சுவாமி விவேகானந்தரும் சுதந்திரப் போராட்டமும்

சுவாமி விவேகானந்தரும் சுதந்திரப் போராட்டமும்

ஆர்.பி.வி.எஸ். மணியன்


விவேகானந்தரை வர்ணிக்கும் போது “தேச பக்த துறவி” என்றும் “தேசீயத் துறவி” என்றும் தேசபக்த துறவி என்றும் கூறுவதுன்டு. இவரை நாம் தேசபக்த துறவி என்றால் மற்ற துறவிகள் தேசபக்தி இல்லாதவர்களா? என்ற கேள்வி எழலாம்.

சாதாரணமாக துறவிகள் என்றாலே எல்லாவிதமான பற்றுகளையும் விட்டுவிடவேண்டும்.

பாச பந்தங்களுக்கு மேலெழுந்து நிற்க வேண்டும். பாசம் என்கிற போது தாய்ப்பாசமாக இருந்தாலும் சரி,தாய் நாட்டுப் பாசமாக இருந்தாலும் சரி. ஆனால் ஒரு சில துறவிகள் தங்களது தாய் பாசத்தைத் துறந்தாலும் தாய் நாட்டுப் பாசத்தைத் துறக்கவில்லை . சில துறவிகள் தங்களது தாய்நாட்டுப்பற்றை வார்த்தைகளில் வடித்திருக்கிறார்கள். சிலர் செயல்களால் செதுக்கியிருக்கிறார்கள்.

அப்படிச் சொல்லாலும் செயலாலும் தங்களது தேசபக்தியை ப்ரகடனப்படுத்தியவர்களையே தேசபக்தத் துறவியர்கள் என்றும் வர்ணிக்கிறோம்.

கடந்த கால வரலாற்றில் சுவாமி வித்யாரண்யரும், ஸமர்த்த ராமதாஸரும் இத்தகைய தேசபக்தத் துறவிகளாகத் திகழ்ந்திருக்கிறார்கள்.

அப்படியே அண்மைக் கால வரலாற்றில் சுவாமி விவேகானந்தரும், சுவாமி ராமதீர்த்தரும் தேசபக்தத் துறவிகள் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். அதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைவது அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தின் அரசியல் சூழ்நிலையும், சமுதாய சூழ்நிலையுமே.

அப்படிப் பார்த்தால் இஸ்லாமிய படையெடுப்புகளால் ஹிந்துப் பண்பாடு அழிந்து போய்விடுமோ என்ற நிலையில் தென்னகத்தில் இஸ்லாமிய ஆதிக்கம் காலூன்ற முடியாதபடி செய்யவேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலையில் விஜய நகர ஸாம்ராஜ்யத்தை நிர்மாணித்தார் வித்யாரண்யர். அதுபோலவே ஔரங்கசீபின் மதவெறியால் தக்கணபீடபூமி துருக்கர் பூமியாகிவிடாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமக்கு இருந்ததை உணர்ந்த ஸமர்த்த ராமதாஸர் மாவீரன் சிவாஜிக்கு உத்வேகமும் உற்சாகமும் தந்து அவன் மூலமாக ஹைந்தவீ ஸ்வராஜ்யத்தை நிர்மாணித்தார்.

சுவாமி விவேகானந்தரும் தமது வாழ்நாளில் மேற்கத்திய கலாச்சாரத்தில் நாம் மூழ்கிப்போய் விடுவோமோ என்று அஞ்சி ஹிந்துத்துவ தேசிய உணர்வைத் தமதுச் சொற்பொழிவுகளில் வெளிப்படுத்தினார். அவரது சம காலத்திய விடுதலைப் போர் வீரர்களும் சரி, அல்லது அவருக்குப் பிற்காலத்தில் தோன்றிய விடுதலை இயக்கத் தலைவர்களும் சரி அவரது உரைகளால் உந்தப்பட்டு, உத்வேகம் பெற்று உழைத்ததாலேயே நாம் விடுதலை பெற்றோம்.

விடுதலைப் போரில் விவேகானந்தரின் மறைமுகப் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது.

ஆகவே இப்போது நாம் அவரது தேச பக்த முகத்தைச் சற்று தரிசிப்போம்.


என்னதான் சொந்தநாடு ஆனாலும் ஒரு துறவி அதன்மீது பற்று வைப்பது சரியல்ல என்று ஒருவர் ஒருமுறை விவேகானந்தரிடம் கூறினார். அதற்கு அவர் பதில் கூறும்போது, “தன் தாயை ஒரு துறவி எவ்வாறு நேசிக்காமல் இருக்க முடியாதோ அதுபோலவே தாய்நாட்டை நேசிக்காமலும் இருக்க முடியாது.

ஒரு துறவிக்குத் தாய்ப்பாசம் இருக்கலாம் என்று சாஸ்திரங்களே கூறுகின்றன. அதுபோலவே ஒரு துறவிக்குத் தாய்நாட்டுப் பாசம் இருப்பதிலும் தவறில்லை. உலகத்தவரை நேசிப்பதற்குத் தாய்நாட்டுப் பற்றுத் தடையாக இருக்க முடியாது” என்று கூறினார்.


சுவாமிஜி பாரதத்தை வெறும் நிலப்பரப்பாகவோ, ஜடப்பொருளாகவோ பார்க்கவில்லை. அதனை சைதன்யம் நிறைந்த மாத்ரு வடிவமாக பார்த்தார். அரவிந்தரும் தாயகத்தை மாதா பவானியாகத்தான் பார்த்தார். இவர்கள் இருவருக்குமே இத்தகைய கண்ணோட்டத்தை வழங்கியவர் பங்கிம் சந்திர சட்டர்ஜி. பங்கிம் சந்திரரின் ஆனந்தமடம் விவேகானந்தரையும், அரவிந்தரையும் வெகுவாகவே பாதித்தது. அரவிந்தரின் பவானி மந்திரம். ஆனந்த மடத்தின் சாயலே அன்றி வேறல்ல. ஆனந்த மடம் பங்கிம் சந்திரரின் கடந்தகாலக் கற்பனை. பவானி மந்திரம் அரவிந்தரின் நனவாகாத கனவு.

சுவாமிஜி உருவாக்கிய ராமகிருஷ்ண மடம் ஆனந்தமடத்தின் சாயலைப் பெறமுடியாமல் போனதற்குக் காரணம் விவேகானந்தரின் சகோதரத் துறவிகளிடத்தில் நரேந்திரனுக்கு இருந்த அளவிற்கு தேசிய உணர்வும், விடுதலை வேட்கையும் இல்லாமல் போனதேயாகும். அவர்களது நாட்டமெல்லாம் ஆன்மீக சாதனையின் மீதே இருந்தது.


ஆனந்த மடத்தில் ஒரு காட்சி.

ஸத்யானந்த ப்ரம்மச்சாரி மஹேந்திரனுக்கு ஆனந்த மடத்தில் அன்னையை தரிசனம் செய்து வைக்கிறார்.

சலவைக் கல்லால் அமைந்த ஒரு விசாலமான கர்ப்பக்ருஹத்தில் பத்துத் தோள்களுடன் பராசக்தியின் பதுமை ஒன்று.

“இவள் எங்கள் தாய். இனி இவள் அடையப்போகும் ஸ்வரூபம் இது. பத்துக்கரங்களிலும் பலப்பல ஆயுதங்கள். பத்து திசைகளிலும் இவள் புகழ் பரவும். அன்னையின் காலடியில் அஸுரன் ஒருவன். இனி பாரத தேவியின் பகைவர்களின் கதி இதுதான்.

தோமிழைப்பார் முன் நின்றிடுங்கால் கொடுந் துர்க்கைய னையவள் இவள். தனை மேவினர்க்கு இன்னருள் செய்பவள். தீயரை வீழ்த்திடும் தோளுடையாள்.

நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம் புரிவாள் எங்கள் தாய். அவர் அல்லவராயின் அவரை விழுங்கிப் பின் ஆனந்தக் கூத்திடுவாள்.”

ஆனந்த மடத்தில் ஸத்யானந்த ப்ரம்மச்சாரி மஹேந்திரனுக்கு தரிசனம் செய்து வைக்கும் பாரத தேவி அதே கோலத்தில் விவேகானந்தரது வார்த்தைகளிலும் வெளிப்படுவதைக் காணலாம்.

“வருங்காலத்துக்குள் நான் புகுந்து பார்க்கவில்லை. அதில் எனக்கு அக்கறையும் இல்லை . ஆனால் ஒரு காட்சியை மட்டும் தெள்ளத் தெளிவாக உயிர்த்துடிப்புடன் நான் காண்கிறேன். புராதானமான அன்னை மீண்டும் இளமையெழிலுடன், முன் கண்டிராத புகழ்ச் சிறப்புடன் அமர்ந்து கொண்டிருக்கிறாள். சாந்தியும் அருளும் கலந்த மொழியால் உலகுக்கு அவளைப் பிரகடனம் செய்யுங்கள்.


பாரத தேசத்தின் மீது சுவாமிஜிக்கு இருந்த ப்ரேமையை விளக்க இன்னொமொரு சம்பவம்.

மேலை நாடுகளில் சுவாமி அந்நாட்டவர்களிடையே பேசிய தலைப்புகளில் பாரத தேசம் என்ற பொருளும் ஒன்று.

பாரதத்தைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டால் தாம் மெய்மறந்துபோய் நேரத்தைக் கணக்கிடாமல் விட்டுவிடலாம் என்று பயந்து, “பாரதத்தைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டால் எனக்கு நேரம் போவதே தெரியாது. எனவே சொற்பொழிவை முடிக்க வேண்டிய நேரத்திற்குச் சிறிது முன்பாக ஏதாவது அடையாளம் காட்டுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

சுவாமிஜி பாரதத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். நேரம் போனதே தெரியவில்லை. குறிப்பிட்ட காலம் நெருங்கி விட்டதை உணர்ந்த நண்பர் கடிகாரத்தை எடுத்து உயரப்பிடித்து சுவாமிஜிக்கு சொற்பொழிவை முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்த்தினார்.

இதைக் கண்ணுற்ற சுவாமிஜி, “அதோ, அடையாளம் காட்டுகிறார்கள், சொற்பொழிவை முடிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று. ஆனால் நண்பர்களே பாரதத்தைப் பற்றி இப்போதுதான் பேசவே ஆரம்பித்துள்ளேன்”

அவருடைய ஹிருதயம் முழுவதும் பாரதத்தைப்பற்றிய தகவல்களால் நிறைந்திருந்தது.


சுவாமிஜி பாரதத்தின்மீது கொண்டிருந்த தேசபக்தி அத்யாத்மிக தேசபக்தி யாகும்.

பாம்பனில் கடற்கரையில் கால் பதித்ததும் சுவாமிஜி மண்ணில் விழுந்து நமஸ்கரித்தார். சிறிதளவு மண்ணை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். மீண்டும் சிறிதளவு மண்ணை எடுத்து உடல் முழுவதும் பூசிக்கொண்டார். அருகிலிருந்த பிரமுகர் ஒருவர் சுவாமிஜியின் இச்செயகைக்கான விளக்கத்தைக் கேட்டார்.

“கடந்த நான்கு ஆண்டுகளாக நான் மேலை நாடுகளில் சுற்றித் திரிந்து வருகிறேன்” அவையெல்லாம் போக பூமி. பாரதம் மட்டுமே புண்ணிய பூமி, யோகபூமி. என்னயறியாமல் நான் போக பூமியில் இருந்தபோது ஏதேனும் போகத்தின் சாயல் என் உள்ளத்திலோ உடலிலோ பதிந்திருக்கலாம். இந்தப் புண்ணிய பூமியின் மண்ணை உட்கொண்டும் உடலில் பூசியும் அத்தகைய போகத்தின் சாயலை நான் இப்போது போக்கிக் கொண்டேன்” என்று விளக்கினார் சுவாமிஜி.

1896 டிசம்பர் 16 ஆம் தேதி சுவாமிஜியிடம் அவர் ஐரோப்பாவை விட்டுப் புறப்படுகிற நேரத்தில் நண்பர் ஒருவர் கேட்ட ஒரு கேள்வியையும் சுவாமிஜி அளித்த பதிலையும் இங்கு ஞாபகப்படுத்திக் கொள்வது நல்லது.

“போகங்களும், பெருமைகளும் ஆற்றல்களும் நிறைந்த மேலைநாடுகளில் நான்கு ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு உங்கள் சொந்த நாட்டிற்குச் செல்கிறீர்களே இப்போது உங்கள் தாய்நாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“என்ன நினைக்கிறேனா? நான் என் தாய் நாட்டிலிருந்து கிளம்பும் முன் அதனை நான் பிறந்த பூமி என்பதற்காக நேசித்தேன். இப்போதோ, அதனுடைய ஒவ்வொரு தூசியும் எனக்குப் புனிதமாகிவிட்டது. அதன்மீது வீசுகிற காற்று எனக்குப் புனிதமானது. உலகிலேயே எனது தாய்நாடு ஒன்றுதான் யோகபூமி, புண்ணிய பூமி என்பதைப் புரிந்து கொண்டுவிட்டேன். எங்களது பாரதப் புனிதபூமி எனது க்ஷேத்ராடன ஸ்தலம், தீர்த்தாடன லக்ஷியம்” என்ற சுவாமிஜியின் பதிலில் தொனிக்கும் தேசபக்தி எத்துனை ஆன்மீகமானது என்பதைப் புரிந்து கொள்வோம்.


பாரதத்தை பற்றிய அவரது அத்யாத்மிகப் பார்வை கீழ்க்கண்ட வார்த்தைகளில் மிளிர்வதைப் பாருங்கள்.

“இந்த பூவுலகில் புனிதமான புண்ணிய பூமி என்று உரிமை கொண்டாட ஏதாவது ஒரு நாடு இருக்குமானால், பூவுலக ஆன்மாக்கள் தன் கர்ம பலன்களைக் கழிக்க வேண்டிய ஒரு நாடு என்று இருக்குமானால், இறைவழியை நேக்கிச் செல்லும் ஒவ்வோர் ஆன்மாவும் தன் இறுதி வீடாக வந்தடைய வேண்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால், மனிதகுலம் அன்பின் சிகரத்தை பரந்த உள்ளத்தின் உச்சி நிலையை, தூய்மையின் உயரத்தை, அமைதியின் எல்லையை, எல்லாவற்றுக்கும் மேலாக ஆத்மீக உள்நோக்கின் சிகரத்தை எட்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால் அதுதான் பாரதமாகும்.


நமது தேசத்தின் மறுமலர்ச்சிக்காக நாம் மேற்கொள்ளும் பணியும் நமது கடந்த கால ஆன்மீகப் பாரம்பர்யத்தின் ஆதாரத்திலேயே அமையவேண்டும் என்று விரும்பிய விவேகானந்தரின் அத்யாதமிக சுதேசியப் பார்வையைச் சற்றுக் காண்போமா?

ஓ பாரத நாடே!

பிறருடைய கருத்துக்களை வெறுமனே எதிரொலிப்பதனாலே, மட்டரகமாகப் பிறரைப் பின்பற்றி நடிப்பதனாலே பிறரை நம்பி வாழ்வதனாலே, நாகரீகத்தின் சிகரத்தையும், சீர் சிறப்பின் சிகரத்தையும் நீ எய்திவிட முடியும்?

அவமானகரமான இந்த கோழைத்தனத்தினாலே வீரதீரர்களுக்கே உரித்தான சுதந்திரத்தை நீ அடைய முடியுமா?

ஓ பாரத நாடே ஸீதை, ஸாவித்ரி, தமயந்தி முதலிய கற்பில் சிறந்த உத்தமிகளை மறவாதே. உனது பெண்மையின் லக்ஷியத்துக்கு அவர்களே உதாரணம்!

யோகிகளுக்கெல்லாம் யோகியும் எல்லாவற்றையும் துறந்தவருமான உமாபதியாம் சங்கரனே நீ வணங்கும் கடவுள் என்பதை மறவாதே!

உனது திருமணம், உனது செல்வம், உனது உயிர் முதலானவை, உனது ப்ரத்யேக இந்திரிய சுகபோகத்திற்கும், உனது சொந்த நன்மைகளுக்கும் ஏற்பட்டவையல்ல என்பதை மறவாதே!

நீ தேவியின் பலிபீடத்துக்கான ஒரு யாக திரவியமாகப் பிறந்திருக்கிறாய் என்பதை மறவாதே!

வர்ணாசிரம தர்மமானது அகிலாண்டேசுவரியான பராசக்தியின் பிரதிபிம்பந்தான் என்பதை மறவாதே. தாழ்த்தப்பட்டவர்களும், அறியாத மூடர்களும், ஏழைகளும், எழுத்து வாசனையற்றவர்களும், சண்டாளர்களும், தோட்டிகளும் உன் சகோதரர்கள். உன் ரத்தக் கலப்புள்ளவர்கள் என்பதையும் மறவாதே.

வீரனே! தீரனாக இரு. கோழைத்தனத்தை அகல ஓட்டு! நீ ஒரு பாரதவாசி என்பதில் பெருமைகொள். “நான் ஒரு பாரதவாசி, ஒவ்வொரு பாரதீயனும் என் சகோதரன்” என்று பெருமையுடன் உரக்கக் குரல் எழுப்பு!

மூட பாரதீயனும், ப்ராம்மண பாரதீயனும், பறையராகிய பாரதீயனும் எனது சகோதரன் என்று சொல்வாய். இடுப்பில் ஒரு கோவணத்தை மட்டும் கட்டிக் கொண்டிருக்கிறவ ராயினும் உரத்தக் குரலெடுத்து, “பாரதீயரே எனது சகோதரர், பாரதீயரே எனது உயிர், பாரதத்தின் தேவ தேவிகளே நான் வணங்கும் தெய்வங்கள், பாரதத்தின் ஜன சமூகமே நான் குழந்தையாக இருந்தபோது படுத்து வளர்ந்த தொட்டில், இளமையில் விளையாடிக் களித்த எழிற்பூங்கா, மூப்படைந்த தருணத்தில் அடையும் வாரணாசியான மோக்ஷஸ்தலம்” என்று பெருமையுடன் சொல்வாயாக.

சகோதரனே, “பாரதபூமியே எனது அதியுயர்ந்த மோக்ஷலோகம், பாரதத்தின் நன்மையே எனது நன்மை” என்று சொல்வாயாக.

இரவிலும் பகலிலும் “கௌரி வல்லப! அகிலாண்டேசுவரி! ஆண்மைத் தனத்தை எனக்கு அருள் வீர்களாக! வல்லமையை அருளும் தாயே! எனது கோழைத்தனத்தை அகற்றுவாய். எனது பேடித்தனத்தைப் போக்குவாய்! என்னை ஓர் ஆண்மகனாக ஆக்கு! என்று இடையறாது ப்ரார்த்தனை செய்.


திருவனந்தபுரத்தில் சுவாமிஜீ தங்கியிருந்தபோது பேராசிரியர் சுந்தரராம ஐயரின் மகன் ராமஸ்வாமி சாஸ்திரியிடம் தேசபக்திக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் சுவாமிஜீ.

“….தேச பக்தி, தேச பக்தி என்கிறார்களே உண்மையில் அது என்ன? கண்மூடித் தனமான ஒரு நம்பிக்கையா? இல்லை .

நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதில் உள்ள பேரார்வம்தான் உண்மையில் தேச பக்தி.

பாரதம் முழுவதும் பார்த்துவிட்டேன். அறியாமையும், துன்பமும், ஒழுக்கச் சீர்குலைவு களும்தான் நான் கண்டவை. என் உள்ளம் பற்றியெரிகிறது. இந்தத் தீமைகளை வேரோடு களைய வேண்டும் என்று துடிக்கிறேன்.

“அவர்களின் தீவினை அது. அதனால் கஷ்டப்படுகிறார்கள்” என்று கர்மம் பற்றி பேசுகிறார்கள். தயவு செய்து அப்படிப் பேசாதீர்கள். கஷ்டப்படுவது அவர்களின் கர்மம் என்றால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது நமது தர்மம்.

கடவுளைக் காண வேண்டுமானால் மனிதனுக்குத் தொண்டு செய்யுங்கள். நாராயணனை அடைய வேண்டுமானால் பட்டினியில் வாடுகின்ற லக்ஷோபலக்ஷம் ஏழை நாராயணர்களுக்குச் சேவை செய்யுங்கள். அதுதான் உண்மையான தேச பக்தி”.


சுவாமி அகண்டானந்தர் சுவாமிஜீயின் தேசபக்தியை வர்ணிக்கும்போது

“… பாரதத்தின் மீதுதான் சுவாமிஜீக்கு எத்தனை அன்பு. அதில் நூறில் ஒரு பங்காவது எங்களிடம் உள்ளதா? அவரது சகோதரர்களாக இருந்தும் எங்களிடம் அந்த உணர்வு இல்லாதபோது மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது?

“…சுவாமிஜீ பாரதத்தின் மீது கொண்ட அன்பு சாதாரண விஷயம் அல்ல. அது வெறும் தேச பக்தி (patriotism)அல்ல. அது தேசாத்மபோதம். சாதாரண மனிதர்களுக்கு இருப்பது “தேஹாத்ம போதம்”,அதாவது உடம்பைத் தானாக உணர்வது. சுவாமிஜிக்கு இருந்ததோ ‘தேசாத்மபோதம்’. அதாவது நாட்டையே தானாக உணர்வது.

நாட்டு மக்களின் சுகம், துக்கம், அவர்களின் கடந்த காலம், எதிர் காலம், நிகழ் காலம் என்பவை பற்றியே அவர் சிந்தித்தார்.

தேசாத்ம போதத்துடன் அவரது உணர்வு நின்றுவிடவில்லை. அது விச்வாத்ம போதமாக விரிந்தது. பாரத மக்களுக்காக மட்டுமல்ல. உலக உயிரினங்கள் அனைத்துடனும் தம்மை ஒன்று படுத்திக் கொண்டு அவர்களுக்காக கவலைப்பட்டார் அவர். அனைவருக்கும் முக்தி கிடைக்காமல் அவருக்கு முக்தியில்லை …..”


மேலை நாடுகளிலிருந்து அவர் பேலூர் மடத்திற்குத் திரும்பி வந்த பிறகு நடந்த ஒரு சம்பவம்.

ஒரு நாள் இரவு விவேகானந்தரின் அறைக்குப் பக்கத்து அறையில் அவரது சகோதரச் சீடரான விஞ்ஞானானந்தர் படுத்திருந்தார். நள்ளிரவில் விவேகானந்தரின் அறையில் யாரோ விம்மி விம்மி அழும் குரல் கேட்டு எழுந்து அவரது அறைக்குச் சென்றார்.

அங்கே பார்த்தால் அழுது கொண்டிருந்தது வேறுயாரும் அல்ல. அது விவேகானந்தர்தான். விஞ்ஞானானந்தர் அறைக்குள் நுழைந்ததை சுவாமிஜி கவனிக்கவே இல்லை. விக்கி விக்கி அழுதுகொண்டிந்த சுவாமிஜியிடம், “சுவாமிஜி, உங்களுக்கு ஏதாவது உடல் சுகவீனமா? என்று கேட்டார்.

அதற்கு விவேகானந்தர், “என் உடலுக்கு ஒன்றுமில்லை . நமது தாயகத்தின் உடல்நிலைதான் மோசமாக உள்ளது. என் நாடு துன்பத்தில் துடிக்கிறது. என்னால் அந்த வேதனையைத் தாங்க இயலவில்லை. அதனாலேயே அதை நினைக்கிறபோதெல்லாம் என்னால் அழாமல் இருக்க முடியவில்லை ” என்றார்.


பாரதம், பாரத மக்கள், பாரதத்தின் வரலாறு, பாரதத்தின் கலாச்சாரம், மண், நதி, மலை, மக்கள் பழக்கவழக்கங்கள், ஆன்மீகப் பொக்கிஷங்கள்” என்று அனைத்தையும் நேசித்தவர் விவேகானந்தர் என்று எழுதுகிறார் அவரது மேலைநாட்டு சிஷ்யையாகிய சிஸ்டர் கிறிஸ்டினா.


ஒரு முறை மெக்லவுட் என்ற சிஷ்யை சுவாமிஜியிடம், சுவாமிஜி உங்களுக்கு மிகச் சிறந்த முறையில் சேவை செய்வதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார். “பாரதத்தை நேசி” என்று பதிலளித்தார் சுவாமிஜி.


சுவாமி விவேகானந்தரின் தேச பக்தியைப் பற்றி மஹாகவி பாரதியார் “இந்தியா” பத்திரிகையில் 25.8.1906. இதழில் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார்.

“சுவாமி விவேகானந்தரின் தேசபக்தியானது அபரிமிதமென்பதை இங்கே குறிப்பிடுவது அவசியமில்லை . இந்த மகரிஷி “கிழக்கு திசையும் மேற்கு திசையும்” என்பதாக வங்காள மொழியில் ஒரு திவ்விய உபன்னியாஸம் எழுதியிருக்கிறார். அதன் ஒரு பகுதி இம்மாதத்திலே கிடைத்த ‘வாணி விலாஸினி’ பத்திரிகையில் தமிழில் மொழிபெயர்த்து எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் மொழிபெயர்ப்பிலே மூல உபன்னியாஸத்தின் ரஸமும் பெருமையும் குறைந்திருக்க வேண்டும் என்பது அவசியமே எனினும், இது கூட படிப்பவர் மனது பிரமிக்கும்படியாகச் செய்கிறது. இதை முழுதும் மற்றொரு முறை நமது பத்திரிகையிலே எடுத்துப் பிரசுரம் செய்ய நிச்சயித் திருக்கிறோமாதலால், இங்கு அதைப் பற்றி விரிவாக எழுத விரும்புகின்றோமில்லை. ஆனால் அந்த உபன்னியாஸத்திலே (கட்டுரையிலே) ஸ்வாமி தமது தேசபக்தியை நன்கு விளக்கியிருக்கிறார்.

“வீரர்களாயிருங்கள். பூமியை அனுபவியுங்கள். கண்டவர்களெல்லாம் காலால் மிதித்தும், காறியுமிழ்ந்தும், அவமானப்படுத்துகிற இந்தப் பேடி வாழ்க்கை எத்தனை காலம் வாழப் போகிறீர்கள். இதுவும் ஒரு வாழ்க்கையா?” என்று மஹா ஆக்ரஹத்துடன் ஸ்வாமி கேட்கிறார்.

ஸர்வ ஸன்னியாஸியாகிய விவேகானந்தர் நமது நாட்டிலே மட்டும் ஒருவிதமான அதீதப்பற்று வைத்திருந்தமை அவரது பெருந்துறவுக்குப் பொருந்துமாவென்று சிலர் ஐயுறலாம்.

இதே விஷயந்தான் அவருடைய சிஷ்ய சிகாமணிகளில் ஒருவராகிய ஸ்ரீ நிவேதிதா தேவியின் மனதினும் பலவித ஆலோசனைகளுக்கு இடமுண்டாக்கியிருக்கிறது.

ஸ்ரீ நிவேதிதா தேவி சென்ற சில மாதங்களாக ‘ப்ரபுத்த பாரதம்’ என்ற பத்திரிகையிலே விவேகானந்தரைப் பற்றி வரிசையாக எழுதிக் கொண்டு வருகிறார். இம்மாதத்து பத்திரிகையிலே நிவேதிதா தேவி, ஸ்வாமியின் தேசபக்திக்கும், ஸன்னியாஸத்திற்கும் உள்ள விரோத இயற்கையைப் பற்றி விஸ்தாரமாகப் பேசுகிறார். இதையெல்லாம் இங்கே விவரமாக எழுத முடியாத போதிலும் அதன் கருத்தை கீழே தருகிறோம்.

விவேகானந்தரின் இயற்கையிலே சுதேச பக்தி வேர் ஊன்றிப் போய் விட்டது. மஹா பலங் கொண்டவளாகிய பாரத மாதா தனது பலத்தைத் தானேயறியாதவளாகி அடிமை நிலைகொண்டு நிற்பதை அவரால் பார்த்துச் சகிக்க முடியவில்லை . ஆனால் இந்த சொற்ப பாசங்கூட மாயா சம்பந்தமனது என்பதை அவரே நன்றாக அறிந்திருந்தார். அவர் மட்டுமென்ன? அவரது பரம குருவாகிய ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூட அதைப்பற்றிப் பிரஸ்தாபித்திருக்கின்றார்.

விவேகானந்தருடைய மனசை ஒரு லேசான மாயைப் படலம் சுழ்ந்திருக்கிறது. அதை ஈசன் இவருடைய மனதில் ஒரு நன்மையைக் கருதி வைத்திருக்கிறார். ஆனால் அது மிகவும் லேசான படலம். அதை எந்த நிமிஷத்திலும் விவேகானந்தர் கிழித்தெறிந்துவிடுவார்.” என்று ராமகிருஷ்ணர் திருவாய் மலர்ந்தருளினார்.

“ ஆனால் நம்மவரின் அதிருஷ்டத்தாலும், ஈசனுடைய திருவருளாலும் மற்றெல்லா மாயைப் படலங்களையும் அறுத்தெறிந்துவிட்ட விவேகானந்தர் சுதேசப் பற்றை மட்டிலும் நெடுங்காலம் கொண்டிருந்தனர். ஆனால் , பரம ஸன்னியாஸியைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பூமிப் பற்றில்லாத விஷயத்தில் பிணங்களுக்குச் சமமானவர்கள் என்பதை இம்மஹரிஷி மிகவும் வற்புறுத்திப் பேசியிருக்கிறார்”.


1907 ஜீலை 17ல் “இந்தியா” பத்திரிகையில் துணைத் தலையங்கமாக வந்த கட்டுரை

தற்காலப் புது உணர்ச்சிக்கு மூல புருஷர் ஸத்குரு ஸ்ரீ விவேகானந்த சுவாமிகளே

நம் பாரதத்தில் இப்போது நடைபெறும் “நவீன இயக்கத்தின்” உற்பத்தி ஆகமங்கள் ஸ்ரீ விவேகானந்தரின் உபதேசங்களே.

அவர், “பாரதத்திற்கு உள்ளும் புறமுமாக இருக்கும் ஒவ்வொரு குலத்திலும் உள்ள சத்தையெல்லாம் சேர்த்து அதனால் பாரதம் முழுவதையும் புதுப்பியுங்கள்.

உலகின் ஆன்மகோடிகளின் ஆத்ம விருத்தியையும் உங்கள் கடமையாகக் கொள்ளுங்கள். பின் பாரதமே எத்தேசத்திற்கும் லக்ஷியமாகும்” என்று நம்மெல்லோருக்கும் பல முறையும் வற்புறுத்திச் சொல்லியிருக்கிறார்.

அப்படி ஆவதற்கு ஏற்ற வழிகள் ஸ்வஜாதீயக் கல்வி, ஸ்வதேச வஸ்துவைப் பரிபாலித்தல், அன்னியச் சரக்குகளை விலக்கல் முதலிய ஸ்வஜாதீய ஏற்பாடுகளே என்றும். அவ்வழிகளில் நடப்பதற்கும், நல்வாழ்க்கைக்கும் அவசியமான தேஹம், மன ஒழுக்கம் பக்தி முதலியவைகள் எல்லாம் உறுதிப்பாடு அடையும்படியான அப்பியாசங்களைக் கைக் கொள்ள வேண்டும் என்றும் சுவாமிகள் நமக்கு போதிக்கிறார்.

இன்னும் முப்பத்து முக்கோடி ஜனங்கள் அடங்கிய இத்தேசத்தை சென்ற ஆயிரம் வருஷங்களாக, கட்டுப்பாடுள்ள சிற்சிலரே (வெளிநாட்டவர்களே) அடக்கி ஆண்டு வருகிறார்கள் என்ற இப்பிரச்னத்தின் தத்துவார்த்தத்தை அறிவிக்கும் எழுத்தாணிப் பாலை முதலில் நமக்கு ஊட்டிய ஸத்குருவும் அவரே பின்னும் அவரே. அக்கிருத்தியத்தை ஒருவித ‘மனோ மயக்கு ஜாலம்’ என்றும், அந்த ஜால மயக்கம் தெளிய நம் எல்லோருடைய ஆத்மாவிலும் மறைந்து கிடக்கும் தெய்வீக சக்தியை வேதாந்த ஞான ஒளியால் எழுப்பக் கூடுமென்றும் கற்பித்திருக்கிறார்:

நம் க்ருத்தியம், ராஜரீகமோ வைதீகமோ, லௌகீகமோ இன்னும் வேறு எதுவாக இருந்தாலும் சரி, அதை அடைய வேதாந்த ‘ஞானமே வழி. நாம் இப்போது ஏற்படுத்தி வரும் ஆயிரக் கணக்கான சங்கங்களும், கூட்டும் எண்ணிறந்த மஹாநாடுகளும் மற்றவைகளும் உபயோகமற்றன.

மற்றெல்லோருடைய கஷ்டங்களையும் காண மனம் உருகி அவர்களுக்கு அனுதாபம் காட்டி அன்பிலும் அருளிலும் புத்தரைப் பணிபவராகவும், ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய உபதேச மொழிகளை ராஜாங்க ரீதியார்த்தமாக கொள்பவராகவும் நாம் ஆகும் வரைக்கும் நாம் முன்னுக்கு வரக்கூடும் என்று நம்ப இடமில்லை என்று அவர் கண்டிப்பாய்ச் சொல்லியிருக்கிறார். அன்றியும் நம் ஜாதீய க்ஷணதசைக்குக் காரணம் நம்மை விட்டுப் புறம்பே இருந்து எதுவும் வந்ததாகக் கருதலாகாது. நாம் செய்த பழியை நாம் நம் பேரிலேயே தைரியமாய்ச் சுமத்திக் கொள்ள வேண்டும். நாம் படும் பாட்டிற்கெல்லாம் நாமே காரணம் என்ற இப்படிப்பினை யெல்லாம் அவரிடம் இருந்தே நாம் கற்றுக் கொண்டோம்.

இவை அனைத்தையும் சுருக்கிச் சொல்லுவோம். எல்லோரும் சரியான புருஷர்களாயிருக்கப் பாருங்கள்.அதற்கு ‘சக்தி’யே வடிவமாயுள்ள லோகமாதாவை, “ஹே கருணாம்பிகையே’ என்னிடம் உள்ள பேடித் தனத்தை எடுத்துக் கொண்டு உன்னிடம் உள்ள புருஷத்வத்தைக் கொடு என்று அல்லும் பகலும் ப்ரார்த்தியுங்கள்” என்ற நம் ஸத்குருவான சுவாமிகள் கட்டளையிட்டிருக்கிறார்.

இப்பொழுது இவ்வுணர்ச்சிகளெல்லாம் ஸத்குரு விவேகானந்த ஸ்வாமிகளிடமிருந்து பிறந்து, அவையனைத்தும் ஒருமித்து ‘நவீன இயக்க’ மெனத்திரண்டு ப்ரும்ம ஸமாஜத்து ஸ்ரீ பிபின் சந்திர பாலர், ஆர்ய ஸமாஜத்து ஸ்ரீ லாலா லஜபதிராய், வைதீகர் பால கங்காதர திலகர், சிவனடியார் ஸ்ரீ வ. உ. சிதம்பரம் பிள்ளை ஆகிய இன்னும் அனேக மஹான்கள் மடியிலே வளர்ந்து பாரதீயனாகப் பிறந்துள்ள ஒவ்வொருவருடனும்ம் தற்காலத்தில் விளயாடி வாரா நிற்கும்.

தேச பக்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியான்.


சுவாமிஜீயின் சீடரான சதாசிவானந்தர் கூறுவதாவது;

“பிரபல தேச பக்தரான கேல்கர் காசியில் சுவாமிஜீயை சந்திக்க வந்தார், சுவாமிஜீக்கு அப்போது உடல் நிலை சரியில்லை .

கட்டிலில் படுத்திருந்த சுவாமிஜீ கேல்கரோடு பேசத்தொடங்கியவுடன் உணர்ச்சி வசப்பட்டு எழுந்து உடகார்ந்து விட்டார்.

பாரதத் தாய், அவளது வேதனை,அரசியல் சமுதாய சீர்திருத்தங்கள் என்று பல விஷயங்களை சுவாமிஜீ பேசிக் கொண்டே போனார். குரல் உயர்ந்து கொண்டே போயிற்று.

“வறுமையும் நோயும் பீடித்து, இவ்வளவு இழிவுற்றுக் கிடக்கின்ற இந்த பாரதத்தில் இனிமேலும் வாழ்வதில் என்ன நன்மை ? ஒவ்வொரு கணமும் நமது பாரதத்தாய் நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள்.

அவளுக்கு உண்ண உணவில்லை, உடுக்க உடையில்லை. அவமானமும் துன்பமும் தான் அவளது தலையில் நிரந்தரமாக எழுதப்பட்டுள்ளன. அவள் மூச்சு விடுகிறாள் வாழ்கிறாள் என்பதற்கு அது ஒன்றே அறிகுறியாக உள்ளது. அவள் வாடுவது நரகத் தீயில். அது உறுதி,அது நிச்சயம்

இப்படித் துன்புறுவதைவிட அவள் இந்த உலகிலிருந்து மறைந்து விடுவது நல்லதல்லவா?” –

பாரதத்தின் ஏழைகள் அத்தனை பேருடைய துன்பங்களையும் ஏற்று சுவாமிஜீ துடிப்பதுபோல் இருந்தது. அவரது உடல் நடுங்கியது. மூச்சு வேகமாக வெளிவந்தது.

அவர் உண்மையான தேச பக்தர். உண்மையான மஹான். “யாருடைய இதயம் ஏழைகளுக்காக ரத்தம் வடிக்கிறதோ அவனே உண்மையான மஹாத்மா என்பேன் நான்” என்று கூறியவர் அல்லவா அவர். அவரது வாழ்க்கையிலேயே அந்த உணமையை நாங்கள் காண முடிந்தது.

படிப்படியாக சுவாமிஜியின் பழைய நிலைமை திரும்பியது பிறகு, எந்த வழியில் பாரதத் தாயின் துன்பத்தை ஆற்ற முடியும் என்பதுபற்றி அவர் கேல்கரிடம் கூறினார்.

குறிப்பாக ஒரு கருத்தை வலியுறுத்தினார்.

“பாரதம் வளர்ச்சி காணவேண்டுமானால் அதன் முன்னேற்றம் நமது புராதன மரபுகளைப் பின்பற்றி அகத்திலிருந்தே வருகின்ற இயல்பான முன்னேற்றப் பாதையில் இருக்கவேண்டும்.”

இந்தக் கருத்தை அவர் மீண்டும் மீண்டும் கூறினார். எல்லாச் சீர்திருத்தங்களும் மதத்தின் வழியில் இருக்க வேண்டும் என்பதையும் வற்புறுத்தினார். அன்று நாங்கள் ஒரு வித்தியாசமான சுவாமிஜியைக் கண்டோம்”


1901 டிசம்பர் 28 முதல் 31 வரை கல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் வருடாந்திரக் கூட்டம் நடைபெற்றது. சுவாமிஜி அரசியல் மற்றும் அது சார்ந்த இயக்கங்களிலிருந்து விலகியே இருந்தார். –

“எங்கள் நாட்டை எங்களிடம் கொடுத்து விடுங்கள்” என்று பிச்சை கேட்கும் பாணியில் அமைந்த காங்கிரஸின் கொள்கையை அவர் சிறிதும் விரும்பவில்லை.

இந்தக் கோரமான பஞ்சம் வெள்ளம், வியாதிகள், தொற்றுநோய் மிகுந்த இந்த வேளையில் காங்கிரஸ்காரர்கள் எங்கே போய்விட்டார்கள்? சொல். ப

“அரசை எங்கள் கையில் தந்துவிடுங்கள்” என்று வெறுமனே சொல்லிவிட்டால் போதுமா? இவர்களின் பேச்சைக் கேட்க யார் இருக்கிறார்கள்? உண்மையான வேலை செய்கின்ற ஒருவன் வாய் திறந்து கேட்கவும் வேண்டுமா?

உன்னைப்போல் இரண்டாயிரம் பேர் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை செய்தால் அரசியல் விவகாரங்களில் ஆங்கிலேயர்கள் உங்களைக் கலந்து ஆலோசிக்க மாட்டார்களா என்ன?” என்று 1900 பிப்ரவரியில் அகண்டானந்தருக்கு எழுதினார் சுவாமிஜி. காட்ட

அவரது போக்கு ஆண்மை நிரம்பியதாக ஆக்கபூர்வமானதாக இருந்தது. சுவாமிஜின் போக்கைக் காங்கிரஸார் பொதுவாக விரும்பவில்லை. அதே வேளையில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திலகர் போன்ற சிலர் சுவாமிஜியின் கருத்துக்களை வரவேற்காமலும் இல்லை.

தேசபக்த மஹானாகக் கருதப்பட்டவர் சுவாமிஜி. அவரது கருத்துக்களைப் படித்த பல காங்கிரஸ் தலைவர்களும் அந்த நாட்களில் பேலூர் மடத்திற்கு வந்து சுவாமிஜியை தரிசித்துச் சென்றனர். பல்வேறு கருத்துக்களை விவாதித்தபடி திலகரும் சுவாமிஜியுமாக கங்கைக் கரையில் உலவிய நாட்களும் உண்டு .


1901 மாநாட்டில்தான் மஹாத்மா காந்தி முதன்முறையாக கலந்துகொண்டார். மாநாடு முடிந்தபிறகு ஒரு மாத காலம் கோகலேயின் வீட்டில் விருந்தினராக அவர் தங்கியிருந்தார் அவர் சுவாமிஜியை சந்திக்கவும் விரும்பினார். ஆனால் மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி சென்றபோது சுவாமிஜி மடத்தில் இல்லாததால் அவரை சந்திக்க இயலவில்லை.

“நான் விவேகானந்தரது சொற்பொழிவுகளை ஆழ்ந்து படித்த பிறகுதான் எனது தேசபக்தி ஆயிரம் மடங்காகப் பெருகி உள்ளது” என்று பேலூர் மடத்திற்குப் பின்னொரு முறை விஜயம் செய்தபோது கூறியது இங்கு நினைவுகூரத் தக்கது.


சுவாமிஜி வேறொரு சந்தர்ப்பத்தில் காங்கிரஸின் செயல்பாடுகள் குறித்த தமது அபிப்பிராயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

“காங்கிரஸின் செயல்பாடுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருப்பதை விட ஏதாவது செய்வது நல்லதுதானே. உறங்கும் நமது நாட்டை விழிப்படையச் செய்ய எல்லா பக்கங்களிலிருந்தும் உந்தித்தள்ளுவது நல்லதுதான்.

இந்தக் காங்கிரஸ் மக்களுக்காக இதுவரை என்ன செய்துள்ளது என்பதை எனக்குக் கூறுங்கள் பார்க்கலாம். சில தீர்மானங்களை நிறைவேற்றி விட்டால் சுதந்திரம் தானாக வந்துவிடும் என்று நினைக்கிறீர்களா? அதில் எனக்கு நம்பிக்கையில்லை. முதலில் மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். அதன்பிறகு அவர்கள் தங்கள் சுதந்திரத்தை தாங்களே தேடிக்கொள்வார்கள்.


ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டபோது அங்கெல்லாம் ஆன்மீக ப்ரச்சாரம் செய்ததோடு விவேகானந்தர் நின்று விடவில்லை . தனது சொற்பொழிவுகளுக்கு நடுவே அடிமைப்பட்டுக்கிடக்கும் பாரதத்தின் துயரகரமான நிலையைக் குறித்தும் அவர் பேசத் தவறவில்லை. அவர் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த இந்தக் கனலின் விளைவு ரஷ்யப் புரட்சிக்காரர்களுடன் அவரைத் தொடர்பு கொள்ள வைத்தது.

எந்த பிரிட்டன் பாரதத்தை அடிமைப்படுத்தி வைத்திருந்ததோ அந்த பிரிட்டனிலேயே சுதந்திரப் பிரச்சாரம் செய்ய அவர் தயங்கவில்லை .

1898 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நியூ இங்கிலாந்தில் அனிஸ்கூவாம் என்னும் ஊரில் பேராசிரியர் ரெய்ட் என்பவர் வீட்டில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் “ஆங்கில ஏகாதிபத்தியம் பாரதத்திற்கு இழைத்து வரும் தீமைகளைக் கண்டித்துக் காரசாரமாக அவர் பேசினார்.

1899ஆம் ஆண்டில் மேரி ஹேலன் என்னும் அமெரிக்கப் பெண்மணிக்கு விவேகானந்தர் எழுதிய கடிதம் ஒன்றில் பின்வறுமாறு குறிப்பிட்டுள்ளார்.

“1857 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது பாரத சுதந்திரப் போராட்டத்தின்போதும், அதற்குப் பின்னரும் ஆங்கிலேயர்கள் பாரதத்தில் புரிந்த கொலைகளையும் அட்டூழியங்களையும் பாரதீயர்களால் ஒரு போதும் மறக்க முடியாது.

பாரதத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு ரத்த பயங்கர ஆட்சியே நடந்து வந்துள்ளது. ஆங்கிலேயே போர் வீரர்கள் எங்கள் மாதர்களைக் கற்பழித்தும் வருகின்றனர். இந்தக் கொடுமைகள் எல்லாம் எதற்காக? எங்கள் செலவில் வழிச்செலவும் பென்ஷனும் பெற்றுத் தங்களது தாயகத்திற்கு அனுப்பி வைப்பதற்காகத்தான். ஒரு வேளை நீங்கள் இந்தக் கடிதத்தை வெளியிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். பாரதத்தில் இப்போது நிறைவேற்றப் பட்டுள்ள சட்டம் என்னை இங்கிருந்து பாரதத்திற்கு இழுத்துக் கொண்டு போய் எத்தகைய விசாரணையும் இல்லாமல் என்னைக் கொல்வதற்கு ஆங்கிலேயே அரசுக்கு அனுமதி அளித்திருக்கிறது.”


ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு பாரதம் திரும்பிய விவேகானந்தா பாரதத்திலும் நமது தேச விடுதலைக்காக ரகசிய புரட்சி நடவடிக்கைகளில் ஈடுட்டிருந்தார்.

தனக்கோ அல்லது தான் தோற்றுவித்த ராமகிருஷ்ண மடத்துக்கோ எத்தகைய அரசியல் சம்பந்தமும் கிடையாது என்று விவேகானந்தர் அறிவித்திருந்தபோதிலும் அவரும் அவருடைய சீடர்களும் ரகசிய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவே செய்தனர். ஆயுதம் தாங்கிய புரட்சி மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்த புரட்சிகர சங்கங்களுடன் விவேகானந்தரின் சீடர்கள் பலருக்கு ரகசிய தொடர்பு இருந்தது.

பாரதத்தில் ஒரு ஆயுதப் புரட்சி நடைபெறவேண்டும் என்ற அவருடைய உள்ளக் கிடக்கையில் எத்தகைய மாறுதலும் இல்லை .


1901-ல் சுவாமிஜீ டாக்காவில் இருந்தபோது, பின்னாளில் புரட்சிவாதியாக மலர்ந்த ஹேமச்சந்திர கோஷும் அவரது நண்பர்களும் சுவாமிஜீயை சந்தித்து தங்களுக்கு அவர்கூறும் அறிவுரை என்ன என்று வினவியபோது, சுவாமிஜீ கூறியதாவது:

“அடிமைப்பட்டு கிடக்கும் தேசத்தின் இளைஞர்கள் அச்சமின்மையையும், வலிமையையும் தங்களுள் வளர்த்துக் கொள்ளவேண்டும். நமது நாட்டைச் சுரண்டி வாழும் இந்த அன்னிய மிலேச்ச ஆட்சியை முடிவுக்கு கொண்டுவாருங்கள். இரும்பினை ஒத்த தசையும், எஃகினை ஒத்த நரம்புகளையும் கொண்ட இளைஞர்களாகத் திகழுங்கள். பங்கிம் சந்திரரது நால்களைப் படியுங்கள். பங்கிம் சந்திரர் போதித்த தேச பக்தி உங்கள் உள்ளங்களில் சுடர் விட்டு பிரகாசிக்கட்டும். பாரதத்தின் அரசியல் விடுதலைக்காக ஆயுதம் எடுத்து போராடவும் தயங்காதீர்கள்.”

சுவாமிஜி கூறியபடியே, ஹேமச்சந்திர கோஷ் புரட்சிவாதியாக மாறினார். இதுபோலவே ஜதீன் முகர்ஜியும் புரட்சிவாதியாக மாறினார்.


அனுசீலன் சமிதி என்ற பெயரில் வங்காளத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஆயுத புரட்சி சங்கத்தைச் சேர்ந்த சாயிராம் கணேஷ் டேவுஷ்கர் என்னும் புரட்சியாளரை விவேகானந்தர் சந்தித்தார். அவரிடம் விவேகானந்தர் பின்வருமாறு கூறினார்.

“பாரதம் ஒரு வெடி மருந்துக் கிடங்காக மாறும். எனது மரணத்திற்கு முன்பாகவே நாட்டில் புரட்சி நடக்கும். ஒரு சிறு தீப்பொறி போதும். வெடிக்கிற வேகத்தில் பிரிட்டிஷ் அரசு சிதறிவிடும். என் வாழ்வில் நான் புரட்சியைக் காண்பேன்”

அப்போது சுவாமிஜியிடம் டேவுஸ்கர், “வெளிநாட்டினரின் உதவியுடன்தான் இது நடக்குமா?” என்று கேட்டார்.

“நிச்சயமாக இல்லை , நமது சுதேசிய மன்னர்கள் பலர் ஒன்று சேர்வார்கள். மக்கள் எழுச்சியும் மன்னர்களின் கூட்டுத் தலைமையும் பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும்” )

சுவாமிஜியின் வாழ்நாளில் இது நிறைவேறவில்லை . மன்னர்கள் ஒன்று சேர்ந்து போராடுவார்கள் என்ற சுவாமிஜியின் கனவு கனவாகவே இருந்துவிட்டது. 1857ல் மன்னர்கள் சிலர் ஒன்று சேர்ந்து போரிட்டது உண்மை. ஆனால் அதற்குப் பின்னால் அங்ஙனம் ஏதும் நிகழவில்லை . இதனை சுவாமிஜியே கிறிஸ்டினா என்ற தமது மேற்கத்திய சிஷ்யையிடம் தாம் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்னால் கூறியிருக்கிறார்.

“சுதேசிய மன்னர்களை ஒருங்கிணைக்க நான் முயற்சித்தது உண்மை . ஹிராம் மேக்ஸிம் என்ற துப்பாக்கித் தயாரிப்பாளரிடம் நான் தொடர்பு கொண்டிருந்தேன். ஆனால் மன்னர்களிடம் தேசத்தைப் பற்றிய சூடு சொரணையே இல்லை. எனவே மக்களிடத்தில் தேசிய உணர்வைத் தூண்டும் பணியைச் செய்யும் தன்னலமற்ற தொண்டர்களை உருவாக்குவதிலேயே என் கவனம் எல்லாம் உள்ளது” உள்ளம் நொந்து சுவாமிஜி கூறிய வார்த்தைகள் இவை. பிரபல வரலாற்று ஆசிரியரான ஆர்.சி. மஜூம்தார் தான் எழுதிய நூலில் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

விவேகானந்தர் எதிர் பார்த்ததுபோல் நாடு தழுவிய ஆயுத புரட்சி ஏதும் பாரதத்தில் நிகழவில்லை . அத்தகைய புரட்சியை உருவாக்க முயன்றவர்களின் முயற்சிகள் பல காரணங்களால் தோல்வியைத் தழுவின.

ஆனாலும்கூட இங்கொன்றும் அங்கொன்றுமாக சில தனிநபர்களும், அமைப்புகளும் ஆயுத புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டது என்னவோ உண்மை தான்.

ஆனால் இத்தகைய உதிரிப் புரட்சியாளர்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் சுவாமிஜி தன் வாழ்நாளில் காண இயலவில்லை

அவர் மறைந்த 1902க்குப் பின்னரே இத்தகைய புரட்சி நடவடிக்கைகள் மஹாராஷ்ட்ரம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், வங்காளம் தமிழகம் ஆகிய மாநிலங்களில் நிகழ்ந்தன.

இவைகள் கூட தனி நபர்களின் பயங்கரவாதத் தாக்குதல்கள் என்பதாக வர்ணிக்கப்படலாமே தவிர அவற்றை ஆயுதப்புரட்சி நடவடிக்கைகள் என்று பட்டியலிட முடியாது.


விவேகானந்தருக்கு ரகசிய புரட்சி நடவடிக்கைகளோடு தொடர்பு இருக்கலாம் என்று பிரிட்டிஷ் அரசு சந்தேகித்தது. அவரை இடைவிடாது கண்காணிக்க ஒற்றர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்தச் செய்திக்கு ஆதாரமாகத் திகழ்வது சகோதரி நிவேதிதை 1898 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் நாளன்று தனது தோழி ஹராமாண்டுவிற்கு எழுதிய கடிதம்தான். நிவேதிதை அக்கடிதத்தில் குறிப்பிடுவதாவது. “சுவாமிஜியை ஓற்றர்கள் மூலம் காவல்துறையினர் கண்காணித்து வருவதாக இன்று மாலை, மடத்தைச் சேர்ந்த துறவிகளில் ஒருவர் எச்சரிக்கை செய்தார். இதைக் கேட்டு சுவாமிஜி சிரிக்கிறார். ஆனால் இதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் என்னால் இருக்க முடியவில்லை.

பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் விவேகானந்தர் அவர்களை ஒரு துறவியாகப் பார்க்கவில்லை . காவியுடை தரித்த ஒரு புரட்சிவாதியாகவே அவரைக் கருதியது.

1918ம் ஆண்டில் பாரதத்தில் பல்வேறு இடங்களில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற வன்முறை புரட்சி குறித்து விசாரிப்பதற்கு ரௌலட் குழுவை பிரிட்டிஷ் அரசு நியமித்தது.

இந்தக் குழு தயாரித்து அளித்த அறிக்கையில் “வங்காளத்திலும் வேறு இடங்களிலும் ஆட்சிக்கு எதிராக பெரும் கிளர்ச்சிகள் நடந்ததற்கு விவேகானந்தரின் பிரச்சாரம் ஏற்படுத்திய தாக்கமும் ஒரு முக்கியமான காரணம்” ஆகும்.

“விவேகானந்தர் சன்னியாஸி உடையில் இருந்த ஒரு மூர்க்கமான அரசியல்வாதியே”

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உளவுத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட புரட்சிவாதிகளின் வீடுகளில் விவேகானந்தரது சொற்பொழிவுகள் அடங்கிய புத்தகங்கள் கிடைத்தன. ஒரு கட்டத்தில் ராமகிருஷ்ண மிஷனையே அரசியல் இயக்கமாகக் கருதி அதனைத் தடை செய்ய விரும்பியது அரசு. ஆனால் வங்காள கவர்னர் அரசின் இந்த முயற்சியை தடுத்து விட்டார். பல புரட்சிவாதிகள் ராமகிருஷ்ண மடத்திற்கு வந்து போய் கொண்டிருந்தனர். புரட்சிவாதிகளாகத் திகழ்ந்து பின்னாளில் ராமகிருஷ்ண மடத்தில் துறவியர்கள் ஆனவர்களும் உண்டு. உதாரணத்திற்கு ஒருவரைச் சொல்லவேண்டுமானால் தேவவிரத பஸு என்பவர் சுவாமி ப்ரக்ஞானானந்தா என்ற துறவியாக மாறியதைக் கூறலாம்.

பிரிட்டீஷ் அரசின் கடுமையான கண்காணிப்பிற்கு இடையே கொஞ்சமும் அஞ்சாமல் விவேகானந்தர் தனது புரட்சிகர நடவடிக்கைகளை நடத்தி வந்தார். வங்கத்திலும் பாரதத்தின் பிற்பகுதிகளிலும் ரகசியமாக இயங்கிவந்த புரட்சிக்காரர்களுடன் அவருக்குத் தொடர்பு இருந்து வந்திருக்கிறது.

விவேகானந்தரின் புரட்சி நடவடிக்கைகளை இவர்கள் இருவரும் நன்கு அறிந்திருந்த காரணத்தினால் அவர் விட்டுச் சென்ற பணியினை இவர்களால் தொடர முடிந்தது.


நிவேதிதை கல்கத்தாவில் தான் தொடங்கிய பெண்களுக்கான பாடசாலை மூலம் ஹிந்துப் பெண்களின் இளம் உள்ளங்களில் தேசிய உணர்வை விதைக்க விரும்பினாள்.

அன்றைக்கு வங்காள மக்களே கூட அறிந்திராத வந்தேமாதரம்” பாடலை தினசரி ப்ரார்த்தனை கீதமாக ஆக்கினாள்.

ஆம்! பின்னாளில் வங்காளம் துண்டாடப்பட்டபோது ஓர் பேரியக்கமாக உருவெடுத்த வந்தே மாதர கீதத்திற்கு வித்தூன்றியவள் விவேகானந்தரின் சிஷ்யையான இந்த வீரப் பெண்மணிதான்.

பாரதநாட்டின் உடனடித் தேவை அரசியல் விடுதலைதான் என்பதை அவள் நன்கு உணர்ந்திருந்தாள்.

அவள் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதை சுவாமிஜீயும் சரி அவர் தொடங்கியிருந்த ஸ்ரீ ராமகிருஷ்ண மடமும் சரி விரும்பவில்லை . எனவே அவள் தனது அரசியல் உணர்வுகளை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க நேர்ந்தது.

ஓகாகுரா காசுகோ என்னும் ஜப்பானிய பேராசிரியருடன் சேர்ந்து ரகசிய சங்கம் ஒன்றை உருவாக்கி பிரிட்டிஷாருக்கு எதிராக பிரச்சாரம் செய்தாள் நிவேதிதை. ஆயுதம் தாங்கிய புரட்ச்சிக்கு நாட்டைத் தயார் செய்வதே இச்சங்கத்தின் ரகசிய நோக்கமாக இருந்தது.

ரஷ்யாவில் செயல்பட்டுக் கொண்டிருந்த பயங்கரவாத அனார்க்கிச இயக்கம் காட்டிய பாதையை பாரதமும் பின்பற்றவேண்டும் என்று ஜப்பானிய பேராசிரியர் ஓகாகுரா யோசனை கூறினார்.

நிவேதிதா பாரதம் வந்தபோது அவளது அரசியல் முனைபபை மழுங்க வைக்க நினைத்து சுவாமி விவேகானந்தர் நிவேதிதாவின் தோழி கிரைஸ்டின் என்னும் பெண்மணியிடம் தனது உள்ளக் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

“எனக்கும் புரட்சியில் ஆர்வம் உண்டு. ஆனால் பாரதம் புரட்சிப் பாதையில் நடைபோட இன்னும் தயாராக வில்லை . முதலில் பாரதத்தை அதன் இன்றைய சீரழிந்த நிலையிலிருந்து விடுவித்துச் சீரமைக்க வேண்டும்.

அதற்காக ப்ரும்மச்சர்ய விரதம் ஏற்று நாட்டு மக்களிடையே உணர்வூட்டி புத்துயிர்பெறச் செய்யக் கூடிய தொண்டர் படைதான் முதலில் எனக்குத் தேவை. அத்தகைய முன்னேற்பாடுகளைச் செய்யாமல் வெறும் ஆர்வத்தில் உந்தப்பட்டு புரட்சிகரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது எந்தப் பயனும் தராது” என்று விவேகானந்தர் கூறினார்.

ஆனால் சுவாமிஜீயின் மறைவுக்குப் பின்னால் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனிலிருந்து தன்னை முழுமையாக விடுவித்துக் கொண்டு தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவி வந்தார் நிவேதிதை.

சுவாமிஜீயின் மறைவுக்குப் பின்னால் சுதந்திரப் பறவையாகி விட்ட நிவேதிதா பாரதத்தின் பல்வேறு பகுதிகளுக்கெல்லாம் சென்றார். பரோடாவில் இருந்த மன்னர் கல்லுரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த அரவிந்தரை 1902 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் நாளன்று சந்தித்தார். ஏற்கெனவே புரட்சி நடவடிக்கைகளில் அரவிந்தர் ஈடுபாடு கொண்டிருந்தார். விவேகானந்தரால் உந்தப்பட்டவர் அரவிந்தர்.

பூனாவில் இயங்கி வந்த ரகசிய சங்கத்தோடு அரவிந் தருக்குத் தொடாபு இருந்தது அரவிந்தருக்கும் திலகருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது. இருவருமாக சேர்ந்து பாரத இளைஞர்களுக்கு ரஷ்யாவில் ராணுவப் பயற்சி அளிக்கும் சாத்தியக் கூறுகள் பலவற்றை அறியும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். இது சம்பந்தமாக திலகர் பம்பாயில் இருந்த ரஷ்ய தூதரை பல முறை சந்தித்துப் பேசினார். இத்தகைய சூழ்நிலையில் அரவிந்தரை நிவேதிதா தேவி சந்தித்தது மிக முக்கியமானதாகும். இந்தச் சந்திப்பை பற்றி அரவிந்தர் பின் கண்டவாறு எழுதியிருக்கிறார்.

“நிவேதிதா என்னிடம் ஆன்மீக விளக்கம் பற்றியோ ராமகிருஷ்ணர் விவேகானந்ததர் பற்றியோ பேசியதாக எனக்கு நினைவு இல்லை . பாரத அரசியலையும் மற்றும் பல விஷயங்களையும் குறித்தே பேசினோம்.”

அரவிந்தரும் நிவேதிதா தேவியும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது பற்றிய முழு விவரமும் தெரியாவிட்டாலும் நாடெங்கிலும் புரட்சிகர நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய திட்டங்களைப் பற்றியே இருவரும் பேசியிருக்க வேண்டும்.

பல்வேறு சிறு சிறு குழுக்களாக இயங்கிக் கொண்டிருந்த புரட்சி வீரர்களை ஒன்றுபடுத்த வேண்டியது பற்றியும் அவர்கள் ஆராய்ந்திருக்க வேண்டும்.

இச்சந்திப்பின் விளைவாக பின்னால் அரவிந்தர் எழுதிய ஒரு குறிப்பே நமக்குப் பல விவரங்களைத் தெளிவுபடுத்துகிறது.

“சமீப காலத்தில் தோன்றியுள்ள புரட்சிவாத அமைப்புகள் சிலவும், புரட்சிவாதிகள் சிலரும் தனித்தனியாக செயல்பட்டு வந்ததை நான் கண்டேன். இவையாவற்றையும் இணைத்து பாரிஸ்டர் பி. மித்ரா அவர்களை வங்காளத்தில் புரட்சித் தலைவராகவும் நிவேதிதா தேவியை உள்ளடக்கிய ஐந்து பேர்களை ஒரு மத்தியக் குழுவாகவும் அமைத்து ஒரே ஸ்தாபனமாக உருவாக்க நான் முயன்றேன்”

நிவேதிதா பற்றிய தனது நூலில் பரிவ்ராஜிகா ஆத்மப்ராணா பின் கண்டவாறு எழுதியிருக்கிறார். – “ஒத்துழையாமையும் ஸாத்வீக எதிர்ப்பும் தோல்வி அடையும் கட்டத்தில் பஹிரங்கமான கலகத்திற்கு ஒரு தயாரிப்பாக ரகசிய புரட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வர வேண்டும் என்ற அரவிந்தரின் முயற்சியை அவர் ஆதரித்தார்”

1905ல் பவானி மந்திரம் என்ற துண்டுபிரசுரத்தை வெளியிட்டார் அரவிந்தர்.

கானகத்தில் மலைகளுக்கு இடையே மறைவாக ஒரு கோயில் கட்டவேண்டும். கட்டிய கோயிலில் பவானி தேவியை ப்ரதிஷ்டை செய்யவேண்டும். இந்த பவானி வேறுயாருமில்லை . பாரத தேவிதான்.

பாரத தேவியின் அடிமை விலங்கை உடைத்தெறிய உறுதி பூண்டு தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணம் செய்ய முன்வரும் பிரம்மச்சாரிகள் இந்த் பவானி மந்திரத்தில் ஆயுதம் ஏந்திப் போராடப் பயிற்சி பெறுவார்கள். பவானி மந்திரம் அரவிந்தரின் மனக்கோட்டையாகவே முடிந்துபோயிற்று. ஆனாலும் அவரது எண்ண ஓட்டம் என்ன என்பதைப் புரிந்து கொண்ட ஆங்கிலேய அரசு அதிர்ந்து போனது.

ஆயுதப் புரட்சியை மறைமுகமாக ஊக்குவித்த அரவிந்தர் விண்ணப்பங்கள் மூலம் விடுதலை பெற்று விடலாம். என்று வீண் கனவு கண்டு கொண்டிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பை, இரும்புக் கரம் கொண்டு மட்டுமே இங்கிலாந்தைப் பணிய வைக்க முடியும் என்று நம்பவைத்தார். விளைவு காங்கிரஸ் ஆங்கில அரசின் அஸ்திவாரத்தையே அசைக்கும் அளவுக்கு வலிமை பெற்றது. –

அரவிந்தர் தன் சகோதரர் பரீந்திர கோஷ் மூலம் வங்காள ராஜதானியில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்பு வைத்துக் கொண்டார். விவேகானந்தரின் கருத்துக்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில் உருவான “அனுசீலன் ஸமிதி” என்னும் புரட்சி அமைப்பு சிறந்த முறையில் திட்டமிட்டுச் செயல்பட்டு வந்தது. இந்த அமைப்புடன் நிவேதிதா நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார்.

மாஜினியின் சரித்திரத்தில் கொரில்லாப் போர்முறை பற்றிய அத்தியாயத்தைப் பிரதி எடுத்து வங்காளம் முழுவதும் பரவச் செய்தார் நிவேதிதை.


வங்காள மாநில இந்திய தேசிய காங்கிரஸின் மாநில மாநாடு 1906 ஏப்ரல் 14ல் பாரிஸாலில் நடந்தது. இந்த மாநாட்டின்போது வந்தே மாதரம் கோஷத்தை எழுப்பியதற்காக, மாநாட்டுத் தலைவர்கள் மீது தொண்டர்கள் மீதும் தடியடிப் பிரயோகம் செய்தனர் பிரிட்டீஷ் போலீஸார்.

அந்த மாநாட்டிற்குத் தலைமையேற்றுவிட்டுத் திரும்பிய ஸுரேந்திரநாத் பேனர்ஜியை ஸியால்டா ஸ்டேஷனில் நிவேதிதை சந்தித்தார். அப்போது அவர் கூறியது. ம்

“தேச விடுதலைக்காகத் தாங்களும் மற்றவர்களும் சிந்திய ரத்தத்துளிகளிலிருந்து சிலிர்த்து எழுவார்கள் சிங்கக்குட்டிகள். விடுதலை விரைவில் கிடைக்க அஸ்திவாரம் இட்டுவிட்டீர்கள்” என்பதே.


1908 ஆம் ஆண்டில் விவேகானந்தரின் தம்பியான பூபேந்திரநாத் தத்தா நிவேதிதையிடமிருந்து மாஜினியின் சுயசரிதை மற்றும் “ஒரு புரட்சிவாதியின் நினைவுக் குறிப்புகள்” “ரஷ்ய மற்றும் ஃப்ரெஞ்சுக் சிறைக்கூடங்கள்” என்ற தலைப்புகளில் பீட்டர் குரோபோட்கின் எழுதியிருந்த இரு நூல்களையும் பெற்றிருந்தார். –

இளைஞர்களை விடுதலைப் போராட்டத்திற்குத், தயார் செய்யவேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்பட்ட நிவேதிதாதேவி அக்காலத்தில் அவ்வளவாக பிரபலம் அடையாத புரட்சி வீரர்கள் மத்தியில் அதிகமாக அறிமுகம் ஆகியிருந்தார். விவேகானந்தரின் தம்பியான பூபேந்திரநாத் தத்தா, அரவிந்தர், பரிந்திரகோஷ் போன்ற இளம் புரட்சிவாதிகள் அவரிடமிருந்து உத்வேகத்தையும், உதவிகளையும் பெற்றார்கள்”

பூபேந்திரநாத் தத்தா 1907ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டபோது அவரை ஜாமீனில் வெளியே கொண்டு வருவதற்கு நிவேதிதா முயற்சிகளை மேற்கொண்டார். அவரைச் சிறையில் சந்தித்தார். அவருடைய தாய் புவனேஸ்வரியை அடிக்கடி சென்று பார்த்து அவருக்குத் தேவையான உதவிகளையும் செய்தார். ப

பூபேந்திரநாத் தத்தாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.10000 ஐத் திரட்டிக் கொடுப்பதிலும் அவர் முன் நின்றார். ஒரு ஆண்டுக்கால சிறை வாசத்திற்குப் பின்னால் பூபேந்திரநாத் தத்தா அமெரிக்கா சென்றார். இதற்கு இரண்டு ஆண்டுக்காலம் கழித்து அமெரிக்கா சென்ற நிவேதிதா பூபேந்திரநாத், தாரக் நாத் மற்றும் அமெரிக்காவில் இருந்த பல புரட்சி வீரர்களைச் சந்தித்துப் பேசினார். –

அலிப்பூர் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்டு ஓர் ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்து விட்டு வெளியே வந்த அரவிந்தர் 1910 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சந்திரநாகூருக்குத் தப்பிச் சென்றார். அங்கு சென்று அவரை நிவேதிதா தேவி சந்தித்துப் பேசி அரவிந்தர் அங்கிருந்து பாண்டிச்சேரிக்கு பத்திரமாகப் போய்ச் சேர்வதற்கு பிரபல விஞ்ஞானியான டாக்டர் ஜகதீஷ் சந்திரபோஸ் அவர்களிடம் பணம் பெற்றுக் கொடுத்து அவரை பத்திரமாக அனுப்பிவைத்தார்.

நிவேதிதாவிற்கு சுவாமிஜி ஊட்டிய பாரத தேசப்பற்றே அவரை இந்த அளவிற்கு நமது தேச விடுதலைக்காக உழைக்கத் தூண்டியது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.


விவேகானந்தரிடம் குடிகொண்டிருந்த தேசபக்திக்கனல் அவரது சகோதரரான பூபேந்திரநாத் தத்தாவையும் ஆட்கொண்டது. பாரத தேசிய விடுதலை இயக்கத்தில் அவர் தீவிரமாக ஈடுபட்டார். யுகாந்தர் என்னும் பத்திரிகை வாயிலாக அனல் கக்கும் பிரச்சாரம் புரிந்தார். வங்க இளைஞர்கள் அவரது எழுத்துக்களின் மூலம் எழுச்சி பெற்றார்கள்.

அரவிந்தர் தமது யுகாந்த வார இதழில் கொரில்லாப் போர் முறை பற்றிய விவரங்களை வெளியிட்டார். இதன் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய விவேகானந்தரின் சகோதரர் பூபேந்திரநாத் தத்தா மீது அரசு வழக்குத் தொடர்ந்தது.

தாங்கள் பிரிட்டீஷ் அரசாங்கத்தையே நியாயமான அதிகாரபூர்வமான அரசாக ஏற்கவில்லை என்பதால் அந்த அரசு தொடரும் எந்த வழக்கும் தங்களைக் கட்டுப்படுத்தாது என்று இந்த பத்திரிகை துணிச்சலுடன் பதிலடி கொடுத்தது. பிரிட்ஷ் அரசின் அடக்குமுறைக் கணைகள் அவர்மீது பாய்ந்தன.

1907 ஆம் ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறைப்பட்டவுடன் யுகாந்தர் குழுவில் இடம் பெற்றிருந்த இளைஞர்கள் ஓய்ந்துவிடவில்லை.

“விடுதலை பெற வழி என்ன? (முக்தி கோன் பாதே) என்ற தலைப்பில் அவரது கட்டுரைகள் பல நூலாக வெளிவந்துள்ளன.

“ஆயுதங்களை ஏராளமாக ரகசியமாக தயாரிக்கவேண்டும், ஏராளமான குண்டுகள் புரட்சிவாதிகளின் ரகசியத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படவேண்டும். இத்தகைய குண்டுகளைச் செய்யும் வித்தைகளையும் கற்றுவர ஹிந்து இளைஞர்கள் அன்னியநாடுகளுக்கு அனுப்பப்பெறவேண்டும். அயல்நாடுகளிலிருந்து ஆயுதங்கள் ரகசியமாக இறக்குமதி செய்யப்படவேண்டும்” பிரிட்டிஷாரின் படையில் உள்ள ஹிந்து ராணுவ வீரர்களின் துணை கொண்டு ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சியை உருவாக்குவது சாத்தியம். பிரிட்டிஷ் அரசின் படையில் பணிபுரியும் சுதேசிய வீரர்களின் ஆயுதங்கள் பிரிட்டீஷாருக்கு எதிராகத் திரும்ப வாய்ப்பு உள்ளது” என்பன போன்ற தகவல்களை இந்நூலில் காணலாம்.

1940களில் மும்பையில் பிரிட்டிஷ் படையில் சுதேசிய வீரர்களின் கிளர்ச்சியும், இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியரிடம் கைதிகளாக பிடிபட்ட பிரிட்டிஷ் படையினரின் சுதேசிய வீரர்களைக் கொண்டு நேதாஜி உருவாக்கிய ஹிந்து தேசிய ராணுவமும்தான் உண்மையில் பிரிட்டிஷார் பாரதத்திற்கு விடுதலை அளிக்க முக்கிய காரணங்கள் என்பதை பலரும் அறிவர்.

விவேகானந்தர் நேரிடையாக அரசியலில் ஈடுபடுவதற்கு அவரது துறவு வாழ்வும், ஆன்மீகப் பணிகளும் தடையாக இருந்தன. ஆனாலும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் சுவாமி விவேகானந்தரையே தங்களின் வழிகாட்டி யாகக் கொண்டிருந்தனர் என்பது வரலாற்று உண்மை .

ஆர்ய- த்ராவிட இன வாதம் குறித்து விவேகானந்தர்


ஆர்ய- த்ராவிட இன வாதம் குறித்து விவேகானந்தர்

ஆர்.பி.வி.எஸ் மணியன்


நமது பண்பாடு எத்தனைப் பழமையானதோ அத்தனை பழமையானவை ஆர்ய, த்ராவிட என்கிற இரு வார்த்தைகளும். இந்த சொற்களையும் இன வாதப் பெயர்களாகச் சுட்டி காட்டி நம்மைப் பிரித்தாள முயற்சித்தனர் பிரிட்டிஷார்.

பாரதத்தின் ஒருமைப்பாட்டிற்கே ஓர் அச்சுறுத்தலாக பின்னாளில் திகழ இருந்த ஆரியா திராவிடா பிரச்சினை முளை விட்டிருப்பதை சுவாமி முதன்முதலில் திருவனந்தபுரத்தில் காண நேர்ந்தது.

மெத்தப் படித்த மேதாவியான மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள் சுவாமிஜியிடம் தன்னை திராவிடர் என்றே அறிமுகப்படுத்திக் கொண்டார். ப்ராம்மண ஆதிக்கத்தை எதிர்த்துச் சில குரல்கள் அப்போது எழத் தொடங்கியிருந்தன. அதுபோலவே பேராசிரியர் சுந்தரராம ஐயர் போன்றவர்கள் தங்களை ஆர்யர்கள் என்று வர்ணித்துக்கொண்டதும். சுவாமிஜீக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை . ஆர்ய-திராவிட இனவாதப்பிரிவு முற்றிலும் தேவையற்றது என்பதே சுவாமிஜீயின் கருத்தாக இருந்தது. இது குறித்து பின்னாளில் விவேகானந்தர் கூறியதாவது;

ஆரியர் என்ற சொல்லைப் பற்றி மேலை நாட்டவர் கூறுவதைப் புறந்தள்ளி நமது சாஸ்திரங்களில் காணப் படுகிற விளக்கத்தை நாம் உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும்.

‘ஆர்ய’ என்பது ஒரு இனத்தைக் குறிப்பிடுவதாக சாஸ்திரங்களில் எங்குமே வரவில்லை . ‘த்ராவிட’ என்பதும் இனப்பெயராக வரவில்லை. வேத சாஸ்திரங்களைப் பார்த்தால் ஆரிய, த்ராவிட என்று இரண்டு வேறு வேறு இனங்கள் இருந்தன என்பதற்குக் கொஞ்சம் கூட ஆதாரம் இல்லை .

சாஸ்திரப் பிரகாரம் இவ்விரு வார்த்தைகளுக்கான பொருள் என்ன ?

“ஆர்ய” என்றால் மேலான, உயர்ந்த பண்பாட்டுக்குரிய, மதிப்புக்குரிய என்பதாகவே அர்த்தங்கள் தொனிக்கும் வகையில் இந்த வார்த்தை கையாளப்பட்டிருக்கிறது.

“க்ருண்வந்தோ விச்வம் ஆர்யம்” என்ற சொற்றொடர் ஒன்று காலங்காலமாக நம்மவரால் பயண்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு “உலகைப் பண்படையச் செய்வோம், உலகை மேம்படுத்துவோம்” என்பதாகவே அர்த்தம். பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனைப் பார்த்து “நீ என்ன இப்படிப் பேடி மாதிரி மனத்தளர்ச்சி அடைந்து அனார்யனாகி விட்டாயே” என்கிறார். இங்கு அனார்யன் என்பதற்கு “மதிப்புக்குரியவனாக அல்லாமற் போய் விட்டாயே” என்பதுதான் அர்த்தம்.

பழங்காலக் காவியங்களை, நாடகங்களைப் படித்தால் ராணிகள் தங்கள் கணவன்மார்களான ராஜாக்களை ‘ஆர்ய புத்ர’ என்றே அழைக்கிறார்கள். இதன் பொருள் ” மேலான குடும்பத்தில் பிறந்தவனே” என்று தனது புக்ககத்தை அவர்கள் புகழ்ச்சியாகக் கூறுவதாகவே ஆகும்.

ஸீதை ராமரை “ஆர்ய புத்ர” என்பதாக அழைக்கிறார். அப்படியானால் ஸீதை தன் கணவனை இன ரீதியாக அப்படி அழைத்தார் என்று கொள்ள முடியுமா? ராமன் இன ரீதியாக ஆரியன் என்றால் ஸீதை அவனை “ஆர்ய” என்று விளிக்கும் போது இவள் : த்ராவிடப் பெண்மணி ஆகிவிடுவாளே!

ராமாயணத்தில் மண்டோதரியும் தனது கணவன் ராவணனை “ஆர்ய” என்றே மரியாதையோடு அழைக்கிறாள்.

முத்ரா ராக்ஷஸம் நாடகத்தில் அமாத்ய ராக்ஷஸன் ஆரியன் என்று அழைக்கப்படுகின்றான். பிறகு அவன் மீது வீண்பழியைச் சுமத்த முயற்சி நடக்கிறது. உடனே அவன் அனார்யன் (பண்பில்லாதவன்) என அழைக்கப்படுகிறான்.

ஒரு வேடிக்கை என்னவெனில் ஐரோப்பிய மொழிகள் எதிலுமே ஆர்ய என்ற வார்த்தை இல்லை.

அம்பிகையை “ஆர்யா” என்று மரியாதையோடு குறிப்பிடும் வழக்கம் உள்ளது. துர்வாஸர் அம்பிகைமீது இயற்றியுள்ள ஸ்தோத்திரத்திற்கே “ஆர்யா த்விசதி” என்று தான் பெயர். அமரகோசத்தில் அம்பிக்கையின் நாமங்களைக் குறிப்பிடும்போது “ஆர்யா தாக்ஷாயணி ச ஏவ கிரிஜா” என்று வருகிறது.

ஆதிசங்கரரின் தாயாருக்கே ஆர்யாம்பா என்றுதான் பெயர். இந்த ஆர்யாம்பாவின் மகனான சங்கரர் “திராவிட சிசு என்று தன்னையே அழைத்துக் கொள்வதற்கான அகச்சான்று அவரது சௌந்தர்ய லஹரியின் 75வது சுலோகத்தில் உள்ளது.

“ஆரிய” என்பது தமிழில் “ஐயன்” என்றும், இன்னும் மரியாதை நிமித்தமாக “ஐயர்” என்றும் ஆகியுள்ளது.

த்ராவிட தேசத்தின் கிராம தேவதையான ஐயனார் என்ற பெயர் இந்த ஆர்ய பதத்திலிருந்து பிறந்ததே.

தனது “ஜய வந்தே மாதரம்” பாடலில் பாரதியார்

“ஆரிய பூமியில்

நாரியரும் நர

சூரியரும் சொலும்

வீரிய வாசகம்

வந்தே மாதரம்

ஜய வந்தே மாதரம்”

என்று பாடும்போது நமது தேசத்தை “உயர்ந்த நாடு” என்ற அர்த்தத்திலேயே வர்ணித்துள்ளார். ஆரியர் யார் என்பதற்கான இலக்கணத்தையே வகுப்பது போல பாரதி தனது “சத்ரபதி சிவாஜி” பாடலில் பல கருத்துக்களைத் தந்திருக்கிறார்.

பிச்சை வாழ்வு உகந்து

பிறருடையாட்சியில்

அச்சமுற்று இருப்போன்

ஆரியனல்லன்

புன்புலால் யாக்கையை

போற்றியே

தாய் நாட்டு அன்பிலாது இருப்போன்

ஆரியனல்லன்

மாட்சிதீர் மிலேச்சர்

மனப்படியாளும்

ஆட்சியில் அடங்குவோன்

ஆரியனல்லன்,

ஆரியர் இருமின்!

ஆண்கள் இங்கு இருமின்.

ஆரியத்தன்மை அற்றிடும் சிறியர்

யார் இவண் உளர்

அவர் யாண்டேனும் ஒழிக.

‘த்ராவிட’ என்பதும் எங்கும் இனப்பெயராக வரவில்லை . ஒரே ஹிந்து இனத்தைச் சேர்ந்த பாரத ஜனங்களைத்தான் ப்ராதேசிக ரீதியாக கௌடர்கள் என்றும், திராவிடர்கள் என்றும் பிரித்திருக்கிறார்கள்.

முன் காலத்தில் விந்திய மலைக்கு வடக்கே உள்ள ப்ரதேசங்களை பஞ்ச கௌட தேசங்கள் என்றும், விந்திய மலைக்குத் தெற்கே உள்ள ப்ரதேசங்களை பஞ்ச த்ராவிட தேசங்கள் என்றும் நம் முன்னோர் அழைத்தனர்.

எனவே திராவிடர் என்பது தென் பாரத ப்ரதேசங்களைச் சேர்ந்த மக்கள் என்றே அர்த்தமாகிறது. ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பிரதேசத்திற்குப் போனவர்களை அந்தப் பிரதேசப் பெயரை வைத்தே குறிப்பிடுவார்கள். எனவே தான் வடபாரதத்தில் குடியேறிய தமிழ் தேச ப்ராம்மணர்களுக்கு ‘த்ராவிட்’ என்ற surname பயன்படுத்தப் படுகிறது. பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் “ராஹுல் த்ராவிட்” பெயர் நமக்கெல்லாம் நன்கு பரிச்சயமானதே.

மேலே கூறப்பட்டக் கருத்துக்களை வலியுறுத்தி விவேகானந்தர் கூறுவதாவது;- |

“ஹிந்து என்று இப்பொது நாம் குறிப்பிடுகின்ற அனைவரையுமே ‘ஆரியர்’ என்ற சொல் குறிக்கிறது. ஹிந்துக்கள் அனைவரும் வேறுபாடற்ற ஆரியர்களே.

தென் பாரதத்தில் திராவிடர் என்ற இனத்தினர் இருந்ததாகவும் அவர்கள் வட பாரதத்திலிருந்து முற்றிலும் வேறு பட்டவர்கள் என்றும், பிற தென்னகத்து ப்ராம்மணர்கள் மட்டும் வட பாரத்தி லிருந்து வந்த ஆரியர்கள் என்றும், பிற தென்னகத்தவர் எல்லாம் இந்த ப்ராம்மணர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட ஜாதியையும், இனத்தையும் சார்ந்தவர்கள் என்றும் ஒரு கொள்கை நிலவுகிறது.

இவையெல்லாம் இதுவரை நிரூபிக்கப்படாத கொள்கைகள். இவை வெறும் அபிப்பிராயங்களும் ஊகங்களும் மட்டுமே.

தமிழர்களை தஸ்யுக்கள் என்று வேதங்கள் இழிவுபடுத்தியதாக ஒரு ஆதாரமற்றக் குற்றச்சாட்டு உள்ளது. தஸ்யுக்கள் என்பது தமிழர்களைக் குறிக்கிற வார்த்தையல்ல.

சுவாமிஜி கூறுவதாவது:

“வேதங்களில் தஸ்யுக்களின் அழகற்ற உடலமைப்பைப் பழிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற அடைமொழிகளில் ஒன்றுகூடப் பெருமை வாய்ந்த தமிழினத்திற்குப் பொருந்தவில்லை”

பாரத நாட்டின் வரலாற்றையும் இலக்கியங்களையும் ஆராயப்புகுந்தவர்களில் ஒருவரான ம்யூர் (MUIR) என்பவர் கூறியுள்ளதாவது. –

“எந்தவிதமான ஸம்ஸ்க்ருத புத்தகத்திலும் எவ்வளவு பழமையானதாயிருந்தாலும் சரி, ஆரியர்கள் வெளிநாட்டவர் என்பதற்குச் சான்றோ, குறிப்போ எங்கும் கிடைக்கவில்லை. ரிக்வேதத்தில் கூறியுள்ள தாஸ, தஸ்யூ, அஸுர என்பன போன்ற பெயர்கள் ஆரியர்கள் அல்லாதார்களுக்கோ அல்லது இந்நாட்டுப் பழங்குடி மக்களுக்கோ உபயோகப்படுத்தப்பட்டதாக யாதொரு ஆதாரமும் குறிப்பும் கிடைக்கவில்லை .

வரலாற்றாளர் பி.டி. ஸ்ரீநிவாஸ ஐயங்கார் அவர்கள் தமது “DRAVIDIAN STUDIES” என்ற நூலில் கூறுவதாவது:

ஆர்யர்கள், தஸ்யுக்கள் என்ற சொற்கள் வெவ்வேறு இனங்களைக் குறிப்பன அல்ல. இந்த வார்த்தைகள் இருவேறு வழிபாட்டுமுறைகளைப் பின்பற்றியவர்களைக் குறிக்கின்றன.

தஸ்யுக்கள் அக்னி வழிபாடில்லாதவர்கள், யாகங்களை வெறுத்தவர்கள். யாகயக்ஞங்களில் நம்பிக்கைக்கொண்டிருந்த வர்கள் ஆர்யர்கள்.

ரிக் வேதம் எட்டாம் மண்டலத்தில் வரும் 70வது அனுவாகத்தில் 11வது ரிக் இதற்கு ஆதாரமாக உள்ளது.

ரிக்வேத மந்திரத்தில் (10-22-8)தஸ்யுவின் லக்ஷணத்தை இவ்வாறு விளக்கியிருக்கிறது.

“எவன் தீர ஆலோசிக்காமல் செயல்புரிகிறானோ, எவன் அஹிம்ஸை , ஸத்யம், தயை முதலிய நல்ல விரதங்களை அனுஷ்டிக்காது இதற்கு மாறாக ஹிம்ஸை , அஸத்யம், கொடூரத்தனம் முதலிய ஆசரணங்கள் உள்ளவனோ, மனிதத் தன்மைக்கு உகந்த காரியங்களைச் செய்யாதவனோ அவனே “தஸ்யு” ஆவான்.

வி.ஆர். ராமச்சந்திர தீக்ஷிதர் என்பவரும் தமது ORIGIN AND SPREAD OF TAMILS என்ற நூலில்

– “திராவிடர்கள் ஒரு காலத்தில் பஞ்சாபிலும் கங்கைச் சமவெளியிலும் வாழ்ந்தார்கள் என்பதும், பின்னர் படையெடுத்து வந்த ஆரியர்களால் அவர்கள் விரட்டப்பட்டுத் தெற்கே ஓடி வந்தார்கள் என்பதும், அதன் பிறகே திராவிடர்கள் தென் பாரதத்தைத் தங்கள் தாயகமாக்கிக் கொண்டார்கள் என்பதும் ஆதாரமற்ற நிரூபிக்கப்பட முடியாத செய்திகள் என்று கூறியிருக்கிறார்.

சுவாமிஜீ கூறுவதாவது: “திருவாளர் மொழியியல் அறிஞரே உங்கள் கருத்து முற்றிலும் ஆதாரம் அற்றது. (இங்கு மொழியியல் அறிஞரே என்று சுவாமிஜி குறிப்பிட்டிருப்பது ராபர்ட் கால்டுவெல் பற்றியதாக இருக்க வேண்டும்) வடபாரதத்து மொழிகளுக்கும் தென்பாரதத்து மொழிகளுக்கும் இடையே உள்ள மொழிவேற்றுமையைத் தவிர வேறு எந்த வேறுபாட்டையும் நான் காணவில்லை.

ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து படையெடுத்து வந்தார்கள் என்றும், பூர்விகக் குடிகளிடமிருந்து அவர்களுடைய நிலங்களைப் பிடுங்கிக் கொண்டார்கள் என்றும் அவர்களை நிர்மூலமாக்கிவிட்டு பாரதத்தில் குடியேறினார்கள் என்று கூறுகிறார்கள். இதெல்லாம் கலப்பற்ற பொய், முட்டாள்தனமான பேச்சு ஆகும்” இத்தகைய பொய்யான ஒரு செய்தியை பிரிட்டிஷார் ஐரோப்பிய வரலாற்றாளர்களைக் கொண்டு பரவச் செய்ததற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. 1600களிலிருந்து 1800 வரை இங்கு நிலைகொண்டுவிட்ட பிரிட்டிஷ் அரசை எதிர்த்து ஹிந்துக்கள் போரிடத் தொடங்கிவிட்டனர்.

குறிப்பாக 1857ல் நடந்த சுதந்திரப் புரட்சியும் எழுச்சியும் பிரிட்டிஷாரை பீதியடைய செய்தது. நாடே ஒருங்கினைந்து நடத்திய இந்தப் புரட்சி – இந்த சுதந்திரப் போர் பாரத நாட்டின் அடித்தளமான பண்பாட்டு ஒற்றுமையின் வலிமையை ஆங்கிலேயர்களுக்கு உணர்த்தியது. இதனை எப்படியாவது குலைத்துவிடவேண்டும் என்று அவர்கள் துடித்தனர்.

இவர்களுக்குக் கை கொடுக்கும் விதத்தில் ஆர்தர்-டி-கோபிநியூ என்பவர் அளந்து விட்ட “ஆர்யன் இனம்” (aryan race) என்பதான ஆராய்ச்சி என்ற பெயரில் அவர் செய்த சூழ்ச்சி அப்போது தொடங்கியிருந்தது. எனவே மாக்ஸ் முல்லரைப் பயன் படுத்தி ஆர்யர்கள் ஐரோப்பிய சம்பந்தம் உடையவர்கள் என்றும் அவர்களே பாரதத்தில் நுழைந்து இங்கு ஏற்கெனவே வாழ்ந்து வந்த திராவிடர்களின் மொஹஞ்சோரோ-ஹரப்பா கலாச்சாரத்தை அழித்துத் தங்களது வேத கலாச்சாரத்தை நிறுவினார்கள் என்றும் கதை கட்டிவிட்டனர்.

திராவிடர்களும் பாரதத்தின் பூர்வீகக் குடிமக்கள் அல்ல என்றும் அவர்களுக்கும் முன்னதாக வாழ்ந்த மலைவாழ் மக்களும் கானகத்தில் வாழ்ந்த மக்களுமே இந்த நாட்டின் ஆதிவாசிகள் அதாவது பூர்வீகக் குடிமக்கள் என்றும் அளந்தனர்.

டாக்டர் கேய்னே கூறுவதாவது. “ஆரிய மொழிபேசும் மக்கள் இங்கு நுழைவதற்கு முன்பே திராவிடர்கள் ஊடுருவல் செய்துள்ளனர். ஆக மொத்தம் இந்த ஆரியர்கள் திராவிடர்கள் இருவருமே பூர்வகுடியினர் அல்ல, இவர்களுக்கு முன்பு நீக்ரோ இனத்தைக் கிட்டத்தட்டச் சார்ந்த கூட்டம் ஒன்று இங்கு வாழ்ந்து வந்துள்ளது. காலப்போக்கில் அந்த இனம் அழிந்து விட்டிருக்கின்றது.”

ஆதாரமே இல்லாத இத்தகைய நச்சுக் கருத்துக்கள் அபத்தத்திலும் அபத்தம்.

ஆகவே இந்த நாட்டிற்கு உரிமை கொண்டாட ஹிந்துக்கள் தகுதியற்றவர்கள் என்று நிரூபிக்கப் பார்த்தனர். முதலில் இந்த நாட்டை ஆக்கிரமித்த ஆரியர்களே ஹிந்துக்கள் என்று தங்களைப் பறை சாற்றி கொள்வதாக பொய் பிரச்சாரம் செய்தனர்.

தென் பாரத மக்கள் யாவருமே ஒருகாலத்தில் வடக்கிலிருந்து ஆரியர்களால் தெற்கே விரட்டப்பட்டவர்கள் என்று கதை கட்டிவிட்டனர். இதற்கு ஸாதகமாக ராபர்ட் கால்டுவெல் என்ற பாதிரி மொழி ஆராய்ச்சி என்ற பெயரில் திராவிடர்களின் மொழியும் கலாச்சாரமும் வடபாரதத்து ஆரியர்களின் மொழியினின்றும் கலாச்சாரத்தின்றும் வேறுபட்டது என்று பொய்ப் பிரச்சாரம் செய்தார்.

இத்தகைய பின்னணியில் நாம் விவேகானந்தரது கருத்துக்களைக் காணவேண்டும்.

இதோ விவேகானந்தர் கூறுவதைக் கேட்போம். “ஐரோப்பியப் பண்டிதர்களின் இத்தகைய கருத்துகளுக் கெல்லாம் பாரத அறிஞர்கள் கூட “ஆமாம்” போடுவது விந்தையாக இருக்கிறது. இந்த ராக்ஷஸப் புளுகுகள் எல்லாம் நமது பிள்ளைகளுக்குக் கற்பிக்கப் பட்டு வருகின்றன. இது உண்மையில் மிக மிக மோசமான செயலாகும்.

“……… ஆதிவாசிகள் யார்?

ஐரோப்பியர்கள் அப்பாவி ஆஃப்ரிக்கர்களைக் கொடுமைப் படுத்தியது போலவே இங்கேயும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அதே போன்ற செயல் நடந்திருக்க வேண்டும் என்று கனவு காண்கிறார் இந்த மேற்கத்திய தொல்பொருள் ஆய்வாளர். ஆரியர்கள் பின்னால் வந்தவர்களாம்.

சர் யு டர்னர், சர். பு . ரிஸ்லே , டாக்டர் w.w ஹேண்டர், ஹக்கல், டாக்டர் கேய்னே, எட்வர்ட் தாமஸ், ஜே n. ரோட், ஹெச் ஜீ. வெல்ஸ், பிஷப் கால்டுவெல் போன்ற பல வெள்ளையர்கள் மொழி ஆராய்ச்சி என்ற பெயரிலும் பல பொய்யான கருத்துக்களை உலகத்தவர் முன்வைத்துள்ளனர். ஆரிய இன வாதம் பேசும் இந்த மேற்கத்திய அறிஞர்களின் கூற்றுகளில்தான் எத்தனை முரண்பாடுகள் தெரியுமா?

சிலருடைய கருத்துப்படி ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்ததாகக் கூறுகிறார்கள். இந்த ஆரியர்கள் சிவப்புத் தலைமுடியைக் கொண்டவர்கள் என்று சில ஆங்கிலேயர்கள் சொல்கிறார்கள். இன்னும் சிலர் இவர்கள் கறுப்பு முடியுள்ளவர்கள் என்கிறார்கள்

ஆரியர்கள் சுவிட்சர்லாந்தின் ஏரிக்கரைகளில் வாழ்ந்தார்கள் என்று நிரூபிப்பதற்கான முயற்சிகளும் சமீப காலத்தில் தோன்றியுள்ளன.

இத்தகைய கொள்கைகளுடன் அந்த ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து அந்த ஏரியில் மூழ்கினால் கூட எனக்கு வருத்தமில்லை. ஆரியர்கள் வடதுருவத்தில் வாழ்ந்ததாக இப்போது சிலர் கூறுகிறார்கள் ஆரியர்களையும் அவர்கள் வாழ்ந்த இடங்களையும் கடவுள் ஆசிர்வதிப்பாராக.இந்த ஆர்ய இனவாதக் கொள்கையில் உண்மை இருக்கிற தென்றால் நம் சாஸ்திரங்களில் அது பற்றிய ஒரு சிறு குறிப்பாவது இருக்க வேண்டும். ஆர்யர்கள் என்ற இனத்தவர்கள் பாரதத்திற்கு வெளியேயிருந்து வந்தார்கள் என்று கூறுகின்ற ஒரு வார்த்தை கூட நமது சாஸ்திரங்களில் இல்லை .

உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர் எல்ஃபின்ஸ்ட ன் கூறுவதாவது;

மனுஸ்ம்ருதியிலோ, வேதத்திலோ மற்றும் மனுவுக்கு முற்பட்ட எந்தப் புத்தகத்திலோ ஆர்யர்கள் பாரதத்திற்கு முன்பு வேறு தேசத்தில் இருந்ததாகக் கூறப்படவில்லை . [Elphinston History of India Vol.I] மொஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டப் பழமையான நாகரீகத்தின் தடயங்கள் திராவிடப் பண்பாடு எனும் தனியான கலாச்சாரம் ஒன்றைச் சுட்டிக் காட்டுவதாக சிலர் கூறுகின்றனர். இது முற்றிலும் தவறான கற்பனையே.

மொஹஞ்ஜதாரோவில் கிடைத்த ஒரு “முத்திரை” (SEAL) யில் உபநிஷதக் கருத்து ஒன்றை விளக்கும் படம் காணப்படுகிறது. (Plate no, cxll seal no 387 from the excavation at Mohenjodaro) (source; indus civilization edited by Sir John Marshall, Cambridge 1931)

5000 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படும் சிந்து சமவெளி நாகரீக ஆராய்ச்சியில் ஒரு உண்மை தெளிவாகிறது, அந்த நாகரீகம் பாரத நாட்டின் தொன்மையான வேத கலாச்சாரத்தின் ஓர் அங்கமே என்பதுதான் அந்த உண்மை .

மொஹஞ்சோதாரோவில் ஸ்ரீ கிருஷ்ணலீலா பற்றிய பல கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உஜ்ஜயினியில் உள்ள விக்ரம் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறைத் தலைவர் டாக்டர் விஷ்ணு ஸ்ரீதர் வாகங்கர் என்பவர் தன்னுடன் 30 உயர்மட்ட புராதன ஆராய்ச்சி அறிஞர்களின் ஒத்துழைப்போடு ஹரப்பா, மொஹஞ்ஜதாரோவில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களை வைத்து 20 ஆண்டுகள் தீவிர அராய்ச்சி செய்து வெளியிட்ட முடிவாவது:

ஹரப்பா நாகரீகத்தின் மூலம் ஆரிய கலாச்சாரமே. அதாவது ஆர்ய கலாச்சாரம் ஹரப்பா கலாச்சாரத்தைவிட பழமையானது, ஹரப்பா கலாச்சாரம் ஆர்ய கலாச்சாரத்தின் ஓர் அங்கமே ஆகும்.

ஆரிய திராவிட இனவாத மேதாவிகள் மனிதர்களின் தோலின் நிறத்தை வைத்து இனங்களை அளக்கத் தொடங்கினார்கள். தென் பாரதத்தில் அதுவும் குறிப்பாக தமிழகத்தில் மக்களின் நிறம் சற்றும் கருமையாக இருப்பதால் வட பாரதத்தில் உள்ள வெளுத்த நிறத்தவர்கள் ஆர்யர்கள் என்றும் தெற்கே உள்ளவர்கள் திராவிடர்கள் என்றும் கதை கட்டினார்கள்.

ஆனால் வரலாற்று உண்மை வேறாக உள்ளது. இவர்கள் ஆர்ய இனத்தின் அதி உன்னத பிரதிநிதிகளாகக் கருதும் ஸ்ரீ ராமனும் ஸ்ரீ கிருஷ்ணனும் கருமை நிறத்தவரே. திராவிடர்களின் தெய்வம் என்று மொஹஞ்சோதாரா கண்டுபிடிப்புகள் மூலம் உறுதியாகியுள்ள சிவன் வெளுத்த நிறத்தவன். வேதங்களைத் தொகுத்து வழங்கிய வியாஸர் (கிருஷ்ணத்வைபாயனர்) கறுப்பு நிறத்தவர். பாஞ்சால தேசத்து ஆர்ய மன்னன் துருபதன் மகள் திரௌபதி கறுப்பு நிறுத்தவள்.

மூக்கின் வடிவையும் முடியின் நீளத்தையும் வைத்து இனவாதக் கதைகள் கூறும் இவர்களது அறியாமையை என்னென்பது?

விவேகானந்தர் மேலும் கூறுவதாவது; “நமது நாட்டுப் பண்டிதர்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் எல்லாம் கற்றறிந்த மனிதர்கள். தயவு செய்து நமது பழைய நூல்களையும் சாஸ்திரங்களையும் துருவி ஆராய்ந்து சொந்தமான முடிவுக்கு வாருங்கள்” என்று சொல்லுகிறேன். –

ஐரோப்பியர்கள் தங்களுக்கு எங்காவது வாய்ப்பான சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஆங்காங்குள்ள பூர்வீகமான குடிமக்களைப் பூண்டறுத்துவிட்டு, அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் ஸௌகரியமாகவும் வசதியாகவும் குடியேறி விடுவார்கள்.

ஆகவே ஆரியர்கள் என்று அவர்கள் கருதும் ஹிந்துக்களும் அவ்வாறே செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மேற்கத்தியவர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே தங்கிக் கொண்டு, தங்களது உள் நாட்டு விளை பொருள் வசதிகளையே முற்றிலும் நம்பி வாழ்ந்திருப்பார்களேயானால் அவர்கள் மிக மோசமான காட்டுமிராண்டிகளாகவே வாழ்ந்திருப்பார்கள்.

ஆகவேதான் அவர்கள் ஆக்கிரமிப்பு வெறி கொண்டு உலகெங்கும் ஓடிச் சென்றார்கள். பிறருடைய நிலங்களின் செழுமை வளத்தால் தம் ஊனை வளர்க்க வகை தேடினார்கள்.

ஆகவே ஆர்யர்கள் என்று அவர்களால் வர்ணிக்கப்பட்ட ஹிந்துக்களும் அதுபோலவே செய்திருக்கவேண்டும் என்று அவர்கள் முடிவு கட்டுகிறார்கள். இப்படி கூறுவதற்கெல்லாம் ஆதாரங்கள் எங்கே? கற்பனைக்கதையளக்கிறார்கள், அவர்களுக்கு எல்லாம் நான் ஒன்று சொல்லுவேன். “மேற்கத்தியப் பண்டிதர்களே உங்களுடைய விசித்திரக் கற்பனைக் கதைகளை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள்.

எந்த வேதத்தில் எந்த ஸூக்தத்தில் வெளிநாட்டிலிருந்து பாரதத்தினுள் ஆர்யர்கள் என்ற இனத்தவர் வந்ததாகக் கூறப்பட்டுள்ளது? காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்து வந்த பூர்விகக் குடிகளை அவர்கள் பூண்டறுத்தார்கள் என்று எந்த ஆதாரத்தில் சொல்கிறீர்கள்.

இது போன்ற மடமைப் பேச்சுக்கள் பேசுவதால் உங்களுக்கு என்ன லாபம்?”

ராமாயணமே ஆரியர்கள் திராவிடர்களை வெற்றிகொண்ட வரலாறு தான் என்று சில வக்கிரபுத்தி கொண்ட வரலாற்றாளர்கள் கூறுவதற்கு சுவாமிஜீ பதில் கூறியிருக்கிறார்.

“நீங்கள் ராமாயணம் படித்தது வீணாகி விட்டதே. அதிலிருந்து பெரிய அருமையான கட்டுக்கதையொன்றை எதற்காக உற்பத்தி செய்கிறீர்கள்?

அது சரி ராமாயணம் என்பது என்ன? தென்பாரதத்திலிருந்த காட்டுமிராண்டிப் பூர்விகக் குடிகளை ஆரியர்கள் என்போர் தோற்கடித்ததா?

ஸ்ரீ ராமர் பண்பாடுடைய மன்னராக, மனிதராகத்தான் சித்தரிக் கப்பட்டிருக்கிறார். உங்கள் கண்ணோட்டத்தில் அவர் ஓர் ஆரிய மன்னர். யாருடன் அவர் போரிடுகிறார்? இலங்கை மன்னனான ராவணனுடன்.

ராமாயணத்தைச் சற்றே படித்துப் பாருங்கள். ராவணன் ராமனைவிட உயர்ந்த நாகரீகம் வாய்ந்திருந்தானே யொழிய தாழ்ந்தவனாக இருக்க வில்லை. இலங்கையின் நாகரீகம் அயோத்தியைவிட ஒரு விதத்தில் உயர்ந்து இருந்ததே தவிர நிச்சயமாகத் தாழ்ந்திருக்கவில்லை .

ராமாயணத்தில் வரும் வானரர்களை நீங்கள் தென் பாரதத்தின் பூர்விகக் குடிமக்கள் என்று கருதினால் அவர்கள் எல்லாம் ஸ்ரீ ராமரின் நண்பர்களாக, ஸ்ரீ ராமரின் படைவீரர்களாக அன்றோ சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வாலியின் ராஜ்யத்தையோ ராவணனது ஸ்ரீ லங்கா ராஜ்யத் தையோ ஸ்ரீ ராமர் தமது அரசுடன் இனைத்துக் கொண்டாரா ? சொல்லுங்கள்….

இந்த ராமாயண விவகாரத்தில் விவேகானந்தரது அடிச்சுவட்டைப் பின்பற்றி சுவாமி சித்பவானந்தர் தமது ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் வெளியீடான ” தர்ம சக்கரத்தில் கூறியுள்ள சில விஷயங்களையும் இங்கு காண்போம்.

“ராமாயணம் போன்ற நூல்களில் ஆரியன் என்பவன் ஒரு அலாதியான இனத்தைச் சார்ந்தவன் என்று பொருள்படும் விளக்கம் எவ்விடத்திலும் இல்லை .

ஆரியன் என்னும் பதத்துக்குப் பொருள்-பண்பட்டவன் அல்லது மேன்மகன் என்பதாகிறது. கானகத்தில் தன் உயிரைக்கொடுத்து ஸீதையைக் காக்க முயன்ற ஜடாயுவை அவள் “ஆர்ய” என்று அழைக்கின்றாள். நான்

ஆரியன் என்னும் சொல் ஒரு இனத்தைக் குறிக்கிறதென்றால் ஜடாயு ராமாயணத்தின்படி ஆர்யன் ஆகிவிடுகிறான். ராவணன் ப்ராம்மணன். இக்கோட்பாட்டின் படி தென் இலங்கையிலிருந்த ராவணன் ஆரியன் ஆகின்றான்.

வடக்கே அயோத்தியில் இருந்த ப்ராம்மணன் அல்லாத க்ஷத்திரியனாக இருந்த தசரதராமன் இவர்களின் கொள்கையின்படி திராவிடன் என்று யூகிக்க இடமிருக்கின்றது.

ஆக ராமாயணம் தர்மம் அதர்மம் ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள போராட்டத்திற்கு விளக்கமாக அமைகிறதே ஒழிய இனப் போராட்டத்தை விளக்குவது அல்ல”.

ஐரோப்பியர்களை நோக்கி விவேகானந்தர் விடுக்கும் சவாலைப் பாருங்கள்.

“…ஐரோப்பியர்களே! உங்களை நான் ஒன்று கேட்கலாமா? எந்த ஒரு நாட்டையாவது நீங்கள் மேல் நிலைக்கு உயர்ந்தியிருக்கிறீர்களா? எங்காவது பலவீனமான இனத்தினரைக் கண்டால் அவர்களைப் பூண்டோடு வேரறுத்திருக்கிறீர்கள் . அவர்களது நிலங்களில் நீங்கள் குடியேறியிருக்கிறீர்கள். நிரந்தரமாக அவர்கள் தீர்ந்து போனார்கள்.

உங்களுடைய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஜீலாந்து, பசிபிக் தீவுகள், தென் ஆஃப்ரிக்கா ஆகிய நாடுகளின் வரலாறு என்ன? அங்கிருந்த ஆதிக் குடிமக்கள் இப்போழுது எங்கே? அவர்கள் வேரறுக்கப்பட்டு விட்டார்கள்.

காட்டு மிருகங்களைப்போல அவர்களைக் கருதி நீங்கள் அடியோடு கொலை செய்து விட்டீர்கள். எங்கே அவ்வாறு செய்ய உங்களுக்கு ஆற்றல் இல்லையோ அந்த நாடுகள் மட்டுமேதான், அந்த தேசந்தான் இன்றும் உயிருடன் இருக்கிறது. –

ஆனால் பாரதம் ஒரு போதும் அவ்வாறு செய்யவில்லை. ஆரியர்கள் என்று நீங்கள் வர்ணிக்கும் ஹிந்துக்களாகிய நாங்கள் அன்பும், தாராள மனப்பான்மையும் வாய்ந்திருந்தவர்கள். எங்கள் முன்னோர்களது உள்ளங்கள் கடலைப் போலப் பரந்தும் எல்லையில்லாமலும் இருந்தன.

அவர்களது மூளைகள் மனித வரம்புக்கு மீறி மேதா விலாசம் வாய்ந்திருந்தன. உலகத்தில் தோன்றி மறைகிற, வெளிப்பார்வைக்கு இன்பம் போலத் தோன்றுகிற ஆனால் உண்மையில் பார்த்தால் மிருகத்தனமான செயல்கள், அவர்களது உள்ளத்திலும் மூளையிலும் இடம் பெறவே இல்லை .

தாமே வாழ்வதற்காக மற்ற அனைவரையும் அழிப்பது ஐரோப்பிய மக்களின் குறிக்கோள் ஆகும். தம்முடைய தரத்திற்கு, இல்லை , தம்மையும் விட உயர்ந்த நிலைக்கு எல்லோரையும் உயர்த்துவது ஹிந்துக்களின் நோக்கம். ஐரோப்பிய நாகரீகத்தின் பாதை வாள் ஆகும். ஹிந்துக்களின் பாதை வாழ்வு ஆகும். பிறரை வாழவைப்பது ஆகும். மக்கள் சமூகத்தை உயர்த்த நாகரீக நிலைக்கு முன்னேற செய்யும் வர்ண விபாகம் ஆகும். ஒருவனது கல்விக்கும் பண்பாட்டுக்கும் தக்க அளவில் அவனை மேலும் மேலும் உயர்ந்து எழுந்து முன்னேற செய்கிறது இந்தப் பாகுபாட்டு அமைப்பு.

ஐரோப்பாவில் எங்கு பார்த்தாலும் பலமுள்ளவனுக்கு வெற்றி, பலவீனனுக்குச் சாவு என்பது நிலை. பாரத பூமியில் சமூகச் சட்டம் ஒவ்வொன்றும் பலவீனனின் பாதுகாப்புக்காக ஏற்பட்டதாகும்.

தென்னகத்து சூத்திரர்கள் எல்லோருமே பூர்வீக திராவிடர்கள் என்று அவர்களை ஆரியர்கள் அடிமைப்படுத்தியபின் சூத்திரர்கள் என்பதாக இழிவுபடுத்தப் பட்டார்கள் என்று ஒரு வாதம் ஐரோப்பிய அறிஞர்களால் பரப்பப்பட்டது.

ஒரு சில ஆரியர்கள் வந்து குடியேறி லக்ஷக்கணக்கான திராவிடர்களை அடிமைப்படுத்தி அடக்கியாண்டார்கள் என்பது அந்தக் காலத்தில் நடக்கக்கூடிய ஒன்றா? அப்படி அடக்கி ஆண்டிருந்தால் அந்த அடிமைகள் அவர்களை ஐந்தே நிமிடங்களில் சட்னி செய்து சாப்பிட்டிருப்பார்கள்.

விவேகானந்தருக்கு பல ஆண்டுகள் முன்னதாகவே சுவாமி தயானந்த ஸரஸ்வதி ஆர்ய திராவிட இனவாதத்தை வேரறுக்கும் விதத்தில் வேத மந்த்ரங்களின் உண்மைப் பொருளை எடுத்துரைத்திருக்கிறார்.

விவேகானந்தருக்குப் பின்னாலும் அரவிந்தர் தமது The secret of Veda என்ற நூலில் மிகவும் ஆணித்தரமாக ஆர்ய திராவிட இனவாதத்தை மறுத்திருக்கிறார்.

பின்னாளில் ஹிந்து மதத்தை முற்றிலுமாக வெறுத்து புத்தமதத்தை தழுவிய பி.ஆர்.அம்பேத்கர் அவர்களும் கடந்த கால நூல்களை எல்லாம் நேரடியாக படித்து ஆர்ய – திராவிட இனவாதம் பேசுவோருக்கு சம்மட்டி அடி தந்திருக்கிறார்.

அவரது கருத்துக்களைக் காண்போமா?

1. வேதங்களில் ஆர்ய இனம் என்பதாக ஒன்று எங்குமே குறிக்கப்படவேயில்லை .

2. ஆர்ய இனத்தினர் பாரதத்தின் மீது படையெடுத்து வந்தார்கள் என்பதற்கோ, அவர்கள் பாரத நாட்டில் பூர்வீகக் குடிமக்களாக வாழ்ந்து வந்த தாஸர்கள், தஸ்யுக்கள் ஆகியோரை வென்றதற்கோ எவ்வித அகச்சான்றும் வேதங்களில் இல்லை.

3. தாஸர்கள், தஸ்யுக்கள் என்பதாக வேதங்களில் குறிப்பிடப்படுவோர் இனத்தால் வேறுபட்டவர்கள் என்பதற்கான அகச்சான்றுகளும் வேதங்களில் இல்லை.

4.ஆர்யர்கள் தஸ்யுக்களின் தோலின் நிறத்தினில் வேறுபட்டிருந்தார்கள் என்பதற்கும் வேதங்களில் சான்றுகள் இல்லை .

5.ப்ராம்மணர்களும், தீண்டத்தகாதார் எனப்படுவோரும் ஒரே இனத்தவரே. ப்ராம்மணர்கள் ஆர்யர்கள் என்றால் தீண்டத்தகாதோர் எனப்படுவோரும் ஆர்யர்களே. ப்ராம்மணர்கள் திராவிடர்கள் எனறால தீண்டத்தகாதோரும் திராவிடாகளே

(அம்பேத்கரின் உரைகளும் கட்டுரைகளும். தொகுதி -7 பக்கம் 85 மற்றும் 302-303)

எழுமின் விழுமின்

முதற் பதிப்பின் நூன்முகம்

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் விவேகானந்தரவர்கள் பிறந்த அந்தத் திருநாளைக் கொண்டாட இப்பொழுது நாடு நெடுகிலும் பரந்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆகவே மகாபுருஷரான சுவாமிகளுடைய வாழ்க்கையையும், உபதேசங்களையும் மீண்டும் ஆராய்ந்து அறிவதில் ஒரு புது ஆர்வம் இயற்கையாகவே ஏற்பட்டிருக்கிறது. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் தலையாய சீடராக விளங்கிய சுவாமிகள், கடந்த ஒரு சில நூற்றாண்டுக் காலத்தில், வெளிநாடுகளுக்குச் சென்று உலகுக்கு உலக சமயத்தின், சனாதன தர்மத்தின் செய்தியை மீண்டும் ஒருமுறை தெளிவாக விளக்கிக் கூறிய முதல் ஹிந்துப் பிரசாரகராவார். அவர் மாபெரும் தேச பக்தர்; சீர்திருத்தவாதி; ஒன்று திரட்டும் அமைப்பாளர் என்பதுடன் தேசீய மறுமலர்ச்சிக்கான சக்திகளை முதன் முதலில் முடுக்கி விட்டு, பிரிட்டிஷ் ஆட்சியின் முதல் தாக்குதலால் சிதறுண்டு நெறி குலைந்திருந்த நாட்டைப் புனர் நிர்மாணப் பாதையில் அமைத்து வைத்தவரும் ஆவார். ‘சமயம்தான் பாரதத்தின் ஆத்மா; அதை மையப்புள்ளியாக வைத்தால்தான் நமது ராஷ்டிரத்தைப் பயனுள்ள முறையில், சக்தி வாய்ந்த ரீதியில் புனர்நிர்மாணித்து அமைக்க முடியும்’ என்பதை நாட்டுக்கு உணர்த்தி மறுமலர்ச்சியுறப் பாரதத்துக்கு அஸ்திவாரம் அமைத்தவர் விவேகானந்தரே.

இந்த மாவீரருக்கு அஞ்சலி செலுத்த மக்கள் ஆயத்தமாகி, விழாக் கமிட்டிகள் வேலை செய்யத் துவங்கப்போகும் வேளையில் நாடு திடீரெனத் தாக்கி உலுக்கப்பட்டு எழுந்தது. ஈவிரக்கமற்ற, நம்பிக்கைத் துரோகம் இழைக்கும் ஒரு வெறிக் கும்பல் வடக்கே நுழைந்ததால் நம் நாடு தனது எல்லாச் சக்திகளையும் அவசரமாகத் திரட்டிக் குவித்து, அவ்வெதிர்ப்பைச் சமாளிக்க நேரிட்டுள்ளது. எதிரிநயவஞ்சகமாகப் போருக்கும் எதிர்ப்புக்கும் ஏற்பாடு செய்து வந்துள்ளான்; நட்புப்பேச்சு, உடன்பாடு காண்பது என்ற போர்வையில் நமது பகுதிகளுக்குள் நுழைந்து விட்டான். – இது ஒரு புறம். மறு புறத்தில் நமது சொந்த ஆட்சியாளர்கள் கனவுலகத்தில், கற்பனை யுலகில் சஞ்சரிக்கிற போக்கில் ஆழ்ந்திருக்கிறார்கள். இதன் காரணமாக இமயமலையைக் கடந்து முழுச் சக்தியுடன் பகிரங்கமாக எதிரி தாக்கிய பொழுது நாடு முற்றிலும் இதனை எதிர்பாராத நிலையில் இருந்ததால் திகைத்து விட்டது.

நமது ராஷ்டிரம் இப்படியிருக்கும் நிலையில் சுவாமி விவேகானந்தரின் உபதேசச் செய்திக்கு ஒரு புது மகத்துவம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அவர் அளித்த உபதேசச் செய்தியானது சக்தியை ஆதாரமாகக் கொண்டது. உடல் வலிமை, உள்ள வலிமை, மனத்திண்மை ஆகியவற்றை அது வலியுறுத்துவதாகும். இவ்வாறு எல்லாம் அம்சங்களிலும் நம் நாடு வலிமைபெற்று விளங்குவது இந்த வேளையில் மிக முக்கியமான தேவை. சுவாமி விவேகானந்தர் தம் நாட்டினருக்கு ‘இரும்பாலான தசையும், எஃகினாலான நரம்பும், அதனுள்ளே இடியை உருவாக்குகிற அதே பொருளால் உண்டாக்கப்பட்ட உள்ளமும் உறைந்திருக்க வேண்டும்’ என்று விழைந்தார். ‘தமது நாட்டினர், சக்தியும் ஆண்மையும், க்ஷத்திரிய வீரியமும் அத்துடன் பிரம்ம தேஜஸும் வாய்க்கப்பெற்றிருக்க வேண்டும்; அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்’ என்று அவர் விரும்பினார். அபாயமும் நெருக்கடியும் கலந்த இன்றைய நிலையில் குறிப்பாகத் தேவைப்படுகிற குணங்கள் இவைகளே. சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுகபோகமே பெரிதென்ற வாதங்களாலும், வாழ்வு பற்றிய உலகாயத நோக்காலும் நாம் கவரப்பட்டு, மேலே சொல்லப்பட்ட உத்தமகுணங்களை உதாசீனம் செய்து விட்டோம்.

சுவாமிகளின் உபதேச மொழிகளை நாம் சுருங்கக் கூறின் அவர் நமக்கு ஒரு மகா மந்திரத்தை உபதேசம் செய்ததாகக் குறிப்பிடலாம். அதுதான் தெய்வ நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் தேவை என்பது. தன்னம்பிக்கையானது உபநிடதப் பேருண்மையை அடிப்படையாகக் கொண்டது. “நான் ஆத்மா; என்னை வாள் வெட்டாது; ஆயுதங்கள் துளைக்காது; நெருப்பு எரிக்காது; காற்று உலர்த்தாது; நான் சர்வ சக்திமான்; எல்லா முணர்ந்தவன்” என்று உபநிடதம் முழங்குகிறது. இந்த மந்திரத்தைத்தான் சுவாமி விவேகானந்தர் சதாசர்வ காலமும் தமது நாட்டினருக்கு ஆணியடித்தாற் போலப் புகட்டினார். அவர் பேசியவற்றிலெல்லாம் அவரது அருள்மொழியிலெல்லாம் இந்த மந்திரமே முழங்கிற்று. இதுவே அவரது உபதேச கீதத்தின் பல்லவியாக இருந்தது. இவ்வுண்மையின் உட்பொருளை நாம் புரிந்துகொண்டு அதற்குத் தக வாழ்வதற்கான தக்க தருணம் இதுவே. அவ்வாறு நாம் செய்தால் உலகிலுள்ள எந்தச் சக்தியும் நமக்குத் தீங்கிழைக்க முடியாது.

அன்றியும் ‘மோட்சத்தை எய்த விழையும்போது நமது தர்மத்தை நாம் நிறைவேற்றவேண்டும்’ என்று அவர் மேலும் கூறு கிறார். உண்மையில் பார்க்கப்போனால் தர்மமில்லாமல் மோட்சமில்லை. நமது சமயமானது வலிமை குலைந்து தாழ்வுறும் கட்டத்தில், இந்த உண்மையை மீண்டும் வலியுறுத்த வேண்டிய தேவையிருந்தது. கிருகஸ்தனின் வாழ்க்கையை அவர் திருத்தியமைத்து அதற்கு ஒரு புதிய கௌரவத்தை அளிக்கிறார். “வீரர்களால் மட்டுமே உலகில் இன்பம் அனுபவிக்க முடியும்” என்று சாஸ்திரங்கள் முழங்குவதை அவர் நினைவு படுத்தி “வீரம் காட்டுக” எனத் தூண்டி விடுகிறார். நாம் வாழ்கிற காலத்திலுள்ள தர்மநெறி நிலையை நாம் ஒப்புக்கொண்டு அதற்குட்பட்டு வேலை செய்யவும் வாழவும் வேண்டுமென்று சாஸ்திரம் விதிப்பதை அவர் நினைவிற் கொள்ளச் சொல்லுகிறார். “நாம் இருக்கிற சந்தர்ப்பச் சூழ்நிலையை இருக்கிறபடியே ஒப்புக்கொண்டால்தான் நாம் அவற்றைச் செம்மைப் படுத்தி உயர்த்த முடியும். ஆதலால் சாஸ்திரத்தின் கட்டளையை மறக்கக் கூடாது” என சுவாமி விவேகானந்தர் அறிவுறுத்துகிறார். “சந்தர்ப்பத்துக்குத்தக்க சாம, தான, பேத, தண்டம் எனும் நால்வகை அரசியல் உபாயங்களைக் கைக்கொண்டு உனது எதிரிகளை வென்று உலகில் இன்பம் அனுபவி. அப்படிச் செய்தால்தான் நீ தர்ம நெறிப்படி, நடப்பவனாவாய். இல்லையேல், உனக்கு ஏற்படும் அவமானங்களைச் சகித்துக் கொண்டு, உன்னை உதைக்கவும், மதிக்கவும், நினைக்கிறவன் தருகிற உதை மிதிகளை ஏற்று நீ வாழ்வாயானால் உனது வாழ்க்கை இவ்வுலகில் நரகத்தை யொத்ததாக ஆவதுடன் மறு உலக வாழ்வும் அவ்வாறே ஆகிவிடும். மானங்கெட்ட வாழ்வு வாழ்வாய், என்று சாஸ்திரம் விதிக்கிறது” என்கிறார்.

இன்று நாடானது தனது சுதந்திரத்தையும், தனது வருங்காலத்தையும், தனது தர்மத்தையும் பாதுகாப்பதற்காக ஆயுதந்தரிக்க வேண்டிய நெருக்கடியான சரித்திரக் கட்டத்தில் வாழ்கிறது. இந்த வேளையில் நமது நரம்புகளில் முறுக்கேற்றவும், நமது உறுதிக்கு வலிவூட்டவும் இந்த உபதேசம் மிக அரியதாகும்; உறுதுணை புரிவதாகும்.” பாரதத்தில் தேசிய ஒற்றுமையென்பது சிதறிக்கிடக்கும் அதன் ஆத்மீக சக்திகளை ஒன்று குவிப்பதாகும்” என்று அவர் அடிக்கடி உபதேசித்தார். “ஒரே ஆத்மீக ராகத்துக்கிசையத் தாளமிடுகிற உள்ளங்களை இணைப்பதே பாரதத்தில் ராஷ்டிர ஒற்றுமையை அமைப்பது ஆகும்” என்று அவர் கருதினார். குறிப்பாக இன்றையகாலத்தில், எல்லாவித ஒற்றுமைகளும் தேவையாக உள்ள இவ்வேளையில், நாட்டின் சக்திகளையெல்லாம் துரிதமாக ஒன்று குவிக்க வேண்டிய இந்தச் சந்தர்ப்பத்தில், அவரது இவ்வுபதேசத்தை நாம் மிகக் கவனமாகக் கருத்திற் கொள்ளவேண்டும்.

ஹிந்து ராஷ்டிரத்துக்கு சுவாமிகள் அருளுகிற மற்றொரு உபதேசமும் உண்டு. தமோ குணத்தை நாம் கைவிட வேண்டுமென அவர் கூறு கிறார். ஏனெனில் தமோ குணமானது பலவீனத்தையும், மூடநம்பிக்கையையும், அற்பத்தனத்தையும், சிறு விஷயங்களுக்கான பரஸ்பரச் சண்டை பூசல்களையும் உண்டாக்குகிறது. “இந்த இழிகுணங்களைக் கைவிட்டுவிட்டு ஒற்றுமை, சங்கம் சேர்த்தல் ஆகிய பாறை போன்ற அடிப்படைகளின் மீது மகாசக்தியை நாம் நிர்மாணிக்க வேண்டும். இவ்வாறு தனித்தனியான நமது விருப்பங்களை ஒன்றுகூட்டி இணைத்து, நமது பழங்காலத்தையும் மிஞ்சக்கூடிய சிறப்புயர்வு வாய்ந்த வருங்காலத்தை நாம் நிர்மாணிக்க வேண்டும்”. சுவாமிகளின் இந்தச் செய்தி இன்றைய காலத்துக்குத் தேவையானதாகும். ஏனெனில் நம்மை இன்று சூழ்ந்துள்ள அபாயத்தைப் போல ஓர் அபாய நிலை நேரும் போது தான் ஒவ்வொரு நாடும் தனது பலாபலங்களைக் கணக்கெடுத்து ஆத்மசோதனை செய்து பார்த்துக் கொள்ளும்.
இன்றைக் காலத்தின் இத்தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே இந்நூலை வெளியிட முயன்றோம்.

சுவாமிகளின் கட்டுரைகளும், அருளுரைகளும், தத்துவம், சமயம், சமூக இயல் ஆகிய விஷயங்களைப்பற்றி மட்டுமின்றி கலை, சிற்பம், சங்கீதம் முதலிய விதவிதமான விஷயங்களைத் தாங்கியவை ஆகும். இங்ஙனம் உலகியல் துறை, ஆத்மீகத்துறை ஆகிய இவ்விரு துறைகளையும் சார்ந்து அவை உள்ளன. ஆனால் நமது பழங்காலச் சிறப்பை உணர்த்துகிற சில பகுதிகளையும், நமது இன்றையத் தாழ்நிலையின் காரணங்களையும் ஆராய்ந்து நம்மை சிறப்பான வருங்காலத்தை நோக்கி உந்தித் தள்ளி, அதற்காக நம்மை ஆயத்தப்படுத்துகிற பகுதிகளையும் மட்டுமே தேர்ந்தெடுத்திருக் கிறோம். அதுவே நமது திட்டவட்டமான சிறிய உத்தேசமாகும். இப்படிப் பொறுக்கியெடுக்கப்பட்ட பகுதிகள், கோவையான முழு வடிவம் பெறுகிற வகையில், ஒழுங்குற அமைக்கப் பட்டுள்ளன. எந்தெந்தப் பகுதிகள் பொதுவான கருத்தை வெளியிடுகின்றனவோ, மூலக் கட்டுரையின் அமைப்பிலிருந்து எடுப்பதால் அர்த்தம் கெட்டுப் போகாதோ, அப்படிப்பட்ட பகுதிகளையே தேர்ந்தெடுத்துள்ளோம்.

இந்த வெளியீடு ஒரு தொகுப்பாக மட்டுமே இருக்கவேண்டுமென்பது நம் உத்தேசம். சுவாமிகளின் உபதேசச் செய்தியை எவ்வித விளக்கமோ கருத்துரையோ இன்றி அவரது சொந்தச் சொற்களாலேயே தொகுத்துப் புத்தகமாக சமர்ப்பிக்க வேண்டுமென்பது நம் கருத்து. ஆகையால், புத்தகம் முழுவதுமே சுவாமிகளின் சொந்தச் சொற்களாலேயே உருவாகியுள்ளது. தலைப்புகள், துணைத்தலைப்புகள் கொடுத்தது, விஷயங்களை ஒரு வடிவத்தில் தொகுத்து இணைத்தது, இவைமட்டுந்தான் தொகுப்பாளரின் வேலை. சில இடங்களில் தெளிவு ஏற்படுத்துவதற்காக உரிச் சொல்லுக்குப் பதிலாகப் பெயர்ச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நூலுக்கான விஷயங்கள் அத்வைத ஆசிரமத்தார் வெளியிட்ட “சுவாமி விவேகானந்தரது கருத்துக்களின் முழுத்தொகுப்பு”, (Complete works of Swami Vivekananda) “கீழை நாட்டு மேலை நாட்டுச் சீடர்கள் தயாரித்த சுவாமி விவேகானந்த சரித்திரம்”, சுவாமிகளின் வாழ்நாளிலே துவக்கப்பட்ட பத்திரிகைகளான “பிரபுத்த பாரத”, “பிரம்ம வாதின்”,”உத்போதன்” ஆகியவற்றிலிருந்தும் மற்ற சமகாலப் பத்திரிகைகளிலிருந்தும் சேகரிக்கப்பட்டன.

ஆகையால், தனித்தனியான ஒவ்வொரு பகுதியும் மேற்கோள் குறி (Quotation Mark) யின்றி ஏன் உள்ளது என்பதன் காரணம் வாசகர்களுக்குத் தெளிவாகத் தெரியும். ஏனெனில் ஒரு விதத்தில் இந்த நூல் முழுவதுமே மேற்கோள் குறிக்குட்பட்டுத்தான் அமைந்துள்ளது.

இந்தப் புத்தகம் நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாகத்திலும் உள்ள விஷயத்தைக் குறிக்கிற தனித்தலைப்பு ஒவ்வொரு பகுதிக்கும் தரப்படுள்ளது. அவையாவன: (1) உபதேச மொழி (2) பிரசங்கங்கள், உரைகள், கட்டுரைகள் ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த சில பகுதிகள் (3) சில கண்ணோட்டங்களும் கண்டனங்களும் (4) ஆண்மை ஊட்டுதல் அல்லது ஊழியர்களை உருவாக்குதல்.

(1) உபதேச மொழி

நமது ராஷ்டிரத்தின் நிலையைப்பற்றி சுவாமிகள் கொண்டிருந்த கருத்துக்களை முக்கியமானதாகக் கொண்ட இப்பகுதி, அவர் வெளியிட்ட கருத்துக்களைக் கொண்ட ஒரு ஆராய்ச்சிப் பகுதியாகும். முன் குறிப்பிட்டுள்ளது போல் இந்தப் பகுதியானது எண்ணிறந்த அவரது கருத்துரைகள், பேச்சுக்கள், கடிதங்கள், கட்டுரைகள் இவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். பலவிடங்களிலிருந்து தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்டதானாலும் கூட, வண்ணக் கற்களால் அமைந்த சித்திரம் போல, அவை பொருந்த இணைக்கப்பட்டுச் சுவாமிகளின் சிந்தனை தங்கு தடையற்ற ஒட்டத்துடன் செல்லுகின்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

(2) பிரசங்கங்கள், உரைகள், கட்டுரைகள் ஆகிய வற்றிலிருந்து தேர்ந்தெடுத்த சில பகுதிகள்

இந்த பாகத்தில் தொகுக்கப்பட்டுள்ளவை, சில முக்கியமான விஷயங்களைப் பற்றிச் சுவாமிகள் கொண்டிருந்த கருத்தை வாசகர்களுக்கு உணர்த்தும் நோக்கத்துடன் தரப்பட்டுள்ளன. “உபதேசமொழி”ப் பகுதியுடன் தொடர்புடைய இக்கருத்துக்களை முதல் பாகத்தில் பொருத்தி வைக்க முடியவில்லை. அல்லது அங்கு மேற்போக்காக அவை கூறப்பட்டிருக்கும்.

(3) சில கண்ணோட்டங்களும் கண்டனங்களும்

இந்தப் பகுதியிலுள்ளவை வாசகர்களுக்குச் சுவாமிகளின் இதயத் துடிப்பையும், அவரது மனம் வேலை செய்த முறையையும் தெளிவாகச் சித்தரித்துக் காட்டுவதற்காகத் தொகுப்பட்டவையாகும். சுவாமிகள் விஷயங்களை அமைதியாகவும், திட்டமிட்ட ரீதியிலும் அணுகி ஆய்ந்தார். ஆனால் அதற்குப் பின்னணியாக மகத்தான ஆவேசமும், உணர்ச்சியும் அவரை ஆட்டுவித்தன. இந்தப் பகுதி, வாசகர்களுக்கு அதன் தெளிவான காட்சியைக் காட்டும்.

(4) ஆண்மை ஊட்டுதல் அல்லது ஊழியர்களை உருவாக்குதல்

சுவாமிகள் தமது கட்டுரைகளிலும் கடிதங்களிலும் தேச நிர்மாணப் பணியில் பங்கு கொள்ள விருப்பமுள்ள ஊழியர்கள் அல்லது “காரியகர்த்தர்கள்” என்பவர்களுக்குத் தேவையான ஒரு குறிப்பிட்ட மன அமைப்பைப்பற்றியும், மனத்துக்கும் அறிவுக்கும் தேவையான சில குணங்களைப் பற்றியும் குறிப்பிட்டார்.

உயர்ந்த படிப்பினையாக அமைந்த அந்தச் சொற்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன. (1) ஒற்றுமை இயக்க அமைப்பு (2) தலைமை தாங்கும் குணம் (3) உண்மையான ஆசிரியருக்கான பண்புகள் (4) வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியம் அல்லது பணி புரிகிற கலையும் அதன் விஞ்ஞான ரீதியான முறையும் என்பன அத்தலைப்புகள். சுவாமிகளின் உபதேசச் செய்திகளை நடைமுறையில் கொண்டு வரும் பகுதியாக அவ்விஷயங்கள் அமைந்திருப்பதால் அவை இந்நூலில் இணைக்கப் பட்டிருக்கின்றன.

புத்தகம் தொகுப்பதற்காகக்குறிப்பாகச் சில தலைப்புகளை மட்டுமே தேர்ந்தெடுத்ததால் விஷயம் குறைவாக இருப்பினும் ஒவ்வொரு தலைப்பின் கீழும் ஏராளமான அரிய கருத்துக்கள் கிடைத்தன. கிடைத்த எல்லா விஷயங்களையும் சேர்த்துவிட வேண்டுமென்ற ஆசையை எதிர்த்து, தொகுப்பாளர் மல்லுக்கு நிற்க வேண்டியிருந்தது. ஏனெனில் கிடைத்துள்ள எல்லா அரிய விஷயங்களையும் தொகுத்து வெளியிடுவதாயின் புத்தகத்தின் விலை வாசகர் பலர் வாங்க முடியாதபடி அதிகமாய் இருக்கும். ஆனால் தொகுப்பாளரும் வெளியிடுவோரும் புத்தகம் கூடிய மட்டில் குறைந்த விலையுடனிருக்க வேண்டுமென விரும்பினர். அப்போதுதான் அதிகமான மக்கள் சுவாமிகளின் சிந்தனையாலும் கருத்துரையாலும் பயனடைய முடியும் என்பது எண்ணம். மேலும் இந்தப் புத்தகம், சுவாமிகளின் உபதேசங்களை முழு அளவில் படிக்க வேண்டுமென்ற விருப்பத்தைத் தூண்டுமென எதிர்பார்க்கிறோம். வாசகர்களில் பலர் அத்வைத ஆசிரமத்தார் வெளியிட்டுள்ள “சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களின் முழுத் தொகுப்பு” நூல்களைப் படிக்க இயல்பாகவே விரும்புவார்களென எதிர்பார்க்கிறேன்.

-ஏக்நாத் ரானடே.

பாரதியாரும் விவேகானந்தரும்!

சுவாமி விவேகானந்தரின் கருத்துகளையே பாரதியார் கவிதை வடிவில் பல இடங்களில் கூறினார் என்றால் அது மிகையல்ல. சகோதரி நிவேதிதை மூலமாக பாரதியாருக்கு சுவாமிஜியின் தாக்கம் ஏற்பட்டது. பாரதியே கூறுகிறார்:

……….சுவாமி விவேகானந்தர் ஓர் ஆன்மிகவாதியாகவே, தம் வாழ்நாளைக் கழித்த போதிலும், தேசபக்தி எழுச்சிக்கு அவர் ஒரு பெரிய மூலாதாரமாக நின்றார். அவர் காலம் சென்ற பிறகும், அவரது சீடர்களுள் பலர் தேசபக்தி எழுச்சிக்காகப் பேருதவி செய்து வருகிறார்கள். அவ்வாறு விளங்கும் சிஷ்ய ரத்தினங்களில் சிறப்பானவர் சகோதரி நிவேதிதை ஆவார்.

விபீஷணன், சத்குணமூர்த்தியான ராமசந்திரமூர்த்திக்குப் பெரும் துணையாக நிற்கவில்லையா? அதுபோல் இந்த மாதரசி வெள்ளைக்காரக் குலத்தில் தோன்றிய போதிலும், விவேகானந்தருக்குத் துணையாக நின்றார்.

கொல்கத்தாவில் டம் டம் என்ற இடத்தில் 1906ஆம் ஆண்டில் நிவேதிதையை பாரதியார் முதன் முதலில் சந்தித்தார். அப்போது உங்களுக்கு மணமாகிவிட்டதா? என நிவேதிதை கேட்டார்.

எனக்குத் திருமணமாகி ஒரு பெண் உள்ளாள் என்றார் பாரதி. அதற்கு நிவேதிதை, பின் ஏன் உங்கள் மனைவியை இங்கு அழைத்து வரவில்லை? என்று கேட்டார்.

எங்கள் சமூகத்தில் மனைவியைப் பொது இடத்திற்கு அழைத்துச் செல்லும் வழக்கம் இல்லை என்றார் பாரதி. அதைக்கேட்டதும், சமூகத்தில் ஒரு பாதி அடிமைப்பட்டுக் கிடக்கும்போது மறுபாதி எப்படி விடுதலை பெற முடியும்? உங்களது மனைவிக்கே உங்களால் சுதந்திரம் தர முடியவில்லை; நாட்டிற்கு எப்படி நீங்கள் சுதந்திரம் பெற்றுத் தர முடியும்? இனியும் நீங்கள் அவள் தனி என நினைக்காது, உங்களிடமிருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதியாக நினைத்து, அவளைத் தேவியாகப் போற்றுங்கள்.

பெண்களை இருட்டில் தள்ளிவிட்டு, அவர்கள் அறியாமல் நீங்கள் மேலான நிலைக்கு வந்துவிட முயலுவது வீண் என்றார் நிவேதிதை.

சமுதாயம் என்பது ஒரு பறவையைப் போல! அதற்கு இரண்டு இறக்கைகள்! ஒன்று ஆண், அடுத்தது பெண். ஓர் இறக்கையால் மட்டும் பறவை பறக்காது என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தைத்தான் சகோதரி நிவேதிதை பாரதிக்குச் சொன்னார். இதை பாரதி இவ்வாறு பாடுகிறார்.

பெண்ணுக்கு விடுதலை என்று இங்கோர் நீதி
பிறப்பித்தேன், அதற்குரிய பெற்றி கேளீர்!
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வம் என்றால்
மனையாளும் தெய்வம் அன்றோ! மதி கெட்டீரே!
விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்
விடுதலை என்பீர், கருணை வெள்ளம் என்பீர்
பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லை என்றால்
பின் இந்த உலகிலே வாழ்க்கை இல்லை

பாரதியார் தமது ஸ்வதேச கீதங்கள் நூலை நிவேதிதைக்கே சமர்ப்பித்தார். அதில் அவர் எழுதினார்; எனக்கு ஒரு விநாடியில் மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவின் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்மபுத்திரியும் ஆகிய ஸ்ரீமத் நிவேதிதா தேவிக்கு இந்த நூலைச் சமர்ப்பிக்கிறேன்.

விவேகானந்தரை, பகவான் விவேகானந்தர் என்று பாரதி மட்டுமே கூறினார். சகோதரி நிவேதிதையின் சந்திப்பு, பாரதியின் வாழ்வில் ஒரு மாபெரும் திருப்புமுனை விவேகானந்தர் மற்றும் அவரது கொள்கைகள் தமிழ்நாட்டில் பரவுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

பன்மொழிப் புலமை: பாரதிக்கும் விவேகானந்தருக்கும் உள்ள ஒற்றுமைகள் பல. இருவருமே மிகப் பெரிய அறிஞர்கள். பல மொழிகள் தெரிந்தவர்கள். விவேகானந்தர் ஆங்கிலத்தில் உரையாற்றிய போது, ஸ்பீக் இங்கிலீஷ் லைக் ஏ வெப்ஸ்டர் என்றும் வால்கிங் என்சைக்லோபீடியா என்றும் அமெரிக்கப் பத்திரிகைகள் கூறின.

பிரான்ஸ் நாட்டில் ஒரு கருத்தரங்கில் பிரெஞ்சு மொழியிலேயே உரையாற்றினார் சுவாமிஜி. சம்ஸ்கிருதத்திலும் புலமை மிக்கவர் அவர்.

பாரதியாருக்கும் பல மொழிகள் தெரியும். தெலுங்கிலும் மலையாளத்திலும் அவர் உரையாற்றினார். வங்கமொழியிலிருந்து தாகூரின் ஏழு கதைகளை மொழிபெயர்த்தார். சம்ஸ்கிருதத்தில் மூன்று கவிததைகள் எழுதினார். உருதும் பேசுவார். ஆங்கிலத்தில் நிறைய எழுதினார். ஜெர்மன், பிரெஞ்சு, அல்ஜீரியன், அரேபிய மொழிகளிலும் பரிச்சயம் மிக்கவர் அவர்.

SWAMIJI, BARATHI



ஆங்கில வழிக்கல்வி மறுப்பு: இன்று எல்லோரும் ஆங்கில வழிக் கல்வியை நாடி ஓடுகிறார்கள் தமிழ்மொழியைப் படிப்பதில்லை. இந்தியர்களின் வரலாற்றைப் பற்றி அறிவதில்லை. அவ்வாறு அறியாவிட்டால் நாம் எவ்வாறு நம் மூதாதையர்களின் பெருமையை அறிந்துகொள்ள முடியும்?

பாஸ்கராச்சாரியார் நட்சத்திரங்களை அளந்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சூரியனும் சந்திரனும் எவ்வளவு தூரத்தில் உள்ளன என்று கூறினார். அவரைப் பற்றி நம் பாடத்தில் உள்ளதா? மிலேச்சர்களைத் துரத்தியடித்த சிவாஜியின் வீர வரலாறு கற்றுத் தரப்படவில்லையே! நமது கலாச்சாரம் பற்றி நமக்கு யாரும் கற்றுத் தருவதில்லை என்று பாரதியார் அந்தக் காலத்திலேயே அங்கலாய்க்கிறார்.

கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்
காளிதாசன் கவிதை புனைந்ததும்
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்து அளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்…
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து
ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்

மேலும் பாரதியார் தமது ஆங்கிலப் படிப்பு பற்றிக் கூறினார்: செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது; தீது எனக்குப் பல்லாயிரம் சேர்ந்தன. 100 வருடத்திற்கு முன்பே தந்தை ஆயிரம் ரூபாய் கட்டணம் கட்ட வேண்டியிருந்தது. நமது பண்பாடு இக்கல்வியில் கற்றுத் தரப்படாததால் தீது பல்லாயிரம் சேர்ந்தது என்கிறார் பாரதி. சுவாமிஜி இதைத்தான், இன்றைய பள்ளிகளில் நம் பிள்ளைகளுக்கு என்ன கற்றுத் தருகிறார்கள்?

முதலாவது, உன் பாட்டனார் ஒரு பைத்தியக்காரன். அடுத்து, உன் ஆசிரியர்கள் எல்லாம் நயவஞ்சகர்கள், பிறகு, உங்களது சாஸ்திரங்கள் எல்லாம் பொய்க் குவியல்கள், இத்தகைய எதிர்மறைக்கல்வி, சாவைவிட மோசமானது என்றார்.

குடும்பப் பின்னணியும் பிரார்த்தனையும்: பிறரது துன்பங்களை ஏற்றுக் கொள்வதற்காக நான் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும் என்றார் சுவாமிஜி. எதற்காக? உலகில் இருக்கக்கூடிய ஒரே ஒரு கடவுளை வணங்குவதற்காக அக்கடவுள் யார்? உலகிலுள்ள எல்லா ஆன்மாக்களும் சேர்ந்த ஒட்டுமொத்தமான மனதகுலமே அக்கடவுள்.

துன்பப்படுபவர்களின், ஏழைகளின் துன்பங்களை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லா ஜாதியின், எல்லா மதத்தின், எல்லா நாட்டின் துன்பங்களையும் நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என சுவாமிஜி கூறுகிறார். சுவாமிஜி எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறார். உணவிற்குக்கூட வழியின்றித் தவித்தார். தான் மிகவும் கஷ்டப்படுவதாக ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சொன்னார்.

ஸ்ரீராமகிருஷ்ணர் விவேகானந்தரை, தேவியிடம் போய் வேண்டும் என்றார். சுவாமிஜியும் காளிதேவியிடம் போய் நின்றார். ஆனால் பொருள் கொடு, பணம் கொடு என ஒன்றும் கேட்கவில்லை. விவேக, வைராக்கியத்தைக் கொடு, ஞானமும் பக்தியும் கொடு என வேண்டிவிட்டு வந்தார்.

ஸ்ரீராமகிருஷ்ணர் வந்தபோது, அட, பொருளையும் பணத்தையும் கேட்க மறந்துவிட்டாயா? லோகமாதாவிடம் மீண்டும் போய் கேள் என்றார். இரண்டாம், மூன்றாம் முறையும் பக்தியையும் ஞானத்தையுமே கேட்டார் சுவாமிஜி.

பாரதியார் வீட்டிலும் பட்டினி. என்றைக்கோ ஒரு நாள் அரிசி கிடைத்தது. அதைக் கொண்டு போய் குருவிகளுக்குப் போட்டுவிட்டு, காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடினார் அவர்.

விவேகானந்தரைப் போலவே பாரதியாரும் இறைவனிடம் என்ன கேட்கிறார் தெரியுமா?
பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்.
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
மண் மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலகுங்கள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞான ஆகாசத்து நடுவே நின்று நான்
பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பதும் இடிமையும் நோவும்
சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம்
இன்புற்று வாழ்க, என்பேன்! இதை நீ
திருச்செவிகொண்டு திருஉளம் இரங்கி
அங்ஙனமே ஆகுக என்பாய்! என வேண்டினார்.

புற்பூண்டு, பூச்சிகள், விலங்குகள், பறவைகள், மக்கள் யாவரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காக இறைவனை வேண்டினார் பாரதி.

இருவரும் அறியாதது…………… அச்சம்!

புதிய ஆத்திசூடியில் பாரதியார் எடுத்ததும் அச்சம் தவிர் என்றார், விவேகானந்தரும் அபீ: அபீ: பயமே எல்லாத் துன்பங்களுக்கும் மூலகாரணம் என்றார்.

அபயம் (அச்சமிம்மை), அஹிம்சை, அசங்கம் (பற்றின்மை), ஆனந்தம், இந்த நான்கே எல்லா இந்து மத சாஸ்திரங்களின் சாரம் என்றார் விவேகானந்தர்.

பிரிட்டிஷ்காரர்களின் தொல்லை தாங்காமல், பாரதியார், அரவிந்தர் போன்றோர் பாண்டிச்சேரிக்குச் சென்று விட்டனர். தமிழ்நாட்டில் இருந்தால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். பாண்டிச்சேரி பிரெஞ்சு நாட்டினரால் ஆளப்பட்டிருந்தது. அங்கிருந்தும் அவர்களைத் துரத்த நினைத்து ஆங்கிலேயர்கள் ஒரு சட்டம் இயற்றினார்கள்.

அதன்படி பாண்டிச்சேரியில் போய் இருக்கக்கூடிய இந்தியர்கள் ஒரு வருடத்திற்குள் ஐந்து மேஜிஸ்திரேட்டுகளிடமிருந்து கையொப்பம் வாங்க வேண்டும். பின் அதை பிரெஞ்சு அரசிடம் காண்பிக்க வேண்டும்.

ஒரு நாள் அரவிந்தரும் மற்றும் பலரும் இப்படி ஆகிவிட்டதே, நமக்கு யாரையும் தெரியாதே என வருந்திக் கொண்டிருந்தனர். எனக்குச் சிறிது அவகாசம் கொடுங்கள் என்று பாரதியார் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

மறுநாள் சங்கரன் செட்டியார் என்பவரிடம் சென்றார். செட்டியார் ஊரில் பெரிய மனிதர். சில மணிநேரத்தில் ஐவரிடம் கையொப்பம் வாங்கிக் கொண்டு வந்தார் அவர்.

அப்போது செட்டியார், பாரதியிடம் ஒரு கவிதை பாடும்படி கேட்டுக் கொண்டார். உடனே ஜெயமுண்டு பயமில்லை மனமே எனப் பாடினார்.

பிறர் துன்பம் கண்டு துவளும் மனம்

சுவாமி விவேகானந்தர் பேலூர் மடத்தில் இருந்த போது ஒருநாள் இரவு தூங்காமல் பரபரப்பாக இருந்தார். அதைக் கவனித்த விஞ்ஞானானந்தர் சுவாமிஜியிடம் சென்று விசாரித்தார். அதற்கு விவேகானந்தர் மக்கள் பலர் எங்கோ துன்பப்படுகிறார்கள் அதனால் எனக்குத் தூக்கம் வர வில்லை என்று கூறி வருந்தினார். விஞ்ஞானானந்தருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் உறங்கச் சென்றுவிட்டார்.

மறுநாள் செய்தித்தாளில், ஃபிஜித் தீவில் பூகம்பம் ஏற்பட்டுப் பல நூறு பேர் அங்கு இறந்துவிட்டனர் என்ற செய்தி வந்திருந்தது. அந்தத் துன்பம் தாளாமல் தான் சுவாமிஜியின் இதயமே ஒரு செசிமோகிராப் ஆக மாறி ரிக்டர் அளவில் அறிந்தவர்போல் தவித்துக் கொண்டிருந்தார்.

ஃபிஜித் தீவினிலே இந்து ஸ்திரீகள் என்ற பாரதியின் கவிதை, சுவாமிஜி போல அவரும் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் துடித்தார் என்று தெளிவுறக் காட்டுகிறது பாருங்கள்

கரும்புத் தோட்டத்திலே-அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்துகின்றனரே!-ஹிந்து
மாதம் தம் நெஞ்சு கொதித்து கொதித்து மெய்
சுருங்குகின்றனரே!- அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு
மருந்து இதற்கில்லையோ?-செக்கு
மாடுகள் போல் உழைத்து ஏங்குகின்றார்- அந்தக் (கரும்புத் தோட்டத்தில்)

சுவாமிஜி பிறந்த நாளன்று,
தேடிச்சென்று நிதம் தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பம் மிக உழன்று- பிறர்
வாட பல செயல்கள் செய்து-நரை
கூடிக் கிழப் பருவம் எய்தி- கொடுங்
கூற்றுக்கு இரையெனப் பின்மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போல்- நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

என்று எழுதி, தமது 39-வது வயதிலேயே மறைந்தார். சுவாமி விவேகானந்தரின் சீடரான மகாகவி பாரதியார். சுவாமி விவேகானந்தரும் 39 வருடம் 174 நாட்களில் மகாசமாதி அடைந்தார். இவர்கள் இருவரும் காட்டிய வழியில் இந்தியா சென்றால், நிச்சயம் ஒரு புதிய பாரதம் உருவாகும்.

பாரதியிடம் விவேகானந்தரின் தாக்கம்!

சுவாமி விவேகானந்தரையும் பாரதியையும் நம் இளம் சமுதாயம் பின்பற்றுமானால் நம் சமுதாயத்தின் வளர்ச்சியையும் வாழ்வையும் தடுத்து நிறுத்த எந்த சக்தியாலும் முடியாது. இன்றைக்கு நம் நாடு பொருளாதார ரீதியாக வளர்கிறது என்று பெருமைப்படுகிறோம். தேசத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு பக்கம். அதே நேரத்தில் நம் தேசத்தின் பண்பாட்டுத் துறையின் வீழ்ச்சி என்ற பக்கத்தை மறந்து போகிறோம்.

நம்மிடமுள்ள மிகப் பெரிய பலவீனம். நம்மைச் சுற்றியிருக்கிற உலகம் எப்படி உள்ளது என்பதை அறிவதில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறோமே தவிர, நான் யார், நான் எப்படிப்பட்டவன்? எனது பலம் எது? பலவீனம் எது? என்ற உள்முகத் தேடலை நாம் நடத்தத் தயாராக இல்லை. உன்னை நீ அறி எனபதுதான் எல்லா உபநிடதங்களின் சாரம்

என்னை நான் ஏன் அறிய வேண்டும்?

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை. தானே தனக்கு நண்பனும் பகைவனும் என்பது திருமூலர் வாக்கு. திருமூலருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலக சகோதரத்துவத்தைச் சந்தித்திருக்கிறார். இந்தப் பாடல் நம் இந்தியப் பண்பாட்டின் சாரம் முழுவதையும் எடுத்து இயம்புகிறது.

பேதமற்று உலகம் முழுவதையும் அரவணைக்கும் உள்ளம் கொண்ட ஒருவனே பண்பாட்டின் சிகரம். அந்தப் பக்குவம் அவனுக்கு வந்ததென்றால் அவனுக்கும் முன்பே இந்த மண் பக்குவப்பட்டிருந்தால்தான் அப்படியொரு பண்பாட்டின் சிகரத்தை அவன் அடைய முடியும். மண்படு மரபில் மானுடச்சாதி பண்படும் அதனைப் பண்பாடு என்க என்பார் கண்ணதாசன்.

தீமைகளைக் களைத்து, ஒழுங்கீனங்ளை ஒழித்து, ஒழுக்கத்தை வளர்ப்பதைத்தான் நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு என்கிறோம். இப்பண்பாட்டின் உச்சத்திலே இருக்கக்கூடிய மண் நம் மண் தானே தனக்கு நண்பனும் பகைவனும் என்று திருமூலர் சொல்வதும், தீதும் நன்றும் பிர் தர வாரா என்று கணியன் பூங்குன்றனார் சொல்வதும் எதைக் குறிக்கின்றன?

உனக்கு நீயே வழிகாட்டி என்று சுவாமி விவேகானந்தரும் புரிய வைத்தார். விவேகானந்தரை மிகச் சுருக்கமாக அறிய வேண்டுமென்றால் பாரதியின் ஒரு பாடலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பாடல் விவேகானந்தரின் சிந்தனைத் தாக்கத்தாலேயே பாரதிக்கு வந்து வாய்த்தது. பாரதியின் சுய தரிசனமே இதில்தான் இருக்கிறது.

கடமை யாவன தன்னைக் கட்டுதல்
பிறர் துயர் தீர்த்தல், பிறர்நலம் வேண்டுதல்

தன்னைக் கட்டுதல் என்றால் புலனடக்கம். புலன் நுகர்ச்சியின் உச்சியிலே இன்றைக்கு இருப்பதுதான் மனிதக் கலாச்சாரம். கல்வி என்ற நாணயத்திற்கு இரு பக்கங்கள் உண்டு. ஒரு பக்கம் அறிவு. இன்னொரு பக்கம் ஒழுக்கம். ஒழுக்கம் இல்லாத அறிவால் சமுதாயத்திற்கு எந்தப் பயனும் வந்து சேராது. நாயணத்தின் ஒரு பக்கம் முழுவதுமாகத் தேய்ந்து மறுபக்கம் மட்டுமே தெளிவாகத் தெரிந்தால் அது செல்லாத காசே தவிர, செலாவணிக் காசு அல்ல. இரண்டு பக்கமும் தெயாமல் உள்ள கல்விதான் வேண்டும். அப்போதுதான் அது செல்லும் காசு. ஏசுவிற்கு முன்பே உன்னை நீ அறிய வேண்டும் என்று சிந்திக்கக் கூறிய சாக்ரடீஸ் நல்லறிவே நல்லொழுக்கம் என்றார். ஐம்புலன்களையும் அடக்குகின்ற ஆற்றலைப் பெறுவதற்கான பருவம்தான் பிரம்மசரிய பருவம். அதுதான் கல்வி கற்கும் பருவம்.

பிரம்மசரியம் என்பது என்ன?

மாணவனுக்கான பிரம்மசரியம் என்பது சிந்தனைகளை வேறு எங்கும் சிதறவிடாமல் கல்வியில் மட்டுமே நாட்டம் செலுத்துவது ஆகும். இன்றைக்கு அந்தப் பண்பாடு, அந்த ஒழுக்கம், அதுதான் கல்வி என்ற ஒரு நிலை இருந்தால் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், நுகர்பொருள்களை அனுபவிக்க வேண்டும் என்ற வெறிக்கு இரையாகி ஒரு சக மாணவனின் கழுத்தை நெரித்துக் கொல்லக்கூடிய சூழல் வருமா?

இன்றைய கல்வி நமக்கு எதைக் கற்றுக் கொடுக்கிறது? இன்று மாணவர்களுக்கு எதைக் கொண்டு போய் சேர்க்கிறோம்? நன்றாகப் படி, இன்ஜினியராகு, டாக்டராகி நிறைய சம்பாதி, உலகில் எத்தனை இன்பங்கள் உள்ளனவோ அத்தனையையும் அனுபவி. ஒழுக்கம் முதலிடம் பெறாது வெறும் அறிவு முதலிடம் பெறும்போது பண்பாட்டு வீழ்ச்சி வருகிறது.

வள்ளுவர் வாலறிவன் நற்றாள் தொழார் எனின் என்பார். வாலறிவு என்பது மெய்ஞ்ஞானம் அறியாமை கலப்பில்லாத அறிவு எதுவோ அதுதான் வாலறிவு. அந்த வாலறிவை ஒருவன் பெற்றுவிட்டால் வாழ்க்கையின் சாதாரண இன்பங்கள் அவனைச் சலனப்படுத்த முடியாது. விவேகானந்தர் படிக்கின்ற பருவத்தில் சிறப்பாகப் படித்தார். நான்கு வயதிலேயே தியானத்தில் ஈடுபட்டார்.

ஏன் ஒருவன் தியானம் செய்ய வேண்டும்?

சிந்னைகளை ஒருமுகப்படுத்துவதன் மூலமாக ஓர் ஆற்றல் உருவெடுக்கிறது. நான்கு வயதிலேயே தியானம் செய்து, சிந்தனையை ஓர் இடத்தில் கொண்டு நிறுத்துகிற ஆற்றல் விவேகானந்தருக்கு இருந்ததால்தான், சிறு வயதிலேயே அவர் வடமொழி இலக்கணங்களைப் படித்து மனப்பாடம் செய்து அப்படியே கூறக்கூடிய ஆற்றலைப் பெற்றார். சிந்தனையைச் சிறதவிடாது இருப்பதே பிரம்மசரியம். எனவே ஒருவன் சாதிக்க வேண்டுமென்றால் அவன் முதலில் செய்ய வேண்டியது தன்னைக் கட்டுதல் தன்னை எவன் கட்டுகிறானோ அவனுக்குச் சபலமில்லை. சலனமில்லை. தன்னைக் கட்டுதலுக்கப் பின் பிறர் துயர் தீர்த்தல். வாழ்வின் உயர்ந்த நோக்கமே சக மனிதர்களுக்காக வாழ்வதுதான். விவேகானந்தர் மிகச் சிறப்பாகப் படித்தார். அவர் நினைத்திருந்தால் வழக்கறிஞராகி நன்கு சம்பாதித்து எல்லாச் சுகங்களையும் அனுபவித்திருக்கலாம்

பட்டினத்தார் ஏராளமாகச் சம்பாதித்து வைத்திருந்தார். ஆனால் காதற்ற ஊசியும் வாராது காணகடை வழிக்கே என்று தமது மகனாக வந்த ஈசன் எழுதிவிட்டுப் போன வாசகத்தைப் பார்த்தார். அக்கணமே அனைத்தையும் துறந்துவிட்டார். எல்லாவற்றையும் துறப்பதால் என்ன கிடைக்கும்? ஒரு பவுர்ணமி நிலாக் கூட்டம், புத்தர் பேசிக் கொண்டிருந்தபோது அரசன் அஜாதசத்ரு வருகிறான். புத்தரிடம் நீ துறவி துறவியாக இருப்பதனால் என்ன பலன் உனக்குக் கிடைக்கிறது? என்று கேட்டான்.

அப்போது புத்தர் கூறினார்: துறவிக்கு ஜாதி கிடையாது. குறிப்பிட்ட மதம் கிடையாது. சமூகம் போட்டு வைத்திருக்கக்கூடிய விலங்குகளும் கிடையாது. சமூகம் ஒரு தனிமனிதனைச் சுதந்திரமாக வாழவிடாது. சமூகம் ஒரு சட்டத்திற்கு உட்பட்டே ஒருவனை வாழவிடும். எனவே என் சிந்தனைக்கு ஏற்பத்தான் நான் நடப்பே என்று கூற முடியாது. சமூகம், ஜாதி, மதம் ஆகிய விலங்குகளை உடைத்தெறிந்துவிட்டு விடுதலை பெறுபவனே துறவி.

எந்த ஆசையாக இருந்தாலும் அது கவலையைக் கொண்டு வரும். எனவே ஆசைகளை அறுத்தெறிந்துவிட்டு வரும் துறவிக்குக் கவலை கிடையாது. சமூகத்தின் எந்த விலங்கும், எந்தக் கவலையும், எந்த அச்சமும் எனக்குக் கிடையாது என்று ஒரு துறவியால் மட்டுமே கூற முடியும். அப்படிப்பட்ட துறவிதான் சுவாமி விவேகானந்தர். துறவின் நோக்கமென்ன? துறவி என்பவன் எல்லாவற்றையும் துறந்துவிட்டுக் கானகத்தில் போய் கண்மூடி உட்கார்ந்திருப்பது தான் துறவா? இல்லை, உலகில் உள்ள அத்தனை உயிர்களையும் உய்விப்பதற்கான வழியைத் தேடிவதே துறவு.

சாதாரண மனிதன் மற்றவனைப் பற்றிச் சிந்திக்காமல், தன்னைப் பற்றியே சிந்திக்கிறான். ஒரு துறவி மனிதவாடை இல்லாத் இடத்திலே ஒதுங்கி இருக்கிறான் என நினைக்கத் தோன்றும். ஆயினும் மனிதர்களின் நலன் குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்கிறான். இதுதான் துறவிக்கும் சாதாரண மனிதனுக்கும் உள்ள வித்தியாசம். ஒருவன் என்ன செய்ய வேண்டும்? சுயநலத்தைத் துறக்க வேண்டும். வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்வது என்பது ஒழுக்கமாக வைத்துக்கொள்வது நெறிப்படுத்தும் வாழ்க்கை என்பது இன்பங்களை ஒரு கட்டுக்குள்ளே வைப்பது.

என் அடிப்படை தேவைகளுக்கு எனக்கென்று சம்பாத்தியம் இவ்வளவு போதும் என்றால் அதற்குப் பிறகு நான் என்ன செய்ய வேண்டும்? நான் இருக்கும் சமுதாயத்திற்குக் கடமையாற்ற வேண்டும். தன்னைக் கட்டுதல் என்பது ஒழுக்கமான சமுதாய வாழ்க்கை எனப்படுகிறது. ஒவ்வொருவனும் தன்னைக் கட்டத் தொடங்கிவிட்டால் சமுதாயம் ஒட்டுமொத்த ஒழுக்கமுள்ள சமுதாயமாக அமைந்துவிடும். அடுத்தது, பிறர்நலம் வேண்டுதல். கடவுளிடம் எனக்கு என்று கேட்டுத்தான் நமக்குப் பழக்கம், பிறருக்காகப் பிரார்த்திக்கும் பழக்கமே கிடையாது. செக்குமாடுபோல் நாம் சுயநலத்திலேயே சுற்றிக் கொண்டிருப்பவர்கள்.

அதனால்தான் பெர்னாட்ஷா, சாதாரண மனிதர்கள் பிரார்த்தனை செய்வதில்லை. பிச்சை எடுக்கிறார்கள் என்றார். எனக்கென்று தெய்வத்திடம் கேட்டால் அது பிச்சை, அடுத்தவனுக்கு என்று நெஞ்சுருகி நின்றால் அது பிரார்த்தனை. அதைத்தான் விநாயகரின் திருமுன்பு பாரதி சொல்கிறார்.

மண் மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புல், பூண்டு, மரங்கள்- யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே, இன்புற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும். தேவதேவா! ஞானாகாசத்து நடுவே நின்று நான் பூமண்டலத்தில் அன்பும் பொறையும் விளங்குக, துன்பமும், மிடிமையும், நோவும், சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம் இன்புற்று வாழ்க என்பேன்!

இதனை நீ திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி அங்ஙனமே ஆகுக என்பாய் ஐயனே! அடுத்த வேளை சோற்றுக்கு பாரதியின் மனைவி செல்லம்மாள், பக்கத்து வீட்டிலிருந்து அரிசி வாங்கி வந்தால் தான் உலை கொதிக்கும். ஆனால் அவர் விநாயகருக்கு முன் நின்று சோறு வேண்டும் என்று கேட்கவில்லை. மனைவிக்கு நகை வேண்டுமென்று கேட்கவில்லை. மக்கள், விலங்குகள், புல், பூண்டு அனைத்தும் அன்போடு வாழ வேண்டும் என்று கேட்கிறார்.

தன்னைக் கட்டுதல், பிறர்துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல் என்ற வரிசையில் நான்காவது, எல்லா மதங்களையும் ஒன்றாகப் பார்க்கும் பார்வை! விநாயக தேவனாய்,வேலுடைக் குமரனாய், நாராயணனாய், நதிச்சடை முடியனாய், பிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி அல்லவா! யெஹோவா எனத் தொழுது அன்புறும் தேவருந்தானாய், திருமகள், பாரதி, உமையெனும் தேவியர் உகந்த வான்பொருவாய் உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்.

அது அல்லா, யோவா, உமை, நாராயணன் எதுவும் சொல் உலகெலாம் காக்கும் ஒன்று பரம்பொருள், நாமதன் மக்கள், உலகு இன்பக்கேணி என்றவர் பாரதி. பூமியில் இந்த நான்கே எவர்க்கும் கடமை என்று விவேகானந்தர் கூறியதையே பாரதி கூறினார்.

இந்தியாவின் வாழ்க்கை மதம். என் மதம்தான் உயர்ந்தது. உன் மதம் தாழ்ந்தது என்று கூறி ஆயுதம் ஏந்தி அடுத்தவனைத் தாக்கி ரத்தம் சிந்துவது மதமல்ல. மனிதனை மறந்துவிட்டு இறைவனை மட்டுமே சிந்திக்கிற மதவாதிகளுக்கு நடுவே மனிதர்களிலே இறைவனைக் காண வேண்டும் என்று சொன்னவர் சுவாமிஜிதான்.

இன்று ஜாதி பற்றி நிறைய பேசிக்கொண்டிருக்கிறோம். விவேகானந்தர் என்ன கூறினார்? ஜாதி என்பது சமயம் உருவாக்கியதல்ல. அது சமுதாயத்தின் ஏற்பாடு. நீ நினைத்தால் ஜாதி மாற முடியும். ஜாதி என்பது பிறப்பாலே வருவதில்லை. உன் வாழ்வில் நீ தேர்ந்து கொள்கிற வாழ்க்கைப் பண்புகளிலே உருவது. நீ ஒருவனிடம் கை கட்டி உடல் உழைப்பு செய்கிறபோது சூத்திரனாகிறாய். அதனால் தாழ்ந்தவன் என்று பொளில்லை. நீயே சொந்தமாக ஒரு தொழில் தொடங்கிவிட்டால் நீ வைசியன். நீயே உன் கண்ணால் பார்க்கும் தீமையைக் களைய களத்தில் இறங்கிவிட்டால் நீ க்ஷத்திரியன். நீ வேதங்களையும் எல்லா அறிவு நூல்களையும் படித்துப் பேருண்மை முழுவதையும் புரிந்து எது பரம்பொருள் என்று தெளிந்து விட்டால் நீ பிராமணனாகிவிடுகிறாய். சூத்திரன் நினைத்தால் பிராமணனாக முடியும். பிராமணன் அவனுக்குரிய நெறி இழந்து நின்றால் சூத்திரனாகப் போக முடியும். சமத்துவத்தால் நன்மைகள் கிடைக்குமே தவிர தீமை கிடையாது. உலகம் முழுவதும் ஒரு கடவுள் என ஒப்புக் கொள்வதால் தீமை உண்டா? கிடையாது. இதுதான் வேதாந்த லட்சியம். அந்த ஆன்மீகத்தைத் தான் இம்மண்ணில் வளரச் செய்ய வேண்டும்.

சுவாமி விவேகானந்தரையும் பாரதியையும் நம் இளம் சமுதாயம் பின்பற்றுமானால் நம் சமுதாயத்தின் வளர்ச்சியையும் வாழ்வையும் தடுத்து நிறுத்த எந்த சக்தியாலும் முடியாது. இன்றைக்கு நம் நாடு பொருளாதார ரீதியாக வளர்கிறது என்று பெருமைப்படுகிறோம். தேசத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு பக்கம். அதே நேரத்தில் நம் தேசத்தின் பண்பாட்டுத் துறையின் வீழ்ச்சி என்ற பக்கத்தை மறந்து போகிறோம்.

நம்மிடமுள்ள மிகப் பெரிய பலவீனம். நம்மைச் சுற்றியிருக்கிற உலகம் எப்படி உள்ளது என்பதை அறிவதில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறோமே தவிர, நான் யார், நான் எப்படிப்பட்டவன்? எனது பலம் எது? பலவீனம் எது? என்ற உள்முகத் தேடலை நாம் நடத்தத் தயாராக இல்லை. உன்னை நீ அறி எனபதுதான் எல்லா உபநிடதங்களின் சாரம்

என்னை நான் ஏன் அறிய வேண்டும்?

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை. தானே தனக்கு நண்பனும் பகைவனும் என்பது திருமூலர் வாக்கு. திருமூலருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலக சகோதரத்துவத்தைச் சந்தித்திருக்கிறார். இந்தப் பாடல் நம் இந்தியப் பண்பாட்டின் சாரம் முழுவதையும் எடுத்து இயம்புகிறது.

பேதமற்று உலகம் முழுவதையும் அரவணைக்கும் உள்ளம் கொண்ட ஒருவனே பண்பாட்டின் சிகரம். அந்தப் பக்குவம் அவனுக்கு வந்ததென்றால் அவனுக்கும் முன்பே இந்த மண் பக்குவப்பட்டிருந்தால்தான் அப்படியொரு பண்பாட்டின் சிகரத்தை அவன் அடைய முடியும். மண்படு மரபில் மானுடச்சாதி பண்படும் அதனைப் பண்பாடு என்க என்பார் கண்ணதாசன்.

தீமைகளைக் களைத்து, ஒழுங்கீனங்ளை ஒழித்து, ஒழுக்கத்தை வளர்ப்பதைத்தான் நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு என்கிறோம். இப்பண்பாட்டின் உச்சத்திலே இருக்கக்கூடிய மண் நம் மண் தானே தனக்கு நண்பனும் பகைவனும் என்று திருமூலர் சொல்வதும், தீதும் நன்றும் பிர் தர வாரா என்று கணியன் பூங்குன்றனார் சொல்வதும் எதைக் குறிக்கின்றன?

உனக்கு நீயே வழிகாட்டி என்று சுவாமி விவேகானந்தரும் புரிய வைத்தார். விவேகானந்தரை மிகச் சுருக்கமாக அறிய வேண்டுமென்றால் பாரதியின் ஒரு பாடலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பாடல் விவேகானந்தரின் சிந்தனைத் தாக்கத்தாலேயே பாரதிக்கு வந்து வாய்த்தது. பாரதியின் சுய தரிசனமே இதில்தான் இருக்கிறது.

கடமை யாவன தன்னைக் கட்டுதல்
பிறர் துயர் தீர்த்தல், பிறர்நலம் வேண்டுதல்

தன்னைக் கட்டுதல் என்றால் புலனடக்கம். புலன் நுகர்ச்சியின் உச்சியிலே இன்றைக்கு இருப்பதுதான் மனிதக் கலாச்சாரம். கல்வி என்ற நாணயத்திற்கு இரு பக்கங்கள் உண்டு. ஒரு பக்கம் அறிவு. இன்னொரு பக்கம் ஒழுக்கம். ஒழுக்கம் இல்லாத அறிவால் சமுதாயத்திற்கு எந்தப் பயனும் வந்து சேராது. நாயணத்தின் ஒரு பக்கம் முழுவதுமாகத் தேய்ந்து மறுபக்கம் மட்டுமே தெளிவாகத் தெரிந்தால் அது செல்லாத காசே தவிர, செலாவணிக் காசு அல்ல. இரண்டு பக்கமும் தெயாமல் உள்ள கல்விதான் வேண்டும். அப்போதுதான் அது செல்லும் காசு. ஏசுவிற்கு முன்பே உன்னை நீ அறிய வேண்டும் என்று சிந்திக்கக் கூறிய சாக்ரடீஸ் நல்லறிவே நல்லொழுக்கம் என்றார். ஐம்புலன்களையும் அடக்குகின்ற ஆற்றலைப் பெறுவதற்கான பருவம்தான் பிரம்மசரிய பருவம். அதுதான் கல்வி கற்கும் பருவம்.

பிரம்மசரியம் என்பது என்ன?

மாணவனுக்கான பிரம்மசரியம் என்பது சிந்தனைகளை வேறு எங்கும் சிதறவிடாமல் கல்வியில் மட்டுமே நாட்டம் செலுத்துவது ஆகும். இன்றைக்கு அந்தப் பண்பாடு, அந்த ஒழுக்கம், அதுதான் கல்வி என்ற ஒரு நிலை இருந்தால் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், நுகர்பொருள்களை அனுபவிக்க வேண்டும் என்ற வெறிக்கு இரையாகி ஒரு சக மாணவனின் கழுத்தை நெரித்துக் கொல்லக்கூடிய சூழல் வருமா?

இன்றைய கல்வி நமக்கு எதைக் கற்றுக் கொடுக்கிறது? இன்று மாணவர்களுக்கு எதைக் கொண்டு போய் சேர்க்கிறோம்? நன்றாகப் படி, இன்ஜினியராகு, டாக்டராகி நிறைய சம்பாதி, உலகில் எத்தனை இன்பங்கள் உள்ளனவோ அத்தனையையும் அனுபவி. ஒழுக்கம் முதலிடம் பெறாது வெறும் அறிவு முதலிடம் பெறும்போது பண்பாட்டு வீழ்ச்சி வருகிறது.

வள்ளுவர் வாலறிவன் நற்றாள் தொழார் எனின் என்பார். வாலறிவு என்பது மெய்ஞ்ஞானம் அறியாமை கலப்பில்லாத அறிவு எதுவோ அதுதான் வாலறிவு. அந்த வாலறிவை ஒருவன் பெற்றுவிட்டால் வாழ்க்கையின் சாதாரண இன்பங்கள் அவனைச் சலனப்படுத்த முடியாது. விவேகானந்தர் படிக்கின்ற பருவத்தில் சிறப்பாகப் படித்தார். நான்கு வயதிலேயே தியானத்தில் ஈடுபட்டார்.

ஏன் ஒருவன் தியானம் செய்ய வேண்டும்?

சிந்னைகளை ஒருமுகப்படுத்துவதன் மூலமாக ஓர் ஆற்றல் உருவெடுக்கிறது. நான்கு வயதிலேயே தியானம் செய்து, சிந்தனையை ஓர் இடத்தில் கொண்டு நிறுத்துகிற ஆற்றல் விவேகானந்தருக்கு இருந்ததால்தான், சிறு வயதிலேயே அவர் வடமொழி இலக்கணங்களைப் படித்து மனப்பாடம் செய்து அப்படியே கூறக்கூடிய ஆற்றலைப் பெற்றார். சிந்தனையைச் சிறதவிடாது இருப்பதே பிரம்மசரியம். எனவே ஒருவன் சாதிக்க வேண்டுமென்றால் அவன் முதலில் செய்ய வேண்டியது தன்னைக் கட்டுதல் தன்னை எவன் கட்டுகிறானோ அவனுக்குச் சபலமில்லை. சலனமில்லை. தன்னைக் கட்டுதலுக்கப் பின் பிறர் துயர் தீர்த்தல். வாழ்வின் உயர்ந்த நோக்கமே சக மனிதர்களுக்காக வாழ்வதுதான். விவேகானந்தர் மிகச் சிறப்பாகப் படித்தார். அவர் நினைத்திருந்தால் வழக்கறிஞராகி நன்கு சம்பாதித்து எல்லாச் சுகங்களையும் அனுபவித்திருக்கலாம்

பட்டினத்தார் ஏராளமாகச் சம்பாதித்து வைத்திருந்தார். ஆனால் காதற்ற ஊசியும் வாராது காணகடை வழிக்கே என்று தமது மகனாக வந்த ஈசன் எழுதிவிட்டுப் போன வாசகத்தைப் பார்த்தார். அக்கணமே அனைத்தையும் துறந்துவிட்டார். எல்லாவற்றையும் துறப்பதால் என்ன கிடைக்கும்? ஒரு பவுர்ணமி நிலாக் கூட்டம், புத்தர் பேசிக் கொண்டிருந்தபோது அரசன் அஜாதசத்ரு வருகிறான். புத்தரிடம் நீ துறவி துறவியாக இருப்பதனால் என்ன பலன் உனக்குக் கிடைக்கிறது? என்று கேட்டான்.

அப்போது புத்தர் கூறினார்: துறவிக்கு ஜாதி கிடையாது. குறிப்பிட்ட மதம் கிடையாது. சமூகம் போட்டு வைத்திருக்கக்கூடிய விலங்குகளும் கிடையாது. சமூகம் ஒரு தனிமனிதனைச் சுதந்திரமாக வாழவிடாது. சமூகம் ஒரு சட்டத்திற்கு உட்பட்டே ஒருவனை வாழவிடும். எனவே என் சிந்தனைக்கு ஏற்பத்தான் நான் நடப்பே என்று கூற முடியாது. சமூகம், ஜாதி, மதம் ஆகிய விலங்குகளை உடைத்தெறிந்துவிட்டு விடுதலை பெறுபவனே துறவி.

எந்த ஆசையாக இருந்தாலும் அது கவலையைக் கொண்டு வரும். எனவே ஆசைகளை அறுத்தெறிந்துவிட்டு வரும் துறவிக்குக் கவலை கிடையாது. சமூகத்தின் எந்த விலங்கும், எந்தக் கவலையும், எந்த அச்சமும் எனக்குக் கிடையாது என்று ஒரு துறவியால் மட்டுமே கூற முடியும். அப்படிப்பட்ட துறவிதான் சுவாமி விவேகானந்தர். துறவின் நோக்கமென்ன? துறவி என்பவன் எல்லாவற்றையும் துறந்துவிட்டுக் கானகத்தில் போய் கண்மூடி உட்கார்ந்திருப்பது தான் துறவா? இல்லை, உலகில் உள்ள அத்தனை உயிர்களையும் உய்விப்பதற்கான வழியைத் தேடிவதே துறவு.

சாதாரண மனிதன் மற்றவனைப் பற்றிச் சிந்திக்காமல், தன்னைப் பற்றியே சிந்திக்கிறான். ஒரு துறவி மனிதவாடை இல்லாத் இடத்திலே ஒதுங்கி இருக்கிறான் என நினைக்கத் தோன்றும். ஆயினும் மனிதர்களின் நலன் குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்கிறான். இதுதான் துறவிக்கும் சாதாரண மனிதனுக்கும் உள்ள வித்தியாசம். ஒருவன் என்ன செய்ய வேண்டும்? சுயநலத்தைத் துறக்க வேண்டும். வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்வது என்பது ஒழுக்கமாக வைத்துக்கொள்வது நெறிப்படுத்தும் வாழ்க்கை என்பது இன்பங்களை ஒரு கட்டுக்குள்ளே வைப்பது.

என் அடிப்படை தேவைகளுக்கு எனக்கென்று சம்பாத்தியம் இவ்வளவு போதும் என்றால் அதற்குப் பிறகு நான் என்ன செய்ய வேண்டும்? நான் இருக்கும் சமுதாயத்திற்குக் கடமையாற்ற வேண்டும். தன்னைக் கட்டுதல் என்பது ஒழுக்கமான சமுதாய வாழ்க்கை எனப்படுகிறது. ஒவ்வொருவனும் தன்னைக் கட்டத் தொடங்கிவிட்டால் சமுதாயம் ஒட்டுமொத்த ஒழுக்கமுள்ள சமுதாயமாக அமைந்துவிடும். அடுத்தது, பிறர்நலம் வேண்டுதல். கடவுளிடம் எனக்கு என்று கேட்டுத்தான் நமக்குப் பழக்கம், பிறருக்காகப் பிரார்த்திக்கும் பழக்கமே கிடையாது. செக்குமாடுபோல் நாம் சுயநலத்திலேயே சுற்றிக் கொண்டிருப்பவர்கள்.

அதனால்தான் பெர்னாட்ஷா, சாதாரண மனிதர்கள் பிரார்த்தனை செய்வதில்லை. பிச்சை எடுக்கிறார்கள் என்றார். எனக்கென்று தெய்வத்திடம் கேட்டால் அது பிச்சை, அடுத்தவனுக்கு என்று நெஞ்சுருகி நின்றால் அது பிரார்த்தனை. அதைத்தான் விநாயகரின் திருமுன்பு பாரதி சொல்கிறார்.

மண் மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புல், பூண்டு, மரங்கள்- யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே, இன்புற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும். தேவதேவா! ஞானாகாசத்து நடுவே நின்று நான் பூமண்டலத்தில் அன்பும் பொறையும் விளங்குக, துன்பமும், மிடிமையும், நோவும், சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம் இன்புற்று வாழ்க என்பேன்!

இதனை நீ திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி அங்ஙனமே ஆகுக என்பாய் ஐயனே! அடுத்த வேளை சோற்றுக்கு பாரதியின் மனைவி செல்லம்மாள், பக்கத்து வீட்டிலிருந்து அரிசி வாங்கி வந்தால் தான் உலை கொதிக்கும். ஆனால் அவர் விநாயகருக்கு முன் நின்று சோறு வேண்டும் என்று கேட்கவில்லை. மனைவிக்கு நகை வேண்டுமென்று கேட்கவில்லை. மக்கள், விலங்குகள், புல், பூண்டு அனைத்தும் அன்போடு வாழ வேண்டும் என்று கேட்கிறார்.

தன்னைக் கட்டுதல், பிறர்துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல் என்ற வரிசையில் நான்காவது, எல்லா மதங்களையும் ஒன்றாகப் பார்க்கும் பார்வை! விநாயக தேவனாய்,வேலுடைக் குமரனாய், நாராயணனாய், நதிச்சடை முடியனாய், பிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி அல்லவா! யெஹோவா எனத் தொழுது அன்புறும் தேவருந்தானாய், திருமகள், பாரதி, உமையெனும் தேவியர் உகந்த வான்பொருவாய் உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்.

அது அல்லா, யோவா, உமை, நாராயணன் எதுவும் சொல் உலகெலாம் காக்கும் ஒன்று பரம்பொருள், நாமதன் மக்கள், உலகு இன்பக்கேணி என்றவர் பாரதி. பூமியில் இந்த நான்கே எவர்க்கும் கடமை என்று விவேகானந்தர் கூறியதையே பாரதி கூறினார்.

இந்தியாவின் வாழ்க்கை மதம். என் மதம்தான் உயர்ந்தது. உன் மதம் தாழ்ந்தது என்று கூறி ஆயுதம் ஏந்தி அடுத்தவனைத் தாக்கி ரத்தம் சிந்துவது மதமல்ல. மனிதனை மறந்துவிட்டு இறைவனை மட்டுமே சிந்திக்கிற மதவாதிகளுக்கு நடுவே மனிதர்களிலே இறைவனைக் காண வேண்டும் என்று சொன்னவர் சுவாமிஜிதான்.

இன்று ஜாதி பற்றி நிறைய பேசிக்கொண்டிருக்கிறோம். விவேகானந்தர் என்ன கூறினார்? ஜாதி என்பது சமயம் உருவாக்கியதல்ல. அது சமுதாயத்தின் ஏற்பாடு. நீ நினைத்தால் ஜாதி மாற முடியும். ஜாதி என்பது பிறப்பாலே வருவதில்லை. உன் வாழ்வில் நீ தேர்ந்து கொள்கிற வாழ்க்கைப் பண்புகளிலே உருவது. நீ ஒருவனிடம் கை கட்டி உடல் உழைப்பு செய்கிறபோது சூத்திரனாகிறாய். அதனால் தாழ்ந்தவன் என்று பொளில்லை. நீயே சொந்தமாக ஒரு தொழில் தொடங்கிவிட்டால் நீ வைசியன். நீயே உன் கண்ணால் பார்க்கும் தீமையைக் களைய களத்தில் இறங்கிவிட்டால் நீ க்ஷத்திரியன். நீ வேதங்களையும் எல்லா அறிவு நூல்களையும் படித்துப் பேருண்மை முழுவதையும் புரிந்து எது பரம்பொருள் என்று தெளிந்து விட்டால் நீ பிராமணனாகிவிடுகிறாய். சூத்திரன் நினைத்தால் பிராமணனாக முடியும். பிராமணன் அவனுக்குரிய நெறி இழந்து நின்றால் சூத்திரனாகப் போக முடியும். சமத்துவத்தால் நன்மைகள் கிடைக்குமே தவிர தீமை கிடையாது. உலகம் முழுவதும் ஒரு கடவுள் என ஒப்புக் கொள்வதால் தீமை உண்டா? கிடையாது. இதுதான் வேதாந்த லட்சியம். அந்த ஆன்மீகத்தைத் தான் இம்மண்ணில் வளரச் செய்ய வேண்டும்.

மூலம்: தினமலர் இணையத்திலிருந்து.

https://www.dinamalar.com/news_detail.asp?id=618506

விவேகானந்தரும் ராக்பெல்லரும்

விவேகானந்தரும் ராக்பெல்லரும்

விவேகானந்தர் திருத்திய அமெரிக்க
உலக கோடீஸ்வரர் ராக்பெல்லர்..!!!

ராக்பெல்லர் என்ற பெயரை கேள்விப்படாதவர்கள் மிகக்குறைவே.உலக கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் இருந்தவர் அவர்.

தான் சம்பாதித்து வைத்திருந்த அத்தனை பணத்தையும் ஒன்று சேர்த்து, கச்சா எண்ணெய் சுத்திகரித்து விற்கும் வியாபாரத்தில் இறங்கினார் ராக்ஃபெல்லர்

. நீராவியில் ஓடிய ரயில் மட்டுமே அப்போது பெரிய போக்குவரத்துச் சக்தியாக விளங்கியது என்பதால், பெட்ரோலின் மகத்துவம் எவருக்கும் புரியவில்லை.

How Swami Vivekananda changed John Rockefeller (With images ...
Rockfeller

ஏற்கனவே இந்தத் தொழில் இருந்தவர்களைவிட பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும்;

அதே நேரம், அதிக பணம் சம்பாதிப்பதிலும் வெற்றி பெற வேண்டும் என விரும்பினார் ராக்ஃபெல்லர். உற்பத்தி இடத்திலிருந்து விற்பனை இடங்களுக்கு அனுப்புவதற்கான ரயில் கட்டணம் மிக அதிகமாக இருந்தது

. ரயில்வே நிர்வாகத்திடம் பேசி, தினமும் குறிப்பிட்ட பேரல்கள் அனுப்புவதாகவம், அதற்காக கட்டணச் சலுகை தரவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் வைக்க நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. போக்குவரத்துச் செலவு கணிசமாகக் குறையவே விலையை குறைத்து விற்பனை செய்தார்.

வியாபாரம் சூடுபிடித்ததும் போட்டியில் இருந்த சில கம்பெனிகளை அதிகவிலை கொடுத்து வாங்கினார். விற்பனைக்கு மறுத்தவர்களைக் கூட்டாளியாக்கிக் கொண்டார்.

கார்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விற்பனை உச்சத்தைத் தொட்ட 1872ம் வருடம் அமெரிக்க முழுவதும் ஆயில் வியபாரம் செய்யும் ஒரே நிறுவனமாக இருந்தது ராக்ஃபெல்லரின் ‘‘ஸ்டாண்டர்டு ஆயில் கம்பெனிதான்”. போட்டி நிறுவனம் இல்லை என்பதால், பணம் கொட்டோ கொட்டென்று கொட்ட, உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆகிவிட்டார்.

ராக்ஃபெல்லர் மாபெரும் பணக்காரர். ஆனால், மகா கஞ்சன்; எதுவும் நிரந்தரமில்லை என்பதை உணராமல், பணம்… பணம் என்று அலைந்த மனிதர். 1895-ல் பத்து லட்சம் டாலர்களுக்கு அதிபதி!

திடீரென, வியாபாரத்துக்காக அவர் செய்த முறைதவறிய சில விஷயங்கள் கசிந்து, பத்திரிகைகளில் பரபரப்பாக வெளியாகி, அமெரிக்க மக்களின் வெறுப்புக்கு ஆளானார்.

சமூகத்தின் எதிர்ப்பும், வெறுப்பும் அவரை மனநோயாளி ஆக்கியது.தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டார்

பரிதாபத்துக்கு உரிய அந்த நிலையில்…அவரது நண்பர் ஒருவர், தனது இல்லத்துக்கு வந்திருக்கும் இந்து மதத் துறவியைக் காண வரும்படி அழைத்தார். இவரோ மறுத்துவிட்டார்

.அந்தத் துறவி வேறு யாருமல்ல; நமது சுவாமி விவேகானந்தர் தான்! அவரைப் பார்ப்பதென்றால், அது அவ்வளவு சுலபமா என்ன? ஆனால், ராக்ஃபெல்லருக்கு அதற்கான நேரம் வாய்த்தது என்றே சொல்ல வேண்டும்.

முதலில் மறுத்தவர், பிறகு என்ன நினைத்தாரோ… தன் நண்பருக்குக்கூடத் தகவல் சொல்லாமல், அவரது வீட்டுக்கு வந்தார். திடும் என்று சுவாமிஜி தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தார்.

உள்ளே சுவாமிஜி ஏதோ படித்துக்கொண்டிருந்தார். நம்மையெல்லாம் போல அவர் சட்டென்று தலையைத் தூக்கிப் பார்க்கவில்லை.

தலையைக் கவிழ்த்தவண்ணம் அப்படியே படித்துக்கொண்டிருந்தார். ராக்ஃபெல்லர் நிச்சயம் வியந்திருப்பார்.

அதுமட்டுமல்ல… ராக்ஃபெல்லரைப் பற்றி அவருக்கு மட்டுமே தெரிந்த, மற்ற யாருக்குமே தெரியாத அவருடைய வாழ்க்கை ரகசியங்களை எல்லாம் கூறிய சுவாமிஜி, அவரிடம் இருக்கும் பணம் கடவுள் கொடுத்தது என்றும், அதை மக்களுக்கான சேவைகளுக்குச் செலவு செய்வதற்காகவே கடவுள் கொடுத்திருக்கிறார் என்றும் கூறி, ஆண்டவன் அளித்த இந்த அரிய சந்தர்ப்பத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

மற்றவர்கள் தன்னிடம் சொல்வதற்கு அஞ்சும் விஷயங்களை, சுவாமிஜி தன்னிடம் இப்படி வெளிப்படையாகப் பேசியதில் அதிர்ந்துபோன ராக்ஃபெல்லர், சட்டென அறையை விட்டுக் கிளம்பிப் போய்விட்டார்.

ஒரு வாரத்துக்குப் பின், மீண்டும் பழைய மாதிரியே விருட்டென சுவாமிஜியின் அறைக்குள் நுழைந்த ராக்ஃபெல்லர், ஒரு காகிதத்தை சுவாமிஜி முன் வீசி எறிந்தார்.

அப்போதும் சுவாமிஜி அதைக் கண்டுகொள்ளாமல் ஏதோ படித்துக்கொண்டிருந்தார்.

”அதை எடுத்துப் படியுங்கள். நீங்கள் எனக்கு நன்றி கூறுவீர்கள்” என்றார் ராக்ஃபெல்லர்.அவர் அளித்த நன்கொடைகளின் விவரங்கள் அந்தக் காகிதத்தில் இருந்தன.

அதைப் பார்த்த சுவாமிஜி, ”நல்லது! இப்போது நீங்கள் கொஞ்சம் திருப்தி அடைந்திருப்பீர்களே! இதற்கெல்லாம் நீங்கள்தான் எனக்கு நன்றி கூறவேண்டும்” என்றார்.

சுவாமிஜியுடனான இந்த இரண்டு சந்திப்புகளுக்குப் பின்னர், கஞ்சனான ராக்ஃபெல்லர் பெரும் கொடையாளியாகி, மனித குலத்துக்குப் பெரும் நன்மைகள் விளையக் காரணமானார். ‘பென்ஸிலின்’ மருந்தைக் கண்டுபிடிக்கப் பணத்தை அள்ளி வழங்கியதும் அவர்தான்.

தனக்கென்று சேர்த்து வைத்தபோது அடையாத மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும், திருப்தியையும் பிறருக்கெனக் கொடுத்தபோது அடைந்த ராக்ஃபெல்லர், புத்துயிர் பெற்று ஆரோக்கிய மனிதராகி, 93 வயது வரை வாழ்ந்தார்.

நமது சுவாமிஜின் அன்பினாலும் கருணையினாலும் ஆட்கொள்ளப்பட்ட மனிதர், இன்று மனித குலம் நன்றியோடு நினைக்கும் மாமனிதராக மாறினார்

விவேகானந்தரைக் கற்போம்! – இந்தியர்களுக்கு உயிர் உள்ளதா?

இந்தியர்களுக்கு உயிர் உள்ளதா?

Bishop John J. Keane: In Defense Of Swami Vivekananda

ஒருமுறை சுவாமி விவேகானந்தரிடம் மேல்நாட்டுப் பெண்மணி ஒருவர், “சுவாமி
எனக்கு ஒரு சந்தேகம்!” என்றார்.

“என்ன கேளுங்கள்!” – சுவாமிஜி

“எங்கள் நாட்டில் கொலை,கொள்ளை, கற்பழிப்பு என்று ஏராளமான குற்றங்கள் தினமும் நடந்தவண்ணம் இருக்கின்றன! ஆனால் உங்கள் நாட்டில் இப்படி இல்லையே. அது அமைதியாக இருக்கிறதே!”

“அதற்காக நான் பெருமைபடவில்லை!’
“ஏன் சுவாமி?”

“உங்கள் மக்கள் உயிரோடு உலவுகிறார்கள். ஆகவே தவறுகளும் செய்கிறார்கள். எனது மக்கள் பிரேதங்களாகிவிட்டார்கள். அதனால்தான் அங்கே பிரச்னைகள் இல்லை. எனது மக்களும் குற்றங்கள் செய்வதை நான் வரவேற்கிறேன். அப்படிச் செய்தால்தான் அவர்கள் பிரேதங்கள் அல்ல.”

இன்றைக்கு இந்தியாவில் இந்திய மக்கள் பிரேதங்களாக இல்லை. எல்லாக் குற்றங்களையும் செய்கிறார்கள். இதற்கு என்ன பொருள்?

தாமச குணத்திலிருந்து ராஜச குணத்தை அடைந்துவிட்டார்கள் என்று பொருள். இந்த ராஜச குணாம்சத்தில் சுரக்கின்ற சக்தியை நெறிப்படுத்தினால் அது மாபெரும் ஆக்க சக்தியாக மாறும்.அது ஆன்மநேயமாகும். மனிதநேயமாகும். அதுதான் சாத்விக குணாம்சம் என்பது.

மானுட நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சி யில் இந்த மூன்றும் இருக்கின்றன. அதா வது தாமச, ராஜச, சாத்விக அம்சங்கள்.
இந்தியா இப்போது அந்த மூன்றாவது கட்டத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு நாம் பிரேதங்களாக இல்லை; உயிரோட்டத்தோடு உள்ளோம்; உணர்ச்சிகரமானவர்களாக உள்ளோம்.
நம் ஆற்றல்கள் யாவும் குற்றங்களாக வெளிப்படுகின்றன.

அவற்றை ஆற்றுப்படுத்த வேண்டிய நேரம் இது. ஆற்றுப்படுத்துவோம்.:hibiscus:

புத்தகம்: விவேகானந்தரைக் கற்போம்!
ஆசிரியர்: தென்கச்சி சுவாமிநாதன்.

தேசிய இளைஞர் தினம் ஜனவரி -12

 1892ம் வருடம் டிசம்பர் மாதம் 25  ம் நாள் நமது தேசம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருந்த காலம். எங்கும் ஏழ்மை, ஆங்கிலேய அரசாங்கம் நமது எல்லா வளத்தையும் சுரண்டிக்கொண்டு இருந்த இருண்டகாலம். ஒரு இளம்துறவி பாரததேசம் முழுவதும் சுற்றி திறந்துவிட்டு இறுதியாக பாரதத்தின் தென்கோடி எல்லையான கன்னியாகுமாரி உள்ள பாறையின் மீது வந்து அமர்ந்தார்.

அந்த பாறையில்  ஓர் வித்தியாசமான தவத்தினை இயற்றினார் அந்த துறவி. நமது தேசநிலையை உயர்த்துவதற்கான தவம் அது. ஒரு துறவி தனது ஆன்ம விடுதலையை விடுத்தது தேசத்தின் விடுதலைக்காகவும் மக்களின் ஏழ்மையை போக்கவும் மூன்று நாட்கள் தவம் இயற்றியது வித்தியாசம் தானே. நம் புராதன பாரதம் மிகவும் செலவச்செழிப்புடனும் சிந்தனை வளத்துடனும் இருந்தது.  இப்பொழுது அடிமையாகி நாம் மனிதர்கள் என்ற எண்ணமே இல்லாமல் மிருகங்களை போல் வாழ்கிறோம். இதற்கு என்ன கரணம்? ஏன் இந்த இழி நிலை? இந்த இழி நிலையை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்? என்று அந்த துறவி சிந்தித்தார் அதன் பயனாய் ஒரு வழிமுறையும் கண்டறிந்தார்.

சிக்காகோ சர்வமத மகாசபை மாநாட்டில்  கலந்துக்கொண்டு நமது தேசத்தின் பெருமையையும் இந்து மதத்தின் மேன்மையையும் உலகிற்கு பறைசாற்றினார். நமது மக்களின் அடிமை வாழ்வை அகற்ற மீண்டும் பாரதம் வந்து. நாடு முழுவதும் சுற்று பயணம் செய்து நமது புராதன பெருமைகளையும். தற்போது உள்ள இழிநிலைக்கு காரணம் என்ன என்பதை விளக்கினார். இதன் விளைவாக நமது நாடு சுதந்திரம் பெற்றது. நாம் சுதந்திரம் பெறுவதற்கு வித்திட்ட அந்த இளம் துறவி தான் சுவாமி விவேகானந்தர்.

100 இளைஞர்களை தாருங்கள் நான் இந்தியாவையே மாற்றி காட்டுகிறேன். எனது நம்பிக்கை இளைய சமுதாயத்திடம் தான் உள்ளது. என்று முழக்கமிட்டவர் சுவாமி விவேகானந்தர்.  எப்படிப்பட்ட இளைஞர்களை கேட்கிறார். இரும்பை ஒத்த தசைகளும் எஃகை போன்ற நரம்புகள் கொண்ட இளைஞர்களே தேவை. தீவிர செயல் துடிப்பும் தன்னம்பிக்கையும், நல்லனவற்றில் திட நம்பிக்கையும், அவற்றை செயல் படுத்தும்போது இந்த உலகமே எதிர்த்தாலும் அதை செவ்வென செய்யக்கூடிய ஆற்றலும்  கொண்ட இளைஞர்களை தான் அவர் அழைக்கிறார்.

இப்பொழுது  அப்படிப்பட்ட இளைஞர்கள் இருக்கிறார்களா?  என்றால் இருக்கிறார்கள் அவர்களுக்கு தான் யார் என்று தெரியாமல் இருக்கிறார்கள் அவ்வளவே.  அனுமன் தன்னை அறியாமல் இருந்ததை  போன்று இருக்குகிறார்கள். ஜாம்பவானின் வார்த்தை எப்படி அனுமனை ஆற்றல் பொருந்தியவராக மாற்றியதோ அதேபோல் சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளும் நமது இளைஞர்களை தட்டி எழுப்பி, ஆற்றல் பொருந்தியர்களாக மற்றும் என்பதில் சந்தேகமில்லை. அவர் வார்த்தைகளை சிலர் படித்ததற்கே நமது நாடு அரசியலில் விடுதலை பெற்றது.

சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையில் விவேகானந்தரை படித்த பிறகே அவர்களின் செயல்களில் உத்வேகத்தைக் காணமுடியும். அப்போதைய தீவிர போராட்ட வீரர்களாக இருந்த திலகர், பாரதியார்  வ.வு.சி , சுப்ரமணிய சிவா. நேதாஜி. போன்றவர்களாகட்டும், மிதவாத போராட்ட வீரர்களாக  இருந்த காந்திஜி, சி.ஆர்.தாஸ்  போன்றவர்களாகட்டும், புரட்சியார்களாக  இருந்த வாஞ்சிநாதன், வவேசு ஐயர் போன்றவர்களாகட்டும், எண்ணற்ற வீரர்கள் தேச விடுதலைக்கு பாடுபட வித்திட்டது சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளே.

நமது தேசத்தின் ஜாம்பவானான சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளை பட்டி தொட்டி எங்கும் கொண்டு செல்வோம் உறக்கத்தில் இருக்கும் நமது இளைஞர்களை விழிப்படைய செய்வோம். விழிப்படைந்த இளைஞர்களைக்கொண்டு மீண்டும் ஒரு சுதந்திர போருக்கு தரராவோம்.

நாம் சுதந்திரம் பெற்றாக வேண்டும் மேலை நாட்டு மோகத்திருந்து விடுதலை பெற்றாக வேண்டும். அந்நிய கலாச்சார ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றாக வேண்டும். நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது நாம் வீரர்களாக திகழ்வோம். கடந்த முறை செய்த தவறுகளை களைந்து இந்த முறை நமது தேசமே பிரதானமாக நமது புராதான பெருமைகளை கொண்ட நவீன இந்தியாவை உருவாக்க வேண்டும்.

அதற்கு ஒரு வாய்ப்பாக சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி-12 தேசிய இளைஞர் தினத்தை நமது பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லுரிகளில் கொண்டாடுவோம். அனைவருக்கும் சுவாமி விவேகானந்தரின் செய்திகளை குறிப்பாக மாணவ மற்றும் இளைய தலைமுறையிடம் கொண்டுசேர்ப்போம். மீண்டும் பாரதம் உலகின் குருவாய் அமைத்திடுவோம்.

வந்தே மாதரம்

வாழ்க பாரதம்!

அமரபாரதம் இணைய இதழ் அறிமுகம்

அறிமுகம்

cropped-final-logo2.jpgநாம் பிறந்த இந்தப் புண்ணிய பாரத பூமியில், வாழையடி வாழையாக எண்ணற்ற மகான்கள் தோன்றியுள்ளனர். சமயத் துறையில் தலைவர்களாக விளங்கிய இவர்கள், மக்களுக்கு அருள்வழியைக் காட்டியிருக்கிறார்கள்.

அது போலவே சமுதாயத் துறையில் கணக்கற்ற பெரியோர்களை நம் பாரத பூமி காலமெல்லாம் தோற்றுவித்திருக்கிறது. சமுதாயத் தலைவர்களாக விளங்கிய இவர்கள், எத்தனை எத்தனையோ துறைகளில் நம் பாரத சமுதாயத்தின் நலனுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அரும்பணி ஆற்றியுள்ளனர்.

சமயத் தலைவர்களாக இந்தியாவில் எவ்வளவோ பேர் வாழ்ந்திருக்கிறார்கள். சமுதாயத் தலைவர்களாகவும் இந்தியாவில் எவ்வளவோ பேர் வாழ்ந்திருக்கிறார்கள்.

சமயத் தலைவராகவும் அதே சமயத்தில் சமுதாயத் தலைவராகவும் வாழ்ந்து, மக்களுக்கு வழி காட்டியவர்களும் இந்தப் பாரதப் புண்ணிய பூமியில் உண்டு. இந்த வரிசையில் சமீப காலத்தில் தோன்றிய மாமனிதர் சுவாமி விவேகானந்தர்.

இன்று நம் பாரதம் ஒரு சுதந்திர பூமி. இந்தச் சுதந்திர பூமியை உருவாக்குவதற்குப் போற்றுதலுக்குரிய நம் தேசபக்தர்களும் தேசியத் தலைவர்களும் எல்லையற்ற துன்பங்களையும் தியாகங்களையும் மேற்கொண்டனர். அவர்களை நாம் என்றென்றும் நன்றியுடன் நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அந்நியருக்கு அடிமைப்பட்டும் தன்மானமிழந்தும் உறங்கிக் கிடந்த இந்தியாவைக் தட்டியெழுப்பி, வீறுகொண்டெழச் செய்தார் சுவாமி விவேகானந்தர்.

சுவாமி விவேகானந்தரின் வீரமுழக்கம்தான், அவரது அறைகூவல்தான் இந்திய மக்களைச் சிலிர்த்தெழுந்து சுதந்திரப் போராட்டத்தில் அன்று ஈடுபட வைத்தது.

எனவேதான் மகாகவி பாரதியார், சுவாமி விவேகானந்தரைப் பற்றிச் சொல்லும்போது, விவேகானந்த பரமஹம்ச மூர்த்தியே இந்தியா விடுதலை பெறுவதற்கு அஸ்திவாரம் போட்டவர் என்பதை உலகம் அறியும் என்று குறிப்பிட்டார்.

சுவாமி அகண்டானந்தர் விவேகானந்தரின் தேசபக்தியை வர்ணிக்கும் போது:-

” …சுவாமிஜி பாரதத்தின் மீது கொண்ட அன்பு சாதாரண விஷயம் அல்ல. அது வெறும் தேசபக்தி (patriostism) அல்ல. அது தேசாத்மபோதம். சாதாரண மனிதர்களுக்கு இருப்பது “தேஹாத்மா போதம்”, அதாவது உடம்பைத் தானாக உணர்வது. சுவாமி விவேகானந்தருக்கு  இருந்ததோ ‘தேசாத்மபோதம்’. அதாவது நாட்டையே தானாக உணர்வது. நாட்டு மக்களின் சுகம், துக்கம், அவர்களின் கடந்த காலம், எதிர்காலம், நிகழ் காலம் என்பவை பற்றியே அவர் சிந்தித்தார்.

நாட்டிற்கு ஒரு புதிய இந்தியாவின் காட்சியை அளித்த முன்னோடிகளில் முதல்வராகத் திகழ்கிறார் சுவாமி விவேகானந்தர். சுதந்திரமான, புத்துணர்ச்சி ஊட்டப்பட்ட, புதுமைப் பொலிவு பெற்ற, புராதனப் பெருமை மீட்கப்பட்ட ஓர் இந்தியாவின் காட்சியை அவர் நமக்குத் தந்துள்ளார். அவர் தமது காட்சியை உணர்ச்சிப் பெருக்குடன் இவ்வாறு விவரிக்கிறார்:

‘இதுவரை இல்லாத அளவிற்குப் பெரும் சிறப்புடன் அத்தகைய இந்தியா உருவகிக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை… அவ்வளவுதான், எழுந்துருங்கள், விழித்திருங்கள். அழியாத தன் அரியாசனத்தில் புத்திளமையோடும் முன்பு எப்போதும் இல்லாத பெருமையோடும் அவள் வீற்றிருப்பதைக் காணுங்கள்.’

எதிர்கால இந்தியா முன்பு எப்போதும் இருந்ததை விடவும் மிகுந்த சிறப்போடும் பெருமையோடும் விளங்கப் போகிறது என்று சுவாமி விவேகானந்தர் தீர்க்க தரிசனமாகக் தெரிவித்திருக்கிறார். அவர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் நமது புராதான பெருமைகளை கொண்ட நவீன இந்தியாவை உருவாக்க வேண்டும். மீண்டும் பாரதம் உலகின் குருவாய் அமைந்திட வேண்டும். என்கிற நோக்கத்தில் பணிபுரிந்த ‘அமர பாரதம்’ இணையதள குழுவின், பணியின் அடுத்த கட்டமாக இளைஞர்களுக்கான மாதந்தோறும் ஆன்மிக-தேசிய இணைய இதழ் (E-magazine) நடத்த தீர்மானித்துளோம்.

சுவாமி விவேகானந்தரின் 158 வது பிறந்த தினத்தன்று முதல் பிரதியை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம். இணையதளதை போலவே இதற்கும் தங்கள் மேலான ஆதரவை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு

‘அமர பாரதம்’ ஆசிரியர் குழு

cropped-final-logo11.jpg

விவேகானந்தரிடம் பேச மறுத்த ராமகிருஷ்ணர்

விவேகானந்தரிடம் பேச மறுத்த ராமகிருஷ்ணர்.

Sw

ஒரு நாள் நரேந்திரர் தட்சிணேசுவரத்துக்கு வந்த போது அவரைக் கண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை பரமஹம்சர். நரேந்திரர் குரு நாதரை வணங்கினார். அப்போதும் அலட்சியமாகவே இருந்தார் குரு. அவருடைய பக்கத்தில் சீடர் அமர்ந்தார். அப்படி ஒருவர் அருகில் உட்கார்ந்திருப்பதைக் குரு மகராஜ் கவனித்ததாகவே தெரியவில்லை. அவர் ஏதோ தீர்க்கமாய்ச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் போலும் என்றெண்ணிய நரேந்திரர் அறைக்கு வெளியே வந்தார்.

ஹாஸ்ராவுடன் பேசிக் கொண்டே புகைத்தார். அப்போது உள்ளே பரமஹம்சர் மற்றவர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பது கேட்டது. உடனே நரேந்திரர் ஆர்வத்துடன் அவரது திருமுன்னர் சென்றார். என்ன ஆச்சரியம்! இம் முறை ஸ்ரீராமகிருஷ்ணர் அலட்சியம் செய்தது மட்டுமில்லை ; நரேந்திரருக்கு எதிர்ப்புறமாக சுவரை நோக்கி முகத்தைத் | திருப்பிகொண்டு விட்டார். ஏமாறிய நரேந்திரர் அங்கிருந்து புறப்பட்டார். அப்போதும் பரம ஹம்சர் போக்கில் மாறுதலே இல்லை.

இரண்டாம், மூன்றாம் முறையாக தட்சிணேசுவரத்துக்கு வந்தார் நரேந்திரர். நாலாம் முறையும் வந்தார். |அவர் வராத இடைக் காலத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரும் நரேந்திரரின் சௌக்கியத்தைப் பற்றி கேட்டறிந்து தான் வந்தார். எனினும் அவர் வந்தபோது ஏனோ கல்லாகச் சமைந்திருந்தார் குருதேவர். இப்படியே ஒரு மாதம் ஆகி விட்டது. ஸ்ரீராமகிருஷ்ணர் அப்படியே தான் இருந்தார். நரேந்திரரும் முன் போலவே வந்து கொண்டு இருந்தார். குருநாதர் தம்மைப் புறக்கணிப்பது பற்றி அவர் யாரிடமும் குறை கூறக் கூட இல்லை . அதற்கு மேலும் பரமஹம்சரால் எப்படி, பொறுக்க முடியும்?

நரேன், உன்னோடு நான் ஒரு வார்த்தைக்கூடப் பேசாமலிருக்கிறேன்; அப்படியும் நீ வந்து கொண்டிருக்கிறாயே! இது எப்படி ?” என்று சிஷ்யனைக் கேட்டே விட்டார் ஆசான். “நீங்கள் பேசி நான் கேட்க வேண்டும் என்பதற்காக நான் இங்கே வருவதாகவா எண்ணுகிறீர்கள் ? நான் அதற்காக வர வில்லை . எனக்கு உங்களிடம் அன்பு இருக்கிறது. அந்த அன்பி னால் உங்களைக் காண விரும்பு கிறேன். அதற்காகவே நான் தட்சிணேசுவரத்துக்கு வருகிறேன்என்றார் நரேந்திரர்.

அன்பு தனக்குப் பிரதியாக எதையும் எதிர்பாராது என்பது உண்மை தான். நரேந்திரரின் அன்பு அதற்குப் பிரதியாக குருதேவரின் அன்பைக்கூட எதிர்பார்க்கவில்லை. எதையும் எதிர்பாராது எவரிடமும் அன்பு செலுத்துவதே நம் கடமையாகக் கொள்ளவேண்டும் என்று முழங்கியவர் சுவாமி விவேகானந்தர்.

R.S.S. in the Footprints of Swami Vivekananda – K. Suryanarayana Rao -4

The Ramakrishna-Vivekananda link to R.S.S work

CGs2cLrVAAAylxt
Shri Guruji Golwalkar

RSS was started on the auspicious Vijaya Dasami day of the year 1925 and Dr. Hedgewar handed over the charge to Shri Guruji Golwalkar, as the Sar -sanghachalak Chief) of RSS an June 1940, before he passed away on 21st June 1940. For 33 years Shri Guruji relentlessly endeavoured, guided and inspired the Swayamsevaks of RSS to carry out the ideology and spirit of the organization as enunciated by Dr Hadgewar. Shri Guruji had stayed in Shri Ramakrishna Mission Ashram under the spiritual guidance of Swami Akhandananda, a direct disciple of shri Ramakrishna and a close associate of Swami Vivekananda. After the demise of swami Akhandananda, Shri Guruji came back to Nagpur and Involved in RSS under the guidance of Dr Hedgewar. When Shri Guruji was questioned by a well-known editor of a daily newspaper, that how after leading an Ashram life for some time, he could take up the RSS work which was quite different. Shri Guruji’s reply was very memorable and revealing. Shri Guruji said: “From experience I have realized that what I am doing in Sangh is in consonance with Swami Vivekananda’s philosophy guidance and method of work. No other great personality’s life and teaching has influenced me so much. I believe by doing the Sangh work I shall be carrying out only Swamiji’s work.”

This view is corroborated and endorsed by another senior Swami of the Ramakrishna-Vivekananda order, Swami Chidbhavananda of Tamil Nadu. He was the disciple of Swami Shivananda, a direct disciple of Shri Ramakrishna and a Gurubandhu of Swami Vivekananda. He was not in favour of RSS in his earlier days. But after making observation judiciously scrutinizing every activity of RSS, he addressed the Swayamsevaks and said: “You young n and men! You are all very fortunate for being trained in the RSS, exactly on the same lines of man-making plan as envisaged by Swami Vivekananda. I have realized this and am completely convinced that this is Swamiji’s work, God’s work.”

These eloquent and unequivocal assessments of two spiritual stalwarts from the Ramakrishna Vivekananda order, expressed after their realization and conviction, one who was close to Dr. Hedgewar and was an insider and the other a detractor horn outside RSS. would be sufficient to establish that RSS is doing the same work that Swamji desired to do, as both these luminaries happen to be disciples of two direct disciples of Shri Ramakrishna and who were close associates of Swami Vivekananda There need be no greater authority to confirm that the foundation laid by Dr. Hedgewar for RSS and the method he has developed is completely in consonance with the Ideas and vision of Swami Vivekananda for the regeneration of the Hindu Nation and raise it to the pinnacle of glory. Both of them identified themselves with RSS and worked with the organization with fall conviction to the last breath of their lives.

Swami Harshanandaji is a very senior Tapaswi Sanyasi of the Ramakrishna order, aged above 80, and a great scholar who has written many books in Kannada and English. His latest and most valuable Contribution is the “Encyclopaedia of Hinduism” in three big Volumes. Swami Harshananda has written a letter of appreciation after he read the book “National Regeneration – The Vision of Swami Vivekananda and the Mission of Rashtriya Swayamsevak Sangh”. He happens to be the Adhyaksha  Ramakrishna Math, Bangalore.

Given below are only a few significant sentences culled out from his letter dated 1st July 2012.

“Swami Vivekananda’s mission in life was National Regeneration, a task his Guru Ramakrishna, had put on his shoulder.”

“Swamiji breathed India, dreamed India. Spoke India and relentlessly worked for Indian.”

“He (Swami Vivekananda) was a Bramharshi as well as a Rajarshi, rolled into one. If the Bramharshis message is being worked out by the Ramakrishna Organisation’s that of Rajarshi is being implemented by the now well-known Rashtriya Swayamsevak Sangh, popularly called the R.S.S.”

This latest and affirmative statement of Swami Harshananda, of the Ramakrishna order adds to and confirms upholding the earlier views expressed by Shri Guruji Golwalkar as well as Swami Chidbhavananda and authenticates that R.S.S. is virtually working out the mission of Swami Vivekananda following in his footprints.

OM TAT SAT

Special Thanks
Book : R.S.S. in the Footprints of Swami Vivekananda
Compiler K. Suryanarayana Rao
Vijaya Bharatham Pathippagam Chennai.