பாரதம், சிகரத்தை நோக்கி…

1947-ல் பாரதம் சுதந்திரம் அடைந்தது. ஆனால் நீண்ட காலத்திற்கு மேற்கு நாடுகளை கண்டு அஞ்சினோம். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் காலனியாதிக்கத்தில் இருந்ததால், வெறும் பாம்பாட்டிகளும், பசி, பட்டினியும் நிறைந்த படிப்பறிவு இல்லாத நாடாகவே சித்தரிக்கப்பட்டது. பெண்களை கொடுமைப்படுத்துபவர்களாகவும், சாதி, மதத்தின் பெயரால் சண்டையும், சச்சரவும் நிறைந்த சிதறிப்போகும் ஒரு தேசம் என்றும் மேற்கு நம்மைப் புரிந்து கொண்டது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்புவரை இதே நிலைதான். ஆனால் இன்று….

பாரதம் சுயேச்சையான ராணுவத்திட்டங்களை கொண்டுள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷியா நாடுகள் தவிர மற்ற நாடுகள் நேட்டோ, சென்டே, ஸீடோ போன்ற பல அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளன. பாரதம் 11 லட்சம் வீரர்களை கொண்டு உலகின் இரண்டாவது பெரிய படை கொண்டுள்ளது.

செயற்கைகோள் ஏவுகணை தொழில் நுட்பத்தால் ஜெர்மனி, பெல்ஜியம், ஹங்கேரி போன்ற முன்னேறிய நாடுகளுக்காக பாரதம் செயற்கை கோள்களை அனுப்புகிறது.

1998 மே 11,13 தேதிகளில் ராஜஸ்தான் மாநிலத்தில் போக்ரான் – II அணுகுண்டு சோதனை நடத்தி நமது வல்லமையை உலகுக்கு உணர்த்தியது.

Fast Breeder Reactor Technolgy உடைய நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது (மற்ற நாடுகள் அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான்)

அமெரிக்கா, ஜப்பானுக்கு அடுத்த படியாக சூப்பர் கம்யூட்டரை உருவாக்கியுள்ளது. டாக்டர் விஜய்பட்கர் தலைமையில் இயங்கிய அறிஞர்குழு பரம் – 10,000 என்ற சூப்பர் கம்யூட்டரை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் சூப்பர் கம்யூட்டர் ரூ.450 கோடிக்குமேல், பரம் கம்யூட்டர் 22.5 கோடி மட்டுமே.

கம்யூட்டர் தொழில் நுட்பத் துறையில் இன்போஸிஸ், விப்ரோ , ஹெ.சி.எல் போன்ற பாரத நாட்டு நிறுவனங்கள் உலக அளவில் புகழ் பெற்று திகழ்கின்றன. மென்பொருள் (Software) துறையில் முன்னனி நாடாக திகழ்கிறது.

பரப்பளவில் 8 வது பெரிய நாடான நமது நாட்டில் 5ல் 3பங்கு விவசாயத்திற்கு ஏற்ற நிலம். இது உலக சராசரியில் 10ல் 1பங்கு. விவசாய உற்பத்தியில் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக நிகழ்கிறது. உலகளவில்

அரிசி,பால் உற்பத்தியில் முதலிடமும்

தேயிலை உற்பத்தியில் 30%

கோதுமை, காய்கறி உற்பத்தியில் இரண்டாவது இடம் இவ்வாறு உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

ஆட்டோமொபைல் இன்ஜினிரிங் துறையில் பாரதம் மிகவேகமாக முன்னேறி வருகிறது. உலகில் பெரிய 15 கார் கம்பெனிகள் பாரதத்திலிருந்து உதிரி பாகங்களை வாங்குகின்றன.

டாடா இண்டிகா கார்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. வேத

ஹிரோ ஹோண்டா நிறுவனம் பைக் உற்பத்தியில் முதன்மை பெற்று விளங்குகிறது.

மருந்து தயாரிப்பில் பாரதம் 4 வது இடம் பெற்றுள்ளது. பாரதத்தில் 75% விற்பனையாகி வந்த பண்னாட்டு கம்பெனிகளின் மருந்து இப்போது 30% குறைந்துள்ளதே மருந்து தயாரிப்பில் நமது வளர்ச்சியை காட்டுகிறது.

உலகில் மிகப்பெரிய ரயில்வே இந்திய ரயில்வே. ஒரு லட்சம் கி.மி ரயில் பாதை, ஏழாயிரம் ரயில் நிலையங்கள் உள்ளது.

சிமெண்ட் உற்பத்தியிலும் முதலிடம் வகிக்கிறது.

டாடா ஸ்டீல் நிறுவனம் எஃகினை வெப்ப முறையில் உருட்டி தரும் நிறுவனம். உலகிலேயே மிகக்குறைந்த செலவில் தயாரிக்கிறது.

சாதனை படைக்கும் சகோதரர்கள்

100 வருடங்களுக்கு முன் நமது மக்கள் பல நாடுகளுக்கு சென்றனர். அடிமைகளாகவும், ஒப்பந்த தொழிலாளர்களாகவும் வேலை செய்தார்கள். கடுமையான உழைப்பு, முயற்சியால் இன்று உலகெங்கும் சாதனை படைத்து வருகிறார்கள்.

அமெரிக்காவில் 3.22 மில்லியன் பாரதியார்கள் இருக்கிறார்கள். அமெரிக்க மக்கள் தொகையில் 1.5%. அமெரிக்காவில் ஒரு இந்தியர், தேசிய சராசரியைவிட 28% அதிகமாக சம்பாதிக்கிறார்கள். மேலும் அமெரிக்காவில் உள்ள

டாக்டர்களில் மைல் 38%

NASA விஞ்ஞானிகள் 12%

மைக்ரோ சாப்ட் கம்பெனில் 36%

IBM – ல் 28%

லை stafபவம்

INTEL – 17%

பாதியர்கள் பணியாற்றுகிறார்கள்

சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் கம்பனியின் இணை நிறுவனர் வினோத் கௌசலே

பெண்டியம் ஹார்வேடுன் தந்தை விநோத் தரம்

MACH – 7 என்ற அமெரிக்க ராக்கெட் திட்டத்தின் பொறுப்பாளர் மீரட்டை சார்ந்த அஜய் குமார்

லக்ஷ்மி மிட்டல், ஸ்வராஜ்பால், ஹிந்துஜா, ஜடானியா சகோதரர்கள், போன்றோர் இங்கிலாந்தில் பெரும் செல்வந்தர்களாக திகழ்கின்றனர்.

டாக்டர் ஹர்கோவிந்த் கொரானா, டாக்டர் சுப்பிரமணியம் சந்திரசேகர், பேராசிரியர் அமர்த்தியா சென், வி.எஸ்.நய்பால் போன்றவர்கள் நோபல் பரிசு பெற்ற பாரத வம்சாவளியினர்.

பாண்டிச்சேரியில் பிறந்த சியாமளன் ஹாலிவுட்டில் மிக அதிகமான வருமானம் சம்பாதிக்கும் வசன கர்த்தா

ப்ரிதா பன்சால் வெள்ளைமாளிகைக்கு ஓர் ஆலோசகர்.

அமெரிக்காவின் நேசனல் இன்ஸ்ட்டியுட் ஆப் ஸ்டேன்டர்ஸ் அமைப்பாளர் இயக்குனர் ஆர்த்தி பிராபாகர்.

காளிச்சரன், நாஸர் ஹீசேனும் மேற்குகிந்தியா, இங்கிலாந்து கிரிகெட் அணிகளின் தலைவர்களாக இருந்தார்கள். கோல்ப் விளையாட்டில் பிஜியின் விஜய் சிங் சாதனை செய்தார்.

பல நாடுகளில் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் பல பொறுப்புக்களை பாரத வம்சாவளியினர் உள்ளனர்.

பிஜியின் பிரதமராக மஹேந்திர சௌத்திரி இருந்தார்.

வாசுதேவ் பாண்டே ட்ரினிடாடின் பிரதமராக இருந்தார்

S.R.நாதன் – சிங்கப்பூர் குடியரசு தலைவர்

பரத் ஜக்தேவ் – கயானா குடியரசு தலைவர்

அனுருத் ஜகநாத் – மொரிஷியஸ் ஜனாதிபதி

தேவன் நாயர் – சிங்கப்பூர் பிரதமராக இருந்தார்

சிவசாகர் ராம் கூலம் – மெரிஸியஸ் பிரதமராக இருந்தார்.

க்ஷிதத் ராமபால் – காமன் வெல்த் பொது செயலாளர்.

மேலே குறிப்பிடப்பட்டவை அனைத்தும் கங்கை ஆற்றில் இரு கைகளால் அள்ளி எடுத்த நீர் போலத்தான். இந்தப் பட்டியலுக்கு முடிவே கிடையாது. ஆங்கில வரலாற்று அறிஞர் ஆர்னால்டு ஜோசப் டாயின்பீ, “வரலாற்றின் மிக அபாயகரமான இந்தத் தருணத்தில் பண்டைய பாரதத்தின் வழி தான் (அசோகர், ராமகிருஷ்ணர், காந்தி) மீட்புக்கான ஒரே மார்க்கம். மோதல் இல்லாமல், ஒரே குடும்பமாக மனித இனம் வளர்வதற்கான மனப்பான்மையும் உணர்வும் இந்த மார்க்கத்தில் தான் இருக்கிறது. அணுகுண்டு யுகத்தில் மனித இனம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளாமல் இருப்பதற்கு ஒரே வழி இதுதான்.” என்கிறார். உலகத்தில் பல அறிஞர்களின் எதிர் பார்ப்பும் இதுவே.

நமது புனித வேதங்களில் தறப்பட்டுள்ள உலகை மேன்மையடையச் செய்வோம் (க்ருண்வந்தோ விஸ்வம் ஆர்யம்) என்ற கூற்று இப்போது உண்மையாகி வருகிறது. நாம் தன்னம்பிக்கையுடன், தற்பெருமை கொண்டு நமது முன்னோர்கள் காட்டியுள்ள பாதையில் சென்று உலகை மென்மையுறச் செய்வோம் என்ற உறுதி எடுப்போம்.

பாரத் மாதாகீ ஜெய்!

பாரில் உயர்ந்த பாரதம்

“பொன்னும் மணியும் மிகப் பொங்கி நின்ற இந்நாட்டில்
அன்னமின்றி நாளும் அழிவார்கள் எத்தனை பேர்!
வேத உபநிடத மெய்ந்நூல்கள் எல்லாம் போய்
பேதைக் கதைகள் பிதற்றுவார் இந்நாட்டினிலே.”

– என்று நமது நாட்டின் இன்றைய பொருள் வறுமை, சிந்தனை வறுமை இரண்டையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டிச் சென்றிருக்கிறார் மகாகவி பாரதியார். இன்று நாமும்தான் பார்க்கின்றோம்.

இது வீழ்ச்சிதான். ஆனால் எவ்வளவு உயரத்திலிருந்து வீழ்ந்திருக்கிறோம் என்பதை சற்றுப் பின்னோக்கிப் பார்த்து புரிந்து கொண்டால் பதைபதைக்கும் நமது உள்ளம். உலகமே வியந்து போற்றி, வணங்கிய அன்றைய பாரதத்தை பல நாட்டு அறிஞர் பெருமக்கள் கண்ட நோக்கில் காணுவோமானால் அதன் உண்மை உறுதிப்படும் நமக்கு.

மேலும் இந்த நாட்டின் படித்த கூட்டத்திற்கும், சிந்தனையாளர் கோஷ்டிக்கும் ஒரு வியாதி உண்டு. எந்த விஷயமானாலும் சரி அயலார், அதுவும் மேற்கத்திய நாட்டினர் சொல்வதுதான் இவர்கள் செவி வழியே சிந்தனையில் புகும். நாடு சுதந்திரமடைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிய பின்பும் இன்றும் இது பொருந்தும். எனவே நமது நாட்டைப் பற்றி உலகின் உயர்ந்த சிந்தனையாளர்கள், வரலாற்று அறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள் சிலரின் கருத்துக்களை தொகுத்துள்ளோம். நமது மக்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டம், தன்மான உணர்வு எழுப்பவும். நமது முன்னோர்களின் சாதனைகளை அறிந்து கொள்ளவும் உதவும். அவர்களை மிஞ்ச வேண்டும் என்ற வேகமும் எண்ண எழுச்சியும் நம் மனதில் ஏற்பட இச்சிறு நூல் உறுதுணை புரியும் எனக் கருதுகிறோம்.

பாரில் உயர்ந்த பாரதம்

பாரதம் என்றால் ஒளியில், ஞானத்தில் திளைத்தல் என்று பொருள். பெயருக்கேற்ப நம் நாடு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அனைத்துத் துறைகளிலும் மிகப்பெரிய சாதனைகள் செய்துள்ளது. வானவியல், கணிதம், வேதியியல், பொறியியல், இசை, விவசாயம், உயிரியல், அணு விஞ்ஞானம், மருத்துவம், கலை போன்ற பல துறைகளையும் நமது முன்னோர்கள் அலசி ஆராய்ந்து அந்தத் துறைகளில் உயர்ந்த நிலையை அடைந்திருந்தனர். அவர்கள் வாழ்வியலின் எல்லாத் துறைகளிலும் தன் நிகரற்று விளங்கினர். சத்தியம், வீரம், அன்பு போன்ற பண்புகளை உயிரினும் மேலாக மதித்துப் போற்றி வந்தனர்.

கல்வி

நமது முன்னோர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். காஞ்சி, நாளந்தா, தட்சசீலம், உஜ்ஜயினி ஆகிய இடங்களில் சர்வதேச பல்கலைக் கழகங்கள் இருந்தன. பல்லாயிரம் நூல்கள் கொண்ட நூல்நிலையங்கள் இவ்விடங்களில் அமைந்திருந்தன.

கி.மு.700 இல் உலகின் முதல் பல்கலைக் கழகம் தட்சசீலத்தில் அமைந்திருந்தது. அங்கு ஒரு சமயத்தில் 30, 000 மாணவர்கள் 146 துறைகளில் கல்வி பயின்றனர். 2,000 ஆசிரியர்கள் இருந்தனர். காலை

பக்தியார் கில்ஜியின் படையெடுப்பின் போது அவனது படையினர் நாளந்தா நூலகத்திற்கு வைத்த தீ, பல நாட்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

18 ஆம் நூற்றாண்டில் கூட மேற்கு வங்கத்தில் 80,000 பள்ளிகள் இருந்ததாகவும் 400 பேர்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் இருந்ததாகவும் தரம்பால் என்ற அறிஞர் ‘Beautiful Tree’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவம்

பாரத நாட்டின் மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்த மருத்துவ முறைகள் மிகத் தொன்மையானவை.

இன்று உலக நாடுகள் அனைத்தும் இருகரம் நீட்டி வரவேற்கும் யோகாவும், தியானமும் பாரத ரிஷிகள் உருவாக்கிய அரிய அறிவியல் நுட்பங்கள்.

மனித குலத்தின் முதல் மருத்துவ அறிவியலான ஆயுர்வேதம், ரிக்வேதத்தின் உபவேதம் ஆகும். அதில் உடற்கூறியல், மருந்தியல் பற்றி விளக்கங்கள் உள்ளன.

சரக சம்ஹிதையில் 20,000 மூலிகைகளைப் பற்றிய ஆய்வு அடங்கியுள்ளது.

சுஸ்ருத சம்ஹிதையில் உடற்கூறியல், அறுவை சிகிச்சை முறைகள் மற்றும் அதற்கான கருவிகள் பற்றிய விளக்கங்கள் உள்ளன. இதன் ஆசிரியரான சுஸ்ருதர் உலகின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் வல்லுநர்.

ஸ்ரீமதி மெனிங் என்னும் அறிஞர் ஹிந்துக்களின் அறுவை சிகிச்சை கருவிகள், ஒரு மயிரிழையை நெட்டுவாக்கில் வகிர்ந்து தள்ளக்கூடிய அளவு கூர்மை உடையனவாக இருந்தன என குறிப்பிடுகிறார்.

“ஜென்னர் கண்டுபிடிப்பதற்கு பல நூற்றாண்டுகள் முன்பே அம்மைப்பால் தயாரித்தலும் அம்மை குத்துவதிலும், அம்மை நோய் தடுப்பதிலும் ஹிந்துக்கள் வல்லுநர்களாக விளங்கினர்” என்று 1905 இல் சென்னை மாகாண கவர்னராக இருந்த ஆம்பல் பிரபு குறிப்பிட்டுள்ளார்.

பிளேக் நோய் எங்காவது தோன்றினால், மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி நோய்க் கிருமி நாசினிகளைப் பயன்படுத்தி அழித்து நோயைத் தடுக்கும் முறை ஹிந்து சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதாக கர்னல் கிங் (சென்னை கிங் இன்ஸ்டிட்யூட்டின் நிறுவனர்) குறிப்பிடுகிறார்.

தமிழ் நூல்களிலும் பல சான்றுகள் உள்ளன. தழும்பின்றி காயங்களை ஆற்றும் சிகிச்சை பற்றி புறநானூறும், கரு அமையும் காலம் பற்றி தொல்காப்பியமும் கூறுகின்றன. ‘தொய்யில் எழுதுதல்’ என்பது திருமுருகாற்றுப்படை கூறும் “அழகியல்” பற்றிய குறிப்பு. “இரும்புச் சுவை கொண்ட விழுப்புண் நோய் தீர்த்து மருந்து கொள் மரத்தின் வாள்வடுமயங்கி வடுவின்றி தழும்பின்றி வடித்த யாக்கையன்’ என்ற குறிப்பில் அரிய தகவல் பொதிந்துள்ளது.

கணிகம்

பூஜ்யம் (0), எண்ணிலி α π இவற்றின் துல்லியமான மதிப்பை நம் முன்னோர்கள் கண்டுபிடித்திருந்தார்கள்.

1 முதல் 9 வரையிலான எண்கள் அராபிய எண்கள் என்று ஐரோப்பியர்கள் சொல்வதை நமது தேச பாடநூல்களிலும் அப்படியே கற்பிக்கின்றோம். ஆனால் அராபிய வரலாற்றாசிரியர்களோ இவற்றை ஹிந்துக்கள் தந்த கொடை என்று நன்றியோடு குறிப்பிடுகிறார்கள். ‘ஹிந்தஸா’ என்று இவற்றுக்குப் பெயரிட்டிருக்கிறார்கள்.

கணிதத்தை பல வகையாகப் பிரித்துள்ளனர்.

வியக்த கணிதம் – கால்குஸ்
அவ்வியக்த கணிதம் (அல்லது)
பீஜ கணிதம் – அல்ஜீப்ரா
க்ஷேத்ர கணிதம் – திரிகோணமிதி

“லீலாவதி சம்ஹிதை” என்ற நூல் நமது முன்னோரின் கணிதப் புலமையை பறைசாற்றும் நூல்.

நமது முன்னோர்கள் பயன்படுத்திய மிகப் பெரிய எண் 1053. இதை கி.மு. 5000 ஆவது ஆண்டிலேயே பயன்படுத்தியிருக்கிறார்கள். கிரேக்கர்களும், ரோமானியர்களும் பயன்படுத்திய மிகப்பெரிய எண் 106. நவீன காலத்தில் பயன்படுத்தப்பட்ட பெரிய எண் 1012 தான்.

சமஸ்க்ருதத்திற்கு பாணினி உருவாக்கிய கட்டமைப்பின் காரணமாக அது இன்று கம்ப்யூட்டருக்கு மிகவும் ஏற்ற ஊடகமாக ஏற்கப்படுகிறது.

வானசாஸ்திரம் :

சூரியனை மையமாகக் கொண்டு கிரகங்கள் சுற்றி வருகின்றன. அவை கோள வடிவம் கொண்டவை என்பது வேதகாலத்திலேயே நமது முன்னோர்கள் அறிந்திருந்த உண்மை . உலகம் உருண்டை என்று கோபர்நிகஸ் சொல்வதற்கு 1,600 ஆண்டுகள் முன்பே ஆர்யபட்டர் தனது நூலில் இதை விவரித்திருக்கிறார்.

நமது காலக் கணக்கு மிகவும் தொன்மையானது. பூமி சூரியனை சுற்றும் காலத்தைக் கணக்கிட்டு அதை 12 கோள்களாகப் பிரித்து, ஒரு வருடத்தை 12 மாதங்களாகப் பிரித்தனர். பூமி ஒரு கோளிலிருந்து அடுத்த கோளுக்கு மாறும் நாளே மாதப் பிறப்பு.

பூமி சூரியனை சுற்ற ஆகும் காலத்தை அறிஞர் ஸ்மார்ட் கண்டுபிடிப்பதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பாஸ்கராச்சாரியார் மிகத் துல்லியமாகக் கணக்கிட்டு சொல்லிவிட்டார். (365.258756484 நாட்கள்.) மயம்

ஒரு விநாடி நேரத்தை 33.750 பகுதிகளாகப் பிரித்து அதை ‘த்ருதி’ என்ற நுண்ணிய கால அளவை கணக்கிட்டுள்ளார்கள்.

கட்டடக் கலை

இசைபாடும் துண்கள், நிழல்படாத கோபுரம், குறிப்பிட்ட நாளில் மட்டும் சூரியனின் கதிர்கள் தெய்வத்தைத் தொடுமாறு அமைக்கப்பட்ட கோயில்கள், கோயில் உச்சியில் இடிதாங்கி, 2,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கல்லணை போன்றவை நமது கட்டடக் கலைக்குச் சான்றாக இன்றும் இருக்கின்றன.

மதுரையில் கோயிலை மையமிட்ட நகரமைப்பு; சீரான ஊர் அமைப்பு, நேரான சாலைகள், மூடிய சாக்கடைகள், குளம் என்று சுகாதார முறையில் அமைக்கப்பட்ட நகரங்கள் ஹரப்பா, மொகஞ்சோதரா.

“பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஹிந்துக் கட்டடங்கள் உறுதி குலையாமல் நிற்கின்றன” என்று தார்ன்டன் குறிப்பிடுகிறார்.

விவசாயம் :

5,000 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதால் வளம் குன்றா நிலங்கள்.

கிராமந்தோறும் ஏரிகள், குளங்கள், குட்டைகள் மூலம் சிறந்த நீர் நிர்வாகம். குடிமராமத்து என்ற தமிழகப் பாசனநீர் பங்கீட்டு, பாதுகாப்பு முறை தொன்மையானது.

உணவுப் பொருட்களை விற்பனை பொருளாக்காமல் எல்லோருக்கும், ஏன் எல்லா உயிரினங்களுக்கும் கிடைக்கும் வகையிலான விநியோக முறை.

உலகிலேயே பாசனத்திற்காக முதன்முதலில் குஜராத் மாநிலத்தில் சௌராஷ்டிரத்தில் தான் அணை கட்டப்பட்டது.

பொருளாதாரம்

அதர்வண வேதம், மகாபாரதத்தில் விதுர நீதி, பீஷ்மர் தருமருக்கு அளித்த உபதேசம் (சாந்தி பர்வம்), சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் போன்றவை நமது பண்டைய பொருளாதார நூல்கள். –

இங்கு நாணயங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டது. “கி.மு. 800 -க்கும் முன்பே ஹிந்துக்கள் நாணயங்களைப் பயன்படுத்தி வந்தனர்” என்று பேராசிரியர் பிரன்ஸெப் என்பவர் கூறுகிறார்.

சுக்கிர நீதி – தொழிலாளர் நலன், வருங்கால வைப்புநிதி, காப்பு நிதி போன்ற கருத்துக்களைக் கூறுகிறது.

17 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆங்கிலேயர்கள் வரும்வரை பாரதம் உலகிலேயே பணக்கார நாடாக இருந்தது.

வியாபாரம்

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நமது நாட்டில் வாரச்சந்தை முறை, திருவிழாக் காலங்களில் சிறப்பு சந்தை முறைகள் இருந்தது.

அரபு, கிழக்கு நாடுகளுடன் நவரத்தினம், ஏலம், கிராம்பு மற்றும் இரும்பு, எஃகினாலான போர்க்கருவிகள் கப்பல் மூலம் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

வாஸ்கோடகாமா தென்னாப்பிரிக்காவின் கடல் ஓரம் நின்றிருந்தார். உப்புக் காற்று திடீரென வாசனைக் காற்றாக மாறியது. எப்படி என கேட்டார். ‘அதோ தெரிகிறதே அந்தக் கப்பல்தான் காரணம். அதில் ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனைப் பொருட்கள் வருகின்றன’ என்றனர். இந்தக் கப்பல் இவ்வளவு வாசனையா என வியந்து அதனைப் பின்தொடர்ந்து நமது நாட்டிற்கு வந்ததாக தனது டைரிக் குறிப்பில் வாஸ்கோடகாமா எழுதியுள்ளார்.

நெசவு

டாக்கா மஸ்லின், மிகச் சிறந்த பருத்தி ஆடைகள், பட்டு, உயர்தர சால்வைகள், ரத்தினம் பதித்த ஜமுக்காளம் போன்றவை இங்கு தயாராயின.

நெசவுத் தொழில் உன்னத நிலையில் கிராமந்தோறும் லட்சக்கணக்கான குடும்பங்களை வாழவைத்தது.

உலோகவியல்

4,000 ஆண்டுகளுக்கு முன்பே தரமான உருக்கு தயாரானது என்பதற்கு டில்லியில் 10 டன் எடையுள்ள 24 அடி உயரமுள்ள துருப்பிடிக்காத தூண் சாட்சியாக உள்ளது.

2,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்துபோன எஃகு உற்பத்திக் கூடம் சென்னிமலை அருகில் கொடுமணல் என்ற ஊரில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

1896 வரை உலகத்திலேயே பாரதத்திலிருந்து தான் வைரம் வந்ததாக அமெரிக்க வைர ஆராய்ச்சிக் கழகம் கூறுகிறது.

பேராசிரியர் வில்சன், “அண்மைக் காலத்தில்தான் இங்கிலாந்தில் நாம் இரும்பை உருக்கி வார்க்கும் கலையைக் கையாண்டு வருகிறோம். ஆனால் ஹிந்துக்கள் இரும்பை உருக்குகிற, இணைக்கின்ற மற்றும் எஃகு இரும்பை உருவாக்கிற கலையை மிகப் பழங்காலம் முதல் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கையாண்டு வருகிறார்கள்” என்று குறிப்பிடுகிறார்.

விமானம், கப்பல் கட்டும் தொழில் நுட்பம்

பரத்வாஜரின் வைமானிக சாஸ்திரம் என்ற நூல் 339 வகை கப்பல், 703 வகை விமானம், 101 வகை ஊர்திகள் பற்றி குறிப்பிடுகிறது. அந்நூலில் ஆளின்றி தூரக்கட்டுப்பாட்டில் இயங்குபவை, ஒலியை விட வேகமாகச் செல்பவை, ஒலியால், சூரிய ஒளியால், ரசாயன மின்விசையால் இயங்குபவை என பலவித ஊர்திகள் பற்றி குறிப்பு உள்ளது. ராடருக்கு இணையான கருவி, தீய நச்சுக் கதிர்களிலிருந்து விமானியை காக்கும் ‘பிஞ்டா’ கண்ணாடி, ‘மங்கா’ என்னும் கண்ணுக்குத் தெரியாத கதிர்மூலம் எதிரி விமானத்தை வீழ்த்தும் தொழில் நுட்பம், வெப்பம் உறிஞ்சி, உலோகக் கலவைகளைப் (சோமக, சௌண்டலீகா, மௌர்த்விசா) பயன்படுத்தி செய்த விமானங்கள் போன்றவை பற்றியும் குறிப்புகள் உள்ளன.

டாக்டர் ரோபர்ட்டோ பினோட்டி என்ற விமான சாஸ்திர விஞ்ஞானி, “இந்நூல் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். இவையெல்லாம் வெறும் கற்பனை என்று என்னால் ஒதுக்க முடியவில்லை ” என்று கூறுகிறார்.

கப்பல் கட்டும் கலை சிந்து நதி பாய்ந்த பகுதியில் 6,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே சிறப்பாக இருந்துள்ளது. ‘நவ் கத்’ என்ற சம்ஸ்க்ருத சொல்லிலிருந்தே Navigation என்ற ஆங்கில வார்த்தை பிறந்தது. ‘நேவி’ என்ற வார்த்தை ‘நௌ’ என்ற வார்த்தையிலிருந்து மறுவி வந்ததே. தமிழில் நாவாய் என்று சொல்லப்படுகிறது. ‘நவ்கா’ என்றால் படகு.

போஜராஜனால் 11 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் ‘யுக்தி கல்பதரு’. இந்நூல் ‘சாமன்யா’ எனும் ஆறுகள் கடக்கும் கப்பல், ‘விசேஷா’ எனும் கடல் கடக்கும் கப்பல் என இரு வகைக் கப்பல்கள் பற்றி விளக்குகிறது. தங்கும் வசதிகளையொட்டி சர்வ மந்திரா, மத்திய மந்திரா, அக்ர மந்திரா என்று மேலும் மூன்று வகையாகப் பிரிக்கிறது. ஓர் அஜந்தா ஓவியத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கப்பல் பயணம் செய்யும் காட்சி உள்ளது.

சம்ஸ்க்ருத இலக்கண ஆசிரியரான பாணினி (கி.மு. 7 ஆம் நூற்றாண்டு) தமது நூலில் பல படகுகளை உத்சங்க, உடுப, உதுபுத பீடகா என்ற பெயர்களில் குறிப்பிடுகிறார். 8

இங்கிலாந்தில் உள்ள கப்பல் கட்டுவோர் நிறுவனத்தின் உறுப்பினர் திரு. ஜெ.எல். ரெய்டு அவர்கள், “பண்டைய ஹிந்து ஜோதிடக் கலைஞர்கள் ஒருவகையான காந்தங்களைப் பயன்படுத்தி அடிக்கல் நாட்டுவதற்கும், பிற சமயச் சடங்குகள் நடத்துவதற்கும் வடதிசையை நிர்ணயம் செய்வதுண்டு. பண்டைய ஹிந்து திசையறி கருவியில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் ஒரு இரும்பு மீனைவிட்டு அமைத்தனர். அதனை ‘மச்சயந்திரா’ என்று அழைத்தனர் எனக் கூறியுள்ளார்கள்.

கலைகள்

ஆய கலைகள் 64. அவை வளர அரிய பணி செய்துள்ளனர். மக்கள் மனங்களைப் பண்படுத்தும் கருவியாக கலைகளைப் பயன்படுத்தினர்.

சிற்பக்கலை : வானுயர்ந்த கோபுரங்கள், தஞ்சைப் பெரிய கோயில், மகாபலிபுரம் போன்ற கற்கோயில்கள், எல்லோரா குகைக் கோயில், கஜுராஹோ, ஒரிசாவின் கோனார்க் போன்றவை.

ஓவியக்கலை : அஜந்தா, எலிபண்டா, புதுக்கோட்டை சித்தன்னவாசல் போன்ற குகை ஓவியங்கள், நமது வீட்டு வாசலில் காலையில் தாய்மார்கள் போடும் கோலங்கள். 08

இசைக்கலை : நரம்பு இசைக் கருவிகளான வீணை, யாழ், தம்புரா; தோல் இசைக் கருவிகளான உடுக்கை, மிருதங்கம் போன்றவை.

மனித உடலும் மனமும் ஆன்மாவும் ஒருங்கிணைந்து 7 ஸ்வரங்கள் எழுந்தன. நேரம், மனநிலை ஆகியவற்றிற்கு ஏற்ற பல ராகங்களைத் தொகுத்தனர்.

ஆனந்தம் – ஆனந்த பைரவி

வீரம் – கம்பீர நாட்டை

பக்தி – தன்யாஸி

தாலாட்டு – நீலாம்பரி

அதிகாலையில் – பூபாளம்

மாலையில் – வசந்தா

சோகம் –

நாட்டியக்கலை : நவரச உணர்ச்சிகளை முகபாவத்தில், விரல் முத்திரைகளில் வெளிப்படுத்தும் பரதக்கலை, கதகளி, குச்சுபிடி, ஒடிசிநனய்தல் உயர்ந்த எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.

வாழ்வியல்

நமது முன்னோர்கள் வாழ்வியலில் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கியதுடன் மக்கள் மனங்களுக்கு அணிகலனாகத் திகழும் உயர் பண்புகளையும் கடைப்பிடித்து வாழ்ந்தனர். அன்பு, தியாகம், வீரம், ஒழுக்கம், இயற்கையுடன் இணைந்த ஆரோக்கிய வாழ்வு போன்ற பண்புகளால் உலகிற்கே வழிகாட்டி வாழ்ந்தனர்.

“வீட்டுக்குப் பூட்டுப் போடாத நாடு இது” என்றார் சீனப் பயணி யுவான் சுவாங்.

– “உலகிலேயே மிகவும் நேர்மையானவர்கள் பாரதீயர்கள்” என்கிறது ‘ரீடர்ஸ்’ டைஜஸ்ட்’ பத்திரிகை நடத்திக் கருத்துக் கணிப்பு.

இரண்டாம் நூற்றாண்டில் நமது நாட்டிற்கு பயணியாக வந்த அர்ரியன் என்பவர் ஹிந்துக்கள் பொய் சொல்லுவதில்லை என்றார்.

ஆங்கில நீதிபதி கர்னல் ஸ்லீமன் என்பவர் கூறுகிறார்: “நூற்றுக்கணக்கான வழக்குகளை நான் நடத்தியிருக்கிறேன். ஒரு பொய் சொல்லியிருந்தால் தனது சொத்து, சுதந்திரம், உயிர் ஆகிய அனைத்தும் பாதுகாத்துக் கொண்டிருக்க முடியும். ஆனால் இந்தியர்கள் பொய் சொல்ல மறுக்கிறார்கள்.”

13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷம்சுதீன் அப்துல்லா என்ற முஸ்லிம் அறிஞர் கூறுகிறார்: “ஹிந்துக்கள் எண்ணிக்கையில் கடல் மணல் போல் கணக்கற்றவர்கள்; ஏமாற்றும் வேலைகளுக்கும் அவர்களுக்கும் வெகுதூரம். எவர்மீதும் அட்டூழியம் நடத்தமாட்டார்கள். வாழ்வில் ஆசையோ, மரணத்தில் அச்சமோ அவர்களைத் தீண்டியதில்லை.”

“பண்பாளர்கள் இருப்பதால்தான் உலகம் அழிந்து போகாமல் இருக்கிறது” என்று திருவள்ளுவ முனிவர் அன்றே கண்டு சொன்னது அகச்சான்று. லியோ டால்ஸ்டாய் திருக்குறளை “ஹிந்து திருக்குறள்” என்கிறார்.

பார் போற்றும் பாரதம்

– “பாரதம் நம் இனத்தின் தாயகம். சம்ஸ்க்ருத மொழி அனைத்து ஐரோப்பிய மொழிகளுக்கும் தாய். பாரதம் நம் தத்துவ ஞானத்தின் தாய்; மற்றும் அரேபியர் மூலமாக நாம் பெற்ற கணிதக் கலையின் அன்னை ; புத்தர் மூலமாக அவன் வெளியிட்ட லட்சியங்களை கிறிஸ்தவ சமயம் மேற்கொண்டுள்ளதால் அச்சமயத்திற்கும் அன்னை அவளே; பண்டு தொட்டுப் பழகிவரும் கிராம மரபினால் பாரதம் சுயாட்சி முறைக்கும் ஜனநாயகத்திற்குமே தாய். அன்னை பாரதம், பலவகையில் நம் அனைவருக்கும் தாய் (India, mother of us all.)”

வில் டுரண்ட் (அமெரிக்கா)
‘The Story of Civillisation’ என்ற நூலில்.

“இயற்கை வளங்கள் பலவும் நிறைந்து வலிவும் வனப்பும் ஒருங்கே கூடிய நாடு. சுருங்கக் கூறின் ‘பூலோக சுவர்க்கம்’ என்று அழைக்கக்கூடிய நாடு ஏதேனும் உலகில் உள்ளதோ என்று நான் தேடினால், அதற்கு உலகில் விடையாக பாரதமே என் கண்முன் தோன்றுகிறது.”

பேராசிரியர் மாக்ஸ்முல்லர்
‘Sacred Books as the East’ என்ற நூலில்.

“மனிதகுலம், தன் அறிவாற்றலை சிறந்த முறையில் பயன்படுத்தியுள்ள இடம், அதனால் மிகவும் சிக்கலான பிரச்சினைகளைப் பற்றிச் சிந்தித்து ஆராய்ந்து, அவற்றில் ஒரு சிலவற்றிற்குத் தீர்வும் கண்டுபிடித்துள்ள நாடு. பிளாட்டோ, காண்ட் போன்ற அறிஞர்களின் நூலை அறிந்தவர்களும் அக்கறையுடன் அறிந்து கொள்ள வேண்டிய நாடு உலகில் எங்கேனும் உளதோ எனின், பாரத நாட்டையே நான் சுட்டிக் காட்டுவேன்.”

பேராசிரியர் மார்க்ஸ்முல்லர்.

“ஐரோப்பாவில் வாழும் நாம், கிரேக்க, ரோமானிய யூத இனங்களின் சிந்தனையில் ஊறி வளர்ந்த நாம், நம்முடைய அகவாழ்வு இன்னும் பரந்ததாக அமைய, குறுகிய கோட்பாடுகள் இல்லாது விரிந்து வளர, உண்மையிலேயே மானுட வாழ்வு வாழ, இன்று மட்டும் அல்ல, என்றைக்கும் அழிவற்ற வாழ்வு பெற வகை செய்வதற்காக நம் வாழ்க்கைக் குறைகளை நீக்கி நிறை செய்வதற்கு, வழிகாட்டியான ஏதேனும் நாடு உளதா என்று என்னைக் கேட்டால், பாரத நாட்டையே நான் சுட்டிக்காட்டுவேன்.”

பேராசிரியர் மாக்ஸ்முல்லர்

“நெடிதுயர்ந்த இரானியப் பீடபூமியில், செரிந்தியா பாலைவனச் சோலையில், திபெத்தில், மங்கோலியா, மஞ்சூரியாவில், பண்டை நாடுகளாம் சீனாவில், ஜப்பானில், மான், கெமர் என்ற கூட்டத்தினர் வாழும் இந்தோனேஷியாவில் வாழும் மக்களின் வாழ்வில் பாரதம் உயர்ந்த தன் கலாசாரத்தின் பதிவுகளை, அவர்கள் சமயத்துறையில் மட்டிலும் அல்லாமல், கலை இலக்கியத் துறைகளிலும் ஏற்படுத்தியுள்ளது.சுருங்கக் கூறின் ஆத்மீக வெளிப்பாட்டில் எல்லாம் பாரதம் தன் பதிவை ஏற்படுத்தியுள்ளது.”

எம்.ரெனேக் ரௌசட் (பிரெஞ்சு அறிஞர்)

“கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால், இங்கிலாந்து பகுதியில் வாழ்ந்த மக்கள் தோலுடையணிந்து, உடலில் சாயம்பூசி காடுகளில் திரிந்து கொண்டிருந்த அந்தப் பழைமையான காலத்திலேயே பாரதீயர்கள் தலைசிறந்த நாகரிக வாழ்க்கை நடத்தி வந்தனர்.”

லார்டு மெக்காலே (இங்கிலாந்து)

“1907 ஆம் ஆண்டு போகோஸ்கோல் என்ற இடத்தில் ஒரு கல்வெட்டினை, புதைபொருள் ஆராய்ச்சியாளர் ஹ்யூகோவின்கலர் என்னும் ஜெர்மானியர் கண்டுபிடித்தார். அதில் கி.மு. 1400 இல் மத்திய ஆசியாவில் போரிட்டுக் கொண்ட இரு கூட்டத்தினரிடையே ஏற்பட்ட சமாதான உடன்படிக்கை அக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

இதில் ஹிட்டைடிஸ் மற்றும் மிதானிஸ் என்ற இரண்டு கூட்டத்தினரும் மித்ரா, இந்திரா, வருணா, அசுவினி போன்ற தேவதைகளைப் போற்றி, இவ்விரு கூட்டத்தின் அரச குடும்பங்களிடையே ஏற்பட்டுள்ள திருமணத்திற்கு ஆசியளிக்க வேண்டுவதாக அக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.”

லின்யூடங்
‘பாரதத்தின் ஞானம்’ என்ற நூலில்.

“பாரதத்தில் வற்றாத பெருகி ஓடும் விஞ்ஞான அறிவென்னும் நதியின் ஒரு சிறு காட்சியினையே நாம் அறிந்துள்ளோம்.

உலகம் உய்வதற்கான அறிவு வளர்ச்சி ஞானத்தை அள்ளி வீசுவது பாரதம். புத்த பெருமான் தோன்றுவதற்கு முந்தைய காலத்திலேயே சாங்கிய தத்துவத்தையும் அணுக் கொள்கையையும் உலகிகு அளித்தது பாரதம். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் பாரதத்தின் கணிதக் கலையும், விண்வெளிக் கலையும் ஆர்யபட்டரின் ஆற்றலில் மலர்ச்சி கண்டது. ஏழாம் நூற்றாண்டில் பிரமகுப்தா அரிச்சுவடி கணிதத்தின் ஆழ்ந்த அறிவினால் சிறந்த வான ஆராய்ச்சி சாதனங்களை உருவாக்கினார். பன்னிரெண்டாம் நூற்றாண்டு பாஸ்கராச்சாரியர் மகளின் புகழ்மிக்க கணித ஞானத்தைக் கண்டு உலகமே வியந்தது.”

பேராசிரியர் ஒகஹுரா

”மனித குலம் தோன்றிய நாளிலிருந்து அவனது கற்பனைகள் எல்லாம் நனவாக்கப்பட்ட ஒரு இடம் உள்ளதென்றால் அது பாரத நாடாகும்.”

ரொமென் ரோலண்டு

“பருத்தி பாரத நாட்டுச் செடி. இங்கிருந்துதான் இச்செடியைப் பற்றிய ஞானமும், அதனைப் பயிராக்கும் முறையும் உலகின் பல பாகங்களுக்கும் சென்றன. இச்செடிக்கான பெயர் பாரத நாட்டிலிருந்து கடன் வாங்கி வைத்த பெயர்களேயாகும். சம்ஸ்க்ருதத்தில் பருத்திக்கு ‘கர்பஸா’ என்று பெயர். இது ஹீப்ருவில் ‘கபாஸ்’ என்றும் லத்தீன், கிரேக்க மொழிகளில் ‘கர்பசோஸ்’ அல்லது ‘கர்பாசோஸ்’ என்றும் அழைக்கப் படுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திய மம்மிகளுக்குப் பாரத நாட்டின் பருத்தி ஆடை அணிந்திருந்தனர்.”

சமன்லால்

‘தன் நாட்டிலிருந்து ஒரு படைவீரனைக்கூட அனுப்பாமல் இருபது நூற்றாண்டுகளாக, பாரதம் கலாசாரத் துறையில், சீனாவை வெற்றி கண்டு ஆட்சி நடத்தி வந்துள்ளது. இந்தக் கலாசார வெற்றியைப் பாரதம் என்றும் சீனாவின்மீது திணிக்கவில்லை. இவையனைத்தும், சீனா தானாகவே விரைந்து தேடி, பாரதம் நாடி வந்து, கற்று, ஏற்றுக்கொண்ட அனுபவம் ஆகும்.”

ஹூசி
(அமெரிக்காவில் இருந்த சீன நாட்டுப் பிரதிநிதி)

“இந்தியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள்தான் எண்ணுவதற்குச் சொல்லிக் கொடுத்தார்கள். இந்த அறிவு இல்லாமல் எந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பும் சாத்தியமாகியிருக்காது.”

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

“இந்தியா சமயங்களின் பூமி. மனித இனத்தின் தொட்டில். மனித மொழியின் பிறப்பிடம். வரலாற்றின் அன்னை . புராணங்களின் பாட்டி. மரபுகளின் கொள்ளுப் பாட்டி. வரலாற்றின் மிக மதிப்புவாய்ந்த அம்சங்கள் இந்தியாவில்தான் குவிந்திருக்கின்றன. உலகில் எல்லா மனிதர்களும் காண விரும்பும் இப்பூமியை ஒருமுறை பார்த்தவர்களை இதர உலகின் ஒட்டுமொத்த காட்சிக்கூட கவர முடியாது.”

மார்க் ட்வெய்ன்

இணையற்ற ஹிந்துத்துவம்

ஆர்தர் ஸ்கோபன் ஹீவர் : ”உபநிஷதங்கள் மிகவும் பயனுள்ளவை. மனித சிந்தனையை மேம்படுத்துபவை. உலகம் முழுவதிலும் இதற்கு இணையான நூல் எதுவும் இல்லை .

ஹென்றி டேவிட் தோரோ : “வேதத்திலிருந்து நான் படித்த பகுதிகள், மிகுந்த உயரத்திலிருந்து புனிதமான நதி என்மீது பாய்ந்த அனுபவத்தைத் தருகின்றது.”

கவர்னர் வாரன் ஹேஸ்டிங்ஸ் : “இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு அஸ்தமித்து வெகுகாலம் கழிந்த பிறகும், வளமையும் அதிகாரமும் தந்த பிற ஆதாரங்கள் மனித இனத்தின் நினைவிலிருந்தே அழிந்த பிறகும் பகவத்கீதை போன்ற எழுத்துக்கள் உயிர் வாழும்.”

ரால்ஃப் வால்டோ எமர்சன் :”எல்லா நாடுகளிலுமே பிரபஞ்சத்தின் அடிப்படை ஒற்றுமை பற்றிய சிந்தனைகள் உள்ளன. பிரார்த்தனையின் பேரின்பமும், பக்திப் பரவசமும் எல்லா உயிர்களையும் ஒரே உயிரோடு சங்கமிக்கச் செய்கிறது. வேதம், கீதை, விஷ்ணு புராணம் போன்ற ஹிந்துக்களின் புனித நூல்களில் இந்த மனநிலை பெரிய அளவில் வெளிப்படுகிறது.

கௌண்ட் ஜான்ஸ்டன் : ‘தி ஆரிஜின் ஆப் ஹிந்துயிஸம்’ என்ற நூலில் “ஹிந்துக்களுடைய சமயம், அவர்களுடைய நாகரிகம் இவற்றின் தொன்மையோடு போட்டி போட உலகில் வேறு ஒரு நாடும் கிடையாது” என்று கூறுகிறார்.

விக்டர் கஸின் : ‘ஹிஸ்டரி ஆப் மாடர்ன் பிலாஸபி’ என்ற நூலில், “பராதத்திலுள்ள அரசியல். தத்துவ நினைவுப் பட்டயங்களை நாம் உன்னிப்பாகக் கற்போமானால், எத்தனையோ உண்மைகள், ஆழ்ந்த உண்மைகள் நமக்குப் புலப்படும். ஐரோப்பிய சிந்தனை, அற்ப சொற்ப அளவிலேயே, முன்னேறச் செயலற்று நிற்கிற கோலத்துக்கு நேர்மாறாக பாரதீய சிந்தனையோட்டம் தருகிற சீர்மிகு காட்சி, நம்மை மண்டியிடச் செய்துவிடுகிறது. மானிட இனத்தின் தொட்டில் எனத் தகும் இந்த தேசமே மிக உன்னத தத்துவத்தின் தாய்நாடாக விளங்குவதையும் காணுகிறோம்” என கூறுகிறார்.

க்ரோஜர் (பிரான்ஸ்) : “தன்னை மானுட இனத்தின் தொட்டில் என்றோ அல்லது குறைந்த பட்சம், மனிதனின் புதுவாழ்வினைப் படிப்படியாக உருவாக்கிய ஆதிகால நாகரிகத்தின் களம் என்றோ உரிமை கொண்டாடிக் கொள்ள இந்த உலகில் நாடேனும் உண்டு என்றால் அது பாரதமேதான்.

லூயி ஜெகாலியட் (பிரான்ஸ்): “புராதன பாரத பூமியே! மானுடத்தின் தொட்டிலே! வெல்க! வெல்க! போற்றற்குரிய ஆற்றல்மிக்க அன்னையே! நூற்றாண்டுகள் பலவாக மிருகத்தனமான படையெடுப்புக்களும் துடைத்தழிக்க முடியாத தீரம் மிக்கவளே! நம்பிக்கை, அன்பு, கவிதை, அறிவியல் அனைத்துக்கும் பிறப்பளித்தவளே! எமது மேனாட்டு எதிர்காலத்தில் நினது மேலான இறந்தகாலம் புத்துயிர் பெற்றுப் பொலிவதாகுக!”

கர்னல் டாட் : “கிரேக்கத் தத்துவங்களுக்கெல்லாம் முன்மாதிரியாய் அமைந்த ஞானம் கொண்டு விளங்கிய இந்த மகான்களை உலகில் வேறெங்குதான் காண முடியும்? பிளேட்டோவும், டெல்ஸும், பிதாகோரஸும் அல்லவா இவரிடம் பாடங் கேட்டிருக்கிறார்கள்! இன்றும் ஐப்ராப்பியர் கண்டு வியக்கும் வகையில் கிரக நிலைகளை அறிந்து வைத்திருந்த வான சாஸ்திரங்களைத்தான் வேறெங்கேனும் காணமுடியுமா? நமது மெச்சுதலுக்குரிய கட்டடக் கலை வல்லுநரும் சிற்பிகளும்தான் இங்கு போல வேறெங்கு காண்போம்? கடுந் துயரிலிருந்து களிப்புக்கும், களிப்பிலிருந்து கடுந்துயருக்கும் மனதை அலைபாயச் செய்யவல்ல இசைவல்லார்தான் இவர்கள் போல வேறு எங்குள்ளனர்?

கௌண்ட் ஜான் ஸ்டன்ஸி : “ கிறிஸ்து பிறப்புக்கு 3000 ஆண்டுகள் முன்னரே ஹிந்துக்கள் வானசாஸ்திரத்திலும் புவியியலிலும் இத்துணை உயரிய அறிவை எய்தியிருக்கிறார்கள் என்றால், அதற்கும் முன் எத்தனை நூற்றாண்டுகளாக அவர்களது கலாசாரம் வளர்ந்து வந்திருக்கும்! ஏனெனில் அறிவியல் பாதையில் மனித மனம் படிப்படியாகத்தான் முன்னேறுகிறது.”

டாக்டர் அலெக்ஸாண்டர் : “ஐரோப்பிய தத்துவ முறைகள் அனைத்தின் வடிவங்களும் தன்னுள் பொதியப் பெற்று விளங்கும் அளவு ஹிந்து தத்துவ முறை விரிவானது. வியாபகமுள்ளது.”

கீதை பற்றி : ஒரு மகத்தான நாளில் பகவத்கீதையை நான் படித்தேன். எல்லா நூல்களையும்விட தலை சிறந்த நூல் அது. ஒரு பேரரசன் நம்மிடம் பேசுவது போல் உள்ளது. அருகதையற்ற எந்த விஷயத்தைப் பற்றியும் அது பேசவில்லை . மாறாக சாந்தமான, சீரான குரலில் வேறொரு யுகத்தின், வேறொரு சூழலின் ஞானத்தை வழங்குகிறது. இன்றும் நம்முன் இருக்கும் பல கேள்விகளுக்கு அந்தக் குரல் விடை அளிக்கிறது.

டாக்டர் அன்னி பெசன்ட் : “உலகின் மகத்தான மதங்களை எல்லாம் நாற்பது ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்த பிறகு சொல்கிறேன். ஹிந்துயிசத்தைக் காட்டிலும் முழுமையான, விஞ்ஞானப் பூர்வமான, தத்துவார்த்தமான, ஆன்மீகமான ஒரு மதம் வேறெதுவும் இல்லை. ஹிந்துயிசம் இல்லாமல் இந்தியாவில் எதிர்காலம் கிடையாது என்பதில் சந்தேகமில்லை. ஹிந்துயிசம் என்ற மண்ணில் இந்தியாவின் வேர்கள் ஆழமாகப் புதைந்திருக்கின்றன. அந்த வேர்கள் துண்டிக்கப்பட்டால் இந்தியா என்ற மரம் உதிர்ந்து, உயிரிழந்து போகும். ஹிந்துக்கள் ஹிந்துயிசத்தைக் காப்பாற்றாவிட்டால் வேறு யார் அதைக் காப்பாற்றுவார்கள்? இந்தியாவின் புதல்வர்கள் தனது தாயின் நம்பிக்கையைக் கைவிட்டால் வேறு யார் அதைப் பாதுகாப்பார்கள்? இந்தியா மட்டுமே இந்தியாவைக் காப்பாற்றும். இந்தியாவும் ஹிந்துயிசமும் வேறல்ல.”

அல்டஸ் ஹக்ஸ்லி : “உலக தத்துவங்களிலேயே கீதைதான் மிகத் தெளிவானதும், விரிவானதுமான தத்துவம். எனவே, அதில் நீடித்து நிற்கும் மதிப்பு ஹிந்துக்களுக்கு மட்டுமின்றி மனித இனம் முழுமைக்கும் பயன்படும்.”

வில்ஹம் வான் ஹம்போல்ட் : “பகவத் கீதை உலக மொழிகளில் மிக அழகான நூல். ஒருவேளை இதுதான் உலகிலுள்ள உண்மையான ஒரே தத்துவப் பாடலாகவும் இருக்கலாம். உலகின் மிக ஆழமான, கனமான நூலாகவும் இருக்கலாம்.”

பேராசிரியர் ப்ரெயின்டேவிட் ஜோசப்சன் (மிக இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர்) :

“வேதாந்தமும் சாங்கிய தத்துவமும் மனம் மற்றும் சிந்தனை செயல்படும் முறையின் அடிப்படை விதிகளை விளக்குகின்றன. இந்த விதிகள் குவாண்டம் துறையோடு (அணு மற்றும் மூலக்கூறுகள் துகள்களின் செயல்பாடு மற்றும் இடமாற்றம் குறித்த துறை) தொடர்பு கொண்டவை.”

என்.ஏ. பால்கிவாலா: பிரம்மம் பற்றி நமது முன்னோர்கள் சொன்னதும் ஜடப்பொருள்களின் புதிரான தன்மை பற்றி இன்றைய மகத்தான விஞ்ஞானிகள் சொல்வதும் ஒத்துப்போகின்றன. விஞ்ஞானம் முன்னேற, முன்னேற அது வேதாந்தத்திற்கு அருகில் செல்கிறது. அப்படிப்பட்ட உன்னதமான பாரம்பரியம் நமக்கு இருக்கிறது. ஆயினும், நாம் அதைப் பார்க்காமல் அற்ப விஷயங்ககளில் கவனம் செலுத்துகிறோம்.”

யெஹுதி மெனுஹின் (உலகப் புகழ்பெற்ற வயலின் கலைஞர்) : “சராசரி மேற்கிந்தியரைவிட ஒரு ஹிந்து நூறு மடங்கு பண்பட்டவன், நேர்மையானவன், சமய உணர்வுள்ளவன். நிதானமான கண்ணோட்டம் கொண்டவன்.”

சுவாமி விவேகானந்தர் : “ஹிந்துயிசத்தில்தான் இந்தியாவின் ஜீவன் அடங்கியிருக்கிறது. தனது முன்னேற்றங்களிலிருந்து பெற்ற பாரம்பரிய செல்வத்தை ஹிந்துக்கள் மறக்காதிருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் அவர்களை அழிக்க முடியாது.”

காந்திஜி : “இடையறாமல் சத்தியத்தைத் தேடுவதுதான் ஹிந்துயிசம். இன்று நாம் சோர்ந்திருப்பதால் ஹிந்துயிசமும் தேங்கியிருக்கிறது. இந்தச் சோர்வு நம்மிடமிருந்து அகன்றால் ஹிந்துயிசம் இதுவரை இல்லாத அபாரமான திறமையுடன் பிரகாசமாக வெடித்துக் கிளம்பி முன்னோக்கிப் பாயும்.

ஜான் ஸ்டர்ஸன் : “தி விஸ்டம் ஆப் தி ஏன்ஷியண்ட் இண்டியா’ என்ற நூலில், “ஆத்மாவின் அமரத்தன்மை மற்றும் உடலை நீத்தபின் அதன் இருப்பு ஆகியவை ஹிந்துக்களின் புனித கிரந்தங்களில் துல்லியமாக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். அவை வெறும் தத்துவக் கோட்பாடுகளாக அல்லாமல் சமயச் சட்டங்களாகவே கொள்ளப்பட்டன. ஆத்மாவின் அமரத்தன்மை என்பது பிரச்சினைகள் மிகுந்த சிக்கலான விஷயம் என்று கருதிய கிரேக்க, ரேமானிய தத்துவ ஞானிகளைவிட ஹிந்துக்கள் எவ்வளவோ முன்னேறியிருந்தார்கள்.”

கால் ப்ரூக் : ” தத்துவத் துறையில் ஹிந்து போதிப்பவனாக விளங்குபவனாக விளங்குகிறான்; கற்றுக் கொள்ள வேண்டியவனாக அல்ல.”

அன்னை பூமி பாரதம் – 2

அன்னை பூமி பாரதம்

உலகில் பரிணாம வளர்ச்சியை உற்று நோக்கும் பொது மனித சமுதாயத்தில்  மட்டுமே உறவுகளும் அதற்கு ஆதாரமான உணர்வுகளும் ஆழமாக வேரூன்றியுள்ளன.மற்ற உயிர்களிடத்து இத்தகைய உணர்வுகள் வளர வாய்ப்பில்லை.

பறவை உலகம் – தாய் செய் உறவு:

பறவை ஒன்று முடடையிட்டுக் குஞ்சு பொரிக்கிறது; பின்னர் அக்குஞ்சுப்பறவை தாய்ப்பறவையினிடத்து பாசம் வைத்திருப்பது அத்தாய்ப்பறவை இறை தேடித் தரும் வரைதான்; அதுபோலவே தாய்ப் பறவைக்கும் தனது குஞ்சு என்ற உறவு, அக்குஞ்சுப் பறவை சிறகு முளைத்து, சிறகடித்துப் பறந்து சென்று இதை தேடும் வரைதான். அக்குறிப்பிடட பருவத்திற்குப் பின்னர் தாய் – குஞ்சு என்ற உறவுமுறை பறவை உலகத்தில் இல்லை.

விலங்கு உலகம் – தாய் சேய் உறவு:

நாய்,பூனை,ஆடு,மாடு போன்ற விலங்குகள் தங்கள் குட்டிகள் தங்களிடத்தில் பால் குடிக்கும் பருவம்வரை பாசவுணர்வு கொண்டுள்ளன. தாய்ப் பசு தன கன்று என்ற அடையாளம் கண்டு கொள்வதும் – அது தன்னிடத்தில் பால் குடிக்கும் வரைதான். அது போல கன்றிற்கும் தனது தாய் என்ற உணர்வு அப்பசுவினத்தில் பால் குடிக்கும் வரைதான் உள்ளது. பல் குடிக்கும் பருவத்திற்கு மேலே இவ்வுறவுகள் அர்த்தமற்றவையாகி விடுகின்றன.

இந்த தாய் – சேய் உறவு முறை ஒன்றைத் தவிர வேறு உறவு முறைகள் பறவை உலகிற்கும், விலங்கு உலகிற்கும் இல்லை.

தாய்யில்லாமல் நானில்லை:

பறவை, விலங்கினத்தை விட மனிதப் பிறவியை எல்லோரும் உயர்ந்த பிறவியாகக் கருதுகின்றனர். சான்றோர்கள் பெறுதற்கரிய பிறவியாகவே மனிதப் பிறவியைச் சொல்லுகின்றனர்.

‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’  என்பது ஒவ்வையார் வாக்கு.

ஆறறிவு பெற்ற மனித இனம் தயனிடத்து பால் குடிப்பதை நிருத்திப் பல ஆண்டுகளுக்குப் பின்னாலும் ‘தாய்’  என்கின்ற ஆழமான உணர்வு போவதில்லை.

அதற்கு மிக முக்கியமான காரணம் உண்டு.

மனித இனத்தில் மட்டும் பறவையினத்தைப் போல, விலங்கினத்தைப் போல குழந்தை பிறந்த சில தினங்கள் அல்லது மாதங்களுக்குள்ளாகவே சுதந்திரமாக வாழ முடிவதில்லை.

main-qimg-c6f298fad6724647b20ba7ed9c211a58-cகுழந்தை பிறந்து அதை பாராட்டிச் சித்திரட்டி வளர்த்து, பின் அது  கவிழ்ந்து, தவழ்ந்து,அமர்ந்து,தளிர் நடைபயில்வதற்கு பல மாதங்கள் ஆகின்றன;பின்னர் நடந்து தானே உணவு உண்டு, மொழி பயின்று பேசி வாழ்வதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகின்றன. அதுவரை, நம்மை நம் தாயும் தந்தையும் பேணிப் பாதுகாத்து வருகின்றனர். குறிப்புபாகத் தன்னை வருத்திக் கொண்டு குழந்தையை வாழ வைக்கும் தாயின் சேவைக்கு ஈரேழு உலகத்தில்  எதைக் கொடுத்தாலும் ஈடாகாது. அதனால்தான் வேதம் முதலில் ‘மாத்ரு தேவோ பவ’ என்று மொழிகின்றது. தமிழ் வேதமும் ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை’ என்று இயம்புகின்றது.

மனித சமுதாயம் முழுவதிலும் தன்னை ஈன்றெடுத்த தாயை மதிக்கின்ற மனோபாவம் இயல்பானதாக அமைந்துள்ளது. இந்த மனோபாவம் தான் பார்க்கின்ற அனைத்தையும் தாயாகக் காணும்படி நம்மைச் செய்கின்றது.

பாரத நாட்டில் மட்டும்தான் தன்னை ஈன்றெடுத்த பெண்ணை மட்டும் தாயகப் பார்க்காமல் உலகிலுள்ள மற்ற பெண்களையும் தாயகப் பார்க்கும் கண்ணோட்டம் இயல்பாக இருக்கிறது.

இதனாலேயே தான் நம் பண்பாடு மற்ற எல்லாப் பண்பாடுகளையும் விட உயர்வானதாகக் கருதப்படுகிறது.

தாய்ப்பாலில்லாத போது தாய்ப்பாலுக்கு நிகரான தன் பாலக் கொடுத்து வளர்க்கும் பசுத்தாய் ஹிந்துக்களால் புனிதமாகப் போற்றி வணங்கப்படுகிறது. அதனால்தான் மஹாத்மா காந்தியடிகள் பசுவதை தடைச் சட்டம்   கொண்டுவர வேண்டும் என்றார்.

போலிப் பகுத்தறிவினால் பார்த்தால் நதியைத் தாயாகப் பார்ப்பது பைத்தியக்காரச் செயலாகத் தோன்றும்; அண்ணல்  உணர்வு பூர்வமாகப் பகுத்தறிவினால் பார்த்தால் நதி தாயாகிறது.இந்த ஹிந்து உணர்வு நாடெங்கும் விரவி நிற்கிறது. அதனால்தான் தமிழகத்தில் உள்ள நாத்திகள் கூட்டமும் கூட ‘காவிரித் தாய்’ என்று நதியைப் புகழ்வதை பார்க்கிறோம். ஒருபடி மேலே போய் காவிரித் தாய்க்குச் சிலை செடுப்பதையும் பார்க்க முடிகிறது.

விஞ்ஞான ரீதியாக   மட்டுமே சிந்தித்துச் செயல்படும் உலகில் எந்த விதமான உறவு முறைகளுக்கும் இடமிருக்க முடியாது. ஆன்மிக உணர்வுகள் நம் ரத்தத்தோடு கலந்து போய்விட்டதால்தான் தமிழகத்தின் போலிப் பகுத்தறிவு வாதிகள் தமிழ்த்தாய் என்று காவிரித்தாய் என்றும் மொழியையும் நதியையும் தாயாக உருவகப்படுத்தி அழைத்தனர். தமிழ்த்தாய்க்கும் சிலை அமைக்கின்றர். பாஷா ரூபிணி, வாக்தேவி என்று அம்பாளைப் போற்றுகின்ற தன்மைதான் மொழியைத் தாயகப் பார்க்க வைத்தது.

ஆன்மிக உணர்வுகள் இல்லாத வேறு எந்த நாட்டவரும் தங்கள் மொழியையும் நதிகளையும் தயாகப் பார்ப்பதில்லை.

அதர்வ வேதத்தில் ……

வெறும் பூப்பிரதேசமாக, நிலமாகப் பார்க்காமல் பூமித்தாயாக (பூமாதேவி) பார்க்கும் மொனோபாவம் தொன்றுதொட்டு ஹிந்துக்களாகிய நம்மிடம் இருந்து வந்துள்ளது.

“பூமித்தாயே! உன்னை அகழ்ந்து உழும்போது ஏற்படும் பள்ளங்கள் யாவும் உடனடியாக நிரைமேடு களாகட்டும்.

உன் உதிரத்து உதித்த நான் உனக்கு எவ்வித உறும் செய்யாமல் இருப்பேனாக. உன் உள்ளத்தில் வேதனையை ஏற்படுத்தாமல் நான் வாழ்வேனாக.

இந்திர தேவன் இந்த பூமியை எதிரிகளிடமிருந்து காத்து வருகிறான். பூமித்தாயே! எங்களை வாழ்விக்கும் வளத்தத்தினை எங்களுக்கு அருள்வாயாக! உன் மடியில் பாலும் தேனும் பெருக்கெடுத்து ஒடட்டும்.”

எனவே தான் எல்லாவற்றையும் தாயாகக் காண்கின்ற மனோபாவத்தை நம் ஹிந்து தர்மம் கற்று கொடுக்கிறது.

(ஆர்.பி.வி.எஸ். மணியன் அவர்கள் எழுதிய ‘புண்ணிய பூமி பாரதம்’ என்னும் நூலிலிருந்து பெரும்பாலான கருத்துக்கள் இங்கு எடுத்தாள பட்டுள்ளன.)

அன்னை பூமி பாரதம் -1

தாயும் தாய்நாடும்

bharat-matha

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்

நற்றவ வானினும் நனி சிறந்தனவே

                               -மஹாகவி பாரதியார்.

ஆனந்த ராமாயணத்தில் ஸ்ரீ ராமபிரான் தன் தம்பி லக்ஷ்மணனுக்குச் சொல்வதாக அமைந்த ஒரு ஸ்லோகத்தின் ஒரு பகுதியை மட்டும் மஹாகவி பாரதியார் மொழிபெயர்த்து எழுதிய கவிதை வரிகள்தான் மேலே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

‘ஜனனீ ஜன்மபூமியிஸ் ச ஸ்வர்க்காதபி கரீயஸீ’

பெற்ற தாயோடு பிறந்த நாட்டை ஒப்பிட்டதிலிருந்தே தாய் போன்றவள் தான் நாடும் என்பதும் எளிதில் விளங்குகிறது. எனவே உலகிலேயே ஹிந்துக்களாகிய நாம் மட்டும் தான் ‘தாய்நாடு’ என நம் பிறந்த மண்ணைப் போற்றுகிறோம்; நேசிக்கிறோம். தாய்நாடு என்று பாராட்டி உறவு கொண்டாடிய உலகின் முதல் சமுதாயம் – ஹிந்து சமுதாயமே.

மற்ற நாட்டவர்கள் குறிப்பாக ஐரோப்பியர்கள் தமது நாட்டை தந்தையர் நாடு (Fatherland ) என்று அழைத்து வந்தனர்.

நாம் நமது நாட்டைத் தாய்நாடு என்றழைத்ததற்கும் மற்றவர்கள் தங்கள் நாட்டைத் தந்தையர் நாடு என்றழைத்ததற்கும் அணுகுமுறையிலேயே அடிப்பையான வித்தியாசமுள்ளது.

மற்ற நாடுகளில் வாழ்ந்தவர்கள் தங்கள் நாட்டை தந்தையாகப் பாவிக்கும் மனோபாவத்தைப் பெற வில்லை. தங்கள் தந்தையரும், பாட்டனாரும், முந்தையரும் வாழ்ந்த காரணத்தால் தாங்கள் வாழ்ந்த நாடுகளை தந்தையர் நாடு என்று அழைத்தனர்.

ஆனால் நாமோ நமது தாய்மார்களும், பாட்டிகளும், முப்பாட்டிகளும் வாழ்ந்த காரணத்தால் ‘தாய்நாடு’ என்று அழைக்கவில்லை. நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இந்த பூமியையே தாயாகப் பார்க்கிற மனோபாவத்தை நம் முன்னோர்கள் நமக்குக் கொடுத்திருந்தால் தான் தம் நாட்டை தாய்நாடாகக் கொண்டோம்.

வந்தே மாதரம் என்போம் – எங்கள்

மாநிலத்து தாயை வணங்குதும் என்போம்.

– என்று பாடுகிறார் மஹாகவி பாரதியார்.

வெறும் கல்லாக மண்ணாக நதியாக புல் பூண்டாக நிறைந்து காணப்படும் ஒரு நிலப்பரப்பை தாயாகப் பார்ப்பதில் என்ன சிறப்பு இருக்கிறது? என்று கேட்கலாம்.

உறவுகள் (relationship ), உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் போதுதான் உண்டாடுகிறது; உறுதியாகிறது. காலங்காலமாக அப்படித்தான் தாய்,தந்தை, அண்ணன், அக்காள், தங்கை,கணவன், மனைவி என்பன போன்ற உறவுகள் பிறந்துள்ளன. இவ்வுணர்வுகளை விஞ்ஞான பூர்வர்வமாக விளக்கிச் சொல்ல முடியாது.

உறவுகளிலேயே உணர்வுகளுக்கு மதிப்பளித்து உயர்ந்து நிற்கும் உறவுதான் தாய் உறவு.

ஈரைந்து மாதங்கள் கருவோடு நமை தாங்கிப் பெர்றேடுத்து சித்திரட்டி பாலூட்டி வளர்த்து ஆளாக்கி பெருமை பெற்ற தாய்க்கு எத்தனை ஜன்மங்கள் எடுத்து உழைத்தாலும் அவள் நமக்குச் செய்ததை ஈடு செய்ய முடியாது. அது போலவே தான் நம் தாய்நாடும்.

மண்ணை மட்டுமல்ல; மலையைத் தாயாகப் போற்றுகிறோம்; நதியை, கடலை, செடியை, கொடியை, பசுவை, பூமியை, மொழியை, புத்தகத்தை, கல்வியை, செல்வத்தை, வீரத்தை, என அனைத்தையும் தாயாகப் பவிக்கிறோம்; போற்றுகிறோம்; பூஜிக்கிறோம்.

பசுத்தாய், கங்காமாதா, காவிரித்தாய், பூமாதா, பிருந்தா (துளசி ) மாதா, கடல் அம்மா, பேச்சியம்மன் (கலைமகள்) செல்லியம்மன் (அலைமகளாகிய செல்வத் திருமகள்), மலைமகள் (பார்வதி), கீதா மாதா (பகவத் கீதை), தமிழன்னை, பாரதமாதா, என அனைத்தையும் தாயாகப் பார்க்கின்ற பாவனை உலகில் ஹிந்துக்களைத் தவிர வேறு எவர்க்கும் கிடையாது.

வேதம் “மாதா பூமி: புத்ரோஹம் ப்ருதிவ்யா:” என்று முழங்குகிறது. ‘ பூமி நமது தாய்; நாம்  பூமித்தாயின் புதல்வர்கள்’ என்று சொல்லி மகிழ்கின்றது.

“வந்தே மாதரம்” என்ற விடுதலை தாரக மந்திரத்தைத் தந்தவர் பங்கிம் சந்திர சட்டர்ஜி. இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் தான் வந்தே மாதரம் பாடலை அவர் எழுதினார்.

வெறும் நிலப்பரப்பாகவோ, மக்கள் கூட்டமாகவோ நமது கண்ணுக்குத் தோற்றமளிக்காமல் தெய்வீக சக்தியாக அன்னை பவானியாக கட்சி அளிக்கிறாள் நம் பாரதத் தாய்.

‘த்வம் ஹி துர்கா தசப்ரஹரணதாரிணி’

‘பத்துப்படை கொள்ளும் பார்வதி தேவி நீ’

என்ற வர்ணனை இந்த மோனோநிலையை தான் காட்டுகிறது.

முப்பது கோடி முகமுடை யாளுயிர்

மொய்ம்புற வொன்றுடையாள் – அவள்

செப்பு மொழிபதி னெட்டுடையாள், எனிற்

சிந்தனை யொன்றுடையாள்.

அறுபது கோடி தடக்கைக ளாலும்

அறங்கள் நடத்துவள்தாள் – தனைச்

செறுவது நாடி வருபவ ரைத்துகள்

செய்து கிடத்துவள்தாய்

நல்லற நாடிய மன்னரை வாழ்த்தி

நயம்புரி வாளெங்கள் தாய் – அவர்

அல்லவ ராயி னவரை விழுங்கிப்பின்

ஆனந்தக் கூத்திடுவாள்.

– என்று ஆனந்த களிப்புடன் பாரத் தயையை மஹாகவி படுவது இந்த தாய்மை மனோபாவத்தையல்லவா காட்டுகிறது.!