நான் சாதாரண ஸ்வயம்சேவக் -11

(ஸ்ரீ குருஜி அவர்களின் பௌத்திக்
முந்தய பகுதியின் தொடர்ச்சி )

ஒரே வழி

இப்படிப்பட்ட சங்கடமான சூழ்நிலையை தவறாக பயன்படுத்திக் கொள்ள, பல்வேறு சக்திகள் நமக்குள் ஊடுருவிட  காத்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் நமது சமுதாயத்தில் விரிசல் ஏற்படுத்தி அழிவை ஏற்படுத்த எந்த ஒரு வாய்ப்பையும் வீணாக்குவதில்லை. இந்த எதிரிகளுக்கு உதவி செய்ய வெளியில் எதிரிகள் உள்ளார்கள். இந்த வெளி எதிரிகள் நாட்டை அப்படியே முற்றுகையிட்டு உள்ளார்கள். எல்லா  எல்லைகளிலும் நின்று சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள், ஊடுருவல் செய்து கொண்டிருக்கின்றனர். எப்போது நேர்தாக்குதல் என்று தெரியாது. நாம் நமக்குள் பொறாமை, சண்டை, ஒழுக்கமின்மை, சுயமறதி  ஆகிய காரணங்களால் ஒரு விதமான அராஜகத்தையே  ஏற்படுத்திவிட்டோம். இப்படிப்பட்ட சின்னாபின்னமான, கோரமான சூழ்நிலையின் காரணமாக, தாக்குகிற எதிரிகளை எதிர்த்து நிற்கும் சக்திகள் இல்லையோ என்கிற சூழ்நிலை தெரிகிறது.

இது எல்லாவற்றையும் பார்த்தால் நம்மிடம் ஒரே ஒரு பதில்தான் உள்ளது. அது துயரமான வரலாற்றை பார்த்து அழுவது அல்ல. எதிரி நாட்டிற்கு மூன்றாவது நாடு உதவி செய்கிறது அல்லது ஆயுதங்களைக் கொடுத்து உதவுகிறது. இந்த நிலையில் புகார் செய்வது, அழுவது எல்லாம் கோழைத்தனத்தின், கையாலாகாத்தனத்தின் அடையாளம். நாம் அவனை விடப் பலம் வாய்ந்தவனாக ஆகி உறுதியுடன் இருக்க வேண்டும் அல்லவா? பராக்கிரமம் வாய்ந்த, பல்வேறு குணங்கள் வாய்ந்த, தன்மானம் வாய்ந்த நாட்டின் கடமை என்ன? மற்றவர்களை குறைகூறிக் கொண்டிருப்பதா? நம்முடைய தோள் பலத்தை நம்பி எழுந்து நிற்போம். அப்படி எழுந்து நின்றாக வேண்டும். சாக்கு போக்கு கூறுவதால் வேலை நடக்காது; அல்லது மற்றவர்கள் நம்மீது தாக்குகிறார்கள் என்று கத்தி அழுவதினாலும் ஒன்றும் நடக்காது. அவர்கள் அப்படித்தான் செய்யப்போகிறார்கள். எது நாள் வரை  நாம் பலவீனர்களாக இருந்து கொண்டு, அவர்களுக்கு தாக்குவதற்கான வாய்ப்புக் கொடுக்கிறோமோ அதுவரை அவர்கள் தாக்குவார்கள்; அடிப்பார்கள்.

அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்? சுயமறதியின்   காரணமாகத்தான் இந்த பெரிய சமுதாயம் உடைந்துள்ளது. இந்த சுயமறதியை  அகற்ற வேண்டும். “இது என்னுடைய தாய் நாடு முழு சமுதாயமும் என்னுடையது. என்னுடைய ராஷ்டரம், இந்த பூமியில் என்னுடைய இந்த தேசிய வாழ்க்கை எல்லாம் வல்லதாக, அனைத்தும் நிறைந்ததாக, முழு அதிகாரம் வாய்ந்ததாக ஆகி உலக அரங்கில் தன்னம்பிக்கையுடன் எழுந்து நிற்கும்” என்ற உணர்வை ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஏற்படுத்த வேண்டும். இந்த எழுச்சியால், நம்முடைய பணியின் பலத்தினால், முழு சமுதாயத்தையும் தன்னம்பிக்கை மூலம் கோர்த்து இணைக்க வேண்டும். எல்லோருக்கும் கட்டுப்பாட்டைப்  பழக்கப்படுத்தி, அனைத்து இடர்களையும் அழித்துவிடுகின்ற தகுதியுள்ள, ராமேஸ்வரத்தில் இருந்து இமயமலை வரை ஒருங்கிணைக்கப்பட்ட  தேசிய சக்தியின் வடிவத்தில், நமது சமுதாயத்தையே  எழுப்பி நிறுத்த வேண்டும். வேறு எந்த வழியும் இல்லை. வேறு வழிகள் எல்லாம் அப்பாவிதனமானதும், பைத்தியக்காரத்தனமானதும்  மேலோட்டமானதும் ஆகும். நம்முடைய சமுதாயம் என்கிற உடலில் புகுந்துள்ள அழுக்கை அகற்றி, முழுமையாகத்  தூய்மைப்படுத்தி, தன்னுடைய முழு சக்தியை எழுப்புகின்ற காரியம் தான் சங்க வேலை.  இது தவிர வேறு எதுவும் பொருத்தமான உபாயம் இல்லை.

அந்த வேலை செய்கின்ற பேறு கடவுள் அருளால் நமக்குக்  கிடைத்துள்ளது நாமெல்லாம் சங்கத்தின் சாதாரண ஸ்வயம்சேவக்’. இப்படிப்பட்ட இணையில்லாத உயர்ந்த அங்கீகாரம் நமக்குக் கிடைத்துள்ளது. இந்த உணர்வுடன் நாம் வேலையில் ஈடுபடுவோம்.  ஒவ்வொருவரும் சக்தி, புத்தி, நேரம் இவற்றை சங்க வேலைக்காக அர்ப்பணித்து சிறிது காலத்திலேயே சங்க வேலை விசாலமான பரிணாமம் அடைய வேண்டியுள்ளது. இது நம் ஒவ்வொருவர் கடமை என்று கொள்ளுங்கள் இதுவே என் வேண்டுகோள்.

முற்றும்

நான் சாதாரண ஸ்வயம்சேவக் -10

(ஸ்ரீ குருஜி அவர்களின் பௌத்திக்
முந்தய பகுதியின் தொடர்ச்சி )

வேலை வளர்ச்சி என்பதன் அர்த்தம்

இந்த விஷயத்தில் நம்மை நாம் “சாதாரண ஸ்வயம்சேவக்” என நினைத்து நமது வாழ்க்கையில் அமல்படுத்துகின்றோம். இவை அனைத்தையும் கடமை என்று நினைத்துச் செய்ய வேண்டும். இதனால் என்ன லாபம்? எல்லா வேலைகளும் இயற்கையாக, சிரித்து விளையாடிக் கொண்டே, உழைப்பு ஏதுவும் இல்லாமல் நிறைவேறுவது அல்ல. உழைக்க  வேண்டும்.

இதெல்லாம் எதற்காக என்ற கேள்வி எழுகிறது. சங்க வேலையை வளர்ப்பதற்காக என்று சிலர் கூறுகிறார்கள். வேலையை வளர்ப்பது என்றால் என்ன என்று சிலர் யோசிக்கிறார்கள். சங்கம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. பலமுறை பத்திரிகையில் பெயர் வருகிறது. ஒரு சிலர் எதிர்த்துப் பேசுகிறார்கள். அவர்கள் என்ன செய்வார்கள்? அப்படிப்  பேசித்தான் ஆக வேண்டும். ஆனால் எல்லாம் நிறைந்து விட்டது வேண்டும் ஆனால் எல்லாம் நிறைந்து விட்டது விட்டது, போதுமானதாகி விட்டது என்று பொருளா?  இதற்கு மேலும் எவ்வளவு வளர்க்க?

நாம் சிந்திப்போம். ஏன் வளர்க்க வேண்டும்? நம் முன் உள்ள லட்சியம் என்ன? ஹிந்து சமுதாயத்திற்கும் சிறியதோர் இயக்கத்தை அமைப்பது நமது லட்சியம் அல்ல. முழு ஹிந்து  சமுதாயத்தையே ஒருங்கிணைப்பது நம் லட்சியம். விசாலமான ஹிந்து சமுதாயம் எப்படி ஒருங்கிணைக்கப்பட முடியும்? இருக்கின்ற அனைவருமே சங்கஸ்தானில் எப்படி வந்து நிற்பார்கள்?  இது நடக்கிற விஷயமா என்று சிலர் கேட்கிறார்கள்.

அவர்கள் சொல்வது உண்மைதான். ஒரு விஷயம் தெளிவு அதாவது, சங்கம் ஆண்களுக்காக  இருக்கிற வேலை. ஆகவே குறைந்தபட்சம் சமுதாயத்தின் பாதிப்பேர் சங்கஸ்தானத்திற்கு  வரமாட்டார்கள். சிலர் வந்து எங்களை ஏன் சேர்த்துக் கொள்வதில்லை என கேட்கிறார்கள். மிகவும் சிறுவர்களும் முடியாது. மற்றும் மிகவும் வயதானவர்களும்,  ஊனமுற்றவர்களும் வரமுடியாது. சங்க ஷாகாவிற்கு யார் வர முடியும் என்ற கேள்விக்கு பழையதொரு சொல் இருக்கிறது.

யார் தன் காலால் சுயமாக நடந்து வர முடியுமோ அப்படிப்   பட்டவர்கள் தான்  வரமுடியும் இரண்டு கால்களால் நடக்கக்  கற்றுக்கொண்டுள்ள சிசுவில் இருந்து ஆரம்பித்து, தன் கால்களினாலேயே நடப்பதை இன்னும் நிறுத்திவிடாத  வயதானவர்கள் வரை அனைவரும், நமது கண்ணோட்டத்தில், ஷாகவிற்கு வர தகுதியுள்ள ஸ்வயம்சேவகர்கள். பிறரை சார்ந்துள்ள குழந்தைகளும், முதியவர்களும் தவிர மற்றவர்களெல்லாம் வருவார்களா என்ன? வந்து விட மாட்டார்கள். என்ன செய்யவேண்டும்? நம்முடைய ஒருங்கிணைக்கின்ற வேலையை முழுமை பெறுமா? ஆகாதே? எனவே நம் முன் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட எல்லை வைத்துக்கொள்ளவேண்டும். எதுவாக இருக்க முடியும் என்று பலர் கேட்கிறார்கள்.

வெகுநாள் முன்பு ஒருமுறை டாக்ட்டர்ஜி, ஒரு குறிப்பிட்ட சதவீதம் மக்கள் ஸ்வயம்சேவகர்களானால் குறைந்தபட்ச தேவை பூர்த்தி ஆகலாம் என்று கூறியிருந்தார். நான் இப்போது இந்த  சதவீதக் கணக்கெல்லாம் நான் பேசமாட்டேன். ஏனென்றால், அந்த நேரத்தில் விளக்கிச் சொல்லும் போது, அதைப்  பலர் விபரீதமாகப்  புரிந்துக்கொண்டார்கள்.  நான் ஒரு இடத்தில் இவ்வளவு சதவீதம் சங்க்யா வரவழைக்க வேண்டும் என்று கூறினேன். அதற்கு கார்யகர்த்தர்கள் பேய் பிடித்தது போல வேலையில் இறங்கினார்கள். ஆங்காங்கு ஷாகாக்கள், எல்லாவிடமும் ஸ்வயம்சேவகர்கள் என்றாக்கிவிட்டு எனக்கு கடிதம் வந்தது: ” நம்முடைய இந்த ஊரில் தாங்கள் குறிப்பிட்ட சதவீதம் ஸ்வயம்சேவகர்கள் ஆகிவிட்டார்கள்.  அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.” நான் அவளுக்குக் ஒரு கடிதம் எழுதினேன், “ஒரு சத்தியநாராயண பூஜை நடத்தி பாராயணம் செய்து எல்லோருக்கும் பிரசாதம் கொடுத்து சங்க வேலையை இழுத்து மூடுங்கள்” என்று அதில் குறிப்பிட்டேன். வேறு என்ன சொல்ல? இந்த விகிதாச்சாரத்தினால்  எவ்வளவு குழப்பம் ஆகவே மேலும் விபரீத அர்த்தம்  வருவது போல வேறு ஒன்றும் சொல்ல வேண்டாம். அப்படியானால் என்ன செய்வது?

முழு சமுதாயத்திற்காக

நாம் சாதாரணமாக தன்னுடைய கடமைகள் பற்றி யோசிக்கும் பொழுது, முழு சமுதாயத்திற்கும் நெருக்கமான நட்பு நிறைந்த உறவு ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றிப்  பார்த்தோம். தொடர்பும் உறவும் அவரவர் நகரம்,  தமது ஷாகா, தமது ஷாகாவிற்கு சம்பந்தப்பட்ட சுற்றுப்புறம் வரை மட்டுமல்ல, மாறாக இந்த உறவு முழு  ஹிந்து சமுதாயத்துடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய ஒன்று. நகரவாசி, கிராமவாசி, அடர்த்தியான காடு, மலை, குகை இங்கெல்லாம் வசிப்போர் ஆகிய அனைவருமே நமது சகோதரர்கள் தான். அனைவருடனும்  நமக்கு நிரந்தரமான, உயிர்ப்புள்ள உறவு இருக்கட்டும். அன்பு மிக்க உறவு இருக்கட்டும். பரஸ்பரம் வந்துபோகின்ற, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் உறவிருக்கட்டும். இதற்காக எத்தனை கார்யகர்த்தர்கள்  தேவைப்படுகிறார்களோ, அத்தனை கார்யகர்த்தர்கள் கொண்ட அவ்வளவு ஷாகாக்கள் அதுவும், தினம்தோறும் முறையாக நடக்கின்ற ஷாகாக்கள், நமக்குத் தேவை.

இது பெரிய வேலை நாம் செய்தாக வேண்டும். அதைவிடக் குறைந்ததான எந்த வேலையினாலும்  நமக்கு மகிழ்ச்சி உண்டாகாது. ஆகவே, நமக்கு முன் உள்ள வேலையில் குறைந்தபட்ச எல்லைவரை வளர்ச்சி காணச் செய்யவேண்டும். அதை அடைந்த பிறகு அது குறையவிடக் கூடாது அதாவது வேலையை தேவையான அளவிற்கு வளர்ப்பது, அதன்பிறகு வேலையை குறைந்த அளவிற்கு எப்போதும் உயிர்ப்புடன் வேருன்றச் செய்வது, இப்படியாக இது வாழ்நாள் முழுவதற்குமான ஒரு  வேலையாக நம்முன் உள்ளது. தற்பொழுது இருக்கின்ற வேலையை இன்னும் ஆக வேண்டிய வேலையுடன் ஒப்பிட்டுப் பார்த்து எவ்வளவு குறைவாக உள்ளது என்று சிந்தித்துப் பார்ப்போம். எனவே, ‘சாதாரண ஸ்வயம்சேவக்’ என்கின்ற முறையில் நாம் எவ்வளவு அதிகமாக உழைக்க வேண்டியுள்ளதோ அதைக் குறைப்பதோ, ஒத்திப் போடுவதோ எந்த அளவுக்கும் விரும்பத்தகாதது, தகுதியற்றது, பொருத்தமற்றது என்று நாம் சிந்திப்போம். மேலும் அதற்கேற்ப நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம். மிகவும் திறமை வாய்ந்த கார்யகர்த்தராகி வேலை செய்வதில் ‘அக்ரேஸர்’ (முன்னணியில் இருப்பவர்) ஆக்குவோம்.

ஏன் இந்த அவசரம்?  ஏனென்றால் நம் முன் தேசத்தின் சூழ்நிலை தெரிகின்றது. நம்முடைய ஹிந்து சமுதாயம் சுயமறதியில் ஆழ்ந்து உள்ளது. இது நம்முடைய நாடு என்று சொல்வதற்கும் பலருக்கு தைரியம் இல்லை. தாய் நாட்டின் மீதான அன்பு மிகவும் பலவீனமாக இருப்பது தெரிகிறது. ஆகவே  சமுதாயத்தில் சுயநலம் கொடிகட்டி பறக்கிறது. சுயநலத்தின் காரணமாக தீயகுணங்களும் அநீதியும் பரவியுள்ளன. கோஷ்டிப் பூசல்,   பொறாமை, வெறுப்பு  ஆகியவை பேயாட்டம் ஆடுகின்றன. சமுதாயம் துண்டு துண்டாகி அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பது போல் தோன்றுகிறது.

[தொடரும்]

நான் சாதாரண ஸ்வயம்சேவக் -9

(ஸ்ரீ குருஜி அவர்களின் பௌத்திக்
முந்தய பகுதியின் தொடர்ச்சி )

தூய ஒழுக்கம்

நமது சங்கத்தை துவக்கிவைத்தவரின் முன்தாரணம் நமக்கு முன்பு உள்ளது. மாசற்ற ஒழுக்கமுடையவர் பரமபூஜனீய ஸ்ரீ டாக்டர் ஜி அவருடைய காலத்தில் நடந்த ஒரு சம்பவம். ஒரு தேர்தல் நடந்தது. அவருடைய பழைய  நண்பர்கள் தனித்தனிக் கட்சிகளை  சார்ந்தவர்களாக இருந்தாதினால் ஒருவர் மற்றொருவரை எதிர்த்து போட்டியிட்டார். அவர்களின் ஒருவருடன் டாக்டர்ஜிக்கு நெருக்கமான உறவு இருந்தது. ஆகவே தம்முடைய இந்த நண்பருக்காக உழைப்பது தமது கடமை என்று நினைத்து, டாக்டர்ஜி சிறிது முயற்சி செய்து கொண்டிருந்தார்.

இரண்டாவது நண்பர் புகழ்பெற்ற பேச்சாளர்.  கர்ஜனை  செய்வதுபோல் பேசுவார். அவருடைய பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். ஏனென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட வசை மொழியைப்  பயன்படுத்தி பேசுவதில்  பெரிய கில்லாடி. இப்போதெல்லாம் மக்கள் வசை மொழியைக்  கேட்டுப்   பழகிப் போனதினால், தீட்டித் தீர்க்காத சொற்பொழிவை ரசிக்க மாட்டார்கள், ஆகவே, அவருடைய சொற்பொழிவைக் கேட்க ஆயிரக்கணக்கில் வந்து கொண்டிருந்தார்கள். அவர் தமது எதிரியையும் அவருடைய ஆதரவாளர்களையும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் தேடித்தேடி வெளியே எடுத்துப்போட்டு விளாசி  எதிராளியை பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கோ, மக்களுக்கு முன்பு நிற்பதற்கோ தைரியம்  இல்லாத பரிதாபமான நிலைக்குத் தள்ளி விடுவார். அவர் தமது பேச்சில் தன்னுடைய எதிரியை நகரத்தில் எங்கேயும் கூட்டம் நடத்த விடாதவாறு செய்து விடுவேன் என்று கூறினார். அவர் அப்படி செய்பவரும்  கூட எங்கேயாவது எதிர்கட்சிக்காரர்கள் கூட்டம் போட்டால் அங்கே குழப்பம் ஏற்படுத்தி கூட்டத்தை கலைத்து விடுவார்.

டாக்டர்ஜியின் நண்பருக்கும் கூட்டம் போட ஆசை இருந்தது. ‘டாக்டர் ஜி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்’ என்று சொன்னார். கூட்டத்தை கலைக்க அடியாட்கள்  தயாராக வந்தார்கள். டாக்டர்ஜி அங்கு நாற்காலி ஒன்றில் உட்கார்ந்திருந்தார்.   அவருடைய பருமனான வடிவத்தைப்  பார்த்து குழப்பம் ஏற்படுத்த வந்தவர்களுக்கு தைரியமே வரவில்லை. இங்கு ஏதாவது உபத்திரவம் செய்தால் சரியான அடி கிடைக்கும் என்று அஞ்சினார்கள். முழுக்கூட்டமும் அமைதியாக நடந்தது. பிறகு அந்த   எதிர் தரப்பு வேட்பாளர் “என்ன சொல்வது? என்னுடைய எதிர்க்கட்சியில் உள்ள அனைத்து ஆதரவாளர்களின் பலவீனத்தையும் வெளியே கொண்டு வந்து அவருடைய ‘வாயை’ மூடிவிட்டேன். ஆனால் இப்போது எவருடைய உதவியினால் இவர் எனக்கு எதிராக போட்டியிட்டு இருக்கிறாரோ அவருக்கு, எதிராக பேச என்னிடம் ஒரு வார்த்தை கூட இல்லை என்று தன் கட்சி கூட்டத்தில் பேசினார். அதாவது டாக்டர்ஜியை எதிர்த்து என்னதான் சொல்ல முடியும்?அகமும் புறமும் தூய்மை அப்பழுக்கற்ற ஒழுக்கம் இப்படி இருக்க அதை குறை கூறுவது? எந்த ரகசியத்தை அவர் என்னதான் செய்வார்? “இந்த ஒருவரின் சக்தியை நம்பி என் எதிரில் கர்ஜனை செய்து கொண்டிருக்கிறார்” என்று கூறினார் இதுதான் நம் முன் உள்ள உதாரணம். மக்களின் மனதில் டாக்டர்ஜியை பற்றி எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்பதை காட்ட பல உதாரணங்கள் உள்ளன.


டாக்டர்ஜியின் ஒரு நண்பருக்கு ஒரு முறை பணம் தேவைப்பட்டது. அவர் டாக்டரிடம் வந்தார் இது ஆச்சரியமான விஷயம். டாக்டர்ஜிக்கு  எங்கிருந்து பைசா வருகிறது. டாக்டர்ஜி நாகபுரியில் மருத்துவத் தொழில் செய்து வந்தார் என்று எனக்குச் சிலர் கூறினார்கள். ஆனால் நான் அவர் வேலை செய்ததை பார்த்ததே கிடையாது. அவர் இரண்டு மருந்துகளை கட்டாயமாக வைத்திருப்பார். ‘கொய்னா’ மாத்திரை, ‘டிஞ்ச்சர்’ – அவ்வளவுதான் விளையாடும்போது யாருக்காவது அடிப்பட்டால் டிஞ்ச்சரில்   நனைத்த பஞ்சை ஓட்டி விடுவார். யாருக்காவது காய்ச்சலோ,  ஜலதோஷமோ வந்தால் ‘கொய்னா’ மாத்திரைகளைச்  சாப்பிடக்  கொடுப்பார் ஸ்வயம் சேவகர்களுக்கு கொடுக்கும்போது கட்டணம் கொடுக்க மாட்டார்கள். ஆகையால் அவரிடம் பைசா எப்படி இருக்கும்? இருந்தாலும் அந்த நண்பனுக்கு  டாக்டர்ஜி  எதாவது ஏற்பாடு செய்வார்  என்கின்ற நம்பிக்கை இருந்தது. எனவே கேட்க வந்தார். டாக்டர்ஜி  அவரை உட்கார வைத்து விட்டு  “இருங்கள்; வருகிறேன்” என்று சொன்னார்.

டாக்டர்ஜியின் ஒரு நண்பருக்கு ஒரு முறை பணம் தேவைப்பட்டது. அவர் டாக்டரிடம் வந்தார் இது ஆச்சரியமான விஷயம். டாக்டர்ஜிக்கு  எங்கிருந்து பைசா வருகிறது. டாக்டர்ஜி நாகபுரியில் மருத்துவத் தொழில் செய்து வந்தார் என்று எனக்குச் சிலர் கூறினார்கள். ஆனால் நான் அவர் வேலை செய்ததை பார்த்ததே கிடையாது. அவர் இரண்டு மருந்துகளை கட்டாயமாக வைத்திருப்பார். ‘கொய்னா’ மாத்திரை, ‘டிஞ்ச்சர்’ – அவ்வளவுதான் விளையாடும்போது யாருக்காவது அடிப்பட்டால் டிஞ்ச்சரில்   நனைத்த பஞ்சை ஓட்டி விடுவார். யாருக்காவது காய்ச்சலோ,  ஜலதோஷமோ வந்தால் ‘கொய்னா’ மாத்திரைகளைச்  சாப்பிடக்  கொடுப்பார் ஸ்வயம் சேவகர்களுக்கு கொடுக்கும்போது கட்டணம் கொடுக்க மாட்டார்கள். ஆகையால் அவரிடம் பைசா எப்படி இருக்கும்? இருந்தாலும் அந்த நண்பனுக்கு  டாக்டர்ஜி  எதாவது ஏற்பாடு செய்வார்  என்கின்ற நம்பிக்கை இருந்தது. எனவே கேட்க வந்தார். டாக்டர்ஜி  அவரை உட்கார வைத்து விட்டு  “இருங்கள்; வருகிறேன்” என்று சொன்னார்.

அருகில் உள்ள ஒரு சில பணக்கார நண்பர்களிடம்  சென்றார். ஆனால், தற்செயலாக ஒருவரும்   வீட்டில் இருக்கவில்லை. பிறகு வண்டியில் உட்கார்ந்து வெகு தூரத்திலுள்ள பாரிஸ்டர் அப்யங்கர்  என்கிற நண்பரிடம் (காங்கிரசை சேர்ந்த தலைவர்) சென்றடைந்தார். அவர் தனக்கு  நெருங்கியவரிடம்  பேசிக் கொண்டிருந்தார். இவரைப் பார்த்தவுடன் “வாங்க வாங்க, டாக்டர் ஹெக்டேவார், இங்கு  என்ன வழி தவறி வந்தீர்கள்? என்று வேடிக்கையான குரலில் கேட்டார். அப்படி இருந்தது அவருடைய நெருங்கிய உறவு. டாக்டர்ஜி  சொன்னார்: “இப்போது வேடிக்கையாகப்  பேசுவதற்கு நேரமில்லை. எனனுடைய   சொந்த வேலையாக வந்துள்ளேன்.”  அவருக்குப் புரிந்துவிட்டது. ஏதேதோ முக்கியமான வேலை உள்ளது என்று  உடனே எழுந்து உள்ளே அழைத்துச் சென்றார். டாக்டர்ஜி  “இப்போது 500 ரூபாய் தேவை” என்றார்  “என்ன, அங்குள்ள உங்களுடைய  நண்பர்களெல்லாம் இறந்து போய்விட்டார்களா என்ன?” என்றார் அப்யங்கர். “இந்தப் பேச்சை அப்புறம் பேசுவோம். பணம்  தருவீர்களா இல்லையா? கொடுப்பதாக இருந்தால் உடனே கொடுங்கள்.  இல்லை என்றால் சொல்லுங்கள் நான் வேறு எங்காவது சென்று வாங்கிவிடுவேன்.”  அப்யங்கர் சொன்னார்: கோபப்படாதிங்க பிரதர். நீங்கள் வந்து 500 ரூபாய் கேட்டால் நான் தரமாட்டேனா?  இந்த செல்வத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது? என்னுடைய இந்த சொத்துகளை எரிக்க வேண்டுமா?” என்று கூறியவர், உடனே 500 ரூபாய் எடுத்து வந்து கொடுத்துவிட்டார். டாக்டர்ஜி “இதோ ‘ப்ராமிஸரி நோட்’  (கடன் பத்திரம்) எழுதித் தருகிறேன்” என்று சொன்னார். அதற்கு அப்யங்கர்.  “இன்னும் எனக்கு புத்தி கெட்டுப் போய்விடவில்லை. நான் டாக்டர்ஜியிடமிருந்து ப்ராமிஸரி நோட் எழுதி வாங்கினேன் என்று ஊருக்குத் தெரிந்தால் என் முகத்தில் உமிழ்ந்து விடுவார்கள். இந்த அபங்கருக்கு  பைத்தியம் பிடித்துவிட்டது என்று கூறுவார்கள். டாக்டர் ஹெட்கேவரிடமிருந்தா ப்ராமிஸரி நோட் எழுதி வாங்குவது?  நீங்கள்  இந்த பணத்தை எடுத்துச் செல்லுங்கள். முடிந்தால் திருப்பிக்  கொடுங்கள்   இல்லை என்றால் விடுங்கள் ஆனால் நான் உங்களிடம் இருந்து இந்தப் பணத்திற்காக ‘ப்ராமிஸரி நோட்’ எழுதி  வாங்க  மாட்டேன் என்று சொன்னார்.

நம் விஷயத்தில் யாராவது இப்படிச்  சொல்வார்களா? சொல்லவேண்டும். நம்மை பற்றி மக்களுக்கு அப்படிப்பட்ட நம்பிக்கை ஏற்படுவதற்கு நமக்குள் தூய்மை இருக்க வேண்டும். ஒழுக்கத்தையே நாசம் செய்கின்ற காமம், காஞ்சனம் (பெண்,பொன்) என்கின்ற இரண்டு விஷயங்கள் நமது மனதில் தாக்கம் ஏற்படுத்த அளவிற்கு, நம்முடைய உள்ளத்தைத்  தூய்மையானதாக, பற்றற்று இருக்கச் செய்ய அறிவுபூர்வமாக முயற்சி செய்யவேண்டும்; செய்ய முடியும். கஷ்டமல்ல; முடியாததும்  அல்ல. அப்போதுதான் நாம்  நம்பிக்கைக்குரியவர்களாக  ஆவோம். பிறகு எவர் வீட்டிற்காவது   சென்று வந்தால் அவர், ‘இவன் எதற்காக வந்தானோ’  என்று உள்ளூர நினைப்பதில்லை. ஒவ்வொரு வீட்டின் கதவும்  நமக்காக 24 மணி நேரமும் திறந்தே இருக்கும் என்கிற நிலை ஏற்படும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு நாமே தூய ஒழுக்கமுள்ளோர் ஆகி,  நம்பிக்கைக்குரியவர் ஆகி, எல்லோருக்கும்   கஷ்டப்படுவதற்கு தயாராக வேண்டும். கஷ்டப்படவேண்டும். விவேகத்துடன் கஷ்டப்படவேண்டும். எல்லோருடைய எல்லா வேலையையும் இலவசமாக செய்கின்ற வேலைக்காரன் ஆகிவிடக் கூடாது மாறாக, அவருடைய இதயத்தில் நம்மைப்பற்றி மதிப்பும் நல்லெண்ணமும் நாம் கஷ்டப்படுவதனால்  அவருடைய மனதில் பரிவு ஏற்படும் அளவிற்கு கௌரவம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு நாம் செயல்பட்டால், சங்க கண்ணோட்டத்தில் நாம் சரியாக இருந்தால், நமக்குள் உள்ள சங்க  பத்தியையும்,  சிந்தனையையும் கிரகித்துக்கொண்டு, மக்கள்  நம்முடன் சங்க காரியத்தில் தோள் கொடுப்பார்கள்.

[தொடரும்]

நான் சாதாரண ஸ்வயம்சேவக் -8

(ஸ்ரீ குருஜி அவர்களின் பௌத்திக்
முந்தய பகுதியின் தொடர்ச்சி )

நம்பகத்தன்மை

இந்த அனைத்து வேலைகளையும் செய்வது, ‘சாதரண ஸ்வயம்சேவக்’ என்கிற முறையில் நமது கடமை. அதற்காக அசாதாரணமாக ஆகவேண்டிய அவசியமில்லை. இது ஒவ்வொரு ஸ்வயம்சேவகனின் வேலை. இதை செய்துகொண்டே நாம் நமது சங்க காரியத்தை வளர்க்க முடியும். இவை அனைத்தையும் செய்வதற்குத் தேவையான விஷயங்கள் என்ன?

  1. நாம் மக்கள் மத்தியில் நம்பிக்கைக்குரியவராக வேண்டும்.
  2. அவர்களுக்காக கஷ்டப்படுவதற்கு எப்போதும், எல்லா விதத்திலும் தயாராக இருக்க வேண்டும். அதுவும் சுயவிருப்பத்தாலேயே விருப்பத்தாலேயே தூக்கத்திலேயே செய்ய வேண்டும் இது நம்முடைய வேலை என்பதற்காக எப்படியும் செய்து முடித்து விடக்கூடாது உண்மையிலேயே பரஸ்பரம் அன்பு நான் உருவாகும் உறவை உணர்ந்து செய்ய வேண்டும்.

குறைந்தபட்சம் இந்த இரண்டு விஷயங்கள் இருக்க வேண்டும். இத்துடன் மூன்றாவதாக ஒரு விஷயம்: சங்க காரியத்தின் மீது பற்று உருவாக்க விரும்புகிறோமல்லவா? நாம் சங்க வேலை செய்கின்ற முறை எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடியும் முழுமையகவும், குற்றமே இல்லாத படியும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், நாம் எவரிடமாவது ஷாகாவிற்கு வரவேண்டும் என்று கூறிவிட்டு, நாமே ஷாகாவிற்க்கு மட்டம் போட்டுவிட்டு சினிமா பார்க்கப் போய்விட்டால் அப்போது யார் வருவார்கள்? யார் நம் பேச்சை கேட்பார்கள் நம் மூலமாக வேலைகள் சரியாக நடக்கவில்லை என்றாலோ, நமது முழுத்திறமை வெளியிடவில்லை என்றாலோ, அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு; முக்கியமானது நாம் நமது வேலையை உண்மையோடு செய்ட்தோமா? எதிர்பார்த்தபடி செய்தோமா? நாம் அது இது என்று சின்னச் சின்னக் காரணங்களுக்காக தினசரி வேலையை ஒரு மாதிரியாக எடுத்துக் கொண்டே போய் தளர்ந்து போகச் செய்வோமேயானால், நாம்மை எவரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. நம்முடைய நடைமுறை இது போல் இருக்குமேயானால், ‘தெரியும் உங்களுடைய நடத்தை’ என்று சொல்லிவிடுவார்கள். நீங்கள் கொடிகட்டிப் பறக்கும் அழகு தெரியும்! அப்போது  நம்மிடம் பதிலே இல்லாது போய்விடும். எனவே, நம்முடைய நடத்தை முழுமையக பழுதில்லாமல் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். இப்போது இந்தக் கண்ணோட்டத்தில் எல்லோருக்கும் நம்மிடம் நம்பிக்கை உள்ளதா என்று பார்ப்போம்.

நம்பிக்கைக்குரியவர் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்? நம் வாழ்க்கை தூய்மையானதாக இருக்க வேண்டும். எவருடைய வாழ்க்கை தூய்மையற்றதோ, பவித்ரமற்றதோ, எவரிடம் தீய பழக்கங்கள் இருக்கின்ற வாய்ப்புள்ளதோ அவரிடம் யாருக்கும் நம்பிக்கை இருக்காது. எனவே நாம் நமது வாழ்க்கையை துய்மையாக்கிக்கொள்ளவேண்டும். கறையே இல்லாமல் சுத்தமாகத் துவைத்த வெள்ளை வேஷ்டிபோல் இருக்க வேண்டும். ஒரு தனிநபர் என்ற முறையில் சுத்தமானவன், ஒழுக்கமானவன் என்று நம்மில் ஒவ்வொரு ஸ்வயம்சேவக் விஷயத்திலும், சமுதாயத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை இருக்க வேண்டும். இதை அவர் அனுபவபூர்வமாக அறிந்திருக்க வேண்டும். ஸ்வயம்சேவக் மிகவும் நல்ல ஒழுக்கமுடையவராக இருக்க வேண்டும். நம்மிடம்  எவ்வளவோ பெரிய பெரிய உதாரணங்கள் உள்ளன.

[தொடரும்]

நான் சாதாரண ஸ்வயம்சேவக் -7

(ஸ்ரீ குருஜி அவர்களின் பௌத்திக்
முந்தய பகுதியின் தொடர்ச்சி )

தூய்மையான அன்பே ஆதாரம்

வாத விவாதத்தில் புத்தியின்  உபயோகம் அவசியமாகிறது. ஆனால், இப்படி செய்வதால் அது துணை ஆவதற்கு பதிலாக தொல்லையாய்த்தான்  ஆகும்.  அப்படி இருக்க எல்லோரும் எப்படி அருகில் வருவார்கள்? நாம் அவருக்குச் சங்க வேலையை புரியவைக்கின்ற சூழ்நிலை எப்படி இருக்கும்? அதற்காக முதலில்  நமக்கும் மற்றும் யாருக்குப் புரிய வைக்க வேண்டுமோ அவருக்கும் இடையே உள்ளார்ந்த  ஒருமைப்பாடு ஏற்பட்டிருக்க  வேண்டும். அவரும் நாமும் ஓருயிர் ஈருடல் என்பது போன்ற இதயபூர்வ நட்பு  ஏற்பட்டிருக்க வேண்டும். இந்த நிலை ஏற்பட்ட பிறகு நமது இதயத்தில் உள்ள லட்சியப்பற்று  அவருடைய இதயத்தில் படியும். இப்படிப்பட்ட தூய அன்பு ஆதாரத்தில் தான் ஒவ்வொரு மனிதனையும், நம்மவராக்கி   கொண்டு, அவருக்கு லட்சியத்தை வழிபடுகின்ற ஆசையை எழுப்பி அவர் நம்முடைய சக ஊழியர் ஆகிடச்  செய்யமுடியும்.

இதற்காக நாம், தீர யோசித்து ஒழுக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடன்  நல்லபடியாக பழகி அவர்களின் வாழ்க்கையில் நல்ல முறையில் இசைந்திருந்து,  அவர்களின் சுக துக்கங்களை புரிந்து கொண்டு, சுகத்தை அதிகப்படுத்தவும், தூயரத்தை குறைக்கவும், எந்தவிதமான கஷ்டத்தையும் ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருந்து,  அனைவரையும் நம்மவராக்கிக்  கொள்கின்ற முயற்சியில் ஈடுபடச் செய்ய  வேண்டும். இதற்க்கு மற்றோரு வடிவம் உண்டு.  அக்கம்பக்கத்தினர்  மட்டுமல்ல நாம் வேலை செய்யகின்ற அலுவலகத்தில் நம்முடைய தொடர்பிற்கு  வந்த அனைவருடைய, அதாவது படித்துக் கொண்டிருந்தால்  சக மாணவர்களுடன்; அல்லது  வேலையில் இருந்தால்  அங்கு நமக்கு இணையானவர், உயர்ந்தவர், நமக்கு கீழ்நிலையில் உள்ளவர்களுடன்  அல்லது வியாபாரம், தொழில் சம்பந்தமாக தொடர்பிற்கு வருகின்ற பல்வேறு தரப்பு மக்களுடன்- நமது பழகுமுறை, எல்லோரது  உள்ளத்திலும் நம்மைப் பற்றி ஒரு நம்பிக்கை, மதிப்பு, அன்பு ஏற்படுத்தி எல்லோரையும் மனப்பூர்வமாக ஒன்றாக்க வேண்டும். இந்த  அன்பின் காரணமாக, சங்கத்திடம்  நமக்குள்ள ஆழ்ந்த பற்று மற்றவர்களுடைய  உள்ளத்தில் தானாகவே தொற்றிக் கொண்டுவிடும். இப்படி கவனமாக நாம் முயற்சி செய்ய வேண்டும்.

[தொடரும்]

நான் சாதாரண ஸ்வயம்சேவக் -6

(ஸ்ரீ குருஜி அவர்களின் பௌத்திக்
முந்தய பகுதியின் தொடர்ச்சி )

தர்க்கம் விவாதம் வேண்டாம்

ஆக பல காரணங்களால் பலரும் ஷாகா வருகின்றார்கள். ஆனால் யாருடனாவது நாம் வாதம் விவாதம் செய்தோம், அவரை வாதத்தில் தோற்கடித்தோம்   இதனால் தன் தோல்வியை ஏற்றுக் கொண்டு அவர் ‘சரி, நல்ல விஷயம் ஷாகா வருகிறேன். என்று சொல்லி வர ஆரம்பித்தார்.  என்கிற உதாரணம் என்றைக்கும் கிடைக்காது. ஒருவேளை நாம் புத்தியை மட்டும் பயன்படுத்தி மற்றவர்களை விட நாம் அதிக புத்திசாலி என்று காட்டினால், ‘இவன் என்னை விட புத்திசாலி, எனக்கு சிறிது குறைவு’ என்று ஒப்புக்கொள்ள யாருக்கு தான் மனம் வரும்? மாறாக இது எனக்கு அவமானம் என நினைத்து நம்மிடம் இருந்து விலகியே செல்வார்கள் பதிலடி கொடுக்கவும் காத்திருப்பார்கள். இதுதான் எனது அனுபவம்.

எனக்கு ஒரு நண்பன் இருந்தான். பாடவிஷயம் வேறு இருந்தாலும் ஒரே வகுப்பில் இருந்தோம். அவனுக்கு வாதத்தில் ஈடுபடுவதில்  பெரிய ஆனந்தம். அதிகம் பிடித்திருந்தான்; ஆழமாகவும் படித்திருந்த்தான். எனவே வாத விவாதங்களில் ஈடுபட்டிருந்தோம். நான்கு ஐந்து முறை வாத விவாதங்களில் அவன் தோல்வியடைந்து கேலிக்குரியவனானான் . அப்போது நண்பர்கள் வட்டம் விபத்து பெரிய வித்வான் என்று சொல்லிக் கொண்டு திரிந்தாயே  இப்போது ஏன் வாய் மூடிக் கிடக்கிறது என்று கேட்க ஆரம்பித்தார்கள். தன்னை கேலி செய்ததை பார்த்து அவன் என்னை சந்திப்பதற்கு பயப்படத்   துவங்கினான் எதிரில் நான் வருவதை பார்த்ததும் அருகில் உள்ள சந்திற்குள் நழுவி விடுவான். இரண்டு மூன்று  முறை இப்படி நடைபெற்றதைப் பார்த்தேன். ஒருநாள்  இப்படி ஒரு சந்தில் நுழைந்து செல்வதைப் பார்த்து ஓடிப்போய் பிடித்துக்கொண்டு “எங்கே ஓடுகிறாய்?” என்று கேட்டேன். அதற்கு அவன் “நான் உங்களிடம் பேச மாட்டேன். ஏனென்றால் நீங்கள் என்னை எல்லோர் முன்பும் கேலி செய்வீர்கள். தன்னை கேலி செய்து கொள்வதற்கும், அவமானப்படுத்திக் கொள்வதற்கும் யார் உங்களிடம் பேசுவார்கள்?” என்று  கேட்டான். நான் கூறினேன் : “அட  உனக்கு தான் வாதவிவாதம்  செய்வதில் விருப்பம் எனக்கு அதில்   விருப்பமில்லை உன்னுடைய விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக எனக்கு இஷ்டம் இல்லாமல் இருந்தாலும் விவாதம் செய்தேன்.  இப்போது அந்த விவாதங்களில்   மாட்டிக்கொண்டாலோ,   கேள்விக்குறியவனானாலோ நான் என்ன செய்யமுடியும். பரவாயில்லை, இனிமேல் நாம் விவாதம் செய்ய மாட்டோம் என்று இப்போது முடிவு செய்வோம். சரிதானே? அட,  வாத விவாத விளைவாக நம்முடைய நட்பை விட்டு  கொடுக்கலாமா? நட்பு  மேலானது. வாத விவாதங்கள் அல்ல”. இப்படி எல்லாம் அவனுக்கு புரிய வைத்து, அப்போதிலிருந்தே அவனிடம் வாத விவாதங்கள் செய்வதை விட்டுவிட்டேன். ஆனால் அன்றே என்னுடைய மனதில் வாத விவாதங்களினால்  மனிதன் நம்மிடமிருந்து முறித்துக் கொண்டு, விலகிச் சென்று விடுவான், அருகில் வர மாட்டான்’ என்ற எண்ணம்  பதிந்துவிட்டது.

[தொடரும்]

நான் சாதாரண ஸ்வயம்சேவக் -5

(ஸ்ரீ குருஜி அவர்களின் பௌத்திக்
முந்தய பகுதியின் தொடர்ச்சி )

வேண்டாம் சுயநலம்

எப்பொழுதாவது சுயநலத்தால்  ஒருவர் சங்கத்திற்கு வரலாம் .அப்படி ஒருவர் வந்திருதார் அவர் ஒரு வக்கீல். ஷாகாவில்  என் கண்ணில் பட்டார். நானும் அவருடன் வக்கீல் என்ற முறையில் சிறிது காலம் பழகியிருந்தேன். ஆகவே நான் அவரைக் கேட்டேன் “என்ன விசேஷம்? இன்று ஷாகாவில் தென்படுகிறீர்களே” என்று நான் கேட்டேன். அதற்கு அவர் “சங்க கார்யம் நல்லது” என்றார். திடீரென்று இவருக்கு இப்படி ஏன் தோன்ற வேண்டும் என்று நான் சிந்தித்தேன். ‘இதில் ஏதோ மர்மம் இருக்க வேண்டும். இவர் மனதில் என்னதான் உள்ளது எனத்  தெரிந்து கொள்ள வேண்டும். வக்கீல் என்ற முறையில் அவர் என்னைவிட மூத்தவராக இருந்தாலும், சற்று ஆழத்திற்கு சென்று விஷயத்தை புரிந்து கொள்வோம்’ என்று நினைத்தேன். எனவே அது  இது என்று பலவிதமாகக் கேள்விகள் கேட்டேன். நாகபுரியில் வக்கீல் ஸ்வயம்சேவகர்களுக்காக ஒரு திட்டம் உண்டு என்று தெரியவந்தது. அவர்களிடம் நாகபுரி தாலுகா மற்றும் ஜில்லாவில் சங்க ஷாகா ஆரம்பிக்கின்ற வேலை ஒப்படைக்கப்பட்டிருந்தது.  ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு அன்று அங்கே செல்ல வேண்டும் அங்கு செய்த வேலையை பற்றி அடுத்த செவ்வாய்க்கிழமை இரவு பைட்டக்கில் விவரங்கள் கூறி, அடுத்த வாரத்திற்காக  திட்டமிடுவது என்ற முறை  இருந்தது.  இந்த வக்கீலுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. இப்படி செல்கின்ற வக்கீலுக்கு மாவட்டம் முழுவதும் பலருடைய அறிமுகம் ஏற்படும் என்ற விஷயம் இந்த வக்கீலுடைய கவனத்திற்கு வந்தது. மாவட்ட கேந்திரத்தில் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட வேலைக்கென வரும் வாய்ப்பு இருக்கும். அப்பொழுது, அறிமுகமானவர்கள் இந்த வக்கீலிடம் வருவார்கள். நாமும் இதில் நுழைந்தால் நம்மிடமும் மக்கள் வருவார்கள். தொழில் வளரும் – இப்படி தொழில் ரீதியான சுயநலத்தின் காரணமாக அவர் ஷாகா வந்திருந்தார்.

நான் முன்னதாகவே ஒரு சிலர் சுயநலத்திற்காக  ஷாகா வருவார்கள் என்று சொல்லியிருந்தேன் அல்லவா?  அதுபோல இவர் சுயநலத்துடன் வந்திருந்தார். நான் பேச்சுவாக்கில் அனைத்தையும் அவரிடமிருந்து வரவழைத்தேன். அவர் கூறினார், “மாவட்டத்தில் உள்ள அனைவருமே வேலைக்காக நாகபுரி வருகிறார்கள். ஒருவேளை அவர்களிடம் எனக்கு நன்றாக அறிமுகமாகி இருந்தால்   என்னிடமே வருவார்கள். என்னுடைய வேலையும் நன்கு  நடக்கும்!” என்றார்.  “தாங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினேன். இதில் என்ன தவறு?” என்று அவர் கேட்டார் நான், நீங்கதான் ஸ்வயம்சேவக் ஆகவே நம்மவர் என்ற காரணத்திற்காக அவர்கள் உங்களிடம் கவரப்பட்டு தம்முடைய வேலைக்காக வருவார்கள். ஆனால் நம்மவர் என்ற காரணத்திற்காக அவர்கள் உங்களுக்கு கட்டணம் தர மாட்டார்கள்” என்று கூறினேன்.

இதைக்கேட்ட அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. “உண்மையிலேயே இப்படிதான் நடக்குமா?” என்றார்  ‘எனனுடைய  உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்களேன்’  என்று நான் விளக்கமாகக்   கூறினேன். என்னுடைய உதாரணத்தைக் கூறிய  உடனே அவர் இங்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை என்று உணர்ந்து விட்டார்  அடுத்த நாளில் இருந்து ஷாகா வருவதை நிறுத்தி விட்டார்.

[தொடரும்]

நான் சாதாரண ஸ்வயம்சேவக் -4

(ஸ்ரீ குருஜி அவர்களின் பௌத்திக்
முந்தய பகுதியின் தொடர்ச்சி )

புத்திசாலித்தனம் தேவையில்லை

எவராவது ஒருவர் நான் ஒரு பெரிய புத்திசாலி . புத்தியின் பலத்தால் மற்றவர்களுக்கு சங்க காரியத்தின் நன்மையை புரிய வைத்து விடுவேன். அவர்கள் நம்மோடு வந்து விடுவார்கள்’ என நினைத்தால் ஏமாந்துதான் போவார்.  நம்மிடம்  புத்தியும் இருக்கலாம் மற்றவர்களைவிட வாதவிவாதங்கள், சர்ச்சை செய்வதில் அதிக திறமையும் இருக்கலாம். ஆனால் இந்த காரணத்திற்காக மட்டுமே நம்முடைய பேச்சு மற்றவர்களுக்கு பிடிக்கும் என்பது உண்மையல்ல.  ஒரு சிலருக்கு நம்மிடம் வாதவிவாதங்களில் பதில் அளிக்க முடியாமல் போய்விடலாம். நமது தோல்வியை ஒப்புக் கொண்டு விடலாம். ஆனால், வேலையில் ஈடுபடுவார்கள் என்று கூறி விட முடியாது.

ஒரு சம்பவம் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது . ஒரு நல்ல வக்கீல் ஸ்வயம்சேவக்க்காக இருந்தார்   நண்பர் ஒருவர் என்னிடம், ‘இந்த வக்கீலுடைய மனதில் சங்கத்தைக்  குறித்து பலவிதமான அச்சம், சந்தேகங்கள் உள்ளன. அவர் உங்களுடன் கலந்து பேசுவதற்கு ஆசைப்படுகின்றார்’ என்று சொன்னார்.

வக்கீல் எனக்கு முன்பே அறிமுகமானவர் சில நாட்கள் ஷாகாவுக்கு வந்திருந்தார்.   ஆகவே நான் அவர் வீட்டிற்கு சென்று உங்கள் மனதில் என்ன சந்தேகங்கள்? சொல்லுங்கள் என்று கேட்டேன்.பிறகு அன்று எங்கள் இருவருக்கிடையே  ஒன்றரை இரண்டு மணி நேரம் கலந்துரையாடல் நடைபெற்றது. இப்போதெல்லாம் அவ்வளவு நேரம் பேசுவதற்கு வாய்ப்பே இருக்காது. ஆனால் அந்த நாளில் சங்க வேலை இவ்வளவு வளரவில்லை. மேலும், இந்த அளவிற்கு பிரச்சனைகளும் இருந்ததில்லை. ஆகவே எனக்கு நேரம் கிடைத்தது. அந்த இரண்டு மணி நேரத்தில் அவருடைய மனதில் என்னென்ன சந்தேகங்களும், கேள்விகளும் இருந்தனவோ, அவற்றிற்கெல்லாம் பதில் அளிக்க முயற்சி செய்தேன்

ஒவ்வொரு முறையும் அவர் “இது  சரி, ஆனால் குருஜி…” என்று மீண்டும் அதைப் பற்றியே கேட்டுக்கொண்டிருப்பார்.  நான் மீண்டும் அவருக்கு புரிய வைப்பேன். அவர் “நீங்கள் இப்படி சொல்வது சரிதான் குருஜி, ஆனால்……?” என்றார்.  நான் சொன்னேன் “தம்பி, உன்னிடம் தான் எவ்வளவு ஆனால்’கள் ?   நான் ஒவ்வொன்றாகத் தூக்கி எரிகிறேன்புதிதாக இன்னொரு ‘ஆனால்’ எழுகின்றது என்ன விஷயம்?”

அதாவது அவரால் உணர்ந்து கொள்ள முடியாமல் இருந்தது. புத்திபூர்வமாக தன் கேள்விகளுக்கு பதிலைப்  புரிந்து கொண்டார். ஆனால் சங்க காரியத்தை  தான் செய்ய முடியும் என்று அவருடைய மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியவில்லை. இதனுடைய பொருள், நம்மிடம் இல்லை என்று நிரூபிக்கப்பட்டது என்றல்ல. மாறாக புத்திக்கும்   அதற்கே உரிய எல்லைகள் உள்ளன. அவகளைக் கடந்து அது போக முடியாது. நாம் என்ன செய்ய முடியும்?

அப்படியானால் மக்கள் நம்முடைய பேச்சை எப்படி கிரகித்து ஏற்றுக் கொள்வார்கள்? அதற்கு சில காரணங்கள் உள்ளன.

  1. ஒரு சிலர் கடவுள் தன்னை சங்க காரியத்திற்காகவே படைத்தார் என்பது போல் இருப்பார்கள். அவர்களை ஷாகாவிற்கு அழைத்தாலோ அல்லது சங்க காரியம் செய்யவேண்டும் என்று கூறினாலோ, அவர்கள் பூர்வ ஜென்மப் பண்புப்பதிவுகள் உடனே விழித்துக்கொண்டு, இணைந்து வேலை செய்வதற்காக தயாராகி விடுவார்கள். அவர்களுக்கு புரிய வைப்பது ஒன்றும் தேவை இருக்காது. இப்படிப்பட்டவர்கள் அதிகம் பேர் உள்ளார்கள். இது ஒரு காரணம்.
  2. மற்றும் சிலர் சுயமாகவே ஆழமாக சிந்தித்து, நாட்டினுடைய சூழ்நிலை, பிரச்சனைகள் ஆகியவற்றைப் பார்த்து, விவேகத்துடன் சங்க காரியத்தை விட்டால் வேறு வழியில்லை என்று புரிந்துகொண்டு, கடமை உணர்வோடு வேலை செய்ய முன் வருவார்கள்
  3. ஒரு சிலர்,  நண்பர்கள் வேண்டும் என்று பசித்திருப்பார்கள். சங்கத்தில் இந்த பசி தீர்ந்துவிடும். இதற்காக அவர்கள் வருகின்றார்கள்.

[தொடரும்]

நான் சாதாரண ஸ்வயம்சேவக் -3

(ஸ்ரீ குருஜி அவர்களின் பௌத்திக்
முந்தய பகுதியின் தொடர்ச்சி )

அக்கம்பக்கத்தாருடன் பழகுவது

நாம் வசிக்கும் இடத்தைச் சுற்றி பல வீடுகள் அவற்றில் ஏராளமானவர்கள். அதாவது நாம் எல்லோரும் சேர்ந்து ஒருவருக்கு மற்றொருவர் அக்கம் பக்கத்தினர் நமக்குச்  சிறிது ‘அக்கம்பக்கத்தினர் தர்ம’மும் உண்டு அந்தத்   தர்மத்திற்கு ஏற்றவாறு நமக்கு, நமது அக்கம்பக்கத்தினர் கள்    எப்படி நேரம் செலவிடுகிறார்கள், எப்படி வாழ்கிறார்கள் என்பது பற்றி தெரிந்திருக்க வேண்டும். அவர்களுக்கு என்ன கஷ்ட நஷ்டங்கள் உள்ளன என்பதும் தான். அவர்களுக்கு உதவி செய்வதில்   நாம் ஈடுபடுவோம். இது ‘அக்கம்பக்கத்தினர் தர்மம்’. அக்கம்பக்கத்தினர் களுக்கிடையே ஏதேனும் குழப்பம்  ஏற்பட்டால் நம்முடைய வீட்டின் கதவை உள்பக்கமாகத்  தாழிட்டு  உட்கார்ந்து கொள்கிறது அக்கம்பக்கத்தினர் தர்மமாகாது. பக்கத்தில் யாருக்கேனும்   உடல்நிலை சரியில்லாத போய்விட்டால், அது அவனுடைய தலை எழுத்து, பிழைத்தால் பிழை க்கட்டும்  இல்லாது போனால் சாகட்டும்’ என்று நினைப்பது என்று நினைத்து அவரை கண்டு கொள்ளாமல் இருப்பது அக்கம்பக்கத்தினர் தர்மமல்ல. இதில் மனிதத்தன்மையே இல்லை.

ஆகவே ‘அக்கம்பக்கத்தினர் தர்ம’த்தைக் கடைப்பிடிப்பதற்காக வீடுவீடாக செல்லவேண்டும், எல்லோரையும் சந்திக்க சந்திக்கணும், பேசணும், எல்லோருடனும் மிகவும் நட்புடனும் அன்புடனும் பழகிவர முயற்சி செய்யவேண்டும். எல்லோருடைய உள்ளத்திலும் நம்மைப் பற்றி இவன் மிகவும் நம்பிக்கைக்குரியவன், இவனுக்குள் கபடமே இல்லை சுயநலமற்ற அன்புள்ளவன் இவன் நம்முடைய உண்மையான நண்பன், நமக்கு எந்த கஷ்டமும் வரவிடாதவன், எப்போதுமே நம் கூட இருப்பவன். உதவி செய்ய ஓடி வருபவன்’ என்ற கண்ணோட்டம் ஏற்படுவதற்கான முயற்சி செய்யவேண்டும். அனைவரின் உள்ளத்திலும் நம்மைப்பற்றி  நம்பிக்கை இருக்கட்டும்.   இந்த நம்பிக்கையின் பலத்தின் மீது  அக்கம்பக்கத்தினரான நாம் அனைவரும் ஒரு பெரிய குடும்பம் போல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயற்சி செய்வோம். இவ்வாறு நட்பு, அன்பு, நம்பிக்கை நிறைந்த சூழ்நிலையை  நமது அக்கம்பக்கத்தினர்களுக்கிடையே  ஏற்படுத்தும்போதுதான், அவர்களின் மத்தியில் இருந்து சங்க காரியத்திற்காக ஸ்வயம்சேவகர்களும் கிடைக்கிறார்கள்.

[தொடரும்]

நான் சாதாரண ஸ்வயம்சேவக் – ஸ்ரீ குருஜி -2

நான் சாதாரண ஸ்வயம்சேவக் -2

(ஸ்ரீ குருஜி அவர்களின் பௌத்திக்
முந்தய பகுதியின் தொடர்ச்சி )

A_RSS_swayamsevak

வேலை அமைப்பு

ஸ்வயம்சேவகனாக இருப்பதைவிட பெருமைக்கும், மரியாதைக்கும் உரிய வேறொரு விஷயமும் நமக்கு இல்லை என்பதே இதன் கருத்து. அப்படி இருந்தால், சர்சங்கசாலக்கிலிருந்து கட் நாயக்  வரை இருக்கின்ற இந்த அனைத்து அதிகாரிகள் எதற்காக? என்று யோசிப்பீர்கள். அது இயக்கத்தை வழிநடத்த ஒரு ஏற்பாடுதான். ஏனெனில், எந்த ஒரு இயக்கமும் தகுந்த ஏற்பாடு இல்லாமல் இயங்காது. நமக்கோ இயக்கத்தை நடத்த வேண்டியுள்ளது.ஆகவே, நாம் அப்படி ஏற்பாடு ஒன்றை அமைத்து, அவரவருக்குப் பொறுப்பு அளித்துள்ளோம். அதாவது, அவர்கள் அந்தந்தப் பொறுப்பை ஏற்று பணிபுரிகின்ற ஸ்வயம்சேவகர் ஆகின்றார்கள். ஆனால், அவர்கள், வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஏதேனும் ஒரு விஷயம் இருக்குமேயானால், அது, இன்று ஏற்பாடு என்ற முறையில் எனக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தால், ‘நான் ஸ்வயம்சேவக் என்கிற இந்த விஷயம் தன பெருமைப் பிடத்தக்கது’ என்பதேயாகும்.

ஆகவே பொதுவாக நான் ஒரு சாதாரண ஸ்வயம்சேவகன் என்று சொல்லும்போது, இப்படிப்பட்ட ஒரு பொறுப்புணர்வு நமது உள்ளத்துக்குள் இருக்க வேண்டும். இந்தப் பொறுப்பு மிகவும் பெரிதானது. சமுதாயமும் நம்மை கவனித்துக் கொண்டு இருக்கிறது. அது நம்மை ஒரு ஸ்வயம்சேவகன் என்ற வடிவத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறது.சமுதாயத்திற்கு நம்மிடமிருந்தது பெரிய பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன. அவற்றை நாம் புயூர்த்தி செய்து, எதிர்பார்ப்பதைவிட நல்ல முறையில் தேற வேண்டும் என்று நமக்கு   மனதில் படுகின்றது.

* ஷாகா எப்படி இருக்க வேண்டும்?

பொதுவாக, நாம் என்னென்ன விஷயங்கள் பற்றி கவனம் செலுத்த வேண்டும்? முதன்முதலில் நாம் சங்க ஷாகா பற்றிச் சிந்திப்போம். நமது ஷாகா எவ்வாறு இருக்க வேண்டும்?

  1. ஷாகா, தினசரி நடக்க வேண்டும்.
  2. ஷாகா குறித்த நேரத்தில் நடக்கவேண்டும்.
  3. ஷாகாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் இருக்கவேண்டும்.
  4. அனைத்து ஸ்வயம்சேவகர்களுக்கிடையேயே பரஸ்பரம் கலந்துரையாடல், நட்பு, அன்பு, மற்றும் துமையான சூழ்நிலை இருக்கவேண்டும்.
  5. நமக்குள் கருத்துக் பரிமாறிக் கொண்டு, சர்ச்சா நடத்தி நமது உள்ளத்தில் லட்சிய வடிவம் நாளுக்கு நாள்  மேலும், மேலும் தெளிவாகி, பலமாக வேரூன்ற நமக்குள் தூண்டுதலும், ஆசையும் இருக்க வேண்டும்.
  6. ஒன்றாக இணைந்து நாம் தினந்தோறும் நமது பிரார்த்தனையைப் படுவோம். கம்பீரமாகவும், சிரத்தையுடனும் பொருள் உணர்ந்தும் படுவோம்.
  7. பரம பவித்ரமான நம்முடைய காவிக்கொடியை, நாம் அனைவரும் ஒன்றுகூடிப் பணிவுடன் வணங்குவோம்.
  8. ஷாகா வீகிரவுக்குப் பிறகு, யார் வரவில்லை என்பதை பற்றியெல்லாம் கேட்டறியவேண்டும்.

இவை ஷாகாவில் தினசரி செய்யவேண்டும்.

நாம் இன்னும் என்ன செய்ய வேண்டியுள்ளது?

  1. ஷாகா, குறித்த நேரத்தில் துவங்கப்பட வேண்டும் என்றால், நாம் நமது வீட்டிலிருந்து, அல்லது நாம் எங்கிருக்கின்றோமோ அங்கிருந்து, ஷாகா நேரத்திற்கு முன்பே (குறைந்த பட்சம் இரண்டு நிமிடம் முன்னதாக) சங்கஸ்தானத்திற்கு வந்துவிட வேண்டும்.
  2. நான் ஒருங்கிணைக்கும் மனிதன் தனிக்காட்டு ராஜா அல்ல என்பதை சர்ரே நினைத்துப் பார்ப்போம். அப்படியிருக்க, ஷாகாவிற்குச் சற்றுமுன்பே புறப்பட்டு, அக்கம்பக்கத்திலுள்ள ஸ்வயம்சேவகர்களை அழைத்துக்கொண்டு, சேர்ந்து ஏன் செல்லக்கூடாது? இது ஒரு சாதாரணமான நட்பின் செயலாகும். இதில் பொறுப்புப்பற்றிய கேள்வி எங்கே எழுகிறது? கட்நாயக் அல்லது காண சிக்ஷக் ஆகவேண்டிய தேவை எங்குள்ளது ? சாதாரணமாக நட்பு என்றாலே,நாம் ஒரு நல்ல வேலைக்குச் செல்லும்போது இயற்கையாகவே நம்முடைய நண்பன் நம்முடன் வருகிறான். நமது வீட்டின் அருகிலுள்ள அதாவது ஷாகா செல்லும் வழியிலுள்ள எந்த ஒரு உற்ற நண்பரையும் உடன் அழைத்துக் கொண்டு சிரித்துக்கொண்டு ஆடிப்பாடி ஆனந்தமாக சங்கஸ்த்தான் சென்றடைவோம். இது நமக்கு படிந்து வந்த பழக்கமாகிவிடவேண்டும்.
  3. சங்கஸ்தானில் நடக்கின்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் முழுமனதுடன் கலந்துகொள்ள வேண்டும். கட்டுப்பாட்டுடன், விதிமுறைகளுக்கேற்ப ஈடுபடுவோம். அவற்றில் கஷ்டம் ஏற்பட்டால் கோவம் அடைய வேண்டாம்.நமது நிகழ்ச்சிகள் சற்று கஷ்ட்டமாகத்தான் இருக்கும். கஷ்டப்படுகின்ற பயிற்சியைச் செய்து, பெரிய பெரிய வேலைகளை இயற்கையாகச் செயகின்ற சக்தியை வளர்த்து கொள்ளவேண்டும்.ஆகவே, அவற்றை முயற்சி செய்து பார்ப்போம்.நிகழ்ச்சிகள் நமக்குள் அச்சமின்மை, தன்னம்பிக்கை மற்றும் பராக்கிரம உணர்வுகளை ஏற்படுத்தி, நம்மை கட்டுப்பாட்டுடன் இணைத்து, நாம் அனைவருமே ஒரு பெரிய சக்தியின் அங்கம் என்கின்ற உணர்வை என்றும் மனதில் பதியச் செயகின்றது. ஷாகா நிகழ்ச்சிகளில் இவ்வாறு நாம் நன்கு ஈடுபட்டு பயிற்சி பெறுவோம்.
  4. பிரார்த்தனா, த்வஜப்ராணம், கோடி இறக்கம், வீக்கிற ஆனபிறகு அவசர அவசரமாக வீட்டிற்கு ஓடுகின்ற எண்ணம் என் ஏற்பட வேண்டும்? அப்படி ஆகி கூடாது. வீட்டிற்கு ஓடுகின்ற அல்லது வேறு எங்கேயோ ஊர் சுற்றப் போகின்ற எண்ணமேற்படுகின்றது என்றால், நாம் ‘ ஷாகாவிற்கு விருப்பமில்லாமல், கட்டாயத்திற்கு வந்துள்ளோம், எப்படியோ இங்கிருந்து தப்பிவிட வேண்டும் என்று நினைக்கின்றோம்.’ என்றே அபிப்ராயம் எழும். நாம் யாருடைய கட்டாயத்தின் பேரிலும் ஷாகா வருவது இல்லை. அவ்வாறு வரவும் கூடாது. முழுமனதுடன் வருகிறோம் என்பது இங்கே முறை. அப்படி இருக்க, இங்கிருந்து ஓடிப்போகின்ற எண்ணம் ஏன்? இன்னும் கொஞ்சநேரம் இங்கேயே உட்க்கார்ந்திருப்போம் என்று மனதில் தோன்ற வேண்டும்.

உட்க்கார்ந்து இரண்டு விஷயங்களை பற்றிப் பேசுவோம்.

அ. யார் வரவில்லை? ஷாகாவிற்கு வரவேண்டிய நமது ஸ்வாரசேவக சகோதரர்களில் யார் வந்தார்கள், யார் வரவில்லை என்பதைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்வோம். யார் வரவில்லையோ ‘அவர் என் வரவில்லை’ என்பதைக் கேட்டறிவோம். இது  தினம்தோறும் செய்யவேண்டிய முறையான வேலையாகும்.

ஆ. லட்சியத்தை நினைப்பது: தின்தோறும் நமது லட்சியத்தை நினைப்போம். இமயமலையிலிருந்து துவங்கி, தெற்கிலுள்ள ஹிந்து மஹாசமுத்திரம்வரை எண்ணற்ற புனித ஸ்தலங்கள் நாடு நெடுக அமைந்துள்ளன. அவற்றை நினைவுபடுத்திக் கொள்வோம். பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலங்கள் உள்ளன. ஒவ்வொரு இடத்துக்கும் யாரவது ஒரு மாவீரனின் சிறப்பு அம்சம் பொருந்தியுள்ளது. அவற்றை நினைப்போம். அந்தப் பெருந்தகையாளரின் விசேஷ குணங்களை நாம் அனைவரும் ஓர் இடத்தில் உட்கர்ந்து நினைவு படுத்திக்க கொண்டு இந்த குணங்கள் நமக்கு உள்ளனவா என்று சிந்திப்போம்.  நமக்கு இந்த குணங்கள் ஏற்பட நாம் ஏதேனும் முயற்சி செய்கிறோமா இல்லையா? அல்லது, நாம் வெறுமனே வீர சிவாஜியின் பெயரை எடுத்துரைப்பவர்களா? இப்பொழுதெல்லாம் சிவாஜியின் பெயரை உச்சரிப்பவர்கள் ஏராளம். அனால் அவருடைய குணங்கள் நமக்கு வரவேண்டும். சிவாஜி என்று சொன்னவுடன் முழு பாரத நாட்டின் சுதந்திர சூரியன் மீண்டும் உதயமாகி, ஹிந்துக்களின் ஆட்சி அமைக்கின்ற தர்மத்தை ஆதாரமாகக் கொண்ட புனித அரசை அமைகின்றதான, உயர்ந்த பணிபுரிகின்ற, இணையில்லாத வீரன், நீதிமான், புத்திசாலியான அரசியல் மேதை, அத்துடன் மிகவும் தூய அபபழுக்கற்ற தேசிய ஒழுக்கம் கொண்ட, அனைவரின் மனதையும் கவரும் ஒரு மாமனிதனின் வடிவம் நமக்கு நம் மனக்கண்முன் வந்து நிற்கின்றது. அவருடைய இந்த குணங்கள் நமக்கு வரட்டும். இதேபோல் ஒவ்வொரு மகானைப் பற்றியும் சிந்தித்து, நாமும் நமது பண்புநலனை செழுமைப் படுத்திக் கொள்ள எவ்வளவு முயற்சி செய்துள்ளோம்? தேவையற்ற தீய குணங்களை அகற்ற எந்த அளவு முயற்சி செய்தோம் ? இப்படியெல்லாம் தனியாகவும், கலந்தும் சிந்தனை செய்வோம்.

  1. யார்வரவில்லையோ அவர்கள் ஏன் வரவில்லை என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவர்களை சென்று பார்க்க வேண்டும். சின்னச் சின்ன குழுக்களாகச் செல்லலாம். அவரைச் சிந்திப்போம். ஏதேனும் கஷ்டமிருந்தால் அதைச் சரிசெய்ய முயற்சி செய்வோம். எந்த கஷ்டமும் இல்லை என்றால் எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஷாகாவிற்கு வராமல் இருப்பது சரியல்ல என்கின்ற விஷயத்தை சரியான முறையில் நல்ல வார்த்தை சொல்லி புரியவைப்போம். அடுத்து ‘நாளிலிருந்து தான் ஷாகாவிற்கு போக வேண்டும்’ என்கிற எண்ணம் அவருக்கு ஏற்படும் வகையில் புரியவைக்க வேண்டும்.

இதுதான் நம்முடைய தினசரி குறைந்தபட்ச வேலை “சாதாரண ஸ்வயம்சேவக்” என்கிற முறையில், நாம் இவ்வளவெல்லாம் செய்தே ஆகவேண்டும் .இது தவிர மேலும் சில கடமைகள் உள்ளன.

[தொடரும்]