் பிறந்த தாயாதிகள்(சகோதரர்கள்). அதேபோல, நல்லதும், கெட்டதும் ஒரே மனதில் உற்பத்தியானவை தான். அர்ஜூனன், தன் சொந்த பந்தத்தினர் மீது அம்பு விட தயங்கியது போல, உலகியல் வாழ்வில் ஈடுபடும் நமது புத்தியும், ஒன்றைச் செய்வதா வேண்டாமா என திண்டாடுகிறது. அப்போது விவேகம் என்னும் கிருஷ்ணர், நம் புத்திக்கு வழிகாட்ட வருகிறார். பாரதப்போரில், விவேகமாக நடந்த கிருஷ்ணர் மூலம் நியாயம் ஜெயித்தது. நம் மனதில் நடக்கும் குரு-க்ஷத்திர போரிலும் நன்மை ஜெயிக்க, விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. இப்போது புரிந்து கொண்டீர்களா! ஆன்மிகத்தை விட சிறந்த அறிவியல் வேறேதும் இல்லையென்று!