ஆர்.எஸ்.எஸ் வளர்ந்த வரலாறு-8

குருதக்ஷிணா முறையின் சிறப்பு

புதிய புதிய ஊழியர்களை உருவாக்குவதுடன் கூடவே, ஷாகாக்களில் புதிதாக வரும் ஸ்வயம் சேவகர்களிடம் சங்கத்துக்குத் தேவையான குணங்களையும் சரியான முறையில் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற நோக்கில் டாக்டர்ஜி ஷாகா நடைமுறையில் சில அடிப்படை அம்சங்களை இணைத்தார். எடுத்துக்காட்டாக, எந்தவொரு அமைப்பும் சிறந்த முறையில், நல்லொழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டிருப்பதற்கு அதன் உறுப்பினர்கள் இடையே பணவிஷயத்தில் தூய்மையான எண்ணம் இருப்பது இன்றியமையாதது. எனவே டாக்டர்ஜி சங்கத்தில், கட்டணம் அல்லது நன்கொடை என்ற கருத்துக்குப் பதிலாக சமர்ப்பண மனப்பான்மையை முன்வைத்தார்.

இதே நோக்கில்தான் ஸ்ரீ குருதக்ஷிணா முறையைத் தொடங்கினார். காவிக் கொடியையே தனது குருவாகக் கருதி, ஸ்வயம்சேவகர்கள் வியாஸ பூர்ணிமா (ஆடிமாதப் பௌர்ணமி) நன்னாளில், அதன் முன்னே தனது சக்திக்கு ஏற்றவாறு தக்ஷிணை சமர்ப்பிக்கின்றனர். அதை வைத்துத்தான் சங்கம் தனது பணிகள் அனைத்தையும் நடத்துகிறது. இம்முறையினால் ஸ்வயம்சேவகர்களுக்குள் சுயசார்புப் பண்பும் வளர்கிறது. –

தனிமனிதன் மீது அல்ல; லட்சியத்தின் மீதே ஈடுபாடு

RSS Gurupooja

இப்படிப்பட்ட வித்தியாசமான குரு பூஜை முறையின் மூலம் தனிமனிதனிடம் பற்றுக் கொள்வதற்கு பதிலாக, லட்சியத்தின்மீது பற்றுக் கொள்ளும் பண்புப்பதிவை ஏற்படுத்துவதில் டாக்டர்ஜி வெற்றி கண்டார். இதற்கு ஏற்ற வகையில் அவர் ஸ்வயம் சேவகர்கள் முன்னே தனது வாழ்வையே எடுத்துக்காட்டாக வைத்தார். சங்கம் தொடர்பான முடிவு எதுவாயினும், உடன் பணியாற்றுபவர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே தீர்மானிப்பார். எல்லா ஸ்வயம் சேவகர்களிடமும் எதிர் பார்க்கப்படும் ஒவ்வொரு விதிமுறையையும், தானும் மிக உறுதியாக அவர் கடைப்பிடித்து வந்தார்.

எதிர்ப்புகளுக்கிடையேயும் வளர்ச்சி

இயற்கையாக உங்கள் மனதில் எழக்கூடிய இன்னொரு கேள்வி: சங்கத்தின் சிந்தனைகள் – செயல்களை யாருமே எதிர்க்கவில்லையா?

உண்மையில் சங்கம் பிறந்தது முதலே பலவகையான பொய்ப் பிரச்சாரங்களுக்கும், பயங்கர எதிர்ப்புகளுக்கும் இலக்காகி வந்துள்ளது. டாக்டர்ஜி எத்தனை தீவிரமான தேசபக்தர் என்பதை இக்கதையின் தொடக்கத்திலேயே உங்களுக்குக் கூறியிருக்கிறேன் அல்லவா?

எனவே அச்சமயத்தில் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கழுகுப் பார்வை எப்போதும் சங்கத்தின் மீதே இருந்தது. மூன்றுமுறை சங்கத்துக்கு தடை விதிக்கவும் ஆங்கிலேய அரசு முயற்சி செய்தது. ஆனால் டாக்டர்ஜி மற்றும் ஸ்ரீ குருஜியின் திறமையினாலும், மக்கள் ஆதரவினாலும் அம்முயற்சிகள் தோல்வியடைந்தன.

பாரதம் விடுதலை அடைந்த பின்பும் எதிர்ப்புகள் குறையவில்லை. 1948-இல் காந்திஜி கொலை செய்யப்பட்ட பிறகும், 1975-77இல் நெருக்கடிக் காலத்திலும் தடை விதிக்கப்பட்டது. அண்மையில் 1992-இல் அயோத்தி கரசேவைக்குப் பிறகும் கூட, தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் அரசே நிபந்தனையின்றித் தடையை விலக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. (1992ன் தடை, நீதிமன்றத் தீர்ப்பின்படி விலகியது) ஒவ்வொரு முறையும் சங்கம் புடம் போட்ட தங்கம்போல அதிக ஒளியுடன், வலிமையுடன், மக்களின் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

தடை விதித்தவர்கள் யார்?

சங்கத்துக்கெதிராக இப்போதும் இடைவிடாது பொய் பிரச்சாரத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஷாகாக்களின் விஸ்தரிப்புடன் கூட தேசிய வாழ்வின் – அரசியல் உள்ளிட்ட – அனைத்துத் துறைகளிலும் சங்கத்தின் செல்வாக்கு வளர்ந்துள்ளதையடுத்து, சங்கத்தைப் பற்றிப் பல விதமான எதிர்ப்புப் பிரச்சாரங்களும் வளர்வது இயற்கையே. ஆனால், சங்கம் மற்றும் அதனுடன் தொடர்புள்ள அமைப்புகளின் மீது பழி சுமத்துபவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

உங்களுக்கும் இந்த விஷயம் விளங்கியிருக்கும் – இவர்கள் சில அரசியல் மற்றும் மதத் தலைவர்களும், குறிப்பாக ஆங்கிலப் பத்திரிகைகள், கம்யூனிஸ்டுகள், கிறிஸ்தவப் பாதிரிகளும்தான். ஹிட்லரிடம், கோயபெல்ஸ் என்ற பிரச்சார மந்திரி ஒருவன் இருந்தான். அவன் ‘பொய்யையே நூறு முறை திரும்பத் திரும்பக் கூறினால் அது மெய்போலத் தோன்றத் தொடங்கிவிடும்’ என்பான். இந்தக் குற்றம் சாட்டுபவர்கள் எல்லாம் அவனது நேர் சீடர்கள் போலும்!

காந்திஜி கொலை தொடர்பான பழி ஆதாரமற்றது

உதாரணமாகப் பாருங்கள்…. காந்திஜியைக் கொன்றது சங்கம்தான் என்ற குற்றச்சாட்டு குறித்து 27.2.1948-இல் நேருவுக்கு சர்தார் படேல் கடிதம் எழுதினார். ‘காந்திஜியின் கொலையில் சங்கத்தின் உறுப்பினர் எவருக்கும் தொடர்பில்லை’ என்பதை அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். பிறகு நீதிபதி ஆத்ம சரணின் தனி நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சங்கத்தின் பெயரோ எந்தவொரு ஸ்வயம்சேவகரின் பெயரோ குறிப்பிடப்படவில்லை . அதன்பிறகு, 1965-இல் பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட கபூர் கமிஷனின் அறிக்கையும் சங்கத்தை நிரபராதி என்றே கூறியது. 1977-இல் அன்றைய பிரதமர் ஸ்ரீ மொரார்ஜி தேசாய் நாடாளுமன்றத்தில் இதே விஷயத்தை கூறினார்.

உண்மை இப்படி இருக்க, காந்தி கொலைப் பழியை சங்கத்தின் மீது மீண்டும் மீண்டும் சுமத்திவருபவர்கள் கோயபெல்சின் சீடர்களா இல்லையா, நீங்களே சொல்லுங்கள்.

சங்கம் மதவாத அமைப்பு; முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரானது என்பதும் இதேபோன்று மற்றொரு அடிப்படையற்ற குற்றச்சாட்டு. இதுவரை நாடெங்கிலும் எத்தனையோ மதக்கலவரங்கள் நடந்துள்ளன. அவை தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் ஒவ்வொன்றுமே சங்கத்தை நிரபராதி என்றே நிறுவியுள்ளன. கன்னியாகுமரி – மண்டைக்காடு கலவரம் பற்றி நீதிபதி வேணுகோபால் கமிஷன் கூறியுள்ளது என்ன? “கிறிஸ்தவ மதமாற்ற முயற்சிகளுக்கு ஹிந்துக்களின் பதிலடிதான் அது; மதமாற்றத்தைத் தடை செய்ய வேண்டும்” என்றுதான் அந்தக் கமிஷன் அரசுக்கு அறிவுறுத்தியது.

பிரமுகர்களின் கருத்து என்ன?

Dr. Zakir Husain :Former President of India
DR. ZAKIR HUSAIN – Former President of India

டாக்டர் ஜாகிர் ஹுசைன் (பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர்) 1949 நவம்பர் 20 அன்று பீகாரில் நடந்த மிலாது விழாவில்: “சங்கத்தைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம்களை வெறுக்கின்றனர், அவர்களைத் தாக்குகின்றனர் என்பது போன்ற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. சங்கத்திடமிருந்து பரஸ்பர அன்பு, ஒத்துழைப்பு, ஒருங்கிணைக்கும் திறமை இவற்றை முஸ்லிம்கள் கற்றுக் கொள்ள வேண்டும்”.

ஸ்ரீ கோகா சுப்பாராவ்ஜி பாரதத்தின் முன்னாள் தலைமை நீதிபதி – பெங்களூரில் 25 ஆகஸ்டு 1968-ல் சங்க குருதக்ஷிணா விழாவில்) “ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாபெரும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது தேசத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காப்பதில் ஒரு வலிமை வாய்ந்த கருவியாக வளரும். சங்கம் மதசார்பின்மைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறது என விமர்சிப்பது முற்றிலும் அபத்தமானது”.

இருப்பினும் சில அரசியல்வாதிகள் சங்கத்தை மதசார்பின்மைக்கு விரோதி என ஏன் குற்றம் சாட்டுகிறார்கள்? இதற்குக் காரணம் மிக எளிது. ஹிந்துக்கள் இப்போது விழிப்படைந்து வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் ஒவ்வொரு வகையிலும் தங்களைப் புறக்கணிப்பதையும் கிண்டல் செய்வதையும் கண்டு ஹிந்துக்களது மனதில் கோபம் எழுகிறது. ஹிந்துக்களல்லாதவர்களின் ஓட்டு வங்கியைக் கருத்தில் கொண்டு ஹிந்துக்களை விட அவர்களுக்கு மிக அதிகமான உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கி வரும் அந்த அரசியல்வாதிகளின் தேர்தல் விளையாட்டுக்களும், ஹிந்துக்களின் கவனத்துக்கு வருகின்றன. அவர்களுக்கெதிராக தேர்தல் பாஷையில் எதிர்ப்பையும் ஹிந்துக்கள் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். அவர்களது உண்மையான முகத்தை ஹிந்துக்கள் இனங்கண்டு கொண்டு விட்டனர்.

சங்கம் வேறு, அரசியல் பணி வேறு

Bharatiya Janata Party - Wikipedia

சிலர் சங்கம் மற்றும் பா.ஜ.கவின் பரஸ்பர உறவு பற்றியும் விதவிதமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டேயிருக்கின்றனர். இக்கதையின் தொடக்கத்திலேயே கூறியுள்ளேன், ஸ்வயம் சேவகர்கள் தேசிய வாழ்வின் எல்லாத் துறைகளிலும் ஹிந்துத்வக் கருத்தினைக் கொண்டு சென்று சங்கத்தில் பெற்ற பண்புப்பதிவுகளைக் கொண்டு அந்தத் துறைகளில் தாக்கம் ஏற்படுத்தி வருகின்றனர். அவைகளில் அரசியல்துறையும் ஒன்று. அந்த அமைப்புக்கள் அனைத்துக்கு மிடையில் உள்ள ஒரே உறவு, அனைவரும் ஸ்வயம் சேவகர்கள் என்பதே. பல்வேறு துறைகளில் நடைபெற்றுவரும் அமைப்புகளைப் போன்றே பா.ஜ.கவும் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க ஆட்சி நடக்கும் மத்தியிலோ, மாநிலங்களிலோ கொள்கை வகுப்பதில் சங்கத்தின் தலையீடு ஏதுமில்லை.

இப்படிப்பட்ட எதிர்ப்புக்கள் அனைத்துக்கும் ஒரே காரணம் சங்கத்தின் வளர்ந்து வரும் செல்வாக்கால் அவர்கள் மனத்தில் தோன்றியுள்ள அச்சமே. சுவாமி விவேகானந்தரின் இந்தக் கருத்துரை ஸ்வயம்சேவகர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்: “ஒவ்வொரு அரும்பணியும் நான்கு நிலைகளைக் கடக்க வேண்டியுள்ளது – புறக்கணிப்பு, கேலி, எதிர்ப்பு, இறுதியில் வெற்றி” எனவே இறுதி வெற்றியில் தளராத நம்பிக்கை கொண்டு , ஸ்வயம் சேவகர்கள் செயலில் இறங்கியுள்ளனர்.

ஹிந்து என்ற முறையில் உங்களிடம் அன்பான வேண்டுகோள்

மிகச் சுருக்கமாக சங்கத்தின் கதையை இதுவரை கூறினேன். இதைக் கேட்ட பிறகு உங்களுக்கு நிச்சயமாகத் தோன்றக்கூடிய கருத்து – சங்கப்பணி விரைவாக முன்னேறாவிட்டால் நாட்டுக்கு இன்னும் பல கோரமான பேரழிவுகள் ஏற்படலாம். எனவே இப்பணியை விரைவாக முன்னேற்ற வேண்டி உங்களைப் போன்ற, புதிய புதிய பல்லாயிரம் பேர் இப்புனிதப் பணியில் தோள்கொடுக்க வேண்டியிருக்கும். எனவே இயன்ற வரையில் – ராமாயண அணிலைப் போல – நமது ஹிந்து தேசத்துக்காக நேரம் கொடுப்பது ஒவ்வொரு ஹிந்துவின் முதல் கடமை என்று உங்களுக்குத் தோன்றியிருக்கும். எனவே, இப்போது நீங்கள் இக்கதையைப் படிப்பவராகவும் கேட்பவராகவும் மட்டும் இருந்து விடாமல், இக்கதை, தொடரச் செய்வதில் பங்கெடுத்துக் கொள்ள ‘நான் தகுதியுள்ளவன் என உணர்ந்து செயல்படுங்கள்; சங்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்’ என ஓர் ஹிந்து சகோதரன் என்ற முறையில் நான் உங்களிடம் அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன்.

கங்கா மாதா போன்றது இந்தக் கதை

நீங்களும், நாங்களும், அனைவரும் பங்கு கொள்ளும் கதை இது. நாமனைவரும் சேர்ந்து உருவாகும் சமுதாயம் புத்தெழுச்சி பெற்றுயர மேற்கொள்ளும் மாபெரும் முயற்சிகளின் கதை இது. அதாவது நமது ஹிந்து சமுதாயத்தை விழிப்படையச் செய்து ஒருங்கிணைத்து நமது அன்புக்குரிய தாய்நாடாகிய பாரதமாதாவை சிறப்பின் மிக உயர்ந்த சிகரத்தில் ஏற்றும் வகையில் மெல்ல மெல்ல முன்னேற்றுவதுதான் இந்தக் கதை.

1925-இல் டாக்டர் ஹெட்கேவார் கண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தக் கனவின் நடைமுறைச் செயல்வடிவத்தின் கதை இது. எல்லா கதைகளுக்கும் முடிவு ஏதாவதொரு கட்டத்தில் உண்டு. ஆனால் இது ஒரு தொடர் கதை.

இந்தப் புனித நீரோட்டம், கடல் போன்ற ஹிந்து சமுதாயத்தைத் தனது மடியில் உட்காரவைத்துக் கொண்டு, அதனை மிகத் தூய்மையாகவும், ஒளி பொருந்தியதாகவும், வெற்றித்திருவுடையதாகவும் செய்து கொண்டு, உலகமனைத்தையும் சுகமளித்து வாழ வைப்பதாக ஆக்கிக் கொண்டு, வாழையடி வாழையாக முன்னேறிக் கொண்டிருக்கும்.

சங்க சக்தியை நான் வளர்ப்பேனென

முன் வருவோர் வேண்டும்

மாபெரும் தியாகியர் படை வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் வளர்ந்த வரலாறு-7

அரசியலிலிருந்து ஏன் விலகியிருக்கின்றனர்?

நமது சமுதாயத்தைப் பிளவு படுத்தும் மற்றொரு விஷயம் சுதந்திரத்துக்குப் பின் தீவிரமடைந்து வருகிறது; அதுதான் அரசியல் கருத்து வேறுபாடு, பதவி மோகம், சுயநலம். சமுதாயத்தில் சாதி – மத – இன வேறுபாடுகளை விரோதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள் திரித்துக் கூறிவருகின்றனர். ஹிந்துக்களின் ஒற்றுமையைக் கொளுத்தி அந்த நெருப்பில் தேர்தல் குளிர் காய்கின்றனர். டாக்டர்ஜி, அரசியலில் தான் இருந்ததன் காரணமாக, சமுதாயத்துக்கு ஏற்படக்கூடிய தீங்கினை மிக நன்றாக அறிந்திருந்தார். எனவே மஹாராஷ்ட்ரத்தில் புகழ்பெற்ற, செல்வாக்குள்ள அரசியல் தலைவராக இருந்தபோதிலும், சங்கத்தை நிறுவிய பின் எல்லாவகையான அரசியல் ஆரவாரங்களில் இருந்தும் அவர் விடுபட்டார், சங்கத்தையும் சுதந்திரமாக வைத்துக் கொண்டார். இன்றும் சங்கம், இதே கொள்கையைக் கவனமாகக் கடைப்பிடித்து வருகிறது.

ஆட்சி மற்றும் அரசியலிலிருந்து எப்போதும் விலகியிருத்தல்

பாரதம் விடுதலையான பின்னரோ அரசியலும் தேர்தலும் மட்டுமே தேசியவாழ்வின் மையப் புள்ளி என்பது போல ஆகிவிட்டது. இதனால் அநேக ஹிந்துத்வ ஆதரவாளர்கள் ‘சங்கம் போன்ற செல்வாக்குமிக்க அமைப்பு அரசியல் களத்தில் இறங்கினால் ஹிந்து சமுதாயத்துக்கு மிகுந்த நன்மை ஏற்படும்’ என்று எண்ணுகிறார்கள். ஆனால் சங்கம் தொடக்கத்தில் இருந்தே தனது கொள்கையில் உறுதியாக இருக்கத் தீர்மானித்து, அரசியலிலிருந்து விலகியே உள்ளது.

1948-49இல் சங்கத்தின் மீது தடை விதிக்கப்பட்டிருந்த போது, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் ஸ்ரீ குருஜிக்கு எழுதிய கடிதத்தில், சங்கம் காங்கிரஸில் இணைந்து விடுமாறு வலியுறுத்தியிருந்தார். அப்போது சங்கத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை விலகும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் அப்படிப்பட்ட சங்கடமான சூழ்நிலையில்கூட ஸ்ரீ குருஜி பணிவுடன் படேலின் பரிந்துரையை ஏற்க மறுத்து “சங்கம் முன்போலவே, கலாச்சாரத்துறையில் பணிபுரிய விரும்புகிறது” என்று பதில் எழுதினார்.

1975-77-இன் நெருக்கடி நிலை நீக்கப்பட்டதும் சங்கத்தின் முன் வேறு ஒருவகையான அரசியல் வாய்ப்பு வந்து நின்றது. நெருக்கடி நிலையை எதிர்த்து மக்களை விழிப்படையவும் அணிதிரளவும் செய்ததில் சங்க ஸ்வயம் சேவகர்கள்தான் முக்கிய பங்கு வகித்தனர் – என்பதை அப்போதைய எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவருமே நன்கு அறிந்து இருந்தனர். பயத்தில் ஒடுங்கிய மக்களிடம் துணிவை எழுப்பி, தேர்தலில் இந்திராகாந்திக்கு எதிராக வாக்களிக்கத் தூண்டியவர்களும் ஸ்வயம்சேவகர்களே. இதன் விளைவாகத்தான் ஜனதா கட்சி அமோக வெற்றி அடைந்து, நெருக்கடிக் கால கொடுங்கோலாட்சி முடிவுற்றது,

இந்தப் பின்னணியில், சங்கத்தின் பிரதிநிதிகள் சிலரும் மத்திய அரசிலும் பல்வேறு மாநில அமைச்சரவைகளிலும் இடம் பெறுவார்கள் என்பதே பலரின் விருப்பம். ஆனால் நெருக்கடி நிலை முடிவுற்று சங்கத்தின் மீது தடை விலகியவுடனேயே, மறுநாளிலிருந்தே ஸ்வயம்சேவகர்கள், தங்கள் தினசரி ஷாகா பணியில் முன்போலவே ஈடுபட்டனர்; அரசியல், ஆட்சி அதிகாரம் போன்ற விஷயங்கள் குறித்துப் பேசக்கூட இல்லை.

இத்தனை ஊழியர்கள் எவ்வாறு உருவாகின்றனர்?

Creation of person from branch of union - संघ की शाखा ...

இப்போது, ஒரு விஷயம்பற்றி நீங்களும் யோசித்துக் கொண்டிருப்பீர்கள். – நாடெங்கிலும் இத்தனை ஆயிரம் இடங்களில் ஷாகாக்களையும், இத்தனை விதமான பெரிய அமைப்புகளையும், பரவலான திட்டங்களையும், இயக்கங்கள் போன்றவைகளையும் நடத்துவதற்கு, சங்கத்தின் எத்தனை லட்சம் ஊழியர்கள் செயல்பட்டு வருவார்கள்?

சங்கம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகளாகின்றன. அதாவது ஊழியர்களின் புதிய புதிய தலைமுறைகளும் உருவாகி வருகின்றனர். ஷாகாக்களில் இத்தனை பெரிய எண்ணிக்கையில் புதிய புதிய தலைமுறைகள் எப்படி உருவாகின்றனர்?

டாக்டர்ஜி முன்னரே இதுபற்றி ஆழ்ந்து சிந்தித்து வைத்திருந்தார். அந்த நோக்கில்தான் ஷாகா நிகழ்ச்சிகளில், சிறியனவாகத் தோன்றினாலும் அதிமுக்கியமான விஷயங்களை இணைத்திருந்தார். எடுத்துக்காட்டாக – சங்கம் வேறு – சமுதாயம் வேறு என்று கருதக்கூடிய வாய்ப்பளிக்கும் எந்தவொரு அடையாளமோ, வடிவமோ சங்கத்துக்கு இருக்கக் கூடாது என்ற வகையில் மிக எச்சரிக்கையாக இருந்தார்.

காவிக்கொடி – இதன் கீழ்தான் ஷாகா நடைபெறுகிறது – இது ஹிந்து சமுதாயம் முழுவதும் ஏற்று மதிக்கத்தக்க அடையாளம். ஸ்வயம் சேவகரும் சமுதாயத்துக்குள் நடமாடும்போது எந்தவொரு தனித்தன்மை காட்டும் அடையாளத்தை அணிவதில்லை, பழக்கங்களும் சாதாரண மக்களைப் போலவே. உடைகள், பேச்சுகூட. இப்படிப்பட்ட எச்சரிக்கைகளின் பயனாக, சங்கம் ஒரு தனி மதமாக அப்படியே மாறி, சமுதாயத்தில் மற்றொரு சம்பிரதாயமாக மட்டும் ஆகிவிடுவதிலிருந்து காப்பாற்றப்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட ஒரு சிலர்தான் சமுதாயப் பணி செய்ய முடியும் என்ற மனநிலையை மாற்றி சாதாரண மக்களும் சமுதாயப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட ஏற்றவாறு ஷாகா நிகழ்ச்சிகளை உருவாக்கினார்.

பிரச்சாரகர்களும் உள்ளூர் ஊழியர்களும்

ஷாகாவின் போதும், அதற்குப் பிறகும் கூட, ஸ்வயம் சேவகர்கள் இடையே மிக நெருக்கமான, அன்பான குடும்பச் சூழ்நிலை நிலவுகிறது. ஸ்வயம் சேவகர்களின் குடும்பத்தைச் சேர்ந்த சிறியவர் – பெரியவர் அனைவருடனும் சங்க ஊழியர்கள் மிகவும் பரிவுடன் பழகுகின்றனர்.

‘சமுதாயப் பணி ஒரு சுமை’ என்ற சாதாரண மக்களின் கருத்திலிருந்து ஸ்வயம்

संघ की कुटुंब शाखा में शामिल हुए 50 ...

சேவகர் விடுபட்டு, நாளடைவில் ஷாகாவின் குறிக்கோளில் ஒன்றிவிட்ட ஊழியர்களின் முன்னுதாரணத்தைக் கண்டு, சங்கப் பணிக்காக அதிக நேரம் கொடுக்கவும் தொடங்கிவிடுகிறார். கூடவே அவரது திறமைக்கு ஏற்ப அவரிடம் சிறு சிறு பொறுப்புகள் ஒப்படைக்கப்படுகின்றன. அந்தப் பொறுப்புகளை திறமையாக வகிப்பதற்குத் தேவையான பயிற்சியும் அவருக்கு அளிக்கப்படுகிறது. இந்த நடைமுறை வாழையடி வாழையாகத் தொடர்கிறது.

அவர்களிலேயே சிலர் தங்கள் கல்விப் பயிற்சி நிறைவடைந்தவுடன் சங்கத்துக்காகத் தங்கள் முழுநேரத்தை அளிக்கவும் தயாராகி விடுகின்றனர். பணிகளுக்கு எந்த இடத்தில், எந்த வகையான தேவை ஏற்படுகிறதோ அதற்கேற்ப அவர்கள் அனுப்பப்படுகிறார்கள். இப்படிப்பட்ட ஊழியர்களை ‘பிரச்சாரக்’ என்கிறோம்.

பிரச்சாரகர்கள் தங்களது சிந்தனை வளர்ச்சிக்கும், செயல்திறனுக்கும் ஏற்ப குறைந்த அல்லது அதிகக் காலம் பணியாற்றுகின்றனர். அவர்களுக்குச் சில சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பெரும்பான்மையான ஊழியர்கள், குடும்பங்களிலுள்ளவர்களே – மாணவர்கள், தொழிலாளர்கள், உழவர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களே.

அவர்கள் சுமார் 8-10 வயதுச் சிறுவர்களாகத் தொடங்கி, முதுமையிலும் தனது உடலும் மனமும் தளராத வரையில் பணி செய்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தங்கள் தங்கள் இடங்களிலும் சில சமயங்களில் வெளியூர் சென்றும் சங்கப் பணியை வலுவாக்கவும் பரவச் செய்யவும் கூட தங்கள் தினசரி வாழ்வில் நேரம் ஒதுக்குகின்றனர்.

அவர்களில் சிலர் 50-60 வயதைத் தாண்டியவர்கள் – வானப் பிரஸ்த முறைப்படி, தங்கள் குடும்பப் பொறுப்பிலிருந்து விடுபட்டு, முழுநேரமும் சங்கத்தின் திட்டப்படி பணிபுரிய முன்வருகின்றனர்.

ஷாகாக்களின் மூலமாக சாதாரண மக்களிலிருந்தே, சமுதாயத்துக்காக நேரம் கொடுத்து, கடுமையாக உழைத்துப் பணிபுரிபவர்களை உருவாக்க டாக்டர்ஜி தீட்டிய திட்டம் பெரிய அளவில் வெற்றியடைந்து வருகிறது என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

இந்த எல்லாவகையான ஊழியர்களுக்கும் பெருஞ்சிறப்பொன்று உண்டு – இவர்கள் தங்கள் உழைப்புக்காக – பணம், செல்வாக்கு, பதவி, கௌரவம் எதையுமே எதிர்பார்ப்பதில்லை. தனது பெயர் பரவவேண்டுமென்றுகூட விரும்புவதில்லை. தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களின் பண்புகள் சிறப்படையவும், தன்னிலும் அதிகச் செயல் திறன் கொண்டவர்களாக அவர்கள் முன்னேறவும் இடைவிடாது முயன்று வருகின்றனர்.

சங்கம் பெரும் பணிகளை செய்து வருகிறது என்பது நமக்கு தெரியும். அதற்க்காக யாரிடமும் பணம் பெறுவதும் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? இவ்வளவு பணி செய்வதற்கு பணம் எங்கு இருந்து வருகிறது.? நாளை பார்க்கலாம்.

தொடரும்…

ஆர்.எஸ்.எஸ் வளர்ந்த வரலாறு-6

வரலாற்றிலிருந்து பாடம்…

இப்போது உங்கள் மனத்தில் ஒரு கேள்வி எழக்கூடும் – இப்படிப்பட்ட அமைப்புகளை உருவாக்குவதாலும், தொண்டுப் பணிகள் செய்வதாலும் மட்டுமே, நாட்டின் அனைத்துமுக மேம்பாடு ஏற்பட முடியுமா? நாட்டின் முன்னே எத்தனையோ விதமான பிரச்சினைகள் உள்ளன. இவற்றுக்கு எல்லாம் தீர்வு ஏற்பட்டு விடுமா? சங்க ஸ்தாபகர் இதுபற்றியும் சிந்தித்திருப்பாரா? உங்களது இந்த சந்தேகம் முற்றிலும் சரியானதே,

டாக்டர்ஜி அடிப்படையான விஷயங்களை ஊன்றிக் கவனித்த சிந்தனையாளர். சுதந்திரப் போராட்டத்தில் பல்வேறு தேசிய விழிப்புணர்வுத் திட்டங்களில் பங்கெடுத்துக் கொள்வதால் மட்டும் திருப்தியடைபவரல்ல. தனது கூர்மையான மருத்துவ அறிவினால் அந்த முயற்சிகளனைத்தின் நிறை – குறைகளையும் கூட அவர் நாடிபிடித்துப் பார்த்து அறிந்திருந்தார். கூடவே நமது தேசத்தின் முந்தைய வரலாற்றையும் ஆழ்ந்து பரிசீலித்திருந்தார். இவ்வாறு உள்நோக்கிச் சிந்திக்கும் வேளையில் அவர் முன் முதலாவதாக எழுந்த கேள்வி – இன்றைய நமது கோரமான ஏழ்மையில், அடிமைத்தனத்தில் நாம் தள்ளப்பட்டது ஏன்? எப்போதுமே நமது தேசம் இதுபோலத் தாழ்ந்த நிலையில்தான் இருந்ததா? இதற்கான பதிலை வரலாறு தெளிவாகக் கூறுகிறது.

நமது தேசத்தின் வீழ்ச்சி குறிப்பாக கடந்த ஆயிரம் ஆண்டுகளாகத்தான் படிப்படியாக ஏற்பட்டு வந்துள்ளது. அதற்குமுன், பல்லாயிரம் ஆண்டுகளாக நமது தேசம், மற்ற நாடுகளைவிட கல்வி, விஞ்ஞானம், கலாச்சாரத்தில் மேம்பட்ட நிலையில் இருந்தது. இருந்தும் ஏன் அடிமைகள் ஆனோம்?

இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளர்கள் நம்மைப் போலவே சகிப்புத்தன்மை, பெருந்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்; இறைவழிபாட்டு முறைகளில் மட்டுமே வேறுபாடு உள்ளது என்ற நினைப்பில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தோம்.

ஒற்றுமையின்மைதான் சாபக்கேடு

ஆனால் இந்த எல்லா காரணங்களையும் விட முக்கியமான காரணம் நமது சமுதாயத்தின் ஒருமைப்பாடற்ற நிலையே. இது நமது தர்ம பூமி, கர்ம பூமி, புண்ணிய பூமி, மோட்ச பூமி என்ற உணர்வு மக்கள் மனத்தில் நிரம்பியிருந்தது. நாட்டின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலை வரை நான்கு திசைகளிலும் தீர்த்த யாத்திரைகள் நடைபெற்று வந்தன. கும்ப மேளா போன்ற நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய எண்ணிக்கையில், வனவாசிகள் உட்பட நாடெங்கிலுமிருந்து பக்தர்கள் ஒன்று திரண்டனர்.

ஆனால் ‘நமது இந்த பூமியே நமது தேசிய வாழ்வுக்கு ஆதாரம், இதன் ஒற்றுமையைக் கட்டிக்காப்பது நமது முதல் கடமை’ என்ற கடமையுணர்வு மக்கள் மனதிலிருந்து மறைந்து விட்டிருந்தது. ஆங்கிலேயர்கள் வந்த பிறகு அவர்களது வஞ்சகப் பிரச்சாரத்தின் விளைவாக, கல்வி கற்ற நம்மவர் வேறு ஒரு வகையான சுயமறதியில் சிக்கினர். நாம் யார், நமது தேசத்தின் பெயர் என்ன, நமக்கு தேசியம் என்பது எது போன்ற அடிப்படை விஷயங்கள் எல்லாவற்றையும் பற்றி அறிந்து கொள்ள விரும்பாத எண்ணங்கள் நம்மவர் மனத்தில் ஆதிக்கம் செலுத்தின.

டாக்டர்ஜி எடுத்த சரியான முடிவு

எனவே, நமது தேசம் வீழ்ச்சியடைய மூலகாரணமான இந்தக் குறைபாட்டிலிருந்து நமது சமுதாயம் விடுபடாத வரை, நமது நாடு ஒரு போதும் இன்னல்களிலிருந்து விடுபடாது என்ற முடிவுக்கு வந்தார் டாக்டர்ஜி.

அந்நாளில், ஆங்கிலேயரின் பிடியிலிருந்து நாட்டை விடுவிப்பது எப்படி என்பதுதான் எல்லா இயக்கங்களின் மையக்கருத்தாக இருந்தது. அச்சமயம் நடைபெற்று வந்த விடுதலைப் போராட்டத்தில், முஸ்லிம்களை நம்முடன் சேர்த்துக்கொள்ள வழி என்ன என்பதே எல்லாத் தலைவர்களுக்கும் பெரிய தலைவலியாகியிருந்தது.

ஆனால், நமது தேசத்தின் வீழ்ச்சிக்குக் காரணமான ஒற்றுமையின்மை, உண்மையான தேசம் எது என்பதில் மறதி போன்ற அடிப்படைக் குறைபாடுகளை விலக்குவதற்காக வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட டாக்டர்ஜி உறுதிபூண்டார்.

ஹிந்து சமுதாயம் முழுவதையும் ஒருங்கிணைக்க வேண்டும்

100 crore Hindu Unity Platform - Home | Facebook

ஹிந்து தேசிய அடிப்படையில் ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் டாக்டர்ஜி சங்கத்தை நிறுவினார். ஹிந்து சமுதாய ஒருங்கிணைப்பு என்றால் என்ன? ஹிந்து ஒற்றுமையின் வடிவம் என்ன? ஸ்வயம்சேவகர்களுக்கு எப்படிப்பட்ட மனப்பான்மை வேண்டும்? இவ்வாறு பல்வேறு விஷயங்களைப் பற்றியும் ஸ்வயம் சேவகர்களுக்கு விளக்கி வந்தார். பொதுவாக, அமைப்பு என்பது சமுதாயத்திற்குள்ளேயே அதன் உறுப்பினர்களில் சிலரைக் கொண்டு அமையும் ஒரு நிறுவனம் என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால் சங்கம், சமுதாயத்திற்குள்ளே ஒரு தனி அமைப்பல்ல, அதாவது ஹிந்து சமுதாயம் முழுமைக்குமே கட்டுக்கோப்பானதொரு அமைப்புவடிவம் கொடுப்பதற்கான முயற்சி இது.

சோதனைக் காலத்திலும்கூட ஹிந்து ஒற்றுமையில் உறுதி

டாக்டர்ஜி காலத்திலிருந்து இன்றுவரை சங்கத்தில் நிலவி வரும் கண்ணோட்டம் இதுதான். டாக்டர்ஜிக்குப் பின் ஸ்ரீ குருஜி காலத்தைய உதாரணம் ஒன்று – காந்திஜி கொலை செய்யப்பட்ட போது சங்கத்தின் மீது அபாண்டமாக பழி சுமத்தி, காங்கிரஸாரும், சோஷலிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும் சங்கத்தை அழித்துவிட முயன்றனர். குறிப்பாக மகாராஷ்டிரத்திலும், கர்நாடகாவின் சில பகுதிகளிலும் சங்க ஸ்வயம் சேவகர்களையும் அவர்களது வீடுகளையும் பயங்கரமாகத் தாக்கினார்கள்.

அச்சமயம் சங்க சக்தியும் குறைந்ததல்ல. தாக்கிய அனைவருக்கும் தக்க விதத்தில் பதிலளிக்கக்கூடிய ஆற்றல் அவர்களிடம் இருந்தது. எனினும் எந்தவொரு சூழ்நிலையிலும் அமைதி காக்கும்படி சங்க பொதுச்செயலர் ஸ்வயம் சேவகர்களைப் பணித்தார். நாகபுரியில் ஸ்ரீ குருஜி இருந்த கார்யாலயத்தை கும்பல் சூழ்ந்து கொண்டபோது கூட பதிலடி கொடுக்கவிடாமல் ஸ்வயம் சேவகர்களை தடுத்துவிட்டார் குருஜி. “எந்த சமுதாயத் தொண்டுக்காக, ஒற்றுமைக்காக, நாம் சமர்ப்பணமாகி உள்ளோமோ. அந்த சமுதாயத்தின் ஒரே ஒரு நபரின் ஒரு சொட்டு ரத்தம் கூட எனக்காக சிந்துவதை நான் விரும்பவில்லை” என்றார்.

மக்களாதரவு பெருகினாலும் அதே பார்வை

RSS led the unprecedented movement against Emergency - Organiser

இதே போன்ற வேறொரு நிகழ்ச்சியும் உண்டு. 1948 – பிப்ரவரி தொடக்கத்தில் சங்கத்தின் மீது தடை விதிக்கப்பட்டது. 1949-ல் தடை நீக்கப்பட்ட பிறகு ஸ்ரீ குருஜி நாடெங்கிலும் சுற்றுப்பயணம் செய்தார். இதையொட்டி ஆங்காங்கே அவருக்கு மக்கள் அளித்த பாராட்டு விழாக்களில் மாபெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டனர். டில்லி விழாவில் குழுமியிருந்த கடல்போல் பரந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு லண்டன் பி.பி.சி. விமர்சித்தது: “இன்று பாரதத்தில் இரண்டே இரண்டு பேருடைய பேச்சைக் கேட்பதற்குத்தான் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடுகின்றனர். ஒருவர் பிரதமர் நேரு. மற்றொருவர் ஆர்.எஸ்.எஸ் ஸின் ஸ்ரீ கோல்வல்கர்”.

பெருமளவு மக்கள் ஆதரவும் உற்சாகமும் கிடைத்தும் கூட சிலநாட்கள் முன்தான் தன்மீதும், பல்லாயிரம் ஸ்வயம் சேவகர்கள் மீதும் கோரமான அட்டூழியம் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தும் துளியளவு காழ்ப்புணர்வும் அவர் மனதில் தோன்றவில்லை. ஸ்வயம் சேவகர்களுக்கு தெளிவுபடுத்திச் சொன்னார்: “உணவருந்தும் போது தவறுதலாக நாக்கைக் கடித்துக் கொண்டோமானால் அதற்காக நாம் பற்களைப் பிடுங்கியெறிந்து விடுகிறோமா என்ன? அதே போல் இன்று நமது நாட்டின் தலைவர்களும் நம்மவரே என்பதை நினைவில் கொள்வோம்”.

சங்கம் இந்திராவின் திட்டத்தை ஏன் நிராகரித்தது?

1975-77-ன் நெருக்கடிக் காலத்தின் இறுதி நாட்களில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி இது. ஸ்வயம்சேவகர்களால் நடத்தப்பட்ட நாடு தழுவிய வலுவான தலைமறைவு இயக்கத்தினால் தனது ஆட்சிபீடம் ஆட்டம் கண்டுவிட்டது என்பதை இந்திரா காந்தி உணர்ந்தார். அவர் சங்கப் பிரமுகர்களிடம் தனது உளவுத் துறையின் முக்கியஸ்தர் ஒருவரை தூது அனுப்பினார். சங்கம் இந்த இயக்கத்திலிருந்து விலகிக் கொண்டால், சங்கத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை விலக்கிக் கொள்ளத் தயார் – என்று செய்தி அனுப்பினார். சங்கப் பிரமுகர்கள் அதற்கு “எந்தச் சூழ்நிலையிலும் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாட்டைக் கைவிட, சங்கம் தயாரில்லை – என்று தெள்ளத்தெளிவாக பதிலளித்தார்கள்.

சங்கம் நேரடியாக அரசியலில் ஈடுபடுவதில்லை ஏன் விலகியிருக்கிறது? என்பதை நாளை பார்க்கலாம்.

தொடரும்…

ஆர்.எஸ்.எஸ் வளர்ந்த வரலாறு-5

விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னம் அமைப்பு

1962 – இல் சீனாவுடன் நடந்த போரில் ஏற்பட்ட தோல்வியினால் மக்களின் மனம் மிகவும் புண்பட்டு இருந்தது. அந்தவேளையில் மக்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படச் செய்வது அதிமுக்கியமாக இருந்தது. அந்த நோக்கில் மக்கள் தொடர்பு இயக்கம் நடத்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டது. இதனை இறைவன் திருவுள்ளம் என்றுதான் கூற வேண்டும். 1963-இல் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவும் வரவே இயக்கத்துக்குத் தூண்டுதலான விஷயம் கிடைத்தது.

சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன் மூன்று நாட்கள் வரை கன்யாகுமரிக் கடற்கரையருகே, கடலில் உள்ள ஒரு பெரிய பாறை மேல் அமர்ந்து பாரதத்தின் எதிர்காலம் பற்றி தியானித்திருந்தார். அதே இடத்தில் அவர் தனது எதிர்காலப் பணிகளையும் தீர்மானித்தார். எனவே அந்தப் புனிதமான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாறையின் மீது சுவாமி விவேகானந்தருக்கு ஓர் அழகிய நினைவாலயம் எழுப்ப முடிவு செய்யப்பட்டது.

இப்பணியின் சிறப்பினை கவனத்தில் கொண்டு, அச்சமயம் சங்கத்தின் பொதுச் செயலர் பொறுப்பில் இருந்த ஸ்ரீ ஏகநாத் ரானடேயிடம் இப்பணி ஒப்படைக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் பல வகைகளிலும் இதற்கு முட்டுக்கட்டை போட முயன்று வந்தனர். ஆனால் எல்லா இடையூறுகளையும் தனது இணையற்ற திறமையினாலும், இடைவிடாத முயற்சியினாலும் விலக்கிக் கொண்டு, ஏகநாத்ஜி, விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னப் பணிகளைத் தொடங்கினார். அப்பணிக்குத் தேவையான பணம் திரட்டுவதற்காக நாடெங்கிலும் ஸ்வயம் சேவகர்கள் விரிவான அளவில் மக்கள் தொடர்பு இயக்கம் நடத்தினர்.

பொருள்திரட்டுவதுடன் கூடவே விவேகானந்தரின், தேச விழிப்புணர்வுச் செய்தியை பல்லாயிரம் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் கொண்டு சென்றனர். கூடவே, சுவாமிஜியின் உத்வேகமூட்டும் கருத்துக்கள் அடங்கிய சிறு நூல்களும் எல்லா மொழிகளிலும் வெளியிடப்பட்டன. இறுதியில், இயக்கத்தை இனிதே நிறைவு செய்ய, 1970-இல் அந்த விவேகானந்தர் பாறையின் மேல் தேசிய உணர்வுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போல் மிக அழகாக விவேகானந்தர் நினைவுச் சின்னம் எழுந்தது.

ஒருமைப்பாட்டு யாத்திரைகள்

பாரத மாதாவும் கங்கையன்னையும் பாரதத்தின் கோடிக்கணக்கான மக்களின் கலாச்சார ஒருமைப்பாட்டுக்கும் புனிதத்தன்மைக்கும் மாபெரும் பக்திமையங்கள். கங்கையின் புனித நீரை, பாரதத்தின் பட்டி தொட்டிதோறும் மக்களிடம் கொண்டு செல்வதற்காக 1983 நவம்பர் மாதத்தில் மாபெரும் திட்டம் ஒன்றினை விஸ்வ ஹிந்து பரிஷத் தயாரித்தது.

பாரதமாதாவின் உருவச்சிலையும் கங்கை நீர் நிரம்பிய கலசமும் கொண்ட இரண்டாயிரத்துக்கும் அதிகமான ரத யாத்திரைகள், நாட்டின் வெவ்வேறு பாகங்களிலிருந்தும் புறப்பட்ட மூன்று முக்கிய யாத்திரைகளுடன் சேர்ந்து நாடெங்கிலும் 50,000 கிலோ மீட்டர் பயணித்தது. கிட்டத்தட்ட மூன்று லட்சம் கிராமங்களில் பத்து கோடி பேர் பாரதமாதாவையும், கங்கை அன்னையையும் தரிசித்தனர்.

அயோத்தி ராமர் கோயில் இயக்கம்

Ram Temple In Spotlight As Two Trucks Of Bricks Arrive In Ayodhya
ராமர் செங்கல் பூஜை

ராமர் செங்கல் பூஜை (ராம சிலா பூஜன்), ராமர் ஜோதி யாத்திரைகளில் பல லட்சம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கெடுத்துக் கொண்டனர். அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, அதன்பிறகு ராமர் கோயில் கட்டும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கரசேவை, அதில் அநேக ராம பக்தர்களின் பலிதானம் இவற்றின் சிலிர்க்கவைக்கும் வர்ணனைகள், பாரதத்தின் சமீபகால தேசிய வாழ்வின் பொன்னேடுகள்.

இந்த மாபெரும் திட்டங்கள் அனைத்தையும் வெற்றியடையச் செய்வதில் ஸ்வயம் சேவகர்கள் முழு மனதுடன் விஸ்வ ஹிந்து பரிஷத்துக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

டாக்டர்ஜியின் நூற்றாண்டு விழா

Dr. K. B. Hedgewar

1989-இல் சங்க ஸ்தாபகர் டாக்டர்ஜியின் நூற்றாண்டு விழா நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. மக்களே கொண்டாடிய விழா இது. இந்த மக்கள் தொடர்பு இயக்கத்தின்போது 1.5 கோடி குடும்பங்களை சங்க ஊழியர்கள் தொடர்பு கொண்டனர். சமீபத்தில் டாக்டர் ஹெட்கேவாரது பெருமையை உணர்ந்து அரசும் தபால்தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.

பல்வேறு அமைப்புகளின் பங்களிப்பு

‘ஷாகாவில் பண்புப் பதிவு பெற்ற ஸ்வயம் சேவகர்கள் மூலம் நமது தேசத்தின் எல்லாத் துறைகளிலும் மேம்பாட்டுக்கான பணி நடைபெறும்’ என டாக்டர்ஜி கூறியதில் தொண்டு தவிர வேறு ஒரு அம்சமும் உண்டு. அதுதான், மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், போன்ற துறைகளுடன் கூடவே தர்மம், கலை, சுதேசி, அரசியல் போன்ற பல்வேறு துறைகளிலும் கூட தனித்தனியாக மகத்தான செல்வாக்குடைய அமைப்புகளை ஸ்வயம் சேவகர்கள் உருவாக்கியுள்ளனர். இதுவும் தவிர, பிரத்யேகமாக பெண்கள் மத்தியிலும் அமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அமைப்புகள் எல்லாமே, அந்தந்தத் துறைகளில் தேசத்தில் மற்ற அமைப்புகளை விட சிறந்தனவாகவும், செல்வாக்குடையனவாகவும் விளங்குகின்றன.

விஸ்வ ஹிந்து பரிஷத்: ஸ்ரீ குருஜி அவர்களின் முயற்சியால். சுவாமி சின்மயானந்தர் உள்ளிட்ட துறவிகள் முன்னிலையில் 1964-இல் மும்பையில் தொடங்கப்பட்டது. குத்துவிளக்கு பூஜை போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகள் மூலம் ஹிந்துக்களை இணைக்கிறது. ஸ்ரீராம ஜென்ம பூமி இயக்கத்தில் பெரும்பங்கு வகித்து வருகிறது. உலகின் பல நாடுகளில் பரவியுள்ள அமைப்பு இது. தமிழகத்தில், விசேஷமாக கிராமக்கோயில் பூஜாரிகளுக்கு முறையான பூஜைப் பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பயிற்சி பெற்றுள்ளனர்.

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் நாடு முழுவதும் எட்டு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களைக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரே அமைப்பு. மாணவர்களிடையே தேசபக்தியையும், கட்டுப்பாட்டையும் வளர்க்கும் அமைப்பு. தமிழகத்தில், அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அமைப்பதில் பெரும் பங்காற்றியது. செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று கல்லூரிப் பேராசிரியர்களுக்கு மாணவர்கள் மலர்ச்செண்டு அளித்து ஆசி பெறும் நிகழ்ச்சி பரவி வருகிரது. ஏ.பி.வி.பி உள்ள கல்லூரிகளில் ராகிங் கொடுமை குறைந்துள்ளது.

பாரதீய மஸ்தூர் சங்கம்: ஹிந்துத்வ சிந்தனையில் தொழிலாளர்களை ஒன்றுபடுத்தும் அமைப்பு. தொழிலாளி என்றாலே கம்யூனிஸ்டு தான் என்ற மனப்பான்மையை உடைத்து 31 லட்சம் உறுப்பினர்களுடன் பாரதத்தின் முதன்மை சங்கமாக பீடுநடை போட்டு வருகிறது.

பாரதீய கிசான் சங்கம்: 15 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய விவசாயிகளுக்கான அமைப்பு.

ராஷ்ட்ர சேவிகா சமிதி: பாரதீய கலாச்சாரத்தை நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் மாதர்களுக்கான அமைப்பு. நாடு முழுவதும் 5000-த்துக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.

வித்யா பாரதி: நாடு முழுவதும் நகரங்களிலும், கிராமங்களிலும் மலைவாழ்மக்கள் மத்தியிலும் 16,000-த்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை நடத்திவரும் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பு.

இந்து முன்னணி: ஆன்மிக பூமியான தமிழகத்தில் 50 ஆண்டுகளாக நாத்திகம் என்ற போர்வையில் பரப்பப்பட்டு வந்த நச்சுக் கருத்துகளை முறியடித்ததில் முன்னணியில் உள்ள இயக்கம். விநாயகர் சதுர்த்தி விழா மூலம் தமிழகத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நமது தேசியவாழ்வு ஒரு போதும் அரசியலை, ஆட்சி அதிகாரத்தை மையமாகக் கொண்டிருந்ததில்லை. இதே சிறப்பினை மீண்டும் நிலைநிறுத்தும் நோக்குடன் இந்த அமைப்புகளில் எதுவுமே அரசின் தயவை சார்ந்திருக்கவில்லை. மக்கள் ஒத்துழைப்பின் பலத்தில்தான் இவை நடைபெறுகின்றன; வளர்ந்து வருகின்றன.

இப்படிப்பட்ட அமைப்புகளை உருவாக்குவதாலும், தொண்டுப் பணிகள் செய்வதாலும் மட்டுமே, நாட்டின் அனைத்துமுக மேம்பாடு ஏற்பட முடியுமா? நாட்டின் முன்னே எத்தனையோ விதமான பிரச்சினைகள் உள்ளன. இவற்றுக்கு எல்லாம் தீர்வு ஏற்பட்டு விடுமா? சங்க ஸ்தாபகர் இதுபற்றியும் சிந்தித்திருப்பாரா? நாளை பார்க்கலாம்.

தொடரும்…

ஆர்.எஸ்.எஸ் வளர்ந்த வரலாறு – 4

போர் நேரங்களில் …….

Which area was captured by China in the 1962 war? Also, why did ...
Indo Chaina War

1962-இல் பாரதத்தின் வடகிழக்கு எல்லையை திடீரென்று ஆக்கிரமித்தது சீனா. அச்சமயத்தில் ஸ்வயம் சேவகர்கள் அரசுக்கு மிகுந்த ஒத்துழைப்பு அளித்தனர். அப்போதைய பிரதமர் நேரு இதுகண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார்.

1963-இல் குடியரசு தின அணிவகுப்பில் பங்கு கொள்ள அவர் சங்கத்துக்கும் அழைப்பு விடுத்தார். மூன்று நாள் முன்புதான் அறிவிக்கப்பட்டபோதிலும் சீருடையணிந்த 3,000 ஸ்வயம்சேவகர்களின் கம்பீரமான அணிவகுப்பு அந்நிகழ்ச்சியின் மிகக் கவர்ச்சிகரமானதொரு அங்கமாக விளங்கியது.

1965-இல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின்போது அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் அழைப்பின் பேரில் ஸ்ரீ குருஜி டில்லி சென்றார்.

அங்கு போர்க் கொள்கையைத் தீர்மானிக்கும் பொருட்டு அழைக்கப்பட்டிருந்த பிரமுகர்களின் கூட்டத்தில் ஸ்ரீ குருஜியின் பங்கு சிறந்த வழிகாட்டுதலாக இருந்தது. சரித்திரத்தில் பதிவாகியுள்ள நிகழ்வு இது.

பாரதத்தின் எல்லை காக்கும் பணி

1947 அக்டோபரில் பாகிஸ்தான் படையெடுத்தபோது ஜம்மு-காஷ்மீரைக் காக்கும் பொருட்டு நமது போர் விமானங்கள் ஸ்ரீநகர் விமான தளத்தில் தக்க சமயத்தில் இறங்க முடிந்ததன் காரணம், அங்குள்ள 500 ஸ்வயம்சேவகர்கள் விமானதளத்தில் படிந்திருந்த உறைபனியை 48 மணி நேரத்துக்குள் இரவு பகலாக கடுமையாக உழைத்து சுத்தம் செய்து வைத்திருந்ததுதான்.

தாத்ரா-நகர் ஹவேலி விடுவிப்பு

பாரதத்திலிருந்து ஆங்கிலேயர் ஆட்சி போனபிறகும் கூட தாத்ரா – நகர் ஹவேலியில் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியும், கோவாவில் போர்த்துகீசியரின் ஆட்சியும் நீடித்தன. அப்போது ஸ்வயம் சேவகர்கள் அவைகளை விடுவிக்க முடிவெடுத்தனர். 1954 ஆகஸ்டு – 2 அன்று ஆயுதம் தாங்கிய நூறு ஸ்வயம் சேவகர்கள் தாத்ரா- நகர் ஹவேலியை முற்றுகையிட்டபோது, அங்கிருந்த அந்நிய ஆட்சியாளர்கள் பயந்து நடுங்கி விட்டனர் . எதிர்க்கும் துணிவை இழந்து விட்டனர். இதன் விளைவாக துளி ரத்தம் சிந்தாமல் வெற்றி கிடைத்தது. பிறகு அந்த ஸ்வயம் சேவகர்கள் அங்கு மூவர்ணக்கொடி (தேசியக்கொடி) ஏற்றி பாரதத்தின் உயர் அதிகாரிகளிடம் அப்பகுதி ஆட்சியை ஒப்படைத்தனர்.

கோவாவில் விடுதலைக்காகப் பலிதானம்

ஆனால் கோவா விடுதலைக்காக 1961 வரை பெருமளவில் பரவலான போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. நாடெங்கிலும் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கோவா எல்லைக்குள் நுழைந்தனர். உஜ்ஜயினியிலிருந்து ராஜாபாவு மஹாகால் என்ற ஸ்வயம் சேவகர் போர்ச்சுக்கீசியத் துப்பாக்கிகளுக்கெதிரில் ஒரு கையில் பாரதத்தின் மூவர்ணக் கொடியை ஏந்தியபடியே முன்னேறிச் சென்று குண்டுகளால் துளைக்கப்பட்டுத் தன்னையே பலிகொடுத்தார். இவ்வாறு நாடு முழுவதிலும் கோவா விடுதலைப் போராட்டத்தின் சூழ்நிலை சூடேறிய போது, மத்திய அரசு முன்வந்து கோவா விடுதலைக்காக ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டி வந்தது. ஸ்வயம்சேவகர்களைத் தவிர இந்த இயக்கத்தில் பாரதீய ஜனசங்கம் மற்றும் சோஷலிஸ்டு கட்சி ஊழியர்களும் பங்கு கொண்டனர்.

பலிதானங்களின் சங்கிலித் தொடர்

தேசப் பிரிவினையின் போது (1947-48) மேற்குப் பாகிஸ்தான் பகுதியில் வசித்துவந்த ஆதரவற்ற நமது ஹிந்து சகோதரர்களை பாதுகாப்பான முறையில் பாரதத்துக்குக் கொண்டு வருவதில் ஸ்வயம் சேவகர்களின் பங்களிப்பு, வீரம், உயிர்த்தியாகம் ஆகியவை அழியாத வரலாறு ஆகிவிட்டது.

1947-ல் பாகிஸ்தானின் இடைவிடாத பீரங்கித் தாக்குதலுக்கிடையில், ஜம்முவின் எல்லைப் பகுதியிலுள்ள ரஜௌரி நகரத்தைக் கடைசி நிமிடம் வரையில் பாதுகாத்துக்கொண்டே அவ்விடத்தின் சங்க கார்யவாஹ் (பொறுப்பாளர்) பலிதானமானார். 1962-ல் சீனப்படை யெடுப்பின் போது அஸ்ஸாமில் தேஜ்பூரின் ஜில்லா அதிகாரி உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களும் அங்கிருந்த மக்களைப் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லும்படிக் கூறிவிட்டு அரசுக் கருவூலத்திலிருந்த பணத்தை குளத்தில் வீசி விட்டு ஓடிவிட்டனர். ஆனால், தேசபக்தியுள்ள குடிமக்களுடன் இணைந்து ஸ்வயம் சேவகர்கள் அந்தப் பணத்தைக் காத்தார்கள். தேஜ்பூரைப் பாதுகாக்கும் ஏற்பாடுகளில் இரவு பகலாக ஈடுபட்டார்கள்.

1971-ல் வங்கதேச விடுதலைப் போரிலும் வங்கதேச எல்லையில் உள்ள நமது பாரதத்தின், மேற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் சக்ரம் கிராம ஷாகாவின் முக்ய சிக்ஷக்காயிருந்த சுர்க்கா முரமு, தனது உடலைக் கயிற்றால் கட்டிக் கொண்டு எதிரிகளின் குண்டுவீச்சுக்கிடையில் தரையில் ஊர்ந்து கொண்டு, குளத்தில் விழுந்திருந்த பாரதத்தின் ஆயுதப் பெட்டிகளை பத்திரமாக நமது ராணுவ வீரர்களிடம் சேர்ப்பித்து விட்டு வீர மரணமடைந்தார்.

சிறப்பான பயிற்சியாமே! அது என்ன?

RSS Sangh Shakha - YouTube
Shaka

நாடு துண்டாடப்பட்ட போதும், அதையடுத்து 1947 அக்டோபரில் ஜம்மு – காஷ்மீர் மீது திடீரென பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்தபோதும், ஸ்வயம் சேவகர்களின் இணையற்ற துணிச்சலையும், பலிதானத்தையும், பாரதப்படையின் உயர் அதிகாரி ஒருவர் நன்கு அறிந்திருந்தார். ஸ்ரீ குருஜி 1950-ல் பஞ்சாபில் சுற்றுப்பயணம் செய்கையில், அந்த அதிகாரி, ‘போர்க்களத்தில் இவ்வளவு தீரம் காட்டும் உங்களது ஸ்வயம் சேவகர்களுக்கு நீங்கள் அளித்த விசேஷப் பயிற்சி என்ன?’ என ஸ்ரீ குருஜியிடம் கேட்டார். ஸ்ரீ குருஜி சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்: “கபடி, கோகோ போன்ற விளையாட்டுகள், உடற்பயிற்சிகளின் மூலம் ஷாகாவில் தேசபக்தி, சமுதாயப்பற்று, கட்டுப்பாடு போன்ற பண்புப்பதிவுகள் ஏற்படுகின்றன. வேறு எந்த வகையான படைப் பயிற்சியும் சங்கத்தில் அளிக்கப்படுவது இல்லை ” என்று கூறி விளக்கினார்.

பசுப் பாதுகாப்பு இயக்கம்

விடுதலைப் போராட்டத்தில் வெகு காலமாகவே, இடைவிடாது பசுப் பாதுகாப்பும் ஒரு முக்கியப் பிரச்சினையாக இருந்து வந்துள்ளது. இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளர்கள் இங்குள்ள மக்களை அவமானப்படுத்துவதற்காக பசுவதையைத் தொடங்கினர். “நாட்டின் விடுதலையை விட, பசுப்பாதுகாப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் கருதுகிறேன்” என்றார் காந்திஜி. ஆனால் பாரத மண்ணிலிருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்பும் பசுவதை நடப்பதுடன் அதிகரிக்கவும் செய்தது. எனவே பசுவதையைத் தடை செய்யக் கோரி 1000-இல் ஸ்ரீ குருஜியின் வழிகாட்டுதலில் நாடெங்கிலும் ஸ்வயம் சேவகர்கள் கிட்டத்தட்ட ஒருகோடியே எழுபத்தைந்து லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்திடம் அளித்தனர். அது சமயம் பல்லாயிரம் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கூட கையெழுத்திட்டது மகிழ்ச்சி தரும் அனுபவம். என்ன துரதிர்ஷ்டமோ, அந்த தேசியக் கோரிக்கையை அரசு அலட்சியப் படுத்திவிட்டது.

கடந்த சில ஆண்டுகளில் பெரிய பெரிய இயந்திரக் கொலைக் கூடங்களும் தொடங்கிவிட்டன. அவற்றில், விடுதலைக்கு முன் நடந்ததை விட நூறு மடங்கு அதிகமாக பசுவதை நடைபெறுகிறது. ஆகையால் அதைத் தடுக்கவும், இந்த கோரமான அபாயத்திலிருந்து நாட்டைக் காக்கவும் இப்போதும் பசுப்பாதுகாப்புக்காக நாடெங்கிலும் பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. காஞ்சி சங்கராச்சாரியார் பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திரர் இவ்விஷயத்தை எடுத்துக்கொண்டதால் இப்போது இந்த இயக்கம் சூடுபிடித்து வருகிறது.

தேசபக்த துறவி சுவாமி விவேகானந்தருக்கு நினைவுச்சின்னம் அமைத்ததே சங்க ஸ்வயம்சேவகர்கள்தான் அது எங்கு என்பதை நாளை பார்க்கலாம்.

தொடரும்…

ஆர்.எஸ்.எஸ் வளர்ந்த வரலாறு – 2

ஜெயப்பிரகாஷ் நாராயணன் மாறியது எப்படி?

இவ்விஷயமாக ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் அனுபவம் சுவையானது. அவர் தீவிர சோஷலிஸ்ட். சங்கத்தைக் கடுமையாக எதிர்த்த வர். 1965-66 இல் பீகாரில் பஞ்சம் ஏற்பட்டது. நிவாரணப்பணி முழுமைக்கும் ஜெயப் பிரகாஷ் நாராயண்தான் தலைவர். சங்கத்துக் காரர்களை சேர்த்துக் கொள்ள அவருக்கு விருப்பம் இல்லை. ஆனால் சமய சிந்தனையாளர் அமரர் ஹனுமான் பிரஸாத் போத்தார் வற்புறுத்தியதால் ஒரு மாவட்டத்தில் மட்டும் பொறுப்பை சங்கத்திடம் ஒப்படைத்தார்.

Jayaprakash Narayan: Latest News on Jayaprakash Narayan ...
Jayaprakash Narayan

ஒருமுறை மற்ற மாவட்டங்களில் நிவாரணப் பணிகளைப் பார்வையிடும் போது சங்க ஊழியர்களையும் அழைத்தார். அவர்களிடம் நிவாரணப்பணிகளுக்காக ஒப்படைக்கப்பட்ட பணத்துக்குக் கணக்குக் காட்டும்படி கூறினார். ஊழியர்கள் உடனே அதற்கு முதல் நாள் வரையிலான செலவுக் கணக்கை அவர் முன் வைத்தனர். அதைப்பார்த்து விட்டு அவர் சந்தேகத்துடன் கேட்டார் – மற்றதெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது, ஆனால் ஒன்று மட்டும் இதில் இல்லை. ஊழியர்கள் வியப்படைந்து, “அது என்ன?” என்று கேட்டனர். ஜெயப்பிரகாஷ் சொன்னார் – “உங்கள் சொந்தச் செலவுக்காகக் கொடுக்கப்பட்ட பணத்துக்கான செலவுக்கணக்கு எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லையே, ஏன்?”

ஊழியர்கள் சிரித்துக்கொண்டே சொன்னார்கள்: “சங்கத்தில் நாங்கள் கற்றது இதுதான் – வீட்டில் உணவருந்திவிட்டு நாட்டுக்கு சேவைசெய் – பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேர்க்கப்பட்ட பணத்திலிருந்து ஒரு பைசாகூட வேறெதற்கும் பயன்படுத்துவது பெரிய பாவம் என்று நாங்கள் கருதுகிறோம்”. இதைக் கேட்டு ஜெயப்பிரகாஷ் அடைந்த வியப்புக்கு எல்லையே இல்லை. இந்நிகழ்ச்சி, அவருக்கு சங்கத்தை சரிவரப் புரிந்து கொள்வதற்கு முதல் வாய்ப்பாக அமைந்தது.

ஸ்வயம்சேவகர்கள் மூலம் நடைபெறும் நலப்பணிகளுக்கு மேலும் பல சிறப்புகள் உண்டு. அவர்களது பார்வையில், சேவை என்பது உதவி செய்வது மாத்திரமல்ல. சேவையின் மூலம் பயனடைபவர்கள் தனது வாழ்க்கையைத் தன் சொந்த முயற்சியினாலேயே சீரமைத்துக் கொள்ளும் திறமை வளர வேண்டும். குடிப்பழக்கம், சூதாட்டம், சண்டை சச்சரவுகளிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும். தான் ஹிந்துவாக இருப்பது குறித்துப் பெருமிதம் அடைய வேண்டும்.

தன் பகுதியிலுள்ள கோயில்களை, பசுக்களை, பெண்களை அவர்கள் பாதுகாக்க வேண்டும். பிற ஹிந்துக்களிடம் சமத்துவ உணர்வு கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட பல்வேறு நல்ல மாற்றங்கள் அங்கே ஏற்பட வேண்டும் – என்பதுதான் தொண்டில் ஈடுபடும் சங்க ஊழியர்களின் முக்கிய குறிக்கோள். நாடு முழுவதிலும் பல்லாயிரம் குடிசைப் பகுதிகளில் குறைந்த அளவிலோ, அதிக அளவிலோ இந்த மாற்றங்கள் காணக் கிடைக்கின்றன.

தொண்டு வாயிலாக சமுதாயத்தில் நல்ல மாற்றங்கள்

அதாவது நமது ஹிந்து சமுதாயத்தை உள்ளிருந்து அழிக்கும் தீங்கான பழக்க வழக்கங்கள், மனப்பான்மைகள் ஆகியவற்றை நீக்குவது, இந்த மாற்றங்களின் முக்கிய அம்சம். தீண்டாமை, சாதி வேறுபாடு, உயர்வு – தாழ்வு, ஏழை – பணக்காரன் போன்ற வேற்றுமை உணர்வுகளைப் போக்குவதற்காகப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. வட பாரதத்தில் துர்காஷ்டமியன்று கன்யா பூஜை செய்வார்கள். அன்று நூற்றுக்கணக்கான ஸ்வயம்சேவகர்களின் வீடுகளில் குடிசைப் பகுதிச் சிறுமிகளை அழைத்து அவர்களுக்கு முறைப்படி பூஜை செய்கிறார்கள். அது, குடும்பமே பங்கேற்கும் விழாவாகி விடுகிறது.

இதுதவிர, நாடெங்கிலும் பல்லாயிரம் ஸ்வயம் சேவகர்களின் குடும்பங்களின் பெரியோர்கள், தாய்மார்கள், சகோதரிகள் குடிசைப் பகுதிகளுக்குப் போய், அவர்களுடன் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். அவர்களையும் தங்கள் வீடுகளுக்கு அழைத்து அதே போல் உபசரிக்கிறார்கள்.

Rightwing Rumblings: RSS & Sewa Bharathi Uttarakhand Disaster ...
Ready for Selfless Service

தேசியப் புனரமைப்பில் ஒரு மிக முக்கியமான அம்சம் கிராம வளர்ச்சி. மகாத்மா காந்தி கிராமங்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை நாட்டின் முன் வைத்தும் கூட அரசு அதை அடியோடு புறக்கணித்ததால் கிராமங்கள் வளர்ச்சி அடையவேயில்லை.

இந்நிலையில் இயன்றவரை மாறுதலைக் கொண்டு வருவதற்காக ஸ்வயம்சேவகர்கள் சில கிராமங்களில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் தொடங்கியுள்ளனர். மகாராஷ்டிரத்தில் பின்தங்கிய கிராமமாகிய ராலேகாவ் ஸிந்தியை அண்ணா ஹஜாரே 10 -16 ஆண்டுகளுக்குள் ராமராஜ்யம் போல மாற்றியுள்ளார். ஸ்வயம் சேவகர்கள் அதை ஒரு எடுத்துக்காட்டாகக் கொண்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்திலுள்ள மோஹத் என்ற சிற்றூரையும் அங்குள்ள சங்க ஊழியர்கள் அதே போல் நல்ல வளமான கிராமமாக மாற்றியுள்ளனர். பயிர்த் தொழிலில் சீர்த்திருத்தம், சாண எரிவாயு, பெரிய அளவில் இயற்கை உர உற்பத்தி, பலநூறு கிராமவாசிகளுக்கு ஓரளவு சம்ஸ்கிருதம் பேசும் பயிற்சி, வீடு, சாலைகளில் சுத்தம், சாதி வேறுபாடு போன்ற தீய பழக்கங்கள் ஒழிப்பு போன்ற நல்ல மாற்றங்கள் கடந்த 10-12 ஆண்டுகளுக்குள் அங்கு ஏற்பட்டுள்ளன.

கர்நாடகத்தின் மங்களூர் மாவட்டத்தைச் சேர்ந்த 33 கிராமங்களிலுள்ள மக்கள் தங்கள் கிராமங்களை, பசிப்பிணியற்ற, நோயற்ற, எழுத்தறிவின்மையற்றதாக மாற்றும் திசையில் முன்னேறி வருகின்றனர்.

குறிப்பாக ஒரு விஷயம் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்: ஸ்வயம் சேவகர்கள் தொண்டு செய்யும் போது சமுதாய மாற்றத்துடன் கூடவே, தன்னிடமும் மாற்றத்தை, பண்புப் பதிவுகளை பெறுகிறார்கள். ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்ற மனப்பான்மை வேண்டும் என்ற விருப்பம், அவர்களுக்கு எப்போதும் உண்டு.

புதிய தாரக மந்திரத்தோடு மேலும் உற்சாகமாக சங்கம் வரளத்தொடங்கியது அது என்ன மந்திரம் என்பதை நாளை பார்க்கலாம்.

தொடரும்…

ஆர்.எஸ்.எஸ் வளர்ந்த வரலாறு

ஆர்.எஸ்.எஸ் வளர்ந்த வரலாறு

உங்களுக்கு சங்கத்தின் கதை சொல்லப் போகிறேன். இந்தக் கதை நிச்சயமாக உங்களுக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில், நம் அனைவருடனும் தொடர்பு உள்ளது இந்தக் கதை.

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம், உங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் என்றே அறிமுகம் ஆகியுள்ளது. 1925-ஆம் ஆண்டு விஜயதசமி நன்னாளில் நாகபுரியில் ஆரம்பிக்கப்பட்டது. ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம், இந்த மூன்று சொற்களின் பொருள் என்ன? புரிந்து கொள்வது மிக எளிது. நமது தேசத்துக்காக சுயநலமற்ற உணர்வுடன் தொண்டு செய்வதற்காகத் தானாக முன்வருபவர்கள் ஸ்வயம் சேவகர்கள். அவர்களது அமைப்பே சங்க ம்.

இதன் ஸ்தாபகர், டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார். அவர் ‘டாக்டர்ஜி’ என்று எல்லோராலும் மரியாதையுடன் அழைக்கப்பட்டார். நாகபுரியில் 1889-இல் யுகாதித் திருநாளில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். சிறுவனாக இருக்கும் போதே அவரது பெற்றோர் இருவரும், ஒரே நாளில் பிளேக் நோய்க்கு இரையானார்கள்.

விளையும் பயிர் முளையிலேயே…

அவர் முதல் வகுப்பில் படித்து வந்தபோது நடந்த நிகழ்ச்சி: 1897-இல் இங்கிலாந்து அரசி விக்டோரியா மகாராணி அரியணையேறி அறுபது ஆண்டுகள் நிறைந்ததையொட்டி பள்ளியில் வழங்கப்பட்ட இனிப்பைத் தூக்கியெறிந்தார். தாய்ப்பாலுடன் கூடவே அவர் தேசபக்தி அமுதத்தையும் அருந்தியிருப்பார் என்றே தோன்றுகிறது.

நடுநிலைப் பள்ளியில் சேர்ந்த பிறகு கேசவன் மற்ற மாணவர்கள் மத்தியிலும் சுதந்திர ஜோதியை ஒளிரச் செய்யும் வேலையைத் தொடங்கி விட்டார். 1905-இல் ‘வந்தே மாதரம்’ இயக்கத்தின் போது தனது பள்ளியிலும் இந்த வீர முழக்கம் ஒலிக்கக் காரணமாக இருந்தார். இதன் காரணமாக பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார்.

பிறகு நாகபுரிக்கு வெளியில் ஒரு பள்ளியில் சேர்ந்து மெட்ரிக் படிப்பை முடித்தார். தேசபக்தர்கள் சிலரது உதவி கிடைத்ததும் மருத்துவம் (டாக்டர் படிப்பு படிக்க அவர் கல்கத்தா சென்றார். படிப்பதற்காக கேசவன் அவ்வளவு தூரம் சென்றது ஏன்? அன்றையதினம் கல்கத்தா, தேசத்தின் விடுதலைக்காகப் போராடிய புரட்சியாளர்களின் முக்கிய பாசறையாக விளங்கியது. அதற்காகவே அவர் கல்கத்தா சென்றார்.

டாக்டர் படிப்பை முடித்துவிட்டு, அவர் 1916-இல் நாகபுரி திரும்பினாலும் டாக்டர் தொழிலைத் தொடங்கவில்லை. திருமணமும் செய்து கொள்ளவில்லை. பலரும் கேட்டார்கள் “உன் குடும்பம் ஏழ்மையில் வாடுகிற போது, இப்படி ஏன் செய்கிறாய்?” டாக்டர் ஹெட்கேவார் பதிலளித்தார்: “அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை ”. தேசத்தின் விடுதலைக்காக முழுமூச்சுடன் அவர் பாடுபட்டு வந்தார்.

நாகபுரியில் இருந்து கொண்டே மஹாராஷ்டிரம் முழுவதிலும் விதவிதமான மக்கள் விழிப்புணர்வுப் பணிகளை அவர் தொடங்கினார். 1920-லும் 1931-லும் காந்திஜியின் தலைமையில் நடந்த சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். பத்திரிகைகள் நடத்துவது, போராட்டங்களில் பங்கு கொள்வது போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார்.

சங்கம் நிறுவப்பட்டது ஏன்?

‘இத்தனை வகை தேசப் பணிகளில் மூழ்கியிருந்த டாக்டர் ஹெட்கேவாருக்கு ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் என்ற வேறொரு அமைப்பைத் தொடங்கும் எண்ணம் ஏன் ஏற்பட்டது?’ என்று நீங்கள் கேட்கக்கூடும். வார்தாவில் டாக்டர்ஜியைச் சந்தித்த போது காந்திஜிகூட அவரிடம் கேட்டார்: “காங்கிரசிலேயே இதைப் போன்ற அமைப்பை உருவாக்கலாமே?”

அதற்கு, ‘ஸ்வயம்சேவகர்கள் பற்றிய எனது கருத்து வித்தியாசமானது. தானாக முன்வந்து, தன்னலத்தைக் கைவிட்டு, தாய் நாட்டுப்பணி செய்பவர்களை உருவாக்க நான் விரும்புகிறேன். ஆனால், அரசியல் கட்சியின் அங்கமாக இருந்து கொண்டு இதைச் செய்வது சாத்தியமில்லை. இப்படி சமர்ப்பண உணர்வுள்ள ஊழியர்களின் மூலம்தான் அனைத்துத் துறைகளிலும் தேசத்தின் முன்னேற்றம் ஏற்படமுடியும் என்பது எனது நம்பிக்கை’ என்று பதிலளித்தார் டாக்டர்ஜி.

சங்கம் நிறுவப்பட்ட பிறகு கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் டாக்டர்ஜி கிராமம் கிராமமாக சென்றார். சந்தனக்கட்டை தேய்ந்து நறுமணத்தைப் பரப்புவது போல சங்கத்தின் நறுமணத்தை எல்லா இடங்களிலும் பரப்புவதற்கு, தன்னையே வருத்திக் கொண்டு, இரவு பகல் பாராது நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார். தேசப் பணியாகிய வேள்வித் தீயில் தன்னையே அர்ப்பணித்த அவர் 1940-இல் காலமானார்.

ஷாகா ஸ்வயம்சேவகர்களை உருவாக்கும் மையம்

How RSS' Early Morning Shakhas are Lending Voice to the BJP ...
RSS SHAKA

‘தனது இந்த புதுமையான கருத்தின்படி, ஸ்வயம்சேவககர்களை உருவாக்க டாக்டர்ஜி கையாண்ட முறை எது?’ என்று தெரிந்துக்கொள்ள உங்களுக்கு ஆவல் ஏற்படுகிறது அல்லவா? அதன் பெயர்தான் ஷாகா. உங்களில் பலர் அதைப் பார்த்து இருக்கக் கூடும். காவிக் கொடியின் முன்னே, சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் கூடுகிறார்கள்.பலவிதமான நமது நாட்டு விளையாட்டுகளை விளையாடுகின்றனர். சூரிய நமஸ்காரம், யோகாசனம், பலவிதமான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள்.

தேசபக்திப் பாடல்கள் பாடுகிறார்கள். பெரியோர்களின் வாழ்க்கை வரலாறு, மகான்களின் கருத்துக்கள், சொற்பொழிவாக, கலந்துரையாடலாக அவர்களுக்கு சொல்லப்படுகிறது. முடிவில் கொடிக்கு முன்னால் வரிசையாக நின்று, ஸ்வயம்சேவகர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். பிரார்த்தனையில் பாரதமாதாவை வணங்குகிறார்கள், பாரத அன்னைக்குத் தொண்டு புரிவதற்காக ஆற்றல், நல்லொழுக்கம், அறிவு ஆகிய நற்குணங்களை இறைவனிடம் வேண்டுகிறார்கள்.

இந்நிகழ்ச்சி தினமும் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் நடைபெறுகிறது. பங்கு கொள்பவர்களின் வசதிக்கேற்ப காலை, மாலை அல்லது இரவில் ஷாகா நடைபெறும். ஷாகாவைப் பார்க்கும் எவரும் அங்கு நிலவும் கட்டுப்பாடு கண்டு மகிழ்வர். ஷாகா முடிந்தபிறகு ஸ்வயம் சேவகர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் அன்புடன் பேசிக் கொண்டே புதியவர்களைச் சந்திக்கச் செல்கிறார்கள்.

பாரதநாடு மட்டுமல்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஷாகா பரவியுள்ளது.

சங்கத்தின் ஆரம்பகாலத்தில் ஷாகாக்களில் சிறுவர் – இளைஞர் – மாணவர்கள் மட்டுமே வருவது வழக்கம். “இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதனால் நாட்டுப்பணி நிறைவேறுமா?” என்று பலரும் கேட்பார்கள். சிலர் கேலி செய்வதும் உண்டு. ஆனால் இன்று ‘ஷாகா’வின் மகிமை என்ன, அதில் பண்புப்பயிற்சி பெறும் ஸ்வயம் சேவகர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்கள் எந்ததெந்த விதத்தில் எல்லாம் தேசப்பணி செய்துவருகிறார்கள் என்பது நன்றாக விளங்கி வருகிறது.

பல இடங்களில் நீங்களும் கூடப் பார்த்திருக்கலாம் – சங்க ஸ்வயம் சேவகர்கள், குடிசைப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு எழுத்தறிவும், உடலைத் தூய்மையாக வைத்திருக்கவும் கற்பிக்கின்றார்கள், வீட்டிலுள்ள பெரியவர்களை வணங்குவது, அவர்களுக்குப் பணிவிடை செய்வது, உண்மை பேசுவது, மரங்கள் – விலங்குகளை நேசிப்பது ஆகியவற்றைச் சொல்லிச் சொல்லி மனதில் பதிய வைக்கிறார்கள், அங்குள்ள சகோதரிகளுக்கு தையல் கற்றுத் தர ஏற்பாடு செய்கிறார்கள்,

சில இடங்களில் பெரிய அளவில் மருத்துவமனை நடத்தி வருகிறார்கள். தொலை தூர வனவாசி கிராமங்களில் 6000 ஓராசிரியர் பள்ளிகள் நடத்துகிறார்கள். மாணவர் விடுதிகளும் நடத்துகிறார்கள். நாடெங்கிலும் இதுபோன்ற 29,000 சேவைப்பணிகளை நடத்தி வருகிறார்கள்.

‘இது ஆத்ம சுத்திக்கான ஆன்மிக முயற்சி எனக் கருதிப் பணி செய்வோம்’ என்பார் ஸ்ரீ குருஜி கோல்வல்கர். இவர் டாக்டர்ஜிக்குப் பிறகு அகில பாரதத் தலைவராக ஆனவர். அவருக்குப் பிறகு தலைவரான ஸ்ரீ தேவரஸ், “தீண்டாமை ஒரு பாவம் இல்லையென்றால், உலகில் வேறு எதுவுமே பாவம் இல்லை ” என்று அறைகூவல் விடுத்தார்.

சேவைப் பணிகளின் சிறப்பு:

இந்த சேவைப் பணிகளின் சிறப்புதான் என்ன என்று நீங்கள் கேட்க விரும்புவீர்கள். ஆம். நிச்சயம் இவை வித்தியாசமானவை. முதலில் உங்கள் மனதில் எழக்கூடிய கேள்வி – இவ்வளவு பெரிய அளவில் நடைபெற்று வரும் சேவைப் பணிகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவாகுமே என்பதுதான். சங்க நலன் விரும்பும் செல்வந்தர்களிடம் இருந்தும், அரசிடம் இருந்தும்கூட ஓரளவு உதவி கிடைக்கிறது. ஆனால் இவை மொத்த செலவில் 5 சதவீதத்துக்கும் குறைவே. அப்படியென்றால் மீதி? சமுதாயத்திலுள்ள லட்சக்கணக்கான சாமானிய மக்களிடமிருந்தே இந்த செலவுக்கான பணம் முழுதும் கிடைக்கிறது. இப்போது ஒரு கேள்வி எழுகிறது. இந்தச் சேவைப்பணிகளை ஆதரிப்பது தங்கள் கடமை என்று சாமானியர்கள் ஏன் நினைக்கிறார்கள்?

Seva Sanghik: RSS Swayamsevaks step in, clean Hebbal Fly Over ...

முதல் விஷயம் இதுதான். ஸ்வயம் சேவகர்கள் “பாருங்க, நமது சொந்தக் குடும்பம் போலவே நமது சமுதாயமும் ஒரு பெரிய குடும்பம், ஏனெனில் நம் அனைவருக்கும் ஒரே தாய் – பாரத அன்னை . நாம் நமது குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் பற்றி அக்கறை கொள்வது போலவே நமது சமுதாயத்திலுள்ளவர்களைப் பற்றியும் கவலைப்படுவது நமது கடமை” என்று எடுத்துக்கூறி விளங்க வைக்கிறார்கள்.

மற்றொரு முக்கியமான விஷயம், ஸ்வயம்சேவகர்களின் நேர்மையில் மக்களுக்கு முழு நம்பிக்கை. இவர்கள் ஒவ்வொரு பைசாவையும் சரியான முறையில் தான் செலவிடுகின்றனர். அதற்குக் கணக்கும் வைத்திருக்கின்றனர். இதனால், சங்கத்தின் மீது சாமானிய மக்களுக்கு மட்டுமல்ல, பல்வேறு அமைப்புகளுக்கும் முழு நம்பிக்கை உண்டு.

சென்ற ஆண்டு கடும் புயல், ஒரிசாவின் கடற்கரை மாவட்டங்களை சின்னாபின்னம் ஆக்கியது. இதற்கு இரண்டு மூன்று ஆண்டுகள் முன்புதான் அங்கு பயங்கரமான பஞ்சம் நிலவியது. இவ்விரு சந்தர்ப்பங்களிலும் குஜராத் மாநிலத்தின் ‘பன்ஸாலி சேவா டிரஸ்ட்’ அங்கு நிவாரணம் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காகப் பலகோடி ரூபாய் திட்டம் தயாரித்து அதனைச் செயல்படுத்தும் பொறுப்பினை ஸ்வயம் சேவகர்களிடம் ஒப்படைத்தது.

சங்கத்தை தீவிரமாக எதிர்த்தவர் பின்பு சங்கத்தின் ஆதரவாளராக மாறினார் எப்படி? என்பதை நாளை சொல்கிறேன்.

தொடரும்…

அதிசயமே அதிசயிக்கும் RSS -6

முடிவுரை

ஒரு முறை, ஆனைமலை அருகே, ஆக்ஸ்போர்டு மேல்நிலைப் பள்ளியில், சங்கத்தின் ஒருவாரப் பண்புப்பயிற்சி முகாம் நடைபெற்றது. அதே பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கான சிறப்புவகுப்பு (Special Class) களும் நடைபெற்று வந்தன.

“அரை நிக்கரை மாட்டிக் கொண்டு நடமாடும் வாலிபர்களைப் பெண்கள் படிக்கும் பள்ளியில் ஏன் அனுமதித்தீர்கள்?”, என சில மாணவிகளின் பெற்றோர்கள் தங்கள் ஆட்சேபனைகளை நிர்வாகத்தினருடன் பதிவு செய்தனர்.

பள்ளியின் தாளாளர், “இவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். பண்பு பயிற்சி முகாமிற்காக வந்துள்ளார்கள்”, என விளக்கமளித்தார்.

உடனே அப்பெற்றோர்கள், “அப்படியா! ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எனில் அவர்கள் ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிக்கவர்கள், எந்தப் பிரச்சனையும் இல்லை ”, எனத் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள்.

உண்மைதான். சங்கத்தினரின் செயல்பாடுகள் ஸ்வயம்சேவகர்களுக்கு சுபாவமானவை. ஆனால் கண்ணுறும் சமுதாயத்தினருக்கு ஆச்சரியமளிக்கக் கூடியவை.

ஒருமுறை பெட்டவாய்த்தலையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சங்க முகாமின் நிறைவு விழாவில் தலைமை தாங்க வந்தார். வாத்ய இசையுடன் வரவேற்பளிக்கப்பட்டு, மேடைக்கு அழைத்து வரப்பட்டார். அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

தலைமையுரையில் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.

காலப்போக்கில் சங்கத்தினரின் நல்ல தொடர்பு காரணமாக சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் ஷாகாவிற்கு வரத் துவங் கினார். அடுத்தாண்டு சங்கப் பயிற்சி முகாமில் அரைநிக்கர் அணிந்து கொண்டு அந்த மருத்துவர் பயிற்சியாளராகப் பங்கு பெற்றார்.

முதல் வருடம் விழாத்தலைவர், அடுத்த வருடம் நிக்கர் அணிந்து கொண்டு தரையில் அமர்ந்த சாதாரணப் பயிற்சியாளர்! இவ்விஷயம் அவரது நண்பர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

தூரத்திலிருந்து தூற்றிய பலர் நெருங்கி வந்து நிகழ்ச்சிகளைப் பார்த்த பின் மனமாற்றம் கொள்கின்றனர். ஏன்? ஆர்.எஸ்.எஸ். தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாகக் கொண்டு செயல்படும் சுயநலமற்ற தன்னார்வ தொண்டு அமைப்பு ஆகும். இது இறைவனின் பணி, திறந்த மனதோடு இப்புத்தகத்தைப் படித்த அனைவரும் சங்கத்தை சரியாகப் புரிந்து கொள்வார்கள் என்றே கருதுகிறேன்.

புரிந்து கொண்ட பலரும் பாராட்டலாம். ஆனால் அதில் சிலர் இந்த உயர்ந்த லட்சியத்திற்காக கொஞ்சம் வாழ முற்பட வேண்டும் என்பதே ஒரு சின்ன ஆசை.

ராமாயணத்தில் ஒரு காட்சி நினைவிற்கு வருகிறது. சீதையைத் தேடி இலங்கை சென்ற ராம பக்த அனுமன், விபீஷணர் மாளிகையில் ஸ்ரீராம் ஜெயராம், ஜெயஜெய ராம் என்ற ராம நாம உச்சாரணத்தைக் கேட்டு பரவசமடைகிறார்! ராமநாமத்தால் ஹனுமன் பணிவு கொள்கிறான் உள்ளே எட்டிப்பார்த்தால். வீபீஷணன்தான் அந்த ராமபக்தன் என அறிந்து, வீபீஷணனைப் பாராட்டிய ஹனுமன், அடுத்த நொடியே கோபமடைந்தான். கண்கள் சிவந்தன.

“விபீஷணா, உன் ராமபக்தி நியாயமானது என்றால், ஜெகன் மாதா சீதையை உன் அண்ணன், இலங்கை மன்னன் இராவணன் சிறைபிடித்து வைத்துள்ளானே, அதைத் தட்டிக் கேட்காதது ஏன்?

“ராவணனை எதிர்த்துப் போராடாதது ஏன்?”, எனக் கேட்டான் ஹனுமன். விபீஷணன் யோசித்தான், நியாயத்தை உணர்ந்தான். -ராமபக்திக்குச் செயல்வடிவம் கொடுக்கத் துணிந்த விபீஷணன் ராவணனோடு சீதையை விடுவிக்கப் போராடினான். விளைவு? நாடு கடத்தப்பட்டான். துன்பத்தைக் கண்டு தளராத விபீஷணன் தர்ம யுத்தத்தில் ராமனோடு சேர்ந்தான்.

அதுபோல தேசம், தெய்வம், தர்மம் மீதுள்ள பக்திக்கு செயல் வடிவம் கொடுப்போம். “வாருங்கள்….ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கு கொண்டு, தேசியப் பணியில் தோள் கொடுக்க வாரீர்!

பாரத மாதா கீ ஜெய்!

அதிசயமே அதிசயிக்கும் RSS -1

அதிசயமே அதிசயிக்கும் RSS –2

அதிசயமே அதிசயிக்கும் RSS -3

அதிசயமே அதிசயிக்கும் RSS -4

அதிசயமே அதிசயிக்கும் RSS -5

அதிசயமே அதிசயிக்கும் RSS -5

அதிசயமே அதிசயிக்கும் RSS

-முனைவர் கே.கே. சுவாமி

காலம் மாறிப்போச்சு:

காலம் மாறிப்போச்சு, காலம் மாறிப்போச்சு – இது ஒரு பாட்டியின் பல்லவி.

எப்படி பாட்டி காலம் மாறிப்போச்சு ?, பேரன் கேட்டான்.

“எங்க காலத்துல அடிவாங்கினவன்வலியால் ஆ, ஊ’ எனக்கத்துவான்!

இந்தக் காலத்தில் அடி கொடுப்பவன் ‘ஆ, ஊ” எனக் கத்துகிறான்!”

“எங்க காலத்துல செக்குல அம்மி சுழலும், இன்றைக்கு கிரைன்டரில் அம்மி அப்படியே இருக்கு, செக்குச் சுழலுது!.”

“அக்காலத்துல, வாத்தியார் உட்கார்ந்து பாடம் நடத்துவார், பையன் கைகட்டி நின்றுகொண்டு பவ்யமாகப் பாடம் கேட்பான். இக்காலத்துல, கால்மேல் கால் போட்டு பையன் உட்கார்ந்திருக்க, பாவம், வாத்தியார் நின்னுகிட்டுப் பாடம் நடத்துகிறார்! காலம் மாறிப்போயிட்டதுதானே?” இது பாட்டியின் வாதம்.

Image result for hindu dharma nation

ஆனால், “பாரதம் ஒரு ஹிந்து நாடு, ஹிந்து மக்கள் சொந்த நாடு” என்று சங்க ஸ்தாபகர் கொண்ட அதே கொள்கைத் தெளிவு, இன்றும் நிலவுகிறது. சீருடை, உடற்பயிற்சி, போன்ற புறமாற்றங்கள் ஏற்படலாம். அடிப்படை தத்துவத்தில் சமரசத்திற்கே இடமில்லை . சற்றும் பிறழலாமல், உறுதியுடன், ஹிந்து ராஷ்ட்ர லட்சியத்தை சங்கம் பின்பற்றி வருகிறது.

1925-ல், ஸ்தாபகர் டாக்டர்ஜி அவர்கள், ஹிந்து ராஷ்ட்ரம் என்ற பாணத்தை ஏவினார். பலர், இதை எதிர்த்துப் பல்வேறு எதிர் பாணங்களை விட்டனர். அனைத்து பாணங்களையும் முறியடித்து இன்று சங்கபாணம் வெற்றியடைந்துள்ளது.

அதாவது, கருத்துப்போரில் (war of ideals) சங்கக் கருத்துக்களுக்கு இன்று சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஹிந்து ஒற்றுமை ஏற்படுத்துவது தவளைகளை தராசு தட்டில் எடைபோடுவதுபோல் இயலாத செயல் என்றனர். இன்று ஹிந்து ஒற்றுமை சாத்தியமாக உள்ளது ?

தமிழக முதல்வராக இருந்த கலைஞர் மு.க. அவர்கள், ஒருமுறை சங்கத்தை பற்றிப் பேசும்போது, “ஆர்.எஸ்.எஸ். விதை திராவிட மண்ணில் வேரூன்ற முடியாது. அதன் கிளைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்படுகிறது” என ஏளனமாகக் குறிப்பிட்டார்.

ஆனால், 1980-களில், ஹிந்து விழிப்புணர்வு ஏற்பட்டு, சங்க கிளைகள் தமிழகம் முழுவதும், பரவலாகவும், வேகமாகவும் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கலைஞர் சொன்னார்: “தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் பரவி வருகிறது”! காலம் மாறித்தான்விட்டது!

முதலாளித்துவம், பொதுவுடமை, சோசலிசம் போன்ற தத்துவங் கள் உலக அமைதியையும், சகோதரத்துவத்தையும், மனித நேயத்தை யும் நிலைநாட்ட முடியாமல் போனபோது, ‘ஹிந்துத்துவம் அவற்றை சாதிக்க முடியும்’, என்பது தெளிவாகி உள்ளது. உலகம் ஒரு குடும்பம், உலக மக்கள் அனைவரும் இறைவனின் குழந்தைகள், எனவே, உலக சகோதரத்துவம் சாத்தியம், “வேற்றுமையில் ஒற்றுமை என்ற நோக்கில், அனைவரும் இசைவோடு, இணைந்து வாழ முடியும்” என்ற ஹிந்து சிந்தனை, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது, பாராட்டைப் பெற்றுள்ளது என்பதே நிதர்சனம்!.

சங்க சாதனைகள்

இத்தனை ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். என்ன சாதித்தது (கிழித்தது) என்று கேட்பவர்கள் சங்க சாதனைகளைக் கேட்டும், கண்டும் ஆழ்ந்த வியப்பில் ஆழ்கின்றனர்.

கோவில், பள்ளி, சாலைகள் போன்றவைகளை உருவாக்கினால் அவைகள் கண்களுக்குப் புலப்படும். மாறாக, ஆர்.எஸ்.எஸ்.ஏற்படுத்தி யுள்ள மாற்றங்கள், காட்சிக்கு அப்பாற்பட்டவை (Abstract). சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

ஹிந்து என்பது ஒரு பழிச்சொல், ஹிந்து நாடு என்பது பகற் கனவு, ஹிந்து ஒற்றுமை என்பது தவளைகளைத் தராசில் எடைபோடுவது போன்றதாகும், என்றெல்லாம் கேலி பேசினார்கள். மெத்தப்படித்த, காங்கிரஸ் தலைவர் மோதிலால் நேரு அவர்கள் “என்னை கழுதை என்று கூட அழையுங்கள், ஆனால் ஹிந்து என்று மட்டும் சொல்லாதீர்கள்,” என்றெல்லாம் கூறி, ஹிந்து என்ற சொல்லை பழிச்சொல்லாக்கினார்.

Image result for hindu nation

இன்னும், ஒருசில சங்க சாதனைகளைக் காண்போம்.

1971-ல் வங்காள தேசம் உருவாகிய பிறகு, வங்கதேச முஸ்லீம்கள், ஊடுருவல் மூலமாக அஸ்ஸாம் மாநிலத்தில் குடியேறினர். விவசா யம், வணிகம், தொழில் துறை போன்ற பல துறைகளில் அவர்கள் கை ஓங்கியது. விளைவாக, அஸ்ஸாம் மண்ணின் மைந்தர்கள், அடிமைகளாய் நடத்தப்பட்டனர்.

இந்நிலை உணர்ந்த அஸ்ஸாமியர்கள், ”அஸ்ஸாம் அஸ்ஸாமியர்களுக்கே, மற்றவர்கள் அஸ்ஸாமைவிட்டு வெளியேறுங்கள்” எனக்கோரி மாபெரும் போராட்டத்தைத் துவக்கினர்.

Image result for sri sudarshan ji rss
Sri Sudarshan Ji
RSS former Sarasanghachalak

வடகிழக்கு மாகாண சங்க வேலையைக் கவனித்துவந்த பூஜ்ய சுதர்சன் ஜி அவர்கள், ‘அஸ்ஸாம் அஸ்ஸாமியர்களுக்கே’ என்பதற்கு பதிலாக, ”அஸ்ஸாம் பாரதீயர்களுக்கே, பங்களாதேசிகளே வெளியேறுங்கள்,” என்று கோரும்படி, தேசிய கண்ணோட்டத்தை ஏற்படுத்தினார். தேசிய ஒருமைப்பாடு நிலைநிறுத்தப்பட்டது. இல்லையெனில், மராட்டா மராட்டியர்களுக்கே, தமிழ்நாடு தமிழர்க ளுக்கே போன்ற கோஷங்கள், வலுப்பெற்றிருக்கும் அல்லவா?.

1980-களில், காலிஸ்தான் கோரிக்கையை முன்னிறுத்தி சில சீக்கியத் தீவிரவாதிகள் போராடத் துவங்கினர். பிரிவினைவாதம் தலைதூக்கியிருந்த காலகட்டத்தில், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம், பல்வேறு மாநிலங்களிலிருந்து, சில ஊழியர்களை, சங்க வேலைக்காக, பஞ்சாப் மாநிலத்திற்கு அனுப்பிவைத்தது.

”பண்பாட்டு ரீதியாக ஹிந்து-சீக்கியர்கள் ஒரே தர்மத்தைச் சேர்ந்தவர்கள். வழிபாட்டு முறை மாறலாம், ஆனால் வாழ்க்கை முறையால், இரு சமுதாயமும் இசைவோடு இணைந்து வாழ்ந்து கொண்டு வருகின்றன. திருமணம் போன்றவைகளும், இரு – சமூகத்தின் குடும்பங்களிடையே நடைபெற்று வருகின்றன. ராமன், சீதை போன்றவர்கள் நமக்கு பொதுவானவர்கள். எனவே காலிஸ் தான் கோரிக்கையை நிராகரித்து, தேசிய ஒருமைப்பாட்டைப் பேணி காக்க வேண்டும்,”” என்ற அடிப்படையான சிந்தனையை, பஞ்சாப் மாநிலத்தில், வீட்டுத் தொடர்பு மூலம் சங்கம் ஏற்படுத்தியதன் விளைவாக, காலிஸ்தான் கோரிக்கை வலுவிழந்தது. ஹிந்து-சீக்கிய ஒற்றுமை பலப்பட்டது. பஞ்சாபின் காங்கிரஸ் முதலமைச்சரே, இதற்காக சங்கத்தைப் பாராட்டினார்!

ஜம்மு-காஷ்மீரின் அன்றைய முதல்வர் உமர் அப்துல்லா அவர்கள், அமர்நாத் யாத்திரீகர்களுக்கு பல முட்டுக்கட்டைகள் போட்டு உபத்திரவங்கள் செய்தபோது, சங்கத்தின் வழிகாட்டுதலால் மக்கள் சக்தி திரண்டது, அமர்நாத் யாத்திரையில் பல சாதகங்கள் உண்டாக, மக்களின் அறப்போராட்டம் காரணமாய் அமைந்தது.

அதேபோல், மத்திய-மாநில அரசுகள், சேது சமுத்திரத் திட்டம் என்ற பெயரில், ராமர் பாலத்தைத் தகர்க்கவேண்டும் என்பதில் தலைகீழாய் நின்றுபார்த்தன. சங்கம் மக்கள் சக்தியைத் திரட்டியது. ராமர் பாலம் தகர்ப்புத் திட்டம் தகர்ந்தது!

Image result for article 370

“காஷ்மீர் மக்களின் விருப்பதிற்கிணங்க காஷ்மீர் தனிநாடா கட்டும் அல்லது பாக்கிஸ்தானோடு சேரட்டும்”, என்று வாதம் வலுப் பெற்றது. ‘காஷ்மீர் தற்காலிகமாக பாரதத்தோடு சேர்க்கப்பட்டது (accessed) இரண்டற இணையவில்லை (not merged),” என பிரிவினை வாதிகள் தர்க்கம் செய்தனர். ஆனால், “காஷ்மீர் பாரதத்தின் பிரிக்கப் பட முடியாத அங்கம்”. இக்கருத்தை நிலைநாட்டியது சங்கம். “பாரத எல்லைகளின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம்,” போன்ற எண்ணற்ற சாதனைகள் நிகழ்வது, சங்கத்தின் தேசிய ஈடுபாடு காரணமாகத்தான் என்பதை நாடறியும்.

பெரும்பான்மை – சிறுபான்மை வாதம்

பாரதம், ஒரு ஜனநாயக, மதசார்பற்ற நாடு, ஹிந்துக்களுக்காக மட்டும் ஆர்.எஸ்.எஸ். செயல்படுவது தர்க்க ரீதியானது அல்லவே என்ற வாதம் பல்லாண்டுகளாக முன்வைக்கப்படுகிறது. பல பிரதமர்கள் சங்கத்தை வகுப்புவாத இயக்கம் எனச் சாடி வந்தனர். இருப்பினும் ஆர்.எஸ்.எஸ். ஆலாய் தழைத்து, விழுதுகள் விட்டு, வானளாவ வளர்ந்து வருகிறதே! இதன் ரகசியம் என்ன? எனப் பலரும் வியக்கின்றனர்!

மதம் என்பது வழிபாட்டுமுறை, தர்மம் என்பது வாழ்க்கை முறை. ‘ஹிந்து’ என்பதை தர்மம் என்றே ஆர்.எஸ்.எஸ். அர்த்தம் கொள்கிறது. ‘ஹிந்து’ என்பது வாழ்க்கை முறையைக் குறிக்கிறது, என்பதை உச்சநீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது, என்பதை தெளிவாய் புரிந்து கொள்ள வேண்டும்.

சைவம், வைஷ்ணவம், பௌத்தம் ஆகியவை மதங்கள். ஆனால் விருந்தோம்பல், மனைவியை சகதர்ம பத்தினியாக பாவித்தல், கணவனிடம் பதிவிரத்தையாக இருத்தல், அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் எனப் போற்றுதல், ஆச்சார்ய தேவோ பவ என ஆசிரியரை வணங்குதல், சொன்ன வாக்கை காப்பாற்றுதல், நாட்டை தாயாக எண்ணுதல் ஆகியவை தர்மத்தின் சாயல்கள்.

எனவே, காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை பரந்துவிரிந்துள்ள, இந்நாட்டிலுள்ள அனைவரும், ஹிந்து தர்மம், ஹிந்து பண்பாடு, ஹிந்து வாழ்க்கை முறை, என்ற நூலில் ஒன்றாய் கோர்க்கப்படுகின்றனர்.

ஜாதி, மொழி, மதம், மாகாணம் ஆகிய வேறுபாடுகளிடையே, ‘ஹிந்து தேசியம்’ என்ற உணர்வில் ஒற்றுமை காண்கின்றனர். நமது பாரம்பரியம், பண்பாடு, முன்னோர்கள் அனைவருக்கும் பொது அல்லவா? எனவே, வேற்றுமையில் ஒற்றுமை என்ற இயற்கை நியதி, அனைவரையும் ஒன்றுபட வைக்கிறது, என்பது சங்கத்தின் ஆணித்தர மான நம்பிக்கை ஆகும்.

தமிழகத்தில் சங்கம்

1939ல் சங்க ஷாகா, முதலில் சென்னையிலும், பின்பு சேலம், கோவை, மதுரை, பரமக்குடி, திருச்சி போன்ற இடங்களிலும் துவக்கப்பட்டது. இன்று தேசிய நீரோட்டத்தில் இரண்டறக் கலந்துள்ள தமிழகம், சங்க வளர்ச்சிக்கு சாதகமாகத் திகழ்கிறது.

ஆனால், திராவிட இயக்கங்கள், அசுரவேகத்தில் வளர்ந்துவந்த அந்த காலக்கட்டங்களில், தனித்திராவிடநாடு, கடவுள் மறுப்பு இயக்கம், ஆரிய – திராவிட வாதம், ஹிந்து விரோதம் போன்ற கருத்துகள் மேலோங்கியிருந்த காலக்கட்டங்களில், சங்க ஷாகாவை தமிழகத்தில் நடத்துவது என்பது எதிர்நீச்சல் போடுவதற்கு சமமாகத்தான் இருந்தது. இருப்பினும் சங்கப் பிரச்சாரகர்கள் மற்றும் ஊழியர்களின் மனம் தளராத, கடுமையான உழைப்பின் காரணமாக, சங்க விதை, தெய்வத் தமிழ் மண்ணில் முளைத்து, செடியாகி, மரமாகி, காயாகி, பழமாகி இன்று பெரும் சமுதாயத் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

முடமான குழந்தை எழுந்து நடந்து, ஓடினாலோ, திக்குவாய் குழந்தை அழகு தமிழில் பேசினாலோ, கணக்குப் பாடத்தில் தேறாத பிள்ளை, இறுதித் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றாலோ பெற்றோர் எவ்வளவு மகிழ்ச்சி அடைவர்!

அதுபோல, 1981ல் திருச்சியில் நடந்த சங்க ஊழியர்களின் அமர்வில், தமிழகத்தில் சங்கம் வேறூன்றி, வேகமாக வளர்ந்து வருகிறது, என்ற மாவட்ட செயலர்களின் அறிக்கையைக் கேட்ட அப்போதைய சங்கத் தலைவர் பூஜனீய பாளா சாகேப் தேவரஸ் குறிப்பிட்டார் The hard nut has cracked. (பாறாங்கற்கள் உடைந்தன, சங்க ஊற்று பீறிட்டது)

1975 அவசர நிலை அறிவிக்கப்பட்ட போது பல சங்க ஊழியர்கள், பிரச்சாரகர்கள் மீது MISA, DIR சட்டங்கள் பாய்ந்தன தமிழகத்தில் 100ஜி சீனிவாசன், (சென்னை ) உத்தமராஜ்ஜி,(திருச்சி) ம.வீரபாகுஜி, (வேலூர்) ராமரத்தினம் ஆசிரியர், (தஞ்சை ) ராமநாத் ஜி, (சேலம்) போன்ற பல கார்யகர்த்தர்கள் கைதாகினர். ‘நெருப்பைப் பொட்டலம் கட்டிய வரலாறு இல்லை’ என தங்களுடைய போராட்ட குணத்தைப் பற்றிப் போற்றிக் கொண்டிருந்தனர். சில கட்சிகாரர்கள், மிசாவில் சிறைபிடிக்கப்பட்டபோது, மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு வெளியில் வந்தார்கள்.

ஆனால் சங்க ஊழியர்கள், சித்திரவதைகளுக்கு உட்பட்டாலும் சிறை வாழ்க்கையை அனுபவித்தார்கள். துன்பம் நேர்கையில் அவர்களுக்கு தெம்பூட்டியது, ‘பாரத் மாதா கீ ஜெய், வந்தே மாதரம்’ கோஷங்கள்!

வேடிக்கை என்னவெனில், ஸ்வயம்சேவகர்கள் சிறைக்குள் பல நிகழ்ச்சிகளை நடத்தினர். திமுக, திக காரர்கள் இவர்களின் நண்பர்களாயினர். வெளியே வந்தபின் சங்க ஆதரவாளர்களாயினர்.

Image result for vivekananda rock memorial
Vivekananda Rock – Kanyakumari

கன்னியாகுமரியில் விவேகானந்தர் தவமிருந்த பாறையின் மீது, பிரம்மாண்டமான விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைய தமிழக ஸ்வயம்சேவகர்களின் பங்கும் மகத்தானது.

மீனாட்சிபுரத்தில் ஒட்டுமொத்த மதமாற்றம் நடந்தபோது ஆர்.எஸ்.எஸ்., விஸ்வஹிந்து பரிஷத், ஆலய பாதுகாப்புக் கமிட்டி, போன்ற ஹிந்து அமைப்புகள், நாகர்கோவில், மதுரை, சேலம் போன்ற ஊர்களில், மாபெரும் ஹிந்து எழுச்சி மாநாடு மற்றும் ஊர்வலங்களை நடத்தி, சமுதாயத்தில் ஹிந்து விழிப்புணர்வை ஏற்படச் செய்தன.

ஹிந்து நினைத்தால், மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை வேலூர் மாவட்ட ஹிந்துக்கள், ஹிந்து முன்னணியின் உதவியுடன் நிரூபித்தனர்.

Image result for ஜலகண்டேஸ்வரர் கோவில் வேலூர் தமிழ்நாடு
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில்

ஹிந்து முன்னணியின் தலைமையில் ஹிந்து இயக்கங்கள் அணிதிரண்டு, வேலூரில் கோட்டைக்குள் இருந்த ஜலகண்டேஸ் வரர் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, ஆலயம் பொலிவுடன் விளங்கச் செய்தனர்.

அவசரநிலை நீக்கப்பட்டபிறகு 1977ல், சங்கத்தின் வேலை தமிழகமெங்கும் பரவும் நோக்கில், திரு. சோ. ராமசாமி முயற்சியில் சூர்ய நாராயணராவ் அவர்களின் பேட்டி, துக்ளக் இதழில் பிரசுரமானது.

சங்கத்தின் லட்சியம், செயல்முறை மற்றும் சாதனைகளை, துக்ளக்-ல் படித்த நூற்றுக் கணக்கானோர், சென்னை காரியாலயத் திற்கு கடிதம் எழுதி, சங்கத்தில் சேரும் ஆர்வத்தை வெளிப்படுத் தினர். பல புது ஊர்களில் சங்க கிளைகள் துவக்கப்பட்டன. தமிழக சங்க வரலாற்றில் இது ஒரு மைல்கல் ஆகும்.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் தொடர்பால் பூஜ்ய சித்பவானந்த சுவாமிகள், நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் போன்றவர்கள் சங்க ஆதரவாளர்களாயினர்.

1980ல் திருவேடகம் விவேகானந்தர் கல்லூரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். பண்பு பயிற்சி முகாமின் நிறைவு விழாவில், பெரிய சுவாமிஜி அவர்கள் ஸ்வயம்சேவகர்களைப் பார்த்து, ”நீங்கள் பாக்கியவான்கள்”, எனக் குறிப்பிட்டார்.

“மடம், கல்வி நிறுவனங்கள் உங்கள் தாய்வீடு, எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்”, என பூஜ்ய சித்பவானந்த மகராஜ் அவர்கள் குறிப்பிட்டார்.

1983-ல் சங்க பயிற்சி முகாம் நடத்த சேலம் ஸ்ரீராமகிருஷ்ணா சாரதா பள்ளியைக் கேட்டபோது பள்ளியின் தாளாளர் யதீஸ்வரி சாரதா பிரியாம் பாள் அனுமதி மறுத்தபோது, “நம்மைப் போல சுவாமி விவேகானந்தரின் கருத்துகளுக்காகத்தான் ஆர்.எஸ்.எஸ் பணியாற்றுகிறது. அதன் முகாமிற்கு அனுமதி வழங்குங்கள்” எனக் கடிதம் எழுதினார்.

அனுமதி வழங்கிய பின்னர், முகாமை பார்வையிட்ட சாரதா பிரியாம்பாள் சங்கத்தை வெகுவாகப் பாராட்டினார்கள்.

தமிழகத்தில் தீண்டாமையை வேறும் வேறடி மண்ணும் இல்லாமல் அகற்றுவதற்கும், குடிநீர், கோவில், மயானம் ஆகியவை அனைவருக்கும் பொதுவாக இருக்கவேண்டும் என்பதற்கும் சங்கம் மற்றும் ஹிந்து இயக்கங்கள் பெரிதும் பாடுபட்டு வருகின்றன.

மறைந்த பிரச்சாரக் ஸ்ரீ கோவிந்தன்ஜி, ராமநாதபுரம் ஜில்லா சங்கசாலக் மானனீய ஆத்மாநாத சுவாமி அவர்கள், மாநில ஆர்.எஸ்.எஸ். தலைவராயிருந்த மானனீய வி. ரங்கசாமி தேவர், ஹிந்து முன்னனி தலைவர் தாணுலிங்கநாடார், நிறுவனர் மானனீய ராமகோபாலன் ஜி ஆகியோர் தமிழகத்தில் இந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சமுதாய நல்லிணக்கத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளனர்.

ஜாதி மோதல்கள் நடந்த, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் பகுதிகளில், சங்ககிளைகள் நடந்துவரும் பகுதிகளில் ஜாதி சண்டைகள் நடைபெறாமல் சமூதாய நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டது.

அமரர் ஸ்ரீ சிவராம்ஜி என்ற பிரச்சாரக் தொண்டுப் பணிகளுக்கு ஒரு செயல்வடிவம் கொடுத்தார். 80 வயதைத் தாண்டிய அவர் முன் உதாரணமாக தேகதானம் வழங்க முடிவு செய்தார். அவர் இறந்தபிறகு அவரது, விருப்பப்படி உடல் ஸ்ரீராச்சந்திரா மருத்துவமனைக்கு தேகதானம் செய்யப்பட்டது.

இதையறிந்து சேலம் திரு. செல்வம்ஜி போன்ற பலர் தேகதானம் செய்ய தங்கள் விருப்பத்தைப் பதிவு செய்துள்ளனர். ஆயிரக் கணக்கானோர் கண்தானம் வழங்கியுள்ளனர். லட்சக்கணக்கானோர் ரத்ததானம் வழங்கி வருகின்றனர். சேலத்தில் அமரர் சிவராம்ஜி பெயரில் ரத்தவங்கி ஒன்று செயல்பட்டுவருகிறது. இவையனைத்தும் சங்கத்தின் சேவாபாரதி அமைப்பின் வழிகாட்டுதலில் நடைபெற்று வருகின்றன.

மேலும், தமிழகத்தில் இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட பேரிடர் நிகழும் நேரங்களில் சங்க ஸ்வயம் சேவகர்களின் நிவாரணப் பணிகளை ஊடகங்களும் பொது மக்களும் வெகுவாக வியந்து பாராட்டியுள்ளனர்.

Image result for sunami rss relif
Tsunami relief by RSS Volunteers (Swayamsevaks)

சுனாமியின் தாக்கத்தால், சென்னை , கடலூர், நாகப்பட்டிணம், கன்யாகுமரி மாவட்டங்களில், எத்தனையோ கடலோரக் குப்பங்களும், கிராமங்களும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாயின. சங்க ஸ்வயம் சேவகர்கள் உடனடியாக நிவாரணப் பணிக்கு விரைந்தோடினர். பலியானவர்களில் அழுகிய பிணங்களை அகற்றி உறவினர்களிடம் ஒப்படைத்தனர். ஈமக்கடன் செய்தல், காயம்பட்டவர்களுக்கு மருத்துவ சேவை, வீடிழந்தோர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம் போன்ற தேவைகளை உடனே செய்து கொடுத்தனர்.

சில மாதங்களுக்குப் பிறகு, புது தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுத்தல், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச டியூசன் வகுப்புகள் நடத்தல், மனதால் பாதிக்கப்பட்டவர்களை சாந்தப் படுத்தி, தன்னம்பிக்கையை ஊட்டி, வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்துதல், போன்ற பணிகளில் சேவாபாரதி ஈடுபட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Image result for seva bharathi tamil nadu

சென்னை , ஓசூர், ஆம்பூர், ராமநாதபுரம் போன்ற இடங்களில் அன்பு இல்லங்களை சேவாபாரதி நடத்தி வருகின்றது. ஆதரவற்ற குழந்தைகள், இந்த அன்பு இல்லங்களின் சொந்தக்காரர்கள்.இங்கு படித்து, ஆளாகி, வாழ்க்கையில் சொந்தக்காலில் நின்று நிம்மதியாய் வாழ்வோர் பலருண்டு!

‘புறந்தள்ளப்பட்ட மலைவாழ் மக்களும் நம் சமுதாயத்தின் சிறப்பான அங்கங்கள்’ என்ற உணர்வோடு, தமிழ்நாடு வனவாசி சேவாகேந்திரம், திருவள்ளூர், கருமந்துரை, அரூர், சத்தியமங்கலம், கோவை போன்ற இடங்களில் கல்வி, மருத்துவம், பொருளாதாரம், ஆன்மீகம் போனற துறைகளில் பல தொண்டு காரியங்களை செய்துவருகிறது.

இதன்மூலம் மலைவாழ் மக்களின் மத்தியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து, கருமந்துரை காவல் துணை ஆய்வாளர் இவ்வாறு கூறினார் :

“சேவா கேந்திரத்தின் தாக்கத்தால் இப்பகுதிகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குடித்துவிட்டு பெண்டாட்டியை அடித்தல், கடுக்காய் திருடுதல், குழந்தைகளை பள்ளியிலிருந்து தீடீரென நிறுத்தி ஆடு மாடுகளை மேய்க்கச் செய்தல், போன்ற பல விஷயங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன’.

கன்யாகுமரி மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிகுழுக்களின், வேலை காரணமாக, பெண்களின் வாழ்வில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நாளைய ஸ்வயம்சேவகர்கள்

சங்க ஸ்வயம்சேவகர்களிடம் சில தனிப்பண்புகள் காணக் கிடைக்கின்றன- சுயநலமின்மை , தனி மனித மற்றும் தேசிய ஒழுக்கம், சங்கக்கட்டுப்பாடு, விலைக்கு வாங்கிட இடங்கொடாமை, தாயகத்தின் நலன் விழைதல், ஹிந்து என்பதில் பெருமிதம் கொள்ளுதல், அநியாயத்தை சகியாமை, நான்குபேருடன் சேர்ந்து செயல்படல் போன்றவைகள்.

இப்பண்புகளை ஸ்வயம்சேவகத்துவம் என்ற ஒரே சொல்லால் குறிப்பிடலாம். அதிசயம் என்னவென்றால், சங்கத்தில் சேருவதற்கு முன்பே பலரிடம் ஸ்வயம்சேவகத்தன்மை இருப்பதைக் காண முடியும்.

எடுத்துக்காட்டாக அண்மையில் அமரரான திரு. APJ அப்துல் கலாம், ஜாதி, சமயம் கடந்த மாமனிதர் நிகரற்ற தேசபக்தர், பதவி ஆசைகளைத் துறந்த எளியவர்.

ஒரு முறை அன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஜி திரு. அப்துல்கலாம் அவர்களை தனது அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக வேண்டும் என அழைப்பு விடுத்தார். ஆனால் “விண்வெளி ஆராய்ச்சி மூலம் ஒரு விஞ்ஞானியாகவே நாட்டுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் அமைச்சர் பதவி வேண்டாம்.” என்று ஸ்ரீ வாஜ்பாய்ஜியின் வீட்டிற்கே சென்று அடக்கமாகத் தன் கருத்தை சொல்லிவிட்டார்! பொக்ரானில் அணு சோதனை நடந்தபிறகு சிலர் அதை எதிர்த்தனர். வலிமையுடைய நாடே முன்னேற முடியும். நம் முன்னோர்கள் வலிமையை வணங்கியவர்கள் எனச் சொல்லி, வலிமை உடையவன்தான் அஹிம்சை பேச வேண்டும் என அசத்தினார் திரு. கலாம் அவர்கள்.

நேரு அவர்களின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த திரு. எம்.சி. சாக்ளா, அவர்கள், தான் மதத்தால் ஒரு முஸ்லீம், ஆனால் பண்பாட்டு ரீதியாக ஒரு ஹிந்து, என்று பெருமிதம் கொண்டார். ஹிந்து வாழ்க்கை முறையை அனைவரும் பின்பற்ற முடியும். அவர்கள் அத்தனைபேரும் தர்ம ரீதியாக ஹிந்துக்களே.

சென்னையைச் சேர்ந்த எம்.சி. சுப்பிரமணியம் அவர்கள் சிறந்த காந்திய வாதி. பல்வேறு சமுதாய பணிகளில் ஈடுபட்டு வருபவர். மனநலம் குன்றிய குழந்தைகளுக்காக மாம்பலம் பகுதியில் ஒரு பள்ளியும்,

மாம்பலம், அடையாறு பகுதிகளில் மருத்துவ மையங்களையும் ஏற்படுத்தி சேவை மனப்பான்மையோடு நடத்திட ஏற்பாடுகள் செய்தார்.

திரு. கக்கன் விஸ்வநாதன் போன்ற எண்ணற்றோர் சமுதாயப் பணியில் அக்கறை கொண்டவர்கள்.

சங்க உறுப்பினர்களில்லை, ஆனால் கட்டாய மதமாற்றத்தை எதிர்ப்பவர்கள் பலருண்டு. சமுதாயக் கொடுமைகளை அகற்ற நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு போராடுபவர்கள் பலருண்டு. நலிந்தோர்க்கு கனிவுடன் தொண்டு செய்கின்றவர்கள் பலருண்டு.

இப்படிப்பட்டவர்களின் பணி மிகவும் பாராட்டுக்குரியது. ஆனால், கலியுகே சங்கே சக்தி அல்லவா? ஆங்காங்கே, பல சேவைகளை, தனித்தனியாக (isolated) செய்பவர்கள், சங்கத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் (organized – ஆக), மக்கள் சக்திகூடும், விரைவில் சமுதாயப் பிரச்சனைகள் தீரும், நாடு விரைவில் உய்வடையும்.

மேலே குறிப்பிடப்பட்டவர்கள் நாளைய ஸ்வயம்சேவகர்கள், ஸ்வயம் சேவகத் தன்மை கொண்டவர்களை இனங்கண்டு முறையாக ஸ்வயம் சேவகர்களாக்குவது இன்றைய ஸ்வயம்சேவகர்களின் கடமையாகும்.

வித்தியாசமான சிலரையும் சமுதாயத்தில் காணலாம். இவர்கள் நல்லவர்கள், மிகவும் நல்லவர்கள். ஆனால் ”ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை,” என்று வாளா இருப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களுடைய சிந்தனைக்கு சாணக்கியர் ஒரு கருத்தை வைக்கிறார். அதாவது “தர்மத்திற்கும், அதர்மத்திற்கு மிடையே சண்டை நடக்கின்றபோது, வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பவன், அதர்மத்திற்கே துணை போகிறான் என்றே பொருள்”. எனவே நல்லவர்கள் சங்கத்தில் இணையனும், தேச சேவையில் பங்கு பெறணும்.

தொடரும்…

அதிசயமே அதிசயிக்கும் RSS -1

அதிசயமே அதிசயிக்கும் RSS –2

அதிசயமே அதிசயிக்கும் RSS -3

அதிசயமே அதிசயிக்கும் RSS -4

அதிசயமே அதிசயிக்கும் RSS – 4

அதிசயமே அதிசயிக்கும் RSS

-முனைவர் கே.கே. சுவாமி

ஒரு வேடிக்கையான சம்பவத்தைப் பாருங்கள்!

ஒருநாள் மாலை நேரம். ஒரு கல்யாண ஊர்வலம் மேளதாளத்துடன் வந்து கொண்டிருக்கிறது. அலங்கரிக்கப்பட்ட வண்டியில் புதுப்பெண்-மாப்பிள்ளை, உல்லாசமாக பவனி வருகிறார்கள் வீட்டு மாடியின் முற்றத்திலிருந்து, ஒரு சங்கசாலக் (பிரபல வியாபாரி), தனது மனைவியுடன் ஊர்வலத்தைக் கண்டுகளித்துக் கொண்டிருக்கிறார். இருவரும் மலரும் நினைவுகளால் தன்னிலை மறக்கிறார்கள். மணப்பெண்-மாப்பிள்ளை ஸ்தானத்தில் தங்களை பாவித்துக் கொள்கிறார்கள்! இயற்கைதானே இது!

கல்யாண ஊர்வலம் கடந்து சென்று விட்டது. பரவச நிலையிலிருந்த அந்த அம்மா, “என்னங்க, கல்யாணமாகி இத்தனை வருஷத்துல, ஷாகா, பைடக், வர்க, சாங்கிக், பிரவாஸ், சங்க முகாம் இப்படியே சுத்திகிட்டிருந்தீங்க. இனிமேல் எனக்காக நேரம் ஒதுக்குங்க! சங்க வேலை போதுமுங்க! இனிமே இளைஞர்கள் பார்த்துக் கொள்ளுவாங்க”, என திருவாய் மலர்ந்தார்கள்.

திகைத்து நின்ற தன் கணவனை, உணர்ச்சிப் பூர்வமாக மடக்க முயன்ற அம்மா, தொடர்ந்தார்: “பாருங்க, அக்னி சாட்சியாக, வாழ்நாள் முழுதும் கண்கலங்காமல் சகதர்ம பத்தினியாகப் பார்த்துக் கொள்வேன் என்று சொல்லி என் கழுத்தில் தாலி கட்டினீங்க. இவ்விரதத்தைக் காப்பாற்றவேணும் தெரிஞ்சுக்கோங்க!”.

மலைத்து நின்ற சங்கசாலக்கிற்கு அருமையான ஒரு பாய்ன்ட் கிடைத்தது. “பாரும்மா, நீ சொல்வது முற்றிலும் சத்தியமானது. ஆனால் உன்னைக் கைப்பிடிப்பதற்கு முன்பு சங்கத்தில், அக்னி வடிவத்திலுள்ள காவிக் கொடிக்கு முன்பு, சங்க காரியத்தை உண்மையோடும், உடல், மனம், பொருள் அனைத்தாலும் செய்வேன். இவ்விரதத்தை நான் வாழ்நாள் முழுதும் அனுஷ்டிப்பேன், என்று விரதம் ஏற்றுள்ளேன். இரண்டில் எந்த விரதத்தைக் கைவிடுவது? என்னைப் பொறுத்தமட்டில் இரண்டு விரதங்களுமே முக்கியமானது. உன்னையும், சங்கத்தையும் எனது இரு கண்களாகப் போற்றுகிறேன்,” என ஒரு போடு போட்டார்!

“என்னமோ பண்ணுங்கோ, உங்களைத் திருத்த முடியாது. சங்கம் தான் உங்களுக்கு முதல் பொண்டாட்டி, நான் இரண்டாம் தாரம்தானே!” என சிணுங்கினார் அவரது மனைவி!

“கண்ணம்மா, ஒன்னு தெரிஞ்சுக்கோ, ஆர்.எஸ்.எஸ். எனக்கு முதல் மனைவி மாதிரி தான். ஆனால் முதல் மனைவியைவிட ஒருவனுக்கு இரண்டாம் மனைவியிடம்தான் பிரியம் அதிகமாக இருக்கும்!”, என மனைவியைத் தேற்றினார்! இதுதான் ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தர்களின் மனநிலை!

2014 நவம்பர் 9ம் தேதி தமிழ்நாட்டின் மாவட்ட தலைநகரங்களில் வாத்திய இசையுடன் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அனுமதி கேட்டிருந்தது. காவல் துறை மறுக்க, சங்கம் நீதிமன்றத்தை நாடியது. வாத்திய இசை எழுப்பாமல் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் சீருடை அணிந்து ஊர்வலம் நடத்த காவல் துறை மறுப்பு தெரிவித்தது.

பனியில்லாத மார்கழியா, படையில்லாத மன்னவனா

RSS route march in Tamilnadu 2014

என்பதுபோல, “சீறுடையில்லாத அணிவகுப்பா”? என்று எண்ணி எல்லா இடங்களிலும் ஆயிரக்கணக்கான ஸ்வயம்சேவகர்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

“உங்கள் அனைவரையும் கைது செய்கிறோம்”, என காவல் துறை அதிகாரிகள் கூறியபோது, கட்டுப்பாட்டுடன், “பாரத் மாதா கீ ஜெய்” கோஷம் எழுப்பிக்கொண்டு, சங்கத்தினர் காவல் துறை வாகனங்களில் ஏறினர்.

இவர்களின் கட்டுப்பாட்டையும், ஒழுங்கையும் ஒத்துழைப்பையும், கண்டு காவல்துறை அதிகாரிகளும், பொதுமக்களும் புருவங்களை உயர்த் தினர்!’

2015-ல் சேலத்தில் நடந்த 20-நாள் பண்பு பயிற்சி வகுப்பை ஒட்டி, முக்கியஸ்தர்களைக் கொண்ட, ஒரு வரவேற்பு குழு அமைக்கப்பட்டது.

”சங்கத்தின் அகிலபாரதத் தலைவர் அல்லது பொதுச்செயலாளர் முகாமிற்கு வருகிறார்களா?” என ஒருவர் கேட்க, ‘இல்லை ‘ என்ற பதில் கொடுக்கப்பட்டது.

” அப்படியென்றால் யாரை வரவேற்க இந்த வரவேற்புக்குழு?’ என்ற கேள்வி எழுந்தது.

“சீருடை, போக்குவரத்து செலவு, முகாம் கட்டணம் ஆகிய வற்றைத் தன் சொந்த பொறுப்பில் ஏற்றுக் கொண்டு, 20 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு, முகாமில் பயிற்சி பெற்று, முகாம் முடித்து ஊர் திரும்பியவுடன் சங்க வேலையை திறம்படச் செய்ய வேண்டும் என்ற தேசப்பற்றோடு, முகாமிற்கு வரும் சாதாரண பயிற்சியாளர்களைத்தான் வரவேற்க உள்ளோம்’, என்ற வித்தியாசமான விளக்கத்தைக் கேட்டவுடன் அனைவரும் வியந்து மகிழ்ந்தனர்.

ஓரு தனியார் நிறுவனத்தின் மேலாளர் திரு.செந்தில் என்பவர், “அப்படியானால் நான் முகாமிற்கு வந்து பயிற்சியாளர்களின் காலில் விழுந்து வணங்க விரும்புகிறேன்” எனக் கூறினார்.

ஆம்.

“அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,

அகத்திலே அன்பினோர் வெள்ளம்;

பொறிகளின் மீது தனியரசாணை

பொழுதெலாம் நினது பேரருளின்

நெறியிலே நாட்டம் கர்ம யோகத்தில்

நிலைத்திடல் என்றிவை அருளாய்,

குறிகுணமேதும் இல்லதாய் அனைத்தாய்

குலவிடு தனிப் பரம் பொருளே”.

என்று இறைவனை வேண்டி, சமுதாய வேலை செய்யும் சங்க ஊழியர்களின் அதிசயங்களை, இங்குதான் பார்க்க முடியும்.

பிரசாரக் முறை

தினசரி ஒருமணி நேரம் ஷாகா, மேலும் மக்கள் தொடர்புக்கும் சேவைப் பணிகளுக்கும் இரண்டு மூன்று மணி நேரம் ஒதுக்கும் எண்ணற்ற சங்க ஊழியர்கள், இது ஒருபுறம்.

சங்கப்பணியை வாழ்க்கைப் பணியாக (Life mission) எடுத்துக் கொண்டு முழுநேர ஊழியர்களாக வாழ்வை அர்ப்பணம் செய்து கொண்டுள்ள, பல்லாயிரக் கணக்கான பிரச்சாரகர்கள் மறுபுறம்.

அவசர நிலை வாபசாகி, ஜனதா கட்சி, மத்தியில் ஆட்சிக்கு வந்த போது சென்னையில் 1978-ல் ஒரு சங்க ஊழியர்களின் பைடக் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட துக்ளக் சோ அவர்கள்,

”ஆர்.எஸ்.எஸ்.-ன் ஹிந்து ராஷ்ட்ரக் கொள்கையையும், தினசரி ஷாகா முறையையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், பதவி, புகழ், எனக்கென்ன கிடைக்கும் என்ற சுயநலத்தில் அலை யும் கும்பல்களிடையே பெயர், புகழ் எதிர்பாராது, எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு, பிரச்சாரகர்களாக வேலைசெய்யும் முறையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது விந்தையாகவும், அதிசயமாகவும் இருக்கிறது!”, எனக் கூறினார்.

அக்கூட்டத்தில் கலந்து கொண்ட நாவலாசிரியர் தீபம் பார்த்தசாரதி போன்றோரும், பிரசாரகர்களின் தியாக உணர்வை கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.

சங்கப்பணி, தேசியப்பணி மற்றும் தெய்வீகப் பணி. எனவேதான்,

“செல்வத்தைத் தந்தேன், உடல் உழைப்பினைத் தந்தேன்,

திறமைகளைனைத்தும் உனக்கே அர்ப்பணம் செய்தேன்!

என்ன தந்த போதும் மனம், அமைதியற்றதால், – குருவே!

உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம்”,

என தேசப்பணியாம் ஹோம குண்டத்தில், ஆகுதியாக்கிக் கொள்ளும் தூய மலர்களாய், பல இளைஞர்கள் முழு நேர ஊழியர்களாகச் சுடர் விடுகிறார்கள்.

தீண்டாமை, வரதட்சணை, குடிப்பழக்கம், ஜாதீயம் போன்ற சமுதாயக் கொடுமைகளுக்கு இரையாகாமல், மனதில் தூய்மை, வாக்கில் இனிமை, செயலில் நேர்மை ஆகிய பண்புகளோடு, சங்க நெறிதனில் கடுகி ஏகிடும், கார்யகர்த்தர்களைப் பார்ப்பது அதிசயமான விஷயமல்லவா?. –

1980-ல் திருவேடகம் விவேகானந்தா கல்லுரியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் ஆசியுரை வழங்கிய பூஜ்ய சித்பவானந்தா சுவாமிகள், சங்க ஸ்வயம்சேவகர்களைப் பார்த்து “நீங்கள் பாக்கியவான்கள்; சுவாமி விவேகானந்தரின் கனவை நனவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்”, எனக் குறிப்பிட்டார்.

ஆத்மார்த்த உறவுமுறை

ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி போன்ற வித்தியாசம் பாராமல், ஒருதாய் (பாரதத்தாய்) மக்களாய், சகோதரர்களாய், தொடர்ந்து அன்போடும் நேசத்தோடும், சங்க ஊழியர்கள் வேலை செய்யும் விந்தை என்ன?.

உள்ளார்ந்த அன்பு, ஆத்மார்த்தமான உறவுமுறை, Heart to Heart approach, பரஸ்பர நம்பிக்கை , சார்புத் தன்மை (Dependability) ஆகிய உன்னத பண்புகளே, சங்க ஊழியர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபடுவதற்குக் காரணம்.

தூய்மையான அன்பின் வெளிப்பாட்டிற்கு இதோ ஒரு எடுத்துக்காட்டு:

1993-ல் சென்னை காரியாலயம் பயங்கரவாதிகளால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. 11 இன்னுயிர்கள் பிரிந்தன. சோகமான சூழல். அப்போது சங்கத்தின் அகில பாரதத் தலைவர் பரம பூஜனீய பாளாசாகேப் தேவரஸ் அவர்கள். உடல் நலக் குறைவால் நாகபுரியில் படுத்த படுக்கையாயிருந்தார்.

சென்னையில் நடந்த துயரச் செய்தியைக் கேள்விப்பட்டவர், மிகுந்த துக்கமடைந்தார். சென்னை சென்று கார்யகர்தர்களைச் சந்தித்து, கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும், எனத் தீர்மானித்ததார். மருத்துவர்கள் தடுத்தும் அதை பொருட்படுத்தாமல் விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.

Balasaheb Devaras, 3rd Sarasanghachalak of RSS

இவரது பலவீனமான உடல்நிலையைக் கண்ட விமானப்பணிப் பெண்கள், இவர்மீது பரிவுகொண்டு, அக்கறையோடு கவனித்துக் கொண்டனர். விமானம் சென்னை காமராஜர் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்பாக, அப்பெண்கள், “ஐயா, தாங்கள் எந்த மருத்துவமனைக்குச் செல்கிறீர்கள்? அப்பல்லோவா, ராமசந்திரா மருத்துவமனையா,” என கருணையோடு கேட்டனர்!

”மகளே, நான் ஆர். எஸ். எஸ். தலைவர். சென்னை காரியாலயத்தில், வெடிகுண்டு விபத்தில் எனது உயிருக்கும் உயிரான ஊழியர்கள் சிலர் காலமாகிவிட்டனர். அவர்களது உறவினர்கள் மற்றும் சங்க ஊழியர்களிடம் துக்கம் விசாரிக்கச் செல்கிறேன்”, என்று தழுதழுத்தக் குரலில் கூறி விட்டு கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக் கொண்டார், ஸ்ரீ தேவரஸ்ஜி.

விமானப் பணிப்பெண்களின் கண்கள் குளமாயின. ஈரமான நெஞ்சத்தைப் பார்த்தவர்களின் நெஞ்சமும் ஈரமாகுமல்லவா?

உடன்பாடான அணுகுமுறை :

மகாத்மா காந்திஜியின் படுகொலை சம்பவத்தைக் காரணமாக வைத்து சங்கத்தின் மீது பொறாமை கொண்டிருந்த பிரதமர் நேரு அவர்கள் 1948-ல் சங்கத்தைத் தடை செய்தார்.

”காந்தி கொலைக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை , சங்கம் அப்பழுக்கற்ற சேத பக்த இயக்கம்.” என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அரசு தடையை நீக்கிய பிறகு சிறையிலிருந்து விடுதலையான பூஜ்ய ஸ்ரீ குருஜி அவர்கள் (சங்கத்தின் தலைவர்), நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அபாண்டமான பழியை சுமத்தி நூற்றுக்கணக்கான சங்க ஊழியர் களை சிறையிலிட்டு, சித்திரவதை செய்த மத்திய அரசை எதிர்த்துப் போராட வேண்டுமென பலர் ஸ்ரீ குருஜியிடம் கோரினார்கள்.

ஆனால், ஆன்மிகச் செல்வர் ஸ்ரீகுருஜி கூறிய வியப்பான செய்தி என்ன தெரியுமா?

”பல்லாண்டு போராடி சுதந்திரம் பெற்று சொந்த ஆட்சி அமைந் துள்ளோம். நாட்டின் பொருளாதாரம் மற்றும் பன்முக வளர்ச்சியை மனதிற்கொண்டு அரசு செய்த தவற்றை மறப்போம், மன்னிப்போம்.

சிலசமயம் சாப்பிடும்பொழுது, நமது பற்கள் நாவைக் கடித்து விடுகின்றன. பற்களைத் தட்டி எறிந்து விடுகிறோமோ என்ன?’.

ஆம், தவறிழைப்பது மனித இயல்பு, மன்னிப்பது தெய்வ இயல்பு (To err is human, forgive divine) என்ற கூற்றை மெய்ப்பித்தது, ஸ்ரீ குருஜியின் வார்த்தைகள்.

1975ல் பிரதமர் இந்திரா காந்தி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அவசர நிலையை பிரகடனம் செய்தார். MISA, DIR சட்டங்கள் பல தலைவர்கள் மீது பாய்ந்தன. சங்கம் மற்றும் சில அமைப்புகள் தடைசெய்யப்பட்டன. அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன.

இருண்ட அந்த சூழ்நிலையில், துணிந்து நின்று அறப்போராட் டங்கள் மூலம் மக்கள் சக்தியை எழுப்பச் செய்தது ஆர்.எஸ்.எஸ். இங்கும் சங்கத்தின் அணுகுமுறை, அறவழியில்தான் அமைந்தது.

செய்வனத் திருந்தச் செய்யும் பாங்கு

செய்வன திருந்தச் செய் என்ற தமிழ் சொல்லுக்கேற்பவும், யோக கர்மசு கௌசலம் என்ற சமஸ்கிருதச் சொல்லிற்கு ஏற்பவும், சங்கத்தினர், எந்த செயலையும் திட்டமிட்டு, திட்டத்தை செவ்வனே நிறைவேற்றுகின்றனர்.

கீதாஞ்சலியில் ரவீந்திரநாத் தாகூர், ஒரு கவிதையில், முழுமையை வலியுறுத்தும் பொழுது இவ்வாறு கூறுகிறார் : “Where the tireless striving, stretches its arms towards perfection………”

இதற்கு சங்க ஸ்தாபகர் பூஜ்ய டாக்டர்ஜியின், ஒரு வாழ்க்கை சம்பவம் நல்லதொரு எடுத்துக்காட்டாகும்.

ஒரு முறை, நாகபுரியில் ஒரு சிபிர் நடைபெற்றது. ஊழியர்கள் தங்கு வதற்காக பெரிய பந்தல் நிர்மாணிக்கப்பட்டது. சிபிர் துவங்குவதற்கு முதல் நாள் இரவு, டாக்டர்ஜி பந்தலைப் பார்வையிட்டார். பல வரிசை களில், ஒரு வரிசையிலிருந்த பந்தல்கால் ஒன்று, சற்று வலதுபுறம் தள்ளி நடப்பட்டிருந்தது. வரிசை சீராக இல்லை. இதைப்பார்த்த டாக்டர்ஜி, ஒரு ஸ்வயம்சேவகரைக் கூப்பிட்டு, அதைப் பிடுங்கி நேர் வரிசையில் நடும்படி கூறினார். ஒரு கம்பம் சற்று விலகி இருப்ப தால் என்னவாகப் போகிறது என்றுகூட சிலர் நினைத்தனர். ஆனால் டாக்டர்ஜியின் அன்பு வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது.

அடுத்த நாள் துவக்க விழாவில் தலைமை உரையாற்றிய நாகபுரி மேயர் அவர்கள், “சங்கத்தில் எல்லாம் கட்டுப்பாட்டுடனும், சீராகவும் செய்யப்படுவது எனக்குப் பிடித்திருக்கிறது. செருப்புகள், வாகனங்களெல்லாம் வரிசை வரிசையாக விடப்பட்டுள்ளன. சங்க ஊழியர்களும் வரிசையாக, நிமிர்ந்து நேர்த்தியாக அமர்ந்துள்ளீர்கள் பந்தல் கால்கள் கூட, அனைத்தும் வரிசையாக நூல் பிடித்தாற்போல நடப்பட்டுள்ளன. இந்த நேர்த்தியைப் (perfection) பாராட்டு கிறேன்”, என்று குறிப்பிட்டபோது, அனைவரும் வியந்துவிட்டனர்.

Pefection is not a small thing, but small things make perfection என்பது இதன் மூலம் விளங்குகிறது.

வேலூரில் ஒரு அரங்கில் சங்கத்தின் பெளதிக் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவ்வழியே, ஒரு கல்வித்துறையில் பணிபுரியும் அலுவலர் சென்றபொழுது, வாகனங்கள் வரிசை யில் நிறுத்தப்பட்டிருப்பதையும், செருப்புகள் வரிசையாய் விடப்பட்டி ருப்பதையும் பார்த்து அசந்து போனார். இவ்வளவு அழகான நிகழ்ச்சியா? பார்ப்போம் என்று அரங்கத்தை எட்டிப்பார்த்தார்.

நேர்வரிசைகளில், நிமிர்ந்து அமர்ந்து கொண்டு ஒரு சங்க அதிகாரி பேசுவதை அனைவரும் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அழகிய ஏற்பாட்டில் கவரப்பட்ட அவரும், அமர்ந்து பேச்சைக் கேட் டார். சூழ்நிலையும், கருத்துக்களும் பிடித்தன. தொடர்ந்து சங்க நிகழ்ச்சி கள், ஷாகா, என ஸ்வயம்சேவக் ஆனார். இன்று வேலூர் ஜில்லாவின் சங்க தலைவர் (மானனீய ஏழை முனுசாமி அவர்கள்) ஆகிவிட்டார்.

சங்கஸ்தானையும், கொடிவட்டத்தையும் சுத்தம் செய்வதில், சங்கஸ்தாபகரே முன்னுதாரணமாக ஈடுபடுவதைப் பார்த்து, மற்ற ஸ்வயம் சேவகர்களும் இடத்தை சுத்தம் செய்வர். ஒரு வேளை, ஸ்வயம்சேவகரான பிரதமர் மோடிஜிக்கு, ஸ்வச்ச பாரதம் கற்பனை, ஸ்வச்ச சங்கஸ்தான் கற்பனையில் இருந்துதான் வந்ததோ!.

தொடரும்…

அதிசயமே அதிசயிக்கும் RSS -1

அதிசயமே அதிசயிக்கும் RSS2

அதிசயமே அதிசயிக்கும் RSS -3