ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவ சங்கம் (RSS) – பிரார்த்தனா

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவ சங்கம் (RSS) – பிரார்த்தனா

1234

சுலோகங்களின்படி கருத்துரை

அன்பு பட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன். ஹிந்து பூமியே! நீயே என்னை சுகமாக ஊட்டி வளர்க்கின்றாய். மகா மங்கலமயமான புண்ணிய பூமியே! உனது பணிக்கென எனது இவ்வுடல் அர்ப்பணமாகட்டும். உன்னை நான் பன்முறை வணங்குகிறேன்.

சர்வ சக்தி வாய்ந்த இறைவனே! ஹிந்து ராஷ்ட்ரத்தின் அங்கங்களைப் போன்றுள்ள உறுப்பினர்களாகிய நங்கள் உன்னைப் பணிவுடன் வணங்குகிறோம். அது நிறைவேற எங்களுக்கு ஆசி புரிவாயாக! உலகத்தால் வெல்ல முடியாத சக்தியை எங்களுக்கு அருள்வாயாக! உலகம் முழுவதும் மதித்து தலைவணங்கி நிற்கக் கூடிய அளவிற்கு தூய ஒழுக்கத்தையும் எங்களுக்கு தந்தருள்வாயாக!அறிவு பூர்வமாக ஆய்ந்து நாங்களே ஏற்ற இந்த முள் நிறைந்த பாதையைக் கடப்பதற்கு எளிதாக ஆக்கக் கூடிய ஞானத்தையும் எங்களுக்கு அளிப்பாயாக!

இம்மையுடன் கூடிய மறுமையை எய்த ஒரே கருவி (வழி) வீர விரதம் என்பதாகும்.அது எங்களது உள்ளத்தில் துடித்துக் கொண்டு இருக்கட்டும்.எங்களது இதயத்தில் குன்றாததும்,தீவிரமானதுமான லட்சிய உறுதியானது எப்பொழுதும் விழிப்புடனிருக்கட்டும். வெற்றி பொருந்திய ஒற்றுமையால் திரண்டதுமான எங்கள் காரியசக்தி ஸ்வதர்மத்தைக் காத்து எங்களது இந்த ராஷ்ட்ரத்தை மகோன்னத நிலைக்குக் கொண்டு செல்ல, உனது ஆசியால் மிக்க திறம் பெற்றதாக ஆகட்டும்.

வெல்க பாரத அன்னை!

ExaltedRareAlpineroadguidetigerbeetle-size_restricted